05.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களைத் துன்ப உலகைத் துறக்கச் செய்யவே பாபா வந்துள்ளார். இதுவே எல்லையற்ற துறவறமாகும்.
பாடல்:
அந்தச் சந்நியாசிகளின் துறவறத்திற்கும், உங்களது துறவறத்திற்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடு என்ன?பதில்:
அந்தச் சந்நியாசிகள் தமது குடும்பத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு காடுகளுக்குச் செல்கின்றார்கள், ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் விட்டுவிட்டுக் காடுகளுக்குச் செல்வதில்லை. நீங்கள் வீட்டில் வாழும் போதும், முழு உலகத்தையும் ஒரு முட்காடாகக் கருதுகின்றீர்கள். நீங்கள் முழு உலகத்தையும் உங்கள் புத்தியில் இருந்து துறக்கின்றீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில், நீங்கள் அரைக்கல்பமாக விவேகமற்றவர்களாக இருந்ததால், அவர் தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. முதலாவதாக மனிதர்கள் அமைதியை விரும்புகின்றார்கள். ஆத்மாக்கள் ஆதியில் அமைதிதாம வாசிகளாவார்கள். தந்தை எப்பொழுதுமே அமைதிக் கடல் ஆவார். நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியான அமைதியைப் பெறுகின்றீர்கள். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ அமைதியை அருள்பவரே, எங்களை இவ்வுலகில் இருந்து, அமைதிதாமமாகிய எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். அதாவது, எங்கள் ஆஸ்தியான அமைதியை எங்களுக்குத் தாருங்கள். தேவர்களினதும், சிவபாபாவினதும் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று ‘அமைதியைத் தாருங்கள்’ என்று மக்கள் வேண்டுகின்றார்கள். ஏனெனில் சிவபாபா அமைதிக்கடல் ஆவார். நீங்கள் இப்பொழுது சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியான அமைதியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்தவாறே அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் நினைவு செய்யாது விட்டாலும் கூட, நிச்சயமாக அங்கே செல்வீர்கள். நீங்கள் அவரை நினைவு செய்வதன் மூலம் உங்கள் தலைமீதுள்ள பாவச் சுமை அகற்றப்படுகின்றது. நீங்கள் ஒரேயொரு தந்தையிடம் இருந்தே அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகின்றீர்கள், ஏனெனில், அவரே அமைதிக் கடலும் சந்தோஷக் கடலும் ஆவார். இதுவே பிரதான விடயமாகும். அமைதி, விடுதலை என்றும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் ஜீவன்முக்தியும் பந்தனவாழ்வும் உள்ளன. பந்தன வாழ்வில் இருந்து, நீங்கள் இப்பொழுது ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் பந்தனங்கள் இருப்பதில்லை. அங்கு இலகுவான ஜீவன்முக்தியும், இலகுவான முக்தியும், சற்கதியும் இருந்ததாக நினைவுகூரப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இரண்டினது அர்த்தத்தையும் புரிந்துள்ளீர்கள். முக்தி என்றால் அமைதிதாமமும், ஜீவன்முக்தி என்றால் சந்தோஷதாமமும் ஆகும். சந்தோஷ தாமமும், அமைதி தாமமும் உள்ளன. இதுவே பின் துன்ப உலகமாகின்றது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே உங்கள் வீடான அமைதிதாமத்தை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் தமது வீட்டை மறந்துள்ளார்கள். தந்தை வந்தே அதனை உங்களுக்கு நினைவூட்டுகின்றார். அவர் விளங்கப்படுத்துகின்றார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே, என்னை நினைவு செய்யாதவரை, உங்களால் வீட்டிற்குச் செல்ல முடியாது. நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழியும். ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆகி, தமது வீட்டிற்குச் செல்கின்றார்கள். இது தூய்மையற்ற உலகம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தூய்மையான ஒருவரேனும் இங்கு இல்லை. தூய உலகம் சத்தியுகம் என்றும், தூய்மையற்ற உலகம் கலியுகம் என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் ஆகும். தூய்மையற்ற உலகம் இராவண இராச்சியத்தினால் ஸ்தாபிக்கப்படுகின்றது. இது முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். எல்லையற்ற தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். அவர் மாத்திரமே, சத்தியம் என்று அழைக்கப்படுகின்றார். சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் உண்மையான விடயங்களைச் செவிமடுத்துச் சத்தியயுகத்திற்குச் செல்கின்றீர்கள். பின்னர், துவாபரயுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பமாகின்றது, இராவணன் ஒர் அசுரன். அசுரனால் ஒருபோதும் உண்மையைப் பேச முடியாது. ஆகையாலேயே, மாயையும் பொய், இச்சரீரமும் பொய் என்று கூறப்படுகின்றது. ஆத்மாவும் பொய், சரீரமும் பொய், ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு வகையான உலோகங்கள் உள்ளன: தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு. இந்த யோகத்தின் மூலம் உங்கள் மீதுள்ள கலப்படம் அனைத்தும் அகற்றப்பட்டு நீங்கள் நிஜத் தங்கமாகின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருக்கும் போது, நீங்கள் நிஜத் தங்கமாகவே இருந்தீர்கள். அதன் பின்னர் வெள்ளி கலக்கப்பட்டதும், நீங்கள் சந்திரவம்சத்தினர் என்று அழைக்கப்படுகின்றீர்கள். துவாபரயுகத்திலும், கலியுகத்திலும் முறையே செப்பும், இரும்பும் கலக்கப்படுகின்றன. உங்களில் கலந்துள்ள வெள்ளி, செப்பு, இரும்பு ஆகியன யோகத்தின் மூலம் அகற்றப்படுகின்றன. ஆரம்பத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அமைதிதாமத்தில் இருந்தீர்கள். அதன் பின்னர் நீங்களே சத்தியயுகத்திற்கு முதலில் சென்றீர்கள். அதுவே சத்தியுகத்தில் இருத்தல் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் நிஜத் தங்கம் ஆவீர்கள். யோக சக்தியினால் கலப்படம் முழுவதும் அகற்றப்படும் போது, உண்மையான தங்கம் எஞ்சுகின்றது. அமைதிதாமம், சத்தியயுகம் என்று அழைக்கப்படுவதில்லை. சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகியன இங்கேயே இருப்பதாகக் கூறப்படுகின்றது. அமைதிதாமத்தில் அமைதி மாத்திரமே இருக்கின்றது. ஓர் ஆத்மா சரீரத்தை முதலில் எடுக்கும் போது, அவ் ஆத்மா சத்தியயுகத்தவர் என்று அழைக்கப்படுகின்றார். அப்பொழுது உலகமும் சத்தியயுகமாக உள்ளது. அப்பொழுது சரீரம், சதோபிரதானாகவுள்ள பஞ்சதத்துவங்களால் ஆக்கப்படுகின்றது. ஓர் ஆத்மா சதோபிரதான் ஆக இருக்கும் போது, சரீரமும் சதோபிரதானாகவே உள்ளது. அதன் பின்னர், இறுதியில் நீங்கள் கலியுக சரீரத்தைப் பெறுகின்றீர்கள். ஏனெனில் ஆத்மாவில் கலப்படம் கலக்கப்படுகின்றது. ஆகையால், இந்த உலகமே சத்தியயுகம் என்றும், திரேதாயுகம் என்றும் அழைக்கப்படுகின்றது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீங்கள் முதலில் அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆகையாலேயே நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுதே நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக முடியும். தந்தை எவ்வளவு காலம் இங்கு இருக்கின்றாரோ அவ்வளவு காலத்திற்கு இது இடம்பெறும். அவர் சத்தியயுகத்;தில் எந்தப் பாகத்தையும் எடுப்பதில்லை. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தைப் பெறும் போது, ‘இவர் சத்தியயுகத்து மனித ஆத்மா’ என்று கூறப்படுகின்றார். ‘சத்திய யுகத்து ஆத்மா’ என்று அழைக்கப்படுவதில்லை. இல்லை. சத்திய யுகத்து மனித ஆத்மா ஆகிய இவர், பின்னர் திரேதா யுகத்து மனித ஆத்மா ஆகுகின்றார். எனவே நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதால் உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் உள்ளது. எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? துன்ப உலகை நீங்கள் துறக்க வேண்டும். இதுவே எல்லையற்ற துறவறம் என்று கூறப்படுகின்றது. வீட்டையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு காட்டிற்குச் செல்கின்ற அந்தச் சந்நியாசிகள் எல்லைக்குட்பட்ட துறவறத்தையே மேற்கொள்கின்றார்கள். முழு உலகமுமே ஒரு காடு என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். இது முட்காடாகும். இது முட்கள் நிறைந்த உலகமும், அது மலர்கள் நிறைந்த உலகமும் ஆகும். அவர்கள் அனைத்தையும் துறந்த போதிலும், நகரத்திற்கு தொலைவில் காட்டில், முட்கள் நிறைந்த உலகிலேயே வாழ்கின்றார்கள். அவர்களுடையது துறவறப்பாதையாகும். ஆனால் உங்களுடையது இல்லறப் பாதையாகும். நீங்கள் தூய தம்பதியராக இருந்தீர்கள். இப்பொழுது தூய்மையற்ற தம்பதியர் ஆகியுள்ளீர்கள். அதுவும் ஒரு இல்லற ஆச்சிரமம் என்றே அழைக்கப்படுகின்றது. சந்நியாசிகள் பின்னரே வருகின்றார்கள். இஸ்லாமியரும், பௌத்தர்களும் பின்னரே வருகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களுக்குச் சற்று முன்னர் வருகின்றார்கள். ஆகையால், நீங்கள் இந்த விருட்சத்தையும், சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, கல்ப விருட்சத்தின் ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஏனெனில் அவரே விதையும், சத்தியமும், உணர்வுள்ளவரும் ஆவார். ஆகையாலேயே ஒவ்வொரு கல்பத்திலும் வந்து எங்களுக்குக் கல்ப விருட்சத்தின் இரகசியத்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஆத்மாக்களாக இருந்த போதிலும், உங்களை ஞானக்கடல், அமைதிக்கடல் அல்லது சந்தோஷக் கடல் என்றோ அழைக்க முடியாது. உங்களை அவ்வாறு ஆக்குகின்ற அந்தத் தந்தை ஒருவரே இப்புகழுக்குரியவர். தந்தையின் இப் புகழ் எக்காலத்திற்குமானதாகும். அவர் எப்பொழுதும் தூய்மையானவரும் அசரீரியானவரும் ஆவார். அவர் உங்களைத் தூய்மையாக்குவதற்காக ஒரு குறுகிய காலத்திற்கு இங்கு வருகின்றார். சர்வ வியாபி என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை எப்பொழுதுமே அங்கே வசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்திற்குரியவர்கள் எப்பொழுதுமே அவரை நினைவு செய்கின்றார்கள். சத்தியயுகத்தில் அவரை நினைவு செய்ய வேண்டியதில்லை. இராவண இராச்சியத்திலேயே நீங்கள் கூவி அழைக்க ஆரம்பிக்கின்றீர்கள். அதன் பின்னர் அவர் ஒருவரே வந்து உங்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கின்றார். ஆகையால், அமைதியின்மை நிலவும் போதே நீங்கள் நிச்சயமாக அவரை நினைவு செய்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். அரைக்கல்பத்திற்குச் சந்தோஷமும், அரைக்கல்பத்திற்குத் துன்பமும் உள்ளது. அரைக்கல்பம் கடந்த பின்னரே இராவண இராச்சியம் ஆரம்பமாகின்றது. விகாரங்கள் அனைத்திற்கும் வேராகவிருக்கும் சரீர உணர்வே முதல் இலக்கத்திற்குரியதாகும். அதன் பின்னரே ஏனைய அனைத்து விகாரங்களும் வருகின்றன. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஒரு ஆத்மாவெனக் கருதி, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். ஆத்மாவை இனங்காண்பது அவசியமாகும். ‘ஆத்மா நெற்றியின் நடுவில் பிரகாசிக்கின்றார்’ என்று மக்கள் வெறுமனே கூறுகின்றார்கள். ஆத்மா அமரத்துவ ரூபமுடையவர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இச் சரீரமே, அமரத்துவ ரூபத்தைக் கொண்ட ஆத்மாவின் சிம்மாசனமாகும். ஓர் ஆத்மா நெற்றியின் நடுவில் அமர்ந்துள்ளார். இது அமரத்துவ ரூபம் அமர்ந்திருக்கும் சிம்மாசனமாகும். அனைவருமே உயிருள்ள, அமரத்துவமான சிம்மாசனங்கள். அச்சிம்மாசனம் அம்ரித்சரில் செய்ததைப் போன்ற பலகையால் செய்யப்பட்ட அமரத்துவ சிம்மாசனம் இல்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: மனிதர்கள் அனைவருமே தத்தமக்கென அமரத்துவமான சிம்மாசனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஓர் ஆத்மா வந்து இதில் வசிக்கின்றார். சத்தியயுகமாக இருந்தாலும், கலியுகமாக இருந்தாலும் இந்த மனித சரீரம் ஆத்மாவின் சிம்மாசனமாகும். எனவே, பல அமரத்துவமான சிம்மாசனங்கள் உள்ளன. மனிதர்கள் அனைவருமே அமரத்துவமான ஆத்மாக்களின் சிம்மாசனங்கள் ஆவார்கள். ஓர் ஆத்மா ஒரு சிம்மாசனத்தை நீக்கிய பின்னர் உடனடியாகவே இன்னொன்றை எடுக்கின்றார். முதலில், அந்த சிம்மாசனம் சிறியதாகவே உள்ளது, பின்னர் வளர்ச்சி அடைகின்றது. ஆனால் சீக்கியர்களால் ‘அமரத்துவ சிம்மாசனம்’ என்று அழைக்கப்படுவது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஆகுவதில்லை. நெற்றியே மனிதர்கள் அனைவரதும் அமரத்துவ சிம்மாசனம் என்பதை எவருமே அறியாதுள்ளார்கள். ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள், அவர்கள் என்றுமே அழிவதில்லை. ஆத்மாக்கள் வெவ்வேறு சிம்மாசனத்தைப் பெறுகின்றார்கள். சத்திய யுகத்தில், நீங்கள் முதற்தரமானதொரு சிம்மாசனத்தைப் பெறுகின்றீர்கள். அதுவே சத்தியயுக சிம்மாசனம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் அந்த ஆத்மா, திரேதாயுக, துவாபரயுக, கலியுக சிம்மாசனங்களைப் பெறுகின்றார். எனவே உங்களுக்கு சத்தியயுக சிம்மாசனம் வேண்டுமாயின், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். ஆகையால், தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்களுக்குள் இருக்கும் கலப்படம் அகற்றப்படும். அதன் பின்னர் தேவ சிம்மாசனத்தைப் பெறுவீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமண குலத்தின் சிம்மாசனத்திலேயே இருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுக சிம்மாசனத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அதன் பின்னர் தேவ சிம்மாசனத்தைப் பெறுவீர்கள். உலகில் உள்ளவர்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. சரீர உணர்வுடையவர்கள் ஆகிய பின்னரே, மக்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். ஆகையாலேயே இது துன்ப உலகம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: அமைதிதாமத்தை நினைவு செய்யுங்கள். அதுவே உங்களது உண்மையான வசிப்பிடமாகும். சந்தோஷ உலகை நினைவு செய்வதுடன், தொடர்ந்து இந்தத் துன்ப உலகை மறந்திடுங்கள். இதில் ஆர்வமின்மை இருக்கட்டும். நீங்கள் சந்நியாசிகள் செய்வதைப் போன்று உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் துறக்க வேண்டும் என்றில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒருபுறம் அது நல்லதே, ஆனால் மறு புறம் அது தீயதாகும். உங்களுடையது அனைத்துமே நல்லதாகும். அவர்களுடைய ஹத்த யோகம் நன்மையும் தீமையும் நிறைந்தது. ஏனெனில் தேவர்கள் பாவப் பாதைக்குச் செல்லும்போது, பாரதத்தைப் பராமரிப்பதற்கு தூய்மை அவசியமாகும். ஆகையால் அவர்களே அதற்கு உதவுகின்றார்கள். பாரதம் மாத்திரமே அழியாத இடமாகும். இங்கேயே தந்தை வருகின்றார். எனவே, எல்லையற்ற தந்தை வருகின்ற இடமே எல்லாவற்றிலும் அதி சிறந்த யாத்திரைத் தலமாகும். தந்தை மாத்திரமே வந்து, அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றார். ஆகையாலேயே பாரதம் மாத்திரமே அதிமேலான இடமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்ற பிரதான விடயம்: குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். ‘மன்மனாபவ’ என்ற வார்த்தை கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தந்தை எதையுமே சம்ஸ்கிருதத்தில் விளங்கப்படுத்தவில்லை. தந்தை உங்களுக்கு மன்மனாபவ என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார்: சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, நீங்கள் ஓர் ஆத்மா என்பதில் நம்பிக்கை கொண்டிருங்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள். ஆத்மாக்கள் என்றுமே பெரிதாகவோ சிறிதாகவோ ஆகுவதில்லை. அவர்கள் தமக்குள் அழியாத பாகங்களின் பதிவைக் கொண்டிருக்கின்றார்கள். நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தாமதித்து வருகின்ற ஆத்மாக்கள், சிறியதொரு பாகத்தையே கொண்டிருக்கின்றார்கள். அதைத் தவிர்ந்த நேரத்தில் அவர்கள் அமைதிதாமத்திலேயே இருக்கின்றார்கள். அவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தாமதித்து வருபவர்கள், சிறிதளவு துன்பத்தையும் சிறிதளவு சந்தோஷத்தையுமே அனுபவம் செய்கின்றார்கள். தீபாவளியின் போது பல நுளம்புகள் வெளிப்படுகின்றன, அடுத்தநாள் காலை அவற்றை நீங்கள் பார்க்கும் போது அவை மரணித்திருக்கும். அவ்வாறே மனிதர்களுக்கும் நடக்கின்றது. தாமதித்து வருகின்ற ஆத்மாக்களின் பெறுமதி என்னவாக இருக்க முடியும்? அது மிருகங்களின் வாழ்க்கையைப் போன்றதாகும். எனவே, இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்றும், எவ்வாறு மனித விருட்சம் சிறியதில் இருந்து பெரிதாகுகின்றது என்றும், எவ்வாறு பெரியதாகவிருந்த அது சிறியதாகுகின்றது என்றும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் மிகவும் சொற்ப அளவினரே உள்ளனர். ஆனால் கலியுகம், அதிகளவு விரிவாக்கமடைவதால், விருட்சம் பெரிதாகின்றது. இதற்காகத் தந்தை கொடுத்துள்ள பிரதான சமிக்ஞை: உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழும் போது, என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். எட்டு மணித்தியாலங்களுக்கு நினைவு செய்வதைப் பயிற்சி செய்யுங்கள். நினைவு செய்வதன் மூலம், நீங்கள் நாளடைவில் தூய்மை ஆகித் தந்தையிடம் செல்வீர்கள், அத்துடன் நீங்கள் புலமைப் பரிசிலையும் பெறுவீர்கள். பாவங்கள் ஏதேனும் எஞ்சியிருக்குமாயின், இங்கே இன்னொரு பிறவி எடுக்க நேரிடும். தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுவதால், அந்தஸ்து குறைவடைகின்றது. அனைவருமே தமது கர்மக் கணக்குகளைத் தீர்க்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் இப்பொழுது தொடர்ந்தும் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது பாரத மக்களின் சனத்தொகையை விடக் கிறிஸ்தவர்களின் சனத்தொகை அதிகளவில் உள்ளது. அவர்கள் விவேகமாகவும் உள்ளனர். பாரத மக்கள் 100 சதவீதம் விவேகமாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது விவேகமற்றவர்கள் ஆகியுள்ளார்கள். ஏனெனில் அவர்களே 100 சதவீதமான சந்தோஷத்தையும் அவர்களே 100 சதவீதமான துன்பத்தையும் அனுபவம் செய்பவர்கள். ஏனையோர் பின்னரே வருகின்றார்கள். கிறிஸ்தவ வம்சத்திற்கும் கிருஷ்ண வம்சத்திற்கும் இடையேயான தொடர்பைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். கிறிஸ்தவர்கள் உங்கள் இராச்சியத்தை எடுத்துச் சென்றனர், நீங்கள் அதனை மீண்டும் கிறிஸ்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளீர்கள். இந் நேரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகளவு பலம்வாய்ந்தவர்கள். பாரதம் அவர்களிடம் இருந்து உதவி பெறுகின்றது. பாரதம் இப்பொழுது பட்டினி கிடப்பதால், பிரதிபலன் சேவை இடம்பெறுகின்றது. அவர்கள் இங்கிருந்து அதிகளவு செல்வத்தையும், வைரங்களையும், இரத்தினங்களையும் எடுத்துச் சென்றனர். அவர்கள் அதிகளவு செல்வம் நிறைந்தவர்கள் ஆகினார்கள். எனவே அவர்கள் தொடர்ந்தும் அச் செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கின்றார்கள். அவர்கள் எதனையும் பெறப் போவதில்லை. இப்பொழுது, உங்களை எவருமே அறியாதுள்ளார்கள். அவர்கள் உங்களை அறிவார்களாயின், அவர்கள் உங்களிடம் வந்து ஆலோசனை பெறுவார்கள். நீங்கள் இறைவனின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டிருக்கும் இறை சமுதாயத்தினர் ஆவீர்கள். நீங்களே இறை சமுதாயத்தினரில் இருந்து, தேவ சமுதாயத்தினர் ஆகுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் சத்திரியர்களாவும், வைசியர்களாகவும், சூத்திர சமுதாயத்தினராகவும் ஆகுவீர்கள். இந்த நேரத்தில், நாங்கள் பிராமணர்கள். அதன் பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். அதன் பின்னர் சத்திரியர்கள் ஆகுகின்றோம். ‘ஹம்சோ’ என்பதன் அர்த்தம் எவ்வளவு சிறந்தது என்று பாருங்கள். இது குட்டிக்கரண விளையாட்டாகும். அத்துடன் இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானதாகும். ஆனால் மாயை உங்களை மறக்கச் செய்து, உங்களுக்குள் அசுரத்தனத்தை ஏற்படுத்துகின்றாள். முன்னர், உங்களிடம் தெய்வீகக்குணங்கள் நிறைந்திருந்தன. தூய்மையற்றவர் ஆகுதல் அசுரத்தனமாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு புலமைப்பரிசைப் பெறுவதற்கு, வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போது, குறைந்தபட்சம் எட்டுமணித்தியாலங்களாயினும் தந்தையை நினைவு செய்வதற்குப் பயிற்சி செய்யுங்கள். நினைவு செய்தல் என்ற பயிற்சியினால் மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிவதுடன், நீங்கள் சத்தியயுக சிம்மாசனத்தையும் பெறுவீர்கள்.2. இந்தத் துன்ப உலகில் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருங்கள். அமைதி தாமம், சந்தோஷ தாமம் ஆகிய உங்கள் ஆதி வசிப்பிடங்களை நினைவு செய்யுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகி, எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் கர்மகணக்குகளை புரிந்து கொண்டு, உங்கள் ஸ்திதியை ஆட்ட அசைக்க முடியாததாக ஆக்குவதனால் ஓர் இலகுயோகி ஆகுவீர்களாக.முன்னேறிச் செல்கையில், உங்கள் முன்னிலையில் சில கர்மகணக்குகள் வரும் போது, அது உங்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கவோ அல்லது உங்கள் ஸ்திதியை தளம்பல் அடையச் செய்யவோ கூடாது. சரி, அது வந்து விட்டது, அதனை இனங்கண்டு, அதனை தொலைவிலேயே முடித்துவிடுங்கள். இப்பொழுது நீங்கள் போர்வீரர்கள் ஆகக் கூடாது. சர்வசக்திவான் தந்தை உங்களுடன் இருக்கின்றார் என்பதால் மாயையினால் உங்களை அசைக்க முடியாது. உங்களுடைய நம்பிக்கையின் அத்திவாரத்தை நடைமுறை வடிவத்திற்கு கொண்டு வந்து, அதனை சரியான நேரத்தில் பயன்படுத்தினால், நீங்கள் இலகுயோகி ஆகுவீர்கள். இப்பொழுது சதா யோகி ஆகுங்கள், யுத்தம் புரியும் போர்வீரர் ஆகாதீர்கள்.
சுலோகம்:
இலேசாகவும் ஒளியாகவும் (டபிள் லைட்) நிலைத்திருப்பதற்கு உங்கள் சகல பொறுப்புகளையும் தந்தையிடம் ஒப்படையுங்கள்.