08.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சங்கமயுகமே அதிமேன்மையான யுகமாகும். இந்த யுகத்திலேயே, ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவாகிய தந்தையைச் சந்திக்கின்றீர்கள். இதுவே உண்மையான கும்பமேலா ஆகும்.
கேள்வி:
எந்தப் பாடத்தை எந்தவொரு மனிதராலும் அன்றித் தந்தையால் மாத்திரமே கற்பிக்க முடியும்?பதில்:
ஒரேயொரு தந்தை மாத்திரமே ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்ற பாடத்தைக் கற்பிக்கின்றார். இந்தப் பாடம் ஒரு சரீரதாரியால் கற்பிக்கப்பட முடியாது. அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஆத்மாவைப் பற்றிய ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் நடிகர்களாக எங்களின் பாகத்தை நடிப்பதற்காகப் பரந்தாமத்தில் இருந்து கீழிறங்கி வந்துள்ளோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. எவரும் அதனை உருவாக்கவில்லை. இதனாலேயே, அதற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ இல்லை.பாடல்:
விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே! விழித்தெழுங்கள்! புதிய யுகம் வரவுள்ளது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடலை பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். மணமகன் மணவாட்டிகளாகிய உங்களுடன் பேசுகிறார். அவர் சரீரத்தில் பிரவேசிக்கும்போது, மணமகன் என அழைக்கப்படுகிறார். இல்லாவிடின், அவரே தந்தையாகவும், நீங்கள் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் கடவுளை நினைவு செய்யும் பக்தர்களே. மணவாட்டிகள் மணமகனை நினைவு செய்கின்றனர். மணமகன், அனைவருடைய அதியன்பிற்கினியவர் ஆவார். அவரே இங்கிருந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது விழித்தெழுங்கள், புதிய யுகம் வரவுள்ளது. புதிய யுகம் என்றால், சத்தியயுகத்தின் புதிய உலகமாகும். கலியுகம் பழைய உலகமாகும். தந்தை இப்பொழுது உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்காக வந்துள்ளார். நான் உங்களைச் சுவர்க்கவாசிகளாக ஆக்குகிறேன் என்று எந்தவொரு மனிதராலும் கூறமுடியாது. சந்நியாசிகளுக்கு சுவர்க்கத்தைப் பற்றியோ நரகத்தைப் பற்றியோ எதுவும் தெரியாது. ஏனைய மதங்கள் இருப்பது போன்று சந்நியாசிகளுக்கும் அவர்களுக்கே உரிய மதம் உள்ளது. அது ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் அல்ல. கடவுள் மாத்திரமே வந்து ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நரக வாசிகள் பின்னர் சத்தியயுகத்தின் சுவர்க்கவாசிகளாக ஆகுகின்றனர். நீங்கள் இப்பொழுது நரகவாசிகள் அல்ல. நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இந்தச் சங்கமயுகம் இரண்டிற்கும் இடையில் உள்ளது. இந்தச் சங்கமயுகத்தில், நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கிறீர்கள். இதனாலேயே, இந்தச் சங்கமயுகம் புகழப்படுகின்றது. உண்மையில், இந்தக் கும்பமேலா அதி மேன்மையான சந்திப்பாகும். இது அதி மேன்மையான மேலா என அழைக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மக்கள் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. இந்துக்களும் சீனர்களும் சகோதரர்கள் என அவர்கள் கூறுகின்றனர். சகல மதங்களுக்கும் ஏற்ப, அனைவரும் சகோதரர்களே. நீங்கள் இந்த வேளையில் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் தந்தையாகிய எனது குழந்தைகள். நீங்கள் தந்தை கூறுவதை நேரடியாகச் செவிமடுக்கிறீர்கள். மக்கள் பேச்சுக்காகவே இவ்வாறு கூறுவார்கள்: ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. அனைவரும் அந்த ஒருவரையே நினைவு செய்கிறார்கள். ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாரிலும் ஆத்மா உள்ளார். ஆத்மாக்கள் என்ற ரீதியில், நீங்கள் சகோதரர்களே. பின், நீங்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஆகுகிறீர்கள். அதனால் நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். எனவே, தந்தை இங்கு வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. நதிகள் கடலில் இருந்து நீண்ட காலம் பிரிந்திருந்தன எனக் கூறப்படுவதில்லை. பெரிய நதிகள் எப்போதும் கடலுடன் கலக்கின்றன. நதி என்பது கடலின் குழந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடலில் இருந்து நீர் மேலே சென்று முகில்களாகிப் பின்னர் மலைகளில் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் பின்னர் நதி ஆகுகின்றது. எனவே, அவை அனைத்தும் கடலின் குழந்தைகள் (புதல்வர்களும் புதல்விகளும்) ஆகும். உங்களில் பலருக்கு நீர் எங்கிருந்து வருகின்றது என்பதும் தெரியாது. உங்களுக்கு இதுவும் கற்பிக்கப்படுகிறது. ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தையே உள்ளார். ஆத்மாக்கள் அசரீரியானவர்கள். அவர்கள் பௌதீக உலகிற்குள் பிரவேசிக்கும்போது, மறுபிறவி எடுக்கிறார்கள். தந்தையும் பௌதீக உலகிற்கு வரும்போதே உங்களைச் சந்திக்கிறார். இந்த ஒரு யுகத்தில் மாத்திரமே நீங்கள் தந்தையைச் சந்திக்கிறீர்கள். அவர் இப்பொழுது அனைவரையும் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவரே கடவுள் என்பதை மக்கள் கண்டுகொள்வார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர் கீதையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரால் இங்கு வரமுடியாது. அவர் எவ்வாறு அவமதிக்கப்பட முடியும்? இந்த வேளையில், ஸ்ரீகிருஷ்ண ஆத்மா இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஆத்மாவை பற்றிய இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள்: நீங்கள் சரீரங்கள் என்ற நினைவிலேயே எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருந்தீர்கள். உண்மையில் நீங்கள் ஆத்மாக்களே. தந்தை இப்பொழுது உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். சாதுக்களும் புனிதர்களும் உங்களை ஒருபோதும் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்க முடியாது. நீங்கள் குழந்தைகள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் பரந்தாமவாசிகள் என்பதை உங்களுடைய புத்தி புரிந்து கொள்கின்றது. இங்கு நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காகவே வந்துள்ளீர்கள். இந்த நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது. இந்த நாடகம் எவராலும் உருவாக்கப்படவில்லை. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் எப்பொழுது ஆரம்பித்தது என மக்கள் உங்களிடம் வினவினால், இந்த நாடகம் அநாதியானது, அதற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ இல்லை, அது புதியதில் இருந்து பழையதாகவும் பழையதில் இருந்து புதியதாகவும் மாறுகின்றது என நீங்கள் கூற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடத்தை உங்களுக்குள் உறுதியாக்கி விட்டீர்கள். புதிய உலகம் எப்பொழுது உருவாக்கப்பட்டது என்றும் அது எப்பொழுது பழையதாகியது என்றும் நீங்கள் அறிவீர்கள். இது உங்களிற் சிலரின் புத்தியில் முற்றிலும் தெளிவாக உள்ளது. நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது என்றும், அது மீண்டும் அவ்வாறே நிகழும் என்றும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 84 பிறவிகளுக்குரிய உங்கள் பாகங்கள் நிச்சயமாக முடிவடைந்து விட்டன. தந்தை இப்பொழுது எங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளார். தந்தை வழிகாட்டி ஆவார், நீங்கள் அனைவருமே வழிகாட்டிகள். வழிகாட்டிகள் யாத்திரிகர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அந்த வழிகாட்டிகள் பௌதீகமானவர்கள். ஆனால் நீங்களோ ஆன்மீக வழிகாட்டிகள். இதனாலேயே, நீங்களும் பாண்டவ அரசாங்கம் என அழைக்கப்படுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மறைமுகமானவர்கள். பாண்டவர்களும், கௌரவர்களும், யாதவர்களும் என்ன செய்தார்கள்? இது மகாபாரத யுத்தம் நிகழும் இந்தக் காலப்பகுதியையே குறிக்கும். இப்பொழுது பல மதங்கள் உள்ளன. உலகமும் தமோபிரதானாக உள்ளது. பல்வேறு மதங்களின் விருட்சம் இப்பொழுது முற்றிலும் பழையதாகி விட்டது. இந்த விருட்சத்தின் முதல் அத்திவாரம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் மிகச் சொற்ப மக்களே உள்ளார்கள். பின்னரே சனத்தொகை அதிகரிக்கின்றது. எவருக்கும் இது தெரியாது. உங்களுக்கு இடையேயும் இது வரிசைக்கிரமமாக உள்ளது. மாணவர்களாகிய உங்களில் சிலர் விவேகிகள். நீங்கள் இந்தக் கற்பித்தல்களை மிக நன்றாகக் கிரகிப்பதுடன், மற்றவர்கள் அதனைக் கிரகிக்கத் தூண்டுவதிலும் ஆர்வம் காட்டுகிறீர்கள். சிலர் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்கின்றார்கள். சிலர் மத்திம இலக்கத்தில் இருக்கிறார்கள். சிலர் மூன்றாவது பிரிவிலும், ஏனையவர்கள் நான்காவது பிரிவிலும் இருக்கிறார்கள். மிகத்தெளிவான முறையில் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துபவர்கள் தேவைப்படுகின்றார்கள். அனைத்திற்கும் முதலில், அவர்களுக்கு இரு தந்தையர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூறுங்கள். ஒன்று இந்த எல்லையற்ற பரலோகத் தந்தையும், மற்றவர் எல்லைக்குட்பட்ட பௌதீகத் தந்தையும் ஆவார். பாரத மக்கள் தங்களின் எல்லையற்ற ஆஸ்தியை பெறுகிறார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, பின்னர் அது நரகமாகியது. இந்த உலகம் அசுரனின் இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் பக்தி கலப்படமற்றதாக இருந்தது. அந்தக் காலத்தில் மக்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்தார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆக விரும்பினால், உங்களைச் சீரழியச் செய்யும் விடயங்களைச் செவிமடுப்பதை நிறுத்துங்கள். ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். கலப்படமற்ற ஞானத்தைச் செவிமடுங்கள். மற்றவர்களிடம் இருந்து நீங்கள் செவிமடுக்கும் அனைத்தும் பொய்யானவையே. இப்பொழுது தந்தை உங்களுக்கு சத்தியத்தைக் கூறி, உங்களை அதி மேன்மையான மனிதர்கள் ஆக்குகிறார். தீய விடயங்களைச் செவிமடுத்ததன் மூலம் நீங்கள் சீரழிந்து விட்டீர்கள். பிரம்மாவின் பகல் ஒளியாகும், பிரம்மாவின் இரவு இருளாகும். நீங்கள் இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். எனினும் ஒவ்வொரு விடயத்திலும் குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்களே. ஒரு சத்திரசிகிச்சைக்கு, சில சத்திரசிகிச்சை நிபுணர்கள் 10,000 இலிருந்து 20,000 ரூபாய்களை அறவிடுகின்றனர். ஆனால் சிலருக்கோ உண்பதற்கேனும் போதியளவு இல்லாமல் உள்ளது. சட்டத்தரணிகளும் இவ்வாறே உள்ளனர். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாகக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதில் வேறுபாடு உள்ளது. பணிப்பெண்களும் சேவகர்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் எந்தளவிற்குக் கற்கிறேன்? எதிர்காலப் பல பிறவிகளில் நான் என்ன ஆகுவேன்? நீங்கள் பல பிறவிகளில் என்னவாக ஆகுகிறீர்களோ, அவ்வாறே ஒவ்வொரு கல்பத்திலும் ஆகுவீர்கள். எனவே, நீங்கள் இந்தக் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். நஞ்சு அருந்துவதை முற்றாக நிறுத்துங்கள். கடவுள் அழுக்கான ஆடைகளைக் கழுவுகிறார் என சத்தியயுகத்தைப் பற்றிக் குறிப்பிடப்படுவதில்லை. இந்த வேளையில், அனைவரின் ஆடைகளும் உக்கிப் போயுள்ளன. அவை தமோபிரதானாக உள்ளன. இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். எவருடைய ஆடைகள் மிகப் பழைமையானவை? எங்களுடையவையே. நாங்கள் தொடர்ந்து எங்களது சரீரங்களை மாற்றுகிறோம். ஆத்மாக்கள் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். சரீரங்களும் தொடர்ந்தும் தூய்மையற்றும், பழையனவாகவும் ஆகுகின்றன. எனவே, சரீரங்களை மாற்ற வேண்டும். ஆத்மாக்களை மாற்ற முடியாது. சரீரம் வயதாகிப் பின்னர் மரணம் ஏற்படுகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு பாகத்தைக் கொண்டுள்ளனர். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். நான் இந்தச் சரீரத்தை விட்டு நீங்குகிறேன் என ஆத்மாக்களே கூறுகிறார்கள். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். மக்கள் சரீர உணர்வு உடையவர்கள். அரைக்கல்பமாக, ஆத்மாக்கள் ஆத்ம உணர்வில் இருக்கிறார்கள். மற்றைய அரைக்கல்பத்தில் அவர்கள் சரீர உணர்வுடன் இருக்கிறார்கள். சத்தியயுகத் தேவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் என்பதனால், அவர்களுக்கு, ‘பற்றை வென்றவர்கள்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. அவர்கள் தாங்கள் ஆத்மாக்கள் என்றும், தங்களது சரீரங்களை விட்டு நீங்கி இன்னொன்றை எடுக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். பற்றை வென்ற அரசனின் கதையும் உள்ளது. தேவர்கள் பற்றை வென்றவர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் உங்களுடைய சரீரத்தை விடுத்து, உங்களுடைய அடுத்த சரீரத்தைச் சந்தோஷத்துடன் எடுக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள். சக்கரத்தைச் சுற்றி வந்து, நீங்கள் பாபாவைக் கண்டு கொண்டீர்கள். ஏனைய மதங்களுக்கு மாற்றப்பட்டவர்களும் வந்து பாபாவைச் சந்திப்பார்கள். அவர்கள் வந்து, தங்களது சிறிதளவு ஆஸ்தியைக் கோரிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் மதத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் அந்த மதத்தில் எவ்வளவு காலம் இருக்கிறார்கள் என்பதை யார் அறிவார்கள்? அவர்கள் அதில் இரண்டு அல்லது மூன்று பிறவிகளை எடுத்திருக்கலாம். எவராவது ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற்றப்பட்டிருந்தால், அவர் அந்த மதத்தில் பிறப்பெடுத்துப் பின்னர் இங்கு வருவார். இவை விபரங்கள் ஆகும். தந்தை கூறுகிறார்: இவை அனைத்தையும் உங்களால் நினைவு செய்ய முடியாது விட்டால், குறைந்தது உங்களைத் தந்தையின் குழந்தையாகக் கருதிக் கொள்ளுங்கள். நல்ல குழந்தைகளும் பாபாவை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தந்தையை நினைவு செய்வதில்லை. மாயை அவர்களை மறக்கச் செய்கிறாள். நீங்கள் முன்னர் மாயையின் அடிமைகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளுக்கு உரியவர்கள். இது நாடகத்தின் பாகமாகும். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் முதலில் சரீரங்களில் பிரவேசித்தபோது, நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். பின்னர், மறுபிறவி எடுத்ததன் மூலம் நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். உங்கள் சரீரத்தில் எந்தவிதப் பற்றையும் கொண்டிராதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்தப் பழைய உலகில் எல்லையற்ற விருப்பின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில், இந்த உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் துன்பத்தையே விளைவிக்கிறார்கள். எனவே, பழைய உலகை மறந்துவிடுங்கள். நாங்கள் சரீரமற்றவர்களாகவே வந்தோம். இப்பொழுது நாங்கள் சரீரம் அற்றவர்களாகவே திரும்பிச் செல்ல வேண்டும். இந்த உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற்றுவதற்கு, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் எனத் தந்தை கூறுகிறார். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என ஸ்ரீ கிருஷ்ணரால் கூறமுடியாது. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தில் இருக்கிறார். தந்தை மாத்திரமே கூறுகிறார்: நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என அழைத்தீர்கள். எனவே, இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழியைக் காட்டுகிறேன். நான் இந்த வழிமுறையை ஒவ்வொரு கல்பத்திலும் காட்டுகிறேன். உலகம் பழையதாகும்போது கடவுள் வரவேண்டியுள்ளது. நாடகத்தின் காலப்பகுதி மிகவும் நீண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இந்த யுகத்தை முற்றிலும் மறந்து விட்டார்கள். இது இப்பொழுது சங்கமயுகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்குரிய யுகமாகும். மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். இந்த வேளையில் அனைவரும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுகிறீர்கள். நீங்களே அதி கூடியளவு பக்தி செய்தவர்கள். பக்தி மார்க்கம் இப்போது முடிவிற்கு வருகிறது. மரண பூமியில் பக்தி இடம்பெறுகிறது. அதன்பின்னர், அமரத்துவ பூமி வரும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர், பக்தியின் எந்தவொரு பெயரோ சுவடோ இருக்காது. ‘ஓ கடவுளே! ஓ இராமா!’ இவை அனைத்தும் பக்திக்குரிய வார்த்தைகள். இங்கு, நீங்கள் எந்தவித ஓசைகளையும் எழுப்பக்கூடாது. தந்தை ஞானக் கடல் ஆவார். அவர் எந்தவித ஓசைகளையும் எழுப்புவதில்லை. அவர் சந்தோஷக்கடல் என்றும் அமைதிக்கடல் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, பேசுவதற்கு அவருக்கு ஒரு சரீரம் தேவைப்படுகிறது. கடவுளின் மொழி என்னவென்று எவருக்கும் தெரியாது. பாபா சகல மொழிகளையும் பேசுவார் என்றில்லை. இல்லை. அவருடைய மொழி ஹிந்தி ஆகும். பாபா ஒரு மொழியில் மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அதனை மொழிபெயர்த்து மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் சந்திக்கின்ற வெளிநாட்டவர்களுக்கும் தந்தையின் அறிமுகத்தை வழங்குங்கள். அவர் இப்பொழுது ஆதி, சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். அத்துடன் திரிமூர்த்தியையும் விளங்கப்படுத்துங்கள். பிரஜாபிதா பிரம்மாவிடம் பல பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் உள்ளார்கள். வருகின்ற எவரிடமும் முதலில் கேளுங்கள்: யாரிடம் நீங்கள் வந்துள்ளீர்கள்? வெளியிலே ஒரு பெயர்ப்பலகை போடப்பட்டுள்ளது. பிரஜாபிதாவினூடாகவே படைப்பு நிகழ்கிறது. அவரைக் கடவுள் என அழைக்க முடியாது. அசரீரியான ஒரேயொருவரை மாத்திரமே கடவுள் என்று அழைக்க முடியும். பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் பிரம்மாவின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள்? நீங்கள் ஏன் தந்தையைச் சந்திக்க விரும்புகிறீர்கள்? தந்தைக்குக் குழந்தைகளே தேவைப்படுவார்கள். நாங்கள் தந்தையை மிக நன்றாக அறிவோம். ‘மகன் தந்தையைக் காட்டுகிறார்’ என்ற கூற்று நினைவு கூரப்படுகிறது. நாங்கள் அவரின் குழந்தைகள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மிக மேன்மையான மனிதர்களாகுவதற்கு தீய விடயங்களைச் செவிமடுக்காதீர்கள், அவை உங்களைத் தாழ்ந்த நிலைக்கே இட்டுச்செல்லும். ஒரேயொரு தந்தையின் கலப்படமில்லாத ஞானத்தை மாத்திரமே செவிமடுங்கள்.2. பற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆத்ம உணர்வுக்கு வருவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். இந்தப்பழைய உலகம் துன்பத்தையே தரும் என்பது உங்கள் புத்தியின் நினைவிலிருக்கட்டும். ஆகவே நீங்கள் பழைய உலகை மறப்பதுடன் அதில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கமயுகத்தின் உங்களின் பேறுகள் அனைத்தையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் மேன்மையான வெகுமதியைப் பெற்று ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.கடவுளைச் சந்திக்கின்ற, கடவுளின் ஞானத்தைப் பெறுகின்ற சிறப்பியல்பானது, அழியாத பேறுகளைக் கொண்டிருப்பதில் தங்கியுள்ளது. சங்கமயுகம் என்பது முயற்சி செய்வதற்கான வாழ்க்கை என்றும் சத்தியயுகம் அதன் வெகுமதிக்கான வாழ்க்கை என்பது மட்டுமல்ல. சங்கமயுகத்தின் சிறப்பியல்பானது, நீங்கள் ஓரடி எடுத்து வைக்கும்போது, உங்களின் வெகுமதியாக ஆயிரம் அடிகள் உதவியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். எனவே, அது வெறுமனே முயற்சி மட்டுமல்ல. ஆனால், அது மேன்மையான வெகுமதியும் ஆகும். சதா இதை உங்களின் முன்னால் வைத்திருங்கள். வெகுமதியைப் பார்ப்பதன் மூலம், நீங்கள் இலகுவாக ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். நான் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டேன் என்ற பாடலைப் பாடுங்கள். நீங்கள் மூச்சுத் திணறுவதில் இருந்தும் தூங்கி விழுவதில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
பிராமணர்களின் மூச்சு, தைரியம் ஆகும். இதன் மூலம் மிகவும் கஷ்டமான பணியும் இலகுவானதாகி விடும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வின் மூலம் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: அவர் எப்போதும் தன்னைத் தந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பதாகக் கருதியதுடன் அந்த அனுபவத்தையும் கொடுத்தார். இந்த ஒன்றிணைந்த ரூபத்தை எவராலும் பிரிக்க முடியாது. இத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகள் சதா தங்களைத் தந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பவர்களாக அனுபவம் செய்வார்கள். எந்தவொரு சக்தியாலும் அவர்களைப் பிரிக்க முடியாது.