06.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, திறமையான பூந்தோட்டக்காரர்களாகிய உங்களுக்குப் பழைய உலகின் முட்களைப் புதிய உலகின் மலர்களாக மாற்றும் பணி உள்ளது.
கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்காகவே உருவாக்கும் அதி மேன்மையான பாக்கியம் என்ன?பதில்:
நீங்கள் முட்களிலிருந்து நறுமணம் வீசும் மலர்களாக மாறுகிறீர்கள். இதுவே அதிமேன்மையான பாக்கியம் ஆகும். உங்களுக்குள் ஒரு விகாரம் இருந்தாலும் இன்னமும் நீங்கள் ஒரு முள்ளாகவே இருக்கிறீர்கள். நீங்கள் முழுமையாக முட்களிலிருந்து மலர்களாக மாறும்பொழுது மட்டுமே நீங்கள் சதோபிரதான் தேவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் சூரிய வம்சத்துப் பாக்கியத்தை 21 வம்சங்களுக்கு உருவாக்குவதற்கே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.பாடல்:
என்னுடைய பாக்கியத்தை விழித்தெழச் செய்து நான் வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இப்பாடல் ஒரு பொதுவான பாடல் ஆகும். நீங்கள் பூந்தோட்டக்காரர்களும் தந்தை பூந்தோட்டத்தின் அதிபதியும் ஆவார். இப்பொழுது பூந்தோட்டக்காரர்களாகிய நீங்கள் முட்களை மலர்களாக மாற்ற வேண்டும். இவ்வார்த்தைகள் மிகவும் தெளிவானவை. பக்தர்களாகிய நீங்கள் கடவுளிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பக்தர்கள் ஆவீர்கள். இந்த ஞானத்தைக் கற்பதற்கே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். இந்த இராஜயோகத்தைக் கற்பதால் மட்டுமே உங்களால் புதிய உலகின் அதிபதிகள் ஆக முடியும். பக்தர்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: என்னுடைய பாக்கியத்தை விழித்தெழச் செய்து நான் வந்துள்ளேன். என்னுடைய இதயத்தில் ஒரு புதிய உலகை உருவாக்கிக் கொண்டு நான் வந்துள்ளேன். உங்கள் இனிய வீட்டையும் இனிய இராச்சியத்தையும் நினைவு செய்யுமாறு பாபா உங்களுக்குத் தினமும் கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்களே இதை நினைவு செய்ய வேண்டியவர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு நிலையத்திலும் நீங்கள் அனைவரும் முட்களிலிருந்து மலர்களாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். மலர்களும் வரிசைக்கிரமமானவை ஆகும். சிவனுக்கு மலர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிலர் ஒருவகை மலரையும் சிலர் இன்னுமொரு வகையையும் சிவனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். எருக்கலம் மலருக்கும் ரோஜா மலருக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. இதுவும் ஒரு மலர்த் தோட்டம் ஆகும். சிலர் மல்லிகை மலர்களும் சிலர் சம்பா மலர்களும் (வெண்ணிறமான நறுமணம் கமழும் மலர்) சிலர் ரத்தன்ஜோதி மலர்களும் (மிகவும் நறுமணம் வீசும் மலர்) ஆவார்கள். சிலர் எருக்கலம் பூக்களாகவும் உள்ளார்கள். தற்சமயம் அனைவரும் முட்களாக இருக்கிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இவ்வுலகம் ஒரு முட்காடு. நீங்கள் புதிய உலகமாகிய பூந்தோட்டத்தின் மலர்களாக வேண்டும். இப்பழைய உலகில் முட்கள் மட்டும் உள்ளன. ஆகவே பழைய உலகின் முட்களிலிருந்து புதிய உலகின் மலர்களாக மாறுவதற்கு நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள் என்று நீங்கள் பாடுகிறீர்கள். புதிய உலகை ஸ்தாபிப்பவராகிய தந்தையிடம் நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாற வேண்டும். அது தேவர்களாக மாறுதல் என்று அர்த்தமாகும். பாடலின் அர்த்தம் மிகவும் இலகுவானது! புதிய உலகத்துக்காக எங்கள் பாக்கியத்தை விழித்தெழச் செய்து நாங்கள் வந்துள்ளோம். புதிய உலகமே சத்தியயுகம் ஆகும். சிலருடைய பாக்கியம் சதோபிரதானாகவும் ஏனையோருக்கு இரஜோவாகவும் மற்றையோருக்குத் தமோவாகவும் உள்ளது. சிலர் சூரிய-வம்சத்து அரசர்கள் ஆகுகிறார்கள், ஏனையோர் அவர்களின் பிரஜைகள் ஆகுகிறார்கள். சிலர் பிரஜைகளின் வேலையாட்களாகவும் ஆகுகிறார்கள். இப்பொழுது புதிய உலக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. உங்கள் பாக்கியத்தை எழுப்புவதற்கு நீங்கள் பாடசாலைக்குச் செல்கிறீர்கள். இங்கு அது புதிய உலகத்துக்கான கேள்வி ஆகும். இங்கு இப்பழைய உலகில் நீங்கள் எப் பாக்கியத்தை உருவாக்குவீர்கள்? எந்தத் தேவர்களின் சிலைகளை அனைவரும் வணங்கி வருகிறார்களோ புதிய உலகில் அந்தத் தேவர்களாக ஆகுகின்ற உங்கள் பாக்கியத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள். நீங்கள் பூஜிக்கத்தக்க தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் மறுபிறவி எடுப்பதால் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது 21 பிறவிகளுக்கு நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். மக்கள் 21 வம்சங்கள் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு வம்சம் என்றால் ஓய்வுபெறும் வயதின் பின்னரும் நீடிக்கும் ஒரு வாழ்வு என்று அர்த்தம். தந்தை உங்களுக்கு 21 வம்சங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கிறார். உங்கள் இளமைப் பருவத்தில் குழந்தைப் பருவத்தில் அல்லது உங்கள் வாழ்வின் நடுப்பகுதியில் அகால மரணத்தை அனுபவம் செய்யாததால் அந்த உலகம் அமரத்துவப் பூமி என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலகம் இராவண இராச்சியமான மரண பூமி என்று அழைக்கப்படுகிறது. இங்கே அனைவரிலும் விகாரங்கள் உள்ளன. ஒரு விகாரம் இருந்தால்கூட அவரும் ஒரு முள்ளே ஆவார். எவ்வாறு இராஜரீகமான நறுமணம் கவழும் மலர்களை உருவாக்குவது என்பது பூந்தோட்டக்காரருக்குத் தெரியவில்லை என்பதை அப்பொழுது தந்தை புரிந்துகொள்வார். பூந்தோட்டக்காரர் சிறந்தவராயின் அவர் மிகச்சிறந்த மலர்களைத் தயார்செய்வார். வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்குத் தகுதியான மலர்களே உங்களுக்குத் தேவை. மிகச்சிறந்த மலர்களே தேவர்களின் சிலைகளுக்குச் சமர்ப்பிப்பதற்குப் பறிக்கப்படுகின்றன. இங்கு எலிசபெத் ராணி வருவதாக இருந்தால் நீங்கள் முதற்தர மலர்களாலான ஒரு மாலையைத் தயாரித்து அவருக்கு அதைக் கொடுப்பீர்கள். இங்கு மனிதர்கள் தமோபிரதானாக இருக்கிறார்கள். மக்கள் சிவனைக் கடவுளென நம்பிச் சிவாலயத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரரைத் தேவர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் சிவனைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். அவரே அதிமேன்மையானவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். சிவன் கசப்பான மலர்களை உண்டு, போதையூட்டும் பானத்தைப் பருகினார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அவரை அதிகளவு அவதூறு செய்கிறார்கள். அவர்கள் அவருக்கு எருக்கலம் பூக்களைச் சமர்ப்பிக்கிறார்கள். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு எதைச் சமர்ப்பிக்கிறார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் முதற்தர மலர்களைத் தமோபிரதான் முட்களுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். அவர்கள் சிவாலயத்துக்கு எடுத்துச் செல்வது என்ன என்று பாருங்கள்! அவர்கள் அவருக்கு எவ்வகையான பாலைப் படைக்கிறார்கள் என்று பாருங்கள்! அதில் ஐந்து சதவீதம் பாலும் 95 சதவீதம் நீருமே உள்ளது! நீங்கள் எவ்வகையான பாலைக் கடவுளுக்குப் படைக்க வேண்டும்? அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது நீங்கள் இவை அனைத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் மத்தியில் கூட மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கின்ற சிலர் உள்ளதால் அவர்கள் நிலையங்களின் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இது ஒரே கல்வியாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். எவ்வாறாயினும் ஆசிரியர்களான நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். இக்கல்வியே வெற்றிமாலையில் பிரவேசிப்பதற்கான பிரதானமான அடிப்படை ஆகும். அனைவருக்கும் ஒரே கல்வியே உள்ளது. ஆனால் நீங்கள் வரிசைக்கிரமமாகச் சித்தி அடைகிறீர்கள். நீங்கள் எவ்வளவுக்குக் கற்கிறீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. சிலர் எட்டு மணிகளின் மாலையில் பிரவேசிக்கிறார்கள், சிலர் நூற்றியெட்டு மணிகளின் மாலையில் பிரவேசிக்கிறார்கள், சிலர் பதினாறாயிரத்து நூற்றியெட்டு மணிகளின் மாலையில் பிரவேசிக்கிறார்கள். ஒரு மரத்தின் வெவ்வேறு கிளைகள் இருப்பதைப் போல் மக்கள் தங்கள் வம்சாவழி விருட்சத்தை உருவாக்குகிறார்கள். முதலில் ஓர் இலையும் பின்னர் இரு இலைகளும் உள்ளன. பின்னர் அது தொடர்ந்தும் வளர்கிறது. இதுவும் ஒரு விருட்சமே. கிருபளானி வம்சாவழி விருட்சத்தைப் போன்ற வம்சாவழி விருட்சங்கள் உள்ளன. அந்த வம்சாவழி விருட்சங்கள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. இந்த வம்சாவழி விருட்சம் எல்லையற்றது. இதில் முதலாமவர் யார்? பிரஜாபிதா பிரம்மா ஆவார். அவர் முப்பாட்டனார் என்று அழைக்கப்படுகிறார், ஆனால் இதை எவரும் அறிய மாட்டார்கள். உலகைப் படைப்பவர் யார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவருக்கும் அகலிகை (ஒரு சாபத்தால் கல்லாக மாறிவிட்ட ஒரு பெண்) போன்ற முற்றிலும் கல்லுப்புத்திகளே உள்ளன. அவர்கள் அப்படி ஆகும்பொழுது மட்டுமே தந்தை வருகிறார். அகலிகை போன்ற புத்தியை உடையவர்களில் இருந்து, கல்லுப்புத்தி உடையவர்களில் இருந்து, வைரம் போன்ற புத்தியை உடையவர்களாக மாறுவதற்கே இங்கே நீங்கள் வந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். தந்தையை இனங்கண்டு விட்டதும் உங்கள் கல்வியைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் இன்று வந்து நாளை உங்கள் சரீரத்தை நீங்கினால் உங்களால் என்ன அந்தஸ்தைக் கோர இயலும்? நீங்கள் எந்த ஞானத்தையும் பெற்றிருக்க மாட்டீர்கள். நீங்கள் எதையும் கற்றிருக்க மாட்டீர்கள். ஆகவே நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? நாளுக்கு நாள், இப்பொழுது தங்கள் சரீரத்தை விட்டு நீங்குபவர்களுக்கு நேரம் குறுகி வருகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு புதிய பிறவியை எடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? ஆம், உங்களில் எவராவது உங்கள் சரீரத்தை நீங்கினால் நீங்கள் ஒரு சிறந்த குடும்பத்தில் பிறவி எடுப்பீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடன் சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வதால் நீங்கள் இலகுவில் விழித்தெழச் செய்யப்பட்டு சிவபாபாவை நினைவு செய்ய ஆரம்பிப்பீர்கள். நீங்கள் இந்தச் சம்ஸ்காரங்களைக் கிரகிக்காமல் விட்டால் உங்களால் எதையும் செய்ய இயலாதிருக்கும்; எதுவும் நடைபெற மாட்டாது. இந்த ஞானம் மகத்துவமான சூட்சுமத்தையும் ஆழத்தையும் கொண்டது. அத்துடன் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. பூந்தோட்டக்காரர்களான நீங்கள் மிகச்சிறந்த மலர்களைக் கொண்டு வருவதால் உங்கள் புகழ் பாடப்பட்டுள்ளது. மலர்களை உருவாக்குவது பூந்தோட்டக்காரர்களான உங்கள் பணி ஆகும். எவ்வாறு தந்தையை நினைவுசெய்வது என்பதைக் கூட அறியாத பல குழந்தைகள் உள்ளார்கள். உங்கள் பாக்கியத்திலேயே அனைத்தும் தங்கியுள்ளது. உங்களின் பாக்கியத்தில் இல்லையெனில் நீங்கள் எதையும் புரிந்து கொள்ளப் போவதில்லை. பாக்கியசாலிக் குழந்தைகள் தந்தையை மிகச்சரியாக இனங்கண்டு அவரை மிக நன்றாக நினைவு செய்கிறார்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதுடன் நீங்கள் புதிய உலகையும் நினைவு செய்கிறீர்கள். புதிய உலகத்துக்காக புதிய பாக்கியத்தை உருவாக்குவதற்கு நீங்கள் வந்துள்ளீர்கள் என்று நீங்கள் பாடலிலும் பாடுகிறீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்காக உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோர வேண்டும். இப்போதையில் நிலைத்திருப்பதால் இச்சந்தோஷத்தைப் பேணுவதால் ஒரு சமிக்ஞை மூலம் இப்பாடல்களின் அர்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பாடசாலையிலும் ஒருவருடைய பாக்கியத்தில் இல்லாவிட்டால் அவர் சித்தி அடைவதில்லை. இப்பரீட்சை மிகவும் மகத்துவமானது. கடவுளே இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இந்த ஞானம் அனைத்துச் சமயத்தவர்களுக்கும் உரியதாகும். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி உங்களின் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். எந்தச் சரீரதாரியும் கடவுளாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். பிரம்மா, விஷ்ணு அல்லது சங்கரர் கூட கடவுளாக இருக்க முடியாது. அவர்களே சூட்சும உலகில் வசிக்கும் தேவர்கள் ஆவர். இங்கு மனிதர்கள் மட்டுமே உள்ளார்கள்; இங்கு தேவர்கள் இல்லை. இது மனித உலகமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் தெய்வீகக் குணங்களைக் கொண்ட மனிதர்கள். அவர்களுடைய தர்மம் தேவதர்மம் என்று அழைக்கப்படுகிறது. சத்தியயுகத்தில் தேவர்களும் சூட்சும உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் உள்ளார்கள். மக்கள் பாடுகிறார்கள்: விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள், பிரம்ம தேவருக்கு வந்தனங்கள். பின்னர் அவர்கள் கூறுகிறார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். அவர்கள் சிவனை ஒரு தேவர் என்று அழைப்பதில்லை. மனிதர்கள் கடவுளாக இருக்க முடியாது. மூன்று மாடிகள் உள்ளன. நாங்கள் மூன்றாம் மாடியில் இருக்கிறோம். சத்தியயுகத்தில் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்த அம்மனிதர்கள் பின்னர் அசுரக் குணங்களை உடையவர்கள் ஆகுகிறார்கள். சந்திரனுக்குக் கிரகணம் பீடிப்பதைப் போல் அவர்கள் மாயையின் கிரகணத்தால் பீடிக்கப்பட்டு அவலட்சணம் ஆகுகிறார்கள். அவ்விடயம் எல்லைக்குட்பட்டது. இவ்விடயம் எல்லையற்றது. இதுவே எல்லையற்ற பகலும் இரவும் ஆகும். பிரம்மாவின் பகலையும் பிரம்மாவின் இரவையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் மட்டும் கற்று ஏனைய அனைவரையும் மறக்க வேண்டும். தந்தையுடன் கற்பதால் நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். இதுவே உண்மையான கீதை பாடசாலை. நீங்கள் சதா காலமும் கீதா பாடசாலையில் தங்குவதில்லை. பக்திமார்க்கமே கடவுளை அடைவதற்கான பாதை எனவும் தாங்கள் எவ்வளவுக்கு அதிகம் பக்தி செய்கின்றோமோ அவ்வளவுக்கு அதிகமாகக் கடவுள் தங்களுடன் மகிழ்ந்து அவரே வந்து தங்களின் பக்தியின் பலனைத் தங்களுக்குக் கொடுப்பார் எனவும் மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் மட்டுமே இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். ஒரேயொரு கடவுள் மட்டும் இருக்கிறார். அவர் இப்பொழுது உங்களுக்குப் பலனைக் கொடுக்கிறார். பூஜிக்கத் தக்கவர்களான சூரியவம்சத்து ஆத்மாக்களே மகத்தான அளவு பக்தி செய்துள்ளார்கள்; அவர்கள் இங்கு வருவார்கள். நீங்களே முதலில் சிவபாபாவைக் கலப்படமற்ற முறையில் பக்தி செய்தவர்கள். ஆகவே நீங்களே முதலாவது பக்தர்களாக இருந்தீர்கள். பின்னர் கீழிறங்கி வருகையில் தமோபிரதான் ஆகினீர்கள். அரைக் கல்பமாக நீங்கள் பக்தி செய்தீர்கள். அதனாலேயே முதன்முதலில் உங்களுக்கே இந்த ஞானம் கொடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும் நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். நீங்கள் தொலைவில் வசிப்பதாகவும் தினமும் கற்க முடியாதிருப்பதாகவும் இக்கல்வியில் சாக்குப்போக்கு கூற முடியாது. நீங்கள் பத்து மைல்களுக்கு அப்பால் வசிப்பதாக உங்களிற் சிலர் கூறுகிறீர்கள். ஆனால் பாபாவின் நினைவில் நிலையத்துக்கு நீங்கள் பத்து மைல்கள் நடந்திருந்தாலும் நீங்கள் களைப்பை உணர மாட்டீர்கள். பெரும் பொக்கிஷங்களைப் பெறுவதற்கே நீங்கள் அங்கு செல்கிறீர்கள். ஒரு காட்சியைப் பெறுவதற்காக மக்கள் கால்நடையாக யாத்திரைகள் செல்கிறார்கள். அவர்கள் அதிகளவு தடுமாறுகிறார்கள். இது ஒரு நகரம் பற்றிய கேள்வி ஆகும். தந்தை கூறுகிறார்: நான் மிகத் தொலைவில் இருந்து இங்கு வந்துள்ளேன், உங்கள் வீடு ஐந்து மைல்களுக்கு அப்பால் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்! அற்புதம்! உங்கள் பொக்கிஷங்களைக் கோருவதற்கு நீங்கள் இங்கு ஓடோடி வர வேண்டும். ஒரு காட்சியைப் பெறுவதற்கு மக்கள் மிகத் தொலைவுக்கு அமர்நாத்துக்குச் செல்கிறார்கள். ஆனால் அமரத்துவப் பிரபுவான அமர்நாத் பாபாவே உங்களுக்குக் கற்பிப்பதற்கு இங்கே வந்துள்ளார். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார். இருந்தும் நீங்கள் தொடர்ந்தும் சாக்குப்போக்குகளை சொல்கிறீர்கள்! எவராலும் அமிர்தவேளையில் வர முடியும். அந்த நேரத்தில் பயம் கிடையாது. எவரும் உங்களிடம் திருட மாட்டார்கள். நீங்கள் நகை போன்றவற்றை அணிந்திருந்தால் அவர்கள் அதை உங்களிடமிருந்து அபகரிப்பார்கள். திருடர்கள் பௌதீகச் செல்வத்தை மட்டுமே விரும்புகிறார்கள். எவ்வாறாயினும் உங்கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால் நீங்கள் அதிகளவு சாக்குப் போக்குகளை சொல்கிறீர்கள். நீங்கள் கற்காது விட்டால் உங்கள் சொந்த அந்தஸ்தையே இழக்கிறீர்கள். பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குத் தந்தை பாரதத்தில் பிரவேசிக்கிறார். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடையும் பாதையை அவர் உங்களுக்குக் காட்டுகிறார். இருப்பினும் நீங்களும் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும்! நீங்கள் ஓர் அடியைக் கூட எடுத்து வைக்காவிட்டால் எப்படி அங்கே சென்று சேரப் போகிறீர்கள்? இதுவே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருவதற்கே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். அந்தப் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. அந்த ஸ்தாபனை பூர்த்தி ஆகியதும் விநாசம் ஆரம்பமாகும். அதே மகாபாரத யுத்தமாகவே இருக்கும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளான உங்களுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஞானப் பொக்கிஷங்களைப் பெறுவதற்கு நீங்கள் இங்கே ஓடோடி வரவேண்டும். இதில் எவ்விதச் சாக்குப் போக்குகளையும் கூறாதீர்கள். நீங்கள் தந்தையின் நினைவில் பத்து மைல்கள் நடந்திருந்தாலும் களைப்படைய மாட்டீர்கள்.2. இக்கல்வியே வெற்றிமாலையில் பிரவேசிப்பதற்கு அடிப்படை ஆகும். இக்கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள். முட்களை மலர்களாக மாற்றும் சேவையைச் செய்யுங்கள். உங்கள் இனிய வீட்டையும் உங்கள் இனிய இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கமயுகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து ஒரு மடங்கிற்கு எண்ணற்ற பலனைப் பெற்று சகல பேறுகளாலும் நிரம்பியவர் ஆகுவீர்களாக.சங்கமயுகத்தில் பாப்தாதா உங்களுக்குச் சத்தியம் செய்துள்ளார்: ஒரு மடங்கைக் கொடுங்கள், நீங்கள் நூறாயிரம் மடங்கைப் பெறுவீர்கள். இந்த நேரம் அதிமேன்மையான நேரமாகவும் இது அதிமேன்மையான பிறப்பாகவும் அதிமேன்மையான பட்டத்தையும் கொண்டிருப்பதைப் போல் இந்த வேளையில் மட்டுமே உங்களால் சகல பேறுகளையும் அனுபவம் செய்ய முடியும். இந்த வேளையில் ஒன்றுக்கு நூறாயிரம் மடங்கு பலன் மட்டுமல்ல, ஆனால் எப்போது உங்களுக்கு வேண்டுமோ எப்படி வேண்டுமோ என்ன வேண்டுமோ அதைக் கொடுப்பதற்குத் தந்தை உங்களின் சேவகனின் ரூபத்தில் கட்டுப்பட்டிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்காக எண்ணற்ற மடங்கு பலனைப் பெறுகிறீர்கள். ஏனென்றால் தற்சமயம், ஆசீர்வாதங்களை அருள்பவர் உங்களுக்குச் சொந்தமானவர். நீங்கள் உங்களின் கைகளில் விதையானவரைப் பிடித்தவண்ணம் நீங்கள் விரும்பியதை விதையானவரிடம் இருந்து ஒரு விநாடியில் உங்களால் எடுத்துக் கொள்ள முடியும். அத்துடன் சகல பேறுகளாலும் நிரம்ப முடியும்.
சுலோகம்:
சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவற்றைக் கைவிடுங்கள். ஆனால் உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள்.ஏகாந்தத்தில் அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
ஒவ்வொரு பணியிலும் வெற்றியைப் பெறுவதற்கு ஒற்றுமையும் ஒருமுகப்படுத்தலும் இரண்டு அதிமேன்மையான கரங்கள் ஆகும். ஒருமுகப்படுத்தல் என்றால் வீணான மற்றும் பாவ எண்ணங்களில் இருந்து விடுபட்டிருத்தல். எங்கு ஒற்றுமையும் ஒருமுகப்படுதலும் இருக்கிறதோ அங்கே வெற்றி உங்களின் கழுத்து மாலை ஆகிவிடும். ஆசீர்வாதங்களை அருள்பவர் ஒன்று (ஏக்) என்ற வார்த்தையை விரும்புகிறார். ஒரேயொருவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருங்கள் (ஏக்விரதா). ஒரே பலத்தையும் ஒரேயொருவர் மீது நம்பிக்கையும் கொண்டிருங்கள் (ஏக் பல், ஏக் பரோசா). இத்துடன் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள் (ஏக்மத்). உங்களின் அல்லது மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள். ஆனால் ஸ்திரமாகவும் நிலையாகவும் ஆகுங்கள் (ஏக்ரஸ்). ஏனைய மனிதர்களில் அல்லது உடமைகளில் ஆர்வம் காட்டாதீர்கள். இதுவே ஒற்றுமைக்கும் (ஏக்தா) ஏகாந்தத்தின் மீது விருப்பம் கொண்டிருப்பதற்கும் (ஏகாந் பிரியா) பொருந்தும்.