06.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் இப்பொழுது அதி மங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். இங்கிருக்கும்பொழுது நீங்கள் புதிய உலகை நினைவுசெய்து ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்க வேண்டும்.

கேள்வி:
உங்கள் புத்தியின் பூட்டைத் திறக்கக்கூடிய என்ன புரிந்துணர்வைத் தந்தை கொடுத்துள்ளார்?

பதில்:
உங்களது புத்தியில் பூட்டப்பட்டுள்ள கோட்ரிஜ் பூட்டு திறக்கப்படும் வகையில் தந்தை இந்த அநாதியான நாடகத்தைப் பற்றிய புரிந்துணர்வை உங்களுக்குக் கொடுத்துள்ளார். உங்களுடைய புத்தி கல்லுப்புத்தியில் இருந்து தெய்வீகமானதாக மாற்றப்படுகின்றது. இந்நாடகத்தில் நடிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நடிப்பதற்காக உங்களுக்கென ஓர் அநாதியான பாகம் உள்ளது என்ற புரிந்துணர்வைத் தந்தை கொடுத்துள்ளார். சென்ற கல்பத்தில் எந்தளவிற்கு நீங்கள் கற்றீர்களோ அதேபோன்றே இப்பொழுதும் கற்பீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைக் கோரிக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எங்களுடைய தந்தையாகிய கணத்திலிருந்து எங்களது ஆசிரியராகவும் அத்துடன் சற்குருவின் வடிவிலும் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அவர் தந்தை ஆசிரியர் சற்குருவாக இருந்தபொழுதிலும் அவர் சிறு குழந்தையல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் அனைவரிலும் உயர்ந்தவரும் மகத்தானவருமாவார். நீங்கள் அனைவரும் அவரது குழந்தைகள் என்று தந்தைக்குத் தெரியும். நாடக நியதிக்கேற்ப வந்து உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுமாறு நீங்கள் அவரை அழைத்தீர்கள். ஆனால் நீங்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. சத்திய யுகம் தூய உலகம் என்றும் கலியுகம் தூய்மையற்ற உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது என இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் கூறினீர்கள்: எங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவியுங்கள்! எங்களை அனைத்துத் துன்பங்களிருந்தும் விடுவித்து எங்களின் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் திரும்ப அழைத்துச் செல்லுங்கள். முக்தியும் ஜீவன்முக்தியும் அல்லது அமைதி தாமமும் சந்தோஷ தாமமும் - இந்த இரண்டு பெயர்களும் மிகவும் நல்லவை. குழந்தைகளாகிய உங்கள் புத்திக்கு அமைதிதாமம் எங்கேயுள்ளது அல்லது சந்தோஷதாமம் எங்கேயுள்ளது என்று தெரியும்இ வேறு எவரது புத்தியிலும் இது இல்லை. அவர்கள் முற்றிலும் விவேகமற்றவர்கள். விவேகமானவர்கள் ஆகுவதே உங்களுடைய இலக்கும் குறிக்கோளுமாகும். விவேகமற்றவர்கள் அவர்களைப் போன்று (இலக்ஷ்மி நாராயணன்) விவேகமானவர்கள் ஆகுவதற்கான இலக்கையும் குறிக்கோளையும் கொண்டுள்ளனர். இங்கே இலக்கும் குறிக்கோளும் என்ன என்பதை அனைவருக்கும் நீங்கள் கற்பிக்க வேண்டும். அது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதாகும். இது மனிதர்களின் உலகமாகும். அது தேவர்களின் உலகமாகும். சத்திய யுகம் தேவர்களின் உலகம். எனவே கலியுகம் நிச்சயமாக மனிதர்களின் உலகமாகவே இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகவேண்டும் என்பதால் நிச்சயமாக நாங்கள் அதிமேன்மையான சங்கம யுகத்திலேயே இருக்கின்றோம். அவர்கள் தேவர்கள் இவர்கள் மனிதர்களாவர். தேவர்கள் விவேகமானவர்கள். தந்தையே அவர்களை விவேகமானவர்கள் ஆக்கினார். அவர் உலகின் அதிபதியாவார். அவர் ஒருபோதும் அந்த உலகின் அதிபதியாகாதபோதிலும் அவருக்கு இப்புகழ் உள்ளது. எல்லையற்ற தந்தை ஒருவரே எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பவர். புதிய உலகில் எல்லையற்ற சந்தோஷமும் பழைய உலகில் எல்லையற்ற துன்பமும் உள்ளது. அந்தத் தேவர்களின் படம் உங்களின் முன்னால் உள்ளது. அவர்களின் புகழ் அதில் உள்ளது. இந்நாட்களில் ஐந்து தத்துவங்களும் வணங்கப்படுகின்றன. நீங்கள் அதிமேன்மையான சங்கம யுகத்தில் உள்ளீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பாதத்தைச் சுவர்க்கத்திலும் ஒரு பாதத்தை நரகத்திலும் வைத்துள்ளீர்கள் என நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இங்கே வசித்தபோதிலும் உங்களுடைய புத்தி புதிய உலகிலேயே உள்ளது. ஆகையால் உங்களைப் புதிய உலகிற்கு அனுப்புகின்ற ஒருவரை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். சிவபாபா இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் எப்பொழுது வந்தார் அல்லது அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்று தெரியாது. அவர்கள் சிவராத்திரியையும்இ அத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பையும் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பயன்படுத்திய அதே வார்த்தைகளை சிவபாபாவுக்குப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் “சிவராத்திரி” என்று கூறுகின்றபோதிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கலியுக முடிவில் எல்லையற்ற துன்பமும் சத்திய யுகத்தில் எல்லையற்ற சந்தோஷமும் இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். கல்பத்தின் ஆரம்பம் மத்தி இறுதி பற்றி உங்களுக்குத் தெரியும். ஒரு கல்பத்திற்கு முன்னர் இதைக் கற்றவர்களே இப்பொழுதும் கற்பார்கள். அவர்கள் எவ்வாறெல்லாம் முயற்சி செய்தார்களோஇ பின்னர் திரும்பவும் அதனையே செய்து அதற்கேற்ப அந்தஸ்தைக் கோரிக்கொள்வார்கள். முழுக் கல்பமும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்களே உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று பின்னர் அதற்கேற்ப கீழிறங்கி வந்தவர்கள். மாலையிலுள்ள ஒவ்வொரு மனித ஆத்மாவும் வரிசைக்கிரமமாக கீழிறங்கி வருகின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு கணத்திலும் அவரவர் நடிப்பதற்கான அவரது சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார். தந்தை இந்த நாடகத்தில் அநாதியாகவே உருவாக்கப்பட்டுள்ள பாகத்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். தந்தை உங்களுக்குக் கற்பித்தவற்றை இப்பொழுது நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தை ஒவ்வொரு 5000 வருடங்களிலும் வந்து எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர் நாங்கள் அதை எங்களுடைய சகோதரர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. ஆத்மாக்கள் என்ற ரீதியில் நீங்கள் அனைவரும் சகோதரர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது உங்களை சரீரமற்ற ஆத்மாக்களாக கருத வேண்டும். ஆத்மாக்கள் தூய்மையாகுவதற்காக அவர்களது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்கள் தூய்மையாகும்போது தூய சரீரத்தைப் பெறுவார்கள். ஆத்மா தூய்மையற்றதாகும்போது அவருடைய ஆபரணமும் (சரீரம்) தூய்மையற்றதாகும். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். எந்த ஒரு ஆத்மாவும் மற்றவரைப் போன்றில்லை. ஒருவரின் முகச்சாயலும் நடவடிக்கையும் மற்றவரைப் போன்று இருக்க மாட்டாது. ஒவ்வொருவரும் தமது சொந்தப் பாகத்தை வரிசைக்கிரமமாக நடிக்கின்றனர். நாடகத்தில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்பட முடியாது. நாடகத்தில் நேற்று பார்த்த அதே காட்சிகளை நாளை பார்ப்பீர்கள். அதே விடயங்கள் மறுபடி நடைபெறும். இது நேற்று இன்று பற்றிய எல்லையற்ற நாடகமாகும். எவ்வாறு இராச்சியத்தைக் கோரிக்கொண்டீர்கள் என்றும் பின்னர் எவ்வாறு அதைத் தொலைத்தீர்கள் என்றும் நேற்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. நீங்கள் இப்பொழுது ஓர் இராச்சியத்தைக் கோரிக்கொள்வதற்காக இந்த ஞானத்தை இன்று புரிந்து கொள்கின்றீர்கள். இன்று பாரதம் பழைய நரகமாகும். நாளை அது புதிய சுவர்க்கமாகும். நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல இருக்கின்றீர்கள் என்பது உங்களுடைய புத்திக்குத் தெரியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மேன்மையானவாகள்; ஆகுகின்றீர்கள். மேன்மையானவர்கள் நிச்சயமாக மேன்மையான உலகத்திலேயே வசிப்பார்கள். இலக்ஷ்மி நாராயணன் மேன்மையானவர்களாக இருந்தார்கள். எனவே அவர்கள் மேன்மையான சுவர்க்கத்தில் வாழ்ந்தார்கள். சீரழிந்தவர்கள் நரகத்தில் வசிக்கின்றார்கள். நீங்கள் இதன் முக்கியத்துவத்தை இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்பொழுது அது உங்கள் புத்தியில் இருக்கும். அவர்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சியடைந்து மற்றவர்களையும் புத்துணர்ச்சியடையச் செய்யவேண்டும். உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் நீங்கள் ஜீவன்முக்தி அடைவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் சுவர்க்கத்திற்கு வருவதில்லை. இந்த உலகைத் தூய்மையற்றதில் இருந்து தூய்மையாக்குவதே எனது பாகமாகும். அங்கே உங்களிடம் எல்லையற்ற பொக்கிஷங்கள் இருக்கும். ஆனால் இங்கே நீங்கள் கடனாளிகளாக இருக்கின்றீர்கள். இதனாலேயே வந்து எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குத் தருமாறு நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பின்னர் ஒவ்வொரு கல்பத்திலும் ஏழைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் படங்களை விளங்கப்படுத்த உபயோகிக்கும்போது அவர்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். முதன்மையான தேவர்களாக இருந்த இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகள் எடுத்து சாதாரண மனிதர்கள் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை இப்பொழுது பெற்றுள்ளீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். அந்தத் தேவ உலகம் வைகுந்தமாகிய சுவர்க்கம் என்று கூறப்பட்டது. இப்பொழுது பாரதத்தை நீங்கள் அந்தப் பெயரினால் அழைக்க மாட்டீர்கள். இப்பொழுது இது அசுர உலகம். இப்பொழுது அசுர உலக முடிவினதும் தேவ உலக ஆரம்பத்தினதும் சங்கமமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த விடயங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்கள்: வேறு எவரினதும் வாயிலிருந்து இந்த விடயங்களை நீங்கள் செவிமடுக்க முடியாது. தந்தை வந்து இவருடைய வாயை உபயோகிக்கின்றார். யாருடைய வாயை அவர் உபயோகிக்கின்றார் என மக்கள் புரிந்துகொள்வதில்லை. யாருடைய சரீரத்தில் தந்தை வருகின்றார்? ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரத்தை ஓட்டுகின்றீர்கள். சிவபாபாவுக்குச் சொந்தமாக ஓர் இரதம் இல்லை. அவருக்கு நிச்சயமாக ஒரு வாய் தேவைப்படுகின்றது. இல்லாவிடில் அவர் எவ்வாறு இராஜயோகத்தை கற்பிக்க முடியும்? அவர் தூண்டுதல் மூலம் உங்களுக்கு கற்பிக்க முடியாது. ஆகையினால் இக்கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் இதயத்தில் குறித்து வையுங்கள். கடவுளின் புத்தியிலுள்ள ஞானம் அனைத்தும் உங்களின் புத்தியிலும் இருக்க வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் கிரகிக்க வேண்டும். ‘உங்களுடைய புத்தி நன்றாக இருக்கின்றதுதானே?’ என்றொரு கூற்று உள்ளது. புத்தி ஆத்மாவிலேயே இருக்கின்றது. ஓர் ஆத்மா அவரது புத்தியினால் புரிந்துகொள்கின்றார். உங்களுடைய புத்தியைக் கல்லாக்கியது யார்? உங்களுடைய புத்தியை இராவணன் என்னவாக மாற்றிவிட்டான் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நேற்று இந்த நாடகம் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்களுடைய புத்தியில் கோட்ரிஜ் பூட்டு போடப்பட்டிருந்தது. “கடவுள்” என்ற வார்த்தை அதில் இருக்கின்றது. தந்தையினால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தி கல்லுப்புத்தியாக மாறிவிட்டது. பின்னர் தந்தை மீண்டும் வந்து பூட்டைத் திறக்கின்றார். சத்திய யுகத்தில் அனைவரும் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை வந்து அனைவருக்கும் நன்மை பயக்கின்றார். அனைவரது புத்தியும் வரிசைக்கிரமமாகத் திறக்கப்படும். ஆத்மாக்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து இங்கு கீழிறங்கி வருவார்கள். எவருமே மேலேயிருக்க முடியாது. தூய்மையற்ற எவரும் அங்கு இருக்க முடியாது. தந்தை உங்களைத் தூய்மையாக்கி உங்களைத் தூய உலகிற்கு திரும்ப அழைத்துச் செல்கின்றார். தூய்மையான ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கின்றார்கள். அது அசரீரி உலகம். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளீர்கள். எனவே உங்களது வீடு உங்களுக்கு நெருக்கமாகத் தெரிகின்றது. உங்களுடைய வீட்டில் நீங்கள் பெருமளவு அன்பு கொண்டுள்ளீர்கள். அந்த வீட்டில் நீங்கள் கொண்டிருக்கின்ற அளவு அன்பு வேறு எவரும் கொண்டிருப்பதில்லை. எவ்வாறாயினும் நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. தந்தை மீது அன்புள்ளவர்கள் வீட்டின் மீதும் அன்பு கொண்டிருக்கின்றார்கள். விஷேடமான அன்புள்ள குழந்தைகளும் இருக்கின்றார்கள். நல்ல முயற்சி செய்வதுடன் விஷேடமான அன்புக்குரிய குழந்தைகள் ஆகியவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக்கொள்வார்கள் என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அது நீங்கள் வயதான சரீரத்தையோ அல்லது இளமையான சரீரத்தையோ கொண்டிருப்பதில் தங்கியிருப்பதில்லை. ஞானத்திலும் யோகத்திலும் திறமைசாலிகளாக உள்ளவர்களே மூத்தவர்கள் ஆவார்கள். ஞானத்திலும் யோகத்திலும் திறமைசாலிகளாக உள்ள பல இளைய குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வயதானவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். பொதுவாக வயதானவர்களே இளவயதினருக்குக் கற்பிக்கின்ற வழமை உள்ளது. இந்நாட்களில் குள்ளமானவர்களும் இருக்கின்றார்கள். உண்மையில் அனைத்து ஆத்மாக்களும் குள்ளமானவர்கள் (சிறியவர்கள்). ஓர் ஆத்மா சிறிய புள்ளியாவார் எவ்வாறு நீங்கள் அவரை நிறுக்க முடியும்? அவர் ஒரு நட்சத்திரம் போன்றவர். “நட்சத்திரம்” என்ற வார்த்தையைச் செவிமடுத்தவுடன் மக்கள் மேலே பார்க்கின்றார்கள். நீங்கள் “நட்சத்திரம்” என்ற வார்த்தையைச் செவிமடுத்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பார்க்கின்றீர்கள். நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள். அவை வானத்து நட்சத்திரங்கள். அவை உயிரற்றவை நீங்களோ உயிருள்ளவர்கள். அந்த நட்சத்திரங்கள் ஒருபோதும் மாற்றமடைவதில்லை. ஆனால் நட்சத்திரமாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள். நீங்கள் மிகப் பெரிய பாகத்தை நடிக்கின்றீர்கள்! உங்களுடைய பாகத்தை நடிக்கும்பொழுது உங்கள் பிரகாசம் மங்கிவிடுகிறது. உங்களுடைய மின்கலம் சக்தியிழந்து விடுகின்றது. பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் மங்கலாகும்பொழுது தந்தை வந்து இந்த ஞானத்தை உங்களுக்குப் பல்வேறு முறைகளில் விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய உங்களின் உள்ளிருந்த சக்தி பயன்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து பெறும் சக்தியினால் உங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய மின்கலத்துக்கு மீண்டும் சக்தியூட்டுகின்றீர்கள். மாயை இதில் பல தடைகளை உருவாக்குகின்றாள். அவள் உங்களுடைய மின்கலத்தைச் சக்தியூட்டுவதிலிருந்து நிறுத்துவதற்கு முயற்சி செய்கின்றாள். நீங்கள் உயிருள்ள மின்கலங்கள். தந்தையுடன் யோகம் செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதான் (முற்றிலும் தூய்மை) ஆகுவீர்கள் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதான் (முற்றிலும் தூய்மையற்ற) ஆகிவிட்டீர்கள். அந்த எல்லைக்குட்பட்ட உலகக் கல்விக்கும் இந்த எல்லையற்ற கல்விக்குமிடையில் பெரும் வேறுபாடு உள்ளது! அனைத்து ஆத்மாக்களும் வரிசைக்கிரமமாக மேலே செல்வார்கள். பின்னர் அவர்கள் தங்களுடைய சொந்தப் பாகத்தை நடிப்பதற்காக அவர்களுக்குரிய நேரத்தில் கீழிறங்கி வருவார்கள். ஒவ்வொருவரும் நடிப்பதற்கு அவரது சொந்த அழியாத பாகத்தைப் பெற்றுள்ளார்கள். எத்தனை தடவைகள் உங்களுடைய அழியாத 84 பிறவிகளின் பாகத்தை நடித்துள்ளீர்கள்? எத்தனை தடவைகள் ஆத்மாக்களாகிய உங்கள் மின்கலம் சக்தியூட்டப்பட்டு பின்னர் சக்தியிழக்கப்பட்டது? உங்களுடைய மின்கலம் சக்தியிழந்து விட்டது என்று அறிந்தும் ஏன் சக்தியூட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றீர்கள்? ஏனெனில் மாயை உங்கள் மின்கலத்தை சக்தியூட்ட அனுமதிப்பதில்லை. மாயை உங்களது மின்கலத்துக்குச் சக்தியூட்டுவதை மறக்கச் செய்கின்றாள். அவள் உங்களுடைய மின்கலத்தை மீண்டும் மீண்டும் சக்தி இழக்கச் செய்கிறாள். நீங்கள் தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் உங்களால் முடியாதுள்ளது. தங்களது மின்கலத்தைச் சக்தியூட்டி சதோபிரதான் ஸ்திதிக்கு நெருக்கமாக வந்தவர்களின் மின்கலத்தைக்கூட மாயை சக்தியிழக்கச் செய்கிறாள். நீங்கள் சிறிதளவு தவறு செய்தாலும் மாயை உங்களது மின்கலத்தை விரைவாக சக்தியிழக்கச் செய்கிறாள். இது கடைசி வரைக்கும் தொடர்ந்து நடைபெறும். பின்னர் யுத்தத்தின் முடிவில் அனைத்தும் முடிந்த பின்னர் உங்கள் மின்கலத்தின் சக்திக்கேற்ப நீங்கள் ஒவ்வொருவரும் அந்தஸ்தைக் கோரிக்கொள்வீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையின் குழந்தைகள். தந்தை வந்து அனைவரையும் அவர்களது மின்கலத்தை சக்தியூட்டுமாறு தூண்டுகிறார். உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம் மிக அற்புதமானது! தந்தையுடன் யோகம் செய்ய நீங்கள் முயற்சிக்கும்பொழுது மீண்டும் மீண்டும் அவரை விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அதனால் நீங்கள் பெருமளவு இழக்கின்றீர்கள். நீங்கள் விலகிச் செல்லாதிருக்க முயற்சி செய்வதற்கே தூண்டப்படுகின்றீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் முயற்சி செய்கையில் நாடகம் முடிவுக்கு வரும்பொழுதுஇ நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களது பாகமும் முடிவுக்கு வருகின்றது. ஆத்மாக்களாகிய உங்களது மாலையும் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றது. உருத்திராட்ச மாலையும் அத்துடன் விஷ்ணுவின் மாலையும் உள்ளது என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவருடைய மாலை முதலாவது இலக்கத்தில் இருக்க வேண்டும். தந்தை உலகைத் தெய்வீகமானதாக ஆக்குகின்றார். அங்கே உருத்திரரின் (அனைத்து ஆத்மாக்கள்) மாலை இருப்பது போன்றே உருண்டாவின் (விஷ்ணு) மாலையும் இருக்கின்றது. பிராமணர்களின் மாலை இப்பொழுது உருவாக்கப்பட முடியாது. ஏனெனில் மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. உருத்திரரின் மாலை உருவாக்கப்பட்டதும் அது பூர்த்தியாகும். பிராமணர்களின் மாலையும் இருக்கும். ஆனால் அது இன்னமும் உருவாக்கப்படவில்லை. உண்மையில் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். சிவபாபாவின் குழந்தைகளின் மாலையும் அத்துடன் விஷ்ணுவின் மாலையும் உள்ளது. நீங்கள் பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். எனவே சிவபாபாவுக்கு ஒரு மாலையும் பிரம்மாவுக்கு ஒரு மாலையும்; தேவைப்படுகின்றன. இந்த ஞானம் முழுவதும் வரிசைக்கிரமமாக உங்கள் புத்தியில் உள்ளது. அனைவரும் இதனைச் செவிமடுக்கின்றார்கள் ஆனால் அக்கணத்திலேயே சிலருடைய காது மூலமாக அது வெளியேறிவிடுகின்றது. அவர்கள் செவிமடுப்பதில்லை. சிலர் கற்பதும் இல்லை. கடவுளே தங்களுக்குக் கற்பிக்க வந்திருக்கின்றார் என்று அவர்கள் அறியாதிருக்கின்றனர். அவர்கள் கற்பதுமில்லை. நீங்கள் இக்கல்வியைப் பெருமளவு சந்தோஷத்துடன் கற்கவேண்டும் அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் சதோபிரதான் ஆகும்வரையில் நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால் உங்களுடைய மின்கலத்தை அதாவது ஆத்மாவாகிய உங்களைச் சக்தியூட்ட வேண்டும். உங்கள் மின்கலம் முற்றிலும் சக்தியிழக்கும் வகையில் நீங்கள் கவனயீனம் ஆகாதீர்கள்.

2. விசேடமான அன்புக் குழந்தை ஆகுவதற்கு வீட்டையும் தந்தையையும் நேசிக்க வேண்டும். இந்த ஞானம் மற்றும யோகத்தின் மூலம் போதையடைந்திருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துபவற்றை உங்களுடைய சகோதரர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையை உங்களின் உலகமாக்கி அந்த ஒருவரால் கவரப்பட்டிருப்பதன் மூலம் எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபடுவீர்களாக.

நீங்கள் வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு உரியவதாக இருக்கும் அனுபவத்தில் சதா இருக்க வேண்டும். ‘ஒரேயொரு பாபாவே எனது உலகம் வேறெந்தக் கவர்ச்சிகளும் இல்லை வேறெந்த கர்ம பந்தனமும் இல்லை’. உங்களின் பலவீனமான சம்ஸ்காரங்களின் பந்தனம் எதுவும் இல்லாதிருக்க வேண்டும். எவரின் மீதும் ‘எனது’ என்ற ஏதாவது உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கு கோபமோ அல்லது அகங்காரமோ இருக்க முடியும். அதுவும் ஒரு கர்ம பந்தனமே. எவ்வாறாயினும் பாபா உங்களின் உலகமாக இருக்கும்போது இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கும்போது ‘எனது எனது’ என்ற அனைத்தும் ‘எனது பாபா’ என்பதற்குள் அமிழ்ந்து விடும். நீங்கள் இலகுவாகக் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சுலோகம்:
எல்லையற்ற மனோபாவத்தையும் பார்வையையும் கொண்டவர்கள் மகாத்மா ஆவார்கள்.