08.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அமைதியாக இருக்கின்ற சுபாவம் மிகவும் நல்லது. அமைதியான சுபாவம் நிறைந்தவர்கள் மிகவும் இனிமையானவர்கள். வீணானவற்றைப் பேசுவதை விட, பேசாமல் இருப்பது சிறந்தது.
கேள்வி:
அனைவராலும் நேசிக்கப்படுகின்ற குழந்தைகள் யார்? உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழி என்ன?பதில்:
அதிகளவு ஆர்வத்துடனும், அன்புடனும் அனைவருக்கும் சேவை செய்பவர்களே அனைவராலும் நேசிக்கப்படுகின்றார்கள். சேவையை இட்டு நீங்கள் ஒருபோதும் எந்தவொரு அகங்காரத்தையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள இந்த ஞான கஸ்தூரியை ஏனையோருக்கு கொடுத்து, அனைவருக்கும் சிவபாபாவை ஞாபகப்படுத்துங்கள். இந்த நினைவு யாத்திரையினூடாக நீங்கள் மிக மிகப் பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்து இருக்கிறீர்களோ, அதற்கேற்ப, அந்தளவிற்கு நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதுடன், உங்கள் நடத்தையும் தொடர்ந்தும் சீராகும்.ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மிகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதன் மூலம், அவர் உங்களை மிகவும் விவேகம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. அது பௌதீகக் கல்வி, இது சூட்சுமமான கல்வியாகும். தந்தையைத் தவிர, வேறு எவராலும் எங்களுக்கு இந்தக் கல்வியை கற்பிக்க முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு தெரியும். தந்தை எங்களைத் தூய்மையாக்கி, கற்பிக்கவே வந்துள்ளார். இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளன. எனவே, அத்தகைய தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நாளுக்கு நாள் அறிகின்றீர்கள். அனைவருமே அமைதியை அதிகளவு விரும்புகின்றார்கள். முக்கியஸ்தர்கள் அதிகளவு பேசுவதோ அல்லது சப்தமாகப் பேசுவதோ இல்லை. நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள். உண்மையில், நீங்கள் மக்கள் என்று அழைக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்கள் மிகக் குறைந்தளவே பேசுவார்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகி உள்ளதால், ‘பேசுதல்’ என்பதில் இருந்து நீங்கள் மாறி, மௌனமாக இருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். அமைதியாக இருப்பவர்கள், தம்மில் கவனம் செலுத்துகின்றார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. நீங்கள் அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால், நீங்கள் மிக மென்மையாகவே பேச வேண்டும். மென்மையாகப் பேசுவதன் மூலம், நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அமைதியாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிகளவு அமைதியை பரவச் செய்கிறீர்கள். நீங்கள் மிகவும் அதிகளவு அமைதியாக இருக்க வேண்டும். சப்தமாகப் பேசுவது நன்றாக உணரப்பட மாட்டாது. கோபமும் நல்லதல்ல. குழந்தைகளாகிய நீங்கள், உங்களுக்குள் எந்த விகாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் எவருடனும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதிருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்… உங்களுக்கு விருப்பம் இல்லாத விடயங்களில் இருந்து, நீங்கள் விலகி, அந்தத் தீய விடயங்களில் இருந்து ஒதுங்கி இருந்தால், இரு பக்கத்தினரும் அமைதி அடைவார்கள். ஒவ்வொரு விடயத்திலும் தெய்வீகக் குணங்களை கிரகியுங்கள். யாராவது சப்தமாக பேசினால், அவரிடம் கூறுங்கள்: ‘அமைதியாக இருங்கள், அதிகளவு சப்தமிட வேண்டாம்’. நீங்கள் அமைதியை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் அமைதி உள்ளது. அப்படித்தானே? அசரீரி உலகில், அமைதி உள்ளது. உங்களுக்கு ஒரு சரீரம் இல்லாத போது, உங்களால் எவ்வாறு பேச முடியும்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் நல்லதொரு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். அவர் விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ‘பேசுவதில்’ இருந்து நீங்கள் ‘அசைதலுக்கு’ செல்ல வேண்டும். அதன் பின்னர் மௌனத்திற்கு செல்வீர்கள். நீங்கள் சந்திக்கின்ற அனைவரிடமும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். நீங்கள் எந்தளவிற்கு மௌனமாக இருக்கிறீர்களோ, நீங்கள் உங்களுக்கான அக்கறையில் (உலகம்) மூழ்கியிருக்கிறீர்கள் என்பதை மக்கள் அதிகளவாக புரிந்து கொள்வார்கள். அமைதி நிறைந்திருக்கின்ற சுபாவம் மிகவும் நல்லது. அத்தகையவர்கள் மிகவும் இனிமையானவர்கள். வீணான விடயங்களை பேசுவதை விட, பேசாதிருப்பது நல்லது. நீங்களே உண்மையான தூதுவர்கள். நீங்கள் அனைவர் மீதும் கருணை கொண்டிருக்க வேண்டும். கருணையுடைய குழந்தைகள் மிக அமைதியாக தந்தையின் நினைவில் நிலைத்து இருப்பார்கள். எல்லையற்ற தந்தையின் நினைவில் நிலைத்து இருந்தால், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தையும் அமைதியையும் பெறுவீர்கள் என்ற செய்தியையே நீங்கள் கொடுக்க வேண்டும். ஒரு லௌகீகத் தந்தையிடம் அதிகளவு செல்வம் இருந்தால், நீங்கள் அதிகளவு ஆஸ்தியை பெறுவீர்கள், அப்படித்தானே? எல்லையற்ற தந்தை உலக இராச்சியத்தை கொண்டிருக்கின்றார், நீங்கள் அந்த உலக இராச்சியத்தை 5000 வருடங்களின் பின்னர் பெறுகின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் மிகவும் ஆர்வத்துடன் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவருமே சேவை செய்வதற்கான திறமையைக் கொண்டிருக்க வேண்டும். அன்புடன் சேவை செய்பவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகின்றார்கள். சேவையையிட்டு நீங்கள் என்றுமே அகங்காரம் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் தந்தையிடம் இருந்து ஞான கஸ்தூரியை பெற்றிருக்கின்றீர்கள் என்பதால், அதனை நீங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் நினைவுபடுத்துங்கள்: நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கிறீர்களா? அதில் சந்தோஷம் உள்ளது. உங்களுக்கு ஞாபகப்படுத்துபவர்களுக்கு நீங்கள் நன்றி கூறவேண்டும். நினைவு யாத்திரையினால் குழந்தைகளாகிய நீங்கள் மிக மிகப் பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்து இருக்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன், உங்கள் நடத்தை தொடர்ந்தும் சீராகும். உங்கள் நடத்தையை நீங்கள் நிச்சயமாக சீராக்க வேண்டும். உங்கள் இதயத்திடம் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்: எனது சுபாவம் மிக, மிக இனிமையாக உள்ளதா? நான் எவருக்கேனும் குழப்பம் விளைவிக்கின்றேனா? எவரேனும் குழப்பம் அடைகின்ற வகையில் எந்த ஒரு சூழலும் இல்லாதிருக்க வேண்டும். நீங்கள் இதனைச் செய்ய முயற்சிக்க வேண்டும், ஏனெனில், குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் மேன்மையான சேவையில் இருக்கின்றீர்கள். இந்த உலகம் முழுவதற்கும் நீங்கள் ஒளியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் பூமியின் உயிருள்ள நட்சத்திரங்கள் ஆவீர்கள். ‘விண்மீன் தேவர்கள்’ என்பதைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். அந்த நட்சத்திரங்கள் தேவர்கள் அல்ல. நீங்கள் அவற்றையும் விட மேலானவர்கள். ஏனெனில், நீங்கள் முழு உலகிற்கும் ஞானோதயம் வழங்குகிறீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகப் போகின்றீர்கள். மேலே நட்சத்திரங்களின் பிரகாசம் உள்ளது. சில நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக உள்ளன, ஏனையவை மங்கலாக உள்ளன. சில நிலவிற்கு அருகில் உள்ளன. அவ்வாறே, குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியினால் முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகுவதால், நீங்கள் பிரகாசிக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அழியாத ஞான இரத்தினங்களான அதிஷ்டலாபச்சீட்டைப் பெறுகிறீர்கள் என்பதால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்தும் உள்ளார்ந்தமாக மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க வேண்டும். உங்களுடைய இந்தப் பிறவி வைரம் போன்று பெறுமதி வாய்ந்தது என்று நினைவுகூரப்பட்டுள்ளது. பிராமணர்களாகிய நீங்களே ஞானம் நிறைந்தவர்கள் என்பதால், இந்த ஞானத்தை இட்டு நீங்கள் சந்தோஷம் அடைகிறீர்கள். நீங்கள் அந்த தேவர்களை விட, மேன்மையானவர்கள். எனவே, உங்கள் முகங்கள் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களை ஆசீர்வதிக்கின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் அமைதி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்! நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வேண்டும், அதாவது நீங்கள் பல பிறவிகள் வாழ வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். இருப்பினும் நீங்கள் ஒவ்வொருவரும் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதற்கான உங்கள் சொந்த முயற்சிகளைச் செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கின்றார். அத்துடன் பிராமணர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! தந்தையும் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தொடர்ந்தும் வாழுங்கள். அரைக்கல்பத்திற்கு உங்களுக்கு மரணம் வர மாட்டாது. சத்தியயுகத்தில் மரணித்தல் என்ற பேச்சே இருக்க மாட்டாது. மக்கள் மரணம் அடைவதையிட்டு பயப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் மரணிக்க முயற்சிக்கின்றீர்கள். பாபாவை நினைவு செய்வதன் மூலம், உங்கள் சரீரங்களை நீங்கள் நீக்கி, உங்கள் சிவபாபாவிடம் நீங்கள் செல்வீர்கள், அதன் பின்னர் சுவர்க்க வாசிகள் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது அதி அன்பிற்கினிய தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் நீங்களும் தந்தையைப் போன்று மிக, மிக இனிமையானவர்களாகவும் மிகவும் அன்பானவர்களாகவும் ஆக வேண்டும். பாபா கடிதங்களில் எழுதுவதுண்டு: இனிமையான, இனிமையான, அன்பிற்கினிய, நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே….. பாபா மிகவும் இனிமையானவர், அப்படித்தானே? பாபா எவ்வளவு இனிமையானவரும், அன்பானவரும் என்பதை நீங்கள் நடைமுறையில் அனுபவம் செய்திருக்கிறீர்கள். அவர் எங்களையும் அவ்வாறு ஆக்குகின்றார். நீங்கள் எவ்வளவு இனிமையானவராகவும் அன்பானவராகவும் இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் பூஜிக்கத் தகுதியானவர்களில் இருந்து பூஜிப்பவர்கள் ஆகினோம், எனவே நாங்கள் தொடர்ந்தும் எங்களையே வழிபட்டோம். இவை புரிந்து கொள்வதற்கு மிகவும் அற்புதமான விடயங்கள். அரைக்கல்பாக நாங்கள் அனுபவம் செய்த துன்பத்தை அகற்றுபவரான பாபா இப்பொழுது வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மக்கள் கூறுகின்றார்கள்: ஹர ஹர மகாதேவ் (மகாதேவ் - அனைவரது துன்பத்தையும் அகற்றுபவரான மகாதேவன்) இவர் அந்த மகாதேவ் அல்ல, தந்தையே எங்கள் துன்பத்தை அகற்றுபவர். தந்தையே எங்கள் துன்பத்தை அகற்றி, அதன் பின்னர் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் அரைக்கல்பமாக அதிகளவு துன்பத்தைக் கண்டுவிட்டீர்கள். ஐந்து விகாரங்களின் நோய் அதிகளவு அதிகரித்து விட்டது. இந்த நோய் அதிகளவு துன்பத்தை விளைவித்துள்ளது. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது உங்கள் செயல்களின் கணக்கை சீராக்கிக் கொள்ளுங்கள். வியாபாரிகள் 12 மாதங்களுக்கு தமது கணக்கை வைத்திருக்கின்றார்கள், அப்படித்தானே? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, முழு உலகிலும் எவ்வளவு குப்பை உள்ளதெனப் பாருங்கள். இது நரகம், ஆகையால் தந்தை நரகத்தை சுவர்க்கமாக மாற்றவே வந்திருக்கின்றார். தந்தை அதிகளவு அன்புடன் வருகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்ய வரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நான் ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்காக பிரசன்னம் ஆகின்றேன். அவராகவே வரும் போது, எங்கள் தந்தை எங்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் போது, அவரால் அனைவருக்கும் சேவை செய்ய முடிகின்றது. ஒரேயொருவர் மாத்திரமே முழு உலகிற்கும் உபகாரம் செய்கின்ற அருள்பவர் ஆவார். உலகம் முழுவதிலும் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர் ஒருவர் மாத்திரமே ஆஸ்தியைக் கொடுக்க வருகின்றார் என்பதை அவர் அறிந்துள்ளார். எல்லையற்ற தந்தையின் பார்வை உலகிலுள்ள ஆத்மாக்களிடம் செல்கின்றது. அவர் இங்கே அமர்ந்திருந்தாலும், அவரது பார்வை முழு உலகின் மீதும் உலக மக்களின் மீதும் உள்ளது. ஏனெனில், அவர் முழு உலகையும் அப்பால் அழைத்துச் செல்ல வேண்டும். நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, மிகச்சரியாக முன்னைய கல்பத்தைப் போன்றே, உலக ஆத்மாக்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட வேண்டும். தந்தை குழந்தைகள் அனைவரையும் நினைவு செய்கின்றார், அப்படித்தானே? அவரின் பார்வை அவர்களை நோக்கிச் செல்கின்றது, அப்படித்தானே? சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்காக பிரசன்னம் ஆகின்றார். அவரின் சேவையுடன் ஒப்பிடும் போது, வேறு எவராலும் அத்தகைய சேவையைச் செய்ய முடியாது. அவரின் சேவை எல்லையற்றது. அவர் சேவை செய்வதைப் போன்று நீங்கள் சேவை செய்யும் போது குழந்தைகளாகிய உங்களால் தந்தையைக் காட்ட (வெளிப்படுத்த) முடியும். சேவை செய்கின்றவர்கள் மிகவும் மகத்தான பலனைப் பெறுகின்றார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் நீங்கள் எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுக்கின்றீர்கள் என்ற போதையை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது இந்த ஞான இரத்தினங்கள் பலவற்றால் உங்கள் புத்தியை நிரப்புங்கள், உங்களால் எவ்வளவு நிரப்ப முடியுமோ அவ்வளவை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். தந்தையின் நினைவில், உங்கள் நேரத்தை மிகவும் பலனளிக்கும் வகையில் பயன்படுத்துங்கள். அனைத்தையும் மிக நன்றாக கிரகிப்பவர்கள், பிறருக்கு மிக நன்றாக சேவையும் செய்வார்கள். அவர்கள் தமது நேரத்தை வீணாக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து, அகநோக்கு உடையவர்கள் ஆகுங்கள். உள்ளார்ந்தமாக ஓர் ஆத்மா உள்ளார், அப்படித்தானே? தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஆத்ம உணர்வு உடையவராக இருப்பதே உண்மையில் அகநோக்கைக் கொண்டிருப்பதாகும். அகநோக்கைக் கொண்டிருப்பது என்றால், உள்ளிருக்கும் ஆத்மாவான நீங்கள் தந்தை கூறுகின்ற அனைத்தை மட்டுமே செவிமடுக்கின்றீர்கள் என்று அர்த்தம். தந்தை மீண்டும் மீண்டும் அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். தாய், தந்தை, மற்றும் மிக நன்றாகச் சேவை செய்கின்ற விசேடமான அன்பிற்கினிய மூத்த சகோதர சகோதரிகளிடம் தொடர்ந்தும் கற்றிடுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற நம்பிக்கையை உங்களுக்குள் கொண்டிருங்கள். உங்கள் சரீரங்களிற்கான வாழ்வாதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும், அத்துடன் உங்கள் படைப்புகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். பற்றைக் கொண்டிருக்காதீர்கள். பற்றைக் கொண்டிருப்பதனால், இழப்பு இருக்கும். தந்தையிடம் மாத்திரம் பற்றைக் கொண்டிருங்கள். இங்கே, நீங்கள் தந்தையின் நேர்முன்னிலையில் இருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவின் நேர்முன்னிலையில் இருக்கிறீர்கள். ஏனெனில் தந்தையே இங்கு ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். அங்கே, ஆத்மாக்கள் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் கடைய வேண்டும். ஒரு மாணவன், நாள் முழுவதும் தனது கல்வியைத் தனது புத்தியில் வைத்திருக்கின்றார். நீங்களும் உங்கள் முழுக் கல்வியையும் உங்கள் புத்தியில் வைத்திருக்கின்றீர்கள். இது ஆன்மிகக் கல்வியாகும். நல்ல மாணவர்கள் எப்பொழுதும் ஏகாந்தமாக இருந்து கற்பார்கள். மாணவர்கள் சந்திக்கும் போது, தம் மத்தியில் கல்வியைப் பற்றி கலந்துரையாடுவார்கள். நீங்கள் மிகவும் அதிகளவு சந்தோஷத்துடன் இந்த எல்லையற்ற கல்வியில் ஈடுபட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவியாளர் ஆகியுள்ளீர்கள். நினைவில் நிலைத்திருப்பது அவருக்கு உதவுவதாகும். ஏனெனில், நினைவு யாத்திரை என்றால் மௌனயாத்திரை என்பதாலேயே கூறப்படுகின்றது: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டை சுவர்க்கமாக ஆக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தியில் அல்ஃபாவையும் பீற்றாவையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். அல்ஃபாவை நினைவு செய்தால் நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் வேறு எதனையும் செய்ய வேண்டியதில்லை. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி தந்தையை நினைவுசெய்தால், இராச்சியம் உங்களுடையதாக ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்: தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை பெறுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் நினைவில் உங்கள் நேரத்தைப் பலனளிக்கும் வகையில் பயன்படுத்துங்கள். இந்தப் பெறுமதியான நேரத்தை எங்குமே வீணாக்காதீர்கள். அகநோக்கு உடையவராகி, முயற்சி செய்யுங்கள். அதாவது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்.2. இப்பொழுது, பிராமணர்களாகிய நாங்கள் தேவர்களை விட மேன்மையானவர்கள். நாங்கள் இப்பொழுது அழியாத ஞான இரத்தினங்கள் என்ற அதிர்ஷ்ட இலாபச் சீட்டைப் வென்றுள்ளோம். நாங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகியுள்ளோம் என்பதால், எங்கள் முகங்கள் எப்பொழுதும் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க வேண்டும். தொடர்ந்தும் மகிழ்ச்சியில் உள்ளார்ந்தமாக துள்ளிக் குதியுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் மனதினூடாக உங்கள் சக்திகளின் மகாதானத்தை வழங்குவதன் மூலம் ஒவ்வோர் எண்ணத்திலும் வெற்றியீட்டுகின்ற ஓர் மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.தங்கள் மனதினூடாக சக்திகளின் தானத்தை வழங்குகின்ற குழந்தைகள், மாஸ்டர் சர்வசக்திவான்கள் என்ற ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இது ஏனெனில், உங்கள் மனதினூடாக சக்திகளை வழங்கும் போது, நீங்கள் மிகவும் அதிகளவு எண்ணத்தின் சக்தியை சேமிப்பதால், ஒவ்வொரு எண்ணத்திலும் நீங்கள் வெற்றியை ஈட்டுகிறீர்கள். அதன் பின்னர் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்கள் மனதை ஸ்திரப்படுத்த முடியும். உங்கள் மனம் உங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உங்கள் எண்ணங்களை நீங்கள் வெற்றி கொள்வதால், விஷமமான எண்ணங்களை உங்களால் ஒரு குறுகிய நேரத்திலே, ஆட்ட அசைக்க முடியாததாகவும், அமைதியான எண்ணங்களாகவும் ஆக்க முடியும்.
சுலோகம்:
ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் சதா நிலைத்திருந்தால், நீங்கள் எந்தவொரு தீய சகவாசத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
நீங்கள் மீண்டும் மீண்டும் பாவகாரியங்கள் அல்லது வீணான செயல்களைச் செய்து கொண்டிருந்தால், உங்கள் சகபாடியை நீங்கள் உங்களுடன் வைத்திருக்கவில்லை அல்லது அவரது சகவாசத்தை நீங்கள் அனுபவம் செய்யவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். சக்திகளால் ஒரு விநாடி திருஷ்டியினால் தீயதை அழிக்க முடிவதைப் போன்றே, அவ்வாறாக உங்கள் இணைந்த வடிவத்தின் விழிப்புணர்வில் நீங்கள் நிலைத்திருப்பதன் மூலம், உங்களால் உங்கள் அசுர சகஸ்காரங்களை அல்லது தூய்மையற்ற எண்ணங்களை ஒரு விநாடியில் அழித்து விட முடியும்.