08.02.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2008 Om Shanti Madhuban
இந்தப் புது வருடத்தில், எதிர்மறையான எதையும் சாதகமாக மாற்றுவதற்கு மாற்றத்தின் சக்தியெனும் ஆசீர்வாதத்தைப் பயன்படுத்துங்கள். உங்களின் எண்ணங்கள், மூச்சு, நேரம் என்பனவற்றைத் தகுதியான முறையில் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகுங்கள்.
இன்று, புதிய வாழ்க்கையை வழங்கும் தந்தை, புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள எங்கும் உள்ள தனது குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இந்தப் புதிய வாழ்க்கை, புதிய யுகத்தை உருவாக்குவதற்கே ஆகும். மக்கள் புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் புதிய வாழ்க்கையைக் கொண்டுள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். அவற்றுடன், வரவுள்ள புதிய யுகத்திற்காகவும் நீங்கள் நல்ல செய்திகளை வழங்குகிறீர்கள். தந்தை ஏற்கனவே குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், அந்தப் பொன்னான உலகெனும் பரிசை ஓர் ஆஸ்தியாக வழங்கி உள்ளார். அந்தப் பொன்னுலகில், ஏற்கனவே பல பொன்னான பரிசுகள் உள்ளன. அந்தப் பொன்னுலகம் என்ற பரிசு உங்களின் பிறப்புரிமை என்ற போதை உங்கள் அனைவருக்கும் உள்ளதல்லவா? இன்றைய உலகில், யாராவது ஒருவர் இன்னொருவருக்கு அனைத்திலும் மிகப்பெரிய பரிசை வழங்கினாலும், அனைத்திலும் மிகப்பெரியது என எதை அவரால் கொடுக்க முடியும்? ஒரு கிரீடம் அல்லது ஒரு சிம்மாசனம். எவ்வாறாயினும், உங்களிடம் உள்ள பொன்னுலகம் என்ற பரிசுடன் ஒப்பிடும்போது அது எம்மாத்திரம்? அது எந்தவிதத்திலும் பெரியதா? உங்களின் தந்தை உங்களுக்கு அனைத்திலும் அதியுயர்ந்த பரிசான புதிய யுகத்தை வழங்கி உள்ளார் என்ற சந்தோஷம் உங்களின் இதயங்களில் உள்ளது. அது நிச்சயிக்கப்பட்டது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. எவராலும் இந்த விதியைத் தடுக்க முடியாது. உங்களின் விழிப்புணர்வில் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை சதா இருக்கிறது. உங்களிடம் அது எல்லா வேளையும் இருக்கிறதா அல்லது சிலவேளைகளில் அது சிறிது குறைந்து விடுகிறதா? இது உங்களின் பிறப்புரிமை. எனவே, உங்களின் பிறப்புரிமையை ஒருபோதும் பறித்துவிட முடியாது.
இன்று, நீங்கள் அனைவரும் புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் புது வருடத்தைக் கொண்டாடுகிறீர்கள். எனவே, இந்தப் புது வருடத்திற்காக நீங்கள் என்ன இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள்? இந்தப் புது வருடத்தில் என்ன விசேடமான விடயத்தை நீங்கள் செய்யப் போகின்றீர்கள்? இந்தப் புது வருடத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவராக சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகவேண்டும் என்பதே ஆகும். நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டியிருந்தாலும், நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டுள்ளது. கூறுங்கள்! உங்கள் அனைவருக்கும் இந்த உறுதியான எண்ணம் உங்களின் மனங்களில் உள்ளதல்லவா? நீங்கள் ஆமோதித்துத் தலை அசைக்கலாம். தந்தையும் ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமானவர் ஆக வேண்டும் என்றே விரும்புகிறார். தந்தை தந்தைதான், ஆனால் குழந்தைகள் தந்தையை விட உயர்ந்தவர்கள். எனவே, தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: தந்தை பிரம்மா எப்படி முழுமை அடைந்தார்? அவரின் சிறப்பியல்பு என்ன? அவர் முழுமை அடைவதற்கு, விசேடமான அடிப்படை என்னவாக இருந்தது? தந்தை பிரம்மா தனது ஒவ்வொரு கணத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். அவர் ஒவ்வொரு மூச்சையும் ஒவ்வொரு விநாடியையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். எனவே, தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு, இந்த வருடம் என்ன இலட்சியத்தை நீங்கள் வைத்திருப்பீர்கள்? நீங்கள் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும், அத்துடன் நிச்சயமாக வெற்றி சொரூபம் ஆகவேண்டும். வெற்றி உங்களின் கழுத்து மாலை. வெற்றி உங்களின் தந்தையின் ஆஸ்தி. எனவே, இந்த இலட்சியத்துடன் சோதித்துப் பாருங்கள்: ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் வெற்றி சொரூபமாகி, எனது நேரம், மூச்சு, பொக்கிஷங்கள், சக்திகள் மற்றும் நற்குணங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறேனா? தற்சமயத்தின் வெற்றிக்கேற்ப, நான் எதிர்காலத்திற்காகவும் சேமிக்கிறேன். இப்போது நான் எவற்றைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறேனோ, எதிர்கால 21 பிறவிகளுக்காகச் சேமிப்பேன். நீங்கள் உங்களின் நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினால், எதிர்காலத்திலும், உங்களிடம் முழுமையான காலப்பகுதிக்கும் இராச்சிய பாக்கியத்தின் பேறு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், உங்களுக்கு முன்னரும் இது கூறப்பட்டுள்ளது. நீங்கள் தகுதிவாய்ந்த முறையில் உங்களின் மூச்சைப் பயன்படுத்தினால், நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைவும் இருக்கக்கூடாது. அத்துடன் கூடவே, நீங்கள் சேமிக்கும் பொக்கிஷங்கள் - இவற்றில் மகத்தான பொக்கிஷம் இந்த ஞானமே, ஞானம் என்றால் புரிந்துணர்வு என்று அர்த்தம் - இந்த ஞானம் என்ற பொக்கிஷத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதன் மூலம், எந்தவித ஆலோசகரிடம் இருந்தும் உங்களுக்கு அறிவுரை பெறவேண்டிய தேவை இல்லாமல், நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் விவேகி ஆகுவீர்கள். நீங்கள் அசைக்க முடியாத, உடைக்க முடியாத இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். உங்களின் இராச்சியத்தில் எந்தவிதத் தடைகளும் இருக்காது. அது தடைகளில் இருந்தும் விடுபட்டிருக்கும். அசைக்க முடியாததாக, துண்டிக்கப்படாததாக இருக்கும். இந்த ஞானப் பொக்கிஷத்தைச் சேமிப்பதே அதன் பலன் ஆகும். நீங்கள் ஒரு பிறவியில் அதைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் பல பிறவிகளுக்கு வெற்றிப் பழத்தை உண்பீர்கள். அதேபோல், நீங்கள் பெற்றுள்ள சக்திகளை உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எதிர்கால இராச்சியத்தில் சகல சக்திகளையும் கொண்டிருப்பீர்கள். எந்தவொரு சக்தியும் குறைந்ததாக இருக்காது. எந்தவொரு சக்தியின் குறைவாக இருக்காது. அதேபோல், நீங்கள் நற்குணங்களைத் தானம் செய்தால், உங்களின் இறுதியான, 84 ஆவது பிறப்பின் உருவங்களுக்கு இறுதிக்கணம் வரை அவர்கள் என்ன புகழைப் பாடுகிறார்கள்? நீங்கள் சகல தெய்வீகக் குணங்களாலும் நிரம்பியவர்கள். எனவே, ஒவ்வொரு பேற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவன் மூலம், நீங்கள் பல பிறவிகளுக்கு அவற்றுக்கான உரிமையைக் கோரிக் கொள்கிறீர்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஒரு மூச்சேனும் அல்லது ஒரு விநாடியேனும் வீணாகிப் போகக்கூடாது என்ற இலட்சியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் சேமிக்க வேண்டும். சேமிப்பதற்கான காலம், மிகக் குறுகிய பிறப்பே ஆகும். ஆனால், பலனைப் பெறுவதற்கான காலப்பகுதி, 21 பிறவிகள் ஆகும். எனவே, இந்த வருடம், தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற இலட்சியம் உங்கள் அனைவருக்கும் உள்ளதா? நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் நிச்சயமாக அப்படி ஆகவேண்டும். கீழ்க்கோடிடுங்கள்: நான் அப்படி ஆகவேண்டும். அச்சா, குழந்தைகளான நீங்களும் அப்படி ஆகுவீர்களா? சிறுவர்களும் அப்படி ஆகுவார்கள். சிறுவர்கள் அணிந்திருக்கும் கிரீடங்கள் நன்றாக உள்ளன. (சிறுவர்கள் அனைவரும் கிரீடங்களை அணிந்திருந்தார்கள்). அவை மிகவும் நன்றாக உள்ளன.
எனவே, நீங்கள் இந்த வருடத்திற்கான இலட்சியத்தைப் பேணியுள்ளீர்கள். அத்துடன்கூடவே, தந்தையைப் பின்பற்றுவதற்கான மந்திரம், அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகுவதாகும். இதற்காகக் கடினமாக உழைக்கும் சிரமத்தைக் குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா கொடுக்கவில்லை. அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையையே காட்டுகிறார். அந்த இலகுவான வழிமுறை என்ன? உங்களுக்குள் என்ன எண்ணம் ஏற்பட்டாலும், அனைத்திற்கும் முதலில் சோதித்துப் பாருங்கள்: இது தந்தையின் எண்ணமாக இருந்ததா? நீங்கள் எதையாவது கூறும்போது, அதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆக விரும்புகிறீர்கள்தானே? எனவே, அனைத்திற்கும் முதலில், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: அவை தந்தையினுடையதை ஒத்ததாக உள்ளனவா எனச் சோதித்து, அவற்றின் சொரூபம் ஆகுங்கள். பிரம்மா பாபாவைப் பின்பற்றுங்கள்! நினைவு கூரப்படுகிறது: தந்தையைப் பின்பற்றுங்கள். சில குழந்தைகள் மிக நல்ல விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். அவர்கள் என்ன விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தந்தையைப் பின்பற்றுவதில்லை, ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. எதைப் பற்றியும் முதலில் சிந்திக்க மட்டும் செய்யாமல், அதன் ரூபம் ஆகுங்கள். நீங்கள் அந்த ரூபம் ஆகும்போது, ‘நான் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை, ஆனால் அது நடந்து விட்டது’ எனக் கூற மாட்டீர்கள். செய்பவர்கள், சிந்திப்பவர்கள், மேன்மையான ஆத்மாக்களான, அதிபதிகளான நீங்களே ஆவீர்கள். ‘அது நடந்து விட்டது’ எனச் சொல்வது, என்றால் உங்களின் பௌதீக அங்கங்களின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்பதே அதன் அர்த்தம்.
எனவே, இந்த வருடம் இந்த சுலோகனை நினைவு செய்யுங்கள்: ‘நான் செய்யும் அனைத்தும் தந்தை செய்வதை ஒத்ததாக இருக்க வேண்டும், நான் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆக வேண்டும்.’ இது சிரமம் இல்லையல்லவா? தந்தை எதைச் செய்தாரோ, அதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். பிரதி செய்வது இலகுவானதுதானே? சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. எப்படித் தந்தை பிரம்மா ஒரு தேவதையாகி, அவர் நிச்சயமாக ஒரு தேவதையில் இருந்து தேவர் ஆகுவார் என்ற உத்தரவாதம் இருந்ததோ, அதேபோல், நீங்களும் நிச்சயமாக தேவதைகளில் இருந்து தேவர்கள் ஆகுவீர்கள் என்ற உத்தரவாதம் உங்கள் அனைவருக்கும் உள்ளது. தொடர்ந்து முன்னேறும்போது, தாம் அதிகளவு எதிர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அந்த எதிர்ப்பினால், அவர்கள் தமது நிலையில் இருந்து கீழே வருவதாகவும் சில குழந்தைகள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தைக்குச் சமமாக ஆகவேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், தந்தை பிரம்மா எத்தனை எதிர்ப்புக்களைத் தனது நிலையாக மாற்றினார்? அனைத்தும் புதியதாக, ஒரு சவாலாகவே இருந்தது. இப்போது, உலகம் அதிகளவில் மாறிவிட்டது. ஆனால், தந்தை பிரம்மா சுயமரியாதை என்ற ஆசனத்தில் மட்டும் அமர்ந்திருந்து, தனது நிலையுடன் அனைத்து எதிர்ப்புக்களுக்கும் முகங்கொடுத்தார்? எங்கு நிலை இருக்கிறதோ, அங்கே எதிர்ப்பால் எதுவும் செய்ய முடியாது. முன்னர் மக்கள் என்ன கூறினார்கள்? நீங்கள் குழப்பங்களை விளைவித்தீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறீர்கள். அதிகளவு வேறுபாடு காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? தந்தை பிரம்மா தானே சுயமரியாதை என்ற தனது ஆசனத்தாலும் திடசங்கற்பமான நம்பிக்கை என்ற ஆயுதத்தாலும் எதிர்ப்புக்கள் அனைத்தையும் முடித்தார். எனவே, நீங்கள் இந்த வருடம் என்ன செய்வீர்கள்? நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும், அல்லவா? எனவே, நீங்கள் சதா எதிர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தால், சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அப்போது எதிர்ப்புக்கள் அனைத்தும் நிலையாக மாறிவிடும். உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? நிச்சயமாக பிரம்மா பாபாவிற்குச் சமம் ஆகுவதற்கு நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். ஆனால் உங்களுக்கு அந்தளவு தைரியம் இருக்கிறதா? முதலில், சுய மாற்றம் இருக்கும். பின்னர் உங்களுடன் உறவுமுறையில் அல்லது தொடர்பில் உள்ள ஆத்மாக்கள் பலர், அதன்பின்னர் உலகிலுள்ள ஆத்மாக்கள். நீங்கள் அவர்கள் அனைவரையும் உங்களின் மனங்களில் உள்ள நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் அத்துடன் உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களாலும் மாற்ற வேண்டும்.
எனவே, இந்த வருடம், பாப்தாதா உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சக்தியை ஆசீர்வாதமாக வழங்குகிறார். உங்களின் இதயபூர்வமாக நீங்கள் ‘எனது பாபா’ எனச் சொல்லும்போது, ஒரு சக்தி பிரசன்னம் ஆகிவிடும். வெறுமனே ‘எனது பாபா’ என நீங்கள் சொல்லக்கூடாது. ஆனால், அதை உங்களின் இதயபூர்வமாகச் சொல்லும்போது, ‘எனது பாபா’ என்ற உரிமை உங்களுக்குள் இருக்கும். அப்போது அந்தச் சக்தி உங்களின் முன்னால் வந்து நிற்கும். அது என்ன சக்தி? மாற்றத்திற்கான சக்தி. மாற்றத்திற்கான சக்தியால், குறிப்பாக எதிர்மறையான எதையும் சாதகமானதாக மாற்றுங்கள். எதிர்மறையான எண்ணங்களையும் எதிர்மறையான நடத்தையையும் பார்க்கும்போது, அவற்றைச் சாதகமானதாக மாற்றுங்கள். சாதகமானதைப் பாருங்கள், சாதகமானதைப் பேசுங்கள், சாதகமான அனைத்தையும் செய்யுங்கள். உங்களின் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் பயன்படுத்துங்கள். அப்போது அது இலகுவானதாக ஆகிவிடும். ஏனென்றால், இந்தத் தடை வந்தாலும், உங்களின் மாற்றத்திற்கான சக்தி இலகுவாக உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தும். எனவே, இந்த வருடத்திற்கான விசேடமான ஆசீர்வாதத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? திடசங்கற்பமான எண்ணங்களுடன் மாற்றத்திற்கான சக்தியைப் பயன்படுத்துங்கள். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அல்லவா? இது உங்களின் சவால். நீங்கள் அதை நினைவு செய்கிறீர்கள்தானே? நீங்கள் ஒவ்வொருவரும் உலகை மாற்றுபவர்கள், அல்லவா? உங்களின் பட்டம் உலகை மாற்றுபவராக இருக்கும்போது, உங்களை மாற்றுவது கஷ்டமா? ஏதாவது கஷ்டம் உங்களின் இதயத்தில் தோன்றினாலும் - உண்மையில், எதுவும் சிரமம் இல்லை, ஆனால் நீங்கள் அதைக் கஷ்டமானதாக ஆக்கிக் கொள்கிறீர்கள் - மாஸ்ரர் சர்வசக்திவானின் முன்னால் எதுதான் கஷ்டமாக இருக்க முடியும்? எவ்வாறாயினும், அதைக் கஷ்டமானது ஆக்குவதற்கு நீங்கள் ஒரு தவறைச் செய்கிறீர்கள். உதாரணமாக, இங்கே சட்டென்று இருள் சூழ்ந்தால், தவறுதலாக, ஒருவர் அந்த இருளைத் துரத்த முயற்சி செய்தால், அந்த இருட்டு அகன்று விடுமா? நீங்கள் செய்ய வேண்டிய சரியான வழிமுறை, ஒளியைக் கொண்டு வருவதே ஆகும். அப்போது இருள் ஒரு விநாடியில் அகன்றுவிடும். அதேபோல், ஏதாவது நடக்கும்போது, நீங்கள் ‘ஏன்? என்ன? எப்போது? எப்படி?’ போன்ற கேள்விகளின் வரிசைக்குள் செல்கின்ற தவறை நீங்களும் செய்கிறீர்கள். நீங்கள் சிறியதொரு விடயத்தைப் பெரியதாக ஆக்குகிறீர்கள். அப்போது அந்தப் பெரியது கஷ்டமாக இருக்கும். நீங்கள் அதைச் சிறியதாக ஆக்கினால், அது இலகுவாக ஆகிவிடும். குறிப்பிட்ட எந்தவொரு சக்தியையும் பயன்படுத்துவதற்கான இலகுவான வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் காட்டி உள்ளார். மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற விழிப்புணர்வு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தால், குழப்பம் அடைய மாட்டீர்கள். அந்த ஆசனம் இல்லாமல், நீங்கள் குழப்பம் அடைவீர்கள். ஆனால் உங்களிடம் உங்களின் ஆசனம் இருக்கும் என்றால், நீங்கள் குழப்பம் அடைய மாட்டீர்கள். 63 பிறவிகளுக்கான உங்களின் சம்ஸ்காரங்களும் வெளிப்பட மாட்டாது. 63 பிறவிகளுக்கான உங்களின் சம்ஸ்காரங்கள் என்னவாக இருந்தன? ஒரு நிமிடம், நீங்கள் நிலையாக இருப்பீர்கள். அடுத்த நிமிடம், குழப்பம் அடைந்து விடுவீர்கள். அதனால், சதா உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அனைவருக்கும் புது வருடத்திற்கான பரிசைக் கொடுப்பீர்கள், அல்லவா? ஆகவே, நீங்கள் அவர்களுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்? நீங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பீர்கள், அத்துடன் நீங்கள் என்ன பரிசைக் கொடுப்பீர்கள்? உங்களிடம் பல பரிசுகள் உள்ளன. உங்களால் நீங்கள் விரும்பிய அளவைக் கொடுக்க முடியும். பௌதீகமான பரிசுகள் தற்காலிகமான காலப்பகுதிக்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால், அநாதியான தந்தைக்குச் சமமாக ஆகிக் கொண்டிருக்கும் நீங்கள், அழியாத பரிசை வழங்க வேண்டும். உங்களின் மனதால் சக்திகளின் பரிசைக் கொடுங்கள். உங்களின் வார்த்தைகளால் இந்த ஞானம் என்ற பரிசைக் கொடுங்கள், உங்களின் செயல்களால் நற்குணங்கள் என்ற பரிசைக் கொடுங்கள். உங்கள் அனைவரிடமும் இவை இருக்கின்றன, அல்லவா? உங்களிடம் இருந்தால், தலையை அசையுங்கள்! உங்களிடம் பல பொக்கிஷங்கள் இருக்கின்றனதானே? அவை எவையும் குறைவாக இல்லைத்தானே? நீங்கள் யாருடன் பழகும்போதும், நீங்கள் பழகவே வேண்டும், இந்த வருடம், அவர்களுக்குப் பல பரிசுகளை வழங்குங்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு அழியாத பரிசுகளை வழங்குங்கள். நீங்கள் அவர்களுக்கு உங்களின் மனம், வார்த்தைகள் அல்லது செயல்கள் என்ற எதனாலும் பரிசுகளை வழங்கினாலும் பரவாயில்லை, எவருமே வெறுங்கையுடன் போக அனுமதிக்கக்கூடாது என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இதற்கு, நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கணமும், நீங்கள் உங்களின் சக்திகளின் களஞ்சியத்தை வெளிப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உங்களிடம் எத்தனை சக்திகள் உள்ளன? உங்களிடம் ஒரு பட்டியல் உள்ளதல்லவா? பேச வேண்டி இருப்பதால், நீங்கள் எப்போதும் உங்களின் மனதில் கடையும் சக்தியைக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானத்தைக் கடையும் சக்தியை நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். உங்களின் நடத்தையிலும் உங்களின் முகத்திலும் உங்களின் செயல்களிலும் நீங்கள் நற்குணங்களின் சொரூபம் ஆகவேண்டும். நீங்கள் எப்போதும் உங்களை நற்குணங்களின் சொரூபமாக, இந்த ஞானத்தின் சொரூபமாக, சக்திகளின் சொரூபமாக வெளிப்பட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் எப்படியும் சக்திகள் உள்ளன, இந்த ஞானம் எப்படியும் உள்ளது என்று நினைக்காதீர்கள். ஆனால் நீங்கள் அவற்றின் சொரூபம் ஆகவேண்டும். நீங்கள் அனைவரையும் உங்களின் இறை குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பார்வையுடனும் மனோபாவத்துடனுமே பார்க்க வேண்டும். நீங்கள் இந்த வருடம் சமமானவர் ஆக வேண்டும் என்பதனால், நீங்கள் அதற்காக உங்களின் கைகளையும் உயர்த்தி இருப்பதனால், அனைவரின் கைகளும் பாப்தாதாவின் சூட்சும வதனத்தில் புலப்படும். இதைப் போன்ற சிறிய தொலைக்காட்சி அங்கே கிடையாது. அங்கே, மிகப் பெரியது ஒன்று உள்ளது. பாபாவால் ஒரு விநாடியில் சகல நிலையங்களின் பெறுபேறுகளையும் பார்க்க முடியும். நிச்சயமாகத் தந்தைக்குச் சமமாக ஆகவேண்டும் என்ற உங்களின் உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உங்களிடம் சந்தோஷ பாக்கியம் உள்ளது. உங்களிடம் சந்தோஷமான முகங்கள் உள்ளன. அதனால், ஒருபோதும் உங்களின் முகங்களில் அதிகார தோரணை வர அனுமதிக்காதீர்கள். எப்போதும் சந்தோஷமாக இருங்கள். எதையும் செய்வதில் நீங்கள் எவ்வளவுதான் மும்முரமாக இருந்தாலும், நீங்கள் ஒரு தவறைச் சரிசெய்யும்போதும் அல்லது நீங்கள் யாருக்காவது விளங்கப்படுத்தும் போதும், உங்களின் முகமும் உங்களின் வார்த்தைகளும் அதிகாரத் தோரணையுடன் இருக்கக்கூடாது. இந்த வருடம், இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள். வருடம் முழுவதும் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும், எப்போதும் புன்னகை செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பரிசு வழங்கப்படும். சில சகோதரர்களும் சகோதரிகளும் கூறுகிறார்கள் - நீங்கள் அனைவரும் இதயபூர்வமாக உரையாடல்களைச் செய்கிறீர்கள் - நீங்கள் அதிகாரத் தோரணையுடன் விளக்காவிட்டால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது அவர்கள் மாறுவதில்லை. மற்றவர் மாறவே போவதில்லை என்ற உணர்வை நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கிறீர்கள், எனவே அந்த நபர் ஏற்கனவே உங்களின் அதிர்வலைகளைப் பெற்றுவிட்டார். ஆகவே, இந்த வருடம், கோபத்திற்கும் அதன் சந்ததிகளுக்கும் விடை கொடுத்து விடுங்கள். இது சாத்தியமா? அதிகாரத் தோரணையையும் கொண்டிருக்கக் கூடாது? எதையாவது செய்வதற்கு அல்லது எதையாவது திருத்துவதற்கு, அவ்வப்போது கோபம் அடைகின்றவர்களிடம் தந்தை கேட்கிறார்: அதனூடாக மற்ற நபர் திருந்தினாரா? யாராவது, அவர்களின் மீது கோபப்படுவதன் மூலம் திருந்தி இருக்கிறார்களா? அந்தப் பட்டியலை பாபாவிற்குக் காட்டுங்கள்! உண்மையில், அவர்கள் மேலும் எரிச்சல் அடைவார்கள், தங்களைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களின் மனங்களில் எதிர்ப்பையே உருவாக்குவார்கள். அவர்கள் வயதானவர்களாக இருந்தால், தமது மனங்களில் எதிர்ப்பை உருவாக்குவார்கள். ஏனென்றால், அவர்களால் எதையும் கூற முடியாமல் இருக்கும். ஆனால், அவர்கள் இளையவர்களாக இருந்தால், அழ ஆரம்பித்து விடுவார்கள். எனவே, இந்த வருடம் நீங்கள் செய்ய வேண்டிய சகல விடயங்களையும் பற்றி பாபா உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் இதைச் செய்யப் போகின்றீர்களா? இப்போது உங்களின் கைகளை நீங்கள் உயர்த்தலாம். நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்களா? தொலைக்காட்சி கமெராவை வைத்திருப்பவர்கள், அவர்களின் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அவற்றை உயர உயர்த்துங்கள்! கமெராமென் புகைப்படத்தை எடுக்கிறார்கள்.
எனவே, பாப்தாதா காலத்திற்கேற்ப, இந்த வேளையின் வேகம் தற்சமயம் துரிதமாக உள்ளது என்பதைப் பார்த்தார். எனவே, யார் காலத்தை எதிர்க்கப் போகின்றவர்கள்? நீங்களே அதைச் செய்யப் போகின்றீர்கள். நீங்கள் சந்தோஷம் அற்ற ஆத்மாக்களின் அழைப்பை, பக்தர்களின் அழைப்பை, காலத்தின் அழைப்பை அந்தளவு செவிமடுப்பதில்லை என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். அந்த அப்பாவிகளுக்கு எந்தவிதமான தைரியமும் இல்லை, எனவே, குறைந்தபட்சம் அவர்களால் பறக்கக் கூடிய அளவிற்கு அவர்களுக்கு இறக்கைகளைக் கொடுங்கள். அவர்களுக்கு தைரியம் மற்றும் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளை வழங்குங்கள். அச்சா.
எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் பாப்தாதா உங்களுக்கு வழங்கிய வீட்டுவேலையை நடைமுறையில் செய்து, அதன் அத்தாட்சியை வழங்குவீர்கள். தகுதிவாய்ந்த குழந்தைகள் ஆகுவதன் மூலம் நீங்கள் அதன் விளைவைக் காட்டுவீர்கள். எனவே, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமாக அதிக, அதிகளவு அன்பும் கனிவும், அத்துடன் கோடானுகோடி மடங்கு அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய தகுதிவாய்ந்த, மேன்மையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் நமஸ்தே.
ஒவ்வொரு நாளையும் சுய மாற்றத்திற்கும் உலக மாற்றத்திற்குமான நாளாகக் கொண்டாடுங்கள். இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கான புதிய நாள் ஆகும். ஒவ்வொரு நாளும் புதிய சேவைக்கு உரியது. ஒவ்வொரு நாளும் புதிய ஊக்கம், உற்சாகத்திற்கு உரியது. ஒரு நாளேனும் கவலை அல்லது ஏனைய எண்ணங்களுக்கான நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் இரவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கழிய வேண்டும். இந்தப் புது வருடத்தில், நீங்கள் நிச்சயமாக உங்களுக்காகவும் உலகிற்காகவும் சேவைக்காகவும் ஒவ்வொரு நாளும் ஏதாவது புதியதைச் செய்ய வேண்டும். இத்தகைய திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருந்து, காலத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். முழுமை அடைந்து, தந்தைக்குச் சமமானவர் ஆகி, நீங்களும் பறப்பதுடன் மற்றவர்களையும் தொடர்ந்து பறக்கச் செய்யுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் அதிபதியாகவும் குழந்தையாகவும் இருந்து, ஒவ்வொருவரின் அறிவுரைக்கும் மதிப்பளிப்பதன் மூலம் முழு உலகிடம் இருந்தும் மரியாதையைப் பெறுவீர்களாக.ஒருவர் இளையவரோ அல்லது வயதானவரோ, நிச்சயமாக ஒவ்வொருவரின் அறிவுரைக்கும் மதிப்பளியுங்கள். ஏனென்றால், எவருடைய அறிவுரையையும் நிராகரித்தல் என்றால் உங்களையே நிராகரிப்பதாகும். ஆகவே, ஒருவர் வீணானவற்றைப் பேசும்போது, அதைத் தடுக்க வேண்டி இருந்தாலும், அனைத்திற்கும் முதலில், அவர்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் கொடுங்கள், பின்னர் அந்தத் திருத்தத்தைக் கொடுங்கள். இதுவே சரியான வழிமுறை ஆகும். இந்த முறையில் நீங்கள் மதிப்பு அளிக்கும் சம்ஸ்காரத்தால் உங்களை நிரப்பிக் கொள்ளும் போது, நீங்கள் உலகிடம் இருந்தும் மரியாதையைப் பெற்றுக் கொள்வீர்கள். இதற்கு, ஓர் அதிபதியாகவும் ஒரு குழந்தையாகவும், குழந்தையாகவும் ஓர் அதிபதியாகவும் இருங்கள். உங்களின் புத்தியானது எல்லையற்றதாக, நலம் விரும்பும் ஆசிகளால் நிரம்பி இருக்க வேண்டும்.
சுலோகம்:
எப்போதும் உங்களின் சகவாசம் என்ற விழிப்புணர்வின் திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். இதுவே சுகாக் (திருமணம் செய்திருத்தல்) என்பதன் அடையாளம் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்பால், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இரண்டு விடயங்களைக் கிரகிக்க வேண்டும். ஒன்று, ஒரேயொருவருக்குச் சொந்தமாக இருத்தல், எப்போதும் ஒரேயொருவரின் பெயரை எடுத்துக் கொள்ளுதல். இரண்டாவதாக, உங்களின் எண்ணங்கள், உங்களின் நேரம், இந்த ஞானம் என்ற உங்களின் பொக்கிஷங்களில் சிக்கனமாக இருங்கள். அனைவரும் ஒரேயொருவருக்குச் சொந்தமாகவும் சிக்கனமாகவும் இருந்தால், பல்வகை வேறுபாடுகள் அனைத்தும் ஒரேயொரு தந்தைக்குள் அமிழ்ந்துவிடும்.