07.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இதுவரை கற்றுள்ள அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
பாரதத்தின் சத்தியயுகத்துச் சுய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சக்தி என்ன?

பதில்:
தூய்மைச் சக்தி ஆகும். நீங்கள் சர்வசக்திவான் தந்தையுடன் யோகம் செய்து, தூய்மை ஆகுகின்றீர்கள். தூய்மைச் சக்தியாலேயே சத்தியயுகத்துச் சுய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஞானம், யோகம் என்ற சக்திகளே உங்களை அந்தத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றன. இந்தச் சக்தியால் ஓர் ஒற்றுமையான வழிகாட்டல் உருவாக்கப்படுகின்றது.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இந்தப் பாடல் எங்களால் உருவாக்கப்படவில்லை. எவ்வாறு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதோ, அதேபோன்று, உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களின் சாராம்சமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தை மாத்திரமே படகோட்டியும், பூந்தோட்டத்தின் அதிபதியும், சற்கதி அருள்பவரும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் ஜீவன்முக்தி அடைவதற்காகப் பக்தி செய்கின்றார்கள், ஆனால் கடவுள் மாத்திரமே ஜீவன்முக்தியை அல்லது சற்கதியை அருள்பவர். குழந்தைகளான நீங்கள் மாத்திரமே இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள்; ஏனைய மக்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. சற்கதி என்றால் அவர் உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதியைப் பெறச் செய்வது என்று அர்த்தமாகும். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது அங்கே தூய்மையும், சந்தோஷமும், அமைதியும் இருந்தன என்பதைப் பாரதவாசிக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அது இராதை, கிருஷ்ணரின் இராச்சியமாக இருந்தது என நீங்கள் கூறமாட்டீர்கள். உண்மையில் தாய்மார்களான நீங்களே இராதைக்குச் சமமானவர்கள். அவர்கள் இராதையையே மேலும் அதிகமாக விரும்ப வேண்டும்; ஆனால் உண்மையில் அவர்கள் கிருஷ்ணரையே மேலும் அதிகளவு விரும்புகின்றனர்; அவர்கள் அவரைத் தொட்டிலில் ஆட்டுகின்றனர். அவர்கள் கிருஷ்ணரின் பிறந்ததினத்தையும் கொண்டாடுகின்றனர். அவர்கள் இராதையின் பிறந்ததினத்தைக் கொண்டாடுவதில்லை. உண்மையில் அவர்கள் இருவரது பிறந்ததினத்தையும் அவர்கள் கொண்டாட வேண்டும். அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. அவர்களது வாழ்க்கைக் கதைகளை எவருமே அறியார். தந்தை வந்து, அவரது சொந்த வாழ்க்கைக் கதையையும், ஏனைய அனைவரது வாழ்க்கைக் கதைகளையும் உங்களுக்குக் கூறுகின்றார். மக்கள் கூறுகின்றார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். எவ்வாறாயினும் அவரது வாழ்க்கைக் கதையை அவர்கள் அறியார்கள். மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளே வரலாறும், புவியியலும் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் வரலாறும், புவியியலும் நினைவுகூரப்படுகின்றன. அவர்கள் இந்தளவு பிரதேசத்தை ஆட்சிசெய்தார்கள், அவர்கள் அதிக தேசங்களை ஆட்சிசெய்தார்கள்! அவர்கள் எவ்வாறு ஆட்சிசெய்தார்கள் என்றோ, அதன்பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள் என்றோ எவருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. படைப்பவரினதும், படைப்பினதும் ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது உண்மையில் கலியுக இறுதியும், சத்தியயுக ஆரம்பமும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மா பரமதந்தை இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே வந்து, தூய்மையற்ற மனிதர்களைத் தூய தேவர்களாக மாற்றுகின்றார். அவர் அவர்களை அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றார். இந்நேரத்தில் மனிதர்கள் மேன்மையானவர்கள் அல்லர், அவர்கள் சீரழிந்தவர்கள். மேன்மையான, மத்திய தரமான, கீழான மட்டத்தில் மக்கள் உள்ளனர்; சதோ, ரஜோ, தமோ, ஸ்திதிகள் உள்ளன. இந்த ஞானத்தை மிக நன்றாகச் செவிமடுப்பவர்களே, சதோகுணி என்று கூறப்படுகின்றார்கள். சிறிதளவு ஞானத்தை மாத்திரம் செவிமடுப்பவர்கள் ரஜோகுணி என்றும், அதை முற்றிலும் செவிமடுக்காதவர்கள் தமோகுணி என்றும் அழைக்கப்படுகின்றார்கள். ஒரு கல்வியிலும் அதேபோன்றே உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தச் சதோபிரதான் கல்வி தேவையாகும். இதனாலேயே உங்களுக்குச் சதோபிரதான் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்கான இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது. ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணில் இருந்து, இலக்ஷ்மியாகவும் நீங்கள் மாற வேண்டும். நீங்கள் இதுவே உண்மையான கீதை என்று கீதை பற்றிக் கூறுகின்றீர்கள். நீங்கள் சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையையும் உண்மையான அமரத்துவக் கதையையும் மூன்றாவது கண்ணின் கதையையும் கேட்கின்ற, உண்மையான கீதைப் பாடசாலை இதுவே என நீங்கள் எழுதலாம். நீங்கள் வைத்திருக்கின்ற படங்கள் அனைத்திலும் இந்த முழு ஞானமும் உள்ளது. பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் நிச்சயமாகப் பாரதத்தைச் சதோபிரதான் சுவர்க்கமாக ஆக்குவீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சத்தியம் செய்கின்றீர்கள். நீங்கள் இதை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். காந்திஜியும் ஒரு தூய இராச்சியத்தை விரும்பினார், எனவே இது நிச்சயமாகத் தூய்மையற்ற இராச்சியமாகவே இருக்க வேண்டும். தாங்கள் தூய்மை அற்றவர்கள் என்பதை அவர்களில் எவருமே புரிந்து கொள்வதில்லை. ஐந்து விகாரங்களே இராவணன் ஆகும். தங்களுக்கு இராம இராச்சியம் வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் நிச்சயமாக அசுர சமுதாயமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது எவரது புத்தியிலும் இருப்பதில்லை. பல பெரிய குருமார்கள் போன்றவர்களும், இதைப் புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் மூலம் கொடுக்கப்பட்ட ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செய்ததைப் போல், தேவ இராச்சியத்தை ஸ்தாபிப்பீர்கள் எனக் குழந்தைகளான நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கின்றீர்கள். இப்பொழுது அதிசீரழிந்தவர்கள், அதிமேலான சதோபிரதான் மனிதர்கள் ஆகுகின்ற அதிமங்களகரமான சங்கமயுகம் இதுவாகும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே அதியுயர்வான மரியாதைக் கோட்பாட்டுக்கு உரிய தர்மமாகும். ஒரேயொரு தேவ தர்மமே ஸ்தாபிக்கப்படுகின்றது. பின்னர் வேறெந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் ஒரு தர்மமும், ஓர் இராச்சியமும் இருந்தன எனக் குழந்தைகளாகிய நீங்கள் நிரூபித்து அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். நீங்கள் சூரிய வம்சத்திலிருந்து, திரேதாயுகத்துச் சந்திர வம்சத்திற்கு மாறிய பொழுதிலும், ஒரு மொழி மாத்திரமே இருக்கும். இப்பொழுது பாரதத்தில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவர்களுடைய இராச்சியத்தில் ஒரு மொழி மாத்திரமே இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்நாட்களில் நீங்கள் பல விடயங்களைப் பார்க்கின்றீர்கள். நீண்ட பயணத்தின் பின்னர் உங்களுடைய சொந்த நாட்டுக்கு நெருக்கமாக வருகின்ற பொழுது, நீங்கள் வீட்டுக்கு வந்து விட்டீர்கள் என்றும், இப்பொழுது சென்று அனைவரையும் சந்திப்பீர்கள் என்றும் மிகவும் சந்தோஷத்தை உணர்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் இராச்சியத்தின் காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் செய்த முயற்சியின் காட்சிகளையும் காண்பீர்கள். ஏன் பாபா முயற்சி செய்யுமாறு அதிகளவு கூறுகின்றார் என்பதையும் உங்களால் காணமுடியும். இல்லையெனில், நீங்கள் விரக்தியில் கதறி அழுவீர்கள், உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். யோகம் எனும் யாத்திரையை அனைவருக்கும் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். அது விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. ஏணிப்படமும் விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது! தாமதித்து வருபவர்கள் நாளுக்கு நாள், மிகவும் இலகுவாக இந்த ஞானத்தைப் பெறுகின்றார்கள். ஒரு வாரம் செவிமடுப்பதன் மூலம், அவர்களால் அதை இலகுவாகப் புரிந்துகொள்ள இயலும். படங்களும் மிகச்சரியான விளக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. 84 பிறவிகளின் படம் முற்றிலும் மிகச்சரியானது; அது பாரத மக்களுக்கானது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவருமாகிய, சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உங்கள் சொந்தச் சரீரங்கள், மனங்கள், செல்வத்தினாலும், இலகு இராஜயோகத்தின் சக்தியாலும் மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் வேறு எவரினதும் எவற்றையும் பயன்படுத்துவதில்லை. நாங்கள் எங்களது சொந்தச் சரீரங்கள், மனங்கள், செல்வத்தினாலேயே சேவை செய்கின்றோம். ஒவ்வொருவரும் என்ன செய்கின்றாரோ, அதற்கேற்ப அவர் தனது பாக்கியத்தை உருவாக்குகின்றார். நீங்கள் ஒரே குடும்ப அங்கத்தவர்கள். பாபா சத்தியயுகத்துச் சுய இராச்சியத்தை உங்கள் மூலம் ஸ்தாபிக்கின்றார். நீங்களே செலவுகளைப் பகிர்ந்து கொள்பவர்கள். உங்களுக்குப் பெருமளவு செலவுகள் இல்லை. நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டியது மாத்திரமே. குமாரிகளுக்கு என்ன செலவு உள்ளது? அவர்களிடம் ஏதாவது உள்ளதா? குழந்தைகளாகிய உங்களிமிருந்து என்ன கட்டணத்தை பாபா எடுப்பார்? எதுவுமே இல்லை! பாடசாலையில் அவர்கள் முதலில் கட்டணத்தையே கேட்கிறார்கள். அவர்கள் தங்கள் கல்விக்கு அதிகளவு செலவிட வேண்டியுள்ளது. எவ்வாறு சிவபாபா குழந்தைகளாகிய உங்களிடம் பணம் ஏதும் கேட்க முடியும்? பணம் ஏதாவது பெறுவதற்கு, சிவபாபாவுக்குத் தனக்கென ஒரு வீடு கட்ட வேண்டிய தேவையில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எதிர்காலத்தில் சுவர்க்கத்திற்குச் சென்று, வைரங்களால் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கட்ட வேண்டும். இதனாலேயே நீங்கள் இங்கே செய்கின்ற அனைத்துக்குப் பதிலாக எதிர்காலத்தில் மாளிகைகளைப் பெறுகின்றீர்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இங்கே உங்கள் சரீரம், மனம், செல்வத்தால் எவ்வளவு சேவை செய்கின்றீர்கள் என்பதிலேயே அங்கே நீங்கள் பெறுகின்றவை தங்கியுள்ளது. ஒரு கல்லூரியையோ அல்லது வைத்தியசாலையையோ ஒருவர் கட்டும்பொழுது, அவர் ஒன்றிலிருந்து இரண்டு மில்லியன் செலவு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் அந்தளவு செலவு செய்யத் தேவையில்லை. நீங்கள் ஒரு சிறிய கட்டடத்திலே ஆன்மீகக் கல்லூரியுடனான வைத்தியசாலையைக் கட்டலாம். பாண்டவர்களின் பிரபு யார்? அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை எழுதியுள்ளார்கள். உண்மையில் அவர் அசரீரியான கடவுளே ஆவார். கடவுளே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பவர். இராவண இராச்சியத்தில் ஏனைய அனைவரும் இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகின்றனர். இராவணனின் கட்டளைகளையே பின்பற்றியதால் அவர்கள் மிகவும் அசுத்தமானவர்கள் ஆகிவிட்டார்கள்! இந்த உலகம் பழையது, அது மீண்டும் இப்பொழுது புதியதாகும். உலகில் பாரதம் மாத்திரமே இருந்தது. பாரதமே பழையதும், புதியதும் எனக் கூறப்படுகின்றது. புதிய பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது பழையது, அது நரகமாக உள்ளது; அது ஆழ்நரகம் என அழைக்கப்படுகின்றது. இது மனிதர்களையே குறிக்கின்றது. இங்கே சந்தோஷத்தின் சுவடே இல்லை. இது உண்மையான சந்தோஷமல்ல! சந்நியாசிகளும் இந்நேரத்தில் சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது எனக் கூறுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் தங்களது இல்லறங்களையும், குடும்பங்களையும் துறந்துள்ளனர். அவர்களால் சுவர்க்கத்தையோ அல்லது சத்தியயுகத்தையோ ஸ்தாபிக்க முடியாது. பரமாத்மா மாத்திரமே ஸ்ரீகிருஷ்ண தாமத்தை ஸ்தாபிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா, சரீரம் இரண்டுமே சதோபிரதானாக இருந்தன. ஸ்ரீகிருஷ்ணர் தூய்மையாக இருந்ததால், மக்கள் அவரில் பெருமளவு அன்பு வைத்துள்ளனர். ஒரு சிறிய குழந்தை பிரம்மகியானி போன்றவர் எனக் கூறப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு விகாரங்கள் பற்றித் தெரியாது. சந்நியாசிகள் அந்த விடயங்களை அறிவார்கள். குழந்தைகள் பிறப்பிலே மகாத்மாக்கள். குழந்தைகள் தூய மலர்கள் என்று கூறப்படுகின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணரே முதல் தரமான மலராவார். அவரே புதிய உலகான சுவர்க்கத்தின் முதல் இளவரசர் ஆவார். பிறப்பெடுத்த உடனேயே அவர் முதல் இளவரசர் என்று அழைக்கப்படுகின்றார். அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுசெய்து, ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற குழந்தை வேண்டும் என விரும்புகின்றனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் விரும்பியவாறு ஆகுங்கள்! ஒரு ஸ்ரீகிருஷ்ணர் மாத்திரம் இருப்பதில்லை. எத்தனை பேர் வேல்ஸ் இளவரசர்களாக ஆகுகின்றனர்? முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என இருந்தது. இங்கேயும் ஒரு வம்சம் இருக்கின்றது. தந்தைக்குப் பின்னர் இரண்டாமவர் சிம்மாசனத்தில் அமர்வார். ஏனைய வம்சங்கள் இருப்பதைப் போல், இந்த வம்சமும் இருக்கின்றது. உங்களுக்குக் கிறிஸ்தவர்களுடன் தொடர்பு உள்ளது. ஸ்ரீகிருஷ்ணர், கிறிஸ்தவர் இரண்டும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன, அவர்களிடையே பெருமளவு பரிமாற்றமும் உள்ளது. அவர்கள் பாரதத்திலிருந்து அதிகளவு செல்வத்தை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் இப்பொழுது அதைத் திரும்பக் கொடுக்கின்றனர். அவர்கள் திரும்பிக் கொடுக்கின்ற சேவையைச் செய்கிறார்கள். ஐரோப்பியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு, தங்களை முற்றாக அழித்து விடுவார்கள். இரண்டு பூனைகள் சண்டையிட, குரங்கு அவர்களின் மத்தியில் இருந்த வெண்ணையை எடுத்ததாக ஒரு கதை உள்ளது. அந்த விடயம் இந்த நேரத்தைக் குறிப்பதாகும். அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட, நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது பெருமளவு இந்த ஞானமுள்ளது. நீங்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. நீங்கள் குஜராத்திகளோ அல்லது பெங்காலிகளோ அல்ல. அந்தப் பாகுபாடு எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். பிரம்மாபாபாவினூடாக, சிவபாபாவினால் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் இராச்சியத்தைக் ஸ்தாபிக்கின்றோம். நாங்கள் இதை இந்த ஞான, யோக சக்திகள் மூலம் செய்கின்றோம். நாங்கள் யோகசக்தியினால் தூய்மை ஆகுகின்றோம். தந்தை சர்வசக்திவான், நாங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றோம். நீங்கள் உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். இதில் போராடுதல் போன்ற எதுவுமில்லை. அனைத்துமே தூய்மைச் சக்தி பற்றிய விடயமாகும். அவர்கள் கூறுகின்றனர்: வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள். இவை அனைத்தும் நினைவின் சக்தி மூலமே ஏற்படுகின்றது. நீங்கள் வெளியே சென்று, சொந்த வியாபாரத்தைச் செய்வதில் மும்முரமாகி, அனைத்தையும் மறப்பதாக இருக்கக்கூடாது. இங்கே நீங்கள் உங்கள் முன்னிலையில் நேரடியாக ஞானக்கடலின் அலைகளைத் தொடர்ந்தும் செவிமடுக்கின்றீர்கள். ஆறுகளில் எந்த அலைகளும் இருப்பதில்லை. கடலின் ஓர் அலை கூட அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது. பூமியதிர்ச்சி வருகின்ற பொழுது, கடலும் பெருக்கெடுக்கின்றது. மக்கள் கடலை வற்றச் செய்வதால், நிலத்தைத் திரும்பப் பெற்று, பின்னர் அதை உயர்ந்த விலைக்கு விற்கின்றனர். பம்பாய் இருக்க மாட்டாது என்பதை நீங்கள் அறிவீர்கள். முன்னர் பம்பாய் இருக்கவில்லை; அது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. தாய்மார்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள்; அவர்கள் அந்தளவிற்குக் கற்றவர்கள் அல்லர். இங்கே நீங்கள் முன்னர் கற்றுள்ள அனைத்தையும் மறக்க வேண்டும். நீங்கள் எதையும் கற்றிருக்கவில்லை எனின், அதுவும் நல்லதே. நன்றாகக் கற்ற ஒருவருக்கு நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, அவர் பல கேள்விகளைக் கேட்கின்றார். இங்கே நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சரீரதாரிகளை நினைவு செய்தல் என்ற கேள்வியில்லை. ஒரேயொரு எல்லையற்ற தந்தையின் புகழே உள்ளது. கடவுளே அதிமேலானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் பிரம்மா இரண்டாவது இலக்கத்தில் உள்ளார். அவரிலும் (பரலோகத் தந்தை) உயர்வானவர் எவருமேயில்லை. அவரிலும் பார்க்க மகத்தான ஆளுமை உடையவர் எவருமேயில்லை, ஆனால் அவர் எவ்வளவு ஒரு சாதாரணமான முறையில் பழகுகின்றார் எனப் பாருங்கள். உதாரணமாக, அவர் சாதாரண முறையில் குழந்தைகளாகிய உங்களுடன் அமர்ந்திருக்கின்றார். இவர் (பிரம்மா) புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது, இவர் யார் என்பதை எவருமே அறியமாட்டார்கள். கடவுள் வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு, ஒருவரில் பிரவேசிப்பார். ஸ்ரீகிருஷ்ணர் அதனைச் செய்திருந்தால், அவர் கற்பிக்க முடியாத அளவிற்கு அத்தகைய கூட்டம் இருந்திருக்கும். மக்கள் அவரைப் பார்த்தவாறு(தரிசனம்) இருந்திருப்பார்கள். இங்கே தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்குச் சாதாரணமாக, மறைமுகமான முறையில் கற்பிக்கின்றார். நீங்களே ஒரு மறைமுகமான சேனையினர். யோகசக்தி மூலம் நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உங்களுடைய பழைய சரீரங்களை நீக்கி, புதிய அழகிய சரீரங்களைப் பெறுவீர்கள். இப்பொழுது இது அசுர சமுதாயம், பின்னர் தேவ சமுதாயம் இருக்கும். ஆத்மா கூறுகின்றார்: நான் புதிய உலகில் தெய்வீகமான சரீரத்தை எடுத்து, இராச்சியத்தை ஆட்சிசெய்வேன். ஆத்மா ஆண் ஆவார், சரீரம் பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்டது. ஆத்மாக்கள் எப்பொழுதும் ஆண் ஆவார், ஆனால் ஆண் அல்லது பெண்ணின் சரீரம் கர்மக் கணக்கின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நான் ஓர் அழிவற்ற ஆத்மா. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. கலியுகத்தின் விநாசம் நிச்சயமாக நடைபெறும். விநாசத்தின் அடையாளங்களை உங்களின் முன்னால் காணமுடியும். அதே மகாபாரத யுத்தம் இடம்பெறும், எனவே கடவுளும் நிச்சயமாக இருப்பார். அவர் என்ன ரூபத்தில், யாருடைய சரீரத்தில் பிரவேசித்தார் என்பதைக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருமே அறியார். அவர் கூறுகின்றார்: நான் மிகவும்; சாதாரணமான சரீரத்திலேயே பிரவேசிக்கின்றேன். 84 பிறவிகளை முழுமையாக எடுக்கின்ற, ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் நான் பிரவேசிப்பதில்லை. நான் இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே வருகின்றேன். சூரிய வம்சத்திற்குச் சொந்தமானவர்களே, 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். அவர்களே முதல் இலக்கத்தைக் கோருகின்றார்கள். நீங்கள் பௌதீக விருட்சம், அசரீரி விருட்சம் இரண்டினதும் இந்த ஞானம் அனைத்தையும் கொண்டுள்ளீர்கள். ஆத்மாக்கள் அசரீரி உலகிலிருந்து வரிசைக்கிரமமாகக் கீழே வருகின்றார்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாக்களே முதலில் வருகின்றார்கள். பின்னர் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகக் கீழே வருகின்றார்கள். படங்களில் உள்ள விளக்கம் மிகவும் மேன்மையானது. குமாரிகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டுமெனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. புதல்விகள் அத்தகைய விடயங்களை விளங்கப்படுத்தினால், அது மகத்தான அற்புதமாக இருக்கும். அவர்கள் பெயரை அதிகளவு புகழடையச் செய்வார்கள்; அவர்கள் லௌகீகத் தந்தை, ஆன்மீகத் தந்தை இருவரது பெயர்களையும் புகழடையச் செய்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சங்கமயுகத்தில் மேன்மையான செயல்களைச் செய்து, அதிமேன்மையானவர்;கள் ஆகுங்கள். உங்களைச் சீரழிந்தவர்கள் ஆக்குகின்ற அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

2. மறைமுகமான முறையில் தந்தையின் உதவியாளராகி, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். உங்கள் சொந்தச் சரீரம், மனம், செல்வம் மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குங்கள். நினைவுச் சக்தியையும், தூய்மைச் சக்தியையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் சம்பூரணம் மற்றும் முழுமை ஸ்திதியால் சகல வகையான தங்கி இருத்தல்களையும் முடித்து, சடப்பொருளை வென்றவர் ஆகுவீர்களாக.

நீங்கள் உங்களின் சம்பூரணம் மற்றும் முழுமை ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, நீங்கள் வெற்றியை அனுபவம் செய்வீர்கள். அதாவது, நீங்கள் சடப்பொருளின் மீது உரிமையைக் கொண்டிருப்பீர்கள். சம்பூரணமான, முழுமையான ஸ்திதியில் எந்த வகையான தங்கியிருத்தலும் இருக்க முடியாது. எவ்வாறாயினும், உங்களின் ஸ்திதியை சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆக்குவதற்கு, ஒரே வேளையில் மூன்று விடயங்கள் இருக்க வேண்டும்: 1) ஆன்மீகம் 2) ஆன்மீக போதை 3) கருணைநிறைந்தவர் ஆகுகின்ற நற்குணம். உங்களின் ரூபம், உங்களின் ஸ்திதி, உங்களின் முகம் மற்றும் உங்களின் செயல்களில் இந்த மூன்று விடயங்களும் புலப்படும்போது, நீங்கள் சகல உரிமைகளையும் கொண்டதோர் ஆத்மா என்றும் சடப்பொருளை வென்றவர் என்றும் அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
ஸ்ரீமத்தின் கடிவாளங்களை உறுதியாகப் பிடித்திருக்கும்போது, மனம் என்ற குதிரையால் தப்பி ஓட முடியாது.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

உங்களின் மனோபாவம், விழிப்புணர்வு அல்லது எண்ணங்களில் ஏதாவது தூய்மை இன்மை இருக்குமாயின், உங்களின் பிராமண ஸ்திதியில் உங்களால் ஸ்திரமாக இருக்க முடியாது. ஆகவே, நீங்கள் ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் சிறப்பியல்புகள் இருக்கலாம், ஆனால் உங்களிடம் ஒரு பலவீனமேனும் இருக்குமாயின், அந்த ஒரு பலவீனம் உங்களின் பல சிறப்பியல்புகளை முடித்துவிடும்.