08.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் புத்தியைச் சீர்செய்ய விரும்பினால், ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நினைவின் மூலம் மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தூய்மையானவர்களாகவும், சுத்தமானவர்களாகவும் ஆகுகின்றீர்கள்.

பாடல்:
தற்பொழுது, மக்கள் எவ்வாறு தங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணாக்குகின்றார்கள்?

பதில்:
ஆத்மா ஒருவர் தனது சரீரத்தை விட்டுச் செல்லும்போது, பெருமளவு பணம் போன்றவற்றை அவர்கள் அவருக்காகச் செலவிடுகின்றார்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டுச் சென்றதும், அச்சரீரத்திற்கு எந்தப் பெறுமதியும் இல்லை, இதனாலேயே, அவர்கள் அந்நபருக்காக எதனைச் செய்தாலும், அது அவர்கள் தங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதாக மாத்திரமே இருக்கும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து, ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். பேசுவது, தந்தையாகவோ அல்லது தாதாவாகவோ இருக்கட்டும், இவரும் (பிரம்மாவும்), அதையே கூறுகின்றார். ஆன்மீகத் தந்தை, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார் என்றே தாதாவும் கூறுவார். உண்மையில், சத்திய யுகத்திலிருந்து, திரேதாயுக இறுதிவரை என்ன நிகழ்ந்தது என்பதே பிரதான விடயமாகும். இல்லாவிட்டால், துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் என்ன நிகழ்ந்தது?, யார் வந்தார்கள்? போன்ற அதிக வரலாறும், புவியியலும் உள்ளன. சத்திய, திரேதா யுகங்களில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய வரலாறோ, புவியியலோ இல்லை. ஆனால் ஏனைய அனைத்தினதும், வரலாறும், புவியியலும் உள்ளன. நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் தேவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் காட்டியுள்ளார்கள். அது எல்லையற்ற விவேகமின்மை ஆகும். நீங்களும் எல்லையற்ற வகையில் விவேகமற்றவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது ஒரு சொற்ப அளவைப் புரிந்துகொள்கின்றீர்கள். உங்களில் சிலர் இப்போதும் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அதிகளவு புரிந்துகொள்ளப்பட வேண்டி உள்ளது. அபுவின் புகழைப் பற்றித் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் வேளையில், உங்கள் அது புத்தியில் புகவேண்டும். உங்கள் ஞாபகார்த்தமான தில்வாலா ஆலயம் எப்போது உருவாக்கப்பட்டது? எத்தனை வருடங்களின் பின் அது உருவாக்கப்பட்டது? 1250 வருடங்களுக்கு முன்பு அது கட்டப்பட்டது என அவர்கள் கூறுகின்றார்கள். எனவே, இன்னும் எத்தனை வருடங்கள் மீதமுள்ளன? 3750 வருடங்கள் மீதம் உள்ளன. எனவே, அவர்கள், தற்காலத்தின் ஞாபகார்த்தத்தையும், சுவர்க்கத்தின் ஞாபகார்த்தத்தினையும் உருவாக்கியுள்ளார்கள். ஆலயங்களுக்கிடையேயும் போட்டி நிலவுகின்றது: அவர்கள் ஒன்றை விடச் சிறப்பானதாக மற்றைய ஆலயத்தைக் கட்டினார்கள். இப்போது அதனைக் கட்டுவதற்கேனும் அவர்களிடம் பணம் இல்லை. பெருமளவு பணம் இருந்ததனாலேயே, அவர்கள் சோமநாதருக்கு அவ்வளவு பெரிய ஆலயத்தைக் கட்டினார்கள். அவர்களால் இப்போது அதனைக் கட்ட முடியாது. ஆக்ரா போன்ற இடங்களில் அவர்கள் தொடர்ந்தும் அவற்றைக் கட்டினாலும், அவை அனைத்தும் எந்தப் பயனும் அற்றவை. மனிதர்கள் இருளில் இருக்கிறார்கள். அவர்கள் அதனைக் கட்டி முடிப்பதற்கு முன்னரே விநாசம் ஏற்பட்டு விடும். எவரும் இவ்விடயங்களை அறியார். அவர்கள் தொடர்ந்தும் முழுமையாக அழித்து, மீண்டும் கட்டுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தேவையின்றிப் பணத்தைப் பெறுகின்றார்கள், அவை அனைத்தும் தொடர்ந்தும் வீணாக்கப்படுகின்றது. அது நேர விரயமும், பண விரயமும், சக்தி விரயமுமே ஆகும். ஒருவர் மரணிக்கும்போது, அவர்கள் அதிகளவு நேரத்தை வீணாக்குகின்றார்கள். நாங்கள் எதனையும் செய்வதில்லை. ஆத்மா சரீரத்தை நீக்கிச் செல்கின்றார், எனவே அந்தத் தோலினால் (சரீரத்தினால்) என்ன பயன் உள்ளது? ஒரு பாம்பு அதனது தோலை நீக்கும்போது, அதற்கு ஏதேனும் பெறுமதி உள்ளதா? எதுவுமே இல்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தோலிற்குப் பெறுமதியைக் கொடுக்கின்றார்கள். அவர்கள் உயிரற்ற சிலைகளைப் பெருமளவிற்கு வழிபடுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எப்போது, எவ்வாறு வந்தார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது தீய சக்திகளின் வழிபாடு என அழைக்கப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் ஐந்து தத்துவங்களை வழிபடுகின்றார்கள். உதாரணத்திற்கு, சற்று சிந்தியுங்கள்: இலக்ஷ்மியும், நாராயணனும், சத்திய யுகத்தை ஆட்சி செய்தார்கள். அவர்கள் 150 வருட ஆயுட்காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், தங்கள் சரீரங்களை நீக்கிச் சென்றார்கள், அவ்வளவுதான். பின்னர் சரீரங்களினால் எந்தப் பயனும் இருக்கவில்லை. அங்கு அது என்ன பெறுமதியைக் கொண்டிருக்கும்? ஆத்மா சரீரத்தை நீக்கிச் செல்வார், சரீரம் சுடலையாண்டியிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் அதனைச் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப எரித்துவிடுவார்கள். அங்கே அவர்கள் பெயர் ஒன்றினைச் சம்பாதிப்பதற்காக அந்தச் சாம்பலை எடுத்து எல்லா இடங்களிலும் தூவ மாட்டார்கள். அவரகள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இங்கே, அவர்கள் அதனை அதிகளவிற்குச் செய்கின்றார்கள். அவர்கள் பிராமணப் பூசாரிக்கு உணவளிப்பதுடன், ஏனைய பல விடயங்களையும் செய்கின்றார்கள். இவை எதுவும் அங்கே நடைபெறாது. சரீரங்களினால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் சரீரத்தை எரித்து விடுவார்கள், அவர்களின் உருவங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும். அதுவும், மிகச்சரியான உருவமாக இருக்க முடியாது. ஆதிதேவரின் இந்தக் கற்சிலையும்கூட மிகச் சரியான உருவம் அல்ல. அவர்கள் வழிபாட்டை ஆரம்பித்த காலத்திலேயே, கற்களினால் அவை உருவாக்கப்பட்டுள்ளன. நிஜமாக வாழ்ந்தவர், எரிக்கப்பட்டு முடிந்து விட்டார், பின்னர் பக்தி மார்க்கத்தில் அவர்கள் அந்த உருவங்களை உருவாக்கினார்கள். நீங்கள் இந்த விடயங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நீங்கள் அபுவின் புகழை நன்றாகவே நிரூபிக்க வேண்டும். நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள். இங்கேயே, தந்தை முழு உலகையும், நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றுகின்றார். எனவே, இதுவே அனைத்திலும் அதி உயர்ந்த யாத்திரை ஸ்தலமாகும். இப்பொழுது அவர்கள் அந்தளவு நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் ஒரேயொரு சிவனிலேயே நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் செல்லுமிடமெல்லாம் நிச்சயமாக ஒரு சிவாலயம் இருக்கும். அமர்நாத்தில் சிவனுக்கு ஓர் ஆலயம் உள்ளது. சங்கரர் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறினார் என அவர்கள் கூறுகின்றார்கள். அங்கே ஒரு சமயக் கதை என்ற கேள்விக்கே இடமில்லை. மக்களுக்கு விவேகமே இல்லை. நீங்கள் இப்போது சிறிதளவு விவேகத்தினைக் கொண்டுள்ளீர்கள், ஆனால் முன்னர் நீங்கள் எதையேனும் அறிந்திருந்தீர்களா? பாபா இப்போது அபுவைப் பெருமளவிற்குப் புகழ்கின்றார். அனைத்து யாத்திரைகளிலும், இதுவே உயர்ந்த யாத்திரையாகும். பாபா பெருமளவிற்கு விளங்கப்படுத்துகின்றார், ஆனால் இது விசேடமான அன்புக்குரிய குழந்தைகளின் புத்தியிலும் பதிய வேண்டும். தற்பொழுது பெருமளவு சரீர உணர்வு காணப்படுகின்றது. அதிகளவு ஞானம் தேவைப்படுகின்றது. அதிகளவு சீர்திருத்தங்களும் இருக்க வேண்டும். தற்பொழுது யோகத்தைக் கொண்டிருப்பவர்கள் அரிதாகவே உள்ளனர். யோகத்துடன், ஞானமும் தேவை. நீங்கள் யோகத்தில் மாத்திரமே இருக்க வேண்டும் என்றில்லை. யோகத்திலும் ஞானம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. டெல்கியில் அவர்கள், 'கியான்-விக்யான் பவன்" என ஒரு கட்டடத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்கள், ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. கியான்-விக்யான் என்பது ஒரு விநாடிக்குரிய விடயம் ஆகும். அமைதி தாமமும், சந்தோஷ தாமமும். எவ்வாறாயினும், மக்கள் எந்த விவேகத்தையும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. கீதையைக் கூறிய சின்மயானந்தா போன்ற மகத்தான சந்நியாசிகளும் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு இன்னமும் பல சீடர்கள் உள்ளனர். ஒரேயொரு தந்தையே உலகின் அதி மகத்துவம் வாய்ந்த குரு ஆவார். தந்தை, ஆசிரியர் ஆகியவர்களிலும் பார்க்கச் சிறந்தவர் குருவே ஆவார். ஒரு பெண்ணுக்கு வேறொரு கணவர் இருக்க முடியாது, எனவே வேறொரு குருவும் ஏற்றுக் கொள்ளப்படலாகாது. ஒரு குருவை ஏற்றுக் கொள்ளும்போது, அவர் உங்களுக்குச் சற்கதியை அளிக்க வேண்டும். எனவே ஏன் வேறு குருமார்கள் தேவை? எல்லையற்ற தந்தை ஒருவர் மாத்திரமே சற்குருவாவார். அவரே உங்கள் அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். எவ்வாறாயினும், இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் பலர் உள்ளனர். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது எனவும், அதுவும் வரிசைக்கிரமமானதே எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சிலர் சிறிதளவேனும் புரிந்து கொள்வதில்லை. நாடகத்தில் அவர்களுடைய பாகம் அவ்வாறானதே! ஆசிரியரும் புரிந்துகொள்கிறார், அத்துடன், அவர் எவருடைய சரீரத்தினூடாக விளங்கப்படுத்துகின்றாரோ, அவரும் புரிந்துகொள்கின்றார். வெல்லத்திற்கும் தெரியும். அத்துடன் வெல்லத்தைக் கொண்டிருக்கும் பைக்கும் அது தெரியும். சிவபாபா வெல்லமென (உள்ளடக்கம்) அழைக்கப்படுகின்றார். அவர் அனைவருடைய ஸ்திதியையும் அறிவார். ஒருவர் கற்பதிலிருந்து அவர்கள் எவ்வளவு கற்கின்றார்கள் என்பதையும், அவர்கள் எவ்வளவு சேவை செய்கிறார்கள் என்பதையும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையை எந்தளவிற்கு பாபாவின் சேவையில் தகுதிவாய்ந்தது ஆக்குகின்றீர்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. பிரம்மா தனது வீட்டையும், குடும்பத்தையும் துறந்ததால் மாத்திரமன்றி, முயற்சி செய்ததனாலுமே அவர் இலக்ஷ்மி நாராயணனாகினார். இந்த ஞானம் மிக மேன்மையானது. எவராவது தந்தைக்குக் கீழ்ப்படிவில்லாதவராக இருந்தால், அவர் முழுமையாகக் கல்லாகி விடுகிறார். இது இந்திரசபை என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபா ஞான மழை பொழிகிறார். எவராவது அவருக்குக் கீழ்ப்படியாது விட்டால், அவர் கல்லுப் புத்தியுடையவர் ஆகுகிறார் எனச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே பாபா தொடர்ந்தும் அனைவருக்கும் எழுதுகிறார். உங்களுடன் எவரையாவது அழைத்து வருவதற்கு முன்னர் எச்சரிக்கையாக இருங்கள். விகாரத்தில் ஈடுபடுகின்ற தூய்மையற்றவர் இங்கே வந்து அமர்வதாக இருக்கக்கூடாது. அச்சந்தர்ப்பத்தில், அவர்களைக் அழைத்து வரும் பிராமண ஆசிரியரே அதற்காகச் குற்றஞ்சாட்டப்படுவார். நீங்கள் அவ்வாறான எவரையும் இங்கே அழைத்து வரக்கூடாது. இது மிகப்பெரிய பொறுப்பாகும். தந்தை அதிமேன்மையானவர். அவர் உலக ஆட்சியை உங்களுக்குக் கொடுப்பதால், நீங்கள் அவர் மீது அதிகளவு மரியாதை கொண்டிருக்க வேண்டும். பலர் தங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும் தொடர்ந்தும் நினைவுசெய்கிறார்கள், அவர்கள் தந்தையின் நினைவினைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து உள்ளார மூச்சுத் திணறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது அசுர உலகம். தெய்வீக உலகம் இப்பொழுது உருவாக்கப்படுகிறது: இது எங்களுடைய இலட்சியமும், குறிக்கோளுமாகும். நாங்கள் இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகவேண்டும். என்ன படங்கள் இருந்தாலும், அவை அனைத்தினதும் வரலாறு உங்களுக்குத் தெரியும். மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு முயற்சி செய்யப்படுகிறது. 'இன்னார் இன்னார் நல்லவர், புத்திசாலி’ என்றும், 'இவரால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது’ என்றும் நீங்களும் சிந்திக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களில் எவரேனும் ஒருவர் எந்தளவு ஞானத்தைப் பெற்றீர்களோ, அதற்கேற்பவே சேவை செய்கிறீர்கள். கீதையின் கடவுளே பிரதான விடயமாகும். இது சூரிய வம்ச தேவர்களின் ஒரேயொரு சமயநூலாகும். வெவ்வேறு நூல்கள் இல்லை. பிராமணர்களுக்கெனவும் வேறு எதுவும் இல்லை. இவை மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். ஞானப் பாதையில் முன்னேறும்பொழுது, எவராவது விகாரத்தில் விழுந்து விட்டால், ஞானம் பறந்து விடுகிறது. மிக நல்லவர்கள், விகாரத்தில் ஈடுபட்டு, கல்லுப் புத்தியுடையவர்கள் ஆகினார்கள். மிக நல்ல புரிந்துணர்வு தேவைப்படுகிறது. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றவற்றை நீங்கள் ஜீரணித்துக் கொள்ள வேண்டும். இங்கே அது உங்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது. ஏனெனில் இங்கே எந்த உலகியல் விவகாரங்கள், பிரச்சனைகள் முதலானவை உங்களுக்கு இல்லை. வெளியே வசிக்கும்பொழுது, தொழில் முதலானவற்றையிட்டு அதிகளவு கவலை இருக்கிறது. மாயை பல புயல்களைக் கொண்டு வருகிறாள். இங்கே உலகியல் விவகாரங்கள் எதுவும் இல்லை. இங்கே எங்கும் ஏகாந்தம் நிலவுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்வதற்குத் தந்தை தொடர்ந்தும் தூண்டுகிறார். இந்த பாபாவும் முயற்சியாளராவார். தந்தையே உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். நீங்கள் இவ்விடயத்தில் ஞானக் கடலைக் கடைய வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் அமர்ந்திருக்கிறார். ஐந்து விரல்களையும் கொடுப்பவரே சேவாதாரி என அழைக்கப்படுகிறார். மூச்சுத் திணருபவர்கள் அதிகளவு இழப்பை ஏற்படுத்தி, மேலும் அவச்சேவையையும் செய்கிறார்கள். அவர்கள் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளாக ஆகுபவர்களுக்குப் பணிப்பெண்களும் வேலையாட்களும் தேவைப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களும் இங்கிருந்தே செல்வார்கள். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. இந்தச் சரீரம் சந்தோஷமாக நீக்கப்பட வேண்டும். துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்கு முயற்சி செய்வதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானம் ஒரு விநாடிக்கானதாகும். நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. நீங்கள் சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்து, சிவபாபாவை நினைவுசெய்தால், உங்களால் அங்கே செல்ல முடியும். பிரஜைகள் பலர் உருவாக்கப்படவுள்ளனர். எங்கள் சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியம் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் அவமரியாதை செய்தால், அதிகளவு சுமை சேர்க்கப்படுகிறது. நீங்கள் முழுமையாக நரகத்தின் ஆழத்திற்கு செல்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: பூஜிப்பவர்களாக இருந்தவர்களை எவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் என அழைக்க முடியும்? தந்தை ஒருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், அனைவருக்கும் நன்மை பயப்பவரும் ஆவார். அமைதி என்பதன் அர்த்தத்தையேனும் மக்கள் புரிந்துகொள்ளவதில்லை. அவர்கள் ஹத்தயோகம் முதலியவற்றில் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சிகள்) முதலியவற்றைச் செய்வதையே அமைதி எனக் கருதுகின்றார்கள். அதற்கும் பெருளவு முயற்சி தேவைப்படுகின்றது. சிலரது மூளைகளும் பாதிப்படைந்து விடுகின்றன. எவ்விதப் பேறுமே கிட்டுவதில்லை. அது தற்காலிகமான அமைதியே. அவர்கள் சந்தோஷத்தைத் தற்காலிகமானதும், காக்கையின் எச்சம் போன்றதுமெனக் கூறுவதைப் போலவே, அந்த அமைதியும் தற்காலிகமானதாகவே உள்ளது. அது ஒரு தற்காலிகமான காலத்திற்கே ஆகும். தந்தையோ உங்களுக்கு 21 பிறவிகளுக்கு அமைதி, சந்தோஷம் ஆகிய இரண்டையும் கொடுக்கின்றார். சிலர் இறுதிவரை அமைதி தாமத்திலேயே இருப்பார்கள். அவர்களுடைய பாகங்களுக்கு ஏற்ப, அவர்களால் அதிகளவு சந்தோஷத்தைக் காண முடியாமல் இருக்கும். அங்கே அந்தஸ்தும் வரிசைக்கிரமமானதாகவே இருக்கும். அவர்கள் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவதானாலும், அவர்களால் உள்ளே வரமுடியாதிருக்கும். அவர்களால் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்கவேனும் முடியாதிருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் மாளிகைகளைக் கொண்டிருப்பார்கள். அவரைப் பார்ப்பதற்கு ஒரு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, பாப்பரசரின் தரிசனத்திற்காகப் பலர் செல்கிறார்கள். அத்தகைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற மக்கள் பலர் தோன்றுவார்கள். இலட்சக் கணக்கான மக்கள் அவர்களின் தரிசனத்திற்காகச் செல்வார்கள். நீங்கள் எவ்வாறு இங்கே சிவபாபாவின் தரிசனத்தைப் பெற முடியும்? இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். இது அனைத்திலும் மிகச் சிறந்த யாத்திரைத் தலம் என்பதை உலகம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? தில்வாலா ஆலயம் போன்றவை அருகில் இருக்கக்கூடும். நீங்கள் அவற்றையும் சென்று பார்க்க வேண்டும். அவை எவ்வாறு கட்டப்பட்டுள்ளன என்பதையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் அவர்கள் உங்களுக்கு ஞானம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மக்கள் ஆலோசனை கூறுகிறார்கள்: நீங்கள் இன்ன இன்னதைச் செய்ய வேண்டும். உங்களுக்கு யார் கற்பிக்கிறார் என்பதையேனும் அவர்கள் அறியார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளங்கப்படுத்துவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. இது பற்றிய கதைகளும் உள்ளது. 'சிங்கம் வந்து விட்டது, சிங்கம் வந்து விட்டது....." எனக் கூறப்பட்டது. மரணம் கிட்டத்தட்ட வந்துவிட்டது என நீங்கள் கூறுகிறீர்கள். ஆயினும், அவர்கள் உங்களை நம்புவதில்லை. இன்னமும் 40,000 ஆண்டுகள் இருப்பதனால், எவ்வாறு மரணம் வர முடியும் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், மரணம் நிச்சயமாக வர வேண்டியுள்ளது. அது அனைவரையும் கொண்டு செல்லும். அங்கு குப்பைகூளம் கிடையாது. இங்கிருக்கும் பசுக்களுக்கிடையிலும், அங்கிருக்கும் பசுக்களுக்கிடையிலும் பெருமளவு வேறுபாடு உள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் மாடு மேய்க்கவில்லை. அவர் அனேகமாக ஹெலிக்கொப்டர் மூலம் பாலைப் பெறுவாராக இருப்பார். அந்தக் குப்பைகள் அனைத்தும் அவருக்கு மிகத் தொலைவிலேயே இருக்கும். அவரின் வீட்டிற்கு முன்னால் குப்பை இருந்திருக்காது. அங்கு அளப்பரிய சந்தோஷம் காணப்படும். அதற்கு இப்போது நீங்கள் முழுமையான முயற்சி செய்ய வேண்டும். பல நல்ல குழந்தைகள் நிலையங்களில் இருந்து வருகின்றார்கள். பாபா அவர்களைக் காணுவதில் பூரிப்படைகிறார். அவர்கள் செய்கின்ற, முயற்சிகளுக்கேற்ப மலர்கள் வரிசைக்கிரமமாகத் தோன்றுகின்றார்கள். மலர்களாக இருப்பவர்கள் தங்களை மலர்களாகக் கருதுகின்றார்கள். டெல்கியிலும், குழந்தைகள் இரவுபகலாகப் பெருமளவு சேவை செய்கின்றார்கள். ஞானமும் மிகமேன்மையானது. முன்னர் நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் இப்போது பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். பாபா அனைத்துச் செய்திகளையும் பெறுகின்றார். அவர் சிலருடைய செய்திகளைக் கூறுகின்றார். ஆனால் சிலரின் செய்திகளைக் கூறுவதில்லை. ஏனெனில், பல துரோகிகளும் இருக்கின்றார்கள். முதற்தரமானவர்களும் துரோகிகள் ஆகுகின்றார்கள். மூன்றாம் தரமானவர்களும் துரோகிகள் ஆகுகின்றார்கள். அவர்கள் சிறிதளவு ஞானத்தைப் பெற்று, தங்களை சிவபாபாவின் பாபா எனக் கருதிக் கொள்கின்றார்கள்! தங்களுக்கு யார் ஞானத்தைக் கொடுத்தவர் என்ற எந்தவொரு புரிந்துணர்வும் அவர்களுக்கு இல்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உலக இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற தந்தை மீது நீங்கள் பெருமளவு மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையின் சேவையில் உங்கள் வாழ்க்கையைப் பெறுமதி மிக்கதாக்குங்கள். கல்வியில் முழுமையான கவனம் செலுத்துங்கள்.

2. தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஞானக் கடலைக் கடையுங்கள். ஒருபோதும் தடை ஆகாதீர்கள். ஒருபோதும் அவச்சேவை செய்யாதீர்கள். அகங்காரம் கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நான்கு பாடங்களிலும் நீங்கள் பெற வேண்டும் எனத் தந்தை விரும்புகின்ற மதிப்பெண்களைப் பெற்று, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பீர்களாக.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று நல்ல இலக்கத்தில் சித்தி எய்தும் குழந்தைகள், திறமைச் சித்தி எய்தியவர்கள் எனப்படுகிறார்கள். இடையில் உங்களின் மதிப்பெண்கள் குறைவானதாகவும், பின்னர் அதை அதிகரிப்பதற்காக முயற்சி செய்வதாகவும் இருக்கக்கூடாது. நான்கு பாடங்களிலும் நீங்கள் எவ்வளவு மதிப்பெண்களைப் பெற வேண்டும் எனத் தந்தை விரும்புகிறாரோ, அந்த மதிப்பெண்களைப் பெறுபவர்களால் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க முடியும். அத்துடன் கூடவே, பிராமண உலகில் அனைவராலும் நேசிக்கப்படுபவர்களும், எல்லோருடனும் ஒத்துழைப்பவர்களும், எல்லோருடைய மதிப்பையும் பெறுபவர்களும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன், இராச்சிய சிம்மாசனத்தையும் பெறுவார்கள்.

சுலோகம்:
விசேடமான, அதியன்பிற்குரியவர்களின் இதயங்களில் சதா இந்த முடிவற்ற பாடல் இசைத்துக் கொண்டே இருக்கும்: நான் தந்தைக்குச் சொந்தமானவன், தந்தை எனக்குச் சொந்தமானவர்.