06.04.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2004     Om Shanti     Madhuban


குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வாதங்களை வழங்கி, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பாப்தாதாவின் விசேடமான நம்பிக்கை ஆகும்.


இன்று, பாப்தாதா சகல திசைகளிலும் உள்ள தனது கவலையற்ற சக்கரவர்த்திகளின் ஒன்றுகூடலைப் பார்த்தார். இந்த இராஜ ஒன்றுகூடல் கல்பம் முழுவதிலும் இந்த வேளையில் மட்டுமே நடக்கும். நீங்கள் ஆன்மீக போதையில் இருப்பதால், நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவீர்கள். நீங்கள் காலையில் விழித்தெழும்போது கவலை அற்றவர்களாக இருக்கிறீர்கள். நடக்கும்போதும் அசையும்போதும் செயல்களைச் செய்யும்போதும் நீங்கள் கவலை அற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தூங்கும்போதும் கவலையற்ற நிலையிலேயே தூங்குகிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள்தானே? நீங்கள் கவலையற்றவர்களா? நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களா அல்லது இப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்கள்தானே? நீங்கள் கவலையற்றவர்கள் அத்துடன் சக்கரவர்த்திகள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள், உங்களின் பௌதீக அங்கங்களை ஆட்சி செய்யும் சுய அதிபதிகள், அதாவது, உங்களிடம் சுய இராச்சிய அதிகாரம் உள்ளது. எனவே, இத்தகைய ஒன்றுகூடல், குழந்தைகளான உங்களுடையது மட்டுமே. உங்களுக்குள் ஏதாவது கவலைகள் உள்ளனவா? ஏதாவது கவலைகள் இருக்கின்றனவா? இது ஏனென்றால், நீங்கள் உங்களின் கவலைகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள். எனவே, உங்களின் சுமைகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டனதானே? கவலைகள் முடிந்துவிட்டன. நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகிவிட்டீர்கள். அத்துடன் நீங்கள் இந்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை அனுபவம் செய்கிறீர்கள். தூய்மையின் ஒளி இயல்பாகவே ஒவ்வொருவரின் தலையிலும் பிரகாசிக்கிறது. கவலை அற்றவர்களில் ஒளிக்கிரீடம் உள்ளது. நீங்கள் எதைப் பற்றியாவது கவலைப்பட்டால், உங்களுடன் ஏதாவது சுமையை நீங்கள் சுமந்து கொண்டிருந்தால், உங்களின் தலைமீது என்ன தோன்றும் என உங்களுக்குத் தெரியுமா? உங்களின் தலைமீது சுமைக்கூடை (சுமை தூக்கியின் கூடை) வந்துவிடும். ஆகவே, சிந்தித்துப் பாருங்கள்: கிரீடம் மற்றும் கூடை இரண்டையும் உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். எதை நீங்கள் விரும்புவீர்கள்? நீங்கள் கூடையை விரும்புவீர்களா அல்லது ஒளிக்கிரீடத்தை விரும்புவீர்களா? ஆசிரியர்களே கூறுங்கள், நீங்கள் எதை விரும்புவீர்கள்? நீங்கள் கிரீடத்தையே விரும்புவீர்கள், அப்படித்தானே? நீங்கள் உங்களின் பௌதீக அங்கங்களை ஆட்சி செய்யும் சக்கரவர்த்திகள். தூய்மையே நீங்கள் ஒளிக்கிரீடத்தை அணியச் செய்கிறது. இதனாலேயே, உங்களின் ஞாபகார்த்தமான உயிரற்ற விக்கிரகங்களில் இரட்டைக் கிரீடம் காட்டப்படுகிறது. துவாபர யுகத்தில் இருந்து, பலர் சக்கரவர்த்திகள் ஆகியுள்ளார்கள். பலர் அரசர்கள் ஆகியுள்ளார்கள். ஆனால் எவரும் இரட்டைக் கிரீடாதாரிகள் ஆகவில்லை. எவரும் கவலையற்ற சக்கரவர்த்தியாக, சுயத்தின் அதிபதியாக ஆகவில்லை. ஏனென்றால், தூய்மை சக்தியே உங்களை மாயையை வென்றவராகவும் உங்களின் பௌதீக அங்கங்களை வென்றவராகவும் ஆக்குகிறது. அது உங்களை வெற்றி பெறச் செய்கிறது. கவலையற்ற சக்கரவர்த்தியின் அடையாளம், அவர் சதா தன்னுடன் திருப்தியாக இருப்பார், அத்துடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவார். அவரை அதிருப்திப்படுத்த எந்தவொரு பேறும் ஒருபோதும் குறைவாக இருக்காது. எங்கே பேறுகள் இல்லாமல் போகிறதோ, அங்கே அதிருப்தி ஏற்படும். எங்கே பேறுகள் இருக்கின்றனவோ, அங்கே திருப்தி இருக்கும். நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களா? உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் சதா சகல பேறுகளின் சொரூபமாகவும் சதா திருப்தியாகவும் இருக்கிறேனா? இப்படி ஒரு புகழ் உள்ளது: தேவர்கள் அன்றி, பிராமணர்களின் பொக்கிஷக் களஞ்சியத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. திருப்தியே வாழ்க்கையின் மேன்மையான அலங்காரம் ஆகும். அதற்குப் பெரும் மதிப்பு உள்ளது. எனவே, நீங்கள் திருப்தியான ஆத்மாக்கள்தானே?

இத்தகைய கவலையற்ற சக்கரவர்த்திக் குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆஹா, எனது கவலையற்ற சக்கரவர்த்திகளே, ஆஹா! நீங்கள் அற்புதமானவர்கள்தானே? கவலை அற்றிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் கவலை அற்றவர்களா? நீங்கள் எதையிட்டும் கவலைப்படுவது இல்லையே? சிலவேளைகளில் சிறிது கவலை ஏற்படுகிறதா? இல்லையா? அது நல்லது. கவலையற்றவர் ஆகுவதற்கான வழிமுறை மிகவும் இலகுவானது. அது சிரமமே இல்லை. ஒரு வார்த்தையின் வேறுபாடே உள்ளது. இது மிகவும் இலகுவானது. அந்த வார்த்தையானது: ‘எனது’ (மேரா) என்பதை ‘உங்களுடையது’ (தேரா) என மாற்றுங்கள். அது என்னுடையது அல்ல, ஆனால் உங்களுடையது. எனவே, நீங்கள் இந்தி மொழியில் ‘மேரா’ மற்றும் ‘தேரா’ என்பதை எழுதும்போது, ‘ம’ மற்றும் ‘த’ என்ற வேறுபாடு மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் அது இத்தகைய வேறுபாட்டை உருவாக்குகிறது. எனவே, நீங்கள் எல்லோரும் ‘எனது’ என்று சொல்பவர்களா அல்லது ‘உங்களுடையது’ எனச் சொல்பவர்களா? ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என நீங்கள் மாற்றிவிட்டீர்களா? நீங்கள் இதைச் செய்யாவிட்டால், இப்போது அதைச் செய்யுங்கள். ‘எனது, எனது’ எனச் சொல்வது என்றால் ஒரு வேலையாளாக இருப்பது, சந்தோஷம் இல்லாமல் இருப்பது என்றே அர்த்தம். நீங்கள் மாயையின் வேலைக்காரர்கள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக சந்தோஷம் அற்றவர்களாகவே ஆகுவீர்கள். சந்தோஷம் அற்றிருத்தல் என்றால் மாயையின் வேலைக்காரர்கள் என்று அர்த்தம். எனவே, நீங்கள் மாயையை வென்றவர்கள், மாயையின் வேலைக்காரர்கள் அல்ல. சந்தோஷம் இன்மை என்பது வரும்போது - அது வரும், ஏனென்றால் நீங்கள் 63 பிறவிகளாக சந்தோஷம் இல்லாமல் இருப்பதைப் பயிற்சி செய்துள்ளீர்கள். நீங்கள் அதை ருசித்திருக்கிறீர்கள். எனவே, அது சிலவேளைகளில் வெளிப்படுகிறது. அதனால் பாப்தாதா என்ன கூறினார்? குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்கள். இப்போதும், நீங்கள் ஏதாவது கவலையை எங்கேயாவது ஒரு மூலையில் வைத்திருந்தால், அதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் ஏன் உங்களின் மீது ஒரு சுமையை வைத்திருக்கிறீர்கள்? ஒரு சுமையை வைத்திருக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துள்ளீர்களா? தந்தை உங்களுக்கு இதைச் சொல்வதால், அவருக்கு அந்தச் சுமையைக் கொடுத்து, உங்களை இலேசாக்கிக் கொள்ளுங்கள். இலேசாகவும் ஒளியாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். டபிள் லைற்றாக இருப்பது சிறந்ததா அல்லது ஒரு சுமையைச் சுமப்பது சிறந்ததா? எனவே, உங்களை மிகக்கவனமாகச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் அமிர்தவேளையில் விழித்தெழும்போது, குறிப்பாக உங்களின் உள்ளுணர்வை, தற்சமயம் உங்களுக்குள் எந்தவிதச் சுமைகளும் இல்லையே எனச் சோதித்துப் பாருங்கள். உள்ளுணர்வு மட்டுமன்றி, உங்களின் கனவுகளிலேனும் சுமையின் எந்தவிதமான அனுபவமும் இருக்கக்கூடாது. நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருக்க விரும்புகிறீர்கள்தானே? எனவே, பாபா குறிப்பாக உங்களுக்கு அமிர்தவேளையில் உங்களைச் சோதிப்பதற்கான இந்த வீட்டுவேலையை வழங்குகிறார். எப்படிச் சோதிப்பது என உங்களுக்குத் தெரியும்தானே? எவ்வாறாயினும், சோதிப்பதுடன்கூடவே, வெறுமனே சோதிக்காதீர்கள், ஆனால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என மாற்றிக் கொள்ளுங்கள். எனது, உங்களுடையது. எனவே, சோதித்து மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால், பாப்தாதா உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்வதைப் போல், காலத்தையும் (சமய்) உங்களையும் (சுயம்) இரண்டையும் பாருங்கள். காலத்தின் வேகத்தையும் உங்களின் வேகத்தையும் பாருங்கள். அதன்பின்னர், நீங்கள் காலத்தை உணரவில்லை என்றும் அது மிக வேகமாகக் கடந்து சென்றுவிட்டது என்றும் கூறாதீர்கள். சில குழந்தைகள், இப்போது தமது முயற்சிகள் சிறிது குறைவாக இருந்தாலும் இறுதியில் தாம் அவற்றை வேகமாக்கி விடுவோம் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், நீண்ட காலப்பகுதிக்கான பயிற்சியே இறுதியில் உதவி செய்யும். சக்கரவர்த்திகள் ஆகி இதைப் பாருங்கள். உங்களில் சிலர் இப்படி ஆகியுள்ளீர்கள். ஏனையோர் அவ்வாறு ஆகவில்லை. ‘நாங்கள் நடக்கிறோம், நாங்கள் இதைச் செய்கிறோம், நாங்கள் சம்பூரணம் ஆகுவோம்...’ நீங்கள் இப்போது நடக்கவோ அல்லது செய்யவோ கூடாது. ஆனால் பறக்க வேண்டும். இப்போது உங்களுக்கு பறக்கும் வேகம் தேவையாக உள்ளது. நீங்கள் இறக்கைகளைப் பெற்று விட்டீர்கள்தானே? நீங்கள் எல்லோரும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் இறக்கைகளையும் தைரியத்தையும் பெற்றுள்ளீர்கள். அத்துடன் உங்களுக்குத் தந்தையின் ஆசீர்வாதமும் உள்ளது. உங்களுக்கு அந்த ஆசீர்வாதம் நினைவு இருக்கிறதா? நீங்கள் தைரியமாக ஓரடி எடுத்து வைக்கிறீர்கள். தந்தையிடம் இருந்து ஆயிரம் அடிகள் உதவியைப் பெறுகிறீர்கள். ஏனென்றால் தந்தைக்குக் குழந்தைகளான உங்களின் மீது தனது இதயத்தில் அன்பு உள்ளது. எனவே, தான் நேசிக்கும் குழந்தைகள் சிரமப்படுவதைக் காணத் தந்தையால் பொறுத்துக் கொள்ள முடியாது. அன்பிலே உங்களை மறந்திருங்கள். நீங்கள் சிரமப்படுவது முடிவிற்கு வந்துவிடும். நீங்கள் முயற்சி செய்வதை விரும்புகிறீர்களா? நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். நீங்கள் 63 பிறவிகளாக அலைந்து கொண்டிருந்தீர்கள். அலைந்து திரிவதுடன் சிரமப்படுவதனால் நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். பின்னர் அன்பினால், நீங்கள் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காகத் தந்தை உங்களை மூன்று சிம்மாசனங்களுக்கு அதிபதிகள் ஆக்கியுள்ளார். உங்களுக்கு மூன்று சிம்மாசனங்களையும் தெரியும். உங்களுக்கு அவற்றைத் தெரிவது மட்டுமன்றி, நீங்கள் அவற்றின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களின் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் எதிர்கால அரச சிம்மாசனத்திலும் அமர்வீர்கள். எனவே, பாப்தாதா தனது குழந்தைகள் எல்லோரும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். உங்களால் கல்பம் முழுவதிலும் இத்தகைய இதய சிம்மாசனத்தை அனுபவம் செய்ய முடியாது. பாண்டவர்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் சக்கரவர்த்திகளா? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். உங்களின் சிம்மாசனத்தைக் கைவிடாதீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும்போது, சேற்றில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம். அந்தச் சரீரங்களும் சேறுதான். ஆனால் நீங்கள் உங்களின் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள்.

பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய முயற்சியின் அட்டவணையிலும் நீங்கள் ஒவ்வொருவரும் நான்கு பாடங்களிலும் எவ்வளவற்றை அடைந்துள்ளீர்கள் எனச் சோதிக்கிறார். எனவே, எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் பாப்தாதா உங்களுக்குக் கொடுத்த பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் எந்தளவிற்குச் சேமித்துள்ளீர்கள் என பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் அட்டவணையிலும் பார்த்தார். எனவே, உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதித்தார். தந்தை உங்கள் எல்லோருக்கும் சமமான பொக்கிஷங்களையே கொடுத்துள்ளார். அவர் எல்லோருக்கும் அதேயளவையே கொடுத்துள்ளார். அவர் சிலருக்குச் சிறிதளவையும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுக்கவில்லை. இந்தப் பொக்கிஷங்களை நீங்கள் சேகரிப்பதன் அடையாளம் என்ன? உங்களுக்குப் பொக்கிஷங்களைப் பற்றித் தெரியும்தானே? மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷமே, மகத்தான பொக்கிஷம் ஆகும். எண்ணங்களும் ஒரு பொக்கிஷமே. எனவே, இது தற்சமயம் மகத்தான பொக்கிஷம் ஆகும். ஏனென்றால், நீங்கள் எதை அடைய வேண்டுமோ, நீங்கள் என்ன ஆசீர்வாதங்களை அடைய விரும்புகிறீர்களோ, எந்தளவிற்கு நீங்கள் உங்களை மேன்மையானவர்கள் ஆக்க விரும்புகிறீர்களோ, இந்த வேளையில் உங்களால் அதைச் செய்ய முடியும். இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை. உங்களின் எண்ணங்கள் என்ற பொக்கிஷத்தை வீணாக்குதல் என்றால் உங்களின் பேறுகளை வீணாக்குதல் என்று அர்த்தம். அதேபோன்று, உங்களின் நேரத்தில் ஒரு விநாடியை வீணாக்குதல் என்றால், அது தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்படா விட்டால், நீங்கள் அதிகளவை இழந்து விடுகிறீர்கள். அத்துடன்கூடவே, இந்த ஞானம், நற்குணங்கள், சக்திகள் என்ற பொக்கிஷங்களும் உள்ளன. அத்துடன் ஒவ்வோர் ஆத்மாவிடம் இருந்தும் கடவுளிடம் இருந்தும் ஆசீர்வாதங்களின் பொக்கிஷங்கள் உள்ளன. உங்களின் முயற்சிகளில் மிகவும் இலகுவான விடயம், ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுவதாகும். சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெறுங்கள். துன்பத்தைக் கொடுக்காதீர்கள், துன்பத்தை எடுக்காதீர்கள். நீங்கள் துன்பத்தைக் கொடுக்கவில்லைத்தானே என நினைக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் துன்பத்தை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சந்தோஷம் இல்லாமலே இருப்பீர்கள், அப்படித்தானே? எனவே, நல்லாசிகளைக் கொடுங்கள். சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெறுங்கள். எப்படி நல்லாசிகள் கொடுப்பது என உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? அவற்றை எப்படிப் பெறுவது என்றும் உங்களுக்குத் தெரியுமா? எப்படி நல்லாசிகளைப் பெறுவது என்றும் கொடுப்பது என்றும் அறிந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? உங்கள் எல்லோருக்கும் தெரியும். அச்சா. இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்குத் தெரியுமா? பாராட்டுக்கள். எப்படி நல்லாசிகளைக் கொடுப்பது என்றும் பெறுவது என்றும் அறிந்திருப்பதற்குப் பாராட்டுக்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள். எப்படிப் பெறுவது என்பதையும் எப்படிக் கொடுப்பது என்பதையும் நீங்கள் அறிந்திருந்தால் இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? தொடர்ந்து நல்லாசிகளை வழங்குங்கள். தொடர்ந்து அவற்றைப் பெறுங்கள். நீங்கள் சம்பூரணம் ஆகிவிடுவீர்கள். யாராவது உங்களுக்கு தீய ஆசிகளை வழங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வீர்களா? யாராவது உங்களுக்கு தீய ஆசிகளை வழங்கினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவற்றைப் பெற்றுக் கொள்வீர்களா? இதை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் அந்த தீய ஆசிகளைப் பெற்றுக் கொண்டால், உங்களுக்குள் சுத்தம் இருக்குமா? தீய ஆசிகள் என்பது தீயதுதானே? நீங்கள் அவற்றை உங்களுக்குள் எடுத்துக் கொண்டால், அதன் பின்னர் உங்களுக்குள் சுத்தம் இருக்காதல்லவா? சிறிதளவு குறைபாடு எஞ்சியிருந்தாலும் உங்களால் முழுமை அடைய முடியாது. யாராவது பழுதடைந்த எதையாவது உங்களுக்குக் கொடுத்தால், நீங்கள் அதை எடுப்பீர்களா? யாராவது உங்களுக்கு மிகவும் அழகான, ஆனால் அழுகிய பழத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் அதைப் பெறுவீர்களா அல்லது இல்லையா? அல்லது, அது நல்லது, நீங்கள் அதைக் கொடுத்திருக்கிறீர்கள்... எனச் சொல்வீர்களா? யாராவது தீய ஆசிகளைக் கொடுக்கும்போது, உங்களின் மனதில் அவற்றை உள்ளெடுக்க அனுமதிக்காதீர்கள். அவை தீய எண்ணங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதனால் அந்தத் தீய ஆசிகளை உள்வாங்காதீர்கள். இல்லாவிட்டால், அவை ஒரு குறைபாடு ஆகிவிடும். அதனால் இந்த வருடம், இந்தப் பழைய வருடத்தில் இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன, உங்களின் இதயத்தில் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். இப்போதும் உங்களின் மனதில் எவருக்காவது தீய எண்ணங்கள் இருக்குமாயின் அவற்றை நீக்கிவிடுங்கள். பின்னர், நாளையில் இருந்து, ஆசீர்வாதங்களை மட்டும் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறது என்பது மட்டும்தானா அல்லது நீங்கள் அதைச் செய்யவும் போகிறீர்களா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறது. ஆனால், இதைச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், என்னதான் நடந்தாலும் நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைச் செய்யவே வேண்டும்.

இன்று வந்துள்ள அன்பான மற்றும் ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! முதல் தடவை வந்திருப்பவர்கள். அச்சா, நீங்கள் எல்லோரும் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறீர்கள். வந்துள்ள அன்பான, ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் எல்லோரையும் பாப்தாதா பாராட்டுக்கிறார். நீங்கள் ஒத்துழைப்பதனால் அன்பாகவும் இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், இன்று, நீங்கள் மேலும் ஓரடி எடுத்து வைத்து தந்தையின் வீட்டுக்கு, அதாவது, உங்களின் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். எனவே, வீட்டுக்கு வந்ததற்குப் பாராட்டுக்கள். அச்சா, வந்திருக்கும் அன்பான, ஒத்துழைக்கும் ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள் என நினைக்கிறீர்களா? நீங்கள் இதைக் கருத்தில் கொள்கிறீர்களா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? அன்பான, ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் எல்லோரும் தைரியத்தைப் பேணி உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள் என நினைப்பவர்கள் உங்களின் கைகளை உயரே தூக்குங்கள்! அச்சா. அப்படியென்றால் நீங்கள் சம்பூரணமாகவும் ஆகுவீர்கள். பாராட்டுக்கள். நீங்கள் ஒழுங்கான ஒரு இறை மாணவராக இருந்தால், இந்த பிராமண வாழ்க்கையில் நீங்கள் முதல் தடவையாக பாப்தாதாவைச் சந்திக்க வந்திருந்தாலும் நீங்கள் உங்களை ஒரு பிராமணராக, ஒரு ஒழுங்கான மாணவராகக் கருதினால், நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்களா? நீங்கள் இதைச் செய்வீர்களா? ஆசிரியர்களான நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்களா? கபினில் அமர்ந்திருப்பவர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள் இல்லை. தாம் சதா நல்லாசிகளைக் கொடுக்கிறோம் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இப்போது இதைச் செய்ய வேண்டும். என்னதான் நடந்தாலும் தைரியத்தைப் பேணுங்கள். இந்தத் திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள். தீய எண்ணங்களின் ஆதிக்கம் இருந்தாலும் பத்து மடங்கு அதிகமாக ஆசீர்வாதங்களைக் கொடுத்து, அந்த ஆதிக்கத்தை முடித்துவிடுங்கள். ஒரு தீய எண்ணத்தின் ஆதிக்கத்தை, பத்து மடங்கு நல்லாசிகளால் குறைத்து விடுங்கள். அப்போது உங்களுக்குத் தைரியம் ஏற்படும். உண்மையில் உங்களுக்கே இழப்பு ஏற்படுகிறது. மற்ற நபர் தீய ஆசிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் அந்தத் தீய எண்ணங்களை ஒருவர் உள்ளெடுத்தால், யார் துன்பத்தை அனுபவிப்பார்? அதை எடுப்பவரா அல்லது கொடுப்பவரா? அதைக் கொடுப்பவரும் துன்பத்தை அனுபவிப்பார். ஆனால் அதைப் பெற்றுக் கொள்பவர் அதிகமான துன்பத்தை அனுபவிப்பார். அதைக் கொடுப்பவர் கவனயீனமாக இருக்கிறார்.

இன்று, பாப்தாதா குறிப்பாக உங்களுக்குத் தனது இதயத்தின் ஆசையைப் பற்றிக் கூறுகிறார். நீங்கள் இந்தத் தேசத்தையோ அல்லது வெளிநாடுகளையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது ஒத்துழைக்கும் ஆத்மாவாக இருந்தாலும் பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்காவும் ஓர் ஆசையைக் கொண்டிருக்கிறார். ஒத்துழைக்கும் ஆத்மாக்களும் அறிமுகத்தைப் பெற்றுள்ளார்கள். நீங்கள் அறிமுகத்தைப் பெற்றிருப்பதனால், அந்த அறிமுகத்தினூடாக நீங்கள் ஏதாவது பேற்றினை அனுபவம் செய்ய வேண்டும். எனவே, பாப்தாதாவின் ஆசையானது ஒவ்வொரு குழந்தையும் தொடர்ந்து ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். உங்களின் ஆசீர்வாதக் கணக்கில் நீங்கள் விரும்பிய அளவைத் தொடர்ந்தும் சேமியுங்கள். ஏனென்றால் இந்த வேளையில் நீங்கள் எத்தனை ஆசீர்வாதங்களைச் சேகரித்து, சேமிக்கிறீர்களோ, அந்தளவிற்கே உங்களால் நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகும்போது ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும். இந்த வேளையில் மட்டும் நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் துவாபர யுகத்தில் இருந்து தொடங்கி பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும். எனவே, நீங்கள் இத்தகைய ஆசீர்வாதங்களின் களஞ்சியத்தைச் சேமிக்க வேண்டும். நீங்கள் இராஜரீகமான குழந்தைகள்தானே? பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் அரசன் ஆகப் போகின்றவராகவே பார்க்கிறார். நீங்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை. அச்சா.

பாப்தாதாவின் ஆசை கீழ்க்கோடிடப்பட்டதா? இதைச் செய்தவர்கள், நீங்கள் இதைச் செய்து விட்டீர்கள் எனக் காட்டுவதற்கு உங்களின் கைகளை உயர்த்துங்கள். அச்சா. ஆறு மாதங்களுக்குள் செய்வதற்கென பாப்தாதா உங்களுக்குக் கொடுத்த வீட்டுவேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆசிரியர்களே உங்களுக்கு நினைவிருக்கிறதா? புது வருடம் விரைவில் ஆரம்பம் ஆகிவிடும். எனவே, இந்த மாதத்தில், பாப்தாதா உங்களின் திடசங்கற்பமான எண்ணத்தின் பெறுபேற்றைப் பார்ப்பார். ஆறு மாதங்களில் செய்ய வேண்டிய வீட்டுவேலை வேறுபட்டது. ஆனால், பாபா ஒரு மாதத்திற்கான இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தின் பெறுபேற்றைப் பார்ப்பார். இது சரிதானே? ஆசிரியர்களே, ஒரு மாதம் ஓகேயா? பாண்டவர்களே, இது ஓகேயா? அச்சா. முதல் தடவையாக மதுவனத்திற்கு வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. பாப்தாதா எப்போதும் புதிய குழந்தைகளை விரும்புகிறார். எவ்வாறாயினும், எப்படி ஒரு மரத்தின் புதிய இலைகள் பறவைகளால் மிகவும் விரும்பப்படுகிறதோ, அதேபோல், மாயையும் புதிய குழந்தைகளை மிகவும் விரும்புகிறாள். அதனால், புதியவர்களான நீங்கள் எல்லோரும் உங்களின் புதுமையைச் சோதித்துப் பாருங்கள்: இன்று நான் என்னில் என்ன புதுமையைக் கொண்டுவந்தேன்? இன்று நான் குறிப்பாக எனக்குள் என்ன விசேடமான நற்குணத்தை அல்லது விசேடமான சக்தியைக் கிரகித்தேன்? நீங்கள் தொடர்ந்து உங்களைச் சோதித்து, இந்த முறையில் உங்களைப் பலசாலியாகவும் முதிர்ந்தவராகவும் ஆக்கினால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் அமரர்களாக இருப்பீர்கள். எனவே, அமரராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் நிச்சயமாக அமரத்துவ அந்தஸ்தை அடைய வேண்டும். அச்சா.

சகல திசைகளிலும் உள்ள கவலையற்ற சக்கரவர்த்திகளான உங்கள் எல்லோருக்கும் சதா ஆன்மீக போதையுடன் இருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும் சதா தமது பொக்கிஷங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கும் தீவிர முயற்சி செய்யும் ஆத்மாக்களுக்கும் ஒரே வேளையில் மூன்று வழிமுறைகளாலும் சேவை செய்யும் மேன்மையான சேவையாளவர் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் பல,பல,பல மில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சடப்பொருளை வென்றவராகி, உங்களின் சக்திகள் எல்லாவற்றையும் ஒத்துழைக்கச் செய்து, உங்களின் கட்டளைகளின்படி செயல்படச் செய்வீர்களாக.

எல்லாவற்றிலும் மிகப் பெரிய வேலையாள் சடப்பொருளே. சடப்பொருளை வென்றவர்களாக இருக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுள்ள குழந்தைகளிடம் சகல சக்திகளும் உள்ளன. அத்துடன் சடப்பொருள் அவர்களின் வேலையாளாக அவர்களின் கட்டளைப்படி நடக்கும். அவை தேவைப்படும் எந்த வேளையிலும் ஒத்துழைக்கும். எவ்வாறாயினும், சடப்பொருளை வென்றவராக இருப்பதற்குப் பதிலாக, கவனயீனம் என்ற தூக்கத்தில், தற்காலிகமான பேறுகளைக் கொண்டிருப்பதன் போதையில் அல்லது வீணான எண்ணங்களின் நடனத்தின் போதையில் நீங்கள் உங்களின் நேரத்தை வீணாக்கினால் உங்களின் சக்திகள் உங்களின் கட்டளைப்படி செயல்பட மாட்டாது. ஆகவே, அனைத்திற்கும் முதலில், பிரதானமான சக்திகளைச் சோதித்துப் பாருங்கள்: சிந்திக்கும் சக்தி, தீர்மானிக்கும் சக்தி, சம்ஸ்காரங்களின் சக்தி. இவை மூன்றும் ஒழுங்காக இருக்கின்றனவா?

சுலோகம்:
தொடர்ந்து பாப்தாதாவின் புகழைப் பாடுங்கள். நீங்கள் நற்குணங்களின் சொரூபம் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் இருந்து சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.

ஒன்றிணைந்த சேவை இல்லாமல் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. நீங்கள் சேவை செய்வதற்காக எங்கேயாவது சென்றுவிட்டு, திரும்பி வந்ததும் மாயை வந்தது அல்லது உங்களுக்கு மனநிலை சரியில்லை அல்லது உங்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என நீங்கள் சொல்வதாக இருக்கக்கூடாது. ஆகவே, இதைக் கீழ்க்கோடிடுங்கள்: சேவையில் வெற்றியும் சேவையில் விரிவாக்கமும் சுயத்துடன் மற்றவர்களுக்கான ஒன்றிணைந்த சேவையாலேயே பெறப்படும்.