07.09.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2006 Om Shanti Madhuban
திடசங்கற்பம் மற்றும் மாற்றத்திற்கான சக்திகளால், காரணங்கள் மற்றும் பிரச்சனைகள் என்ற வார்த்தைகளுக்கு விடை கொடுத்து, தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள்.
இன்று, புதிய யுகத்தைப் படைப்பவரான பாப்தாதா, புது வருடத்திற்காகவும் புதிய யுகத்திற்காகவும் எங்கும் உள்ள தனது குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளார். குழந்தைகளான நீங்களும் எல்லா இடங்களில் இருந்தும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவே இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் புது வருடத்திற்காக மட்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளீர்களா அல்லது புதிய யுகத்திற்காகவுமா? எப்படி உங்களுக்குப் புதிய வருடத்தைப் பற்றிய சந்தோஷம் உள்ளதோ, அதேபோல் உங்களுக்குப் புதிய யுகத்தைப் பற்றிய சந்தோஷமும் உள்ளது. எனவே, பிராமண ஆத்மாக்களான நீங்கள் அதே அளவில் புதிய யுகத்தையும் நினைக்கிறீர்களா? புதிய யுகம் உங்களின் கண்களின் முன்னால் வருகிறதா? புது வருடம் இங்கே உள்ளது என்பது உங்களின் இதயங்களில் இருப்பதைப் போல், உங்களின் புதிய யுகமும் வந்துவிட்டது என்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? இந்தப் புதிய யுகத்தின் விழிப்புணர்வு நெருக்கமாக இருக்கிறதா? உங்களின் சரீரத்தின் பிரகாசிக்கும் ஆடை உங்களின் முன்னால் வருகிறதா? பாப்தாதா உங்களுக்கு இரட்டை வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குழந்தைகளான உங்களின் மனங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் புதிய யுகத்தின் காட்சிகளும் இயற்கைக் காட்சிகளும் தோன்றுகின்றனவா? புதிய யுகத்தில் உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வம் மற்றும் உறவுமுறைகள் (மனிதர்கள்) அனைத்தும் மிக மேன்மையானவை. அத்துடன் உங்களிடம் சகல பேறுகளின் பொக்கிஷக் களஞ்சியமும் இருக்கிறது. இன்று நீங்கள் பழைய உலகில் இருக்கிறீர்கள், புதிய இராச்சியத்திற்குச் செல்ல இருக்கிறீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது. உங்களின் இராச்சியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று, நீங்கள் இங்கே இரட்டைப் பணிக்காக வந்துள்ளீர்கள். நீங்கள் பழைய வருடத்திற்கு விடை கொடுத்து, புதிய வருடத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக வந்துள்ளீர்கள். அதேபோல், நீங்கள் பழைய வருடத்திற்கு விடை கொடுக்க வந்துள்ளீர்களா? அல்லது, நீங்கள் பழைய சுபாவத்திற்கும் பழைய உலகின் சம்ஸ்காரங்களுக்கும் நடத்தைக்கும் விடை கொடுக்கவும் வந்துள்ளீர்களா? பழைய வருடத்திற்கு விடை கொடுப்பது இலகுவானது. ஆனால், உங்களின் பழைய சம்ஸ்காரங்களுக்கு விடை கொடுப்பது அதேபோல் இலகுவானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களும் மாயைக்கு விடை கொடுக்க வந்தீர்களா அல்லது வருடத்திற்கு விடை கொடுக்க மட்டும் வந்தீர்களா? உங்களுக்கும் அவளுக்கு விடை கொடுக்க விருப்பம்தானே? அல்லது, உங்களுக்கு மாயையிடம் சிறிதளவு அன்பு உள்ளதா? நீங்கள் அவளை உங்களுடன் சிறிது அதிககாலம் வைத்திருக்க விரும்புகிறீர்களா?
இன்று, எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளான நீங்கள் உங்களின் பழைய சுபாவங்களுக்கும் சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுப்பதைத் தூண்ட விரும்புகிறார். உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? அல்லது, நீங்கள் மாயைக்கு விடை கொடுக்க விரும்பினாலும் அவள் இன்னமும் வருகிறாள் என நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தத் தினத்தில், திடசங்கற்பத்தின் சக்தியால் உங்களின் பழைய சம்ஸ்காரங்களுக்கு விடை கொடுத்து, புதிய யுகத்தினதும் புதிய வாழ்க்கையினதும் சம்ஸ்காரங்களுக்கு வாழ்த்துக்களைக் கொடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? இது சாத்தியம், இது நடக்க வேண்டும் என உணர்பவர்கள் - உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறது என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? அச்சா, உங்களின் கைகளை உயர்த்தாதவர்கள் - நீங்கள் இன்னமும் சிந்திக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்கள் தமது கைகளை உயர்த்தினீர்களா? தைரியம் இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எல்லோரும் உயர்த்தவில்லை. அச்சா. இரட்டை வெளிநாட்டவர்கள் புத்திசாலிகள், ஏனென்றால் உங்களுக்கு இரட்டை போதை உள்ளது. கவனமாக இருங்கள்! ஒவ்வொரு மாதமும் பாப்தாதா பெறுபேற்றைப் பார்ப்பார். நீங்கள் தைரியசாலிக் குழந்தைகள் என்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் புத்திசாலியாகப் பதில் அளிக்கிறீர்கள். ஏன்? உங்களின் தைரியமான ஓரடியுடன் நிச்சயமாக பாபாவிடம் இருந்து 1000 அடிகள் உதவியைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உரிமை உள்ளது. ஆயிரம் அடிகள் உதவிக்கான உரிமை உங்களுக்கு உள்ளது. மாயை உங்களின் தைரியத்தை அசைக்க முயற்சி செய்கிறாள், அவ்வளவுதான். நீங்கள் நன்றாகத் தைரியத்தைப் பேணுவதை பாப்தாதா பார்க்கிறார். அவரின் இதயபூர்வமாக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். எவ்வாறாயினும், நீங்கள் தைரியத்தைப் பேணுகிறீர்கள். ஆனால் அத்துடன்கூடவே, நீங்கள் வீணான எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள்: ‘நான் இதைச் செய்கிறேன், அது நடக்க வேண்டும், நான் நிச்சயமாக அதைச் செய்வேன்... எனக்குத் தெரியவில்லை’. தெரியாது என்ற எண்ணங்களை உருவாக்குவது, உங்களின் தைரியத்தைப் பலவீனம் ஆக்குகிறது. இடையில், ‘ஆனால்!’ என்பது இருக்கிறது. ‘நான் இதைச் செய்கிறேன், ஆனால்....’ ‘நான் அதைச் செய்ய வேண்டும், ஆனால்....’ ‘நான் முன்னால் பறக்க வேண்டும், ஆனால்....’ இது உங்களின் தைரியத்தைத் தளம்பல் அடையச் செய்கிறது. எனவே, ‘ஆனால்’ என்பதைப் பற்றி நினைக்காதீர்கள், நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். தந்தை உங்களுடன் இருக்கும்போது ஏன் அது நடக்காது? அதனால், தந்தையின் சகவாசத்தில் எந்தவிதமான ‘ஆனால்’ என்பதும் இருக்க முடியாது.
எனவே, இந்தப் புது வருடத்தில் நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்துவீர்கள்? உங்களின் தைரியம் என்ற பாதத்தை உறுதியாக்குங்கள். மாயை அசையும் வகையிலும் உங்களின் பாதங்கள் அசையாத வகையிலும் உங்களின் தைரியம் என்ற பாதங்களைப் பலப்படுத்துங்கள். எனவே, இந்தப் புது வருடத்தில் நீங்கள் இந்தப் புதுமையை ஏற்படுத்துவீர்களா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் உறுதியாக இருப்பீர்களா? சிலவேளைகளில் தளம்பல் அடைவீர்களா? நீங்கள் இதைச் செய்ய மாட்டீர்கள்தானே? உங்கள் எல்லோருடைய கடமையும் தொழிலும் என்ன? நீங்கள் உங்களை என்னவென்று அழைக்கிறீர்கள்? அதை நினையுங்கள். உலக உபகாரிகள், உலகை மாற்றுபவர்கள் - இதுவே உங்களின் தொழில், அப்படித்தானே? எனவே, சிலவேளைகளில், பாப்தாதா இனிமையாக வியப்படைகிறார். உங்களிடம் உலகை மாற்றுபவர்கள் என்ற பட்டம் உள்ளதல்லவா? நீங்கள் உலகை மாற்றுபவர்களா? அல்லது, நீங்கள் இலண்டனை அல்லது இந்தியாவை மாற்றுபவர்களா? நீங்கள் எல்லோரும் உலகை மாற்றுபவர்களா? நீங்கள் கிராமங்களில் வசித்தாலென்ன, இலண்டனில் அல்லது அமெரிக்காவில் வசித்தாலென்ன, நீங்கள் எல்லோரும் உலக உபகாரிகள்தானே? நீங்கள் அத்தகையவர்கள் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உறுதியாகவா? அல்லது, அதில் 75 சதவீதம் மட்டும் அப்படி இருக்கிறீர்களா? நீங்கள் 75 சதவீதம் உலக நன்மையாளர்களா? மற்றைய 25 சதவீதம் இல்லாமல் இருப்பதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளதா? உங்களின் சவால் என்ன? நீங்கள் இயற்கையையும் நிச்சயமாக மாற்றப் போகின்றீர்கள் என இயற்கைக்கும் சவால் விடுத்துள்ளீர்கள். எனவே, உலகை மாற்றுபவர்களான, இயற்கையை மாற்றுபவர்களான உங்களால் சுயத்தை மாற்ற முடியாதா? சக்தி சேனையினர் என்ன நினைக்கிறீர்கள்? இந்த வருடம், உங்களுக்காகவும் பிராமணக் குடும்பத்திற்காகவும் உங்களின் பட்டம், உலகை மாற்றுபவர்கள் என்பதே ஆகும். இது ஏனென்றால், முதலில், புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது. எனவே, நீங்கள் உங்களின் தொழிலின் நடைமுறை ரூபத்தை வெளிப்படுத்துவீர்கள்தானே? நீங்களே சுய மாற்றத்தை விரும்புகிறீர்கள். பாப்தாதாவும் அதை விரும்புகிறார் - நீங்கள் அதை அறிவீர்கள். உங்களின் இலட்சியம் என்னவென்று பாப்தாதா உங்கள் எல்லோரையும் கேட்கும்போது, தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்றே நீங்கள் சொல்கிறீர்கள். இது சரிதானே? நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆக விரும்புகிறீர்கள்தானே? அல்லது, நீங்கள் அதைப் பார்த்துக் கொள்வீர்களா? நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்களா? எனவே, இந்தப் புது வருடத்தில் - நீங்கள் 70 ஆம் ஆண்டைப் (2006) பூர்த்தி செய்து, இப்போது 71 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள். பாப்தாதாவும் ஏதாவது அற்புதத்தைச் செய்வதன் மூலம் நீங்கள் இதைச் செய்து காட்ட வேண்டும் என்றே விரும்புகிறார். உங்கள் எல்லோரிடமும் மிகுந்த உற்சாகத்துடன் சேவை செய்வதற்குப் பல்வகையான நிகழ்ச்சிகள் உள்ளன. நீங்களும் அதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளில் நீங்கள் வெற்றி நிறைந்தவர்கள் ஆகுவதை இட்டு பாப்தாதா சந்தோஷப்படுகிறார். அவை வீணாகப் போவதில்லை. ஆனால், நீங்கள் ஏன் சேவை செய்கிறீர்கள்? நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? தந்தையை வெளிப்படுத்துவதற்காக. எனவே, இன்று, தந்தை உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்யவே வேண்டும். ஆனால், தந்தையை வெளிப்படுத்த முன்னர், உங்களை வெளிப்படுத்துங்கள். சிவசக்திகளே, பேசுங்கள். இந்த வருடம், நீங்கள் உங்களைச் சிவசக்திகளாக வெளிப்படுத்துவீர்களா? நீங்கள் இதைச் செய்வீர்களா? ஜனக், பேசுங்கள்! நீங்கள் இதைச் செய்வீர்களா? (நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.) முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களின் சகபாடிகள், இரண்டாம் வரிசையில் உள்ள ஆசிரியர்கள் - ஆசிரியர்களான நீங்கள் இந்த வருடம் அதைச் செய்வீர்கள். நீங்கள் அதை ஏதோவொரு வேளையில் செய்வீர்கள் என்றில்லை, ஆனால், அதைச் செய்வதன் மூலம் நடைமுறையில் காட்டுவீர்கள். அச்சா: ஆசிரியர்கள் எல்லோரும் தமது கைகளை உயர்த்தினீர்களா அல்லது சிலர் தமது கைகளை உயர்த்தவில்லையா?
அச்சா, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் - நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் மதுவனம் நெருக்கமாக உள்ளது. இந்தத் திகதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். (டிசம்பர் 31, இரவு 9.20 மணி). பாண்டவ சேனையினர்? பாண்டவர்களான நீங்கள் எதைச் செய்து காட்டப் போகின்றீர்கள்? வெற்றியாளர் பாண்டவர்கள். சிலவேளைகளில் மட்டும் வெற்றியாளர்கள் அல்ல, ஆனால் நீங்கள் வெற்றியாளர் பாண்டவர்கள். அதை நீங்கள் இந்த வருடமே செய்து காட்டப் போகின்றீர்களா? அல்லது, ‘நான் என்ன செய்வது? மாயை வந்தாள். நான் விரும்பாதபோதும் அவள் வந்தாள்’ எனக் கூறுவீர்களா? மாயை இறுதிவரை வருவதை நிறுத்த மாட்டாள் என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், மாயையின் கடமை வருவதே. உங்களின் கடமை என்ன? வெற்றியாளர் ஆகுவதே. ‘அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, நான் அதை விரும்பவில்லை, எனினும் மாயை வந்தாள், அது நடந்துவிட்டது!’ என நினைக்காதீர்கள். இப்போது, இந்த வருடத்துடன் கூடவே, அந்த வார்த்தைகளுக்கும் உங்களை விடை கொடுக்கச் செய்ய வைக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். நள்ளிரவில், நீங்கள் இந்த வருடத்திற்கு விடை கொடுப்பீர்கள்தானே? எனவே, நீங்கள் மணி அடிக்கும்போது, அது எதற்கான மணியாக இருக்கும்? நாளின் முடிவிற்கா, வருடத்திற்கு முடிவிற்கா அல்லது மாயைக்கு விடை கொடுப்பதற்கா? இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் மாற்றத்தின் சக்தியில் பலவீனமாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். ‘நான் இதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன், நான் இதைச் செய்வேன்.’ நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளீர்கள் என பாப்தாதாவும் மகிழ்கிறார். நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளீர்கள். ஆனால், உங்களிடம் மாற்றத்திற்கான சக்தி குறைவாக இருப்பதனால், சிலது மாற்றப்படுகிறது. ஏனையவை எஞ்சிவிடுகின்றன. இரண்டாவது பலவீனம், திடசங்கற்பம் ஆகும். உங்களுக்கு மிக நல்ல எண்ணங்கள் உள்ளன. இன்று, பாப்தாதா பல வாழ்த்துமடல்கள், சத்தியங்கள், புத்தாண்டுக்கான தீர்மானங்கள் போன்றவற்றைக் கண்டார். மிக நல்ல கடிதங்கள் பல வந்துள்ளன. (வாழ்த்து மடல்கள், கடிதங்கள், புத்தாண்டு தீர்மானங்களுடனான குறிப்புகள் என்பவற்றால் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.) எனவே, நீங்கள் இதைச் செய்து காட்டுவீர்கள். அது நடக்கவே வேண்டும். நீங்கள் இப்படி ஆகவேண்டும். பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும். எல்லாமே பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. எவ்வாறாயினும், பாப்தாதா இப்போது இந்த இரண்டு சக்திகளைக் கீழ்க்கோடிடுகிறார். ஒன்று, திடசங்கற்பம் குறைவாக இருத்தல். இந்தப் பலவீனத்திற்கான காரணம், கவனயீனமும் மற்றவர்களைப் பார்த்தலும். ‘அது நடக்கும், நான் அதைச் செய்கிறேன், நான் அதைச் செய்வேன், நான் அதை நிச்சயமாகச் செய்வேன்.’
இந்த வருடம், பாப்தாதா எல்லா வேளைக்கும் நீங்கள் ஒரு வார்த்தைக்கு விடை கொடுக்க வேண்டும் என விரும்புகிறார். பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அவ்வாறாயின் நீங்கள் அதற்கு விடை கொடுக்க வேண்டும். இந்த வருடம், பாப்தாதா ‘காரணங்கள்’ என்ற வார்த்தைக்கு நீங்கள் விடை கொடுக்க வேண்டும் என விரும்புகிறார். தீர்வுகள் மட்டுமே இருக்க வேண்டும், காரணங்களை முடித்து விடுங்கள். பிரச்சனைகள் முடிய வேண்டும். நீங்கள் தீர்வுகளின் சொரூபங்கள் ஆகவேண்டும். காரணம் நீங்களாகவோ, உங்களின் சகபாடிகளாகவோ, ஒன்றுகூடலோ அல்லது சூழ்நிலைகளோ எதுவாக இருந்தாலும், பிராமண அகராதியில் ‘காரணங்கள்’ மற்றும் ‘பிரச்சனைகள்’ என்ற வார்த்தைகள் ‘தீர்வுகள்’ என்று மாற்றப்பட வேண்டும். இன்று காலை அமிர்தவேளையில் நீங்கள் பாபாவுடன் இந்த விடயங்களைப் பற்றிப் பேசினீர்கள். அதாவது, இந்தப் புதுவருடத்தில் நீங்கள் ஏதாவது புதிதாகச் செய்வீர்கள் என்பதே. எனவே, இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும் முடியும் வகையில் நீங்கள் புது வருடத்தைக் கொண்டாட வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். மற்றவர்களை ஈடேற்றுபவர் ஆகுங்கள். நீங்களே ஒரு காரணம் ஆகினாலென்ன அல்லது வேறு ஒருவர் காரணம் ஆகினாலென்ன, மற்றவர்களை ஈடேற்றுபவர் ஆகுங்கள். கருணை நிறைந்ததோர் ஆத்மா ஆகுங்கள். நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருந்து, ஒத்துழைப்புக் கொடுத்து அன்பைப் பெறுபவர் ஆகுங்கள்.
எனவே, இந்தப் புதுவருடத்தை நீங்கள் என்னவென்று குறிப்பிடுவீர்கள்? முன்னர், நீங்கள் ஒவ்வொரு வருடத்தையும் குறிப்பாக ஏதாவது ஒன்றாகக் குறிப்பிடுவது வழக்கம். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? எனவே, இந்த வருடமும் பாப்தாதா மேன்மையான, தூய எண்ணங்களுக்கான வருடமாக, திடசங்கற்பமான எண்ணங்கள், அன்பும் ஒத்துழைப்புக்குமான எண்ணங்களுக்கான வருடமாக மட்டும் குறிப்பிடப்படாமல், நீங்களும் அப்படி ஆகவேண்டும் என்றே பாபா விரும்புகிறார். யாராவது உங்களுக்கு எதிர்மறையான எதையும் கொடுத்தாலும் திடசங்கற்பத்தின் சக்தியையும் மாற்றத்திற்கான சக்தியையும் உங்களின் சதா சகபாடிகள் ஆக்குங்கள். நீங்கள் எதிர்மறையான எதையும் சாதகமாக மாற்றுவதற்கான பாடநெறிகளை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, உங்களால் எதிர்மறையான எதையும் சாதகமாக மாற்ற முடியாதா? மற்றவர்கள் புறத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். எனவே, ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களின் மீது உங்களுக்குக் கருணை உள்ளது. உயிரற்ற விக்கிரகங்கள் உங்களின் ரூபங்கள்தானே? பாரதத்தில், வழிபடப்படும் இரட்டை வெளிநாட்டவர்களின் ரூபங்களும் உள்ளதல்லவா? நீங்கள் தில்வாலா ஆலயத்தில் உங்களின் உருவங்களைக் கண்டுள்ளீர்கள்தானே? மிகவும் நல்லது. உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் கருணை நிறைந்தவையாக இருக்கும்போது, அந்த விக்கிரகங்களின் முன்னால் செல்லும்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘கருணை காட்டுங்கள்! இரக்கம் காட்டுங்கள்! கருணை கொள்ளுங்கள்! கருணை! கருணை!’ எனவே, முதலில் உங்களின் மீதே சதா கருணை கொள்ளுங்கள். அதன்பின்னர், பிராமணக் குடும்பத்தின் மீது கருணை கொள்ளுங்கள். சிலர் தமது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தால், அவர்கள் பலவீனமாக இருந்தால், அந்த வேளையில் அவர்கள் விவேகம் அற்றவர்களாக ஆகுகிறார்கள். அதனால், கோபப்படாதீர்கள். பாப்தாதா கோபத்தைப் பற்றிய அதிக எண்ணிக்கையான அறிக்கைகளைப் பெறுகிறார். கோபம் இல்லாவிட்டால், நீங்கள் அதன் குழந்தைகளின் மீது அதிகளவு அன்பு வைத்திருக்கிறீர்கள். அதிகார தோரணையும் கோபத்தின் குழந்தையே. ஆகவே, ஒரு குடும்பத்தில், வயதான குழந்தைகளின் மீதான அன்பு குறைந்து, பேரக்குழந்தைகளின் மீது அதிகளவு அன்பு ஏற்படுவதைப் போல், கோபமே தந்தை. அதிகார தோரணையும் தவறான போதையும் - போதையில் பல வகைகள் உள்ளன: உங்களின் புத்தியின் போதை, உங்களின் கடமையின் போதை, நீங்கள் செய்த விசேட வகையான சேவையின் போதை. அவை அனைத்துமே அதிகார தோரணைதான். எனவே, கருணை நிறைந்தவர் ஆகுங்கள், இரக்கம் காட்டுங்கள். பாருங்கள், புது வருடத்தில், நீங்கள் ஒருவர் மற்றவரின் வாய்களையும் இனிப்பூட்டுகிறீர்கள். நீங்கள் வாழ்த்துக்களையும் கொடுக்கிறீர்கள், அவர்களின் வாய்களையும் இனிப்பாக்குகிறீர்கள், அல்லவா? எனவே, வருடம் முழுவதும், எந்தவிதமான கசப்பையும் காட்டாதீர்கள். அவர்கள் வாய்களை இனிப்பாக்குகிறார்கள். நீங்கள் வாய்களை மட்டும் இனிப்பாக்கக் கூடாது, ஆனால் உங்களின் முகங்களும் இனிமையாக வேண்டும். உங்களின் முகங்கள் எப்போதும் ஆன்மீகத்தின் அன்பால் நிரம்பி இருப்பதுடன் எப்போதும் புன்னகைத்த வண்ணம் இருக்க வேண்டும். கசப்பு எதுவும் இருக்கக்கூடாது. உங்களில் பெரும்பாலானோர் பாப்தாதாவுடன் இதயபூர்வமாக உரையாடும்போது, நீங்கள் உங்களைப் பற்றி நேர்மையாக பாபாவிடம் சொல்கிறீர்கள். ஏனென்றால், வேறு எவரும் அதைக் கேட்க மாட்டார்கள். எனவே, பெரும்பாலானோரின் பெறுபேற்றில், கோபத்தினதும் கோபத்தின் குழந்தைகளினதும் பெரும் அறிக்கை காணப்படுகிறது.
எனவே, இந்தப் புது வருடத்தில், பாப்தாதா இந்தக் கசப்பை நீங்கள் நீக்க வேண்டும் என விரும்புகிறார். உங்களில் பலர், நீங்கள் அது வர விரும்பாவிட்டாலும் அது வருகிறது எனக்கூறி உங்களின் சத்தியங்களை எழுதியுள்ளீர்கள். எனவே, பாப்தாதா உங்களுக்குக் காரணத்தைக் கூறியுள்ளார். அது திடசங்கற்பம் குறைவதனாலேயே ஆகும். நீங்கள் பாப்தாதாவின் முன்னால் உங்களின் எண்ணங்களில் ஒரு சத்தியம் செய்கிறீர்கள். ஆனால், திடசங்கற்பம் எத்தகைய சக்தி என்றால், உலக மக்களும், ‘நீங்கள் உங்களின் சரீரத்தை விட நேரிட்டாலும் உங்களின் சத்தியத்தை மீறக்கூடாது’ என அதைப் பற்றிக் கூறுகிறார்கள். நீங்கள் இறக்க நேரிடலாம், தலைவணங்க வேண்டி இருக்கலாம், உங்களை மாற்ற நேரிடலாம், சகித்துக் கொள்ள வேண்டி இருக்கலாம். ஆனால், தமது சத்தியத்தில் உறுதியாக இருப்பவர்கள் மட்டுமே ஒவ்வோர் அடியிலும் வெற்றி பெறுகிறார்கள். ஏனென்றால், திடசங்கற்பமே வெற்றியின் சாவி ஆகும். உங்கள் எல்லோரிடமும் இந்தச் சாவி உள்ளது. ஆனால் உங்களுக்குத் தேவையானபோது நீங்கள் அதை இழந்து விடுகிறீர்கள். எனவே, உங்களின் எண்ணங்கள் என்ன?
புது வருடத்தில், நீங்கள் நிச்சயமாக புதுமையை ஏற்படுத்த வேண்டும்: உங்களிலும் உங்களுடன் ஒத்துழைப்பவர்களுடனும் உலக மாற்றத்திலும். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் இதைச் செவிமடுக்கிறீர்களா? எனவே, நீங்கள் இதைச் செய்யப் போகின்றீர்கள்தானே? மூத்தவர்கள் இதை முதலில் செய்வார்கள், நாங்கள் சிறியவர்கள் மட்டுமே என நினைக்காதீர்கள். சிறியவர்கள் தந்தைக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் மீது உரிமை உள்ளது. நீங்கள் இங்கே முதல் தடவை வந்திருந்தாலும், ‘எனது பாபா’ என நீங்கள் சொன்னதுமே, உங்களுக்கு ஓர் உரிமை உள்ளது. உங்களுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. அத்துடன் சகல பேறுகளுக்கான உரிமையும் உள்ளது. ஆசிரியர்களே, உங்களுக்கு இடையே ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். வெளிநாடுகளில் இருப்பவர்களும் பாரதத்தில் இருப்பவர்களும் ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். பாப்தாதா உங்களுக்கு ஒரு பரிசு வழங்குவார். இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள எந்தப் பிராந்தியம் முதல் இலக்கத்தைக் கோருவார்கள்? அவர்களுக்கு ஒரு தங்கக் கோப்பை வழங்கப்படும். உங்களை மட்டும், அத்துடன் உங்களின் சகபாடிகளை மட்டும் அவ்வாறு ஆக்காதீர்கள். ஏனென்றால், குழந்தைகளான உங்களின் மாற்றம் இல்லாமல், உலக மாற்றம் மெதுவாக இடம்பெறுகிறது, ஆத்மாக்கள் புதிய வகைகளில் துன்பத்தைப் பெறுகிறார்கள் என்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். துன்பமும் அமைதியின்மையும் வளர்வதற்குப் புதிய காரணங்கள் உள்ளன. அதனால், இப்போது, குழந்தைகளின் துன்பமான அழுகுரலைக் கேட்கும்போது, தந்தை மாற்றத்தைக் காண விரும்புகிறார். ஓ மாஸ்ரர் சந்தோஷத்தை அருள்பவர்களே, துன்பத்தை அனுபவிப்பவர்களின் மீது கருணை காட்டுங்கள்! பக்தர்களும் பக்தி செய்வதை இட்டுக் களைப்படைந்து விட்டார்கள். பக்தர்கள் தமது முக்திக்கான ஆஸ்தியைப் பெறச் செய்யுங்கள். உங்களுக்குக் கருணை உள்ளதா இல்லையா? உங்களின் சொந்த நேர அட்டவணைகளுடன் உங்களின் சொந்தச் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கிறீர்களா? நீங்களும் கருவிகளே. மூத்தவர்கள் மட்டும் கருவிகள் அல்ல. ‘எனது பாபா’ எனக் கூறி, அதை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு கருவியே. எனவே, இந்தப் புது வருடத்தில், நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளைக் கொடுக்கிறீர்கள், அல்லவா? எனவே, இப்போது நீங்கள் பக்தர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் ஒரு பரிசைப் பெறச் செய்ய வேண்டும். துன்பத்தை அனுபவிப்பவர்களை அவர்களின் துன்பத்தில் இருந்து விடுவியுங்கள். அவர்களுக்கு சாந்தி தாமத்தின் அமைதியை வழங்குங்கள். இந்தப் பரிசை அவர்களுக்குக் கொடுங்கள். பிராமணக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உங்களின் இதயபூர்வமாக அன்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற பரிசைக் கொடுங்கள். இந்தப் பரிசு என்ற களஞ்சியம் உங்களிடம் இருக்கிறதா? உங்களின் அன்பு, ஒத்துழைப்பு உள்ளதா? அவர்கள் முக்தி அடையச் செய்வதற்கான சக்தி உங்களிடம் உள்ளதா? அதிகளவு களஞ்சியத்தை வைத்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் இத்தகைய களஞ்சியம் உள்ளதா? உங்களிடம் சிறிதளவு களஞ்சியம் மட்டுமே உள்ளதா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, உங்களிடம் சிறிதளவு களஞ்சியம் உள்ளதா? பிரிஜ்மோகன் தனது கையை உயர்த்தவில்லை. உங்களிடம் இந்தக் களஞ்சியம் உள்ளதல்லவா? உங்களிடம் இந்தக் களஞ்சியம் இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்களா? உங்களிடம் இந்தக் களஞ்சியம் இருக்கிறதா? எனவே, நீங்கள் இந்தக் களஞ்சியத்தால் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அதைச் சேமித்து விட்டீர்களா? ஆசிரியர்களே, உங்களிடம் இந்தக் களஞ்சியம் உள்ளதல்லவா? எனவே, அதைத் தானம் செய்யுங்கள்! பெருந்தன்மையுடன் இருங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வார்கள்? உங்களிடம் மதுவனத்தில் இந்தக் களஞ்சியம் உள்ளதா? மதுவனத்தில் எல்லா இடங்களிலும் களஞ்சியம் நிரம்பி உள்ளது. எனவே, இப்போது அருள்பவர்கள் ஆகுங்கள். வெறுமனே சேமிக்காதீர்கள். அருள்பவர்களாகி, தொடர்ந்து வழங்குங்கள். இது ஓகேயா? அச்சா.
இப்போது, உங்களால் உங்களின் மனதின் அதிபதியாகி, ஒரு விநாடியில் உங்களின் மனதை ஸ்திரப்படுத்த முடிகிறதா? உங்களால் அதற்குக் கட்டளை இட முடிகிறதா? ஒரு விநாடியில் உங்களின் இனிய வீட்டுக்குச் செல்லுங்கள். ஒரு விநாடியில், சுவர்க்கமான உங்களின் இராச்சியத்திற்குச் செல்லுங்கள். உங்களின் மனம் உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதா? அல்லது, அது தளம்புகிறதா? அதிபதியான நீங்கள், தகுதிவாய்ந்தவராகவும் சக்திசாலியாகவும் இருந்தால், உங்களின் மனம் உங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது என்பது சாத்தியம் இல்லை. எனவே, இப்போது இதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் ஒரு விநாடியில் உங்களின் இனிய வீட்டுக்குச் செல்லுங்கள். நாள் முழுவதும் அவ்வப்போது இதைப் பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள். உங்களின் மனதின் ஒருமுகப்படுதல், உங்களையும் சூழலையும் சக்திவாய்ந்ததாக ஆக்கும். அச்சா.
எல்லோருடனும் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் எங்கும் உள்ள அதிகபட்ச மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும் எங்கும் உள்ள வெற்றியாளர் குழந்தைகள் எல்லோருக்கும் மாற்றத்தின் சக்தியுடன் சக்திசாலிகள் ஆகும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சதா தங்களையும் தந்தையையும் வெளிப்படுத்தும் குழந்தைகள் எல்லோருக்கும் சதா தீர்வுகளின் சொரூபங்களாகவும் உலகை மாற்றுபவர்களாகவும் உள்ள குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் அத்துடன் அவரின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இத்துடன்கூடவே, தந்தையின் தலைக் கிரீடங்களாகவும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் தலைக் கிரீடங்களாக உள்ள இத்தகைய குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் நமஸ்காரங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்திசாலி ஆத்மாவாகி, சதா முரளிதாரின் முரளியின் மீது அன்பு வைத்திருப்பீர்களாக.இந்தப் படிப்பு, அதாவது, முரளியின் மீது அன்பு கொண்ட குழந்தைகள், சதா சக்திசாலியாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். எந்தவிதத் தடையும் அவர்களின் முன்னால் இருக்க முடியாது. முரளிதரின் மீது அன்பு வைத்திருப்பது எனில், அவரின் முரளியின் மீதும் அன்பு வைத்திருத்தல் என்று அர்த்தம். முரளிதரின் மீது அதிகளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என நீங்கள் கூறியும், ஆனால் உங்களுக்கு முரளியைப் படிக்க நேரம் இல்லாவிட்டால், தந்தை அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏனென்றால், எங்கே அன்பு உள்ளதோ, அங்கே எந்தவிதமான சாக்குப்போக்குகளும் இருக்க முடியாது. இந்தப் படிப்பும் குடும்பத்தின் மீதான அன்பும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான கோட்டை ஆகுகிறது.
சுலோகம்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை வளைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் நிஜத்தங்கம் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
நீங்கள் சக்திவாய்ந்த, எரிமலை யோகத்தில் அமர்ந்திருக்கும்போது, ஒரு விநாடியில் எல்லாவற்றையும் அமிழ்த்தும் சக்தியைப் பயன்படுத்துங்கள். சேவைக்கான சகல எண்ணங்களும் அமிழ்ந்து போக வேண்டும். நீங்கள் ‘நிறுத்து’ என்று சொன்னவுடனேயே, உங்களால் ஒரு முற்றுப்புள்ளி இடக்கூடிய அளவிற்கு அதிகளவு சக்தியைக் கொண்டிருங்கள். சக்திவாய்ந்த ஒரு தடையைப் பிரயோகிக்க வேண்டும். பலவீனமான பிரேக் அல்ல. இதைச் செய்வதற்கு ஒரு விநாடியை விட அதிக நேரம் எடுக்குமாயின், உங்களின் அமிழ்த்தும் சக்தியிலும் நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.