08.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆன்மீகச் சேவை செய்து உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மை செய்யுங்கள். உங்கள் இதயத்தைத் தந்தைக்கு உண்மையாக வைத்திருந்தால் நீங்கள் தந்தையின் இதயத்தில் இருப்பீர்கள்.

கேள்வி:
எக் குழந்தைகளினால் ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்ய முடியும்? ஆத்ம உணர்வில் இருப்பவர்களின் அடையாளங்கள் என்ன?

பதில்:
இக் கல்வி மீதும் தந்தை மீதும் துண்டிக்க முடியாத அன்பை கொண்டிருப்பவர்களால் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய முடியும். அவர்கள் குளிர்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் அளவுக்கு அதிகமாக பேசமாட்டார்கள். அவர்கள் கடவுள் மீது அன்பு செலுத்துவதுடன், அவர்களுடைய நடத்தையும் மிகவும் இராஜரீகமாக இருக்கும். எங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார், நாங்கள் அவருடைய குழந்தைகள் என்ற போதை அவர்களுக்கு இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதுடன், ஸ்ரீமத்திற்கேற்ப ஒவ்வோர் அடியையும் எடுத்து வைப்பார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் சேவைச் செய்திகளைக் கேட்க வேண்டும். அத்துடன், சேவை செய்யும் முக்கியமான மகாராத்திகளும் அறிவுரைகளைக் கொடுக்க வேண்டும். யார் கண்காட்சியை அல்லது சந்தைகளை திறப்பதற்கு அழைக்கப்பட வேண்டும் என்பதையும், என்ன கருத்துக்களை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்பதையும் பற்றி, சேவை செய்யக்கூடிய குழந்தைகளே கடைந்து, சிந்திப்பார்கள் என்பதை பாபா அறிவார். சங்கராச்சாரியார் போன்றவர்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொண்டால், உங்கள் ஞானம் மிகவும் மேன்மையானது என்றும், நிச்சயமாக மிகவும் விவேகமான ஒருவரே இதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் கூறுவார்கள். எனினும் உங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார் என்பதனை அவர்கள் நம்பமாட்டார்கள். ஆகவே உங்கள் கண்காட்சிகளைத் திறந்து வைக்க வருபவர்களுக்கு விளங்கப்படுத்தும் கருத்துக்களை, ஏனையவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அல்லது, சங்கராச்சாரியாருக்கு தாதி கங்கா விளங்கப்படுத்தும் போது, அவை ஒலி நாடாவில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டதைப் போன்று செய்யப்பட வேண்டும். அத்தகைய குழந்தைகளாலேயே தந்தையின் இதயத்தில் இருக்க முடியும். பௌதீகச் சேவைகளும் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விடயத்திலும் நன்மை இருந்தாலும், பலருக்கும் நன்மை அளிக்கின்ற ஆன்மீகச் சேவையே பாபாவின் கவனத்தை ஈர்க்கின்றது. யோகியுக்த் நிலையில் இருந்து நீங்கள் பிரம்மபோசனைத் தயார் செய்யும் போதும் அதில் நன்மையுள்ளது. உணவு தயாரிப்பவர் யோகியுக்த் நிலையில் இருந்தும் நினைவு யாத்திரையில் இருந்தும் உணவைத் தயாரித்தால், சமையல் அறையில் மிகவும் அமைதி நிலவும். அவர்களால் உடனடியாக யார் வந்தாலும் ஞானத்தை விளங்கப்படுத்த முடியும். சேவை செய்கின்ற குழந்தைகள் யார் என்பதையும் பாபா புரிந்து கொள்கின்றார். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தக் கூடியவர்கள் மாத்திரமே சேவைக்கு வழக்கமாக அழைக்கப்படுகிறார்கள். சேவை செய்பவர்களே தந்தையின் இதயத்தில் இருக்க முடியும். பாபாவின் முழுக்கவனமும் சேவை செய்கின்ற குழந்தைகள் மீது செல்கின்றது. சில குழந்தைகளால் எதனையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. சில குழந்தைகள் முரளியை நேரடியாகச் செவிமடுத்தாலும், அரைக் கல்பத்திற்குச் சரீர உணர்வு எனும் நோய் மிகக்கடுமையாக இருந்ததால், அவர்களினால் எதனையுமே கிரகிக்க முடிவதில்லை. மிகச்சிறிய அளவினரே அதனை முடித்து விடுவதற்கு அதிக முயற்சி எடுக்கின்றார்கள். அதிகமானவர்களுக்கு ஆத்ம உணர்வுடையவராக ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய முடிவதில்லை. குழந்தைகளே ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு பெருமுயற்சி வேண்டும் என பாபா விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் சிலர் தங்கள் அட்டவணையை அனுப்பினாலும் அது பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. எனினும் அவர்கள் அந்தளவு கவனத்தையாவது செலுத்துகின்றார்கள். உங்களில் அதிகமானோர் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு மிகக் குறைந்தளவு கவனமே செலுத்துகின்றீர்கள். ஆத்ம உணர்வில் இருப்பவர்கள் மிகவும் குளிர்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு அத்தகையதே, கேட்கவே வேண்டாம்! அத்தகைய ஆத்மாக்கள் மனிதர்கள் எவருமே கொண்டிராத சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். இலக்ஷ்மி நாராயணனிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. கடவுள் கற்பிக்கும் குழந்தைகளாகிய உங்களிடமே இந்த ஞானம் உள்ளது. உங்கள் அனைவரிலும் ஓரிருவரிடம் மாத்திரமே கடவுள் கற்பிக்கின்றார் என்ற போதை இருக்கின்றது. உங்களிடம் இந்த போதை இருக்கும் போது, உங்களால் தந்தையின் நினைவில் இருக்க முடியும். இதுவே ஆத்ம உணர்வு எனக் கூறப்படும். எவ்வாறாயினும் அந்தப் போதை நிலைத்து இருப்பதில்லை. நினைவில் இருப்பவர்களின் நடத்தை மிகவும் நன்றாகவும், இராஜரீகமாகவும் இருக்கும். நாங்கள் கடவுளின் குழந்தைகள். அதனாலேயே கூறப்படுகின்றது: “அதீந்திரிய சுகத்தைப்பற்றி அறிவதற்கு கோபியரையும், கோபிகைகளையும் கேளுங்கள்”. அவர்களே ஆத்ம உணர்வு உடையவர்களாகித் தந்தையை நினைவு செய்வார்கள். நினைவு செய்யாதவர்கள் சிவபாபாவின் இதயத்தில் அமர முடியாது. சிவபாபாவின் இதயத்தில் அமராதவர்களால், தாதாவின் இதயத்திலும் அமர முடியாது. அவரின் இதயத்தில் அமர்ந்திருக்கும் எவரும், நிச்சயமாக இவரின் இதயத்திலும் அமர்ந்திருப்பார்கள். தந்தை ஒவ்வொருவரையும் அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் எந்தளவு சேவை செய்கிறீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். சேவை செய்வதில் குழந்தைகளாகிய நீங்கள் பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிலர் ஒரு நிலையத்தை ஸ்தாபிப்பதில் ஆர்வத்தையும் ஏனையவர்கள் படங்களை உருவாக்குவதில் ஆர்வத்தையும் கொண்டிருப்பார்கள். நான் தந்தையின் நினைவில் இருக்கும் ஞானோதயம் உடைய ஆத்மாக்களையும் சேவை செய்வதற்கு ஆர்வமுள்ள ஆத்மாக்களையும் விரும்புகின்றேன் எனத் தந்தை கூறுகின்றார். சிலர் ஒருபொழுதும் சேவை எதனையும் செய்வதில்லை. அவர்கள் தந்தை கூறுவதைச் செவிமடுப்பதும் இல்லை. யார் எங்கு சேவை செய்ய வேண்டும் என்பதைத் தந்தை அறிவார். எனினும் அவர்கள் சரீர உணர்வினால் தங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றுகின்றார்கள். ஆகவே அவர்களால் தந்தையின் இதயத்தில் அமர முடிவதில்லை. அறியாமைப் பாதையில் குழந்தையின் செயல்கள் பிழையாயின் அவர் தகுதியற்றவராகக் கருதப்பட்டுத் தந்தையின் இதயத்தில் அமர முடியாதவர் ஆகுவார். அவர்கள் தீய சகவாசத்தின் செல்வாக்கினால் தீயவர்கள் ஆகுகின்றார்கள். இங்கும் தந்தை சேவை செய்பவர்களை விரும்புகின்றார். தந்தை சேவை செய்யாதவர்களை விரும்புவதில்லை. நீங்கள் அனைவரும் உங்கள் பாக்கியத்திற்கேற்ப கற்பீர்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்வார். ஆனால் அவர் யாரை விரும்புவார்? நல்ல குழந்தைகள் மிகவும் அன்புடன் அழைக்கப்படுவது நியதியாகும். நீங்கள் மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றீர்கள் என அவர் கூறுவார். நீங்கள் தந்தை மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள், தந்தையை நினைவு செய்யாதவர்களைத் தந்தை மீது அன்புள்ளவர்கள் என அழைக்க முடியாது. தாதாவை விரும்புபவர்களாக நீங்கள் ஆகக்கூடாது. உங்கள் அன்பு தந்தை மீதே இருக்க வேண்டும். தந்தையை விரும்புபவர்களின் வார்த்தைகளும், நடத்தையும் மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருக்கும். காலம் இருந்தாலும் உங்கள் சரீரத்தை நீங்கள் நம்ப முடியாது எனக் காரணம் கூறுகின்றது. சிலவேளைகளில் திடீர் என விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் சிலருக்கு இதய வழுவல் ஏற்படுகின்றது. சிலவேளைகளில் சிலர் நோய் வாய்ப்படுகின்றனர். மரணம் திடீர் என இடம்பெறுகின்றது. இதனாலேயே உங்கள் மூச்சை உங்களால் நம்ப முடியாதிருக்கின்றது. தற்போது இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. பருவம் மாறிப் பெய்யும் மழையினால் பெரும் நஷ்டங்கள் ஏற்படுகின்றன. இந்த உலகமே துன்பத்திற்குக் காரணம் ஆகும். பெரும் துன்பமுள்ள இந்தக் காலத்திலேயே தந்தை வருகின்றார். இரத்த ஆறுகள் ஓடும். நீங்கள் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு நன்மையைச் செய்யும் வகையில் முயற்சி செய்ய எத்தனியுங்கள். தங்களுக்கு நன்மை செய்யும் அக்கறை உங்களில் அனேகரில் இல்லை. பாபா இங்கே அமர்ந்திருந்து முரளி வகுப்பை நடத்தினாலும் அவரது புத்தி சேவை செய்யும் குழந்தை மீதே ஈர்க்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் சங்கராச்சாரியாரைக் கண்காட்சிக்கு அழைக்க வேண்டும். பொதுவாக அவர்கள் அவ்வாறு எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் பெருமளவு அகங்காரத்துடன் வாழ்வதால், அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்கள் அமர்கின்ற சிம்மாசனத்;தை விட உயரமான சிம்மாசனத்தில் அவர்கள் அமர்த்தப்பட வேண்டும். அது உங்களை அவர்களுடன் அமர அனுமதிப்பது என்றில்லை. இல்லை. அவர்களுக்குப் பெருமளவு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் பணிவுள்ளவர்கள் ஆயின் தங்கள் வெள்ளிச் சிம்மாசனம் போன்றவற்றைத் துறந்திருப்பார்கள். தந்தை எவ்வளவு எளிமையாக வாழ்கிறார் என்பதைப் பாருங்கள். எவருமே அவரை அறியவில்லை. குழந்தைகளாகிய உங்களிலும் வெகு சிலரே அவரை இனம் கண்டுள்ளீர்கள். தந்தை அகங்காரம் அற்றவர். இது தந்தைக்கும் குழந்தைகளுக்குமான உறவு முறையாகும். பௌதீகத் தந்தை அவருடைய குழந்தைகளுடன் உணவருந்தி, அவர்களுக்கு உணவூட்டுவதைப் போன்றே எல்லையற்ற தந்தையும் வாழ்கின்றார். சந்நியாசிகள் போன்றவர்கள் தந்தையின் அன்பைப் பெறுவதில்லை. நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் எல்லையற்ற தந்தையின் அன்பைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்குத் தந்தை பெருமுயற்சி எடுக்கின்றார். எனினும் நாடகத்திற்கேற்ப அனைவரும் அழகானவர்கள் ஆகுவதில்லை. இன்று ஒருவர் நல்லவராகவும், நாளை அவர் விகாரம் உள்ளவராகவும் ஆகுகின்றார். அது அவரது பாக்கியத்தில் இல்லையாயின் ஒருவர் என்ன செய்ய முடியும் எனத் தந்தை கூறுகின்றார். பலர் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் அவரின் கட்டளைகளுக்குக் கீழ்படிவதில்லை. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் என்ன ஆகுவார்கள்? தந்தை அதிமேலானவர். அவரை விட மேலானவர் எவருமில்லை. தேவர்களின் ரூபத்தைப் பாருங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் அனைவரிலும் அதிமேலானவர்கள். எனினும் யார் அவர்களை அவ்வாறு ஆக்கினார்கள் என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து படைப்பவரினதும் படைப்புகளினதும் ஞானத்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உங்கள் அமைதி தாமத்தையும் உங்கள் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். சேவை செய்பவர்களின் பெயர்கள் நினைவு கூரப்படுகின்றன. தந்தையின் வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படியும் கீழ்ப்படிவான குழந்தைகளிடம் அவரின் இதயம் நிச்சயமாக கவரப்படும். எல்லையற்ற தந்தை ஒருமுறையே வருகின்றார். பிறவிபிறவியாக உங்களுக்கு ஒரு பௌதீகத் தந்தை இருக்கின்றார். சத்தியயுகத்திலும் உங்களுக்கு ஒரு பௌதீகத் தந்தை இருப்பார், ஆனால் இந்தத் தந்தை இருக்க மாட்டார். இந்தக் காலத்தில் நீங்கள் கற்பதற்கு ஏற்பவே அங்கு உங்கள் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் தந்தையுடன் புதிய உலகத்திற்காகக் கற்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இது மிகவும் இலகுவானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தற்செயலாக யாராவது வந்தால், “உங்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியுமா?” என அங்கும் இங்குமாக ஞானத்தைக் கொடுக்கத் தொடங்குவார். தந்தை பழைய உலகத்தைப் புதிய உலகமாக ஆக்குவதற்கு வந்துள்ளார். அவர் இராஜயோகம் கற்பிக்கின்றார். இது பாரதவாசிகளுக்கே கற்பிக்கப்பட வேண்டும். பாரதமே சுவர்க்கமாக இருந்தது. அங்கே அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. இப்பொழுது இது நரகமாகும். தந்தை மாத்திரமே நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். நீங்கள் இந்த முக்கியமான விடயங்களை நினைவில் வைத்திருப்பதுடன், யார் வந்தாலும் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அப்போது அவர்களும் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை வந்து விட்டார். இது கீதையில் நினைவு கூரப்பட்டுள்ள அதே மகாபாரதப் போராகும். கீதையின் கடவுள் வந்து, கீதையின் ஞானத்தைப் பேசுகின்றார். எதற்காக? மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்காகவே ஆகும். உங்கள் தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் எனத் தந்தை கூறுகின்றார். இது துன்பபூமியாகும். இந்தளவையேனும் உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருப்பீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் பாபாவுடன் அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்லப் போகின்றோம். அனைத்துக்கும் முதலில் நாங்கள் அங்கிருந்து சந்தோஷ தாமத்திற்கு எங்கள் பாகத்தை நடிப்பதற்கு இறங்கி வருகின்றோம். எவரேனும் கல்லூரியில் கற்கும் போது, அவர் என்ன கற்கின்றார், அவர் என்னவாகப் போகின்றார் என்பதை அவர் அறிவார். “நான் வழக்கறிஞர், அல்லது ஒரு பொலீஸ் உயர் அதிகாரி ஆகுவேன். நான் இந்தளவு பணத்தைச் சம்பாதிப்பேன்” என அவரின் சந்தோஷ பாதரசம் உயர்வாக இருக்கும். நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து இந்த ஆஸ்தியைக் கோருகின்றோம் என்பதுடன், நாங்கள் எங்கள் சொந்த மாளிகைகளையும் சுவர்க்கத்தில் கட்டுவோம் என்ற இந்தச் சந்தோஷத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாள் முழுவதும் புத்தியில் இதைக் கடைந்தால் அதிகளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வீர்கள். இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்வது குழந்தைகளின் கடமையாகும். செல்வமுள்ள ஒருவர் தானம் செய்யாது விடின், அவர் உலோபி என அழைக்கப்படுவார். அவரிடம் செல்வம் இருந்தாலும் அவரிடம் ஒன்றும் இல்லாதது போன்றே இருக்கும். செல்வந்தர்கள் நிச்சயமாகத் தானம் செய்ய வேண்டும். நல்ல மகாராத்திக் குழந்தைகள் தொடர்ந்தும் தந்தையின் இதயத்தில் அமர்ந்திருப்பார்கள். சிலரைப் பொறுத்தவரையில், தொடர்ந்தும் அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள் என அக்கறை கொள்ள வேண்டிய அத்தகைய சந்தர்ப்பங்களும் உள்ளன. சரீரத்தின் அகங்காரம் பெருமளவில் உள்ளது. அவர்கள் பாபாவை எந்தக் கணத்திலும் கைவிட்டு, மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்று விடலாம். முரளி வகுப்பை மிக நன்றாக நடத்தக் கூடியவரானாலும், அவர்களிடம் அதிகளவு கர்வம் உள்ளதால் பாபா சிறிதளவு எச்சரித்தாலும் அவர்களால் தொடர்ந்தும் இருக்க முடிவதில்லை. பாடல் ஒன்றுள்ளது: “எங்களை நீங்கள் அடித்தாலும், எங்களை நீங்கள் நிராகரித்தாலும், நாங்கள் உங்களை விட்டுச் செல்ல மாட்டோம்.” இங்கே பாபா எவருக்காவது சிலவேளைகளில் சரியானவற்றைக் கூறினாலும் அவர் கோபம் அடைகிறார். அத்தகைய குழந்தைகளும் உள்ளனர். சிலர் உள்ளே பெருமளவு நன்றியும், மற்றவர்கள் உள்ளே எரிந்து கொண்டும் இருப்பார்கள். மாயையினால் அதிகளவு சரீர உணர்வு உள்ளது. சில குழந்தைகள் முரளியைச் செவிமடுப்பதில்லை. அத்துடன் முரளியைச் செவிமடுக்காது இருக்க முடியாதவர்களும் இருக்கின்றார்கள். எவரேனும் முரளியைக் கற்கவில்லை என்றால் அது அவரிடம் இந்த ஞானம் அதிகம் உள்ளது என்ற அவரின் நம்பிக்கையையும் பிடிவாத குணத்தையுமே குறிக்கின்றது. ஆனால் அவரிடம் எதுவுமில்லை. எங்கு நல்ல சேவை இடம்பெற்றாலும், அல்லது சங்கராச்சாரியார் கண்காட்சிகளுக்கு வருகை தந்திருந்தாலும், அனைவரும் சேவைகளைப் பற்றிய செய்திகளை அறிவதற்காகவும் மற்றவர்களும் அவற்றைக் கற்பதற்காகவும் அவை அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். சேவைக்கான எண்ணமுள்ள அத்தகையவர்களை பாபா சேவை செய்யும் குழந்தைகள் எனக் கருதுவார். சேவை செய்வதில் நீங்கள் ஒருபொழுதும் களைப்படையக் கூடாது. இங்கே நீங்கள் அனேகருக்கு நன்மை செய்ய வேண்டும். பாபா இந்த ஞானத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதிலும், குழந்தைகள் முன்னேற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டுள்ளார். ஆன்மீக சேவையே முக்கியமானது என ஒவ்வொரு நாள் முரளியிலும், தொடர்ந்தும் அவர் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அதற்குச் செவிசாய்ப்பதுடன் அதனை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஒரு பட்ஜை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சென்று, எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் இவ்வாறு ஆகினார்கள்? அதன் பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்கள் எவ்வாறு அவர்களின் இராச்சியப் பாக்கியத்தை அடைந்தார்கள்? என அவர்களிடம் கேளுங்கள். ஆலயக் கதவடியில் சென்று அமருங்கள். வருகின்ற எவரிடமும் கேளுங்கள்: யார் இலக்ஷ்மியும் நாராயணனும்? அவர்கள் எப்போது பாரதத்தை ஆட்சி செய்தார்கள்? அனுமானும் பாதணிகளுக்கு நடுவில் சென்று அமர்ந்திருப்பார். அதுவும் கூட அர்த்தம் நிறைந்தது. அதில் இரக்க உணர்வுள்ளது. பாபா சேவைக்காக உங்களுக்குப் பல வழிமுறைகளைக் கொடுக்கின்றார். ஆனால் அதனை அரிதாகவே எவரும் பயிற்சி செய்கின்றார்கள். அதிகளவு சேவைகள் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் குருடர்களின் கைத்தடியாக வேண்டும். சேவை செய்யாதவர்களாலும், அசுத்தமான புத்தியை உடையவர்களாலும் கிரகிக்க முடியாது, உண்மையில் சேவை மிகவும் இலகுவானது. நீங்கள் ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றீர்கள். செல்வந்தர் ஒருவர் வரும்போது, நாங்கள் இந்தப் பரிசை உங்களுக்குத் தருவதுடன் அதன் கருத்துக்களையும் விளங்கப்படுத்துகின்றோம் என அவருக்குக் கூறுங்கள். பாபா இந்தப் பட்ஜில் பெருமதிப்பு வைத்திருக்கின்றார். வேறு எவருமே அந்தளவு மதிப்பு வைத்திருக்கவில்லை. அவர்கள் மிகவும் நல்ல ஞானத்தினால் நிறைந்திருந்தாலும் அவர்களின் பாக்கியத்தில் அது இல்லை என்றால் பாபா என்ன செய்வார்? தந்தையையும் கல்வியையும் விட்டுச் செல்வது மிகப்பெரிய தற்கொலையாகும். தந்தைக்கு உரியவராகிப் பின்னர் அவரை விவாகரத்து செய்வதை விடப் பெரிய பாவம் எதுவுமில்லை. அத்தகையவரை விடப் பெரிய துரதிஷ்டமானவர் வேறு எவராகவும் இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உலக அதிபதிகள் ஆகப் போகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இது ஒரு சிறிய விடயமல்ல. நீங்கள் நினைவில் இருக்கும் போது சந்தோஷமாகவும் இருப்பீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்யாதுவிடில், உங்கள் பாவங்கள் எரிக்கப்பட மாட்டாது. நீங்கள் தத்து எடுக்கப்பட்டுள்ளீர்கள். எனவே உங்கள் சந்தோஷ பாதரசம் உயர்வடைய வேண்டும். எனினும் மாயை பல தடைகளை ஏற்படுத்துவாள். அவள் பலவீனமானவர்களை வீழ்த்தி விடுவாள். ஸ்ரீமத்தைப் பெறாதவர்கள் தந்தையிடம் இருந்து என்ன பதவியைக் கோர முடியும்? ஒருசில வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுபவர்கள் குறைந்த அந்தஸ்தையே கோருவார்கள். நன்றாக வழிகாட்டல்களைப் பெறுபவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இந்த எல்லையற்ற இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதில் எவ்விதமான செலவு போன்ற கேள்விக்கே இடமில்லை. குமாரிகள் சிலர் இங்கே வந்து கற்பதுடன், பலரையும் தங்களைப் போல் ஆக்குகின்றார்கள். இதற்குக் கட்டணம் போன்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: நான் சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். நான் சுவர்க்கத்துக்கு வருவதில்லை. சிவபாபா அருள்பவர் ஆவார். நீங்கள் என்ன பரிசை (பணம்) அவருக்குக் கொடுப்பீர்கள்? இவர் அனைத்தையும் அவருக்களித்து அவரைத் தனது வாரிசு ஆக்கிக் கொண்டார். பதிலாக அவர் பெற்ற இராச்சியத்தைப் பாருங்கள். அவரே முதலாவது உதாரணம் ஆவார். ஒரு சதமேனும் செலவில்லாது முழு உலகிலும் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையால் விரும்பப்படுவதற்கு மற்றவர்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுங்கள். உங்கள் வார்த்தைகளையும் நடத்தையையும் மிக இனிமையாகவும் இராஜரீகமாகவும் வைத்திருப்பதுடன் சேவையாளர் ஆகுங்கள். சேவை செய்யும் போது அகங்காரம் அற்றவர்கள் ஆகுங்கள்.

2. தந்தையையும், இந்தக் கல்வியையும் கைவிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் பெரும் பாவத்தைச் செய்பவர் ஆகாதீர்கள். ஆன்மீகச் சேவை முக்கிய விடயமாகும். சேவை செய்யும் போது களைப்பு அடையாதீர்கள். இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள். ஓர் உலோபி ஆகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா உங்களின் ஆதி தேசத்தினதும் ஆதி ரூபத்தினதும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் அன்பாகவும் பற்றற்றவராகவும் அப்பாற்பட்டவராகவும் இருப்பீர்களாக.

அசரீரி உலகினதும் உங்களின் அசரீரி ரூபத்தினதும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பது உங்களைச் சதா பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆக்குகிறது. நீங்கள் அசரீரி உலகவாசிகள். இங்கே சேவைக்காக அவதரித்துள்ளீர்கள். நீங்கள் இந்த நிலையற்ற உலகிற்குச் சொந்தமானவர்கள் இல்லை, ஆனால் அவதாரம் செய்திருப்பவர்கள். நீங்கள் இந்தச் சிறிய விடயத்தை நினைவு செய்தால், உங்களால் அப்பால் செல்ல முடியும். தங்களை அவதாரங்கள் எனக் கருதாமல், இல்லறத்தவர்களாகக் கருதுபவர்களின் வாகனங்கள் சேற்றில் புதைந்துள்ளன. ஓர் இல்லறத்தவர் என்றால் சுமையுடன் இருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தம். ஆனால் அவதாரம் என்றால் சம்பூரணமாக இலேசாக இருப்பார்கள். உங்களை ஓர் அவதாரமாகக் கருதுவதன் மூலம் நீங்கள் உங்களின் ஆதி தாமத்தையும் உங்களின் ஆதி ரூபத்தையும் நினைவு செய்து அப்பால் செல்வீர்கள்.

சுலோகம்:
ஒரு பிராமணர் என்பவர் ஒவ்வொரு பணியையும் சுத்தத்துடனும் சரியான முறையிலும் செய்பவர் ஆவார்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

பணிவானவர்களால் புதிய உலகக் கட்டுமாணப் பணியைச் செய்ய முடியும். தன்னை ஒரு கருவியாகக் கருதி, பணிவாக இருப்பதே நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் விதை ஆகும். எல்லைக்குட்பட்ட மரியாதையை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, பணிவானவராக இருங்கள். இப்போது நல்ல பண்புகளினதும் சத்தியத்தினதும் புதிய சம்ஸ்காரங்களை உங்களின் வாழ்க்கையில் தாரணை செய்யுங்கள். உங்களின் விருப்பத்திற்கு மாறாக, கோபம் அல்லது எரிச்சல் வெளிப்பட்டாலும் உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறுங்கள். நீங்கள் மேலதிக உதவியைப் பெறுவீர்கள்.