07.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் தாமதித்து வந்த போதிலும் நீங்கள் துரிதமான முயற்சி செய்தீர்களாயின் உங்களால் முந்திச் செல்ல முடியும். பிறரைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து உங்கள் சொந்த முயற்சிகளில் மும்முரமாக இருங்கள்.

கேள்வி:
தந்தையின் எந்த ஒரு பணியை எந்த மனிதராலும் மேற்கொள்ள முடியாது?

பதில்:
மனிதர்களைத் தேவர்களாக மாற்றி அவர்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அதிபதிகள் ஆக்குவது ஒரேயொரு தந்தையின் பணி மாத்திரமே. எந்த மனிதராலும் இந்தப் பணியை மேற்கொள்ள முடியாது. சங்கம யுகத்தில் மாத்திரமே நீங்கள் கடவுளின் வாசகங்களைச் செவிமடுக்கிறீர்கள் எனும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. முன்னைய கல்பத்தில் கற்பித்தவாறு கடவுளே இப்பொழுதும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற ஆன்மீகத் தந்தை எல்லையற்ற ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த ஒவ்வொரு ஞான வாசகமும் அல்லது இரத்தினமும் பல நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தன. கடவுளும் “ரூப் பசாந்” என்று அழைக்கப்படுகிறார் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவருக்கு ஒரு வடிவம் உள்ளதுடன் அவர் பெயர் சிவபாபா ஆகும். அவரே ஞானக்கடல் ஆவார். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் சற்கதியைப் பெறுகிறீர்கள். ஞானம் செல்வமும் ஒரு கல்வியும் ஆகும். ஆன்மீகத் தந்தையே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஓர் ஆத்மா ஆன்மீகமானவர் என்று அழைக்கப்படுகிறார். பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்கள் தந்தையைச் சந்திப்பதற்காக அதிகளவில் தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் அவரைத் தேடுகின்றனர். அவர்கள் சிவனே கடவுள் என்று நம்புகின்றார்கள். இருந்தும் அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றார்கள். தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் அழிவற்றவர்களும் பரந்தாமவாசிகளும் ஆவீர்கள். அங்கிருந்தே நீங்கள் இங்கே கீழே உங்கள் பாகத்தை நடிப்பதற்காக வருகிறீர்கள். நீங்கள் தொலைதூர வாசிகள் ஆவீர்கள். இது ஒரு நாடகம். இது வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு நாடகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானும் நீங்கள் அனைவரும் அமைதிதாம வாசிகள் ஆவோம். அதுவும் “நிர்வாணா” உலகம் என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் முதலில் நீங்கள் அவ்விடவாசிகள் எனும் நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஆத்மாக்களாகிய எங்களின் ஆதிதர்மம் அமைதி ஆகும். புள்ளியான ஆத்மாவிலேயே அழியாத இம்முழுப்பாகமும் பதியப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் உலக மக்களையிட்டுக் கவலைப்படுகிறீர்கள். வேறெந்த நேரத்திலும் அல்லாது சங்கம யுகத்தில் மட்டுமே கடவுளின் வாசகங்கள் பேசப்படுகின்றன எனும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. வேறு எவராலுமே மனிதர்களைத் தேவர்களாக மாற்ற முடியாது. அவர்களால் எவரையுமே அமைதி தாமத்தின் அல்லது சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்க முடியாது. தந்தை முன்னைய கல்பத்திலும் உங்களை அவ்வாறு ஆக்கினார். இப்பொழுது ஜனாதிபதியாக இருப்பவர் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளின் பின்னரும் ஜனாதிபதி ஆகுவார். முழு உலகின் காட்சிகளும் பக்கக் காட்சிகளும் 5000 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இடம்பெறும். வயோதிபத் தாய்மார்களினால் இவ்விடயங்கள் அனைத்தையுமே கிரகிக்க முடியாததால் மூன்று விடயங்களை நினைவில் வைத்திருக்குமாறு அவர்களிடம் கூறப்படுகிறது: ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதிதாம வாசிகள். அதன் பின்னர் நாங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்கிறோம், அரைக்கல்பத்தின் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது நாங்கள் விகாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறோம். அது துன்ப தாமம் எனப்படுகிறது. துன்ப தாமம் முடிவடையும் பொழுது தந்தை வந்து கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்துக்கும் மீண்டும் அழைத்துச் செல்வதற்கே நான் வந்திருக்கின்றேன். முன்னர் வந்து தந்தைக்கு உரியவர்களாக ஆகியவர்கள் இப்பொழுதும் வந்து தங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்வார்கள். சூரியவம்ச, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. பல் கோடிக்கணக்கான மக்கள் வந்து தந்தை கூறுவதைச் செவிமடுத்து ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்வார்கள். அதிகளவு வளர்ச்சி இருக்கும். நீங்கள் எங்கும் சென்று அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். பலர் பத்திரிகைகள் வாயிலாகவும் இதனைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். பாகிஸ்தானிலும் கூட இதைப் பற்றி அவர்கள் பத்திரிகைகளில் வாசிப்பார்கள். அங்கே அமர்ந்தவாறே அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுப்பார்கள். உலகம் முழுவதிலும் கீதை வெளியிடப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்வதுடன் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அவர்கள் இதைப் பத்திரிகைகளில் வாசிக்கும் பொழுது பலரும் பிராமணர்கள் ஆகுவார்கள். தங்கள் ஆஸ்தியைப் பெற விரும்பியவர்கள் நிச்சயமாக வந்து அதனைப் பெற்றுக் கொள்வார்கள். இன்னமும் குறுகிய காலமே எஞ்சியுள்ளதுடன் வளர்ச்சியும் தொடர்ந்தும் இடம்பெறும். தாமதித்து வருபவர்கள் விரைவான முயற்சியைச் செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் சுவர்க்க வாசிகள் ஆனவர்கள் இப்பொழுதும் அவ்வாறு ஆகுவார்கள். இதில் சிறிதளவேனும் வேறுபாடு இருக்க முடியாது. அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குரிய நேரத்தில் தங்கள் பாகத்தை வந்து நடிப்பார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் வீட்டைச் சென்று அடைவீர்கள். முக்திக்காகச் சந்நியாசிகள் அதிகளவு பிரயத்தனம் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் முக்தி மாத்திரமே வேண்டும் என அனைவருக்கும் கூறுகிறார்கள். சந்தோஷம் காக்கை எச்சத்தைப் போன்றது என அவர்கள் கூறுகிறார்கள். சத்திய யுகத்தில் கூட துன்பகரமான விடயங்கள் உள்ளன எனச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் எதையுமே புரிந்து கொள்ளவில்லை. கடவுள் வர வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். “பரமாத்மாவான தூய்மையாக்குபவரே வந்து எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!”. மறுபுறத்தில் கங்கையே தூய்மையாக்குபவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கங்கையில் நீராடுவது, யாகம் வளர்ப்பது, தபஸ்யா செய்வது, தீர்த்தயாத்திரை செய்வது என அனைத்துமே கடவுளுக்கான பாதைகள் என அவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் தந்தையை அழைத்திருக்கிறீர்கள், அப்படி இருக்கும்போது ஏன் தொடர்ந்தும் அலைந்து திரிகிறீர்கள்? அந்தப் பக்தி மார்க்கங்கள் அனைத்துமே நிச்சயிக்கப்பட்டவை. மக்கள் தங்கள் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் கடவுளைக் காண எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். கடவுளைச் சந்திப்பதற்கு பக்தர்கள் கடவுளிடம் செல்ல வேண்டுமா அல்லது கடவுள் இங்கே வரவேண்டுமா? தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கே செல்ல முடியாது. உங்களை அங்கே அழைத்துச் செல்வதற்காகத் தந்தை இங்கே வருகிறார். ஆத்மாக்கள் அனைவரதும் வழிகாட்டி ஒரேயொருவரே ஆவார். நீங்களும் தூய்மையாகி அவரைப் பின்தொடர்வீர்கள். மணவாளன் உங்களைச் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆக்குவதற்காக இந்த ஞான இரத்தினங்களால் உங்களை அலங்கரிக்கிறார். இன்னாரை ஸ்ரீகிருஷ்ணர் கடத்திச் சென்று தனது இராணி ஆக்கினார் என்று அவர்கள் காட்டுகிறார்கள். உண்மையிலேயே அவ்விடயங்கள் அவருக்குப் பொருந்துபவை அல்ல. நீங்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினிகள் ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள். மீண்டும் உங்களை அவ்வாறு ஆக்குவதற்காகவே இப்பொழுது தந்தை வந்துள்ளார். இது 84 பிறவிகளுக்கான விடயம். எவராலும் 8.4 மில்லியன் பிறவிகளை நினைவில் வைத்திருக்க முடியாது. அவர்கள் சத்தியயுகத்திற்குப் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளையும் திரோதாயுகத்திற்குக் குறைந்தளவு ஆண்டுகளையும் காட்டியுள்ளனர். இந்தக் கணக்கு பொருந்தாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிகவும் இலகுவாகக் கூறுகிறார்: இரண்டே இரண்டு விடயங்களை நினைவில் வைத்திருங்கள்: அல்பாவும் பீட்டாவும். அவ்வாறாயின் நீங்கள் தூய்மை ஆகுவதுடன் பறந்து சென்று ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுவீர்கள். எது நடந்தாலும் நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்வதில் அக்கறை கொள்ள வேண்டும். மாயையின் புயல்களும் வரும். ஆனால் நீங்கள் தோற்கடிக்கப்படக் கூடாது. எவரேனும் கோபம் அடைந்தாலும் நீங்கள் எதனையுமே கூறக்கூடாது. சந்நியாசிகளும் கூறுகிறார்கள்: ஓர் அதிர்ஷ்ட மந்திரத்தை உங்கள் வாயில் இட்டீர்களாயின் மற்றவர் அதிகளவு பேசினாலும் பின்னர் மௌனமாகி விடுவார்கள். தந்தையும் கூறுகிறார்: எவரேனும் உங்களுடன் கோபத்துடன் பேசினால் மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் நீங்கள் நிச்சயமாகச் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபாவின் நினைவின் மூலமே உங்கள் ஆஸ்தியை நீங்கள் நினைவு செய்வீர்கள். உங்கள் அதீந்திரியசுகம் நினைவு கூரப்படுகிறது: நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க இளவரசிகள் ஆகுவீர்கள். அங்கே துன்பத்தின் குறிப்பே இருக்காது. நீங்கள் 50 அல்லது 60 பிறவிகளுக்கு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். சந்தோஷ காலமே அதிகளவாக இருக்கும். இன்பமும் துன்பமும் சமமாக இருந்தால் அதில் என்ன பயன்? நீங்கள் அதிகளவு செல்வத்தையும் கொண்டிருக்கிறீர்கள். மிக அண்மைக்காலம் வரைக்கும் இங்கு தானியங்கள் மிக மலிவாகவே இருந்தது. அரசர்கள் சிறந்த இராச்சியங்களைக் கொண்டிருந்தனர். பாபா 37 கிலோ தானியத்தை 10 அணாக்களுக்கே (1ரூபாய்-16அணாக்களுக்கு சமன்) விற்றார். ஆதலால் அதற்கு முன்னர் அனைத்துமே மிகவும் மலிவாக இருந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் வெகுசிலரே இருந்திருப்பார்கள். உணவைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருந்திருக்காது. முதலில் நீங்கள் வீட்டுக்குச் சென்று பின்னரே உங்கள் புதிய பாகத்தை நடிப்பதற்குப் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அங்கே உங்கள் சரீரம் சதோபிரதானான தத்துவங்களால் உருவாக்கப்படும். இப்பொழுது பஞ்ச பூதங்களும் முற்றிலும் தமோபிரதானாகவும் தூய்மையற்றதும் ஆகியுள்ளன. ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையற்றதாக உள்ளன. அங்கே சரீரம் நோய்வாய்ப்படாது. இவ்விடயங்கள் அனைத்துமே புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்துமே மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்படுகின்றன. ஆனால் நீங்கள் வீடு திரும்பியதும் அவற்றை மறந்து விடுகிறீர்கள். இங்கே முகில்கள் நிறைந்து இருக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வெளியே சென்றவுடன் மறந்துவிடுகிறார்கள். முன்னர் அதிகளவில் நடனம் ஆடினார்கள். அவை அனைத்துமே பின்னர் நிறுத்தப்பட்டு விட்டன. இங்கே மந்திர வித்தை உள்ளது என மக்கள் எண்ணினார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தீவிரமான பக்தி செய்யும் பொழுது மிகச் சிரமத்தின் பின்னரே காட்சிகளைப் பெறுகிறார்கள். இங்கே பக்தி எனும் கேள்விக்கே இடமில்லை. வெறுமனே அமர்ந்திருந்தவாறே அவர்கள் “திரான்ஸில்” செல்வதால் இங்கே மந்திர வித்தை உள்ளது என மக்கள் நினைத்தார்கள். இந்நாட்களில் பலர் கடவுள்கள் ஆகியுள்ளனர்! அவர்கள் தங்களுக்கு சீதாராம்இ ராதாகிருஷ்ணர் முதலான பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள். சுவர்க்க அதிபதிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. இந்நேரத்தில் அனைவருமே நரகவாசிகள் ஆவார்கள். இது ஏணிப்படத்தில் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் ஏணிப்படத்தை தங்கள் சொந்தக் கடைதலின் மூலம் உருவாக்கி உள்ளனர். இதனைக் கண்டு பாபா மிகவும் பூரிப்படைந்தார். ஏணிப்படத்தில் அனைத்துமே அடங்கியுள்ளது: தொடர்ந்தும் பக்தி செய்கின்ற பொழுது விகாரங்கள் நிறைந்த அரசர்கள் எவ்வாறு துவாபரயுகத்தில் இருந்து தொடர்ந்தும் கீழிறங்கினார்கள் என்பதை அதில் அறியலாம். இப்பொழுது அவர்களுக்குக் கிரீடங்கள் இல்லை. படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. எவ்வாறு 84 பிறவிகளுக்கான கீழிறங்கும் ஸ்திதியும் பின்னர் மேலேறும் ஸ்திதியும் உள்ளது என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் பாடுகிறார்கள்: மேலேறும் ஸ்திதியினால் அனைவருக்கும் நன்மையே உள்ளது. தந்தை வந்து அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறார். அனைவரும் அழைக்கின்றனர்: ஓ பாபா எங்கள் துன்பத்தை நீக்கி எங்களுக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்! எவ்வாறாயினும் அவர் எவ்வாறு அவர்களின் துன்பத்தை நீக்கி அவர்களுக்குச் சந்தோஷத்தை அருள்கிறார் என்பது எவருக்குமே தெரியாது. இந்நாட்களில் மக்கள் கீதையை மனப்பாடம் செய்து பின்னர் அதனைக் கூறுகிறார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தை இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்துகிறார்கள். அவர்கள் சம்ஸ்கிருதத்தில் சுலோகங்களை (வாசகங்கள்) மனப்பாடம் செய்து கூறுவதனால் மக்கள் அந்த மகாத்மா மிகவும் சிறந்தவர் எனக் கருதுகிறார்கள். நூறாயிரக் கணக்கான மக்கள் சென்று அவரைத் தரிசிக்கிறார்கள். அந்த லௌகீகக் கல்வி கற்க 15 அல்லது 20 வருடங்கள் எடுக்கின்றன. ஒருவர் மிகவும் திறமைசாலியாக இருந்தால் அவரால் விரைவில் அனைத்தையும் மனப்பாடம் செய்து அதனைக் கூறிப் பெருமளவு பணத்தைச் சம்பாதிக்கவும் இயலும். அவ்விடயங்கள் அனைத்தும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வழிகளாகும். ஒருவர் கடனாளி ஆகும்பொழுது அவர் சென்று துறவறத்தை மேற்கொள்கிறார், ஆகவே அவருடைய கவலைகள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. அவர் ஏதாவதொரு மந்திரத்தை நினைவு செய்து எங்கும் யாத்திரை செய்கிறார். அவர் புகையிரதம் மூலம் தொடர்ந்தும் எங்கும் செல்கிறார். இங்கு தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையும் ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் வசிக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்குப் பௌதீக உலகத்துக்குள் வருகிறார்கள். இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. நீங்கள் தமோபிரதானாக இருப்பதனால் உங்களால் வீடு திரும்பிச் செல்ல முடியாது. பாபா உங்களை சதோபிரதான் ஆக்குவதற்காக இப்பொழுது வந்துள்ளார். அனைவரும் வீடு திரும்பிச் செல்வார்கள், பின்னர் சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருக்கும். அமைதி தாமம் அல்லது சந்தோஷ தாமம் அல்லது துன்ப தாமம் எப்பொழுது இருந்தது என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. ஏனெனில் அவர்கள் காரிருளில் இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் கலியுக இறுதி வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களிடம் அதற்கான சரியான கணக்கு இல்லை. மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதனால் போதுமான உணவு இல்லை. இன்னமும் 40000 வருடங்கள் இருக்குமாயின் என்ன நடக்கும் என்று உங்களால் கூற முடியாது. அவர்கள் கூறுவது அனைத்தும் முழுமையான பொய் ஆகும். அதில் எள்ளளவும் உண்மை இல்லை. எவ்வாறு இராவணனை வெல்வது எனத் தந்தை உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கிறார். உங்களால் மாத்திரமே இராவணனை வெல்ல முடியும். பாபா முழு உலகையும் இராவணனிடம் இருந்து விடுவிக்கிறார். உங்களுடையது சக்தி சேனை நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள். அவர் உங்களுக்கு மிகவும் நல்ல விடயங்களைக் கூறுகிறார். ஆகவே நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்து மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த ஞான மார்க்கத்தில் பெருமளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. இப்பொழுது பாபா வந்துள்ளார். நாங்கள் இப்பொழுது இப்பழைய உலகை விட்டுச் செல்ல உள்ளோம். பாபாவை நினைவு செய்வதனால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும். பின்னர் ஒருவேளை நீங்கள் ஒரு துண்டு சப்பாத்தியையே பெறுவீர்கள். எவ்வாறாயினும் அதில் என்ன நன்மை உள்ளது? உங்களுக்காகத் தொடர்ந்தும் இயலுமான வரையில் அதிகளவு முயற்சியைச் செய்யுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஒவ்வோர் அடியிலும் பாபாவிடமிருந்து ஆலோசனை பெறுங்கள். சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் என்னுடைய வியாபாரத்தில் பொய் சொல்ல வேண்டியுள்ளது. தந்தை கூறுகிறார்: வியாபாரத்தில் பொய்யே உள்ளது. தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டதன் பின்னர் நீங்கள் பாபாவை நினைவு செய்தீர்கள் எனக் கூறுவதாக இருக்கக் கூடாது. இல்லை நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் மரணிக்கிறீர்கள். நீங்கள் தந்தைக்கு ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள் இல்லையா? தூய்மைக்காகவே ஒரு ராக்கி கட்டப்படுகிறது. ஒருபொழுதும் கோபத்தில் இருந்து விடுபடுவதற்காக ராக்கி கட்டப்படுவதில்லை. ராக்கியின் பந்தனம் என்றால் நீங்கள் விகாரத்தில் ஈடுபடக் கூடாது என்று அர்த்தம். மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! குழந்தைகளாகிய உங்களுக்குள் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும்: 'பாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். பின்னர் பாபா எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அங்கிருந்து நாங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வோம்". இயலுமான வரையில் அதிகாலையில் எழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள். பாபாவை நினைவு செய்வது என்றால் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதாகும். அதில் ஆசீர்வாதங்களுக்கான பயன் என்ன உள்ளது? நீங்கள் கூறக்கூடாது: பாபா எனக்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்தால் நான் உங்களை நினைவு செய்வேன். பாபா அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாயின் அனைவருமே சுவர்க்கத்துக்குச் செல்வார்கள். இங்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இயலுமான வரையில் பாபாவை நினைவு செய்யுங்கள். பாபா என்றால் ஆஸ்தி என்று பொருள். நீங்கள் அவரை நினைவு செய்யும் அளவுக்கேற்பவே ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். நினைவு செய்வதில் பெருமளவு நன்மை உள்ளது. இது ஓர் இலகுவான பேரம். வேறு எவராலும் உங்களுடன் அத்தகையதோர் இலகுவான பேரத்தைச் செய்ய முடியாது. அரிதாகச் சிலரே இப்பேரத்தைச் செய்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவர் கோபம் அடையும் பொழுது நீங்கள் மிக, மிக அமைதியாக இருக்க வேண்டும். உங்களுடன் கோபப்படுகின்ற எவருடனும் கோபப்படாதீர்கள். மாயையின் எந்தப் புயல்களினாலும் தோற்கடிக்கப்படாதீர்கள்.

2. அதிகாலையில் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் வருமானத்தைச் சேமியுங்கள். தூய்மைக்காக உறுதியானதொரு ராக்கியைக் கட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அவ்யக்த, அமைதிநிறைந்த ரூபத்தால் சூழலை அவ்யக்தமாக்கி காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் சேவை செய்வதற்காக நிகழ்ச்சிகளை உருவாக்குவதைப் போல் காலையில் இருந்து இரவுவரை நினைவு யாத்திரையில் இருப்பதற்கும் நிகழ்ச்சி ஒன்றைச் செய்யுங்கள். அவ்வப்போது இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களுக்கு உங்களின் எண்ணங்களின் போக்குவரத்தை நிறுத்துங்கள். யாராவது அதிகளவில் புற உணர்வைக் கொண்டிருந்தால் அவருக்கு எதையும் சொல்வதை விட்டு அவ்யக்த, அமைதி நிறைந்த ரூபத்தை எடுங்கள். அதன் மூலம் அவர் ஒரு சமிக்கையால் புரிந்து கொள்வார். இவ்வாறு செய்வதன் மூலம் சூழல் அவ்யக்தமாக இருக்கும். ஏதோவொரு தனித்துவம் புலப்படும். அத்துடன் நீங்கள் காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சம்பூரணமான சத்தியமே தூய்மையின் அடிப்படை.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

யாராவதோர் ஒத்துழைக்கும் சகோதரனோ அல்லது சகோதரியோ அல்லது குடும்பத்தில் உள்ள எந்தவோர் ஆத்மாவுமோ தமது தவறான புரிந்துணர்வால் அல்லது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தால் தற்காலிகமான விடயங்களை நிரந்தரமான பேறு எனக் கருதி தற்காலிகமான பெயர், புகழ், மரியாதை, பேறுகளுக்கான ஆசையைக் கொண்டிருந்தால் பணிவாக இருந்தவண்ணம் அவருக்கு அந்த மரியாதையைக் கொடுப்பது என்றால் மற்றவர்களை ஈடேற்றுதல் என்று அர்த்தம். இந்த முறையில் கொடுப்பது எல்லா வேளைக்கும் பெற்றுக் கொள்வதே ஆகும்.