07.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களை ஆழ்நரகத்திலிருந்து விடுவிப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இதற்காகவே தந்தையை இங்கு வரவழைத்தீர்கள்.
பாடல்:
குழந்தைகளாகிய நீங்களே அதிசிறந்த கைவினைஞன். எவ்வாறு? உங்கள் கைவினைத்திறன் என்ன?பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகையும் புதியதாக்குகின்ற அத்தகைய மகத்தான கைவினைத்திறனை மேற்கொள்கின்றீர்கள். இதற்காக நீங்கள் செங்கற்களையும், மோட்டார்களையும் தூக்குவதில்லை. நீங்கள் நினைவு யாத்திரையின் மூலமாகவே உலகைப் புதியதாக்குகின்றீர்கள். நீங்கள் புதிய உலகை வடிவமைக்கின்றீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்தவாறு, இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கு வருவதற்காக உங்கள் கிராமங்களிலிருந்து புறப்படும்போது, நீங்கள் சிவபாபாவின் பாடசாலைக்குச் செல்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்கின்றது. நீங்கள் ஒரு சாது அல்லது சந்நியாசியின் தரிசனத்திற்காகவோ அல்லது ஒரு சமயநூலைச் செவிமடுப்பதற்காகவோ செல்லவில்லை. நீங்கள் சிவபாபாவிடமே செல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். சிவன் மேலே வசிக்கின்றார் என உலக மக்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அவரை நினைவு செய்யும்போது, கண்களைத் திறந்தவாறு அமர்ந்திருப்பதில்லை. அவர்கள் தங்கள் கண்களை மூடியவாறே தியானத்தில் அமர்கின்றனர். ஏனெனில், அவர்களின் மனதில் சிவலிங்க ரூபம் உள்ளது. அவர்கள் சிவாலயத்திற்குச் சென்று சிவனை நினைக்கும்போது, மேலே பார்க்கின்றார்கள் அல்லது ஆலயத்தை நினைவுசெய்கின்றார்கள். பலர் தங்கள் கண்களை மூடியவாறே அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் பார்வை எவருடைய பெயரிலோ அல்லது உருவத்திலோ ஈர்க்கப்பட்டால், தங்கள் ஆன்மீக முயற்சி கலைந்துவிடும் என அவர்கள் நம்புகின்றனர். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தபோதிலும், உங்களிற் சிலர் ஸ்ரீ கிருஷ்ணரையும், சிலர் இராமரையும், சிலர் தங்கள் குருவையும் நினைவுசெய்வதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மக்கள் தங்கள் குருவின் படம் தாங்கிய சிறிய பேழையொன்றைச் செய்து, அதை அணிந்து கொள்கின்றனர். அவர்கள் பேழையொன்றைச் செய்து, அதனுள் சிறிய கீதை ஒன்றையும் வைத்து அணிந்து கொள்கின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. அவர்கள் வீட்டிலிருந்தவாறே கடவுளை நினைவுசெய்கின்றனர். அவர்கள் நினைவுசெய்தவாறே யாத்திரை செல்கின்றனர். அவர்கள் வீட்டில் ஒரு படத்தை வைத்து வழிபடலாம், எனினும் பிறவி பிறவியாக யாத்திரைகள் செல்வதே பக்தி மார்க்கச் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது. அவர்கள் நாலா திசைகளுக்கும் யாத்திரை செல்கின்றனர். அவர்கள் ஏன் நான்கு யாத்திரைகளைப் பற்றிப் பேசுகின்றனர்? அவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் சுற்றி வருகின்றார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பமாகும்போது, ஒரேயொருவரை மாத்திரமே வழிபட்டனர். அது கலப்படமற்ற பக்தி எனப்படுகின்றது. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் தமோபிரதானாக இருக்கின்றீர்கள். பக்தியும் கலப்படம் நிறைந்ததாகி விட்டது. அவர்கள் தொடர்ந்தும் பலரையும் நினைவுசெய்கின்றார்கள். அவர்கள் பஞ்ச தத்துவங்களாலான தமோபிரதான் சரீரங்களையும் வழிபடுகின்றார்கள். எனவே, அவர்கள் தமோபிரதான் தீய ஆவிகளை வழிபடுகின்றார்கள். எவ்வாறாயினும், எவருமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இங்கு அமர்ந்திருந்தாலும், அவர்களின் புத்தியின் யோகம் தொடர்ந்தும் வேறு எங்காவது அலைபாய்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, கண்களை மூடிய நிலையில் சிவபாபாவை நினைவுசெய்யக்கூடாது. தந்தை தொலைதூரவாசி என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமே நீங்கள் மேன்மையான தேவர்களாகுவீர்கள். தேவர்களின் முழு இராச்சியமும் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. இங்கு அமர்ந்திருக்கும்போதே, நீங்கள் உங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். முன்னர், அது எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. பாபா உங்கள் தந்தை என்பதையும், அவர் உங்கள் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும், பின்னர் உங்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று, சற்கதி அருள்கின்றார் என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அந்தக் குருமாரால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. இங்கு, அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சற்குரு உங்களைப் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். வயதான தாய்மாரால் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியாது. தங்களை ஆத்மாக்களாகக் கருதி சிவபாபாவை நினைவுசெய்வதே அவர்களுக்குப் பிரதானமான விடயமாகும். நீங்கள் அமர்ந்திருந்து, வயதான தாய்மாருக்கு எளிமையான வார்த்தைகளில் விளங்கப்படுத்த வேண்டும்: நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். பாபா எங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியை வழங்குவார். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தந்தையிடமிருந்து தனது ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது. மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. பழைய உலகம் நிச்சயமாகப் புதியதாகும். பின்னர் புதிய உலகம் பழையதாகும். ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்குச் சில மாதங்களே எடுக்கின்றன. ஆனால் அந்த வீடு மீண்டும் பழையதாகுவதற்கு 100 வருடங்கள் எடுக்கின்றன. பழைய உலகம் அழியப் போகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது இடம்பெறப்போகும் யுத்தம் 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இடம்பெறும். வயதான தாய்மார்களால் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு விளங்கப்படுத்துவது ஆசிரியர்களாகிய உங்கள் கடமையாகும். ஒரு வாக்கியமே அவர்களுக்குப் போதுமானது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் வசிப்பவர்கள். பின்னர் நீங்கள் இங்கு வந்து, உங்கள் பாகத்தை நடிப்பதற்காக ஒரு சரீரத்தை எடுக்கின்றீர்கள். ஆத்மாக்கள் இங்கேயே சந்தோஷமும், துக்கமும் என்ற தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். தந்தை கூறுகின்ற பிரதான விடயம்: என்னையும், சந்தோஷ பூமியையும் நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை எந்தளவிற்கு நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆன்மீக ஒன்றுகூடல்களில் சமயக் கதைகளைச் செவிமடுக்கும் பழக்கம் வயதான தாய்மார்களுக்கு உண்டு. அவர்களுக்கு மீண்டும், மீண்டும் தந்தையை நினைவுசெய்யுமாறு ஞாபகப்படுத்த வேண்டும். ஒரு பாடசாலையில் நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் சமயக் கதைகளைச் செவிமடுப்பதில்லை. பக்தி மார்க்கத்தில், நீங்கள் பல சமயக் கதைகளைச் செவிமடுத்தீர்கள், எனினும், அவற்றால் எவ்விதப் பயனும் இருக்கவில்லை. உங்களால் இந்த அழுக்கான உலகிலிருந்து, புதிய உலகிற்குச் செல்ல முடியவில்லை. மனிதர்களுக்குப் படைப்பவராகிய தந்தையையோ அல்லது அவருடைய படைப்பையோ தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: நேற்றி, நேற்றி (இதுவுமல்ல, அதுவுமல்ல). முன்னர் நீங்களும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் பக்தி மார்க்கத்தைப் பற்றி மிக நன்றாக அறிந்துள்ளீர்கள். பலர் தங்கள் வீடுகளில் விக்கிரகங்களை வைத்திருக்கின்றார்கள். எல்லாம் ஒன்றேயாகும் (ஆலயத்தில் இருந்தாலென்ன, வீட்டில் இருந்தாலென்ன). சில கணவன்மார் தங்கள் மனைவிகளுக்குக் கூறுகின்றனர்: வீட்டில் விக்கிரகத்தை வைத்து வழிபடுங்கள். நீங்கள் ஏன் வெளியில் அலைந்து திரிய வேண்டும்? எவ்வாறாயினும், அவர்கள் ஆலயத்திற்குச் செல்கின்ற, பக்தி உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள். யாத்திரைகள் செல்வதென்பது, பக்தி மார்க்கத்தில் அலைந்து திரிவதையே குறிக்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் பல தடவைகள் சுற்றி வந்தீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் எந்த யாத்திரைகளும் இடம்பெறுவதில்லை. அங்கு ஆலயங்கள் போன்ற எதுவுமே இல்லை. யாத்திரைகள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திலேயே இடம்பெறுகின்றன. அந்த விடயங்கள் எதுவும் ஞான மார்க்கத்தில் இடம்பெறுவதில்லை. அது பக்தி எனப்படுகின்றது. ஒரேயொருவரைத் தவிர, வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஞானத்தின் மூலம் சற்கதி பெறப்படுகின்றது. தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். எவரும் சிவபாபாவை ‘ஸ்ரீ ஸ்ரீ’ என அழைக்க முடியாது. அவருக்கு ஒரு பட்டம் தேவையில்லை. அவர்கள் அவரின் மகத்துவத்தையே புகழ்கின்றனர். அவர்கள் அவரை “சிவபாபா” என அழைக்கின்றனர். நீங்கள் அவரைக் கூவி அழைக்கின்றீர்கள்: சிவபாபா, நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம்! வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! பக்தி மார்க்கத்தில் மக்கள் புதைகுழிக்குள் கழுத்துவரை மூழ்கி விட்டார்கள். அவர்கள் அதில் அகப்பட்டதனால் கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் நச்சு விகாரங்களினால் அந்தப் புதைகுழியினுள் முற்றாக அகப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஏணியில் கீழிறங்கி வரும்போது, அதில் அகப்பட்டு விடுகின்றார்கள். எவருக்குமே என்ன செய்வதென்று தெரியாததால், அவர்கள் கூறுகின்றனர்: பாபா, எங்களை இங்கிருந்து விடுவியுங்கள்! நாடகத்திற்கேற்ப, பாபா வந்தாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் இந்தப் புதைகுழியிலிருந்து விடுவிப்பதற்குக் கட்டுப்பட்டிருக்கின்றேன். இந்தப் புதைகுழி ஆழ் நரகம் எனப்படுகின்றது. தந்தை இங்கிருந்து, இதனை விளங்கப்படுத்துகின்றார். அந்த மக்கள் இதனை அறிய மாட்டார்கள். நீங்கள் தந்தைக்கு எந்தவிதமான அழைப்பிதழைக் கொடுக்கின்றீர்கள் எனப் பாருங்கள்! பொதுவாக, திருமணங்கள் போன்றவற்றிற்கே அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் கூறுகின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரான பாபாவே, இராவணனின் இந்தத் தூய்மையற்ற, பழைய உலகிற்கு வாருங்கள்! நாங்கள் கழுத்துவரை புதையுண்டுள்ளோம். தந்தையைத் தவிர, வேறு எவராலுமே எங்களை அதிலிருந்து விடுவிக்க முடியாது. நீங்களும் கூறுகின்றீர்கள்: தொலைதூர வாசியாகிய சிவபாபாவே. இது இராவண இராச்சியம், சகல ஆத்மாக்களும் தமோபிரதானாகி விட்டதால், கூவியழைக்கின்றனர்: வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! அவர்கள் உரத்துப் பாடுகின்றனர்: தூய்மையாக்குபவரே! சீதையின் இராமரே! அவர்கள் தூய்மையாக இருக்கின்றார்கள் என்றில்லை. இந்த உலகம் தூய்மையற்றது, இது இராவண இராச்சியம், நீங்கள் இதில் அகப்பட்டிருக்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள், இந்த அழைப்பை விடுத்தீர்கள்: பாபா, வந்து, எங்களை இந்த ஆழ்நரகத்திலிருந்து விடுவியுங்கள். எனவே தந்தை வந்துள்ளார். அவர் உங்களின் அத்தகையதொரு கீழ்ப்படிவான சேவகன். குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தில் அளப்பரிய துன்பத்தைக்; கண்டுள்ளீர்கள். நேரம் தொடர்ந்தும் கடந்து செல்கிறது. ஒரு விநாடி, அடுத்த விநாடி போன்று இருக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்களை இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆக்குகின்றார். பின்னர் நீங்கள் அரைக் கல்பத்திற்கு ஆட்சிசெய்வீர்கள். இதனை உங்கள் விழிப்புணர்விற்குக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. மரணம் சம்பவிக்க ஆரம்பிக்கும்போது, மக்கள் குழப்பம் அடைவார்கள். குறுகிய காலத்தினுள் பல சம்பவங்கள் இடம்பெறும். பெரும் சத்தத்தைக் கேட்டவுடன் சிலரின் இதயம் நின்றுவிடும். அவ்வாறாகச் சிலர் மரணமடைவதைப் பற்றிக் கேட்கவும் வேண்டாம்! பாருங்கள்! பல வயோதிபத் தாய்மார்கள் வந்துள்ளனர். அப்பாவித் தாய்மார்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. மற்றவர்கள் யாத்திரை செல்வதைக் காணும்போது, அவர்கள் தாங்களும் செல்ல ஆயத்தமாகி விடுகின்றார்கள். கீழிறங்குவதும், தமோபிரதானாகுவதுமே பக்தி மார்க்கத்து யாத்திரையின் அர்த்தம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். உங்களின் இந்த யாத்திரையே அனைத்திலும் மகத்துவமான யாத்திரையாகும். இதன் மூலமாகவே நீங்கள் தூய்மையற்ற உலகிலிருந்து, தூய உலகிற்குச் செல்கின்றீர்கள். எனவே, குறைந்தபட்சம் நீங்கள் இக் குழந்தைகளுக்கு சிவபாபாவையேனும் நினைவுபடுத்தவேண்டும். ‘நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கின்றீர்களா?” என அவர்களிடம் வினவுங்கள். அவர்கள் சிறிதளவைச் செவிமடுத்தாலும், சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அவர்கள் நிச்சயமாக இப்பலனைப் பெறுவார்கள். எவ்வாறாயினும், இக்கல்வி மூலமே நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடுள்ளது. அதியுயர்ந்தவருக்கும், அதி தாழ்ந்தவருக்குமிடையில் பகலிற்கும் இரவிற்குமிடையிலான வேறுபாடுள்ளது. பிரதம மந்திரிக்கும், ஒரு சேவகனுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஓர் இராச்சியத்தில், அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். சுவர்க்கத்திலும் ஓர் இராச்சியம் இருக்கும். எனினும், விகாரம் நிறைந்த, அழுக்கான பாவாத்மாத்மாக்கள் எவரும் அங்கு இருக்க மாட்டார்கள். அது விகாரமற்ற உலகமாகும். நீங்கள் நிச்சயமாக இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவீர்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவதை வயோதிபத் தாய்மார்கள் காணும்போது, அவர்களும் தங்களது கரங்களை உயர்த்துகிறார்கள். அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. இருந்தபோதிலும், அவர்கள் தந்தையிடம் வந்துள்ளதால், சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். எவ்வாறாயினும், அனைவராலும் ஒரே அந்தஸ்தைப் பெற முடியாது. அங்கே பிரஜைகளும் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் ஏழைகளின் பிரபு. எனவே, ஏழைகளைக் கண்டு பாபா பூரிப்படைகின்றார். ஒருவர் எவ்வளவுதான் கோடீஸ்வரராக இருந்தாலும், ஓர் ஏழையால் 21 பிறவிகளுக்கு அவரை விடவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியும். இதுவும் நல்லதே. வயோதிபத் தாய்மார் இங்கு வரும்போது, தந்தை மகிழ்ச்சி அடைகிறார். ஏனெனில் அவர்களால் குறைந்தபட்சம் ஸ்ரீ கிருஷ்ண பூமிக்குச் செல்லவேனும் முடியும். இது இராவணனின் தேசமாகும். உங்களில் மிக நன்றாகக் கற்பவர்களால் ஸ்ரீகிருஷ்ணரை உங்கள் மடியில் வைத்துத் தாலாட்ட முடியும். பிரஜைகள் மாளிகையினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாப்பரசர் யன்னலினூடாகக் காட்சி கொடுப்பதைப் போன்று, அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனத்தைப் பெறக்கூடும். அவருடைய தரிசனத்தைப் பெறுவதற்காக நூறாயிரக் கணக்கான மக்கள் வெளியில் ஒன்றுகூடுகின்றனர். எவ்வாறாயினும், நாங்கள் ஏன் அவருடைய தரிசனத்தைப் பெற வேண்டும்? ஒரேயொரு தந்தையே என்றென்றும் தூய்மையானவர். அவர் எங்களைத் தூய்மையாக்குவதற்கு வருகின்றார். அவர் முழு உலகையும் சதோபிரதான் ஆக்குகின்றார். இந்த ஐந்து தீய ஆவிகளும் அங்கு இருக்க மாட்டாது. பஞ்ச தத்துவங்களும் சதோபிரதானாகுகின்றன. அவை உங்கள் அடிமைகள் ஆகும். சேதம் விளைவிக்குமளவிற்கு, காலநிலை வெப்பம் மிகுந்ததாக இருக்க மாட்டாது. பஞ்ச தத்துவங்களும் ஒழுங்குமுறையாக இயங்கும். அங்கு அகால மரணம் என்பதில்லை. இப்பொழுது, நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதால், உங்கள் புத்தியின் யோகத்தை நரகத்திலிருந்து அகற்ற வேண்டும், அதாவது, நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டும்போது, உங்கள் புத்தி பழையதிலிருந்து விடுபட்டிருப்பதைப் போன்றதாகும். புத்தி புதியதை நோக்கி ஈர்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது ஓர் எல்லையற்ற விடயமாகும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது, பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. நீங்களே சுவர்க்கம் என்ற புதிய உலகை நிர்மாணிப்பவர்கள். நீங்கள் மிகச் சிறந்த கைவினைத்திறன் உடையவர்கள். நீங்கள் உங்களுக்காகவே சுவர்க்கத்தை நிர்மாணிக்கின்றீர்கள். நீங்கள் நினைவு யாத்திரையின் மூலம் புதிய உலகமாகிய சுவர்க்கத்தைக் கட்டியெழுப்புகின்ற, மிகச் சிறந்த கைவினைத்திறன் உடையவர்கள். நீங்கள் சிறிதளவு நினைவைக் கொண்டிருந்தாலும், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் உங்களுடைய சுவர்க்கத்தை மறைமுகமான முறையில் உருவாக்குகின்றீர்கள். உங்கள் தற்போதைய சரீரங்களை நீக்கிவிட்டு, பின்னர் சுவர்க்கத்திற்குச் சென்று வாழ்வீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எனவே, அத்தகைய எல்லையற்ற தந்தையை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்காகவே கற்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இந்த இராவண இராச்சியம் அழியப ;போகின்றது. எனவே, நீங்கள் அத்தகைய சந்தோஷத்தை அகத்தே அனுபவம் செய்ய வேண்டும். நாங்கள் முன்னரும் பல தடவைகள் சுவர்க்கத்தை உருவாக்கியுள்ளோம். முன்னர் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் அதை இழந்துள்ளோம். நீங்கள் இதையேனும் நினைவு செய்தீர்களாயின், மிகவும் நல்லது. நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம். தந்தையே எங்களை அவ்வாறு ஆக்கினார். தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். நீங்கள் அத்தகையதோர் இலகுவான முறையில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். பழைய உலகின் விநாசத்திற்காகப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழைய உலகம் முழுவதுமே இயற்கை அனர்த்தங்கள், ஏவுகணைகள் போன்றவற்றால் அழிக்கப்படும். தந்தை உங்களுக்கு அதி மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுத்து, மேன்மையான சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக இப்பொழுது வந்துள்ளார். நீங்கள் சுவர்க்கத்தைப் பல தடவைகள் ஸ்தாபித்தீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் இராச்சியத்தைப் பல தடவைகள் பெற்று, பல தடவைகள் இழந்தீர்கள். இது உங்கள் புத்தியில் தொடர்ந்தும் சுழல்வதுடன், இந்த விடயங்களைப் பற்றி, ஒருவரோடொருவர் பேசவும் வேண்டும். உலக விடயங்களைப் பற்றிப் பேசுவதில் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது. தந்தையை நினைவுசெய்து, சுயதரிசன சக்கரதாரிகள் ஆகுங்கள். இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் மிகக் கவனமாகச் செவிமடுத்து, நன்றாக ஜீரணிக்க வேண்டும். பாபா கூறுவதைப் பற்றியே நீங்கள் சதா சிந்திக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் சிவபாபாவையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். தந்தை உங்களுக்குத் தனது உள்ளங்கையில் சுவர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார். நீங்களும் தூய்மையாக வேண்டும். நீங்கள் தூய்மையாகாது விட்டால், தண்டனையை அனுபவிக்க நேரிடும். அத்துடன், நீங்கள் மிகவும் தாழ்ந்த ஓர் அந்தஸ்தையே பெறுவீர்கள். சுவர்க்கத்தில் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற விரும்பினால், இதை மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ளுங்கள். தந்தை உங்களுக்கு மிக இலகுவான பாதையைக் காட்டுகின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை கூறுகின்ற விடயங்கள் அனைத்தையும் கவனமாகச் செவிமடுத்து, அவற்றை நன்றாக ஜீரணித்துக் கொள்ளுங்கள். உலக விடயங்களைப் பற்றிப் பேசுவதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.2. உங்கள் கண்களை மூடியவாறு தந்தையின் நினைவில் அமர்ந்திருக்காதீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியத்திற்குச் செல்வதற்காக, நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
உங்களின் மனதையும், புத்தியையும் குழப்பத்தில் (ஜமேலா) இருந்து அப்பால் எடுத்து, அதிலிருந்து விடுபடுவதன் மூலம் ஒன்றுகூடலின் (மேலா) சந்திப்பைக் கொண்டாடுவீர்களாக.தமது குழப்பம் முடிவடைந்ததும், தமது ஸ்திதியும் தமது சேவையும் நல்லதாகும் எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால், அந்தக் குழப்பமோ மலையைப் போன்றது. மலை அசையாது. எனவே, நீங்கள் உங்களின் பறக்கும் ஸ்திதியால் உங்களின் மனதையும் புத்தியையும் அப்பால் எடுத்துச் சென்று, அந்தக் குழப்பமான மலைக்கு மேலே பறந்து செல்ல வேண்டும். அப்போது அந்த மலையை நீங்கள் இலகுவானதாக அனுபவம் செய்வீர்கள். குழப்பமான உலகில், அதிகளவு குழப்பம் நிலவும். ஆனால், நீங்கள் அதிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். அத்துடன், உங்களால் ஒன்றுகூடலுடன் ஒரு சந்திப்பையும் கொண்டாட முடியும்.
சுலோகம்:
இந்த எல்லையற்ற நாடகத்தில் கதாநாயக பாகங்களை நடிப்பவர்களே, கதாநாயக நடிகர்கள் ஆவார்கள்.