07.02.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அமர்ந்திருக்கும்போதும், நடமாடும்போதும், உலாவித்திரியும் போதும், நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இந்த ஞானமும், யோகமுமே இரண்டு பிரதான பாடங்களாகும். யோகம் என்றால் நினைவு செய்தலாகும்.
கேள்வி:
திறமையான குழந்தைகள் எந்த வார்த்தைகளை ஒருபோதும் கூறுவதில்லை?பதில்:
“எங்களுக்கு யோகம் கற்பியுங்கள்!” என்று திறமையான குழந்தைகள் ஒருபோதும் கூறமாட்டார்கள். தனது தந்தையை நினைவுசெய்வது எவ்வாறு என ஒருவர் கற்க வேண்டுமா? இது நீங்கள் கற்று, பின்னர் ஏனையோருக்கும் கற்பிக்கின்ற ஒரு பாடசாலையாகும். நினைவுசெய்யும் பொருட்டு குறிப்பாக அமர வேண்டும் என்றில்லை. செயல்களைச் செய்யும் போதும் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய உங்களுடன் ஆன்மீகத் தந்தை இந்த இரதத்தின் மூலம் பேசுகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் அவரின் குழந்தைகள் என்பதால், பாபாவின் நிளைவில் எவ்வாறு அமர்வது என்று கற்பியுங்கள் என்று தந்தையையோ அல்லது வேறு சகோதர சகோதரியையோ கேட்பது தவறாகும். நீங்கள் இன்னமும் சிறு குழந்தைகள் அல்ல. ஆத்மாவே பிரதான விடயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மா அழிவற்றவர், ஆனால் ஒருவரின் சரீரம் அழியக்கூடியது. ஆத்மாவே மகத்தானவர். தான் ஓர் ஆத்மா, ஆத்மா தனது சரீரத்தின் மூலம் பேசுகின்றார் என்ற ஞானம் அறியாமைப் பாதையில் எவரிடமும் இருக்கவில்லை. அவர்கள் சரீர உணர்வுடையவர்களாகி, “நான் இதைச் செய்கின்றேன்” எனக் கூறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். இச்சரீரத்தின் மூலம் நான் பேசுவதுடன் செயல்களையும் செய்கின்றேன் என ஆத்மாக்களே கூறுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் ஆண்கள் ஆவார்கள். “எவ்வாறு யோகத்தில் இருப்பது என எங்களுக்குக் கற்பியுங்கள்!” எனும் வார்த்தைகளை நான் பலமுறை கேட்கிறேன் எனத் தந்தை கூறுகின்றார். அவர்கள் இதை அடிக்கடி கூறுகிறார்கள். நீங்கள் அமர்ந்திருக்கையில் இன்னுமொருவர் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கும்போது, நீங்களும் அவரும், பாபாவின் நினைவில் இருக்கும் இலக்கையே கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடசாலை அந்த நோக்கத்திற்காக மாத்திரம் இல்லை. இந்தப் பாடசாலை கற்பதற்காக உள்ளது. நீங்கள் இங்கே வருவது வெறுமனே நினைவில் அமர்ந்திருப்பதற்காக மாத்திரம் அல்ல. நீங்கள் இருக்கும்போதும் நடக்கும்போதும் உலாவித் திரியும் போதும் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இந்த நினைவைக் கொண்டிருப்பதற்கு விசேடமாக அமர்ந்திருக்க வேண்டிய தேவை எதுவும் உங்களுக்கு இல்லை. சிலர் இராமரின் நாமத்தை உச்சரியுங்கள் எனப் பிறருக்குக் கூறுகிறார்கள். இராம நாமத்தை உச்சரிக்காது அவரை நினைவு செய்வது சாத்தியமா? நீங்கள் நடக்கும் போதும், உலாவித்திரியும் போதும் கூட அவரை நினைவு செய்ய முடியும். கருமங்கள் ஆற்றும் போதும் நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். காதலியும், அன்பிற்கினியவரும் ஒருவரையொருவர் நினைவு செய்வதற்காக குறிப்பாக அமர்ந்திருப்பதில்லை. நீங்கள் அனைத்தையும் செய்வதுடன் உங்கள் தொழில் போன்றவற்றையும் செய்யலாம். அவர்கள் அனைத்தையும் செய்யும்போது தங்கள் அன்பிற்கினியவரை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நினைவு செய்வதற்காக எங்கேயாவது சென்று, குறிப்பாக அமர்கிறார்கள் என்றில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பாடல்கள் பாடும்போதும், செய்யுள்களை ஒப்புவிக்கும் போதும் பாபா கூறுகின்றார்: “அவை பக்தி மார்க்கத்திற்கு உரியவை”. அவர்கள் கூறுகிறார்கள்: “ஓ அமைதியை அருள்பவரே!” ஆதலால் அவர்கள் நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணரை அன்றி, பரமாத்மாவையே நினைவுசெய்ய வேண்டும். நாடகத்திற்கேற்ப, ஆத்மாக்கள் அமைதியற்றவர்கள் ஆகி விட்டதால், அவர்கள் தந்தையை அழைக்கிறார்கள். ஏனெனில் அவரே அமைதிக்கடலும், சந்தோஷக்கடலும், ஞானக்கடலும் ஆவார். ஞானமும், யோகமுமே இரு பிரதான விடயங்கள். யோகம் என்பது நினைவு என அர்த்தப்படும். இராஜயோகம் என்றழைக்கப்படும் உங்களுடைய யோகத்திலிருந்து அவர்களுடைய ஹத்தயோகம் முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தையிடமிருந்து தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்கிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே, உங்களுக்குள்ள பெரும் சந்தோஷம் ஆகும். எல்லாவற்றிக்கும் முதலில் கடவுளின் மிகச்சரியான அறிமுகம் உங்களுக்கு இருக்க வேண்டும். ஓர் ஆத்மா நட்சத்திரத்தைப் போன்றிருப்பதைப் போன்றே, கடவுளும் ஒரு நட்சத்திரம் போன்றவர் என்பதை எவரும் அறியாமல் இருக்கிறார்கள். அதாவது அவரும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவர் பரமாத்மா. அவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் ஒருபோதும் மறுபிறவி எடுப்பதில்லை. அவர் ஒருபோதும் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை. அவர் பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்கு அப்பாற்பட்டவர்; அவரே வந்து, எவ்வாறு தான் வருகிறார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். திரிமூர்த்திக்குப் பாரதத்தில் புகழ் உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரின் படத்தையும் அவர்கள் காட்டுகின்றார்கள். “பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்” என அவர்கள் கூறினாலும், அவர்கள் அதிமேலான தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் திரிமூர்த்தியின் உருவத்தையே வைத்திருக்கின்றார்கள். எனினும் சிவனே நிச்சயமாக அவர்களுக்கு மேலாக உள்ளார் என்பதனால் சிவனே அவர்களைப் படைப்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பிடமிருந்து எவருமே ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் பிரம்மாவிடமிருந்து எந்த ஆஸ்தியையும் பெறுவதில்லை என்பதையும் அறிந்துள்ளீர்கள். விஷ்ணு வைரங்களாலும், இரத்தினங்களாலும் ஆன ஒரு கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளார். ஒரு சதமேனும் பெறுமதியற்றிருந்த நீங்கள் இப்போது சிவபாபாவினால் ஒரு பவுண்ட் (ஆங்கில நாணயம்) பெறுமதி வாய்ந்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். சிவனுக்கென ஒரு வடிவம் இல்லாததால் அனைத்தும் பொய்யாகி விட்டது. பரமாத்மாவாகிய பரமதந்தையே அதிமேலானவர், இது அவரது படைப்பு. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். நீங்கள் அங்கிருக்கும்போது, உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டதைப் புரிந்து கொள்வீர்களாயினும், எல்லையற்ற தந்தையிடமிருந்தே அந்த வெகுமதி பெறப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது. அதனை நீங்கள் இப்பொழுதே அறிந்து கொள்கிறீர்கள். இக்காலத்திற்கான உங்களின் வருமானம் 21 பிறவிகளுக்கு நீடிக்கிறது. நீங்கள் அங்கிருக்கும் போது இதைப் பற்றிய எதனையும் அறியாமல் இருப்பீர்கள். அங்கு நீங்கள் இந்த அவை எதனையும் பற்றி அறியாதவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களிடமோ சூத்திரர்களிடமோ இந்த ஞானம் இருப்பதில்லை. பிராமணர்களாகிய உங்களிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. இந்த ஞானம் ஆன்மீக ஞானமாகும். எவருக்குமே “ஆன்மீகம்” என்பதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் தத்துவ ஞானத்தின் கலாநிதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை மாத்திரமே ஆன்மீக ஞானத்தின் கலாநிதி ஆவார். தந்தை சத்திரசிகிச்சை நிபுணர் எனவும் அழைக்கப்படுகின்றார். சாதுக்களும், சந்நியாசிகளும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அல்லர். வேதங்களையும் சமயநூல்களையும் கற்பவர்கள் கலாநிதிகள் (டாக்டர் பட்டம் பெற்றவர்கள்) என அழைக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் கொடுக்கப்படுகின்ற போதிலும், உண்மையில் ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே ஆத்மாக்களுக்கு ஊசி ஏற்றுபவரான, ஆன்மீகச் சத்திரசிகிச்சை நிபுணர். அது பக்தியாகும். ஆகவே பக்தியின் கலாநிதிகளினால் சமயநூல்களின் அறிவையே கொடுக்க முடியும் என்பதையும், அதில் எவ்வித நன்மையும் இல்லை என்பதையும் நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். நீங்களே தொடர்ந்தும் கீழ் இறங்குவதால், அவர்களை எவ்வாறு கலாநிதிகள் என அழைக்க முடியும்? கலாநிதிகள் உங்களுக்குப் பயனளிக்க வேண்டும். இந்தத் தந்தை அநாதியான ஞானத்தின் சத்திரசிகிச்சை நிபுணர். நீங்கள் யோக சக்தியின் மூலம் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள்; மற்றவர்கள் எதனை அறிவார்கள்? அவர் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுகின்றார். தந்தை மாத்திரமே ஆத்மாக்களின் விகாரக் கலப்படங்கள் அனைத்தையும் அகற்றும் சக்தியுடையவர். அவராலேயே அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்குச் சற்கதியை அளிக்க முடியும். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவரான, சர்வசக்திவான். எந்த மனிதரும் சர்வசக்திவான் என அழைக்கப்பட மாட்டார். அப்படியானால் தந்தை காட்டுகின்ற சக்தி என்ன? அவர் தனது சொந்தச் சக்தியினால் அனைவருக்கும் சற்கதி அளிக்கின்றார். அவர் ஆன்மீக ஞானத்தின் கலாநிதி என அழைக்கப்படுகின்றார். தத்துவ கலாநிதிகள் என அழைக்கப்படும் பல மனிதர்கள் இருக்கின்ற போதும் ஆன்மீகக் கலாநிதி ஒரேயொருவரே உள்ளார். தந்தை இப்போது கூறுகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள். நான் உலகைத் தூய்மை ஆக்குவதற்கு வந்துள்ளேன். எனவே நீங்கள் ஏன் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள்? தூய்மை ஆகுங்கள்! தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள்! ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை கொடுத்துள்ள வழிகாட்டல்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போது, தாமரையைப் போல் தூய்மையாக இருங்கள். பிறப்பிலிருந்து தூய்மையாக இருப்பதால் நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் பல பிறவிகளாகப் பாவங்களைச் செய்து வந்ததால். இப்போது என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். தூய ஆத்மாக்கள் அசரீரி உலகில் வசிக்கின்றார்கள். தூய்மையற்ற எவருமே அங்கு செல்ல முடியாது. பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்கள் புத்தி நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். “எனது ஆசிரியரை நினைவு செய்வது எப்படி என எனக்குக் கற்பியுங்கள்” என்று ஒரு மாணவன் எப்போதாவது கூறுவானா? நினைவு செய்வதற்குக் கற்பிக்க என்ன அவசியம் இருக்கின்றது? இங்கே (கதியில்) ஒருவரும் அமர்ந்திருக்கா விட்டாலும் பரவாயில்லை. நீங்கள் உங்களின் தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்களின் தொழிலில் நாள் முழுவதும் ஈடுபடுவதால் மறந்து விடுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் இங்கே அமர வைக்கப்படுகிறீர்கள். அவர்கள் குறைந்தபட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்காவது நினைவில் இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் செய்யும்போதும் தந்தையை நினைவுசெய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அரைக் கல்பத்திற்குப் பின்னர் உங்கள் அன்பிற்கினியவரைச் சந்திக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களின் கலப்படம் அகற்றப்பட்டு, நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகும் வகையில், இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் என அவர் கூறுகின்றார். ஆகவே ஏன் நீங்கள் அவரை நினைவு செய்யக்கூடாது? திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கும் மணவாளனுக்கும் முடிச்சுப் போடப்பட்டதும், கணவனே அவளது குரு, அவளது கடவுள், அவளுக்கு அனைத்தும் என அவளுக்குக் கூறப்படுகின்றது. எனினும் அவள் தனது நண்பர்களையும் உறவினர்களையும், அவளது குரு போன்றவர்களையும் நினைவு செய்கின்றாள். அந்த நினைவு சரீரதாரிகளின் நினைவாகும். அவரோ கணவர்களுக்கு எல்லாம் கணவர் ஆவார்; நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். “எவ்வாறு ஏகாந்தமாக, யோகத்தில் இருப்பது என்ற எங்களுக்குக் கற்பியுங்கள்” எனச் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அதன்மூலம் என்ன நிகழும்? இங்கு நீங்கள் பத்து நிமிடங்களுக்கு அமர்ந்திருந்தாலும் நீங்கள் தொடர்ச்சியான நினைவில் இருந்ததாகக் கருதமாட்டீர்கள். பக்திமார்க்கத்தில் வணங்குவதற்கு அவர்கள் அமர்ந்திருக்கும் போது அவர்களது புத்தி பெருமளவு அலை பாய்கின்றது. தீவிர பக்தி செய்பவர்கள் காட்சியைப் பெறுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காட்சியைக் காண்பதில் பெரும் விருப்பம் கொண்டிருப்பதால் அவர்கள் தொடர்ந்தும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த விருப்பமான எண்ணத்தில் தங்களை மறந்து இருப்பதனால் அவர்களுக்கு ஒரு காட்சி கொடுக்கப்படுகிறது. அதுவே தீவிர பக்தி எனக் கூறப்படுகின்றது. இந்தப் பக்தி, உண்ணும்போதும், அருந்தும்போதும், ஒருவரை ஒருவர் தங்கள் எண்ணத்தில் வைத்திருக்கும் காதலர்களுக்கு இடையில் உள்ள பக்தியைப் போன்றதாகும். அதில் விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரின் சரீரத்தில் விருப்பம் கொண்டிருப்பதால் அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது. இப்போது தந்தை தன்னை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். விதையை நினைவு செய்வதன் மூலம், முழு விருட்சத்தையும், நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்பதனையும் உங்களால் நினைவு செய்யமுடியும். இது ஒரு பல்வேறு வகைப்பட்ட சமயங்களின் விருட்சமாகும். பாரதம் முன்னர் தங்க யுகமாகவும் இப்போது அது இரும்பு யுகமாகவும் உள்ளது என்பதும் உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. இந்த ஆங்கிலச் சொற்கள் மிகவும் நல்லவை. அதன் கருத்துக்களும் மிகவும் நல்லவை. ஆத்மாக்கள் தங்கம் போல் ஆகின்றனர். பின்னர் கலப்படம் கலக்கின்றது. இப்போது அவர்கள் முற்றிலும் பொய்மையானவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் இப்பொழுது இரும்பு யுகத்தவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இரும்பு யுக ஆத்மாக்களின் ஆபரணங்களும் அதேபோலாகி விட்டன. தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையாக்குபவர். ஆகவே சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! என என்னை நீங்கள் பிரார்த்தனை செய்து வந்தீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு மன்மனாபவ, மத்தியாஜிபவ எனும் வழிமுறைகளைக் கற்பிப்பதற்காக, அதாவது, சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்குக் கற்பிப்பதற்காக நான் வருகின்றேன். யோகத்தில் அதிகளவு மகிழ்ச்சி இருப்பதாகவும், ஆனால் இந்த ஞானத்தில் அந்தளவுக்கு இருப்பதில்லை எனவும் உங்களில் சிலர் கூறுகின்றீர்கள். அவர்கள் யோகத்தை மட்டும் செய்து விட்டு செல்கின்றார்கள்; அவர்கள் யோகத்தை மட்டும் விரும்புகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: “எனக்கு அமைதி மாத்திரமே வேண்டும்”. அச்சா. நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். பாபாவை நினைவு செய்வதால், நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். அதற்கு யோகம் கற்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். பலர் தங்கள் நிலையங்களுக்குச் சென்று, அரை மணித்தியாலம் அல்லது 45 நிமிடங்களுக்கு நினைவில் அமர்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: என்னைச் சிறிது நேரம் யோகத்தில் அமர விடுங்கள். அல்லது, அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, யோகத்தில் அமருவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை எங்களுக்குக் கொடுத்துள்ளார். இங்கு பாபா கூறுகின்றார்: நடந்தும், நடமாடியும் திரியும் போது நினைவில் இருங்கள். அறவே நினைவு செய்யாமல் இருப்பதை விட நினைவு செய்வதற்கு அமர்ந்திருப்பது நல்லது. நீங்கள் இதனைச் செய்வதற்கு பாபா தடை செய்யவில்லை. நீங்கள் விரும்பினால் இரவு முழுவதும் அமர்ந்திருக்கலாம். ஆனால் பாபாவை இரவில் மாத்திரம் நினைவு செய்யும் பழக்கத்தை உருவாக்கி விடக்கூடாது. நீங்கள் அனைத்தையும் செய்யும்போதும் பாபாவின் நினைவில் இருக்கும் பழக்கத்தை பதித்துக் கொள்ள வேண்டும். இதில் மாத்திரமே நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். புத்தி மீண்டும் மீண்டும் வேறு திசைகளை நோக்கி ஓடுகின்றது. பக்தி மார்க்கத்திலும் அவர்கள் புத்தி அலைபாய்வதால் அவர்கள் தங்களைத் தாங்களே கிள்ளிக் கொள்கின்றார்கள். இங்கு பாபா உண்மையான பக்தர்களைப் பற்றிப் பேசுகின்றார். ஆதலால் இங்கேயும் நீங்கள் உங்களுடன் இவ்வாறு பேச வேண்டும். “நான் ஏன் பாபாவை நினைவு செய்யவில்லை? பாபாவை நினைவு செய்யாமல் எப்படி நான் உலகின் அதிபதி ஆகுவது?” அந்தக் காதலர்கள் ஒருவர் மற்றவரின் பெயரிலும் வடிவத்திலும் அகப்பட்டுள்ளனர். இங்கேயோ நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். “ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தில் இருந்து வேறுபட்டவர்”. நீங்கள் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுது, செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது. உங்களில் பலர் ஒரு காட்சியைப் பெற விரும்புவதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் எதனுடைய காட்சியைப் பெறுவீர்கள்? ஒரு புள்ளியினுடையதை. அச்சா. சிலர் ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சியைப் பெற விரும்புவதாகக் கூறுகின்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவங்கள் உள்ளன. உயிரற்றதாக உள்ளதை உயிருள்ள வடிவத்தில் நீங்கள் காண்பீர்கள். அதில் என்ன நன்மை உள்ளது? காட்சிகளைக் காண்பதால் நன்மை இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போது, தூய்மை ஆகுவீர்கள். நாராயணனின் காட்சிகளைக் காண்பதினால் நீங்கள் நாராயணனைப் போல் ஆகுவதில்லை. உங்கள் இலக்கும் இலட்சியமும் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போலாகுவது என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும் கற்காது உங்களால் அவர்களைப் போலாக முடியாது. கற்பதனால் நீங்கள் திறமையானவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில் உங்கள் பிரஜைகளை உருவாக்குங்கள். பின்னர் நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போல் ஆகுவீர்கள். இதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. தர்மராஜிடமிருந்து எத் தண்டனையையும் பெறாத வகையில், நீங்கள் சிறப்புச்சித்தி எய்த வேண்டும். இந்த விசேட குழந்தையும் உங்களுடன் இருக்கிறார். இவரும் கூறுகின்றார்: நீங்கள் மிக விரைவாக என்னை விடவும் முந்திச் செல்ல முடியும். பாபாவிற்கு அத்தகைய சுமை உள்ளது. அவர் நாள் முழுவதும் பல விடயங்களைச் சிந்திக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவுசெய்யும் அளவிற்கு என்னால் முடிவதில்லை. உணவு அருந்தும் வேளைகளில், நான் பாபாவை சிறிது நினைவுசெய்யத் தொடங்கி, பின்னர் மறந்து விடுகிறேன். சிலவேளைகளில் நானும் பாபாவும் உலாவச் செல்வோம் என எண்ணுவேன், பின்னர் நடக்கும்போது நான் பாபாவை மறந்து விடுகிறேன். இந்த நினைவு மிகவும் நழுவலான ஒரு விடயம். நினைவு திரும்பத் திரும்ப நழுவி விடுகின்றது. நீங்கள் இதில் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நினைவு செய்வதினாலேயே ஆத்மாக்கள் தூய்மை ஆகுகிறார்கள். நீங்கள் பலருக்குக் கற்பித்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். இந்த ஞானத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்பவர்களால் நல்ல அந்தஸ்தைக் கோர முடியும். கண்காட்சிகளில் பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கண்காட்சிகளில் நூறாயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்ய முடியும். எனவே உங்கள் ஸ்திதியும் அதற்கேற்ப இருக்க வேண்டும். நீங்கள் கர்மாதீத நிலையை அடையும்போது, உங்கள் சரீரம் இங்கு இருக்க மாட்டாது. நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, யுத்தங்கள் அதிகரிக்கும் என்பதையும், பின்னர் பலர் உங்களிடம் தொடர்ந்தும் வருவார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உங்கள் புகழ் தொடர்ந்தும் அதிகரிக்கும். இறுதியில் சந்நியாசிகளும் வந்து, தந்தையை நினைவு செய்யத் தொடங்குவார்கள். அவர்கள் முக்தி தாமத்திற்குச் செல்லும் தங்கள் பாகங்களை நடிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் இந்த ஞானத்தைக் கற்க மாட்டார்கள். எவ்வாறாயினும் உங்கள் செய்தி ஆத்மாக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அனேகர் இதனைத் செய்தித்தாள்கள் மூலம் தொடர்ந்தும் அறிவார்கள். அனேகக் கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ள அனைவருக்கும் கூட நீங்கள் இச்செய்தியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தீர்க்க தரிசிகளும் தூதுவர்களும் ஆவீர்கள். வேறு எவருமன்றி, தந்தையே தூய்மையாக்குபவர். சமய ஸ்தாபகர்கள் எவரையேனும் தூய்மை ஆக்குகிறார்கள் என்றில்லை. அவர்களுடைய சமயம் பரவ வேண்டும். ஆகவே எப்படி அவர்களால் வீட்டிற்கான பாதையைக் காட்ட முடியும்? அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரேயொருவரே. குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மையாக இல்லாத பலர் இருக்கின்றார்கள். காமமே கொடிய எதிரி. மிக நல்ல குழந்தைகளும் இதனால் வீழ்ச்சி அடைகிறார்கள். தீயபார்வையும் காமத்தின் சுவடே. காமம் மிகப்பெரிய அசுரன். தந்தை கூறுகின்றார்: இதனை வெற்றி கொள்ளுங்கள், நீங்கள் உலகினை வென்றவர்கள் ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அனைத்தையும் செய்யும் வேளையில் நினைவில் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தந்தையுடன் வீடு திரும்பி, பின்னர் தூய, புதிய உலகின் அதிபதி ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.2. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் பலருக்குச் சேவை செய்ய வேண்டும். நீங்கள் பலருக்குக் கற்பிக்கவும் வேண்டும். தூதுவர்களாகி, இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பில் மடியில் முழுமையான அகச் சந்தோஷத்தையும், சகல சக்திகளையும் அனுபவம் செய்கின்ற, மிகச்சரியான முயற்சியாளர் ஆவீர்களாக.உண்மையான முயற்சியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதை அல்லது களைப்பை அனுபவம் செய்வதில்லை. ஆனால் சதா அன்பின் போதையுடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களில் கூட அர்ப்பணித்திருப்பதனால், பாப்தாதா தங்களை இயங்க வைப்பதாக, கடின உழைப்பு எனும் பாதம் மூலம் அல்லாமல், அன்பு எனும் மடியில் முன்னேறுவதை அவர்கள் அனுபவம் செய்வார்கள். அன்பு எனும் மடியில் பேறுகள் அனைத்தையும் அனுபவம் செய்வதால், அவர்கள் வெறுமனே முன்னேறுவதில்லை. ஆனால் சதா சந்தோஷம், உள்ளார்ந்த களிப்பு, சகல சக்திகள் எனும் அனுபவத்தில் சதா தொடர்ந்தும் பறந்து கொண்டிருப்பார்கள்.
சுலோகம்:
உங்கள் நம்பிக்கையின் அத்திவாரம் உறுதியாகும்பொழுது, இயல்பாகவே உங்கள் வாழ்வை ஒரு மேன்மையான வாழ்வாக அனுபவம் செய்வீர்கள்.ஏகாந்தத்தில் அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
வேற்றுமையிலும் ஒற்றுமை: பல நாடுகளும், பல மொழிகளும், பல நிறங்களும், இருந்தாலும், வேற்றுமை இருந்தாலும் கூட நடைமுறையில் அனைவரின் இதயத்திலும் ஒற்றுமை இருக்க வேண்டும். ஏனெனில் அனைவரின் இதயத்திலும் ஒரே தந்தையே இருப்பதுடன், நீங்கள் அனைவரும் ஒரே ஸ்ரீமத்தையே பின்பற்றுகின்றீர்கள். பல மொழிகள் இருந்தாலும், உங்கள் இதயத்தின் பாடலும், உங்கள் இதயங்களின் மொழிகளும் ஒன்றே.