05.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஞானத்தைக் கடையுங்கள். இந்த ஞானத்தைக் கடைவதன் மூலம் மாத்திரமே நீங்கள் அதிலிருந்து அமிர்தத்தைப் பிரித்தெடுக்க முடியும்.

கேள்வி:
21 பிறவிகளுக்குச் செழிப்பானவர்கள் ஆகுவதற்கான வழி என்ன?

பதில்:
இந்த ஞான இரத்தினங்கள். அதிமங்களகரமான இந்தச் சங்கமயுகத்தில் நீங்கள் எந்தளவிற்கு ஞான இரத்தினங்களைக் கிரகிக்கிறீர்களோ அந்தளவிற்குச் செழிப்பானவர்கள் ஆகுவீர்கள். இந்நேரத்தின் ஞான இரத்தினங்கள், அங்கே வைரங்களாகவும் இரத்தினங்களாகவும் ஆகுகின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள் ஞான இரத்தினங்களைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகித்து, பின்னர் ஏனையோருக்கும் அவற்றைக் கூறும்போது மாத்திரமே உங்கள் முகங்கள் மலர்ச்சியாக இருப்பதுடன், அதன் மூலம் தந்தையின் பெயரும் போற்றப்படுகிறது. அசுரகுணங்கள் அகற்றப்படும் போதே நீங்கள் செழிப்பானவர்கள் ஆக முடியும்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைப் பற்றியும் அந்த பக்தியைப் பற்றியும் விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் பக்தி இருப்பதில்லை என்றும் நீங்கள் சத்தியயுகத்தில் இந்த ஞானத்தைப் பெறுவதில்லை என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி செய்யவும் மாட்டார், ஞானம் என்னும் புல்லாங்குழலை இசைக்கவும் மாட்டார். அந்தப் புல்லாங்குழல் (முரளி) என்றால் இந்த ஞானத்தைக் கொடுப்பதாகும். நினைவுகூரப்பட்டுள்ளது: புல்லாங்குழலில் மந்திரவித்தை உள்ளது. ஆகையால் அதில் நிச்சயமாக ஏதோ மந்திரவித்தை இருக்க வேண்டும். புல்லாங்குழல் இசைப்பதென்பது ஒரு பொதுவான விடயமாகும். ஆன்மீகப் பக்கிரிகளும் புல்லாங்குழல்களை இசைக்கிறார்கள். இப் புல்லாங்குழலில் ஞான மந்திரவித்தை உள்ளது. அறியாமையை மந்திரவித்தை என்று அழைக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைத்தார் என்று மக்கள் நம்புகிறார்கள், அவர்கள் அவரைப் பெரிதும் போற்றுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தேவர். நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்களாகவும் தேவர்களிலிருந்து மனிதர்களாகவும் தொடர்ந்தும் மாறுகின்றீர்கள். தேவர்களின் உலகமும் மனிதர்களின் உலகமும் உள்ளன. இந்த ஞானத்தின் மூலமே நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். அது சத்தியயுகமாக இருக்கும் போது நீங்கள் இந்த ஞானத்தின் ஆஸ்தியைக் கொண்டிருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் பக்தி இல்லை. தேவர்கள் மனிதர்களாக ஆகும்போதே பக்தி மீண்டும் ஆரம்பிக்கின்றது. மனிதர்கள் விகாரமுள்ளவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தேவர்கள் விகாரமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தேவர்களின் உலகம் தூய உலகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. தேவர்கள் சற்கதியில் உள்ளார்கள். சீரழிவில் உள்ளவர்களுக்கே இந்த ஞானம் தேவை. இந்த ஞானத்தைக் கற்பதன் மூலம் நீங்கள் தெய்வீகக் குணங்களை வளர்த்துக் கொள்கின்றீர்கள். இந்த ஞானத்தைக் கிரகிப்பவர்களின் நடத்தை மிகவும் தெய்வீகமானதாக இருக்கிறது. அதைக் குறைந்தளவு கிரகிப்பவர்களின் நடத்தை கலப்படமாக இருக்கிறது. அதனை அசுரத்தனமானது என அழைக்க முடியாது. ஞானத்தைக் கிரகிக்காதவர்களை நான் எவ்வாறு எனது குழந்தைகள் என அழைக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளாவிட்டால் தந்தையினால் எப்படி உங்களை இனங்கண்டு கொள்ள முடியும்? நீங்கள் தந்தையை அதிகளவு அவதூறு செய்கிறீர்கள்! கடவுளை அவதூறு செய்வது மிகவும் தீமையானது. நீங்கள் பிராமணர்கள் ஆகும்போது தந்தையை அவதூறு செய்வதை நிறுத்துகிறீர்கள். ஆகவே நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். மாணவர்கள் இந்த ஞானக்கடலைக் கடைந்து முன்னேற்றம் அடைகிறார்கள். உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் அதிலிருந்து அமிர்தத்தைப் பெறுவதற்கு அதனைக் கடைய வேண்டும். நீங்கள் ஞானத்தைக் கடையாது விட்டால் நீங்கள் எதனைக் கடைந்து கொண்டிருப்பீர்கள்? அசுரத்தனமான எண்ணங்களைக் கடைவதால் குப்பையை மாத்திரமே உங்களால் பெற முடியும். இப்பொழுது நீங்கள் கடவுளின் மாணவர்கள். உங்களை மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கான கல்வியையே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவர்கள் இதனை உங்களுக்குக் கற்பிக்க மாட்டார்கள். தேவர்களை ஒருபோதும் ஞானக்கடல் என அழைக்க முடியாது. தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். உங்களிடம் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் உள்ளனவா என உங்களையே நீங்கள் வினவவேண்டும். உங்களிடம் ஏதாவது அசுர குணங்கள் இருந்தால் அவற்றை நீங்கள் அகற்ற வேண்டும். அப்பொழுது மாத்திரமே உங்களால் தேவர்கள் ஆக முடியும். இப்பொழுது நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் அதிமங்களகரமானவர் ஆகுவதால் உங்களைச் சுற்றியுள்ள சூழலும் மிக நன்றாக இருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக்கூடாது. இல்லாவிட்டால் நீங்கள் குறைந்த அந்தஸ்து உடையவர் என்றே கூறப்படும். மக்களைச் சுற்றியுள்ள சூழலிருந்து உங்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் பேசும் வார்த்தைகள் மனதைப் புண்படுத்துபவையாக மாத்திரமே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும். உங்கள் முகங்கள் சதா மலர்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்கள் உதடுகளிலிருந்து சதா இரத்தினங்கள் மாத்திரம் வெளிவர வேண்டும். இந்த இலக்ஷ்மி நாராயணனின் படம் அவர்களை முகமலர்ச்சியுடன் காட்டுகிறது. அந்த ஆத்மாக்கள் ஞான இரத்தினங்களைக் கிரகித்துள்ளார்கள். அத்தகைய இரத்தினங்கள் அவர்களின் உதடுகளிலிருந்து வெளிவந்திருக்க வேண்டும். அவர்கள் ஞான இரத்தினங்களை மாத்திரமே செவிமடுத்தும் பேசியும் இருப்பார்கள். அவர்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும்! இப்பொழுது நீங்கள் பெறுகின்ற ஞான இரத்தினங்கள் பின்னர் உண்மையான வைரங்களாகவும் இரத்தினங்களாகவும் ஆகுகின்றன. ஒன்பது இரத்தினங்களின் மாலை என்பது இரத்தினங்களாலும் வைரங்களாலும் ஆனது அல்ல. அது உயிருள்ள இரத்தினங்களின் ஒரு மாலையாகும். மக்கள் அவற்றை உண்மையான இரத்தினங்கள் என நினைத்து நவ இரத்தினக் கற்களின் மோதிரம் போன்றவற்றை அணிகிறார்கள். இந்த அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே இந்த ஞான இரத்தினங்களின் மாலை உருவாக்கப்படுகிறது. இந்த ஞான இரத்தினங்கள் உங்களை 21 பிறவிகளுக்குச் செழிப்பானவர்கள் ஆக்குகின்றன. எவராலும் இந்த இரத்தினங்களை உங்களிடமிருந்து திருட முடியாது. இங்கு நீங்கள் இரத்தினங்களை அணிந்தால் எவராவது உடனடியாக அதனைத் திருடி விடுவார்கள். ஆகவே நீங்கள் உங்களை மிகவும் விவேகியாக்கி உங்களுக்குள் இருக்கின்ற அசுர குணத்தை அகற்ற வேண்டும். கோபம் எனும் அசுர குணத்தைக் கொண்டிருப்பவரின் முகம் செப்பைப் போன்று சிவப்பாகுகிறது. விகாரத்தில் ஈடுபடுபவரின் முகம் அவலட்சணம் ஆகுகிறது. ஸ்ரீகிருஷ்ணரும் அவலட்சணமானவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். விகாரத்தினாலேயே அவர் அழகானவரிலிருந்து அவலட்சணமானவராக மாறினார். குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலின் ஒவ்வொரு விடயத்தைப் பற்றியும் கடைய வேண்டும். இக்கல்வி உங்களைப் பெருமளவு செல்வத்தைப் பெறச் செய்கிறது. இராணி விக்டோறியாவின் ஓர் ஆலோசகர் முன்னர் மிகவும் ஏழையாக இருந்ததால் வீதியிலுள்ள விளக்கின் கீழ் இருந்து கற்பது வழக்கம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வாறாயினும் அக்கல்வி நீங்கள் இரத்தினங்களைப் பெறுமாறு செய்வதில்லை. ஞானத்தைக் கற்பதன் மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். எனவே கல்வியே பயனுள்ளது, பணம் அல்ல. கல்வியே செல்வமாகும். அந்தச் செல்வம் எல்லைக்குட்பட்டது, ஆனால் இந்தச் செல்வமோ எல்லையற்றது. தந்தையே உங்களுக்கு கற்பித்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அங்கு நீங்கள் இருக்கும்போது ஒரு வருமானத்தை ஈட்டுவதற்காக நீங்கள் எதனையும் கற்க மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சியினாலேயே நீங்கள் அங்கு அபரிமிதமான செல்வத்தைப் பெறுவீர்கள். அங்குள்ள உங்கள் செல்வம் அழிவற்றது. தேவர்களிடம் பெருமளவு செல்வம் உள்ளது. இராவண இராச்சியத்தில் அவர்கள் பாவப்பாதையில் வீழ்ந்த போதும் கூட அவர்கள் பெருமளவு செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கட்டிய பல ஆலயங்கள் பின்னர் முஸ்லிம்களினால் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்கள் எவ்வளவோ செல்வந்தர்களாக இருந்தார்கள்! இன்றைய கல்வியின் மூலம் அவர்களைப் போன்று செல்வந்தர்களாக உங்களால் ஆக முடியாது. ஆகவே இக்கல்வியின் மூலம் மனிதர்களால் என்னவாக முடியும் எனப் பாருங்கள். நீங்கள் ஏழைகளிலிருந்து செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். தற்சமயம் பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளதென்று பாருங்கள்! செல்வந்தர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. மக்கள் தங்கள் செல்வத்தையிட்டும் பதவியையிட்டும் அதிகளவு அகங்காரம் உடையவர்களாக இருக்கின்றனர். இங்கே நீங்கள் உங்கள் அகங்காரத்தை முடித்து விடவேண்டும். நாங்கள் ஒவ்வொருவரும் ஆத்மாக்கள், ஓர் ஆத்மாவிடம் பணமோ அல்லது வைரங்களோ அல்லது இரத்தினங்கள் போன்றவை எவையுமே இல்லை. ஓர் ஆத்மாவிடம் எதுவுமே இல்லை. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரத்தையும் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள். ஓர் ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கும் போது அவருடைய செல்வம் போன்றவை அனைத்தும் முடிவடைந்து விடுகிறது. பின்னர் அந்த ஆத்மா புதிதாகக் கல்வி கற்று ஒரு வருமானத்தை ஈட்ட ஆரம்பிக்கும் போதே அவரால் செல்வந்தராக முடியும். அவர் புண்ணியங்களைச் செய்தும் தானங்கள் வழங்கியும் இருந்தால் அவர் ஒரு செல்வந்த வீட்டில் பிறப்பெடுப்பார். கூறப்பட்டுள்ளது: உங்களின் கடந்த காலச் செயலின் பலனை நீங்கள் பெறுகின்றீர்கள். நீங்கள் ஒரு கல்லூரியையோ அல்லது தர்மசாலை போன்றவற்றையோ கட்டி ஞான தானம் செய்திருந்தால் நீங்கள் அதன் பலனைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும் அது தற்காலிகமானது மாத்திரமே. நீங்கள் இங்கு தானதர்மம் கொடுத்து புண்ணியம் செய்கின்றீர்கள். இதனை நீங்கள் சத்தியயுகத்தில் செய்வதில்லை. சத்தியயுகத்தில் நல்ல செயல்கள் மாத்திரமே செய்யப்படுகின்றன. ஏனெனில் அது இந்நேரத்திற்கான ஆஸ்தி ஆகும். அங்கு உங்கள் செயல்கள் எவையும் பாவகரமாக இருப்பதில்லை. ஏனெனில் அங்கு இராவணன் இருப்பதில்லை. நீங்கள் விகாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கும்போதே உங்கள் செயல்கள் விகாரமானவை ஆகுகின்றன. விகாரத்தினாலேயே நீங்கள் பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள். சுவர்க்கத்தில் எவ்விதப் பாவச் செயல்களும் செய்யப்படுவதில்லை. அனைத்தும் உங்கள் செயல்களில் தங்கியுள்ளது. இந்த இராவணனாகிய மாயை உங்களை அசுர குணத்தை வளர்க்குமாறு செய்விக்கின்றாள். பின்னர் தந்தை வந்து உங்களை நற்குணங்கள் அனைத்தினாலும் நிறைந்தவர் ஆக்குகின்றார். பின்னர் இராமரின் குலத்துக்கு உரியவர்களுக்கும் இராவண குலத்துக்கு உரியவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் இடம்பெறுகிறது. நீங்கள் இராமரின் குழந்தைகள். பல நல்ல குழந்தைகள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டார்கள். பாபா பெயர்கள் எதனையும் குறிப்பிடமாட்டார். அவர் இன்னமும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் மிகவும் சீரழிந்தவர்களையும் ஈடேற்ற வேண்டும். தந்தை உலகில் உள்ள அனைவரையும் ஈடேற்ற வேண்டும். இராவண இராச்சியத்திலுள்ள அனைவரும் முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்துள்ளனர். தினமும் தந்தை உங்களையும் பிறரையும் பாதுகாக்கும் வழிகளை உங்களுக்குக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும் இன்னமும் நீங்கள் கீழே வீழ்ந்தால் நீங்கள் அனைவரையும் விட மிகவும் சீரழிந்தவராகி விடுவீர்கள். அப்போது உங்களால் மேலேற முடியாமல் இருக்கிறது. அந்தச் சீரழிந்த நிலை அவர்களைத் தொடர்ந்தும் உள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கும். “உங்கள் இறுதிக் கணங்களில் எதனை நீங்கள் நினைவு செய்கிறீர்களோ.......” எனக் கூறப்படுவதைப் போல அவர்களும் தங்கள் சீரழிந்த நிலையைச் சதா நினைவு செய்வார்கள். ஆதலால் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்களே எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதைச் செவிமடுப்பவர்கள். மிருகங்கள் இதனைப் புரிந்துகொள்ள மாட்டாது. நீங்கள் மாத்திரமே இதனைச் செவிமடுத்து அதைப் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் மனிதர்களே! இலக்ஷமி நாராயணனுக்கும் காதுகள், கண்கள், மூக்கு போன்றன உள்ளன. அவர்களும் மனிதர்களே. எவ்வாறாயினும் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருப்பதால் அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்படி அத்தகைய தேவர்கள் ஆகுகிறார்கள், பின்னர் அவர்கள் எப்படி வீழ்கிறார்கள் என்ற சக்கரத்தை இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். ஞானக்கடலைத் தொடர்ந்தும் கடைபவர்களால் இதனைக் கிரகிக்க முடியும். ஞானக் கடலைக் கடையாதவர்கள் முட்டாள்கள் (புத்தூஸ்) என அழைக்கப்படுகிறார்கள். பிறருக்கு ஞானத்தைக் கொடுப்பவர்கள், ஞானக்கடலைத் தொடர்ந்தும் கடைந்து எந்த தலைப்பில் என்ன விளங்கப்படுத்த வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பார்கள். அவர்கள் இன்று புரிந்துகொள்ளாது விட்டாலும் எதிர்காலத்திலாவது அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை கொண்டிருப்பது என்றால் சேவை செய்வதில் ஆர்வத்தைக் கொண்டிருப்பது என்று அர்த்தமாகும். நீங்கள் களைப்படைந்து விடக்கூடாது. உயர்ந்த நிலையில் இருந்து பின்னர் சீரழிந்த நிலையை அடைந்த ஒருவர் உங்களிடம் வந்தாலும் கூட நீங்கள் பெருமளவு அன்புடன் அவரை அமரச் செய்து வினவுவீர்கள் இல்லையா? அல்லது நீங்கள் அவரைச் சென்று விடுமாறு கூறுவீர்களா? நீங்கள் அவரது நலம் பற்றியும் அவர் இந்தளவு நாட்களும் எங்கிருந்தார் என்றும் அவர் ஏன் வரவில்லை என்றும் அவரிடம் கேட்பீர்கள்தானே? தான் மாயையினால் தோற்கடிக்கப்பட்டதாக அவர் பதிலளிப்பார். இந்த ஞானம் மிகவும் நல்லது என அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இவை அனைத்தையும் அவர்கள் நினைவுசெய்கிறார்கள். பக்தியில் வெற்றி அல்லது தோல்வி என்ற கேள்வியே இல்லை. இந்த ஞானம் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் பிராமணர்கள் ஆகும்வரை உங்களால் தேவர்கள் ஆகமுடியாது. கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள் போன்றவர்கள் மத்தியில் லௌகீகப் பிராமணர்கள் இல்லை. அப்பிராமணர்களின் குழந்தைகளும் பிராமணர்களே. இப்பொழுது நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். அல்பாவை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அல்பாவை நினைவுசெய்வதன் மூலமே நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எவரையாவது சந்திக்கும் பொழுது அவரை அல்லாவாகிய அல்பாவை நினைவு செய்யுமாறு கூற வேண்டும்: அல்பா அதிமேன்மையானவர் எனக் கூறப்படுகின்றார். அவர்கள் அல்பாவை மேலே சுட்டிக் காட்டுகிறார்கள். (சிந்தி மொழி நூலில்) அல்பா என்பது ஒரு நேரான கோடு ஆகும். அல்பா ஒன்று என்றும் கூறப்படுகின்றது (ஏக்- 1). ஒரேயொரு கடவுளே உள்ளார். ஏனைய அனைவரும் அவரது குழந்தைகளே. தந்தை அல்பா என அழைக்கப்படுகின்றார்; அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களைத் தனது குழந்தைகளாகவும் ஆக்குகின்றார். ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! பாபா எங்களுக்கு அதிகளவு சேவை செய்கின்றார்! அவர் எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். எவ்வாறாயினும் அவர் அந்தப் புதிய உலகிற்கு வருவதில்லை. தூய உலகில் எவரும் அவரை அழைப்பதில்லை. தூய்மையற்ற உலகில் இருப்பவர்களே அவரை அழைக்கிறார்கள். அவர் தூய உலகத்துக்கு வந்தால் அவரால் என்ன செய்ய முடியும்? அவர் தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். ஆகவே பழைய உலகைத் தூய உலகமாக மாற்றுவதே அவரது கடமையாகும். தந்தையின் பெயர் சிவன் என்பதுடன் குழந்தைகளாகிய நீங்கள் சாலிகிராம்கள் எனவும் அழைக்கப்படுகின்றீர்கள். அவரும் நீங்களும் வழிபாடு செய்யப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும் அவர்களை வழிபடுபவர்களுக்குத் தாங்கள் யாரை வழிபடுகிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் அந்த வழிபாட்டு முறைகளை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் வைரங்களினாலும் இரத்தினங்களினாலும் ஆன முதற்தரமான மாளிகைகள் போன்றவற்றை இறைவிகளுக்காகக் கட்டி அவர்களை வழிபடுகிறார்கள். அவர்கள் களிமண்ணினால் நீள்கோள வடிவ உருவங்களை வழிபடுவதற்காகச் செய்து பின்னர் அவற்றை உடைத்து விடுகின்றனர். அவற்றை உருவாக்குவதற்கு எம் முயற்சியும் தேவையில்லை. இறைவிகளின் சிலைகளைச் செய்வதற்கே முயற்சி தேவை. ஆனால் அவற்றை வழிபடுவதற்கு முற்றிலும் எம்முயற்சியும் தேவையில்லை. அனைத்தும் இலவசமாகப் பெறப்படுகின்றது. கற்கள் நீரில் ஒன்றுடன் ஒன்று மோதி அழுத்தமாகவும் வட்ட வடிவமாகவும் ஆகுகின்றன. அவை முற்றிலும் முட்டை வடிவமாக ஆகுகின்றன. ஆத்மாக்கள் முட்டை வடிவமானவர்கள் எனவும் அவர்கள் பிரம்ம தத்துவத்தில் வாழ்கின்றார்கள் எனவும் கூறப்படுவதினாலேயே அந்த இடம் பிரம்மாந்தம் (முட்டைவடிவம்) என அழைக்கப்படுகின்றது. நீங்கள் உலகினதும் பிரம்மாந்தத்தினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனவே அனைத்துக்கும் முதலில் நீங்கள் ஒரேயொரு தந்தையைப் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் சிவனை ‘பாபா’ என அழைத்து அவரை நினைவு செய்கின்றார்கள். இரண்டாவதாக பிரம்மாவும் பாபா என்று அழைக்கப்படுகின்றார். அவர் மக்கள் அனைவரினதும் தந்தை (பிரஜாபிதா) என்பதால் அவரே மக்கள் அனைவரதும் தந்தையாவார். அவர் அவர்களுடைய முப்பாட்டனுமாவார். இப்பொழுது இந்த ஞானம் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. பலர் பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களில் எவருமே அவரை மிகச்சரியாக அறிய மாட்டார்கள். பிரம்மா யாருடைய குழந்தை? அவர் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தை என நீங்கள் கூறுவீர்கள். சிவபாபா அவரைத் தத்தெடுத்துள்ளார். எனவே அவர் ஒரு சரீரதாரியாக இருக்க வேண்டும். அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஆவர். பின்னர் ஒரு சரீரத்தைப் பெறும் பொழுது அது பிரஜாபிதா பிரம்மாவினால் தத்தெடுக்கப்படுதல் எனக் கூறப்படுகின்றது. இது வேறு விதமான தத்தெடுத்தல் அல்ல. பரமாத்மாவாகிய பரமதந்தை ஆத்மாக்களாகிய உங்களைத் தத்தெடுத்துள்ளாரா? இல்லை. நீங்களே (சரீரதாரிகள்) தத்தெடுக்கப்படுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மாகுமாரர்களும் பிரம்மாகுமாரிகளும் ஆவீர்கள். சிவபாபா எவரையுமே தத்தெடுப்பதில்லை. ஆத்மாக்கள் அனைவரும் அநாதியானவர்களும் அழிவற்றவர்களும் ஆவார்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சொந்தச் சரீரங்களையும் தாங்கள் நடிக்க வேண்டிய தங்கள் சொந்தப் பாகங்களையும் பெறுகின்றார்கள். இந்தப் பாகம் தொன்றுதொட்ட காலத்தில் இருந்து தொடர்ந்துள்ள, அநாதியான அழிவற்ற பாகம் ஆகும். அதற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ இல்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளான உங்களுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் செல்வத்தையிட்டோ அல்லது பதவியையிட்டோ நீங்கள் கொண்டிருக்கும் அகங்காரத்தை முடித்து விடுங்கள். அழிவற்ற ஞான இரத்தினங்களால் உங்களைச் செழிப்பானவர் ஆக்குங்கள். சேவை செய்வதில் ஒருபோதும் களைப்படைந்து விடாதீர்கள்.

2. சூழலைச் சிறப்பாக வைத்திருப்பதற்கு, உங்கள் உதடுகளிலிருந்து சதா ஞான இரத்தினங்கள் மாத்திரம் வெளிவர அனுமதியுங்கள். எவருக்கும் மனம் புண்படும் எதனையும் கூறாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். முகமலர்ச்சியுடன் இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல சக்திகளாலும் நிரம்பியவராகி சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும் ஒரு விநாடியில் உங்களின் மனதையும் புத்தியையும் ஸ்திரப்படுத்தக்கூடியவர் ஆகுவீர்களாக.

குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் பாப்தாதா சகல சக்திகளையும் உங்களின் ஆஸ்தியாக வழங்கியுள்ளார். நினைவின் சக்தியைக் கொண்டிருப்பதென்றால் உங்களின் மனதையும் புத்தியையும் நீங்கள் விரும்பிய இடத்தில் ஒருமுகப்படுத்தக்கூடியதாக இருத்தல் என்று அர்த்தம். அத்துடன் ஒரு விநாடியில் உங்களின் மனதையும் புத்தியையும் ஸ்திரப்படுத்தக்கூடியதாக இருத்தல் என்று அர்த்தம். சூழ்நிலை குழப்பமானதாக இருக்கக்கூடும். சூழல் தமோகுணியாக இருக்கக்கூடும். மாயை உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்யக்கூடும். ஆனால் அப்படியிருந்தும் நீங்கள் ஒரு விநாடியில் ஸ்திரமடைய வேண்டும். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தி உங்களிடம் இருந்தால் நீங்கள் சகல சக்திகளையும் கொண்டிருப்பவர் எனப்படுவீர்கள்.

சுலோகம்:
உலக நன்மைக்கான பொறுப்புக் கிரீடத்தையும் தூய்மை ஒளிக் கிரீடத்தையும் அணிந்து கொள்பவர்கள் இரட்டைக் கிரீடாதாரிகள் ஆகுவார்கள்.