06.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அமிர்தவேளை நேரம் மிகவும் சிறந்தது. ஆதலால், அதிகாலையில் விழித்தெழுந்து, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, பாபாவுடன் இனிமையாகச் சம்பாஷணை செய்யுங்கள்.

கேள்வி:
நீங்கள் ஒரு நிலையான யோகி ஆகுவதற்கு எந்த ஞானம் உங்களுக்கு மிகவும் உதவுகின்றது?

பதில்:
நாடகத்தின் ஞானம் ஆகும். நடப்பவை அனைத்தும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்திதி முற்றாகவே தளம்பல் அடையக்கூடாது. சூழ்நிலை எவ்வாறாக இருப்பினும், பூமியதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டாலோ, உங்களுக்கு எதைப் பற்றிய சிறிதளவு சந்தேகமேனும் ஏற்படக்கூடாது. இதுவே ஒரு மகாவீரராக (தைரியமான போர்வீரர்) இருப்பது என்று அழைக்கப்படுகிறது. நாடகத்தின் மிகச்சரியான ஞானம் இல்லாவிட்டால், நீங்கள் தொடர்ந்தும் கண்ணீர் சிந்துவீர்கள். நிலையான யோகி ஆகுவதற்கு, நாடகத்தின் ஞானம் உங்களுக்கு அதிகளவில் உதவி செய்கின்றது.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
இது இப்பொழுது தூய்மையற்ற உலகின் இறுதி என்பதைக் குழந்தைகளான நீங்கள் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கின்றீர்கள். இது இப்பொழுது தூய உலகின் ஆரம்பமாகும். இதனைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இந்த வழிகாட்டல்களை அல்லது ஸ்ரீமத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே பெறுகிறீர்கள். இதனை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? அதிமேலான கடவுளே. நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக வேண்டும் என்பதை அவர் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த ஞானம் உங்களுக்கானது. ஏனைய அனைவரும் தூய்மை அற்றவர்கள். இந்தத் தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்பட உள்ளது. விகாரத்தில் ஈடுபடுபவர்களே தூய்மை அற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பிறவிபிறவியாக ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவித்து வருகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் அதன் ஆரம்பத்தில் இருந்து, மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தை அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறீர்கள். தாங்கள் தூய்மை அற்றவர்கள் என்று அவர்கள் அழைக்கின்ற பொழுதிலும், இது அவர்களின் புத்தியில் முழுமையாகப் பதிவதில்லை. அவர்கள் அழைக்கிறார்கள்: 'தூய்மையாக்குபவரே, வாருங்கள்", இருப்பினும் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுவதை நிறுத்துவதில்லை. இவை அனைத்தும் தூய்மை ஆகுவது பற்றியவை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். ஒரேயொருவரே இதனை விளங்கப்படுத்துவதற்கு உள்ளார். அந்தக் குருமார்களில் எவராலும் எவரையும் தூய்மையாக்க முடியாது. ஒரு பிறவிக்கு மாத்திரமல்ல, ஆனால் நீங்கள் பிறவிபிறவியாகத் தூய்மையாக வேண்டும். ஞானம் உள்ள நீங்களே விரைவாக முன்னேறிச் செல்கிறீர்கள். இது நாடகத்துக்கேற்ப நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பதும் அவசியம். அது தந்தையின் நினைவில் நீங்கள் நிலைத்து இருப்பதனாலேயே ஏற்பட முடியும். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். பாபா கூறுகிறார்: அதிகாலையில் விழித்தெழுந்து, பாபாவை நினைவு செய்யுங்கள். அதுவே நினைவில் நிலைத்து இருப்பதற்கான மிக அழகான நேரம்; அது விடியல் என்று அழைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் மக்கள் கூறுகிறார்கள்: ஓ மனமே! அதிகாலை வேளையில் கடவுளை நினைவுசெய். தந்தையும் கூறுகிறார்: அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை நினைவு செய்தால், நீங்கள் பெருமளவு களிப்படைவீர்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டும். அமிர்தவேளையின் பொழுது சூழல் மிகவும் தூய்மையாக உள்ளது. பகல் வேளையில் நீங்கள் உங்கள் நாளாந்த வேலையில் ஈடுபடுகிறீர்கள். நள்ளிரவு வரையில் தூய்மையற்ற சூழலே உள்ளது. சாதுக்கள், புனிதர்கள், பக்தர்கள் அனைவரும் அதிகாலை வேளையில் பக்தி செய்கிறார்கள். உண்மையில், அவர்களால் நாள் முழுவதிலும் நினைவில் நிலைத்திருக்க முடியும். அவர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களது புத்திகள் தாங்கள் வணங்கும் தேவர் மீதான யோகத்தில் இணைந்துள்ளது. எவ்வாறாயினும், எவராலும் அவ்வாறிருக்க முடியாது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் ஒரு தரிசனத்தைக் காண்பதற்காக முயற்சி செய்த பொழுதிலும், அவர்கள் எதனையும் பெறுவதில்லை. வழிபாடு செய்து வருகையில், அவர்கள் தமோபிரதான் ஆகவேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட, அவர்கள் சிவனுக்கு ஓர் அர்ப்பணத்தைச் செய்கிறார்கள். அவர்கள் அதனையே காசியில் தன்னை அர்ப்பணிப்பது என அழைக்கிறார்கள்; அவர்கள் சிவனை நினைவு செய்தவாறே ஒரு கிணற்றினுள் வீழ்கிறார்கள். அதுவே அவர்கள் செய்யும் சிவனுக்கான அர்ப்பணம். அதுவே பக்தி மார்க்கத்தில் செய்யும் அர்ப்பணமாகும். இது ஞான மார்க்கத்தின் அர்ப்பணமாகும். அது சிரமமானது, இதுவும் சிரமமானதாகும். பக்தி மார்க்கத்தில் அதன் மூலம் எந்த நன்மையும் இருப்பதில்லை. அது ஆத்மா தனது சரீரத்தைத் தற்கொலை செய்வது போன்றதாகும். அது ஞானமல்ல. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனவும் அவர்கள் கூறுகிறார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஆத்ம உணர்வு உடையவர், அவர் மாத்திரமே பரமாத்மா என்பதை அவரே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவாகிய நானே பரமாத்மா எனக் கூறுவதே மிகப்பெரிய பொய்யாகும். அது அசாத்தியம்! தந்தை கூறுகிறார்: நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கு மாத்திரமே வருகிறேன் என்பதனால், இப்பொழுது நான் உங்களைத் தூய்மை ஆக்குகிறேன். எவ்வாறாயினும், நாடகத்தில் நடக்க வேண்டியது எதுவோ, அதுவே நிகழும். உதாரணமாக, ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது கூரை வீழ்ந்தாலோ, அது விதி என்றே அழைக்கப்படுகிறது. அது முன்னைய கல்பத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது. அதையிட்டுச் சிறிதளவேனும், தளம்பலடைய வேண்டியதில்லை. நீங்கள் நாடகத்தையிட்டு, மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதுவே ஒரு தைரியமான போர்வீரராக இருப்பது என்று அழைக்கப்படுகிறது. மக்களுக்கு விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன. அவர்களில் எவராவது பாதுகாக்கப்பட்டார்களா? அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் அவர்களின் பாகங்கள் அத்தகையவை. நாடகத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் சரீரங்களை நினைவுசெய்து, தொடர்ந்தும் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களால் சிவபாபாவை ஒருபொழுதும் நினைவுசெய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் சிவபாபாவை நேசிப்பதில்லை. அவர்களிடம் அந்த உண்மையான அன்பு இருப்பதில்லை. தந்தையிடம் முழுமையான அன்பு இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சிவபாபாவின் மீது புத்தியில் அன்பு கொண்டவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்கள் தந்தை மீது அன்பான புத்தி உடையவர்களாக இருந்தார்கள் என நீங்கள் கூற மாட்டீர்கள். அவர்கள் இந்நேரத்தில் அன்பைக் கொண்டிருப்பதாலேயே, அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் எதனையும் அறிய மாட்டார்கள். சிவபாபா மீது அன்பு கொள்வதற்கு அவரைப் பற்றிய எதனையும் நீங்கள் கல்பம் முழுவதிலும் அறிந்து கொள்வதில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களைத் துண்டித்து, என்னுடன் மாத்திரமே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக விநாசத்துக்குரிய நேரமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இதனை அறிவீர்கள், ஆனால் மக்கள் காரிருளில் உள்ளார்கள். தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தி முழுவதையும் கோர வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நினைவில் நிலைத்து இருக்காமல், உங்களால் சதோபிரதானாக முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராகி, உங்கள் சொந்த நோய்களைப் பரிசோதியுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் தந்தை மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள் எனப் பாருங்கள். அமிர்த வேளையில் தந்தையை நினைவுசெய்வது மிகச் சிறந்தது. அதிகாலைப் பொழுதுகள் மிகவும் சிறந்தவை. அந்நேரத்தில் மாயையின் புயல்கள் எவையும் இருப்பதில்லை. நள்ளிரவுவரை தபஸ்யா செய்வதில் எவ்விதப் பயனுமில்லை, ஏனெனில் அந்நேரம் மிகவும் அசுத்தமானது. அந்த நேரத்துச் சூழல் மிகவும் தீயதாக உள்ளது. ஆகவே, நீங்கள் அதிகாலை ஒரு மணிக்குப் பின்னர் அதைப் பின்போடுங்கள். அதிகாலை ஒரு மணிக்குப் பின்னர் சூழல் மிகவும் நன்றாக உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்களுடையது இலகு இராஜயோகம். ஆகவே, நீங்கள் சௌகரியமாக அமர்ந்திருக்கலாம். பாபா தான் எவ்வாறு பாபாவுடன் பேசுகிறார் என்னும் தனது சொந்த அனுபவத்தை உங்களுக்குக் கூறுகிறார்: பாபா, இந்நாடகம் எவ்வளவு அற்புதமானது! எவ்வாறு நீங்கள் வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள் எவ்வாறு முழு உலகையும் மாற்றுகிறீர்கள் எனப் பாருங்கள்! இது ஒரு மகத்தான அற்புதம்! தந்தை கொண்டிருப்பதைப் போன்றே குழந்தைகளாகிய நீங்களும் எவ்வாறு மனிதர்களின் படகை அக்கரை சேர்ப்பது என்பதைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் தொடர்ந்தும் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இப்பொழுது நான் வந்து விட்டதால், தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள்! தூய்மை அற்றவர்களாகிப் பின்னர் வந்து ஒன்றுகூடலில் அமர்ந்திருக்காதீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் சூழலைத் தூய்மை அற்றதாக ஆக்குவீர்கள். பாபா அறிந்து கொள்வார். டெல்லியிலும், பம்பாயிலும், விகாரத்தில் ஈடுபட்டவர்களும் அங்கு வந்து அமர்ந்திருப்பார்கள். அசுரர்கள் வந்து தடைகளை உருவாக்குவதற்காக அமர்ந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. விகாரத்தில் ஈடுபடுபவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் சூழலையும் பாழாக்குகிறார்கள். அவர்களுக்கான தண்டனை மிகவும் கடுமையானது. பாபா அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அப்படியிருந்தும், அவர்களால் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பை ஏற்படுத்தாமல் இருக்க முடிவதில்லை, அவர்கள் பொய்களையும் கூறுகிறார்கள். அவர்கள் உடனடியாக பாபாவுக்கு எழுதிக் கூறவேண்டும்: பாபா, நான் இத்தவறைச் செய்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்! உங்கள் பாவங்களைப் பற்றி எழுதுங்கள். இல்லாவிட்டால், அப்பாவங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பதனால், நீங்கள் ஆழ்நரகத்துக்குச் செல்வீர்கள். அவர்கள் ஏதோவொன்றைப் பெற வேண்டும் என்பதற்காக வருகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பையே ஏற்படுத்துகிறார்கள். இதுவும் நாடகத்தின் ஒரு பாகம். முன்னைய சக்கரத்திலும் இத்தகைய அசுரர்களும் இருந்தார்கள்; இப்பொழுதும் அவர்கள் இருக்கிறார்கள். அமிர்தத்தை ஒதுக்கி விட்டு, அவர்கள் நஞ்சை அருந்துகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் ஓர் இழப்பை ஏற்படுத்துகிறார்கள்; அவர்கள் சூழலைப் பாழாக்குகிறார்கள். ஆசிரியர்கள் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்ல. யானைப் படையினரும், குதிரைப் படையினரும், காலாட்படையினரும் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள்; உங்களுக்கு வேறு என்ன தேவை? ஆம், நீங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தைகள் போன்றவர்களையும் பராமரிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பாபாவுக்கு உரியவர்கள் என்றும், ஆகவே 'பாபா, நீங்களே அவர்களைப் பராமரியுங்கள்” என்று நீங்கள் பாபாவிடம் கூற முடியும் என்றும் எண்ணாதீர்கள். நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும் ஒரு தாமரை போலத் தூய்மை ஆகுங்கள். தூய்மையற்ற செயல்களைச் செய்யாதீர்கள். காமமே முதன்மையான விடயமாகும். இதனாலேயே திரௌபதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கதறி அழைத்தாள். கதறி அழைப்பதைக் கேட்டவுடன் வரக்கூடிய தந்தை வந்துவிட்ட பொழுதே, திரௌபதி அழைத்தாள். அவர் வருவதற்கு முன்னர் எவரும் பாதுகாப்புக்காகக் (தூய்மையின் பொருட்டு) அழைப்பதில்லை. அவர்கள் யாரை அழைப்பார்கள்? பாபா வந்து விட்டதனால், அவர்கள் அழைக்கின்றார்கள். தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாகிய பின்னர் அவர்கள் எங்கே செல்வார்கள்? அவர்கள் வீடு திரும்ப வேண்டும், அதனைச் செய்ய வேண்டிய நேரம் இதுவேயாகும். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், விடுதலை அளிப்பவரும் ஆவார். இங்கு துன்பமே உள்ளது. இங்கு சாதுக்கள், புனிதர்கள் எவருமே சந்தோஷமாக இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு துன்பமோ அல்லது நோய் போன்றனவோ உள்ளன. குருடான, முடமான குருமார்களும் உள்ளார்கள். தாங்கள் குருடர்கள் அல்லது முடவர்கள் போன்றவர்கள் ஆகுவதற்கான அத்தகைய செயல்களை அவர்கள் நிச்சயமாகச் செய்திருக்க வேண்டும். சத்தியயுகத்தில் குருடர்களோ அல்லது முடவர்களோ இருக்க மாட்டார்கள். மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. தந்தையே வந்து இதனை விளங்கப்படுத்துகிறார். தந்தை மாத்திரமே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். ஏனைய அனைத்தும் பக்தியாகும். பக்தி மார்க்கம் வேறானது. அது ஏணியில் கீழிறங்குவதற்கான பாதையாகும். பந்தன வாழ்க்கைக்கு கீழிறங்கி வருவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன. பின்னர் முக்திக்குள் செல்வதற்கு ஒரு விநாடியே எடுக்கிறது. அது நீங்கள் அந்த ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனாலும், தந்தையை நினைவு செய்வதனாலும் மாத்திரமே இடம்பெறும்! அது வரிசைக்கிரமமானது. அவர்கள் கூறுகிறார்கள்: இன்னாரை எங்கள் ஆசிரியராகக் கொண்டிருப்பின், அது சிறந்ததாகும். அவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால், ஓர் ஆசிரியரைத் தங்களிடம் இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு வருமாறு அழைக்கிறார்கள். பாபா கூறுகிறார்: இதுவும் ஒரு தவறே ஆகும். பாபா உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு விடயத்தைக் கூறும்பொழுது, நீங்கள் ஏன் உங்கள் ஆசிரியரை நினைவு செய்கிறீர்கள்? தந்தையை நினைவு செய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள்! அத்துடன், இதனை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள், அவ்வளவுதான்! ஆசிரியர் வந்து என்ன செய்வார்? இது ஒரு விநாடிக்கான விடயமாகும். உங்களுடைய தொழிலில் ஈடுபடுவதனால், நீங்கள் அதனைச் செய்ய மறந்து விடுகிறீர்கள். அப்படியிருந்தும் ஆசிரியர் கூறுவார்: மன்மனாபவ! சில மூடர்கள் எதையும் புரிந்து கொள்ளாததுடன், தங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியர் வேண்டும் எனவும் கூறுகிறார்கள், நீங்களும் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! சரீர உணர்வைத் துறவுங்கள்! “இது என்னுடைய நிலையம்", “அது அவருடைய நிலையம்", 'இந்த மாணவர் ஏன் அங்கு செல்கிறார்?" இவ்வாறு கூறுவது, இவ்விடயங்கள் அனைத்தும் சரீர உணர்வாகும். நிலையங்கள் அனைத்தும் சிவபாபாவுக்கே உரியவை; அவை உங்களுடையவை அல்ல. இன்னார் உங்கள் நிலையத்துக்கு வருவதில்லை என நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்? அவரால் எங்கும் செல்ல முடியும். பாபா எப்பொழுதும் கூறுகிறார்: எவரிடமும் எதனையும் கேட்காதீர்கள். நீங்கள் விதைகளை விதைக்காது விட்டால், நீங்கள் எதனைப் பெறுவீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பக்தி மார்க்கத்திலும் கூட அவர்கள் தான தர்மங்கள் செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அனைத்தையும் கடவுளுக்காக மறைமுகமாகவே செய்கிறீர்கள். மக்கள் சந்நியாசிகளுக்குப் பெருமளவில் கொடுக்கிறார்கள். சாதாரணமாக, ஏழைகளுக்கே தானங்கள் கொடுக்கப்படுகின்றன, செல்வந்தர்களுக்கு அல்ல. அன்னதானமே அனைத்திலும் மிகச்சிறந்தது. நீங்கள் தானம் செய்யும் பொழுது, அதன் பலனை உங்களின் அடுத்த பிறவியில் பெறுகிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். கடவுள் அனைவருக்கும் அதன் பலனைக் கொடுக்கிறார். சாதுக்களாலும், புனிதர்களாலும் எந்தப் பிரதிபலனையும் கொடுக்க முடியாது. ஒரேயொரு தந்தையே அதன் பலனைக் கொடுக்கின்றார். அவர் அதனை எவர் மூலமாகவும் கொடுக்க முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் கடவுளின் பெயரில் கொடுப்பது வழக்கம், நீங்கள் உங்கள் அடுத்த பிறவியில் அதன் பலனைப் பெற்றீர்களா என்பதை அவர் நிச்சயப்படுத்துவது வழக்கம் ஆகும். நான் இப்பொழுது உங்களிடம் நேரடியாகவே வந்துவிட்டேன். இப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கான பலனைப் பெறுவீர்கள். மரணம் உங்கள் முன்னால் உள்ளது! மரணம் உங்கள் முன்னால் உள்ளது என்றும், அதனால் உங்களிடம் உள்ள அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் முன்னர் உங்களுக்குப் பக்தி மார்க்கத்தில் கூறப்படவில்லை. இது உங்களுக்குக் கூறப்படவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இந்த ஆன்மீக வைத்தியசாலையை எவர் விரும்பினாலும் திறக்க முடியும். நீங்கள் இந்த வைத்தியசாலையைத் திறக்கும் வகையில், தாங்கள் ஒரு கட்டடத்தைக் கட்டித் தருவதாகச் சிலர் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இன்று நீங்கள் ஒரு கட்டடத்தைக் கட்டி, நாளை நீங்கள் மரணித்தால், அனைத்துமே முடிவடைந்து விடும். உங்கள் சரீரத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நீங்கள் ஓர் ஆன்மீக வைத்தியசாலையையும் ஓர் ஆன்மீகக் கல்லூரியையும் திறப்பதற்கு இப்பொழுது உங்கள் வீட்டிலுள்ள ஓர் அறையை ஒதுக்கி வையுங்கள். நீங்கள் பலரை நன்மை அடையச் செய்யும் பொழுது, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், இவ்விநாச காலத்தில் நீங்கள் ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பு கொண்டுள்ளீர்களா எனவும் உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள்: ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்து, என்னை ஒரேயொருவருடன் இணைத்துக் கொண்டேனா? ஏதேனும் பாவச் செயல்களைச் செய்வதால், ஓர் அசுரன் ஆகுகின்றேனா? இவ்வாறாக உங்களையே சோதித்து, உங்களை மாற்றுங்கள்.

2. உங்கள் சரீரத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆதலால் உங்களிடமுள்ள அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள். உங்கள் ஸ்திதியைச் சதா ஸ்திரமானதாகவும், அசைக்க முடியாததாகவும் ஆக்குவதற்கு, உங்கள் புத்தியில் நாடகத்தின் புரிந்துணர்வை மிக நன்றாக வைத்திருந்தவாறு தொடர்ந்தும் முன்னேறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை அர்ப்பணித்து, மீண்டும் மீண்டும் தோல்வி அடைவதை நிறுத்துவதன் மூலம் ஒரு வெற்றிநிறைந்த மாஸ்ரர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.

உங்களை ஒரு வெற்றிநிறைந்த இரத்தினமாகக் கருதியவண்ணம் ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்குங்கள், ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். நீங்கள் ஒருபோதும் தோல்வி அடைய மாட்டீர்கள். ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானால் ஒருபோதும் தோற்க முடியாது. நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தால், தர்மராஜினால் தண்டனை பெறுவீர்கள். தோல்வி அடைந்தவர்கள், எதிர்காலத்தில் மாலைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் துவாபர யுகத்தில் இருந்து விக்கிரகங்கள் பலவற்றுக்கும் மாலை போட வேண்டும். ஆகவே, தோல்வி அடைவதற்குப் பதிலாக, உங்களை அர்ப்பணியுங்கள். அத்துடன் உங்களின் முழுமையான ரூபத்தை எடுக்கும் சத்தியத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
‘சிலவேளை’ என்ற வார்த்தை பலவீனத்தைக் காட்டும். அதனால், நான் ஏதாவதொரு வேளையில் அதைச் செய்வேன் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நீங்கள் அதை இப்போதே செய்ய வேண்டும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

நான் இந்த எல்லையற்ற மேடையில் ஒரு விளையாட்டு வீரன். விளையாட்டு வீரர்களின் மேடையானது உங்களுக்கு சதா மலர்ச்சி நிறைந்தவர்களாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும், உலக மக்கள் அதை அனர்த்தம் எனக் கூறுவார்கள். ஆனால் சதா ஒரு விளையாட்டை விளையாடும் ஒரு வீரர், அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்ப்பவர், அந்த அனர்த்தத்தையும் ஒரு விளையாட்டாகவே கருதுவார். சகித்துக் கொள்ளும் சக்தியால் அதை களிப்பூட்டும் விடயமாகவே அனுபவம் செய்வார்.