08.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அவதூறு செய்பவர்கள் மீதும் தந்தை கருணை கொண்டிருப்பதைப் போன்று, நீங்களும் கருணை கொண்டிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களை அவதூறு செய்பவர்களையும் நண்பர்கள் ஆக்குங்கள்.

பாடல்:
தந்தையின் எப் பார்வை உறுதியாக உள்ளது? குழந்தைகளாகிய நீங்கள் எப் பார்வையை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்?

பதில்:
தந்தையின் பார்வையில் ஆத்மாக்கள் அனைவரும் தனது குழந்தைகளே என்பது உறுதியாக உள்ளது. இதனாலேயே அவர் “குழந்தாய், குழந்தாய்” என்று தொடர்ந்தும் கூறுகின்றார்: உங்களால் எவரையும் “குழந்தாய், குழந்தாய்” என ஒருபொழுதும் கூற முடியாது. அந்த ஆத்மா, உங்களின் சகோதரர் என்ற உங்களின் பார்வையை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். சகோதரைப் பாருங்கள். சகோதரருடனேயே பேசுங்கள், அதன் மூலம் ஆன்மீக அன்பு இருக்கும். அப்பொழுது, குற்ற எண்ணங்கள் அனைத்தும் முடிவடையும். உங்களை இகழ்பவர்களும், உங்களுடைய நண்பர்கள் ஆகுவார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? நிச்சயமாக நீங்கள் “சிவன்” என்றே கூறுவீர்கள். அவர் அனைவரினதும் ஆன்மீகத் தந்தையாவார். அவர் மாத்திரமே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும், உங்களுடைய முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் ஆகாஷ் வாணியைப் பற்றிப் பேசும் பொழுது (ஆகாயத்திலிருந்து வரும் சப்தம்), அவர்கள் ஆகாயத்திலிருந்து யாருடைய சப்தம் வருகிறது என்று கூறுகின்றார்கள்? சிவபாபாவினுடையது என்றே கூறுகின்றார்கள். இந்த வாய் ஆகாயம் என்று அழைக்கப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் ஆகாயம் என்ற தத்துவத்திலிருந்து (வாய்) சப்தத்தை வெளிப்படச் செய்கின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் எல்லா வகையான புகழையும்; பாடுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இங்கேயே அவர்கள் அவரைப் புகழ்கின்றார்கள். அவர்களுடைய ஆசைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள காரணத்தினால், எவரும் சந்தோஷமான நேரத்தில் தந்தையை நினைவுசெய்வதும் இல்லை. இங்கு, அவர்களுக்குப் பல ஆசைகள் உள்ளன. மழை இல்லாதபொழுது, அவர்கள் யாகங்களை உருவாக்குகின்றார்கள். ஒரு யாகத்தை உருவாக்குவதால், அங்கு, எப்பொழுதும் மழை இருக்கும் என்பதல்ல, இல்லை. சிலசமயங்களில், எங்காவது பஞ்சம் இருக்கலாம், அவர்கள் ஒரு யாகத்தை உருவாக்கினால் கூட, அதனூடாக எதுவும் நடைபெறாது. இதுவே நாடகமாகும். வரவிருக்கின்ற அனர்த்தங்கள் அனைத்தும் தொடர்ந்தும் வரவுள்ளன. பெரும் எண்ணிக்கையான மனிதர்களும், பெரும் எண்ணிக்கையான மிருகங்கள் போன்றன தொடர்ந்தும் மரணிக்க நேரிடும். மக்கள் மிகவும் சந்தோஷமற்றிருக்கிறார்கள். மழையை நிறுத்துவதற்கான யாகம் எதுவும் உள்ளதா? அடைமழை பொழியும்பொழுது, அவர்கள் ஒரு யாகத்தை உருவாக்குகின்றார்கள். இப்பொழுது நீங்கள் மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். வேறு எவருக்கும் இது தெரியாது. தந்தையே இங்கமர்;ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: மக்கள் தந்தையைப் புகழ்வதுடன், அவரை அவதூறும் செய்கின்றார்கள். அது ஓர் அற்புதம்! அவர்கள் எப்பொழுது பாபாவை அவதூறு செய்ய ஆரம்பித்தார்கள்? இராவண இராச்சியம் ஆரம்பமாகிய பொழுது ஆகும். அவர்கள் கடவுளைச் சர்வவியாபி என அழைத்துள்ளதே, பிரதானமான அவதூறு ஆகும். இக் காரணத்தினாலேயே அவர்கள் வீழ்ந்துவிட்டார்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: உங்களை அவதூறு செய்பவர்கள் உங்களுடைய நண்பர்கள் ஆவார்கள். கடவுளை அதிகளவு அவதூறு செய்தவர்கள் யார்? குழந்தைகளாகிய நீங்கள், குழந்தைகளாகிய நீங்களே இப்பொழுது நண்பர்கள் ஆகுகிறீர்கள். உண்மையில், முழு உலகும் அவரை அவதூறு செய்கின்றது, ஆனால் நீங்கள் அதில் முதல் இலக்கத்தவர்கள் ஆவீர்கள், பின்னர் நீங்கள் நண்பர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளே நெருக்கமான நண்பர்கள் ஆவார்கள். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் என்னை அவதூறு செய்துவிட்டீர்கள், குழந்தைகளாகிய நீங்களே என்னை அவமதிப்பவர்களும் ஆவீர்கள். எவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்! இவ்விடயங்களே நீங்கள் கடைய வேண்டிய ஞானமாகும். “ஞானக்கடலைக் கடைவது” என்பதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. எவராலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைக் கற்றுப் பின்னர் ஏனையோர்களை ஈடேற்றுகின்றீர்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: அதர்மம் மேலோங்கியுள்ள பொழுது, நான் வருகின்றேன். இது பாரதத்தைக் குறிக்கின்றது. நாடகம் எதைப் போன்றுள்ளது என்று பாருங்கள்! மக்கள் சிவனின் பிறந்தநாளையும், சிவராத்திரியையும் கொண்டாடுகின்றார்கள். உண்மையில், அங்கு, ஓர் அவதாரமே உள்ளது. அவதாரம் கூழாங்கற்களிலும் கற்களிலும் உள்ளது என்று மக்கள் கூறியுள்ளனர். தந்தை இதைப் பற்றி முறையிடுகின்றார். தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கீதையைக் கற்று அவ் வாசகங்களை வாசிப்பவர்களும் கூறுகின்றார்கள். நீங்கள் மாத்திரமே அனைவரை விடவும் அன்பான குழந்தைகள் ஆவீர்கள். பாபா எவருடனாவது பேசும்பொழுது அவர் தொடர்ந்தும் கூறுகின்றார்: “குழந்தாய், குழந்தாய்”;. அனைவரும் தனது குழந்தைகளே என்கின்ற தந்தையின் பார்வை உறுதியாகியுள்ளது: ஆத்மாக்கள் அனைவரும் எனது குழந்தைகள். உங்களில் ஒருவர் கூட “குழந்தாய், குழந்தாய்” எனக் கூற மாட்டீர்கள். ஒவ்வொருவரும் கொண்டுள்ள அந்தஸ்து என்ன என்பதையும் ஒவ்வொருவரும் யார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அனைவரும் ஆத்மாக்கள் ஆவார்கள். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே சந்தோஷமோ அல்லது துன்பமோ எதுவும் கிடையாது. அனைவரும் எனது குழந்தைகள் ஆவார்கள். ஒருவர் கீழ் குலத்தை சேர்ந்த சரீரத்தையும் வேறு சிலர் வெவ்வேறு குலத்தை சேர்ந்த சரீரத்தையும் ஏற்றிருப்பார்கள். “குழந்தாய், குழந்தாய்!” என்று கூறுகின்ற பழக்கத்தை பாபா விருத்திசெய்து கொண்டுள்ளார். பாபாவின் பார்வையில் அனைவரும் ஆத்மாக்கள் ஆவார்கள். அதிலும், அவர் ஏழைகளின் மீது பெருமளவுக்கு அன்பு செலுத்துகின்றார், ஏனெனில் நாடகத்திற்கேற்ப, அவர்களே அதிகளவு அவதூறை விளைவித்துள்ளதுடன் அவர்கள் இப்பொழுது என்னிடம் வந்துள்ளார்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே ஒருபொழுதும் அவதூறு செய்யப்படுவதில்லை. மக்கள் கிருஷ்ணரையும் பெருமளவுக்கு அவதூறு செய்துள்ளார்கள். அது ஓர் அற்புதமாகும். கிருஷ்ணர் முதிர்ச்சியடைந்த பொழுது, அவர்கள் அவரை அவதூறு செய்ததில்லை. இந்த ஞானம் மிகவும் சுவாரஷ்யமானதாகும்! இந்த ஆழமான விடயங்களை எவராலும்; புரிந்துகொள்ள முடியாது. இதற்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. அது நினைவுயாத்திரையினூடாக மாத்திரம் உருவாக்கப்பட முடியும். இங்கு அமர்ந்திருக்கையிலும், சிலர் மிகச் சரியான நினைவைக் கொண்டிருப்பதில்லை. தாங்கள் சின்னஞ் சிறிய ஆத்மாக்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. உங்களுடைய புத்திகளினாலேயே நீங்கள் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். அத்தகையதோர் சின்னஞ் சிறிய ஆத்மாவே எங்களுடைய தந்தையும் எங்களுடைய ஆசிரியரும் ஆவார் என்பது உங்களுடைய புத்திகளில் பதிவதில்லை. இது உங்களின் புத்தியில் பதிவது அசாத்தியம் ஆகுகின்றது. நீங்கள் தொடர்ந்தும் “பாபா, பாபா!” என்று கூறுகின்றீர்கள். நீங்களும் அவரைத் துன்ப நேரத்தில்; நினைவுசெய்கிறீர்கள். கடவுள் பேசுகின்றார்: அனைவரும் என்னைத் துன்ப நேரங்களில் நினைவுசெய்கின்றார்கள். எவருமே என்னைச் சந்தோஷத்தில் நினைவுசெய்வதில்லை. அந்நேரத்தில் என்னை நினைவுசெய்ய வேண்டிய தேவையில்லை. இங்கு, அவர்கள் அவரை நினைவுசெய்து ‘ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! எனக்கு ஆசீர்வாதங்களைத் தாருங்கள்!’ என்று கூறுமளவுக்குப் பெருமளவு துன்பமும் அனர்த்தங்களும் உள்ளன. இப்பொழுதும், நீங்கள் குழந்தைகள் ஆகியுள்ளபொழுதும் நீங்கள் எழுதுகின்றீர்கள்: எனக்கு ஆசீர்வாதங்களைத் தாருங்கள்! எனக்குச் சக்தியைக் கொடுங்கள்! கருணை காட்டுங்கள்! பாபா பதிலளிக்கின்றார்: யோக சக்தியினால் உங்களுக்கான சக்தியைக் கோருங்கள்! உங்களுக்காகக் கருணையையும் ஆசீர்வாதங்களையும் கொண்டிருங்கள்! உங்களுக்கு இராச்சிய திலகத்தை இட்டுக் கொள்ளுங்;கள்! அதனை செய்வதற்கான வழியை நான் உங்களுக்குக் காட்டுகின்றேன். ஆசிரியர் உங்களுக்குக் கற்பதற்கான வழியைக் காட்டுகின்றார். கற்பதும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதும் மாணவர்களின் கடமையாகும். உங்களுக்கு ஆசீர்வாதங்களையும் கருணையையும் கொடுப்பதற்கு ஓர் ஆசிரியர் ஒரு குரு அல்ல. சிறந்த குழந்தைகள் ஓடோடி வருவார்கள். அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதால், எவராலும் விரும்பும் அளவிற்கு ஓட முடியும். நினைவுயாத்திரையே ஓட்டப் பந்தயமாகும். ஒவ்வொரு ஆத்மாவும் சுதந்திரமானவர் ஆவார். பாபா உங்களைச் சகோதர, சகோதரி உறவுமுறையிலிருந்தும் விடுவித்துள்ளார்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். அவ்வாறிருந்தும், கண்கள் குற்றமுடையவையாக இருப்பதை நிறுத்துவதில்லை; அவை தொடர்ந்தும் தங்கள் வேலையைச் செய்கின்றன. இந்நேரத்தில், மனித சரீரத்தின் பாகங்கள் அனைத்தும் குற்றமுடையவையாக உள்ளன. எவராவது சிலரை உதைத்தால் அல்லது சிலரைத் தள்ளினால், அவை குற்றமுடைய பாகங்கள் ஆகும். சரீரத்தின் ஒவ்வொரு பாகமும் குற்றமுடையதாகும். அங்கு, எப் பாகமும் குற்றமுடையதாக இருக்காது. இங்கு, ஒவ்வொரு பாகமும் குற்றச் செயல்களைப் புரிகின்றது. அனைத்தையும் விட, அதிகளவு குற்றமுடைய பாகம் எது? கண்கள் ஆகும். காமத்திற்கான ஆசை முடிவுறாதபொழுது, அவர்கள் தங்களின் கரங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். அனைத்திற்கும் முதலில்; வருபவை கண்கள் ஆகும். இதனாலேயே சுர்தாஸின் கதை (அவர் தனது சொந்தக் கண்களையே பிடுங்கியெறிந்தார்) உள்ளது. சிவபாபா சமயநூல்கள் எவற்றையும் கற்றதில்லை. இந்த இரதம் அவற்றைக் கற்றுள்ளார். சிவபாபா ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். சிவபாபா சமயநூல்களை எடுத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நான் விதையாகிய, ஞானம் நிறைந்தவர் ஆவேன். இது உலக விருட்சமும் அதைப் படைப்பவர் விதையாகிய, தந்தையுமாவார். பாபா விளங்கப்படுத்துகின்றார்: எனது வசிப்பிடம் அசரீரி உலகாகும். இந்நேரத்தில், நான் இச்சரீரத்தில் பிரசன்னமாகியுள்ளேன். வேறு எவராலும் இவ்வாறு கூற முடியாது: நான் இம்மனித உலக விருட்சத்தின் விதையாவேன். நான் பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவேன். வேறு எவராலும் இதைக் கூற முடியாது. விவேகமுள்ள நபர் ஒருவரிடம் கடவுள் சர்வவியாபி என்று எவராவது கூறினால், அவர் உடனடியாக வினவுவார்: நீங்கள் கடவுளா? நீங்கள் அல்லாவா? இருக்க முடியாது. எவ்வாறாயினும், இந்நேரத்தில், எவரும் விவேகிகள் அல்லர். அவர்களுக்கு அல்லாவைப் பற்றித் தெரியாததால், அவர்கள் கூறுகின்றார்கள்: நானே அல்லா. அவர்கள் ஆங்கிலத்தில் சர்வவியாபி என்று கூறுகின்றார்கள். அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருந்தால், அவர்கள் ஒருபொழுதும் அதைக் கூற மாட்டார்கள். சிவபாபாவின் ஜெயந்தி (பிறப்பு) என்றால், புதிய உலகின் ஜெயந்தி என்று அர்த்தம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதில் தூய்மை, அமைதி, சந்தோஷம் ஆகிய அனைத்தும் உள்ளடங்குகின்றன. சிவஜெயந்தியே, தசேரா ஜெயந்தியுமாகிய கிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவஜெயந்தி தீபமாலா ஜெயந்தியுமாகும். சிவஜெயந்தியானது சுவர்க்கத்தின் பிறப்புமாகும். ஜெயந்திகள் அனைத்தும் ஒன்றாக வருகின்றன. தந்தை இங்கமர்ந்திருந்து இப்புதிய விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார்: சிவஜெயந்தி என்றால், சிவாலயத்தின் “பிறப்பும்” விபச்சார விடுதியின் இறப்பும் என்று அர்த்தமாகும். தந்தை புதிய விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: சிவஜெயந்தி என்றால் புதிய உலகின் பிறப்பு என்று அர்த்தமாகும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு நன்றாக விளங்கப்படுத்தினாலும், அவர்கள் விழித்தெழுவதில்லை. அவர்கள் அறியாமை இருளில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பக்தி செய்து ஏணியில் கீழே வருகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நானே வந்து, அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றேன். தந்தை சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் உங்களை அவதூறு செய்கின்ற, செய்தித்தாளின் ஊடகவியலாளர்களுக்கு எழுத வேண்டும்: எங்களை அவதூறு செய்பவர்கள், எங்களின் நண்பர்கள் ஆவார்கள். நாங்களும் நிச்சயமாக உங்களுக்கு ஜீவன்முக்தியை அருள்வோம் - உங்களுக்கு வேண்டியளவு எங்களை அவதூறு செய்யுங்கள். மக்கள் கடவுளையே அவதூறு செய்கின்றார்கள், எனவே அவர்கள் எங்களை அவதூறு செய்தால் அதைப் பற்றியென்ன? நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஜீவன்முக்தியை அருள்வோம். நீங்கள் அதை விரும்பாதுவிடின், நாங்கள் உங்கள் மூக்கைப் பற்றிப்பிடித்து, உங்களை எங்களுடன் அழைத்துச் செல்வோம். பயப்படுவதற்கு எதுவுமில்லை. இப்பொழுது நீங்கள் செய்யும் அனைத்தையும் நீங்கள் முன்னைய கல்பத்திலும் செய்தீர்கள். பிரம்மாகுமார், குமாரிகளாகிய நாங்கள் அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றோம். நீங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். முன்னைய கல்பத்திலும் அப்பாவிப் பெண்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதைக் குழந்தைகள் மறக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: எல்லையற்ற குழந்தைகள் அனைவருமே என்னை அவதூறு செய்கின்றார்கள். எனது நண்பர்களாகிய குழந்தைகள் மீது அதிகளவு அன்புசெலுத்தப்படுகின்றது. குழந்தைகள் மலர்கள் ஆவார்கள். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை முத்தமிடுகின்றார்கள். தந்தை அவர்களைத் தன் தலைமீது வைத்து அவர்களுக்குச் சேவை செய்கின்றார். பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றார். நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லப் போகின்ற இந்த ஞானத்தை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். அதைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு, நாடகத்தில் அதுவே அவர்களின் பாகம் ஆகும். அவர்கள் அப் பாகத்தை நடிப்பார்கள். அவர்கள் தங்களின் கர்மக் கணக்குகளைத் தீர்த்து வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்க முடியாது. அனைவராலும் சுவர்க்கத்தைப் பார்க்க முடியாது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவு பாவத்தைச் செய்து பின்னர் வருவார்கள். தமோபிரதானாக இருக்கின்றவர்கள் மிகவும் தாமதித்தே வருவார்கள். இதன் முக்கியத்துவமானது மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மிகச் சிறந்த மகாராத்திக் குழந்தைகளின் மீதும் தீய சகுனங்கள் உள்ளதால், அவர்கள் விரைவில் கோபப்படுவதுடன் பின்னர் அவர்கள் கடிதங்கள் எவற்றையும் எழுதுவதுமில்லை. பாபாவும் கூறுகின்றார்: அவர்களுக்கு முரளி அனுப்புவதை நிறுத்துங்கள்! அத்தகைய குழந்தைகளுக்குத் தந்தையின் பொக்கிஷங்களைக் கொடுப்பதில் என்ன நன்மை இருக்கின்றது? பின்னர், சிலரின் கண்கள் திறந்தால், அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு தவறு செய்தேன். சிலர் இதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. ஒருவர் மிகவும் கவலையீனமாக இருக்கக்கூடாது. தந்தையை நினைவுகூடச் செய்யாத பலர் உள்ளனர். அவர்கள் எவரையும் தங்களுக்குச் சமமானவர்களாக ஆக்க மாட்டார்கள். இல்லாதுவிடின், அவர்கள் பாபாவுக்கு எழுத வேண்டும்: பாபா, நான் உங்களை ஒவ்வொரு கணமும் நினைவுசெய்கின்றேன். சிலர் அனைவருடைய பெயரையும் எழுதுகின்ற வகையினர்கள்: இன்ன இன்னாருக்கு எனது நினைவைக் கொடுங்கள். அது உண்மையான நினைவுசெய்தல் அல்ல. பொய்ம்மையானது தொடர முடியாது. அவர்களின் மனச்சாட்சிகள் தொடர்ந்து உறுத்துகின்றன. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிகச் சிறந்த கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். நாளுக்கு நாள், பாபா மிகவும் ஆழமான விடயங்களை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். துன்ப மலைகள் வீழ உள்ளன. சத்தியயுகத்தில் துன்பம் பற்றிய கருத்துக் கிடையாது. இப்பொழுது இராவண இராச்சியமாகும். மைசூர் ராஜா இராவணனின் ஒரு கொடும்பாவியைச் செய்து தசேராவைப் பெருமளவுக்குக் கொண்டாடுகின்றார். அவர்கள் இராமரைக் கடவுள் என்று அழைக்கின்றார்கள், ஆனால் இராமரின் சீதை கடத்தப்பட்டாள். அவர் சர்வசக்திவான் எனின், எவ்வாறு அவரிடமிருந்து அவளை எவரையாவது கடத்த முடியும்? அவை யாவும் குருட்டு நம்பிக்கை ஆகும்! இந்நேரத்தில் அனைவரிலும் ஐந்து விகாரங்களாகிய குப்பை உள்ளது. கடவுள் சர்வவியாபி என்று கூறுவதே மிகப்பெரிய பொய் ஆகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அதர்மம் தலை தூக்கியுள்ள பொழுது, நான் வருகின்றேன். நான் வந்து சத்தியபூமியையும் சத்திய தர்மத்தையும் ஸ்தாபிக்கின்றேன். சத்தியயுகம் சத்தியபூமி எனவும் கலியுகம் பொய்ம்மையான பூமி எனவும் அழைக்கப்படுகின்றது. தந்தை இப்பொழுது பொய்மையான பூமியைச் சத்தியபூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆழமான, சுவாரசியமான ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கு, நினைவுயாத்திரையினூடாக, உங்கள் புத்தியை ஒரு தங்கப் பாத்திரமாக ஆக்குங்கள். நினைவுசெய்தல் எனும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுங்கள்.

2. தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள், கவனம் செலுத்திக் கற்றிடுங்கள். உங்களுக்காகக் கருணையையும் ஆசீர்வாதங்களையும் கொண்டிருங்கள். உங்களுக்கு சுய இராச்சிய திலகத்தை இ;ட்டுக் கொள்ளுங்கள். உங்களை அவதூறு செய்கின்ற எவரையும் உங்கள் நண்பராகக் கருதுவதுடன் அவருக்கு சற்கதி அருளுங்கள்.

ஆசீர்வாதம்:
மேலிருந்து அவதரித்த ஓர் அவதாரமாகுவதன் மூலம் ஆசீரவாதங்களை அருள்கின்ற ரூபமாகவிருந்து சேவை செய்பவர் ஆகுவீர்களாக.

தந்தை சூட்சும உலகிலிருந்து கீழே இங்கு சேவை செய்வதற்காக வருவதைப் போன்று, அவ்வாறே நீங்களும் சேவை செய்வதற்காக சூட்சும உலகிலிருந்து கீழே வரவேண்டும். இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் சேவை செய்யும் போது, நீங்கள் தந்தையை போன்று, சதா பற்றற்றவராகவும் உலகத்தினால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பீர்கள். மேலிருந்து கீழே, இங்கே வருவது என்றால், ஓர் அவதாரமாக கீழே வந்து சேவை செய்வது என்று அர்த்தமாகும். ஓர் அவதாரம் வந்து தம்மை அவருடன் அழைத்துச் செல்ல வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். எனவே, நீங்களே அனைவரையும் முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற உண்மையான அவதாரங்கள் ஆவீர்கள். உங்களை ஓர் அவதாரமாகக் கருதி, சேவை செய்யும் போது, நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்கின்ற ரூபமானவர் ஆகுவீர்கள், அப்பொழுது பலரது கள் பூர்த்தி செய்யப்படும்.

சுலோகம்:
`ஒருவர் உங்களுக்கு நல்லதை அல்லது தீயதை, எதைக் கொடுத்தாலும், நீங்கள் தொடர்ந்தும் அவர்கள் மீது கருணை கொண்டிருந்து, அனைவருக்கும் அன்பையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.