05.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தூய்மை ஆகும்வரை தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வீர்கள் என்பதும், ஒரேயொரு தந்தையை மாத்திரமே நேசிப்பீர்கள் என்பதுமே உங்கள் சத்தியம் ஆகும்.

கேள்வி:
நேரத்தைப் பார்க்கையில், விவேகமான குழந்தைகளான நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்?

பதில்:
இறுதியில், நீங்கள் உங்களுடைய சரீரங்களை விட்டு நீங்கும்பொழுது, பாபாவின் நினைவு மாத்திரம் இருக்க வேண்டும்; வேறெதுவும் நினைவு செய்யப்படக்கூடாது. இப்பொழுதில் இருந்து, விவேகமான குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் அத்தகைய முயற்சியைச் செய்வீர்கள். ஏனெனில் நீங்கள் வீடு திரும்புவதற்கு முன்னர் கர்மாதீதம் ஆகவேண்டும். இதற்கு, உங்கள் பழைய தோலில் உங்களுக்கு இருக்கின்ற பற்றைத் தொடர்ந்தும் நீக்க வேண்டும்: நான் இப்பொழுது பாபாவிடம் செல்கின்றேன்.

பாடல்:
அவர் எங்களிடமிருந்து பிரிக்கப்படவும் மாட்டார், நாங்கள் துன்பத்தை அனுபவம் செய்யவும் மாட்டோம்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தைக்குச் சத்தியம் செய்கின்றீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். இறுதிவரையில், நாங்கள் அமைதி தாமத்தை அடையும்வரை, எங்கள் தலை மீதுள்ள பல பிறவிகளின் பாவங்கள் உங்கள் நினைவில் எரிக்கப்படும். இது யோகத் தீ என அழைக்கப்படுகின்றது; வேறு வழி கிடையாது. ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனவும், ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே உலகத் தந்தையும், உலக ஆசிரியரும், உலகக் குருவும் ஆவார். தந்தை மாத்திரமே படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். இது தூய்மையற்ற உலகாகும். இவ்வுலகில் ஒரு நபரேனும் தூய்மையாக இருப்பது அசாத்தியம். தூய்மை ஆக்குபவராகிய தந்தை அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் எவ்வாறு உலகைத் தூய்மையாக்குவது எனக் கற்கின்றீர்கள். திரிமூர்த்திகளுக்கு மேலே நிச்சயமாகச் சிவனையே வைக்க வேண்டும். நீங்களும் எழுத வேண்டும்: தேவ இராச்சியம் உங்கள் பிறப்புரிமை. அதுவும் இப்பொழுது கல்பத்தின் சங்கமயுகத்தில் நடைபெறுகின்றது. அது தெளிவாக எழுதப்படும்வரை மக்களால் புரிந்துகொள்ள முடியாது; மற்றைய விடயம் என்னவெனில், அவர்கள் “பிரம்மாகுமாரிகள்” என்னும் பெயரை வாசிக்கும் பொழுது, “பிரஜாபிதா” என்னும் வார்த்தையும் நிச்சயமாக அதனுடன் தேவைப்படுகின்றது, ஏனெனில் பலருக்குப் பிரம்மா என்னும் பெயர் உள்ளது. நீங்கள் எழுத வேண்டும்: பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம். ஒரேயொரு தந்தை மாத்திரமே இப்பொழுது கல்லைப் போன்றுள்ள உலகைத் தூய, தெய்வீக உலகாக மாற்றுவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நேரத்தில், ஒரு நபரேனும் தூய்மையானவர் இல்லை. அனைவரும் தொடர்ந்தும் சண்டையிட்டு, ஒருவரையொருவர் அவதூறு செய்கின்றார்கள். தந்தை ஒரு மீனாகவும், முதலையாகவும் அவதரித்தார் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். அவதாரம் எது என்பதைக் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த ஒரேயொருவர் மாத்திரமே அவதாரம் ஆவார். அவர் ஒரு சரீரத்தில் சூட்சுமமான வழியில் பிரவேசித்து, உலகைத் தூய்மை ஆக்குகின்றார். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சொந்தச் சரீரங்களைப் பெறுகின்றார்கள், ஆனால் அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் கிடையாது. எவ்வாறாயினும், அவரே ஞானக்கடல். ஆகவே, அவர் எவ்வாறு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார்? அவருக்கு ஒரு சரீரம் தேவையாகும். உங்களைத் தவிர எவரும் இவ்விடயங்களை அறியார். குடும்பத்துடன் வீட்டில் வசித்துத் தூய்மை ஆகுவது, ஒரு தைரியமான செயலாகும். ஒரு மகாவீரர் ஆகுவது என்றால், தைரியத்தைக் காண்பிப்பதாகும். சந்நியாசிகளால் அடைய முடியாததை, நடைமுறையில் அடைவதற்குப் பெரும் தைரியம் தேவையாகும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் தங்கி, ஒரு தாமரை போன்று தூய்மையாக வாழுங்கள் எனத் தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். அப்பொழுது மாத்திரமே உங்களால் ஓர் உயர்ந்;த அந்தஸ்தைக் கோர இயலும். வேறு எவ்வாறு நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள்? இது ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக ஆகுவதற்கான கல்வியாகும். இது ஒரு பாடசாலை (பாட்சாலா). பலரும் இங்கு கற்கின்றார்கள். இதனாலேயே எழுதப்பட்டுள்ளது: உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம். இவை முற்றிலும் மிகச்சரியான வார்த்தைகள். நாங்கள் உலக அதிபதிகளாக இருந்தமை, நேற்றைக்குரிய விடயம் மாத்திரமே என்பதைப் பாரத மக்களான நீங்கள் அறிவீர்கள். இப்பொழுதும் இராதைக்கும் கிருஷ்ணருக்கும், இலக்ஷ்மி நாராயணனுக்கும் தொடர்ந்தும் ஆலயங்கள் கட்டப்படுகின்றன. சிலர் தூய்மையற்ற மனிதர்களுக்கும் ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். துவாபர யுகத்திலிருந்து தூய்மையற்ற மனிதர்கள் மாத்திரம் இருக்கின்றார்கள். சிவனுக்கும், தேவர்களுக்கும் ஆலயங்களைக் கட்டுவதற்கும், தூய்மையற்ற மனிதர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது; அவர்கள் தேவர்களல்ல. ஆகவே, நீங்கள் இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கடைய வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். நாளுக்கு நாள், எவ்வாறு, எழுதப்பட்டுள்ளவை மாற்றப்பட வேண்டும் என பாபா விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் வினவக்கூடாது: அது ஏன் ஆரம்பத்தில் அவ்வாறு உருவாக்கப்படவில்லை? நீங்கள் வினவக்கூடாது: “ஏன் எங்களுக்கு மன்மனாபவவின் அர்த்தம் அவ்வாறு ஆரம்பத்தில் விளங்கப்படுத்தப்படவில்லை?” ஓ! ஆனால் உங்களால் ஆரம்பத்தில் இவ்வாறு நினைவில் நிலைத்திருக்க முடியவில்லை. மிகச்சொற்ப குழந்தைகளாலேயே அனைத்துக்கும் ஒரு மிகச்சரியான பதிலைக் கொடுக்க முடிகின்றது. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவது உங்கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால், ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? உங்களை ஆசீர்வதிப்பதால் மாத்திரம், அவர் உங்களை மேன்மையானவர்கள் ஆக்க மாட்டார். நீங்கள் என்ன வகையான சேவையைச் செய்கிறீர்கள் எனப் பார்ப்பதற்கு நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். நீங்கள் சதா ஞானக்கடலைக் கடைந்து கொண்டிருக்க வேண்டும். “கீதையின் கடவுள் யார்?” எனும் படம் பிரதானமானது, கடவுள் அசரீரியானவர். பிரம்மாவின் சரீரமின்றி அவரால் எதையும் கூற முடியாது. அவர் சங்கமயுகத்தில் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார். ஏன் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றார்கள்? அவருடைய (சிவன்) சுயசரிதை இருக்க வேண்டும். எவரும் எதையும் அறியார். பிரம்மாவையிட்டு, அவர்கள் கூறுகின்றார்கள்: நூறு கரங்களை உடைய பிரம்மாவிடம் செல்லுங்கள்! அல்லது: 1000 கரங்களை உடைய பிரம்மாவிடம் செல்லுங்கள். இதைப் பற்றி ஒரு கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மாவின் பல குழந்தைகள் உள்ளார்கள். தூய்மை ஆகுவதற்கே, அவர்கள் இங்கு வருகின்றார்கள். பிறவிபிறவியாக அவர்கள் தூய்மை அற்றவர்களாகி வருகின்றார்கள். நீங்கள் இப்பொழுது முழுமையாகத் தூய்மையானவர்களாக வேண்டும். சதா என்னை மாத்திரம் நினைவு செய்வதற்கு நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுதும், உங்களில் சிலரால் எவ்வாறு பாபாவை நினைவுசெய்வது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கின்றது. அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் பாவத்தை வென்றவர் ஆகாது விட்டால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திராமல் இருப்பின், அப்பொழுது நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? நீங்கள் அர்ப்பணித்திருந்தாலும் கூட, அதில் என்ன நன்மை இருக்கும்? நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகி, ஏனையோரையும் அவ்வாறு ஆக்கும்வரை, உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் என்னைக் குறைவாக நினைவுசெய்தால், நீங்கள் ஒரு குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். பின்னர் எவ்வாறு நீங்கள் இரட்டைக் கிரீடம் உடையவர் ஆகமுடியும்? நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சிறிது தாமதமாகவே கீழே வருவீர்கள். நீங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து உள்ளதால், இரட்டைக் கிரீடத்தைப் பெறுவீர்கள் என எண்ணாதீர்கள். இல்லை, முதலில் நீங்கள் ஒரு பணிப்பெண்ணாக அல்லது வேலையாளாக ஆகி, பின்னர் இறுதியில் சிலவற்றைப் பெறுவது சாத்தியமாகக்கூடும். தங்களை அர்ப்பணித்து இருப்பதால், பலருக்கு ஆணவம் உள்ளது. நினைவு செய்யாமல் உங்களால் என்னவாக ஆக இயலும்? ஒரு பணிப்பெண்ணாக அல்லது வேலையாளாக ஆகுவதை விடவும் ஒரு செல்வந்தப் பிரஜை ஆகுவது சிறந்தது. பணிப்பெண்களும், வேலையாட்களும் ஊஞ்சல்களில் அமர்ந்து, ஸ்ரீகிருஷ்ணருடன் ஊஞ்சலாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். இதில் நீங்கள் பெருமளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு சிறிதளவுடன் சந்தோஷப்பட வேண்டாம்: நானும் ஓர் அரசர் ஆகுவேன். அச்சமயத்தில், அத்தகைய பல அரசர்கள் இருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரையே முதன்மையானதும், பிரதானமானதுமான விடயம். நினைவு செய்வதில் மிக நன்றாக நிலைத்திருப்பவர்கள், சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றை எடுக்கின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில், அவர்கள் பெரும் சந்தோஷத்துடன் தங்கள் சரீரங்களை நீக்கி, ஏனைய சரீரங்களை எடுக்கின்றார்கள். இங்கு, அவர்கள் அழ ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் சத்தியயுகத்து விடயங்களை மறந்து விட்டார்கள். கொடுக்கப்பட்டுள்ள பாம்பின் உதாரணத்தைப் போன்று, அங்கு, அவர்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகின்றார்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதையும், உங்கள் பழைய சரீரம் நீக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். தந்தையின் நினைவில் நிலைத்துள்ள விவேகம் உள்ள குழந்தைகள் தந்தையின் நினைவில் தங்கள் சரீரங்களை நீக்கி, பின் சென்று தந்தையைச் சந்திக்க விரும்புகின்றார்கள். எவ்வாறு தந்தையைச் சந்திக்க முடியும் என்பதை எம்மனிதரும் அறியார். குழந்தைகளாகிய நீங்கள் வழியைக் கண்டு கொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள். ஆனால் முதலில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் தூய்மையாகிய பின்னர் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி, வீடு திரும்புவீர்கள். நீங்;கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்தவுடன், உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள் என்பதை உணர்கின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது, உங்கள் சரீரம் இயல்பாகவே நீக்கப்படும். இப்பொழுது நான் சென்று பாபாவுடன் தங்குவதற்கு விரும்புகின்றேன். இப்பழைய சரீரத்தில் விருப்பமின்மை உள்ளதைப் போன்று அது உள்ளது. ஒரு பாம்புக்குத் தனது பழைய தோலின் மீது விருப்பமின்மை உள்ளது. உங்கள் புதிய தோல் (சரீரம்) தயார் செய்யப்படுகின்றது, ஆனால் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்வரை அது தயாராக மாட்டாது. இதுவே இறுதியில் உங்கள் ஸ்திதியாக இருக்கும். அவ்வளவுதான்! நாங்கள் இப்பொழுது வீடு திரும்புகின்றோம். அந்நேரத்தில் அனைத்தும் முழுமையாக யுத்தத்துக்குத் தயார் செய்யப்பட்டிருக்கும். உங்கள் கர்மாதீத ஸ்திதியிலேயே விநாசத்துக்கான அனைத்தும் தங்கியுள்ளது. இறுதியில் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். அதிகளவு நன்மை உள்ளது: நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் தந்தையைப் பெருமளவுக்கு நினைவுசெய்ய வேண்டும். அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித் திரியும் பொழுதும் சதா தந்தையை நினைவு செய்யும் பலர் வெளிப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். மரணம் முன்னிலையில் உள்ளது. செய்தித்தாள்களில், யுத்தம் இப்பொழுதே நடைபெறப் போகின்றது என்பதைப் போன்று அவர்கள் பேசுகின்றார்கள். மகா யுத்தம் நடைபெறும் பொழுது, அக்குண்டுகளும் வீசப்படும்; அதற்கு நேரம் எடுக்காது. விவேகிகளான குழந்தைகள் அனைத்தையும் புரிந்து கொள்கின்றார்கள். எவ்வாறாயினும், விவேகம் அற்றவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் முற்றாகவே இந்த ஞானம் எதனையும் கிரகிக்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் “ஆம், ஆம்” என்று கூறினாலும், எதையும் புரிந்து கொள்வதில்லை; அவர்கள் நினைவில் நிலைத்து இருப்பதில்லை. சரீர உணர்வில் இருப்பவர்களும், தொடர்ந்தும் இவ்வுலகை நினைவு செய்பவர்களும் எவ்வாறு எதையாவது புரிந்து கொள்ள முடியும்;? தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் உங்கள் சரீரங்களை மறக்க வேண்டும். இறுதியில் நீங்கள் இதைச் செய்வதற்குப் பெருமளவு முயற்சி செய்வீர்கள், ஆனால் இக்கணத்தில், நீங்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. இறுதியில் பெருமளவு மனம் வருந்துதல் இருக்கும். பாபா உங்களுக்குக் காட்சிகளையும் கொடுப்பார்: “இவையே நீங்கள் செய்துள்ள பாவங்கள். இப்பொழுது அவற்றுக்கான தண்டனையை அனுபவம் செய்யுங்கள்! இப்பொழுது உங்கள் அந்தஸ்தையும் பாருங்கள்”. ஆரம்பத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தன, இறுதியிலும் அத்தகைய காட்சிகள் கிடைக்கும். தந்தை கூறுகின்றார்: உங்கள் கௌரவத்தை இழக்காதீர்கள். இக்கல்வியில் மும்முரமானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவர். உலகில் வேறு எவரும் தூய்மை ஆக்குபவராக இருக்க முடியாது. இவையே கடவுள் சிவனின் வாசகங்கள். அனைவருக்கும் சற்கதியை அளிப்பவரும், தூய்மையாக்குபவரும் ஒரேயொருவரே எனக் கூறப்பட்டுள்ளது. அனைவரும் அவரை மாத்திரம் நினைவு செய்கின்றார்கள். எவ்வாறாயினும், முதலில் நீங்கள் உங்களைப் புள்ளிகளான, ஆத்மாக்களாகக் கருதும்பொழுது மாத்திரமே, உங்களால் தந்தையை நினைவு செய்ய இயலும். ஆத்மாவான உங்கள் ஒவ்வொருவரிலும் 84 பிறவிகளின் பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது என்றும் அழியப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்வது உங்கள் மாமியாரின் வீட்டுக்குச் செல்வது போன்றதல்ல! நீங்கள் இதை மறப்பதால், உங்களால் வேறு எவருக்கும் விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது. சரீர உணர்வு முழுமையாகவே அனைவரையும் கொன்று விட்டது. இவ்வுலகம் மரணபூமி ஆகிவிட்டது. அனைவரும் தொடர்ந்தும் அகால மரணத்தை அனுபவம் செய்கின்றார்கள். மனிதர்கள் மரணிக்கும் விதத்துக்கும், பறவைகளும், மிருகங்களும் மரணிக்கும் விதத்துக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. இலக்ஷ்மியும் நாராயணனும் அந்த அமரத்துவ தாமத்தின் அதிபதிகள். அங்கு அகால மரணம் கிடையாது. அங்கு துன்பம் கிடையாது. இங்கு, துன்பம் உள்ள பொழுது, அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு அகால மரணத்தை ஏற்படுத்துகின்றார்கள். இந்த இலக்கு மிகவும் உயர்வானது. ஒருபொழுதும் குற்றப் பார்வையைக் கொண்டிராமல் இருப்பதற்கு பெரும் முயற்சி தேவைப்படுகின்றது. அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவது உங்கள் மாமியாரின் வீட்டுக்குச் செல்வது போன்றதல்ல! பெருந் தைரியம் தேவைப்படுகின்றது. இல்லாவிட்டால், நீங்கள் சிறிய விடயங்களுக்கும் பயப்படுகின்றீர்கள். தூய்மையற்ற பார்வை உடைய ஒருவர் தனது வழிக்கு உங்களைப் பலவந்தப்படுத்தி, உங்களைத் தொட்டால், ஒரு தடியை எடுத்து அவரை விரட்டி அடியுங்கள்! நீங்கள் ஒரு கோழையாகக் கூடாது. “சிவசக்தி பாண்டவசேனை” என்பது சுவர்க்க வாசல்களைத் திறப்பதற்காக நினைவுகூரப்படுகின்றது. உங்கள் பெயர் போற்றப்படுகின்றது. ஆகவே, நீங்கள் அந்தளவு தைரியத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் சர்வசக்திவானை நினைவுசெய்யும் பொழுது, அச்சக்தி உங்களில் பிரவேசிக்கும். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இந்நினைவுத் தீயின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நீங்கள் பாவச் செயல்களை வென்ற ஓர் அரசர் ஆகுவீர்கள். நினைவிலேயே முயற்சி தங்கியுள்ளது. எதையாவது செய்பவர்கள் அதன் வெகுமதியைப் பெறுகின்றார்கள். நீங்கள் ஏனையோரை எச்சரிக்கவும் வேண்டும். நினைவு யாத்திரையின் மூலம் உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். கல்வி ஒரு யாத்திரை என அழைக்கப்பட மாட்டாது. அந்த யாத்திரை பௌதீகமானதும், இந்த யாத்திரை ஆன்மீகமானதும் ஆகும். நீங்கள் நேரடியாக அமைதி தாமமாகிய, வீட்டுக்குச் செல்வீர்கள். தந்தையும் வீட்டில் தங்கியுள்ளார். என்னை நினைவுசெய்யும் பொழுது, நீங்கள் வீட்டை அடைவீர்கள். இங்கு அனைவரும் தனது பாகத்தை நடிக்க வேண்டும்; நாடகம் அநாதியாகத் தொடர்கின்றது. தந்தை தொடர்ந்தும் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: முதலில், தந்தையை நினைவு செய்யுங்கள், இரண்டாவதாக, தூய்மையாகித் தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகச் சேவை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் நிச்சயமாக நன்மை அளிப்பவர்களாக ஆகவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சர்வசக்திவான் தந்தை உங்களுடன் இருப்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். உங்களுக்கு இவ்விழிப்புணர்வு உள்ள பொழுது, உங்களில் சக்தியானது பிரவேசித்து, உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். “சிவசக்தி பாண்டவசேனை” எனும் பெயர் நினைவு கூரப்படுகிறது. ஆகவே, அந்தளவு தைரியத்தைக் காண்பியுங்கள். ஒருபொழுதும் கோழை ஆகாதீர்கள்.

2. மரணித்து வாழும்போது, உங்களை அர்ப்பணிப்பதில் ஆணவம் எதுவும் இருக்கக்கூடாது. உங்களை அர்ப்பணித்து, ஒரு புண்ணியாத்மா ஆகி, பிறரையும் அதேபோல் ஆக்குங்கள். இதில் மாத்திரம் நன்மை உள்ளது.

ஆசீர்வாதம்:
தடைகளில் இருந்து விடுபட்டுள்ள உங்களின் ஸ்திதியால் உங்களின் அத்திவாரத்தைப் பலமானது ஆக்குவதன் மூலம் திறமைச் சித்தி எய்துவீர்களாக.

சில குழந்தைகள் நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதனால், அவர்களிடம் பலமான அத்திவாரம் உள்ளது. அவர்கள் தாங்களும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதுடன், மற்றவர்களையும் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். சக்திவாய்ந்தவர் ஆகவும் நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்தும் விடுபட்டுள்ளதோர் ஆத்மா, இறுதியில் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதுடன் திறமைச்சித்தி எய்தி, முதல் பிரிவிற்குள் செல்வார்கள். எனவே, நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்ட ஸ்திதியை நிச்சயமாக அனுபவம் செய்யும் இலட்சியத்தைச் சதா கொண்டிருங்கள்.

சுலோகம்:
உங்களுக்கு எப்போதும் ஒவ்வோர் ஆத்மாவையும் ஈடேற்றுகின்ற உணர்வையும் அவர்களுக்காக நல்லாசிகளையும் கொண்டிருக்கும்போது, நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

யோகம் என்றால் மௌன சக்தி என்று அர்த்தம். இந்த மௌன சக்தியால் மிக இலகுவாக உங்களையும் மற்றவர்களையும் மாற்ற முடியும். இந்த சக்தியால் பஞ்சபூதங்களையும் அத்துடன் ஆத்மாக்களையும் மாற்ற முடியும். நீங்கள் ஆத்மாக்களுக்கு வார்த்தைகளால் பாடநெறியைக் கொடுப்பதன் மூலம் மாற்றுகிறீர்கள். ஆனால் பஞ்சபூதங்களை மாற்றுவதற்கு, உங்களுக்கு மௌன சக்தி தேவை. உங்களுக்கு யோக சக்தி தேவை.