05.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நாடகத்தின் இந்த மேன்மையான ஞானம் குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே உள்ளது. இந்த நாடகம் அதேபோன்று மீண்டும் இடம்பெறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பாடல்:
இல்லறத்தவர்கள் பாபாவிடம் கேட்கும் கேள்வி என்ன? பாபா அவர்களுக்கு என்ன அறிவுரையைக் கூறுகிறார்?பதில்:
சில குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, நான் வியாபாரம் செய்யலாமா? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் வியாபாரம் செய்யலாம். ஆனால் இராஜரீகமான வியாபாரத்தைச் செய்யுங்கள். பிராமணக் குழந்தைகள் மதுபானம், சிகரட் போன்ற அசுத்தமான வியாபாரத்தைச் செய்ய முடியாது. ஏனெனில் அவற்றின் மூலம் விகாரங்களின் ஈர்ப்பு பெருமளவில் உள்ளது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஒன்று, ஆன்மீகத் தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களும், மற்றையது இராவணனின் அசுர கட்டளைகளும் ஆகும். தந்தையின் வழிகாட்டல்களை அசுர கட்டளைகள் என்று அழைக்க முடியாது. இராவணனைத் தந்தை என்று அழைக்க முடியாது. அவை இராவணனின் அசுர கட்டளைகளாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். இரவுக்கும், பகலுக்குமான அத்தகைய வேறுபாடு உள்ளது! கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் புகுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைத் தந்தையிடமிருந்து செவிமடுக்கிறீர்கள். இதைப் பற்றி வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. தந்தையிடமிருந்து செல்வத்தைப் பெறுவதற்காகவே நீங்கள் அவரைச் சந்திக்கிறீர்;கள். இராவணனின் மூலம் உங்கள் செல்வம் தொடர்ந்தும் குறைவடைகின்றது. கடவுளின் வழிகாட்டல்கள் உங்களை எங்கு இட்டுச் செல்கின்றன என்பதும், அசுர கட்டளைகள் உங்களை எங்கே இட்டுச் செல்கின்றன என்பதும், உங்களுக்கு மாத்திரமே தெரியும். அசுர கட்டளைகளைப் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே, நீங்கள் தொடர்ந்தும் வீழ்கின்றீர்கள். புதிய உலகில் நீங்கள் குறைவாகவே வீழ்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு வீழ்ந்தீர்கள் என்பதையும், இப்பொழுது எவ்வாறு ஏறவேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்;கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை மேன்மையானவர்;கள் ஆகுவதற்காக, ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். மேன்மையானவர்கள் ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு மீண்டும் ஒருமுறை மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் பல தடவைகள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கிறீர்கள். பின்னர், மறுபிறவி எடுத்ததனால், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள். பின்னர் நீங்கள் ஒரு தடவையே ஏறுகிறீர்கள். அது நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமானது. அதற்குக் காலம் எடுக்கும் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். அதி மங்களகரமான சங்கமயுக நேரமும் மிகச்சரியானது. நாடகம் மிகச்சரியான முறையில் நகர்கிறது, அதுவும் மிக அற்புதமானது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்து, ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதை உங்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது; அவ்வளவே! எவ்வாறாயினும் நீங்கள் முயற்சி செய்யும்பொழுது, உங்களில் சிலர் சிரமமாக உள்ளது என்றும் அத்தகையதோர் அதிமேலான அந்தஸ்தைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்றும் நினைக்கிறீர்கள். தந்தையை நினைவுசெய்வது மிக இலகுவானதே, உங்கள் ஆஸ்தியைப் பெறுவதும் இலகுவானதே; அது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். எவ்வாறாயினும், நீங்கள் முயற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது, மாயையின் தடைகளும் உள்ளன. நீங்கள் இராவணனை வெற்றிகொள்ள வேண்டும். உலகம் முழுவதிலும் இராவண இராச்சியமே உள்ளது. ஒவ்வொரு கல்பமும் நீங்கள் யோக சக்தியின் மூலம் இராவணனை வென்றுள்ளீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவனை வெற்றி கொள்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு இதனைக் கற்பிக்கின்றார். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் கூவி அழைத்தீர்கள்: பாபா, பாபா! எவ்வாறாயினும் முன்னர் நீங்கள் தந்தையை அறிந்துகொள்ளவில்லை. நீங்கள் ஆத்மாவை அறிந்திருந்தீர்கள். கூறப்படுகிறது: ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றது. ஆத்மாவை அறிந்திருந்தபொழுதும் நீங்கள் தந்தையை அறிந்திருக்கவில்லை. இது அத்தகையதொரு தனித்துவமான நாடகம். நீங்கள் கூறுவதுண்டு: ஓ பரமாத்மா பரமதந்தையே! நீங்கள் அவரை நினைவுசெய்தாலும் அவரை அறிந்துகொள்ளவில்லை. கடவுளின் தொழிலையோ, ஆத்மாக்களின் தொழிலையோ நீங்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளவில்லை, தந்தையே வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தையைத் தவிர வேறெவராலும் உங்களைப் புரிந்துணர்வு உடையவராக்க முடியாது. இந்தப் பாகம் வேறு எவருக்கும் இல்லை. இறை சமுதாயம், அசுர சமுதாயம், தேவ சமுதாயம் ஆகிய அனைத்தும் நினைவுகூரப்படுகின்றன. அது மிக இலகுவானதாயினும் நீங்கள் இவ்விடயங்களை நினைவுசெய்வதிலேயே, மாயை உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துகிறாள்; அவள் உங்களை மறந்துவிடச் செய்கிறாள். தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகத் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். பின்னர் நாடகத்தின் முடிவின்பொழுது, அதாவது, பழைய உலகம் முடிவடையும்பொழுது, நீங்கள் செய்த முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக, அந்த இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும். சமயநூல்களிலிருந்து இவ்விடயங்களை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. இவர் கீதை போன்றவற்றைப் பெருமளவு கற்றுள்ளார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: அதற்குப் பெறுமதி இல்லை. எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் அவர்கள் செவிகளின் மூலம் அதிக இன்பத்தைப் பெற்றதனால், அவர்கள் அதில் எதனையும் துறக்கவில்லை. அனைத்தும் நீங்கள் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். சிலரின் வியாபாரம் இராஜரீகமானது. ஆனால் ஏனையோரின் வியாபாரம் அசுத்தமானது. மதுபானம், சிகரட் போன்றவற்றை விற்பது மிகவும் மோசமான வியாபாரம். மதுபானம் அனைத்து விகாரங்களையும் கவரும் தன்மையுடையது. ஒருவரை மதுபானப் பழக்கமுடையவராக ஆக்கும் வியாபாரம் ஒரு சிறந்த வியாபாரமல்ல. தந்தை உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்: அந்த வியாபாரத்தை மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடியுங்கள். அவ்வாறு இல்லையெனில் உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாதிருக்கும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அழிவற்ற ஞான இரத்தினங்கள் இல்லாத, அனைத்து வகையான வியாபாரத்திலும் இழப்பே உள்ளது. இவர் நகைக்கடை வியாபாரத்தைச் செய்தபொழுதிலும், அவர் அதிலிருந்து நன்மை அடையவில்லை. அதிகபட்சம், அவர் ஒரு கோடீஸ்வரர் ஆகினார். இந்த வியாபாரத்தின் மூலம் நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள்? பாபா எப்பொழுதும் கடிதங்களிலும் அவர்களுக்கு எழுதுகின்றார்: பலகோடி மடங்கு பாக்கியசாலியானவர், நீங்கள் 21 பிறவிகளுக்கு அவ்வாறு ஆகுகிறீர்கள்! பாபா கூறுகின்ற அனைத்தும் மிகச்சரியே என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் அந்தத் தேவர்களாக இருந்தோம். பின்னர் சக்கரத்தைச் சுற்றி வந்தபொழுது, நாங்கள் கீழிறங்கினோம். இப்பொழுது உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும். தந்தையிடமிருந்து நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆனால் நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்களிடம் எந்த அசுர குணங்களும் இல்லை என்பதை நீங்களே உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தனது சரீரமாகிய கட்டடத்தைத் தான் வாடகைக்குக் கொடுத்துள்ளார் என்பது இந்த பாபாவுக்குத் தெரியும். இதுவும் (சரீரம்) ஆத்மா இருக்கும் ஒரு கட்டடமாகும். எனது கட்டடத்தைக் கடவுளுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளேன் என்ற போதை எனக்குப் பெருமளவு உள்ளது. நாடகத் திட்டத்திற்கேற்ப, அவர் வேறு எந்தக் கட்டடத்தையும் எடுக்க மாட்டார். ஒவ்வொரு கல்பத்திலும் இந்தக் கட்டடத்தையே அவர் எடுக்க வேண்டும். இதையிட்டு இவர் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அதிகளவு குழப்பங்கள் இருந்தன. இந்த பாபா சில சமயங்களில் சிவபாபாவிற்கு நகைச்சுவையாகக் கூறுகிறார்: பாபா, நான் உங்கள் இரதம் ஆகியபின்னர், எனக்கும் பல அவதூறுகள் ஏற்பட்டன. தந்தை கூறுகிறார்: நானே அதிகளவு அவதூறு செய்யப்பட்டவர். இது இப்பொழுது உங்களுடைய முறையாகும். பிரம்மா முன்னர் ஒருபொழுதும் அவதூறு செய்யப்படவில்லை. ஆனால், இது இப்பொழுது அவருடைய முறையாகும். அவர் தனது இரதத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நிச்சயமாகத் தந்தையிடமிருந்து தனக்கு உதவி கிடைக்கும் என்பதை அவர் புரிந்துகொள்கின்றார். இருந்தும் பாபா கூறுகிறார்: தந்தையை சதா நினைவுசெய்வதில், குழந்தைகளாகிய நீங்கள் என்னை விட விரைவாக முன்னேறிச் செல்லலாம். ஏனெனில், இவருக்குப் பெருமளவு பொறுப்பு உள்ளது. அது நாடகம் என்று கூறி, அவர் அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கினாலும், அதன் சில ஆதிக்கங்களும் உள்ளன. அவர் மிகச்சிறந்த சேவையைச் செய்வதுண்டு. தீய சகவாசத்தினால் அவர் பாழாகி விட்டார். அதிகளவு அவச்சேவை இடம்பெறுகிறது. நீங்கள் அவ்வாறான செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றின் ஆதிக்கமும் இருக்கும். அதுவும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தில் உள்ளது என்பதை நீங்கள் அந்நேரத்தில் புரிந்துகொள்ள மாட்டீர்கள். பின்னர் நீங்கள் தாமதமாகவே அதனைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மாயை உங்கள் ஸ்திதியைக் கெடுக்கிறாள். ஆகவே பெருமளவு அவச்சேவை நடைபெறுகிறது. அப்பாவிகள் அதிகளவு தாக்கப்படுகிறார்கள்! இங்கு ஒருவரின் சொந்தக் குழந்தைகளே அதிகளவு அவச்சேவை செய்கிறார்கள்! அவர்கள் பலவிதமான பிழையான விடயங்களைக் கூற ஆரம்பிக்கிறார்கள். தந்தை உங்களுக்கு என்ன கூறுகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அவர் சமயநூல்கள் போன்றவற்றை உங்களுக்குக் கூறுவதில்லை. இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நாங்கள் மிகவும் மேன்மையானவர்கள் ஆகுகிறோம். அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதால், நாங்கள் மிகவும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டோம். அதற்குக் காலம் எடுக்கின்றது. மாயையுடனான போர் தொடரும். இப்பொழுது நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள். நீங்கள் நிச்சயமாக அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் வெற்றிகொள்வீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியடைகிறோம். ஸ்தாபனையும், விநாசமும் இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றன. இந்த விவரங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை உண்மையில் எங்கள் மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கிறார். பின்னர் நாங்கள் உலகை ஆளுவோம். நாங்கள் பாபாவிற்கு நன்றியும் கூற மாட்டோம். தந்தை கூறுகிறார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நானும் இந்த நாடகத்தில் ஒரு நடிகரே. நாடகத்தில் ஒவ்வொருவருடைய பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிவபாபாவிற்கும் ஒரு பாகம் உள்ளது. எங்களுக்கும் பாகங்கள் உள்ளன. நன்றி கூறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. சிவபாபா கூறுகிறார்: நான் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பதுடன், பாதையையும் காட்டுகிறேன். இதனை வேறு எவராலும் உங்களுக்குக் காட்ட முடியாது. வருபவர்கள் எவரிடமும் சுவர்க்கம் என்ற புதிய சதோபிரதான் உலகம் இருந்தது எனக் கூறுங்கள். இந்தப் பழைய உலகம் தமோபிரதான் எனக் கூறப்படுகிறது. பின்னர், சதோபிரதான் ஆகுவதற்கு நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதுவே மந்திரமாகும்: மன்மனாபவ! மதியாஜிபவ! அவ்வளவுதான். அவரும் கூறுகிறார்: நானே பரமகுரு. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, நினைவு யாத்திரை மூலம் முழு உலகையும் சற்கதி அடையச் செய்;கிறீர்;கள். சிவபாபாவே உலகின் குரு. அவரே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். இந்த ஸ்ரீமத்தை நாங்கள் ஒவ்வொரு 5000 வருடமும் பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இன்று இந்த உலகம் பழையதாக உள்ளது, நாளை அது புதியதாகிவிடும். இந்தச் சக்கரத்தைப் புரிந்துகொள்வது மிகவும் இலகுவாகும். ஆனால், நீங்கள் அதனை நினைவில் வைத்திருக்கவும் வேண்டும். அப்பொழுதே உங்களால் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். இருப்பினும், அதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்! எவராவது விழும்பொழுது, அவரினுள் உள்ள அனைத்து ஞானமும் முடிவடைந்து விடுகிறது. மாயை அவரின் ஆற்றல்கள், திறன்கள் அனைத்தையும் அழித்து விடுகிறாள். அவள் அவர்களின் ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கி, அவர்களை முற்றிலும் ஆற்றல்கள் அற்றவர்களாக்கி விடு;கிறாள். அவர்கள் அத்தகைய வழியில் விகாரங்களில் அகப்படுகிறார்கள். கேட்கவே வேண்டாம்! இப்பொழுது நீங்கள் முழுச் சக்கரத்தையும் நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் பிறவிபிறவியாக விபச்சார விடுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்;தீர்கள். நீங்கள் பிறவிபிறவியாக, பாவிகளாக இருந்தீர்கள் என்று அனைத்து விக்கிரகங்களின் முன்னாலும் கூறினீர்கள். முன்னர் நாங்கள் புண்ணியாத்;மாக்களாக இருந்தோம். பின்னர் நாங்கள் பாவாத்மாக்கள் ஆகினோம். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை புண்ணியாத்மாக்கள் ஆகுகிறோம். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் உங்களைப் போன்று ஆக்குகிறீர்கள். வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்களில் ஒரு வித்தியாசம் உள்ளது. அவர்களால் நீங்கள் விளங்கப்படுத்துவது போன்று விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறாயினும் அனைவராலும் அனைத்தையும் துறந்து விட முடியாது. தந்தையே கூறுகிறார்: வீட்டில் வாழும்பொழுது, தாமரை மலர் போன்று வாழுங்கள். அனைவரும் அனைத்தையும் துறந்து இங்கு வருவதற்கு விரும்பினால், அனைவரும் எங்கு அமர்வார்கள்? தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்பதில்லை. இவர் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளார். என்னைப் பற்றி அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையான கடவுள், ஞானம் நிறைந்தவர். தந்தையிடம் என்ன ஞானம் உள்ளது என்பதும் மக்களுக்குத் தெரியாது. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய முழு ஞானமும் உங்களிடம் உள்ளது. பக்தி மார்க்கத்திலுள்ள அந்தச் சமயநூல்கள் அனைத்தும் அநாதியானவை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தச் சமயநூல்கள் நிச்சயமாகப் பக்தி மார்க்கத்தில் வெளிப்படுகின்றன. அவர்கள் வினவுகிறார்கள்: ஒரு மலை விழுந்தால், அது மீண்டும் எவ்வாறு உருவாக்கப்படும்? எவ்வாறாயினும், இது நாடகத்தில் உள்ளது. சமயநூல்கள் போன்ற அனைத்தும் முடிவடைந்து விடுகின்றன, பின்னர் அவற்றிற்குரிய நேரத்தில் அவை மீண்டும் உருவாக்கப்படுகின்றன. முன்னர் நாங்கள் சிவனை வழிபட்டோம். இதுவும் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவன் எவ்வாறு வழிபடப்பட்டார்? மக்கள் பல பாடல்கள் போன்றவற்றைப் பாடுகிறார்கள். சிவபாபாவே ஞானக் கடல் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது அவர் எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் என்றுமே நினைத்துப் பார்க்கவும் முடியாத, கட்டுக் கதைகளை அவர்கள் சமயநூல்களில் எழுதியிருக்கிறார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார்ந்தமாக அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்: எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார்! நினைவுகூரப்படுகின்றது: மாணவ வாழ்க்கையே அதி சிறந்ததாகும். கடவுள் பேசுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகிறேன். வேறெந்தச் சமயநூல்களிலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுவே அனைத்திலும் உயர்ந்த பேறாகும். உண்மையில் ஒரேயொரு குருவே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். சமயங்களை ஸ்தாபிக்கும் பணியை மேற்கொள்பவர்களே குருமார்கள் என அழைக்கப்பட்டாலும், சற்கதியை அருள்பவரே குரு ஆவார். அந்தக் குருமார் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக, அனைவரையும் தங்களைப் பின்பற்றச் செய்கின்றார்கள். அவர்களால் வீட்டிற்குச் செல்லும் பாதையை எவருக்கும் காட்ட முடியாது. வேறு எந்தக் குருவினதும் அன்றி, ‘சிவனின் ஊர்வலம்’ நினைவு கூரப்படுகிறது. மக்கள் பின்னர் சிவனையும், சங்கரையும் கலந்து விட்டார்கள். சூட்சும உலகவாசிக்கும், அசரீரி உலகவாசியான ஒரேயொருவருக்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது. அவர்கள் இருவரும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? பக்தி மார்க்கத்தில் அவர்கள் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள். பிரம்மாவும், விஷ்ணுவும், சங்கரரும் மூன்று குழந்தைகள். பிரம்மாவைப் பற்றியும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவர் தத்தெடுக்கப்பட்டவர். ஆகவே அவர் சிவனின் குழந்தையாவார். தந்தையே அதிமேலானவர். இவை அனைத்தும் அவருடைய படைப்புக்கள். அதிகளவு புரிந்துகொள்ளப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. அழியாத ஞான இரத்தின வியாபாரத்தைச் செய்து, 21 பிறவிகளுக்குப் பல்கோடி மடங்கு பாக்கியசாலி ஆகுங்கள். உங்களையே சோதித்துப் பாருங்கள்: என்னிடம் ஏதாவது அசுர குணங்கள் உள்ளதா? மேலும் விகாரங்களை வளர்க்கக்கூடிய வியாபாரம் எதனையாவது நான் செய்கின்றேனா?2. நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து முழு உலகையும் சற்கதி அடையுமாறு செய்ய வேண்டும். சற்குருவான ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பிறரையும் உங்களைப் போன்றவர்களாக ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். மாயை என்றுமே உங்களை ஆற்றல்கள் அற்றவர்களாகச் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீங்கான எதிலும் நல்லதை அனுபவம் செய்வதுடன் உங்களின் புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.சதா இந்த சுலோகனை நினைவுசெய்யுங்கள்: எது நடந்ததோ, அது நல்லதற்கே, அது நல்லதே, அது சிறப்பாகவே இருக்கும். தீங்கானதைத் தீயதாகப் பார்க்காதீர்கள். ஆனால் தீங்கான எதிலும் நல்லதையே அனுபவம் செய்யுங்கள். தீங்கான எதிலும் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். ஏதாவது சூழ்நிலை தோன்றும்போது, என்ன நடந்தது? என நினைக்காதீர்கள். ஆனால், அது நல்லதாகவே இருக்கும் என உடனடியாக நினையுங்கள். எது கடந்து சென்றதோ, அது நல்லதாகவே இருக்கும். எங்கு நன்மை உள்ளதோ, அங்கு நீங்கள் சதா கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பீர்கள். உங்களின் புத்தியில் நம்பிக்கை இருப்பதென்றால், கவலையற்ற சக்கரவர்த்தியாக இருத்தல் என்று அர்த்தம்.
சுலோகம்:
தங்களுக்காக மரியாதை வைத்திருப்பதுடன் மற்றவர்களுக்கும் மதிப்பளிக்கும் பதிவேட்டைக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் நன்றாக இருப்பார்கள்.