08.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, “தந்தை, ஆசிரியர், சற்குரு” என்கின்ற மூன்று வார்த்தைகளையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் பல சிறப்பியல்புகளை விருத்தி செய்து கொள்;வீர்கள்.

பாடல்:
எந்தக் குழந்தைகள் தொடர்ந்தும் ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்கணக்கான வருமானத்தைச் சேகரிக்கின்றார்கள்?

பதில்:
ஒவ்வோர் அடியிலும் சேவைக்காகத் தொடர்ந்தும் முன்னேறுபவர்களே, பல மில்லியன் கணக்கான வருமானத்தைத் தொடர்ந்தும் சேகரிக்கின்றார்கள். நீங்கள் பாபாவின் சேவையில் அடியெடுத்து வைக்காதுவிடின், நீங்கள் எவ்வாறு பல மில்லியன்களைப் பெறுவீர்கள்? சேவையே உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்களைக் கொடுக்கிறது, இதனூடாக நீங்கள் பல மில்லியன்களை உடையவர்கள் ஆகுகிறீர்கள்.

கேள்வி:
எந்த இரகசியத்தை அறிந்து கொள்வதால், நீங்கள் அனைவருக்கும் நன்மையளிப்பவர்கள் ஆகுகிறீர்கள்?

பதில்:
இதுவே அனைவருக்குமான ஒரே கடை என்கின்ற இரகசியத்தை பாபா குழந்தைகளாகிய எங்களுக்குக் கூறியுள்ளார். நிச்சயமாக அனைவரும் இங்கு வர வேண்டும். இது மிகவும் ஆழமான இரகசியமாகும். இந்த இரகசியத்தின் அர்த்தத்தை அறிந்துள்ள குழந்தைகள் மாத்திரம் அனைவருக்கும் நன்மையளிப்பவர்களாக ஆக முடியும்.

ஓம் சாந்தி.
பாபாவே எங்கள் தந்தையும், ஆசிரியரும் மற்றும் எங்கள் சற்குருவும் ஆவார் என்பது ஆன்மீகத் தந்தையின் ஒவ்வொரு ஆன்மீகக் குழந்தைகளுக்கும் தெரியும். இது குழந்தைகளாகிய உங்களுக்கும் தெரியும், ஆனால் அதை அறிந்திருந்த பொழுதும், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு இது தெரியும், ஆனாலும் அவர்கள் அதை மறந்து விடுகின்றார்கள். உலக மக்களுக்கு இது முற்றிலும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: இம் மூன்று வார்த்தைகளையும் நினைவுசெய்யுங்கள், உங்களால் பெருமளவு சேவையைச் செய்ய முடியும். மக்கள் பலரும் கண்காட்சிகளிலும் அருங்காட்சியகங்களிலும் உங்களிடம் வருகின்றார்கள். பல நண்பர்களும் உறவினர்களும் உங்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். எவராவது வரும்பொழுது, நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: கடவுளென அழைக்கப்படுபவர் பாபாவே ஆவார். அவர் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். நீங்கள் இதை நினைவுசெய்தால், அதுவும் நன்றாகும். நீங்கள் வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் வேறு எவரைப் பற்றியும் இவ்வாறு கூற முடியாது. எங்கள் பாபாவே தந்தையும், ஆசிரியரும் மற்றும் சற்குருவும் ஆவார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது மிகவும் இலகுவானது! எவ்வாறாயினும், தங்களுடைய புத்தி இம் மூன்று வார்த்தைகளையும் கிரகிக்க இயலாதவாறு, அத்தகையதோர் கல்லுப் புத்தியைச் சிலர் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அவற்றை மறந்துவிடுகின்றார்கள். பாபாவே எல்லையற்ற தந்தை என்பதால், அவர் எங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார். அவர் எல்லையற்ற தந்தை ஆதலால், அவர் நிச்சயமாக உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பார். தேவர்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்தளவையேனும் நினைவுசெய்தால், உங்களால் வீட்டிலும் பெருமளவு சேவையைச் செய்ய முடியும். எவ்வாறாயினும், இந்தளவைக் கூட மறந்துவிடுவதால், உங்களால் எவருக்கும் எதையும் கூற இயலாதுள்ளது. நீங்கள் முழுக் கல்பத்திலும் அதனை மறந்துவிட்டதால், நீங்கள் இதை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள். இப்பொழுது தந்தை இங்கமர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உண்மையில், இந்த ஞானம் மிகவும் எளிமையானது, ஆனால் நினைவு யாத்திரை மூலம் முழுமையடைவதற்கு முயற்சி தேவையாகும். பாபா எங்களுடைய தந்தை ஆவார், தந்தையே தூய்மையாக்குபவர். ஆதலால், அவர் எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதுடன், எங்களுக்கு ஓர் ஆஸ்தியையும் கொடுத்து, எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: அனைவருக்கும் கூறுங்கள்: என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் பாபாவின் சேவையில் அடியெடுத்து வைக்காதுவிடின், எவ்வாறு நீங்கள் பல மில்லியன்களைப் பெறுவீர்கள்? சேவை செய்வதால் மாத்திரம், உங்களால் பல மில்லியன்களை உடையவர்கள் ஆக முடியும். சேவை மாத்திரமே ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்களைக் கொடுக்கின்றது. சேவை செய்வதற்கு சகல இடங்களிலிருந்தும் குழந்தைகள் ஓடி வருகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பல அடிகளை எடுத்து வைக்கின்றார்கள். அவர்கள் மாத்திரமே பல மில்லியன்களைப் பெறுவார்கள். புத்தியும் கூறுகின்றது: சூத்திரர்கள் முதலில் பிராமணர்கள் ஆக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களைப் பிராமணர்களாக ஆக்காதுவிடின், அவர்கள் என்னவாக ஆகுவார்கள்? சேவையானது தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்குச் சேவைச் செய்திகள் கூறப்படுவதால், அவர்கள் தூண்டப்படுகின்றார்கள். சேவையினூடாகவே நீங்கள் பல மில்லியன்களைப் பெற்றுள்ளீர்கள். உலகில் வேறு எவருக்கும் தெரியாத இந்த ஒரு விடயத்தை அவர்களுக்குக் கூறுங்கள். எல்லையற்ற தந்தையே, தந்தை ஆவார், ஆனாலும் அவரை எவருக்கும் தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் “தந்தையாகிய கடவுளே” என்று கூறுகின்றார்கள். அவர் ஆசிரியரும் ஆவார் என்பது எவருடைய புத்தியிலும் இல்லை. ஓர் ஆசிரியர் எப்பொழுதும் மாணவர்களால் நினைவுகூரப்படுகின்றார். நன்கு கற்காதவர்கள், கல்வி அறிவற்றவர்கள் என்று கூறப்படுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: பரவாயில்லை. நீங்களும் எதையும் கற்றிருக்காதுவிடினும், உங்களால் குறைந்தபட்சம், நீங்கள் சகோதரர்கள் என்பதையாவது புரிந்துகொள்ள முடியும். எங்களுடைய தந்தை எல்லையற்றவர் ஆவார். தந்தை ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு வருகின்றார், அவர் அதை பிரம்மாவினூடாகச் செய்கின்றார். எவ்வாறாயினும், மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. கடவுள் ஒருபொழுதும் வந்திராதுவிடின், அவர்கள் ஏன் அவரைக் கூவியழைக்கப் போகின்றார்கள்: “ஓ விடுதலையளிப்பவரே, வாருங்கள்! ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவுசெய்வதால், சமயநூல்களை ஏன் கற்கின்றார்கள்? அவர்கள் ஏன் யாத்திரைகள் செல்கின்றார்கள்? அவர் அங்கு அமர்ந்திருக்கின்றாரா? கடவுளே தூய்மையாக்குபவர். ஆதலால், கங்கையில் நீராடுவதால், எவ்வாறு எவராவது தூய்மையாக முடியும் என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறு சுவர்க்கத்துக்கு எவராவது செல்ல முடியும்? அவர்கள் இங்கே பிறக்கவே வேண்டும். புதிய உலகத்துக்கும் பழைய உலகத்துக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. இவ்வுலகம் சத்தியயுகம் என அழைக்கப்பட முடியாது. இது இப்பொழுது கலியுகமாகும். மனிதர்கள் முழுமையான கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சிறிதளவு சந்தோஷத்தைக் கண்டவுடன், இதுவே சுவர்க்கமென எண்ணுகின்றார்கள். இதைத் தந்தை மாத்திரம் விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களை அவமதிக்கவில்லை. தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதுடன் அனைவருக்கும் சற்கதியையும் அருள்கின்றார். கடவுளே தந்தை ஆதலால், நீங்கள் நிச்சயமாகக் கடவுளிடமிருந்து எதையாவது பெற வேண்டும். “பாபா” என்கின்ற வார்த்தையானது நிச்சயமாக நீங்கள் ஓர் ஆஸ்தியின் நறுமணத்தைப் பெறுகின்ற வகையில் உள்ளது. உங்களுக்கு எத்தனை தாய்வழி, தந்தைவழி மாமன்கள் போன்றவர்கள் இருப்பினும், நீங்கள் அவர்களிடமிருந்து ஓர் ஆஸ்தியின் நறுமணத்தைப் பெறுவதில்லை. நீங்கள் அகநோக்கு உடையவர்கள் ஆகி, தந்தை கூறுவது சரியே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு குருவுக்குச் சொத்து இருப்பதில்லை. அவர் தனது வீட்டையும் குடும்பத்தையும் துறந்துவிட்டார், நீங்களோ விகாரங்களைத் துறந்துவிட்டீர்கள். தாங்கள் தங்களுடைய வீடுகளையும் குடும்பங்களையும் துறந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள், நீங்களோ முழு உலகின் விகாரங்களையும் துறந்துவிட்டதாகக் கூறுகின்றீர்கள். புதிய உலகுக்குச் செல்வது மிக இலகுவானதாகும்! நாங்கள் தமோபிரதான் உலகமாகிய, பழைய உலகம் முழுவதையும் துறக்கின்றோம். சத்தியயுகமே புதிய உலகமாகும். நிச்சயமாகப் புதிய உலகம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் அதை நினைவுசெய்கின்றார்கள். புதிய உலகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது, ஆனால் அம்மக்கள் அவ்வாறு கூறவேண்டும் என்பதற்காகவே அதைக் கூறுகின்றார்கள்; அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: முதலில் இதைப் பற்றிச் சிந்தியுங்கள். பாபா எங்களுடைய தந்தையும் ஆசிரியரும், அத்துடன் எங்களுடைய சற்குருவும் ஆவார். அவர் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இரு வார்த்தைகளே உள்ளன: மன்மனாபவ! அதில் அனைத்தும் அடங்கியுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் அதைக் கூட மறந்துவிடுகின்றீர்கள். உங்கள் புத்தியில் நீங்கள் தொடர்ந்தும் நினைவுசெய்வது என்ன என்பதை ஒருவராலும் ஒருபொழுதும் கூற முடியாது! இல்லாதுவிடின், ஒவ்வொரு நாளும் நீங்கள் எந்த ஸ்திதியில் அமர்ந்திருந்தீர்கள் என்பதையும், அது எவ்வளவு நேரத்துக்கு என்பதையும் உங்களால் எழுத்திற் கொடுக்க முடியும். நீங்கள் தந்தைக்கும் ஆசிரியருக்கும் சற்குருவுக்கும் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதால், நீங்கள் அவரை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். ஒரு மாணவர் தனது ஆசிரியரை மாத்திரம் நினைவுசெய்வார். எவ்வாறாயினும் இங்கும் மாயை இருக்கின்றாள். அவள் முழுமையாக உங்கள் தலையைச் மொட்டையடித்துவிடுகின்றாள். அவள் உங்கள் முழு இராச்சியப் பாக்கியத்தையும் அபகரிக்கின்றாள், நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வதும் இல்லை! நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்கு வந்தீர்கள், ஆனால் நீங்கள் எதையும் பெறவில்லை. இதையே நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள் என்றாலும், அது அத்தகையதொரு பெரிய விடயமில்லை. நீங்கள் இங்கு வந்து, ஆனால் கற்காதுவிடினும், சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுள்ளதால், நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் என்பது ஒரு விடயமல்ல என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அது கற்பது ஆகாது. ஒருவர் சிறிதளவைக் கேட்டாலும், அவர் நிச்சயமாக அதன் பலனைப் பெறுகின்றார். நீங்கள் கற்பதினூடாக ஒரு புலமைப்பரிசிலைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து அதிமேலான அந்தஸ்தைக் கோர வேண்டியுள்ளதால், நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கல்வியை நினைவுசெய்தால், 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்வீர்கள். இங்கு அமர்ந்திருக்கையில் அனைத்தும் நினைவுசெய்யப்பட வேண்டும், ஆனால் அது கூட நினைவுசெய்யப்படுவதில்லை. நீங்கள் அதை நினைவுசெய்திருந்தால், பின்னர் நீங்கள் அதைப் பற்றி ஏனையோருக்கும் கூறுவீர்கள். அனைவரிடமும் படங்கள் உள்ளன. நீங்கள் ஏனையோருக்குச் சிவனின் படத்தை விளங்கப்படுத்தினால், அவர்கள் ஒருபொழுதும் கோபமடைய மாட்டார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: வாருங்கள், எவ்வாறு சிவன் எங்களுடைய எல்லையற்ற தந்தை என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். அவருடனான உங்களுடைய உறவுமுறை என்ன? அவை பயனற்ற படங்களாக இருக்க மாட்டாது. அவர் கடவுளே எனவும், கடவுள் அசரீரியானவராகவே இருக்க முடியும் எனவும் சிவனைப் பற்றி நிச்சயமாகக் கூறப்பட்டிருக்கும். அவர் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவர் எங்களுக்குக் கற்பித்தல்களையும் கொடுக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஆத்மாவே ஓர் ஆசிரியர் ஆகுகின்றார். தந்தையும் இந்த இரதத்தில் பிரவேசித்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் சத்தியயுகத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். அங்கு கலியுகத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள்? சேவாதாரிக் குழந்தைகள் நாள் முழுவதும் இவ் விடயங்களைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். சிலர் சேவை செய்யாதுவிடின், அவர்களின் புத்தி முற்றிலும் வேலை செய்யவில்லை எனப் புரிந்துகொள்ளப்படுகின்றது. அது இங்கு புத்துக்கள் (மூடர்கள்) அமர்ந்திருப்பதைப் போன்றுள்ளது. அவர்களால் தந்தையைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தையாகிய தூய்மையாக்குபவரை நினைவுசெய்வதால் மாத்திரம் நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்கையில் மரணித்தால், அவருடைய சொத்து அனைத்தையும் பெறுவீர்கள். எல்லையற்ற தந்தையின் சொத்து, சுவர்க்கமே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடன் ஒரு பட்ஜைக் கொண்டிருக்கின்றீர்கள். பல நண்பர்களும் உறவினர்களும் வீட்டில் உங்களிடம் வருகை தருகின்றார்கள். ஒருவர் மரணிக்கும்பொழுது, பலர் அந்நபரின் வீட்டுக்கு வருகை தருகின்றார்கள். நீங்கள் அவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாகச் சேவை செய்ய முடியும். சிவபாபாவின் படம் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் ஒரு பெரிய படத்தை வைத்திருந்தாலும், எவரும் எதையும் கூற மாட்டார்கள். அவரை பிரம்மா என அவர்கள் கூற மாட்டார்கள். இவர் மறைமுகமானவர் ஆவார். நீங்கள் அவர்களுக்கு ஒரு மறைமுகமான வழியிலும் விளங்கப்படுத்த முடியும். சிவனின் ஒரு படத்தை வைத்துக் கொண்டு, ஏனைய அனைத்துப் படங்களையும் அகற்றிவிடுங்கள். இவரே தந்தையும் ஆசிரியரும் சற்குருவுமான சிவபாபா ஆவார். அவர் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வருகின்றார், அவர் சங்கமயுகத்தில் மாத்திரம் வருகின்றார். நீங்கள் உங்களுடைய புத்தியில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். சிவபாபாவே தூய்மையாக்குபவர். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் என்னைச் சந்திப்பீர்கள். உங்களால் மறைமுகமான சேவையைச் செய்ய முடியும். இந்த ஞானத்தினூடாகவே இலக்ஷ்மியும் நாராயணனும் அவ்வாறு ஆகினார்கள். அவர்கள் வினவுகின்றார்கள்: சிவபாபா அசரீரியானவர், எனவே அவர் எவ்வாறு வருகின்றார்? ஓ, ஆனால், ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்கள், ஆகவே, நீங்கள் எவ்வாறு வருகின்றீர்கள்? ஆத்மாக்களும் அவர்களுடைய பாகங்களை நடிப்பதற்கு மேலிருந்து கீழே வருகின்றார்கள். தந்தை இங்கு வந்து உங்களுக்கு இதை விளங்கப்படுத்துகின்றார். அவரால் ஓர் எருதில் பிரவேசிக்க முடியாது. அப்படியாயின், அவர் எவ்வாறு பேசுவார்? அவர் ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசிக்கின்றார். இதை விளங்கப்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறந்த வழிமுறை தேவைப்படுகின்றது. இன்னமும் நீங்கள் பக்தி செய்கின்றீர்களா எனச் சிலர் உங்களிடம் வினவுகின்றார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம். நீங்கள் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனையோரை ஈடேற்றுவதற்கு எம்முறையைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எவரையும் குழப்பமடையச் செய்யக்கூடாது. உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கையில், தூய்மையாக இருங்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எனக்குச் செய்வதற்கு எச்சேவையும் தரப்படவில்லை. ஓ, உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். கங்கையாற்றின் ஓரத்தில் சென்று அமருங்கள். அவர்களிடம் கேளுங்கள்: கங்கையில் நீராடுவதால், என்ன நடைபெறும்? நீங்கள் தூய்மை ஆகுவீர்களா? நீங்கள் கடவுளுக்குக் கூறுகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! ஆகவே, தூய்மையாக்குபவர் அவரா அல்லது கங்கையா? அத்தகைய பல ஆறுகள் உள்ளன. தூய்மையாக்குபவராகிய தந்தை ஒரேயொருவர் ஆவார். அந்த நீராறுகள் சதா காலமும் உள்ளன. தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு இங்கு வர வேண்டும். அவர் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் வந்து உங்களைத் தூய்மையாக்குகின்றார். அங்கு தூய்மையற்றவர்கள் எவரும் கிடையாது. அதன்பெயரே புதிய உலகமாகிய, சுவர்க்கம் ஆகும். இது இப்பொழுது பழைய உலகம் ஆகும். இந்த அதி மங்களகரமான சங்கமயுகத்தைப் பற்றி உங்களுக்கு மாத்திரம் தெரியும். அதை வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. சேவைக்காகப் பலவகையான வழிமுறைகளைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். புத்துக்கள் (மூடர்கள்) ஆகாதீர்கள். அமர்நாத்தில் செய்திகளைச் சுமக்கின்ற புறாக்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றார்கள். அந்தப் புறாக்கள் கடவுளின் செய்தியை மேலிருந்து சுமந்து வரும் என்பதல்ல. அவற்றின் கால்களில் கட்டப்பட்டுள்ள செய்திகளைச் சுமந்து செல்வதற்கு அவை பயிற்றப்பட்டுள்ளன. அதைச் செய்வதால் புறாக்கள் உண்பதற்கான விதைகளை இலகுவில் பெறும், ஆகவே, அவை அலைந்து திரியத் தேவையில்லை. நீங்களும் இங்கு விதைகளைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் புத்தியில் உலக இராச்சியத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அதை நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள். அவை அங்கு விதைகளைப் பெறலாம் என எண்ணுவதால், அது அவற்றுக்கு வழக்கமாகி விட்டது. நீங்கள் உயிர்வாழ்பவர்கள். நீங்கள் அழிவற்ற ஞான இரத்தினங்களாகிய விதைகளைப் பெறுகின்றீர்கள். சிட்டுக்குருவிகள் கடலைப் பருகி வற்றச் செய்தன எனச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அத்தகைய பல கதைகளை எழுதியுள்ளார்கள். மக்கள் கூறுவார்கள்: அது உண்மை! தேவர்கள் கடலிலிருந்து வெளிப்பட்டதாகவும் அவர்கள் தட்டுநிறைந்த இரத்தினங்களைத் தங்களுடன் கொண்டு வந்ததாகவும் பின்னர் அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: அது உண்மை! எவ்வாறு கடலிலிருந்து தேவர்கள் வெளிப்பட முடியும்? மனிதர்களோ அல்லது தேவர்களோ கடலினுள் வசிக்கின்றார்களா? அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. பிறவிபிறவியாக, அவர்கள் வாசித்துள்ளவை, கற்றுள்ளவை அனைத்தும் பொய்யானவையாகவே இருந்து வந்துள்ளன. இதனாலேயே கூறப்பட்டுள்ளது: மாயையும் பொய்…. உலகில், உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில், பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. பொய்களைக் கூறுவதால், அவர்கள் ஏழைகள் ஆகிவிட்டார்கள். நீங்கள் அத்தகைய சாதுரியத்துடன் விளங்கப்படுத்தினாலும், பலரினுள் ஒரு கைப்பிடியளவினரின் புத்தியில் மாத்திரம் அது பதிகின்றது. இது மிகவும் இலகுவான ஞானமும் இலகு யோகமும் ஆகும். நீங்கள் தந்தையையும் ஆசிரியரையும் சற்குருவையும் நினைவுசெய்யும் பொழுது, அவர்களுடைய சிறப்பியல்புகள் உங்களின் புத்தியில் பிரவேசிக்கின்றன. நீங்கள் உங்களையே சோதிக்க வேண்டும். நான் பாபாவை எல்லா நேரமும் நினைவுசெய்கின்றேனா அல்லது எனது புத்தி வேறு திசைகளில் செல்கின்றதா? இப்பொழுது உங்கள் புத்தி புரிந்துணர்வைப் பெறுகின்றது. அத்தகைய இனிமையான விடயங்களைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு வழிமுறைகளைக் காட்டுகின்றார். நீங்கள் அமர்ந்திருந்து ஏனையோருக்கு விளங்கப்படுத்தினால், அவர்கள் உங்கள் எதிரிகள் ஆக மாட்டார்கள். சிவபாபா மாத்திரமே உங்கள் தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவரை நினைவுசெய்யுங்கள். விளங்கப்படுத்துவதற்கு வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மக்கள் சதா உங்களிடம் பிரம்மாவின் படத்தைப் பற்றி வினவுகின்றார்கள். அவர்கள் ஒருபொழுதும் சிவனின் படத்தை அவமரியாதை செய்ய மாட்டார்கள். ஓ, ஆனால் அவரே ஆத்மாக்களின் தந்தை ஆவார். ஆகவே தந்தையை நினைவுசெய்யுங்கள். பலர் அதிலிருந்து நன்மை பெற முடியும். அந்த ஒரேயொருவரை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். அவரே அனைவருக்கும் தந்தை ஆவார். ஒரேயொருவரைத் தவிர எவரின் நினைவும் இருக்கக்கூடாது. ஏனைய அனைவரிடமிருந்தும் உங்களைத் துண்டித்து, ஒரேயொருவருடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். இவையே ஏனையோர்களுக்கு நன்மையளிப்பதற்கான வழிமுறைகள் ஆகும். உங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுவிடின், நீங்கள் எவ்வாறு தூய்மையாகுவீர்கள்? உங்களால் வீட்டில் பெருமளவு சேவையைச் செய்ய முடியும். நீங்கள் பல நண்பர்களையும் உறவினர்களையும் கண்டுகொள்வீர்கள். பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். நீங்கள் பலருக்கு நன்மையளிக்க முடியும். ஒரேயொரு கடையே உள்ளது. வேறு எந்தக் கடைகளும் கிடையாது, ஆகவே, அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வீட்டில் அனைவருடனும் உங்கள் குடும்பத்துடனும் மிகவும் சாதுரியமாக நடந்து கொள்ளுங்கள். எவரையும் குழப்பமடையச் செய்யாதீர்கள். நிச்சயமாகத் தூய்மையாகுங்கள்.

2. அந்த ஒரேயொரு தந்தையிடமிருந்து அழிவற்ற ஞான இரத்தினங்கள் என்னும் விதைகளைப் பெற்று, உங்கள் புத்தியை நிறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புத்தி அலைவதை அனுமதிக்காதீர்கள். ஒரு தூதுவர் ஆகி, அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருப்பதன் மூலம், சகல பற்றுக்களில் இருந்தும் விடுபட்ட உண்மையான இராஜரிஷி ஆகுவீர்களாக.

ஒரு இராஜரிஷி என்றால் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருப்பவர். மறுபுறம், ஒரு ரிஷி என்றால், எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். தனக்காகவும் இன்னொரு நபருக்காகவும் ஏதாவது பொருளுக்காகவும் உங்களுக்கு ஏதாவது பற்று இருந்தால், உங்களால் ஒரு இராஜரிஷி ஆகமுடியாது. சிறிதளவேனும் பற்றின் எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள், தமது பாதங்களை இரண்டு படகுகளில் வைத்திருப்பார்கள். அவர்கள் இங்கேயும் இருக்க மாட்டார்கள், அங்கேயும் இருக்க மாட்டார்கள். எனவே, ஓர் இராஜரிஷி ஆகுங்கள். எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். அதாவது, வேறு எவரும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாகுங்கள். இந்தப் பாடத்தை உறுதியானது ஆக்குங்கள்.

சுலோகம்:
கோபம் என்பது சுயத்தையும் மற்றவர்களையும் எரிக்கும் நெருப்பின் வடிவமாகும்.