06.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகுவீர்கள், அனைவரையும் சந்தோஷத்துடனும் அன்புடனும் பார்ப்பீர்கள், எவருடைய பெயரிலும் ரூபத்திலும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள்.

கேள்வி:
யோகம் செய்வதன் பெறுபேறு என்ன? சக்திவாய்ந்த யோகிகளின் அடையாளங்கள் யாவை ?

பதில்:
உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தும் முற்றிலும் அமைதியும், குளிர்ச்சியும் அடைவதே யோகம் செய்வதன் பெறுபேறாகும். எவருடைய புலனங்கங்கள் முற்றாகவே எந்த விஷமத்தனமும் செய்வதில்லையோ, அவர்களே உறுதியான யோகிக் குழந்தைகள். அவர்களுடைய பார்வை எச்சரீரதாரிகளை நோக்கியும் சிறிதளவேனும் ஈர்க்கப்படாது. இனிய குழந்தைகளே, இனிமேலும் நீங்கள் இளையவர்கள் அல்லர், நீங்கள் இப்பொழுது உங்கள் ஓய்வு ஸ்திதியிலே இருக்கிறீர்கள்.

பாடல்:
விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! அந்த நாள் வரவுள்ளது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். உங்கள் இதயங்களில் இதன் அர்த்தத்தைக் கடைந்து சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள், ஏனெனில் இவை புதிய உலகிற்கான விடயங்கள் ஆகும். இந்நேரத்திலேயே இப்புதிய விடயங்களை நீங்கள் செவிமடுக்கிறீர்கள். புதிய உலகை ஸ்தாபிப்பவர் ஒரு மனிதராக இருக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இவ்விடயங்களை நீங்கள் கேட்கும் பொழுது, 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களுக்குக் கூறப்பட்ட, அதே பழைய விடயங்களே மீண்டும் ஒருமுறை புதிதாக உங்களுக்குக் கூறப்படுகின்றன என்று புரிந்து கொள்கிறீர்கள். புதியவை பழையவை ஆகுகின்றன, பழையவை புதியவை ஆகுகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபா உங்களுக்குக் கூறிய அதே விடயங்கள் அனைத்தையும் புதிதாக உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்; அவை அதே விடயங்களே. அவர் ஏன் அவற்றைக் கூறுகிறார்? புதிய உலகம் எனும் உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுவதற்காகும். இங்கே, நீங்கள் இந்த ஞான நடனத்தை ஆட வேண்டும். பக்தியிலும் அவர்கள் பல நடனங்களை ஆடுகிறார்கள்; அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்தும் நடனம் ஆடுகிறார்கள். இந்த ஞானநடனம் மிகவும் இலகுவானது. அந்த நடனங்களிலே அவர்களுடைய பௌதீகப் புலன்கள் பெருமளவு செயற்பட வேண்டும்; அவர்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இங்கே, இந்த ஞான நடனம் உள்ளார மாத்திரமே ஆடப்படுகின்றது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானத்தை உங்கள் புத்தி கொண்டுள்ளது. இதிலே எச்சிரமமும் இல்லை. ஆம், நினைவிற்கே முயற்சி தேவை. சிலவேளைகளிலே சில குழந்தைகள் சித்தி எய்;துவதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலை வரும்பொழுது, வீழ்ந்து விடுகிறார்கள். எவருடைய பெயரிலும், ரூபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே, அதி முக்கியமான விடயம் ஆகும். காமம் காரணமாக, கணவனும் மனைவியும் பெயரிலும் ரூபத்திலும் சிக்குண்டு விடுகிறார்கள். கோபமானது எவருடைய பெயர் அல்லது ரூபத்திலும் உங்களைச் சிக்க வைப்பதில்லை. இதுவே முதலாவது விகாரம், நீங்கள் இதனையிட்டு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எவருடைய பெயரிலோ, ரூபத்திலோ சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான் சரீரமற்று வந்தேன், நான் இப்பொழுது சரீரமற்றே திரும்பிச் செல்ல வேண்டும். சரீர உணர்வு துண்டிக்கப்படல் வேண்டும். எவரது பெயரிலும், ரூபத்திலும் சிக்கிக் கொள்ளும் நோய் மிகவும் தீயது. தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கிறார். சில குழந்தைகள் இதை முற்றாகவே புரிந்து கொள்வதில்லை. ‘நீங்கள் ஒருவரின் பெயரிலோ, ரூபத்திலோ சிக்கிக் கொள்கின்றீர்கள் என்று பாபா அநாவசியமாகக் கூறுகின்றார்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் இது ஒரு மறைமுகமான நோயாகும். இதனாலேயே மணவாளன் மணவாட்டிகளான உங்களை விழித்தெழச் செய்கிறார், அதாவது, தந்தை குழந்தைகளான உங்களை விழித்தெழச் செய்கிறார். குழந்தைகளே, விழித்தெழுங்கள்! கலியுகத்திற்குப் பின்னர் சத்தியயுகம் இப்பொழுது மீண்டும் வரப் போகின்றது. தந்தை உங்களுடைய ஒளிகளை ஏற்றுவதற்காக வருகின்றார். ஒருவர் மரணிக்கும் பொழுது, மக்கள் அவருக்காக ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள், அதன்பின்னர் அந்த ஆத்மா இருளை அனுபவம் செய்யாதிருப்பதற்காக, தீபம் அணைந்து விடாமல் அவர்கள் பாதுகாக்கிறார்கள். உண்மையில் அவ்விடயங்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவை. ஆத்மா ஒரு விநாடியில் பிரிந்து செல்கின்றார். சிலர் ஒளியையும் கடவுள் எனக் கருதுகிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தைப் பேரொளி என்று கருதுகிறார்கள். இரவுபகலாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கும் ஓர் ஆலயம் பிரம்ம சமாஜிகளிடம் உள்ளது. இதற்காக அதிகளவு செலவழிக்கப்படுவதுடன், அநாவசியமாக எண்ணெயும் வீணாக்கப்படுகின்றது. இங்கே நீங்கள் எதையும் ஊற்றத் தேவையில்லை. நினைவு, எண்ணெயைப் போல் தொழிற்படுகிறது. நினைவின் வடிவமே எண்ணெய் ஆகும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். இது புதியதொன்று என்பதால், சச்சரவுகள் உள்ளன. தந்தை கூறுகிறார்: நான் இனிமையான குழந்தைகளாகிய உங்களிடமே வருகிறேன். நான் பாரதத்தில் மாத்திரம் வருகிறேன். அனைவரும் தங்கள் தாய் நாட்டின் மீது பெருமளவு அன்பு வைத்திருக்கிறார்கள். தந்தை அனைவரையும் நேசிக்கிறார். எனினும், நான் எனது பாரத பூமிக்கு மாத்திரம் வருகிறேன். கீதையிலே ஸ்ரீகிருஷ்ணருடைய பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், மனிதர்கள் அனைவரும் சிவபாபாவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பலரும் சிவாலயத்திற்குச் செல்கிறார்கள். சோமநாதர் ஆலயமே மகத்தான ஆலயமாகும். இப்பொழுது பல ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. மக்கள் எல்லையற்ற தந்தையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற அளவிற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. இந்நேரத்திலே உங்களுக்கு அவரைப் போல இனிமையானவர் வேறெவருமே இல்லை. இது இங்கிருக்கின்ற சரீரதாரியின் புகழ் அல்ல. இது எதனையும் அனுபவம் செய்வதன் தாக்கத்திற்கு அப்பாற்பட்டிருக்கின்ற அசரீரியானவரின் புகழாகும். எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆகையால், அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். “இன்று, நாளை!” எனக் கூறியவாறு இருக்கையில், உங்களுக்கு மரணம் நேர்கின்றது! மிகக்குறுகிய காலமே எஞ்சியுள்ளது. குறைந்தபட்சம், தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுங்கள்! நீங்கள் அவர்களை வினாப் படிவத்தை நிரப்புமாறு கேட்கும் பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: அவரே எல்லையற்ற தந்தை என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பதால், தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், வெளியே சென்றவுடன், அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள். தந்தையே உபகாரி. அவர் கூறுகிறார்: இந்த யோகத்தைக் கொண்டிருப்பதால், 21 பிறவிகளுக்கு உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். குழந்தைகளான நீங்கள் வீட்டில் தொடர்ந்தும் விளங்கப்படுத்த வேண்டும்: அனைத்துத் துன்பத்தையும் அகற்றுபவரான எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையே பிரதான விடயம். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பௌதீக அங்கங்கள் அமைதி நிறைந்தவை ஆகும். யோகத்தின் பெறுபேறை நீங்கள் அடையும்வரை உங்களுடைய பௌதீக அங்கங்களால் அமைதி அடைய முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதிக்க வேண்டும்: காம விகாரத்தினால் நான் ஏமாற்றப்படுகிறேனா? நான் சக்திவாய்ந்த யோகி ஆயின், எந்த விஷமத்தனமும் இருக்கக்கூடாது. இது ஓய்வு ஸ்திதியைப் போன்றதாகும். தொடர்ந்தும் தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தை குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் நல்ல யோகிகளாகி, உங்கள் கண்கள் எங்கும் ஈர்க்கப்படாமல் இருக்கும் பொழுதே, உங்கள் பௌதீக அங்கங்கள் அமைதி நிறைந்தவை ஆகும். கண்களே உங்களை ஏமாற்றுகின்ற பிரதான விடயம். உங்கள் யோக ஸ்திதி மிகவும் நன்றாக இருந்தால், இளமையிலேயே நீங்கள் உங்கள் ஓய்வு ஸ்திதியை அடைந்து விட்டீர்கள் என்பதை உங்களால் உணர முடியும். தந்தை கூறுகிறார்: காமமே மிகக்கொடிய எதிரி! தொடர்ந்தும் உங்களைப் சோதியுங்கள்! நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக, உங்கள் பௌதீக அங்கங்களும் அமைதி அடைவதுடன், உங்கள் சுபாவமும் இனிமையானதாக ஆகும். அப்பொழுது ‘முன்னர் நான் மிகவும் கசப்பானவராக இருந்தேன், இப்பொழுது நான் மிக இனிமையானவராகி விட்டேன்’ என நீங்களே உணர்வீர்கள். பாபாவே அன்புக் கடல், குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறாக வேண்டும். ஆதலால் பாபா கூறுகிறார்: அனைவரையும் அன்புடன் பாருங்கள். நீங்கள் எவருக்கேனும் துன்பம் விளைவித்தால், துன்பத்திலே மரணிப்பீர்கள். எனவே மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள்! தந்தை கூறுகிறார்: நானே ரூப்பும், பசான்டும் ஆவேன். நீங்கள் பாபாவிடம் இருந்து அத்தகைய பெறுமதி வாய்ந்த இந்த ஞான இரத்தினங்களைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இவற்றினால் உங்கள் புத்தியை நிரப்ப வேண்டும். அம்மக்கள் சங்கரரின் முன்னிலைக்குச் சென்று, தங்கள் புத்தியை நிரப்புமாறு வேண்டுகிறார்கள். அனைவரதும் புத்தியையும் நிரப்புபவர் சங்கரர் அல்லர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஞானக்கடலான, பாபாவே குழந்தைகளாகிய உங்கள் புத்தியை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்களும் ரூப்பும், பசான்டும் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ரூப்பும், பசான்டும் ஆவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு இந்த ஞான இரத்தினங்களைக் கிரகித்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு, நீங்கள் தொடர்ந்தும் உங்களைப் சோதித்துப் பார்த்து, தொடர்ந்தும் இந்த ஞான நடனம் ஆடுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு இரத்தினங்களைத் தானம் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். 'மன்மனாபவ" என்பதே அதிசிறந்த இரத்தினம் ஆகும். தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாபா இந்த ஞானத்தால் நிறைந்திருப்பதைப் போலவே, அவர் குழந்தைகளாகிய உங்களையும் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார். குருமாரும் மற்றவர்களைத் தமக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார்கள். அவரே புள்ளிவடிவான எல்லையற்ற தந்தை. உங்கள் ரூபங்களும் புள்ளிகளே. அவர் குழந்தைகளாகிய உங்களையும் தனக்குச் சமனான ஞானக்கடல்கள் ஆக்குகிறார். நீங்களும் கிரகித்து, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுகின்ற அளவிற்கு ஏற்ப, நீங்கள் உயர்ந்த ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனைய பலருக்கும் நீங்கள் நன்மை செய்தால், பலரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு நாளும் தந்தையும் சேவை செய்கிறார். இந்தப் புதல்வி குல்சார் மிக இனிமையாக விளங்கப்படுத்துகிறார்! அனைவரும் அவர் கற்பிப்பதை நேசிப்பதோடு, தமக்கும் அவ்வாறான ஓர் ஆசிரியர் வேண்டும் என்றே விரும்புகிறார்கள். எவ்வாறாயினும் ஓர் ஆசிரியரால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. இருப்பினும், பாபா கூறுகிறார்: தங்களால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும் என்று உணர்பவர்கள் சகல துறையிலும் சேவை செய்ய வேண்டும். மற்றைய நிலையங்களைச் சுற்றிப் பார்ப்பதிலே அவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். தங்களால் ஏனைய பலருக்கும் நன்மை செய்ய முடியும் என்றும், அந்த நறுமணத்தை நன்றாகப் பரப்ப முடியும் என்றும் உணர்பவர்களுக்கு அந்த ஆர்வமும் இருக்க வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்கு மற்றைய நிலையங்களுக்குச் சுற்றிச் சென்று விட்டுத் திரும்பி வாருங்கள். ஒருவர் இவ்வாறு செய்வதைப் பார்த்தால் ஏனையோரும் அதனைக் கற்றுக் கொள்வார்கள். ஒன்றைச் செய்பவர்கள் அதன் பலனைப் பெறுவார்கள். இச்சேவை மிகவும் நன்மை அளிப்பதாகும். நீங்கள் மனிதர்களுக்கு வாழ்க்கைத் தானத்தை அளிக்கிறீர்கள். இதுவே அதி மகத்தான, அதிமேன்மையான பணியாகும். வியாபாரிகளாலும் சேவை செய்வதற்கு நேரத்தை ஒதுக்க முடியும். தந்தை சேவை செய்பவர்களை நேசிப்பதுடன், அவர்களைப் பராமரிக்கின்றார். சேவை செய்வதிலே ஆர்வம் உடையவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. தந்தையும் உங்களுக்கு உதவி செய்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். அந்த அப்பாவி மக்கள் மிகவும் துன்பம் நிறைந்த வாழ்க்கைகளைக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கிறீர்கள். ஒருவருக்கு அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதைப் போன்ற மகத்தான, மேன்மையான தானம் வேறெதுவும் இல்லை. நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர்களாக வேண்டும். ஆசிரியர்கள் பலவீனமானவர்களாக இருக்கும்பொழுது, சேவையும் பலவீனம் அடைகிறது, இதனாலேயே அவர்கள் ஒரு நல்ல ஆசிரியரைக் கேட்கிறார்கள். உங்களுக்கு எண்ணம் எழும்பொழுது எல்லாம் நீங்கள் சேவை செய்யச் செல்ல வேண்டும். பாபா, எந்த நிலையம் பின்தங்கி இருக்கிறது? நான் அங்கே சேவை செய்யச் செல்கிறேன். கண்காட்சிகளின் படங்களும் இருக்கின்றன. படங்களில் இருந்து மக்களால் அனைத்தையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சேவையை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். தந்தை அனைவரின் வாழ்க்கையையும் ஒரு வைரத்தைப் போல பெறுமதி மிக்கதாக ஆக்குகிறார். குழந்தைகளாகிய நீங்களும் சேவை செய்ய வேண்டும். 'தாய்மாருக்கு வந்தனங்கள்" என்பது நினைவு கூரப்படுகிறது, ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தூய்மையற்ற மனிதர்களையோ அல்லது பூமியையோ நீங்கள் என்றுமே புகழ்வதில்லை. அவை பஞ்ச பூதங்கள் மாத்திரமே அவற்றை நீங்கள் ஏன் புகழ வேண்டும்? சரீரங்கள் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டவை, எனவே ஒரு சரீரத்தை வழிபடுதல், சிலைகளை வழிபடுவதைப் போன்றது. சிவபாபாவிற்கென ஒரு சரீரம் இல்லை. அவரை வழிபடுவதே, அனைத்திலும் மேன்மையான வழிபாடு. மற்றவை அனைத்தும் நடுத்தரமானவையே. இந்நாட்களிலே மக்கள் தொடர்ந்தும் தூய்மையற்ற மனிதர்களை வழிபடுகிறார்கள். தேவர்களே மகாத்மாக்கள். அவர்கள் சந்நியாசிகளை விடவும் தூய்மையானவர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை இப்பொழுது எவ்வாறு அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்வது என்று எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதை விட மகத்தான தானம் வேறெதுவுமே இருக்க முடியாது. ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! உங்களிடம் சிவனினதும், இலக்ஷ்மி நாராயணினதும் படங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் உங்கள் வீடுகளில் வைத்திருப்பதால், சிவபாபா உங்களை இலக்ஷ்மி நாராயணன் ஆக்குகிறார் என்பதை நீங்கள் நினைவு செய்வீர்கள். இந்த நேரத்திலேயே நீங்கள் இவ்வாறு ஆகுகிறீர்கள். சிவபாபாவே சுவர்க்கத்தைப் படைப்பவர். அவர் உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குச் சத்திய யுகத்திலே கொடுப்பதில்லை. சிவபாபா கூறுகிறார்: இந்த இறுதிப் பிறவியிலே என்னை நினைவு செய்வதனால், நீங்களும் அவ்வாறு ஆகுவீர்கள். ஏனைய அனைத்தையும் மறந்து வேறெதிலும் அன்றி, உங்களைச் சேவையில் மட்டும் ஈடுபடுத்துங்கள். தந்தையை நினைவு செய்தலும் மகத்தான சேவையே. பஞ்சபூதங்கள் போன்றவை அனைத்தும் தூய்மையாகும். யோகத்தின் புகழ் மிகவும் மகத்தானது. உலகிலே பல யோகா ஆச்சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சரீரத்திற்கான ஹத்தயோகத்தையே கற்பிக்கின்றன. உங்களுடைய இந்த இராஜயோகம் உங்கள் படகை அக்கரை அடையச் செய்கின்றது. பலவிதமான அந்த ஹத்தயோகங்களால் நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கி வந்தீர்கள். நினைவே பிரதான விடயம். உங்கள் மனம் விகாரங்களை நோக்கிச் செல்லாதிருப்பதை நீங்கள் சோதிக்க வேண்டும். விகாரமானவர்கள் தூய்மை அற்றவர்கள் எனக் கூறப்படுகிறார்கள், அதாவது, அவர்கள் சிப்பி போன்ற பெறுமதி உடையவர்கள். காமத்திலே விழுவதால், நீங்கள் உங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள். தந்தை பார்க்கிறாரோ, இல்லையோ, ஏதாவது ஒன்றைச் செய்பவர்கள் அதன் பலனைப் பெறுகிறார்கள். நீங்கள் தந்தையின் சேவையைச் செய்கிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். என்னிடம் குறைபாடுகள் ஏதாவது இருக்கின்றனவா? என்னிடம் அவை இருந்தால், அவற்றை நான் அகற்ற வேண்டும். நீங்கள் உங்கள் பலவீனங்களை அகற்ற வேண்டும் என்பதற்காகத் தந்தை தொடர்ந்தும் பெருமளவில் உங்களுக்கு கூறுகிறார். நற்குணம் அற்றிருத்தல் என்பதன் அர்த்தத்தை எவருமே புரிந்து கொள்வதும் இல்லை. அவர்களிடம் நற்குணங்கள் எவையும் இல்லாதிருக்கும் பொழுது, 'நற்குணங்கள் அற்ற குழந்தைகள்" என்ற நிறுவனத்தினால் என்ன செய்ய முடியும்? அவர்கள் தமது மனதிலே தோன்றுபவை அனைத்தையும் தொடர்ந்தும் அர்த்தம் இல்லாமல் கூறுகிறார்கள். எண்ணற்ற அபிப்பிராயங்கள் இருக்கின்றன. நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்கான ஒரே வழிகாட்டலைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து, ஒரு தாமரை மலரைப் போல் தூய்மை ஆகுங்கள்! உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மை ஆகுங்கள். பிராமணர்களான நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், எங்களது சரீரங்கள், மனங்கள், செல்வம் மூலம் எங்களுக்கும், முழு உலகிற்கும் சேவை செய்கிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகிறார். பாண்டவர்களான நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குச் சேவை செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையைச் செய்கிறீர்கள். கடைசியில், பாண்டவர்களே வெற்றி அடையப் போகிறார்கள். இது போரைப் பற்றிய கேள்வியல்ல. நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள். நீங்கள் காமத்திலே ஈடுபடுவதோ, துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதோ இல்லை. வன்முறை மூலம் எவராலும் உலகின் இராச்சியத்தை அடைய முடியாது. அவர்கள் இருவரும் ஒன்றுபட்டால், அவர்களால் முழு உலகையும் ஆட்சிசெய்ய முடியும் என்று பாபா விளங்கப்படுத்தி உள்ளார். எவ்வாறாயினும் அது நாடகத்திலே இல்லை. கிறிஸ்தவர்கள் கிருஷ்ண பூமியை (கிருஷ்ண புரி) விழுங்கினார்கள். ஆதியில், பாரதமே கிருஷ்ணரின் பூமியாக இருந்தது. அவர்கள் போர் தொடுத்து, இராச்சியத்தைப் பெற்றதுடன், பெருமளவு செல்வத்தையும் கொள்ளை அடித்தார்கள். அந்தச் செல்வம் இப்பொழுது திரும்பவும் கொடுக்கப்படுகின்றது, பின்னர் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். பாபா உங்களுக்குப் பல்வேறு சாமர்த்தியமான வழிமுறைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் உங்கள் இராச்சியத்தை அபகரித்தார்கள். இப்பொழுது அவர்கள் தங்களுக்குள் சண்டையிட, நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். இது அத்தகைய மிகப்பெரியதோர் இராச்சியம் ஆகும். தொடர்ந்தும் பாபாவை நினைவுசெய்து, உங்கள் ஆஸ்தியைக் கோருகின்ற ஒரே விடயத்திற்கே முயற்சி தேவைப்படுகின்றது. இதைப் பற்றி நீங்கள் விரக்தி அடைந்தவர்கள் ஆகக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏனைய அனைத்தையும் மறந்து, இந்த ஞானத்தைத் தானம் செய்யுங்கள். ரூப்பும், பசான்ட்டும் ஆகுங்கள். உங்கள் பலவீனங்களை அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் பார்க்காதீர்கள்.

2. உங்கள் சுபாவத்தை மிகவும் இனிமையானதாக ஆக்குங்கள். அனைவரையும் அன்புடன் பாருங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களை வென்றவர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சம்பூரணமாக அர்ப்பணித்தல் என்ற வழிமுறையின் மூலம் சம்பூரணமாக நற்குணவான் ஆகுகின்ற உங்களின் முயற்சியில் சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

சம்பூரணமாக அர்ப்பணித்தல் என்பது உங்களுக்குள் சரீர உணர்வு உங்களின் எண்ணங்களிலேனும் இல்லாதபோதே ஏற்படுகிறது. இன்னார் என்ற உங்களின் சரீர விழிப்புணர்வையும் அர்ப்பணித்தல் ஆகும். இந்த எண்ணத்தை அர்ப்பணிப்பதுடன் தங்களையும் முழுமையாக அர்ப்பணிப்பவர்கள், சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்கள் ஆகுகிறார்கள். அவர்களிடம் எந்தவொரு நற்குணமும் குறைவடைவது இல்லை. தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதுடன் சகல நற்குணங்களாலும் நிறைந்தவராகவும் முழுமையானவராகவும் ஆகும் இலட்சியத்தைக் கொண்டுள்ள முயற்சியாளர்கள், சதா வெற்றியாளர்களாக இருக்கும் ஆசீர்வாதத்தை பாப்தாதாவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

சுலோகம்:
தமது மனங்களைக் கட்டுப்படுத்துபவர்களால் மட்டுமே சதா வெற்றியாளர்கள் ஆகமுடியும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

தூய்மைக்கும் தூய்மை இன்மைக்கும் காரணம் விழிப்புணர்வே ஆகும். யாராவது ஒருவர் ஓர் இறைவி என்ற விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கும்போது, அந்த விழிப்புணர்வானது உங்களின் பார்வையையும் மனோபாவத்தையும் தூயதாக ஆக்குகிறது. ஆனால் ஒருவர் பெண் என்ற உணர்வை நீங்கள் கொண்டிருக்கும்போது, அந்த விழிப்புணர்வானது உங்களின் பார்வையையும் மனோபாவத்தையும் தூய்மை இன்மையை நோக்கி இழுக்கும். ஒன்றில் நீங்கள் ரூபத்தை (சரீரத்தை) பார்க்கிறீர்கள். மற்றையதில் நீங்கள் ஆன்மீகமாகப் பார்க்கிறீர்கள்.