07.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சங்கமயுகத்து பிராமணர்கள் என்பதை நினைவு செய்யும்பொழுது, சத்தியயுகத்து மரங்களைப் பார்க்க ஆரம்பித்து, எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள்.
கேள்வி:
இந்த ஞானத்தில் மிகவும் ஆர்வமாக உள்ள குழந்தைகளை வெளிக்காட்டுவது எது?பதில்:
அவர்கள் தங்களுக்கிடையில் ஞானத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். மற்றவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதில்லை. அவர்கள் ஏகாந்தத்தில் ஞானக்கடலைக் கடைவார்கள்.கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ள, இவ்வுலக நாடகத்தின் இரகசியம் என்ன?பதில்:
இந்நாடகத்தில், சிவபாபாவைத் தவிர வேறு எவரும் நிரந்தரமானவர்கள் கிடையாது. இப்பழைய உலகின் ஆத்மாக்களைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்வதற்கு யாரோ ஒருவர் தேவைப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே நாடகத்தின் இந்த இரகசியத்தை அறிவீர்கள்.ஓம் சாந்தி.
தந்தை அதிமங்களகரமான சங்கமயுகத்தில் வந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார். நீங்கள் பிராமணர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்களை பிராமணர்கள் என்று கருதுகிறீர்களா அல்லது இதையும்கூட நீங்கள் மறந்து விடுகிறீர்களா? பிராமணர்கள் ஒருபொழுதும் தங்கள் குலத்தை மறப்பதில்லை. ஆகவே நீங்கள் பிராமணர்கள் என்பதையும் நினைவுசெய்ய வேண்டும். இந்த ஒரு விடயத்தையேனும் நீங்கள் நினைவு செய்தால், உங்கள் படகு அக்கரை சேர இயலும். நீங்கள் சங்கமயுகத்தில் செவிமடுக்கின்ற புதிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இதுவே ஞானக் கடலைக் கடைதல் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ரூப் பசந்த் (ஞான மழையைப் பொழிகின்ற யோக சொரூபம்) ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதாலும் நிரப்பப்பட்டுள்ளதால், அந்த இரத்தினங்கள் மட்டுமே வெளிப்பட வேண்டும். நீங்கள் சங்கம யுகத்து பிராமணர்கள் என்பதை நினைவுசெய்ய வேண்டும். உங்களிற் சிலர் இதையேனும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் சங்கமயுகத்து பிராமணர்கள் என்பதை நினைவு செய்யும்பொழுது, சத்தியயுகத்து மரங்களைப் பார்க்க ஆரம்பித்து எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும் அனைத்து விடயங்களையும் உங்களுக்குள் மீட்டல் செய்யுங்கள். இப்பொழுது நாங்கள் சங்கம யுகத்தில் இருப்பதை உங்களைத் தவிர எவரும் அறியமாட்டார்கள். சங்கம யுகத்துக் கல்விக்கு அவகாசம் எடுக்கிறது. இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான, அதாவது, நரகவாசியில் இருந்து சுவர்க்கவாசியாக மாறுவதற்கான ஒரேயொரு கல்வி ஆகும். நீங்கள் தேவர்களாக, அதாவது சுவர்க்கவாசிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவு செய்வதால், சந்தோஷமாக இருப்பீர்கள். தங்களை சங்கமயுகத்தில் வசிப்பவர்களாகக் கருதுபவர்கள் மட்டுமே, சுவர்க்கவாசிகளாக முடியும். முன்னர், நீங்கள் நரகவாசிகளாக இருந்து அழுக்கான செயல்களைச் செய்தபோது, உங்கள் ஸ்திதி முழுமையாகவே சீரழிந்திருந்தது. இப்பொழுது நீங்கள் அவை அனைத்தையும் செய்வதை நிறுத்தவேண்டும். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக, அதாவது சுவர்க்கவாசிகளாக மாறவேண்டும். ஒருவருடைய மனைவி இறந்து, நீங்கள் அவளுடைய கணவனிடம், “எங்கே உங்கள் மனைவி?” என்று வினவும்பொழுது, “அவள் சுவர்க்கவாசி ஆகிவிட்டாள்” என்று அவர் கூறுவார். ஆனால் சுவர்க்கம் என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். அவள் சுவர்க்கவாசி ஆகியிருப்பின், அவர் சந்தோஷமடைய வேண்டுமல்லவா! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் பற்றி அறிந்து கொள்கிறீர்கள். இதைப் பற்றி உள்ளார்ந்தமாகச் சிந்தியுங்கள்: இப்பொழுது நாங்கள் சங்கமயுகத்தில் இருப்பதுடன் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருகிறோம். மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தொடர்ந்தும் கூறுங்கள். நீங்கள் இதை மறக்காமல் இருந்தாலும், மாயை உங்களை மறக்க வைத்து, உங்களை முற்றிலும் கலியுகத்தவர்கள் ஆக்குகிறாள். உங்கள் நடத்தை முற்றிலும் கலியுகத்துக்கு உரியதாக ஆகும்பொழுது, உங்கள் சந்தோஷக் கலை ஸ்திரமாக இருக்காது. உங்கள் முகம் ஒரு பிரேதத்தினுடையதைப் போல் ஆகிவிடுகிறது. தந்தை கூறுகிறார்: காமச்சிதையில் அமர்ந்ததால், அனைவரும் எரிகின்ற பிரேதத்தைப் போன்று ஆகிவிட்டார்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதால், அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபியரிடம் கேளுங்கள். உங்கள் சொந்த இதயத்தைக் கேளுங்கள்: நான் அந்த அனுபவத்தில் நிலைத்திருக்கிறேனா? நீங்கள் இறை பணியில் இருக்கிறீர்கள். இந்த இறை பணியில் நீங்கள் புரிகின்ற பணி என்ன? அனைத்துக்கும் முதலில், நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகவும் பின்னர் பிராமணர்களிலிருந்து தேவர்களாகவும் மாறுகிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்து விடாதீர்கள்! தாங்;கள் பிராமணர்கள் என்று ஏனைய லௌகீக பிராமணர்கள் விரைவிலேயே கூறிவிடுகிறார்கள். அந்த பிராமணர்கள் கருப்பையின் மூலம் பிறக்கிறார்கள், நீங்களோ வாய்வழித் தோன்றல்களான குழந்தைகள் ஆவீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கு மகத்தான போதை இருக்கவேண்டும். பிரம்மாபோஜனம் நினைவுகூரப்பட்டு வருகிறது. நீங்கள் மக்களுக்கு பிரம்மா போஜனத்தை உண்ணக்; கொடுக்கும்பொழுது, தாங்கள் தூய பிராமணர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்கிறோம் என்று அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். நீங்கள் தூய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தூய்மையற்ற எதையும் செய்யக்கூடாது. இதற்குக் காலம் எடுக்கிறது. தாங்கள் பிறப்பெடுத்த கணத்திலேயே எவரும் இவ்வாறு ஆகுவதில்லை. “ஒரு விநாடியில் ஜீவன் முக்தி” எனும் கூற்று உள்ளது. நீங்கள் பிறப்பு எடுத்தவுடனேயே உங்களுடைய தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இவரே பிரஜாபிதா பிரம்மா எனவும் பிரம்மா, சிவனின் குழந்தை எனவும் நீங்கள் இனங்கண்டு கூறும்பொழுது, உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கும்போது, நீங்கள் ஒரு வாரிசு ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், பின்னர் நீங்கள் எவ்விதமான தவறான செயலைப் புரிந்தாலும், மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியிருக்கும். மக்கள் எவ்வாறு தங்களைக் காசியில் அர்ப்பணிக்கிறார்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தண்டனையை அனுபவம் செய்யும்பொழுது, அவர்களின் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. அவர்கள் முக்தி அடைவதற்காக கிணற்றினுள் குதிக்கிறார்கள். இங்கு அதுபோன்று எதுவுமே கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இது மிக இலகுவானது! எவ்வாறாயினும், குழந்தைகள் மாயையால் பிடிக்கப்பட்டு, ஒரு சுழலில் போடப்படுகிறார்கள். உங்கள் யுத்தம் மிக நீண்ட காலமாக நீடிக்கிறது. பௌதீகச் சேனைகளின் யுத்தம் இந்தளவு காலத்துக்கு நடைபெற மாட்டாது. நீங்கள் பாபாவிடம் வந்த கணத்திலேயே உங்களுடைய யுத்தம் ஆரம்பித்தது. பழையவர்கள் அதிகளவு போராடியுள்ளனர். இது புதிதாக வருபவர்களுக்கும் தொடரும். அந்த யுத்தத்தில் படைவீரர்கள் மரணிக்கும்பொழுது, அவர்களுக்குப் பதிலாக ஏனையவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இங்கும் சிலர் மரணிக்கிறார்கள், ஆனால் இன்னமும் எங்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. விருட்சம் பெரிதாக வளரவேண்டும். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: நான் உங்கள் தந்தையும், உங்கள் பரம ஆசிரியரும், சற்குருவும் ஆவேன் என்பதை நினைவுசெய்யுங்கள். ‘தந்தை, ஆசிரியர், அல்லது சற்குரு’ என்று நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்க மாட்டீர்கள். நீங்கள் அனைவருக்கும் நன்மை அளிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கவேண்டும். மகாராத்திக் குழந்தைகள் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கும்பொழுது அதிக சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் அழைக்கப்படும் இடங்களுக்கெல்லாம் ஓடிச் செல்கிறார்கள். கண்காட்சிகளில் சேவை செய்வதற்கும் சேவைக் குழுக்களில் இருப்பதற்கும் சிறந்த குழந்தைகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக, நீங்கள் இறை பணியில் இருக்கும் சிறந்த குழந்தைகள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். மிக நன்றாகச் சேவை செய்பவர்களையிட்டு தந்தையும் பூரிப்படைகிறார். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் சேவை செய்கிறேனா? இறை தந்தையின் சேவையில் இருப்பதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். தந்தையாகிய கடவுள் செய்யும் சேவை என்ன? அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுங்கள்: மன்மனாபவ! உங்கள் புத்தியில் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. நீங்கள் சுயதரிதனச் சக்கரதாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆகவே நீங்கள் இவை அனைத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஒருபொழுதும் சுயதரிதனச் சக்கரம் சுழல்வதை நிறுத்துவதில்லை. நீங்கள் உயிருள்ள கலங்கரை விளக்கங்கள். உங்களுக்கு அதிகளவில் புகழ் உள்ளது. உங்களுக்கு எல்லையற்ற தந்தையின் புகழ் தெரியும். அவரே தூய்மை ஆக்குபவராகிய, ஞானக்கடல் ஆவார். அவரே கீதையை உரைத்தவர் ஆவார். அவருக்கு ஞானத்தின் மூலமும் யோக சக்தி மூலமும் செய்யப்பட வேண்டிய பணி உள்ளது. யோக சக்தி அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது. இப்பொழுது நீங்கள் கற்கின்ற, பாரதத்தின் புராதன யோகம் பிரபல்யமானது. சந்நியாசிகள் ஹத்தயோகிகள் ஆவர்;. அவர்களால் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க முடியாது. தந்தை ஒருவர் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த ஞானத்தினூடாக பிறவி எடுக்கிறீர்கள். கீதையே தாயும் தந்தையும் என்று கூறப்படுகிறது. தாயும் தந்தையும் உள்ளனர். சிவபாபாவின் குழந்தைகளாக இருப்பதுடன் உங்களுக்குத் தாயும் தந்தையும் தேவைப்படுகின்றனர். மக்கள் இதைப் பாடினாலும், அவர்கள் எதையும் விளங்கிக் கொள்வதில்லை. இதன் அர்த்தம் மிக ஆழமானது என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். “தந்தையாகிய கடவுளே” என்று கூறப்படுகிறது, பின்னர் ஏன் நீங்கள் தாயும் தந்தையும் என்று கூறுகிறீர்கள்? இங்கு சரஸ்வதி இருப்பினும், உண்மையில் பிரம்மபுத்திராவே உண்மையான தாய் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். கடலும் பிரம்மபுத்திராவும் உள்ளன. இந்த இரண்டினதும் சங்கமமே முதல் சங்கமம் ஆகும். பாபா இவரில் அவதரிக்கிறார். இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். உங்களிற் பலர் இவ்விடயங்களை உங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை. உங்களிற் பலருக்கு அவற்றைப் பற்றிச் சிந்திக்க இயலாதுள்ளது. அவர்கள் ஒரு குறைந்த அந்தஸ்தையே அடைவார்கள். ஆகவே அவர்களுக்கு மிகவும் குறுகிய புத்திகளே உள்ளன. இப்பொழுதும் தந்தை அவர்களுக்கு இன்னமும் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இது இலகுவானது, இல்லையா? பரமாத்மாவே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை ஆவார். அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே பிரதான விடயமாகும். மந்த புத்தி உடையவர்களால் இந்த ஆழமான விடயங்களை விளங்கிக் கொள்ள முடியாது. இதனாலேயே கீதை கூறுகிறது: மன்மனாபவ! நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், தாங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுவதாகவும் பாபாவுக்கு எழுதுகின்ற எல்லோரும் கூறுகிறார்கள். ஏதோவொன்று அவர்களைத் தோற்கடிக்கிறது. இது மாயைக்கும் கடவுளின் குழந்தைகளான உங்களுக்கும்; இடையிலான ஒரு குத்துச்சண்டை ஆகும். வேறு எவருக்கும் இது பற்றித் தெரியாது. உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு நீங்கள் மாயையை வெற்றிகொள்ள வேண்டும். முதலில், நீங்கள் கர்ம உறவு முறைகளுக்குள் வந்தீர்கள். அரைக்கல்பத்தின் பின்னர், நீங்கள் படிப்படியாக கர்ம பந்தனங்களைக் கொண்டிருக்க ஆரம்பித்தீர்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் தூய ஆத்மாக்களாக இருந்தபோது, உங்கள் செயல்களில் சந்தோஷத்துக்குரிய அல்லது துன்பத்துக்குரிய பந்தனம் இருக்கவில்லை. நீங்கள் சந்தோஷ உறவு முறைகளுக்குள் வந்தீர்கள். நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளில் இருந்தீர்கள் எனவும் பின்னர் துன்பம் நிறைந்த உறவுமுறையைக் கொண்டிருந்தீர்கள் எனவும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் நிச்சயமாக சந்தோஷ உலகத்துக்குச் செல்லப்போகிறீர்கள். உலகம் புதியதாகவும், நீங்கள் தூய்மையாகவும் இருந்தபொழுது, நீங்கள் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது இந்தப் பழைய உலகில், தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகின்றீர்கள். ஆகவே, அதை நினைவுசெய்யுங்கள்! தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும், நீங்கள் திரும்பவும் என்னுடன் வீட்டுக்கு வருவீர்கள். நீங்கள் உங்களுடைய மௌன தாமத்தினூடாக உங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்லவுள்ளீர்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தூய்மை ஆக்குபவரான நானே, உங்களைத் தூய்மை ஆக்குவதால், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்செல்ல முடியும். இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள்: இப்பொழுது சக்கரம் ஒரு முடிவுக்கு வருகிறது. நாங்கள் இத்தனை பிறவிகளை எடுத்துள்ளோம். தூய்மை அற்றவர்களிலிருந்து எங்களைத் தூய்மை ஆக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்துவிட்டார். யோக சக்தியினால் மாத்திரமே நாங்கள் தூய்மையாக முடியும். யோக சக்தி மிகவும் பிரபல்யமானது. தந்தையால் மாத்திரமே உங்களுக்கு இதைக் கற்பிக்க முடியும். இதற்காக உங்கள் சரீரத்தின் மூலம் நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. இவ்விடயங்களை நாள் முழுவதும் கடையுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, உங்கள் புத்தியில் இவ்விடயங்களைக் கொண்டிருங்கள். நீங்கள் வீட்டின் கூரையில் அதிகளவு ஏகாந்தத்தைக் கொண்டிருக்க முடியும். இதில் பயம் எனும் கேள்வியே இருக்;கக்கூடாது. முன்னர், முரளியைச் செவிமடுத்த பின்னர், நீங்கள்; கேட்டவற்றைக் கடைவதற்கு மலைகளுக்குச் சென்றீர்கள். ஞானத்தில் ஆர்வம் உடையவர்கள், தங்களுக்கிடையில் ஞான விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்களிடம் ஞானம் இல்லாவிட்டால், அவர்கள் மற்றவர்களைப் பற்றி அரட்டையடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். உங்கள் கண்காட்சிகளில் பல்வேறு மக்களுக்கும் நீங்கள் இப்பாதையைக் காண்பிக்க முடியும். உங்கள் தர்மம் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஏனைய சமயத்தவர்களுக்கு அவர்கள் ஒரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும் என்பதை விளங்கப்படுத்த வேண்டும். அவர் ஒரு முஸ்லிம் அல்லது நீங்கள் இவ்வாறானவர் என நீங்கள் சிந்திக்கக்கூடாது. இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா ஆவீர்கள், நீங்கள் மற்றவரை ஓர் ஆத்மாவாகப் பார்க்க வேண்டும். அந்த ஆத்மாவுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதை உங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். ஆகவே, இதைப் பயிற்சி செய்யுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான், எனது சகோதர ஆத்மாவுக்கு விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் எங்களுடைய சகோதரர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் ஆத்மாக்களாக எங்களைக் கருதுகிறோம்: நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வரவேண்டும். நீங்கள் நீண்ட காலத்துக்கு முன்னர் அந்த சாந்திதாமத்தை விட்டுப் பிரிந்துசென்றீPர்கள். இங்கு அதிகளவு துன்பமும் அமைதியின்மையும் உள்ளன. தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதைப் பயிற்சி செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் பெயர்களையும், ரூபங்களையும், சரீரங்கள் போன்றவற்றையும் மறப்பீர்கள். நீங்கள் ஏன் இன்ன இன்னார் ஒரு முஸ்லிம் என்று எண்ண வேண்டும்? அவரை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு அவருக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அந்த ஆத்மா நல்லவரா அல்லது தீயவரா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தீய ஆதிக்கம் உள்ளவர்களிலிருந்து விலகி இருக்குமாறு ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். இங்கு உங்கள் பாகங்களை நடிப்பதை நீங்கள் இப்பொழுது முடித்துவிட்டதால், வீட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். நிச்சயமாக நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது தூய்மை ஆகுவதால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். மக்கள் வார்த்தைகளில் ஒரு சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்களும் ஒரு சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். தந்தை உங்களுக்கு விவேகமான வழிமுறைகளைக் கொடுக்கிறார். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள். நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்போது, சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். சகோதர, சகோதரிகள் விகாரத்தில் ஈடுபடக் கூடாது. தந்தையை நினைவு செய்து தூய்மையாகுவதால், நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் எழுந்து உஷாராக இருக்கவேண்டும். நீங்கள் உஷாராக இருக்குமளவுக்கு, அதிகளவை அடைவீர்கள். இலாபமும் நட்டமும் உள்ளன. அரைக் கல்பத்துக்கு இலாபமும் (வரவு) மற்றைய அரைக் கல்பத்துக்கு இராவண இராச்சியத்தில் நட்டமும் (செலவு) உள்ளது. ஒரு கணக்கு உள்ளது: வெற்றியானது இலாபமும் தோல்வியானது நட்டமும் ஆகும். ஆகவே, உங்களைச் சோதியுங்கள். தந்தையை நினைவுசெய்வதால், குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். மற்றவர்கள் இப்பாடலைப் பாடுகிறார்கள், ஆனால் அதைப் பற்றிய ஒரு விடயத்தையேனும் அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. புரிந்து கொள்ளாமலேயே அவர்கள் அனைத்து விடயங்களையும் செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வழிபாடு போன்றவற்றைச் செய்வதில்லை, ஆனால் நீங்கள் புகழ் பாடுகிறீர்கள். அந்த ஒரு தந்தையின் புகழே கலப்படமற்றது. தந்தையே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் கேள்விகள் எதனையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் விழிப்புணர்வில் சக்கரம் இருக்கட்டும், நீங்கள் எவ்வாறு மாயையை வெற்றி கொள்கிறீர்கள் என்பதையும் பின்னர் எவ்வாறு நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்பட்டால், நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்வீர்கள். தந்தை கூறுகிறார்: சற்குருவை அவதூறு செய்வது இடம்பெற அனுமதிக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெற முடியாதிருக்கும். இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற உண்மைக்கதை. வேறு எவருக்கும் இதைப் பற்றித் தெரியாது. அவர்கள் சத்திய நாராயணனின் கதையிலிருந்து கீதையின் கதையை வேறாக்கி விட்டார்கள். இக்கீதை ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்காக உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகும் கதையைக் கூறுகிறேன். இது கீதை எனவும் அமரத்துவக் கதை எனவும் அழைக்கப்படுகிறது. தந்தை மாத்திரமே உங்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுக்கிறார். நீங்கள் தேவர்கள் ஆகுவதால், உங்களிடம் அந்த நற்குணங்களும் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வுலகில் எதுவுமே சதா காலமும் நீடிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா மாத்திரமே நிரந்தரமானவர் ஆவார். ஏனைய அனைவரும் கீழிறங்கி வரவேண்டும். அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் இச்சங்கமயுகத்தில் மட்டுமே வருகிறார். இப்பழைய உலக ஆத்மாக்களைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்வதற்கு உங்களுக்கு யாரோ ஒருவர் தேவைப்படுவார். இவை அனைத்தும் நாடகத்தின் இரகசியங்கள் ஆகும். தந்தை வந்து எங்களைத் தூய்மை ஆக்குகிறார். சரீரதாரியைக் கடவுள் என்று அழைக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: தற்பொழுது, ஆத்மாக்கள் அனைவரின் இறக்கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் பறக்க முடியாதுள்ளது. உங்களுக்கு ஞானம், யோகம் ஆகிய இறக்கைகளைக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார். யோகசக்தி மூலம் உங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டு, நீங்கள் பின்னர் அந்தப் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அனைத்துக்கும் முதலில், நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். ஆகவே தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருங்கள். சிறந்த அட்டவணையை வைத்திருப்பவர்களே தங்கள் அட்டவணையை எழுதுவதுடன், பெரும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வார்கள். நீங்கள் ஏனைய அனைத்து முயற்சிகளையும் செய்து, ஓர் அட்டவணையை எழுதாவிட்டால், உங்களில் யோகசக்தியை நிரப்புவதற்கு உங்களால் முடியாது. ஓர் அட்டவணை வைத்திருப்பதால், அதிக இலாபம் அடைகிறீர்கள். இந்த அட்டவணையுடன், நீங்கள் ஞானக் கருத்துக்களையும் எழுதிக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள் ஆகிய இரண்டுக்குமாக ஓர் அட்டவணையை எழுதவேண்டும். இறுதியில், வேறு எதுவுமே நினைவு செய்யப்படாதவாறு, அதிக முயற்சியை நீங்கள் செய்யவேண்டும். இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதற்கு முயற்சி செய்வதனால், நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகுகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளான உங்களுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் இருந்து ஞானக்கடலைக் கடையுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மாயையை வென்று, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையுங்கள்.2. எவருக்கும் ஞானத்தைக் கொடுக்கையில், உங்கள் புத்தி விழிப்பாக இருக்கவேண்டும்: இந்த ஆத்மாவாகிய நான், எனது சகோதர ஆத்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். அனைவரின் பெயரையும், ரூபத்தையும், சரீரத்தையும் மறந்துவிடுங்கள். தூய்மைக்கான சத்தியப் பிரமாணம் செய்து, தூய்மை ஆகுங்கள். தூய உலகின் அதிபதி ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுக்காக எந்தவிதமான ஆசையையும் கொண்டிராதவராகி, தந்தையைப் போல் மற்றவர்களை ஈடேற்றுகின்ற அத்துடன் நன்மை செய்கின்ற ஒரு சதா தானி ஆகுவீர்களாக.தந்தை பிரம்மா சேவை செய்வதற்காகத் தனது சொந்த நேரத்தையும் கொடுத்தார். அவர் பணிவாக இருந்து, குழந்தைகளுக்கு மதிப்பளித்தார். சேவை செய்வதனால் ஏற்படுகின்ற பெயரையும் அவர் துறந்தார். அவர் தனது பெயர், மரியாதை, கௌரவத்தினூடாக எல்லோரையும் ஈடேற்றுபவராகவும் நன்மை செய்பவராகவும் ஆகினார். அவர் தனது சொந்தப் பெயரைத் துறந்து, மற்றவர்களின் பெயரைப் பெருமைப்படுத்தினார். அவர் எப்போதும் தன்னை ஒரு சேவையாளராகக் கருதி, குழந்தைகளைத் தனது அதிபதிகள் ஆக்கினார். தனது சந்தோஷம், குழந்தைகளின் சந்தோஷத்தில் தங்கியிருப்பதாகவே அவர் கருதினார். தந்தையைப் போல் ஆசைகளின் அறிவே அற்றவராக இருத்தல் என்றால், ஒரு போதையுள்ள பிச்சைக்காரனாக, எல்லோரையும் ஈடேற்றுகின்ற, எல்லோருக்கும் நன்மை செய்கின்ற சதா தானியாக இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் இப்படிச் செய்தால், உலக நன்மை என்ற பணியில் துரித கதி ஏற்படும். சகல வழக்குகளும் கதைகளும் (சூழ்நிலைகள்) முடிவிற்கு வந்துவிடும்.
சுலோகம்:
இந்த ஞானம், நற்குணங்கள், தாரணையில் கடலாக (சிந்து) இருங்கள். உங்களின் விழிப்புணர்வில் ஒரு புள்ளியாக (பிந்து) இருங்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதினால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
இப்போது, குழந்தைகளான நீங்கள் உங்களின் மேன்மையான, சக்திவாய்ந்த எண்ணங்களால் சகாஷ் வழங்க வேண்டும். பலவீனமானவர்களுக்கு சக்தியைக் கொடுங்கள். உங்களின் சொந்த முயற்சிகளுக்கான நேரத்தை, மற்றவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதற்குப் பயன்படுத்துங்கள். மற்றவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதெனில், உங்களுக்காகச் சேமிப்பதாகும். இப்போது, நீங்கள் சத்கதியை எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் சத்கதியைக் கொடுக்கின்ற அலையைப் பரவச் செய்யுங்கள். கொடுப்பதில் பெறுவது அடங்கியுள்ளது.