06.08.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது பாவச் செயல்கள் செய்யாத சகாப்தத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் பாவச் செயல்கள் செய்வதை நிறுத்துங்கள்.
பாடல்:
எந்தவொரு விடயத்தில் பிராமணக் குழந்தைகள் ஒவ்வொருவரும் நிச்சயமாகத் தந்தையைப் பின்பற்ற வேண்டும்?பதில்:
தந்தையே ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிப்பதைப் போன்று, நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையைப் போன்று ஆசிரியராக வேண்டும். நீங்கள் கற்பதை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும்;;. நீங்கள் ஆசிரியரின் (சிவபாபா) குழந்தைகளாகிய ஆசிரியர்களும், சத்குருவின் குழந்தைகளாகிய சத்குருமாரும் ஆவீர்கள். நீங்கள் சத்தியபூமியை ஸ்தாபிக்க வேண்டும். நீங்கள் சத்தியப் படகில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் படகு ஆட்டம் காணலாம், ஆனால் மூழ்க முடியாது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுடன் இதயபூர்மாக உரையாடுகிறார். அவர் ஆன்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார். ஏனெனில் இது புதிய ஞானமாகும். இது புதிய ஞானம், அதாவது, மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்குரிய ஒரு கல்வி ஆகும். இதை உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? ஆன்மீகத் தந்தையே பிரம்மாவின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அவர் தந்தையாவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால், அவரே ஆசிரியரும் ஆவார். நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். ஒவ்வொரு விடயத்திலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். புதிய உலகிற்காக உங்களுக்குக் கற்பிப்பவர் தந்தை ஒருவரேயாவார். தந்தையே பிரதான விடயமாகும். தந்தை பிரம்மாவினூடாக இந்தக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அவர் இவற்றை எவராவது ஒருவரினூடாகவே கொடுக்க வேண்டும். ‘பிரம்மாவினூடாக கடவுள் இராஜயோகம் கற்பித்தார்’ என்றும் நினைவு கூரப்பட்டுள்ளது. பிரம்மா மூலம் அவர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். இப்பொழுது அந்தத் தேவதர்மம் இல்லை. இப்பொழுது இது கலியுகமாகும். எனவே, சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும். சுவர்க்கத்தில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். இங்குபோல், அங்கே பல சமயங்கள் இருக்கமாட்டாது. அதாவது, விநாசம் இடம்பெறுவதால், சத்தியயுகத்தில் வேறு சமயங்கள் எதுவும் இருப்பதில்லை. இந்த விடயங்கள் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. இது இப்பொழுது சங்கமயுகம் என்பதால் தந்தை உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக்குகிறார். இது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவான விடயமாகும். திரிமூர்த்தியின் படத்திலும் அவர்கள் பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுவதைக் காட்டுகிறார்கள். எதன் ஸ்தாபனை? அது நிச்சயமாக புதிய உலக ஸ்தாபனையாகவே இருக்க வேண்டும். அது பழைய உலக ஸ்தாபனையாக இருக்க முடியாது. தெய்வீகக் குணங்களைக் கொண்ட தேவர்களே புதிய உலகில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. நாங்கள் வீட்டில் எங்கள் குடும்பத்துடன் வாழும்போது தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் முதலில் நாங்கள் காமத்தை வென்று, விகாரமற்றவர்களாக வேண்டும். நேற்று நாங்கள் தேவதேவியரின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, ‘நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள், நாங்களோ விகாரமானவர்கள்.’ என்று கூறினோம். நாங்கள் விகாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், எங்களை விகாரம் நிறைந்தவர்களாக நாங்கள் உணர்ந்தோம். இப்பொழுது தந்தை கூறுகிறார்: அவர்களைப் போன்று நீங்கள் விகாரமற்றவர்களாக ஆக வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்களுக்கு காமம், கோபம் போன்ற விகாரங்கள் இருந்தால், உங்களிடம் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றன என்று கூற முடியாது. விகாரத்தில் ஈடுபடுவதும், கோபப்படுவதும் அசுரத்தனமான சுபாவங்களாகும். தேவர்களுக்குப் பேராசை இருக்குமா? ஐந்து விகாரங்களும் அங்கே இருப்பதில்லை. இது இராவணனின் உலகமாகும். திரேதா, துவாபர யுகங்களின் சங்கமத்தில் இராவணன் பிறப்பெடுக்கிறான். பழைய உலகினதும் புதிய உலகினதும் சங்கமம் இருப்பதைப் போலவே இரு யுகங்களின் சங்கமமும் இருக்கிறது. இப்பொழுது இராவண இராச்சியத்தில் பெருமளவு துன்பமும் பலவிதமான நோய்களுமே இருக்கின்றன. இது இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இராவணனை எரிக்கிறார்கள். பாவப் பாதையில் செல்லும்போது அவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகுகிறார்கள். இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்கள் ஆகவேண்டும். இங்கேயே நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். அனைவரும் அவரவர் செயல்களின் பலனைப் பெறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எவ்விதமான பாவத்தையும் செய்யக் கூடாது. ஒருவர் பாவச் செயல்களை வென்ற அரசனும் (விக்கிரமாதித்தன்) மற்றையவர் பாவச் செயல்களைச் செய்யும் அரசனும் (விக்கிரமன்) ஆவர். இது பாவச் செயல்களுக்கான சகாப்தம் ஆகும். அதாவது, இராவணனினதும், விகாரமானவர்களினதும் காலமாகும். இதை எவரும் புரிந்து கொள்வதும் இல்லை. எவருக்கும் சக்கரத்தின் காலஎல்லை எவ்வளவு என்பதும் தெரியாது. உண்மையில் தேவதேவியர்கள் பாவச் செயல்களை வென்றவர்கள். 5000 வருடங்களில், விக்கிரமாதித்த மன்னனின் காலம் 2500 வருடங்களும், விக்கிரம மன்னனின் காலம் 2500 வருடங்களும் ஆகும். அந்த மக்களும் அரைச்சக்கர காலப்பகுதி விக்கிரம மன்னனின் காலம் என்று கூறினாலும் அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. விக்கிரமாதித்த மன்னனின் காலம் முதலாம் வருடத்திலிருந்து ஆரம்பமாகின்றதென்றும், அதனையடுத்து 2500 வருடங்கள் கழிந்ததும் விக்கிரம மன்னனின் காலம் ஆரம்பமாகின்றதென்றும் நீங்கள் கூறுகிறீர்கள். விக்கிரம மன்னனின் காலம் இப்பொழுது முடிவடைந்து, நீங்கள் இப்பொழுது பாவச் செயல்களை வென்ற சக்கரவர்த்தி சக்கரவர்த்தினி ஆகுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகியதும், விக்கிரமாதித்த மன்னனின் காலம் ஆரம்பமாகும். இந்த விடயங்கள் உங்களுக்கு மாத்திரமே தெரியும். அவர்கள் உங்களிடம் வினவுகின்றார்கள்: நீங்கள் பிரம்மாவை ஏன் இவ்விடத்தில் வைத்திருக்கிறீர்கள்? ஓ! நீங்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? எங்களுக்குக் கற்பிப்பவர் இவரல்ல. நாங்கள் சிவபாபாவிடம் கற்கின்றோம். இவரும் சிவபாபாவிடமே கற்கிறார். எங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொருவரே ஞானக்கடல் ஆவார். அவர் சரீர வடிவமற்றவர். அவருக்கு பௌதீக வடிவமில்லை. அதாவது, அவருக்குச் சரீரமில்லை. அவர் அசரீரியானவர் என்று அழைக்கப்படுகிறார். அசரீரியான ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் இங்கே வந்து சரீரதாரிகள் ஆகுகிறார்கள். அனைவருமே பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்கிறார்கள். அவரே ஆத்மாக்களின் தந்தை ஆவார். பௌதீகத் தந்தையைப் பரமனே என்று அழைக்க முடியாது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பாடசாலை மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்துகின்றார்கள். ஒருவர் சட்டத்தரணியாகி தனது அந்தஸ்தை அடைந்ததும் அவரது கல்வி முடிவடைகிறது. சட்டத்தரணியாகிய பின்னரும் அவர் தொடர்ந்தும் கற்றுக் கொண்டேயிருப்பார் என்றில்லை. இல்லை, அவரது கல்வி முடிவடைகிறது. நீங்கள் தேவர்களாகிய பின்னர் கற்க வேண்டியதில்லை. தேவர்களின் இராச்சியம் 2500 வருடங்களுக்குத் தொடர்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இந்த விடயங்கள் தெரியும். பின்பு நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு நீங்கள் கற்பிக்கவில்லையாயின், உங்களை ஆசிரியர் என்று எவ்வாறு அழைக்க முடியும் என்ற அக்கைறையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள். நீங்கள் அனைவரும் ஆசிரியரின் குழந்தைகள் என்பதால் நீங்கள் அனைவருமே ஆசிரியர்களாக வேண்டும். இதைக் கற்பிப்பதற்கு எத்தனையோ ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். தந்தை ஆசிரியராகவும் சத்குருவாகவும் இருப்பதைப் போன்று நீங்களும் ஆசிரியர்களே. நீங்கள் சத்குருவின் குழந்தைகளான சத்குருமார் ஆவீர்கள். அவர்கள் சத்குருமார் அல்ல. அவர்கள் குருவின் குழந்தைகளாகிய குருமார்களேயாவர். ‘சத்’ என்றால் சத்தியம். பாரதம் சத்தியபூமி என்று அழைக்கப்பட்டது. இது பொய்மையின் பூமியாகும். பாபா மாத்திரமே சத்தியபூமியை ஸ்தாபிக்கிறார். அவரே உண்மையான சாயி பாபா. உண்மையான தந்தை வரும் போது போலியானவர்களும் தோன்றுகிறார்கள். ‘புயல்கள் வரும் என்றும், படகு ஆட்டம் கண்டாலும் அது மூழ்காது’ என்றும் நினைவுகூரப்படுகிறது. மாயையின் பல புயல்கள் வரும் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றைக்கண்டு நீங்கள் பயப்படக்கூடாது. 'மாயையின் புயல்கள் வரும்' என்று சந்நியாசிகள் ஒருபோதும் உங்களுக்குக் கூற மாட்டார்கள். படகை எக் கரைக்கு இட்டுச் செல்வது என்று அவர்களுக்குத் தெரியாது. பக்தியின் மூலம் நீங்கள் சற்கதியைப் பெற முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தமது பக்திக்கான பலனைக் கொடுப்பதற்காகக் கடவுள் வருகின்றார் என்று மக்கள் கூறினாலும், அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றார்கள். நிச்சயமாக பக்தி செய்யப்பட வேண்டும். நல்லது, கடவுள் வந்து கொடுக்கும் பக்தியின் பலன் என்ன? நிச்சயமாக அவர் சற்கதியையே வழங்குகின்றார். இவ்வாறு மக்கள் கூறினாலும் எப்போது எவ்வாறு அவர் அதை வழங்குவார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எவரிடமும் நீங்கள் வினவினால், இவை அநாதியாகத் தொடருகின்றன, அதாவது தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடருகின்றன என அவர்கள் கூறுகின்றார்கள். இராவணனின் கொடும்பாவியை எப்போதிருந்து அவர்கள் எரிக்கின்றார்கள்? தொன்று தொட்ட காலத்திலிருந்து என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தினால், உங்கள் ஞானம் புதியது என்று அவர்கள் கூறுகிறார்கள். முன்னைய கல்பத்தில் இதைப் புரிந்து கொண்டவர்கள் விரைவாக இதைப் புரிந்து கொள்வார்கள். பிரம்மாவை விடுங்கள். சிவனுடைய பிறப்பு இடம்பெறுவதையே அவர்கள் சிவராத்திரி என்று குறிப்பிடுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: எனது பிறப்பு தெய்வீகமானதும் தனித்துவமானதுமாகும். நான் சாதாரண மனிதர்களைப் போன்று பிறப்பெடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் கருப்பையினூடாகப் பிறந்து சரீரதாரிகளாகுகிறார்கள். நான் கருப்பையில் பிரவேசிப்பதில்லை. ஞானக்கடலாகிய, பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. மனிதர்கள் எவரையுமே ஞானக்கடல் என்று அழைக்க முடியாது. அசரீரியான அந்த ஒரேயொருவருக்கு மாத்திரமே இந்தப் புகழ் உரியது. அசரீரியான தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பித்து விளங்கப்படுத்துகிறார். இராவண இராச்சியத்தில் உங்கள் பாகத்தை நடிக்கும் பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகுகிறீர்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார் என்ற ஞானத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். இவையெல்லாம் அவயவங்களே. நான் ஓர் ஆத்மா. நான் விரும்பினால் இந்த அவயவங்களை இயக்கவோ, இயக்காதிருக்கவோ முடியும். அசரீரி உலகில் ஆத்மாக்கள் சரீரங்கள் இன்றி இருக்கிறார்கள். இப்பொழுது உங்களுக்கு உங்கள் வீட்டைத் தெரியும். வீட்டை, கடவுள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தின் ஞானத்தையும் ஏனைய தத்துவங்களைப் பற்றிய ஞானத்தையும் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக்கலந்து விடுவோம். தாங்கள் பிரம்ம தத்துவத்தில் வாழ்வதாக அவர்கள் கூறியிருந்தால், கடவுள் வேறான ஒருவராகக் கருதப்பட்டிருப்பார். ஆனால் அவர்களோ பிரம்ம தத்துவத்தையே கடவுள் என்று கருதுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தந்தையையும் மறந்துவிடுகிறார்கள். அந்த ஒரேயொருவரே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதால், உங்களை உலக அதிபதிகளாக்கும் தந்தையை நீங்கள் நினைவு செய்யக் கூடாதா? இப்பொழுது நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்து பிராமணர்கள். இப்பொழுது நீங்கள் அதி மேலான மனிதர்களாகுகிறீர்கள். அதிகீழான நிலையில் உள்ள மனிதர்கள் அதிமேலான மனிதர்களை வீழ்ந்து வணங்குகிறார்கள். தேவர்களின் ஆலயங்களுக்குச் சென்று அதிகளவு புகழ் பாடுகிறார்கள். நாங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்களாகுகிறோம் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இது மிகவும் எளிமையான ஒன்று. பல்-ரூப வடிவம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்-வகை சக்கரமும் உள்ளது. அம்மக்கள் பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்களை நினைவுகூருகிறார்கள், இலக்ஷ்மி, நாராயணன் போன்றவர்களின் விக்கிரகங்கள் உள்ளன. தந்தை வந்து அனைவரையும் திருத்தம் செய்கிறார். உங்களையும் அவர் திருத்தம் செய்கிறார். ஏனெனில், பிறவி, பிறவியாக பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னென்ன செய்தீர்களோ அவை தவறானதேயாகும். இவ்வாறே நீங்கள் தமோபிரதானாகினீர்கள். இதுவே அதர்ம உலகம். இது இராவண இராச்சியம் என்பதால் இங்கே துன்பத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அனைவரும் விகாரமானவர்களாக இருக்கிறார்கள். இராவண இராச்சியம் அதர்மமானது. இராம இராச்சியம் தர்மம் நிறைந்தது. இது கலியுகம். அது சத்தியயுகம். இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிவபாபா எந்தப் புராணங்களையேனும் மேற்கோள் காட்டுவதை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா? அவர் தனது சொந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். அத்துடன் படைப்பின் விளக்கத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளார். புராணங்களைக் கற்று அதை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பவர்களின் புத்தியில் புராணங்களே இருக்கின்றன. எனவே, அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவர் ஒரேயொரு சிவபாபாவே. அவர் மாத்திரமே அதிமேலான தந்தையாவார். அவரே பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகிறார். எல்லையற்ற தந்தை நிச்சயமாக உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சுவர்க்கவாசி ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் நரக வாசிகளாக இருக்கிறீர்கள். இராவண இராச்சியத்திலும் சக்கரவர்த்திகளும் அரசர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகச் செல்வந்தவர்களும், ஏனையோர் குறைந்தளவு செல்வந்தர்களும் ஆவார்கள். அவர்களை சூரிய வம்சத்தினர் என்றோ அல்லது சந்திர வம்சத்தினர் என்றோ அழைக்க முடியாது. அவர்கள் மத்தியில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். குறைந்தளவு செல்வத்தைக் கொண்டவர்கள் அரசர்கள் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுது மக்களாட்சியே இடம்பெறுகிறது. பிரபுவோ அதிபதியோ இல்லை. பிரஜைகள் தங்கள் அரசனே தமக்கு உணவளிப்பவராகவும், அனைத்தையும் வழங்குபவராகவும் கருதினார்கள். இப்பொழுது அதுவும் மறைந்து விட்டது. இப்பொழுது மக்களின் நிலைமையைப் பாருங்கள்! அதிகளவு சண்டையும் சச்சரவுகளுமே காணப்படுகின்றன. இப்பொழுது உங்கள் புத்தியில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்குமான சகல ஞானமும் இருக்கிறது. இப்பொழுது படைப்பவராகிய தந்தை நடைமுறை ரீதியாகவே இங்கு வந்துள்ளார். அதன் பின்னர் பக்தி மார்க்கத்தில் இதை வைத்து ஒரு கதை எழுதப்படும். நீங்களும் நடைமுறை வடிவில் இப்பொழுது இங்கே இருக்கிறீர்கள். அரைச்சக்கர காலத்திற்கு நீங்கள் ஆட்சி புரிவீர்கள். பிற்காலத்தில் அது ஒரு கதையாகி விடும். உங்கள் விக்கிரகங்கள் இன்னமும் இருக்கின்றன. அவர்கள் எப்போது ஆட்சி புரிந்தார்கள் என்று எவரையேனும் கேட்டுப் பாருங்கள், நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் என்றே அவர்கள் பதிலளிப்பார்கள். சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் தூய இல்லற ஆச்சிரமத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் நீங்கள் தூய்மையற்ற இல்லற ஆச்சிரமத்திற்குச் செல்ல வேண்டும். சுவர்க்க சந்தோஷத்தைப் பற்றி எவருக்குமே தெரியாது. சந்நியாச மார்க்கத்தில் இருப்பவர்களால் இல்லறப் பாதையைப் பற்றி எதையுமே கற்றுக் கொடுக்க முடியாது. ஆரம்ப காலத்தில் அவர்கள் காடுகளில் வசித்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு அந்த சக்தி இருந்தது. அவர்களுக்கு காடுகளுக்கு உணவு எடுத்துச் செல்லப்பட்டது. இப்பொழுது அவர்களிடம் எந்த சக்தியும் இ;ல்லை. அதே போல, அங்கே உங்களிடம் ஆளும் சக்தி இருந்தது. இப்பொழுது அந்த சக்தி எங்கே? நீங்கள் அதே நபர்கள், இல்லையா? இப்பொழுது உங்களிடம் அந்த சக்தி இல்லை. பாரத மக்களின் ஆதி தர்மம் இப்பொழுது இல்லை. இப்பொழுது அதர்மமே உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் வந்து தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிக்கிறேன். அதர்மானவர்களை நான் தர்மமானவர்களாக ஆக்குகிறேன். எஞ்சியிருக்கின்ற அனைத்தும் அழிந்து விடும். இருப்பினும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை ஒருவரே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் முற்றாக சந்தோஷத்தை இழக்கும் பொழுதே தந்தை வந்து உங்களை சந்தோஷமானவர்களாக ஆக்குகிறார். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அதி மங்களகரமான சங்கமயுகத்தில் அதிமேலானவர்கள் ஆகுவதற்கு, ஆத்ம உணர்வுடையவராகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உண்மையான தந்தையைக் கண்டு கொண்டீர்கள். எனவே, உண்மையற்ற அல்லது அதர்மமான செயல்கள் எதையுமே செய்யாதீர்கள்.2. மாயையின் புயல்களைக் கண்டு பயப்படாதீர்கள். சத்தியப்படகு ஆடினாலும் அது ஒருபோதும் மூழ்காது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். சத்குருவின் குழந்தைகளான சத்குருமார்கள் ஆகுங்கள். அனைவருடைய படகையும் அக்கரைக்கு இட்டுச் செல்லுங்கள்.
ஆசீர்வாதம்:
இலகுயோக ஆன்மிக முயற்சியை செய்வதன் மூலம் வசதிகளினால் பரிசோதனை செய்து, அவற்றை வெற்றி கொண்ட ஓர் ஆத்மா ஆகுவீர்களாக.சகல வசதிகளையும் கொண்டிருந்து அவற்றை பரிசோதனை செய்கின்ற வேளையில், உங்கள் யோக ஸ்திதியை தளம்பலடையச் செய்யாதீர்கள். ஒரு யோகியாகி, பரிசோதனை செய்தலே, பற்றற்றிருத்தல் எனப்படுகின்றது. ஒரு கருவியாகி அனைத்தையும் கொண்டிருக்கின்ற வேளையில் எந்தவொரு கவர்ச்சியிலிருந்தும் விடுபட்டு, பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு எந்தவொரு ஆசையும் இருந்தால், அந்த ஆசை உங்களை நல்லவர் ஆக்க மாட்டாது என்பதுடன் உங்கள் நேரம் முயற்சி செய்வதிலேயே கழிந்து விடும். அந்த நேரத்தில், நீங்கள் ஆன்மிக முயற்சியை பேண முயற்சித்தாலும் வசதிகள் உங்களை கவர்ந்திழுக்கும். ஆகையால் பரிசோதனை செய்கின்ற ஓர் ஆத்மாவாகி, இலகுயோகம் செய்வதன் மூலம் வசதிகளை அதாவது சடப்பொருளை வென்றவர் ஆகுங்கள்.
சுலோகம்:
திருப்தியாகவிருந்து, அனைவரையும் திருப்தியானவர் ஆக்குவதே திருப்தி இரத்தினமான ஒருவராக இருப்பதாகும்.