06.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாபாவின் பார்வை எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்;கும் அப்பால் செல்கிறது. நீங்களும் எல்லைக்குட்பட்டதுக்கும் (சத்தியயுகம்), எல்லையற்றதுக்கும் (கலியுகம்) அப்பால் செல்ல வேண்டும்.
பாடல்:
எக்குழந்தைகளால் அதிமேன்மையான ஞான இரத்தினங்களை மிக நன்றாகக் கிரகிக்க இயலும்?பதில்:
ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் தங்களின் புத்தியின் யோகம் இணைக்கப்பட்டு உள்ளவர்களாலும், தூய்மையாகி உள்ளவர்களாலுமே இந்த இரத்தினங்களை மிக நன்றாகக் கிரகிக்க இயலும். இந்த ஞானத்துக்கு ஒரு தூய்மையான பாத்திரம் தேவைப்படுகிறது. அனைத்து விதமான தவறான எண்ணங்களும் முடிவடைய வேண்டும். தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருப்பதால், உங்களுடைய பாத்திரம் தங்கமாகுவதுடன், பின்னர் அங்கு இரத்தினங்களும் நிலைத்திருக்க முடிகிறது.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார். இந்த உலகச் சக்கரத்தின் ஞானம், பக்தி, விருப்பமின்மை என்பன உருவாக்கப்பட்டுள்ளன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்ல வேண்டும். தந்தை எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பாற்பட்டவர்; அதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஞானம், பக்தி, விருப்பமின்மை எனும் இத்தலைப்பும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அது புதிய உலகமாக இருக்கும் பொழுது, ஞானமானது பகல் என அழைக்கப்படுகிறது. அங்கு பக்தியும் அறியாமையும் இருப்பதில்லை. அது ஓர் எல்லைக்குட்பட்ட உலகம், ஏனெனில் அங்கு மிகச்சொற்ப மக்களே இருக்கிறார்கள், பின்னர் படிப்படியாக வளர்ச்சி இடம்பெறுகிறது. அரைக்கல்பத்தின் பின்னர், பக்தி ஆரம்பிக்கிறது. அங்கு சந்நியாசிகளின் சமயம் இருப்பதில்லை. அங்கு துறவறம் இருக்காது. பின்னர், உலகச் சனத்தொகை வளர்ச்சியடைகிறது. ஆத்மாக்கள் தொடர்ந்தும் மேலிருந்து வருகிறார்கள், இங்கு தொடர்ந்தும் வளர்ச்சி இடம்பெறுகிறது. அது எல்லைக்குட்பட்டதாக இருப்பதில் ஆரம்பித்து, தொடர்ந்தும் எல்லையற்றதாக ஆகுகிறது. தந்தையின் பார்வை எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்கிறது. மிகச்சொற்ப குழந்தைகளே எல்லைக்குட்பட்டதில் இருக்கிறார்கள் என்பதையும், பின்னர் இராவண இராச்சியத்தில் அதிக வளர்ச்சி இடம்பெறுகிறது என்பதையும் அவர் அறிவார். இப்பொழுது நீங்கள் எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்ல வேண்டும். சத்தியயுகத்தில் உலகம் மிகவும் சிறியதாக உள்ளது. அங்கு துறவறமோ அல்லது விருப்பமின்மையோ இருக்காது. பின்னர், துவாபர யுகத்தில், ஏனைய சமயங்கள் ஆரம்பிக்கின்றன. தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும்; துறக்கின்ற சந்நியாசிகளின் சமயம் உள்ளது. அனைவரும் இவ்விடயங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அது ஹத்தயோகம் எனவும், எல்லைக்குட்பட்ட துறவறம் எனவும் அழைக்கப்படுகிறது. தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் துறந்து, அவர்கள் காடுகளுக்குச் செல்கிறார்கள். துவாபரயுகத்தில் பக்தி ஆரம்பிக்கிறது; இந்த ஞானம் எதுவுமே இல்லை. ஞானம் என்றால் சத்திய, திரேதா யுகங்களும் சந்தோஷமும் என்று அர்த்தமாகும், பக்தி என்றால் அறியாமையும் துன்பமும் என்று அர்த்தமாகும். இது மிகவும் நன்றாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். பின்னர் நீங்கள் எல்லைக்குட்பட்டதுக்கும் எல்லையற்றதுக்;கும் அப்பால், சந்தோஷத்துக்கும் துன்பத்துக்கும் அப்பால் செல்ல வேண்டும். ஆகாயம் உயரே எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும், கடலின் ஆழம் எவ்வளவு என்பதையும் கண்டுபிடிக்க மக்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அதன் முடிவை அடைய இயலாதுள்ளது. அவர்கள் ஓர் ஆகாய விமானத்தில் பறக்கிறார்கள். ஆனால் அது திரும்பி வரக்கூடியதாக, தேவையானளவு எரிபொருளைக் கொண்டிருக்கவும் வேண்டும். அவர்கள் மிகத் தொலைவுக்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்களால் எல்லையற்றதுக்குள் செல்ல முடியாதுள்ளது. அவர்கள் எல்லைக்குட்பட்ட தொலைவுவரைக்குமே செல்கிறார்கள். நீங்கள் எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்கிறீர்கள். புதிய உலகம், ஆரம்பத்தில், எல்லைக்குட்பட்டதாக உள்ளது என்பதை இப்பொழுது உங்களால் புரிந்துகொள்ள முடியும். மிகச்சொற்ப மக்;களே இருக்கிறார்கள், அது சத்தியயுகம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் உடையவர்களாக இருக்க வேண்டும். வேறெவரிடமும் இந்த ஞானம் கிடையாது. உங்களுக்கு விளங்கப்படுத்துபவர், எல்லைக்குட்பட்டதுக்கும் எல்லையற்றதுக்;கும் அப்பாற்பட்ட தந்தையாவார். இதை வேறு எவராலும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. அவர் உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் பின்னர் கூறுகிறார்: நீங்கள் இதற்கு அப்பாற் செல்ல வேண்டும். அங்கு எதுவும் கிடையாது. மக்கள் எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எங்கும் ஆகாயமே இருக்கிறது. அது எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்லுதல் என அழைக்கப்படுகிறது. எவராலும் முடிவை அடைய முடியாது. அது முடிவற்றது என்று அவர்கள் கூறுவார்கள். அது முடிவற்றது என்று கூறுவது இலகுவானது, ஆனால் அவர்கள் முடிவற்றது என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை இப்பொழுது உங்களுக்குப் புரிந்துணர்வைக் கொடுக்கிறார், தந்;தை கூறுகிறார்: நான் எல்லைக்குட்பட்டதையும், எல்லையற்றதையும் அறிவேன். இன்ன இன்ன சமயம், இன்ன இன்ன காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. உங்களின் பார்வை சத்தியயுகத்தின் எல்லைக்கும், பின்னர் எல்லையற்ற கலியுகத்தையும் நோக்கிச் செல்கிறது. பின்னர், நாங்கள் எதுவுமே இல்லாததற்கு அப்பால் செல்வோம். சூரிய, சந்திரனுக்கும் அப்பால் உள்ள அமைதிதாமமாகிய, எங்களின் இனிய வீட்டுக்கு நாங்கள் செல்கிறோம். உண்மையில், சத்தியயுகம் கூட, அமைதியும், இராச்சியப் பாக்கியமும், சந்தோஷமும் உள்ள, எங்கள் இனிய வீடாகும்; அங்கு அவை இரண்டும் உள்ளன. நாங்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது, அங்கு அமைதி மாத்திரமே இருக்கும். அங்கு சந்தோஷத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிட மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் அமைதியையும், அத்துடன் அமைதியையும் சந்தோஷத்தையும் ஸ்தாபிக்கிறீர்கள். அங்கு அமைதியும், அத்துடன் சந்தோஷ இராச்சியமும் உள்ளன. அசரீரி உலகில் சந்தோஷம் பற்றிய கேள்வியே இருக்காது. உங்களுடைய இராச்சியம் அரைக் கல்பத்துக்குத் தொடர்கிறது, அரைக் கல்பத்தின் பின்னர், இராவண இராச்சியம் இருக்கிறது. ஐந்து விகாரங்களினூடாக, அமைதியின்மை ஏற்படுகிறது. நீங்கள் 2500 வருடங்களுக்கு ஆட்சிசெய்கிறீர்கள். 2500 வருடங்களுக்குப் பின்னர், இராவண இராச்சியம் இருக்கிறது. அம்மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள். அனைவரையும் முழுமையான மூடர்களாக (புத்துக்கள்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். 5000 வருடங்களுக்குரிய சக்கரத்தை நூறாயிரக்கணக்கான வருடங்கள் கொண்டது என்று கூறுவது உண்மையான முட்டாள்தனம். அவர்களிடம் முற்றாகவே எப்பண்புகளும் இல்லை. தேவர்களுக்கு அத்தகைய தெய்வீகப் பண்புகள் இருந்தன. இப்பொழுது பண்புகள் அற்றுள்ளன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அசுர குணங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். முன்னர், நீங்களும் எதையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் காமவாளைப் பயன்படுத்தி, ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை, ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிப்பதால், ஒருவர் மற்றவரைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்கினார்கள். இதனாலேயே, அவர்கள் இராவண சமுதாயத்தினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இராமர் ஒரு குரங்குகளின் சேனையை அழைத்துச் சென்றதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். இராமச்சந்திரர் திரேதாயுகத்துக்கு உரியவர் ஆதலால், அங்கு எவ்வாறு குரங்குகள் இருந்திருக்க முடியும்? பின்னர், இராமரின் சீதை அபகரிக்கப்பட்டாள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அங்கு அத்தகைய விடயங்கள் நடைபெறுவதில்லை. இங்கு இருக்கின்ற 8.4 மில்லியன் உயிரினங்கள், மிருகங்கள் போன்றன சத்திய, திரேதா யுகங்களில் இருக்க மாட்டாது. தந்தை இங்கமர்ந்திருந்து எல்லையற்ற நாடகம் முழுவதையும் விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் ஆகவேண்டும். முன்னர், நீங்கள் முற்றாகவே எதையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் மனிதர்களாக இருந்தாலும், நாடகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை; அனைவரிலும் மகத்தானவர் யார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். கடவுளே அதிமேன்மையானவர். அவர்கள் வாசகங்களையும் பாடுகிறார்கள்: உங்கள் பெயரே அதியுயர்வானது… இது உங்களைத் தவிர வேறெவருடைய புத்தியிலும் இல்லை. நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. தந்தை உங்களுக்கு எல்லைக்குட்பட்டது, எல்லையற்றது இரண்டினதும் இரகசியங்களைக் கூறுகிறார். அந்த இடத்துக்கு அப்பால் எதுவுமே கிடையாது. அது பரந்தாமம் எனவும் அழைக்கப்படுகின்ற, உங்களின் வசிப்பிடம் ஆகும். அதேபோன்று, இங்கு நீங்கள் ஆகாய தத்துவத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், ஆனால் உங்களால் அதில் எதையாவது பார்க்க முடியுமா? அவர்கள் வானொலியை ஆகாயத்திலிருந்து வரும் சப்தம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆகாயம் முடிவற்றது: உங்களால் அதன் முடிவை அடைய முடியாது. ஆகவே அதை ஆகாயத்திலிருந்து வரும் சப்தம் என்று அழைப்பதால், மக்கள் எதைப் புரிந்துகொள்வார்கள்? வாயும் ஒரு குழி ஆகும். வாயிலிருந்தே சப்தம் வெளிப்படுகிறது. உங்கள் வாயிலிருந்து சப்தம் வெளிப்படுவது பொதுவானது, அது “ஆகாஷ்வாணி” (ஆகாயத்திலிருந்து வரும் சப்தம்) என்று அழைக்கப்படுகிறது. ஆகாயத்தினூடாகவே தந்தையும் பேச வேண்டும். உங்களுடைய முக்கியத்துவம் முழுவதையும் பற்றி அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறியுள்ளார். இப்பொழுது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இது மிகவும் இலகுவானது. நாங்கள் ஆத்மாக்கள் என்பதைப் போன்றே, தந்தையும் பரமாத்மா ஆவார். அவரே அனைவரிலும் அதியுயர்வான ஆத்மா. அனைவரும் அவரவர் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளனர். கடவுளே அனைவரிலும் அதியுயர்வானவர், பின்னர், இல்லறப் பாதைக்குரிய இரட்டை மணிகள் உள்ளார்கள். பின்னர், வரிசைக்கிரமமான மாலை எவ்வளவு சிறியது என்று பாருங்கள்! பின்னர், உலகம் வளர்ச்சியடைவதால், அது மிகவும் பெரிதாகுகிறது. பல மில்லியன் மணிகளையுடைய மாலை, அதாவது, ஆத்மாக்களின் மாலை உள்ளது. இவை அனைத்தும் கல்வியாகும். தந்தை விளங்கப்படுத்துபவை அனைத்தையும் மிகவும் நன்றாக உங்களின் புத்தியில் கிரகியுங்கள். நீங்கள் தொடர்ந்தும் விருட்சத்தின் விவரங்களைக் கேட்கிறீர்கள். விதையானவர் மேலே உள்ளார். இது ஒரு பல்ரூப விருட்சம். அதன் ஆயுட்காலம் மிக நீண்டது. விருட்சம் தொடர்ந்தும் வளர்ச்சியடைவதால், நாள் முழுவதும் இது மாத்திரமே உங்களின் புத்தியில் இருக்கட்டும். இவ்வுலகின் கல்ப விருட்சத்தின் ஆயுட்காலம் முற்றிலும் மிகச்சரியானது. 5000 வருடங்களில் ஒரு விநாடி வித்தியாசமேனும் இருக்க முடியாது. மிகவும் உறுதியான குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் அதிக ஞானம் உள்ளது. நீங்கள் தூய்மையாக இருக்கும்பொழுது மாத்திரமே உங்களால் உறுதியானவர்களாக இருக்க முடியும். இந்த ஞானத்தைக் கிரகிப்பதற்கு, ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகிறது. பின்னர், அது பாபாவுக்கு மிக இலகுவாக இருப்பதைப் போன்றே, அது மிகவும் இலகுவானதாகும். பின்னர், நீங்களும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் என அழைக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக மாலையின் மணிகள் உருவாக்கப்படுவீர்கள். பாபாவைத் தவிர எவராலும் இவ்விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. இந்த ஆத்மாவும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தேவர்களின் சரீரங்களினூடாக இல்லாமல், இச்சரீரத்தினூடாக மாத்திரமே தந்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து, உங்களின் குரு ஆகுகிறார், ஆனால் அப்பொழுதும் தந்தையே அப்பாகத்தை நடிக்க வேண்டியவர். 5000 வருடங்களுக்குரிய காலத்தில் அவர் வந்து தனது பாகத்தை நடிப்பார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே அதிமேன்மையானவர். பின்னர், இரட்டை மணிகள் உள்ளார்கள். ஆரம்பத்தில் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினியாக இருப்பவர்கள், பின்னர் இறுதியில் ஆதிதேவராகவும், ஆதிதேவியாகவும் ஆகுகிறார்கள். உங்களின் புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. இதை நீங்கள் எங்கேயாவது விளங்கப்படுத்தினால், அவர்கள் வியப்படைவார்கள்: நீங்கள் கூறுவது சரியே. மனித உலக விருட்சத்தின் விதையானவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவரைத் தவிர எவராலும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும், ஆனால் குழந்தைகளால் அவற்றைக் கிரகிக்க இயலாதுள்ளது. அது மிகவும் எளிமையானது; அதில் சிரமம் கிடையாது. முதலில் நினைவு யாத்திரை தேவைப்படுகிறது, அதனால் ஒரு தூய்மையான பாத்திரத்தில் இரத்தினங்கள் நிலைத்திருக்க முடிகிறது. இவையே அதிமேன்மையான இரத்தினங்கள். பாபா ஒரு நகை வியாபாரியாக இருந்தார். அவர் மிகச்சிறந்த வைரங்களையும், மரகதங்களையும் பெறுவது வழக்கம், அவர் அவற்றை அழகாகப் பஞ்சு பதிக்கப்பட்ட வெள்ளிப் பேழைகளில் வைப்பார். அவற்றைப் பார்த்த எவரும் கூறுவார்கள்: இது முதற்தரமான ஒன்று. இங்கும் அதேபோல் உள்ளது. சிறந்த கொள்கலன்களில் சிறந்த பொருட்கள் இருப்பது பார்ப்பதற்கு அழகாகும். உங்களின் காதுகள் இதைக் கேட்கின்றன, நீங்கள் அதைக் கிரகிக்கிறீர்கள். தூய்மையும் இருந்து உங்களின் புத்தியின் யோகமும் தந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பின், நீங்கள் அதை நன்றாகக் கிரகிப்பீர்கள். இல்லாவிட்டால், அனைத்தும் வெளியேறிவிடும். ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவரும், அதிக ஞானத்தால் நிரப்பப்பட்டுள்ளவரும் ஆவார். அத்தகையதொரு சிறந்த, தூய்மையான பாத்திரம் தேவைப்படுகிறது. எந்த எண்ணங்களும் எழக்கூடாது. தவறான, தீய எண்ணங்கள் அனைத்தும் முடிவடைய வேண்டும். ஏனைய அனைத்திலிருந்தும் உங்களின் புத்தியின் யோகத்தை அகற்றுங்கள். என்னுடன் யோகம் செய்வதால், உங்களின் பாத்திரம் தங்கமாக்கப்படுவதால், அதில் இரத்தினங்கள் நிலைத்திருக்க முடியும். பின்னர் நீங்கள் தொடர்ந்தும் ஏனையோருக்குத் தானமளிக்க முடியும். பாரதம் ஒரு மகாதானியாகக் கருதப்படுகிறது. மக்கள் பெருமளவு பௌதீகச் செல்வத்தைத் தானம் செய்கிறார்கள். எவ்வாறாயினும், இதுவே அழிவற்ற, ஞான இரத்தினங்களின் தானமாகும். உங்களின் சரீரங்கள் உட்பட, அனைத்தையும் துறந்து விடுங்கள், உங்களின் புத்தியின் யோகம் ஒரேயொருவரிடம் இணைக்கப்பட்டு இருக்கட்டும். நாங்கள் தந்தைக்கு உரியவர்கள், இதிலேயே முயற்சி தேவைப்படுகிறது. தந்தை உங்களுக்கு உங்களின் இலக்கையும், இலட்சியத்தையும் கொடுக்கிறார். முயற்சி செய்வது குழந்தைகளின் கடமை. இப்பொழுது மாத்திரமே உங்களால் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். தவறான அல்லது தூய்மையற்ற எண்ணங்கள் இல்லாதிருக்கட்டும். தந்தை மாத்திரமே ஞானக்கடல். அவர் எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பாற்பட்டவர். அவர் இங்கமர்ந்திருந்து அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பாபா உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், ஆனால், உண்மையில், நான் எல்லைக்குட்பட்டதுக்கும் எல்லையற்றதுக்;கும் அப்பால், மேலே செல்கிறேன். நான் அவ்விடத்தில் வசிக்கிறேன். நீங்களும் எல்லைக்குட்பட்டதுக்கும் எல்லையற்றதுக்கும் அப்பால் செல்ல வேண்டும். சாதாரண அல்லது தூய்மையற்ற எண்ணங்கள் இல்லாதிருக்கட்டும். இதற்கு முயற்சி தேவை. வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கையில், ஒரு தாமரை மலரைப் போன்று நீங்கள் வாழவேண்டும். உங்களின் இதயம் பாபாவை நினைவுசெய்கையில், உங்களின் கரங்கள் வேலையைச் செய்யட்டும். பல இல்லறத்தவர்கள் உள்ளார்கள். இங்கு வசிக்கும் குழந்தைகள், இல்லறத்தவர்களைப் போன்று அதிகளவு ஞானத்தைப் பெறுவதில்லை. நிலையங்களை நடாத்தி முரளியை வாசிப்பவர்களும் சித்தியடைவதில்லை. ஆனால் கற்பதை மாத்திரம் செய்பவர்;கள் உயர்வடைகிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், தொடர்ந்தும் நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். பாபா உங்களுக்குக் கூறும் அனைத்து விடயங்களும் மிகச்சரியானவை. கற்பித்த சிலரும் மாயையால் உண்ணப்படுகிறார்கள். மாயை சில மகாராத்திகளை விழுங்குவதைப் பூர்த்திசெய்தாள்; இங்கு அவர்கள் இப்பொழுது இல்லை. அவர்கள் மாயையால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, துரோகிகள் ஆகுகிறார்கள். வெளிநாட்டிலும், சிலர் துரோகிகள் ஆகுகிறார்கள். அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று அங்கு தஞ்சம் அடைகிறார்கள். அவர்கள் சக்திவாய்ந்த பக்கத்தை நோக்கிச் செல்கிறார்கள். இந்நேரத்தில் மரணம் நேரே உள்ளதால், அவர்கள் பெருமளவு சக்தியை உடையவரை நோக்கிச் செல்கிறார்கள். தந்தை மாத்திரமே சக்திநிறைந்தவர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தந்தையே சர்வசக்திவான். எங்களுக்குக் கற்பிப்பதால், அவர் எங்களை முழு உலகினதும் அதிபதிகள் ஆக்குகிறார். அங்கு, நாங்கள் அனைத்தையும் பெறுகிறோம். நாங்கள் அடைவதற்கு முயற்சி செய்யத் தேவை ஏற்படுமளவுக்கு, அங்கு எதற்கும் குறைவிருக்காது. அங்கு உங்களிடமில்லாதது எதுவுமேயில்லை; அதிலும், நீங்கள் செய்த முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, ஓர் அந்தஸ்தை அடைகிறீர்கள். தந்தையைத் தவிர எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. அனைவரும் பூஜிப்பவர்கள். மகத்துவமான சங்கராச்சாரியார்கள் போன்றோர் உள்ளார்கள், அவர்களின் புகழையும் பாபா உங்களுக்குக் கூறுகிறார். முதலில் அவர்களே பாரதத்துக்குத் தூய்மைச் சக்தி மூலம் நன்றாக ஆதாரமளிப்பதற்குக் கருவிகள் ஆகுபவர்கள், அதாவது, அவர்கள் சதோபிரதானாக இருக்கும்பொழுது ஆகும். அவர்கள் இப்பொழுது தமோபிரதானாக உள்ளார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்ன சக்தி உள்ளது? பூஜிப்பவர்களாக இருந்த நீங்கள், இப்பொழுது பூஜிக்கத் தக்கவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். இப்பொழுது உங்களின் புத்தியில் ஞானம் அனைத்தும் உள்ளது. உங்கள் புத்தி இவ்விடயங்களைக் கிரகித்துத் தொடர்ந்தும் அவற்றை ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தையையும் நினைவுசெய்யுங்கள். முழு விருட்சத்தினதும் இரகசியங்களைத் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இனிமையானவர்கள் ஆகவேண்டும். இது ஒரு யுத்தம், இல்லையா? மாயையின் பல புயல்கள் வருகின்றன. அனைத்தும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும்பொழுது, புயல்கள் அனைத்தும் அகன்றுவிடும். உங்களின் வாயில் ஒரு மணியை இடுகின்ற, “ஹத்தம்தாய்” என்னும் நாடகத்தை அவர்கள் காட்டுகிறார்கள். உங்களின் வாயில் மணியை இடும்பொழுது, மாயை சென்று விடுகிறாள். மணியானது அகற்றப்படும்பொழுது, மாயை வருகிறாள். “தொட்டாற்சிணுங்கி” தாவரமும் உள்ளது; நீங்கள் அதைத் தொட்டவுடன், அது வாடுகிறது. மாயை மிகவும் திறமைசாலி. அத்தகையதொரு மேன்மையான கல்வியை நீங்கள் கற்றுக் கொண்டு இங்கு அமர்ந்திருக்கையில், அவள் உங்களை வீழ வைக்கிறாள். இதனாலேயே தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள், உங்களால் எல்லைக்குட்பட்டதுக்கும், எல்லையற்றதுக்கும் அப்பால் செல்ல இயலும். சரீரம் எஞ்சியிராது விட்டால், உங்களின் பார்வை எங்கு செல்லும்? நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். அதைப் பற்றிக் கேட்கும்பொழுது, நீங்கள் உணர்வற்றவர்கள் ஆகக்கூடாது. ஒவ்வொரு கல்பத்திலும் உங்களின் முயற்சி தொடர்வதுடன், உங்களின் இராச்சியப் பாக்கியத்தையும் நீங்கள் கோருகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்றுள்ள அனைத்து விடயங்களையும் மறவுங்கள், ஆனால் நீங்கள் முன்னர் ஒருபொழுதும் கேட்டிருக்காத விடயங்களைச் செவிமடுத்து, நினைவைக் கொண்டிருங்கள். அது பக்திமார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இராஜரிஷிகள். விரித்த தலைமுடியுடன் முரளி வகுப்பை நடாத்துங்கள். சாதுக்களும் புனிதர்களும் கூறும் அனைத்து விடயங்களும் மனிதர்களின் முரளியாகும். இதுவே எல்லையற்ற தந்தையின் முரளியாகும். சத்திய, திரேதா யுகங்களில், முரளி ஞானத்துக்கான அவசியம் கிடையாது. அங்கு ஞானத்துக்கோ அல்லது பக்திக்கோ அவசியமில்லை. சங்கமயுகத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள், தந்தை மாத்திரமே அதை உங்களுக்குக் கொடுப்பவர். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தி ஞான இரத்தினங்களைக் கிரகித்து, அவற்றைத் தானம் செய்யட்டும். நீங்கள் ஒருபொழுதும் தவறான அல்லது தூய்மையற்ற எண்ணங்கள் எதனையும் கொண்டிராத அளவிற்கு, எல்லைக்குட்பட்டதுக்கும் எல்லையற்றதுக்;கும் அப்பால் இருக்கும் அத்தகையதொரு ஸ்திதியில் இருங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள் எனும் விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்.2. மாயையின் புயல்களிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, உங்கள் வாயில் தந்தையின் நினைவு எனும் மணியை இடுங்கள். அனைத்து விடயங்களும் சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு “தொட்டாற்சிணுங்கி” தாவரம் ஆகாதீர்கள். மாயையால் தோற்கடிக்கப்படாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொருவரின் அன்பிலே சதா திளைத்திருந்து ஒரேயொரு தந்தையை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்வதன் மூலம் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடுவீர்களாக.ஒரேயொரு தந்தையின் அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகள், திருப்தியாகவும் சகல பேறுகளாலும் நிறைந்தும் இருப்பார்கள். அவர்களால் எந்தவிதமான ஆதாரத்தாலும் கவரப்பட முடியாது. அவர்கள் இலகுவாக வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதை அனுபவம் செய்வார்கள். ஒரேயொரு தந்தையே அவர்களின் உலகம். அத்துடன் அவர்கள் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளின் இனிமையை அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு, சகல பேறுகளின் அடிப்படையும் ஒரேயொரு தந்தையே. சொத்துக்களோ அல்லது வசதிகளோ இல்லை. இதனாலேயே, அவர்கள் இலகுவாகக் கவர்ச்சிகளில் இருந்து விடுபடுகிறார்கள்.
சுலோகம்:
நீங்கள் பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்த விரும்பினால், சம்பூரணமாகப் பற்றில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.