08.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சப்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். ஆகையால் உங்கள் வாயால் நீங்கள் ‘சிவ, சிவா’ என்று கூறத் தேவையில்லை.
கேள்வி:
வேறு எவருமேயன்றி, ஒரேயொரு தந்தை மாத்திரம் ஏன் ஞானக்கடலான சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார்?பதில்:
ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக முடியும் என்பதாலேயே. தந்தை மாத்திரமே தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகின்றார். எந்தச் சரீரதாரிகளாலும் மனிதரைத் தூய்மையாக்க முடியாது. தந்தை உங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலை செய்கின்றார். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். அவரை நீங்கள் அதிகளவு நினைவு செய்தால், அதிகளவில் நீங்கள் சக்தியைப் பெறுவதுடன் அந்தளவிற்குத் தொடர்ந்து உங்கள் மாசும் அகற்றப்படும்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் பக்தியின் புகழைச் செவிமடுத்தீர்கள். நீங்களும் புகழ் பாடினீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் பாடுவதில்லை. நீங்கள் புகழப்பட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பக்தர்கள் செய்பவற்றைக் குழந்தைகளாகிய உங்களால் செய்ய முடியாது. நீங்கள் பக்தர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளைக் கண்டுள்ளீர்கள். ஒரேநேரத்தில் அனைவருமே கடவுளைக் காண முடியும் என்றில்லை. தந்தையால் எவ்வாறு அனைவருக்கும் ஒரேநேரத்தில் கற்பிக்க முடியும்? அது சாத்தியம் இல்லை. பக்தர்கள் அனைவருமே ஒரேநேரத்தில் வருவது சாத்தியம் இல்லை. ஆம், தந்தை நிச்சயமாக உங்களுக்குக் கற்பிக்க வரவேண்டும், ஏனெனில் இது இராஜயோகம். சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். இந்த விழாக்கள் இடம்பெறும் போதே உங்களால் சேவை செய்ய முடியும். உங்களுக்கான இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிக்க வேண்டும். நீங்கள் மகாரத்தி சேனையான சிவசக்திகள் ஆவீர்கள். நீங்கள் வேறு எந்த அப்பியாசங்கள் போன்றவற்றையும் கற்பதில்லை. நீங்கள் ஆன்மீக அப்பியாசத்தை மாத்திரமே கற்கின்றீர்கள். பாரதத்தின் இவ் அப்பியாசம் மிகவும் பிரபல்யமானது. இது யோக அப்பியாசம். ஆத்மாக்கள் பரமாத்மாவான பரமதந்தையுடன் யோகம் செய்து, அவரிடமிருந்து தமது ஆஸ்தியைப் பெற வேண்டும். இதில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்களே அன்றி உங்களுக்கு யுத்தத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையின் வாரிசுகள் ஆவீர்கள். ஆகையால் நீங்கள் தந்தைக்கு உரியவராக இருந்து தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தையின் வழிகாட்டல்கள் சண்டை செய்வதற்கானவை அல்ல. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நீங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்தீர்கள், இப்பொழுது நீங்கள் அதனை நினைவு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்தப் பிறவிகளை நீங்கள் அறிய மாட்டீர்கள். மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றி பேசுதல் பொய்யாகும். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தமக்கு முன்னால் வருகின்ற அனைத்தையும் தொடர்ந்தும் கற்கின்றார்கள். நாடகத்திற்கு ஏற்ப, அவை பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள். சத்திய, திரேதாயுகங்களில் பக்தி செய்யப்படுவதில்லை. பக்தி இந்த ஞானத்தில் இருந்து வேறுபட்டது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர, ரிஷிகள், முனிவர்களின் புத்தியிலும் கூட இந்த ஞானம் இல்லை. அந்த சந்தோஷம் துன்பத்திலிருந்து வேறுபட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. தந்தை சந்தோஷத்தைக் கொடுக்கின்றார், இராவணன் துன்பத்தை விளைவிக்கின்றான். சூரிய, சந்திர வம்சங்களைச் சேர்ந்த நீங்கள் 84 பிறவிகளைச் சுற்றி வந்த பின்னர், சூத்திர வம்சத்தினர் ஆகினீர்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்த பின்னர், கீழிறங்கினீர்கள். உங்கள் புத்திகள் சீரழிந்தும், தமோபிரதானாகவும் ஆகின. சதோபிரதானாக இருப்பவர்களுக்கு தெளிவான, மேன்மையான புத்தி உள்ளது என்று கூறப்படுகின்றது. தமோபிரதானாக இருப்பவர்கள் சீரழிந்த புத்தி உடையவர்கள் எனப்படுகின்றனர். சீரழிந்த புத்தி உடையவர்கள் மேன்மையான புத்தியைக் கொண்டவர்களை வணங்குகின்றார்கள். மேன்மையானவர்களாக இருந்த நீங்கள் இப்பொழுது சீரழிந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதை நீங்களும் அறிந்திருக்கவில்லை. பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: முதல் இலக்கத்திற்கான பிறவியை எடுத்தவர், மீண்டும் சதோபிரதான் ஆகுவார். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்த போது நீங்கள் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் இருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். தூய்மையற்று இருப்பவர்களால் உலக அதிபதிகளாக முடியாது. அவர்களது புகழ் எவ்வளவு மேன்மையாக உள்ளதென்று பாருங்கள்: சுவர்க்கக் கலைகள் அனைத்தும் நிறைந்தவர்கள். திரேதாயுகத்தைச் சேர்ந்தவர்களைச் சுவர்க்கக் கலைகள் அனைத்தும் நிறைந்தவர்கள் என்று நீங்கள் கூறமாட்டீர்கள். சூரியவம்சத்தைச் சேர்ந்தவர்களே பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் எனப்படுகிறார்கள். 14 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களை இட்டு ‘நிறைந்தவர்கள்’ என்ற வார்த்தையை உங்களால் பயன்படுத்த முடியாது. 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருப்பவர்களை இட்டே ‘நிறைந்தவர்கள்’ என்ற வார்த்தையை எழுத முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். இந்த ஞானம் மிக மிக இலகுவானது என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விட இலகுவானது வேறு எதுவும் இல்லை. பாபா கருணை நிறைந்தவர். குழந்தைகளாகிய நீங்கள் பக்திமார்க்கத்தில் அலைந்து திரிந்து களைப்பு அடைந்திருப்பீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். ஆகையாலேயே கடவுள் திரௌபதியின் கால்களைப் பிடித்துவிட்டார் என்று காட்டப்பட்டுள்ளது. பல வயோதிபத் தாய்மார்களும் பாபாவிடம் வருகின்றார்கள். பாபா கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் அலைந்து திரிந்து களைப்பு அடைந்திருப்பதாலேயே பாபா இப்பொழுது உங்கள் களைப்பைப் போக்க வந்துள்ளார். பக்தி மார்க்கத்தில், அவர்கள் இராமரின் பெயரை உச்சரித்து, மணிமாலையை உருட்டுகின்றார்கள். கிறிஸ்தவப் பாதிரிமார்களுடனும் பாபாவிற்குத் தொடர்பு உள்ளது. பாதிரிமார்கள் பைபிளை வாசித்து விளங்கப்படுத்துவதைக் கேட்டு, பலரும் கிறிஸ்தவர்கள் ஆகுகின்றார்கள். இங்கே மணிமாலையை உருட்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவென்று கருதி பாபாவை நினைவு செய்யுங்கள். உங்கள் வாயால் ‘சிவ சிவா’ என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சப்தத்திற்கு அப்பால் செல்கின்றோம். பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையைக் காட்டுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் மாசு அகற்றப்படும். வீட்டில் வாழும் போதும் நீங்கள் தூய்மை ஆகவேண்டும். தாமரை மலர் மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்கென்று பெரியதொரு குடும்பம் இருந்த போதிலும் அது மிகவும் அன்பாகவும் பற்றற்றும் உள்ளது. நீங்கள் நச்சுக்கடலில் வாழ்ந்தாலும் அன்பாகவும் பற்றற்றும் இருக்க வேண்டும். இது நச்சுக்கடல் ஆகும். இதனை ஒரு நதி என்று அழைக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். இந்த புரிந்துணர்வுடனேயே நீங்கள் இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்! ஆத்மாக்களான புத்திரர்கள், புத்திரிகள் இருசாராரும் முயற்சி செய்ய வேண்டும். லௌகீக உறவில் புத்திரர்களே தந்தையின் ஆஸ்தியைப் பெறுகின்றனர். புத்திரிகள் பெறுவதில்லை. இங்கே ஆத்மாக்கள் அனைவரும் ஆஸ்தியைப் பெறுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றீர்கள். கண்காட்சிகளில் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்த பின்னரே தந்தையின் ஆஸ்தியைப் பற்றிக் கூறுங்கள். அனைத்திற்கும் முதலில் இவர் உங்களின் எல்லையற்ற தந்தை என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்துங்கள். அவர்களிடம் விளங்கப்படுத்துங்கள்: கடவுள் ஒருவரே. பிரம்மாவோ, விஷ்ணுவோ அல்லது சங்கரரோ கடவுள் அல்ல. அவர்கள் தேவர்கள் ஆவார்கள். அசரீரித் தந்தையான தூய்மையாக்குபவரே கடவுள் ஆவார். அவரது புகழ் வேறுபட்டது. இக்காலத்தில், கண்காட்சிகளில், நீங்கள் திரிமூர்த்தியைப் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். அவர் தந்தை, இவர் தாதா. ஆஸ்தி அவரிடம் இருந்தே பெறப்படுகின்றது. அவர் அசரீரியானவர் என்பதால் அவரிடம் இருந்து உங்களால் எவ்வாறு உங்களது ஆஸ்தியைப் பெற முடியும்? அவர் அனைவரையும் படைப்பவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் படைப்புகளே ஆவார்கள். படைப்புக்களால் படைப்பவரிடம் இருந்தே ஆஸ்தியைப் பெற முடியும். அசரீரியான தந்தை இவரினூடாகவே உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அனைவரையும் படைப்பவர் ஒரேயொருவரே. ஆகையாலேயே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே என்று நினைவுகூரப்படுகின்றது. அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் சமயநூல்களின் அதிகாரிகன் ஆவார்கள். ஞானக்கடலான சிவபாபாவே அதிகாரி ஆவார். உலக சர்வசக்திவானே கூறுகின்றார்: எனக்கு வேதங்களும் சமயநூல்களிலும் உள்ளவற்றைத் தெரியும். நான் அவற்றின் சாராம்சத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். அவை சத்திய, திரேதாயுகங்களில் இருப்பதில்லை. பக்தியின் மூலமே நீங்கள் ஏணியில் இறங்குகின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே சர்வசக்திவான் என்று நினைவு கூரப்படுகின்றார். அவருடன் யோகம் செய்வதனாலேயே நாங்கள் தூய்மை ஆகுகிறோம். ஆகையால், அவர் சர்வசக்திவான் ஆவார், அப்படித்தானே? அவர் எங்கள் அனைவரையும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் எங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கின்றார். நீங்கள் இப்பொழுது சிவபாபாவிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு அவரை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகளவு சக்தியைப் பெற்று, அதிகளவு கலப்படமும் அகற்றப்படும். இரவுபகலாக, நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து எவ்வாறு தூய்மையாக முடியும் எனவும், தமோபிரதானில் இருந்து எவ்வாறு சதோபிரதான் ஆகுவது என்ற அக்கறையை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும். மாயையின் புயல் வீசும். பாபா கூறுகின்றார்: அவளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் யுத்தம் மாயையுடன் ஆகும். பல பயனற்ற, பாவ எண்ணங்கள் வரும். இந்த ஞானத்திற்கு வருவதற்கு முன்னர் வராத எண்ணங்களும் கூட வரும். நீங்கள் இப்பொழுது ஒரு யுத்தகளத்தில் இருக்கின்றீர்கள். நினைவு யாத்திரையிலேயே அனைத்து முயற்சியும் தங்கியுள்ளது. பாரதத்தின் யோகம் மிகவும் பிரபல்யமானது. யோகத்திற்கே பாபா கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இவ்வாறு, எந்த மனிதராலும் விளங்கப்படுத்த முடியாது. அனைத்தும் கடவுளின் வடிவம், ‘நான் பார்க்கும் இடமெல்லாம் கடவுளை மாத்திரமே பார்க்கின்றேன்!’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஓர் ஆத்மா, நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். அனைவருமே கடவுள் ஆயின், கடவுள் பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்குள் வருகின்றாரா? ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். ஆத்மாக்களிடம் நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. நல்ல சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தவர்களின் புகழ் பாடப்படுகின்றது. தீய சம்ஸ்காரங்களைக் கொண்டவர்கள், பாவம் நிறைந்தவர்கள் என்றும், சீரழிந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றார்கள். பாபா தூய்மை ஆகுவதற்கு உங்களுக்கு மிகவும் நல்ல வழிகளைக் காட்டுகின்றார். உங்கள் எண்ணங்களால், வார்த்தைகளால், செயல்களால் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். உங்களுக்கும் துன்பத்தை விளைவித்துக் கொள்ளாதீர்கள். பாவச் செயல்கள் எதனையும் செய்யவோ அல்லது எதனையும் திருடவோ வேண்டாம். நீங்கள் சிலவேளைகளில் பொய் சொல்ல நேர்ந்தால், அப்பொழுது தந்தையிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள். காம வாளைப் பயன்படுத்துதலே கொடிய பாவமாகும். அதனைப் பயன்படுத்தாதீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் கைகளினால் அனைத்தையும் செய்யும் அதேவேளை, உங்கள் யோகத்தை என்னுடன் இணைத்திடுங்கள். பாபா சத்திரசிகிச்சை நிபுணரும் ஆவார். அனைவரும் ஒரே நோயைக் கொண்டிருப்பதும் இல்லை அல்லது அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கவும் முடியாது. ஆகையால் ஒவ்வோர் அடியிலும் நீங்கள் கேட்க வேண்டும். இலக்கு மிகவும் உயர்ந்தது. மக்கள் அமர்நாத்திற்கு (அமரத்துவ பிரபு) யாத்திரை செல்லும் போது அவர்கள் கூறுகின்றார்கள்: அமர்நாத்திற்கு ஜெய், பத்திரிநாத்துக்கு ஜெய், ஓ பத்திரிநாதரே, என்னைக் காப்பாற்றுங்கள்! இப்பொழுது நீங்கள் எந்த யாத்திரை போன்றவற்றுக்கும் செல்லத் தேவையில்லை. தந்தை மாத்திரமே இந்த ஞான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர் மாத்திரமே இப்பாகத்தைக் கொண்டிருக்கின்றார். நீங்களும் பாபாவுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள். நீங்கள் எந்தளவிற்கு நன்றாகக் கற்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் அந்தஸ்து உயர்வடையும். இது எவருடைய மகத்துவமும் என்பதல்ல. இது மனிதர்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றவரின் மகத்துவமே ஆகும். அவர் குழந்தைகளான உங்கள் அனைவரையும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். நானும் நாடகத்தில் ஒரு பாகத்தைப் பெற்றிருக்கின்றேன். பஞ்ச தத்துவங்களும் தாம் நடிப்பதற்கென ஒரு பாகத்தைக் கொண்டிருக்கின்றன. பூமி தலைகீழாக ஆகி, விநாசம் இடம்பெற வேண்டும். உங்களுக்கும் நாடகத்தில் பாகங்கள் உள்ளன. அதில் என்ன மகத்துவம் உள்ளது? உங்கள் இராச்சியத்தை ஆளும்பொழுது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். முன்னர் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? ஒரு சதப் பெறுமதியும் இல்லை. நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது உங்கள் பாகத்தில் உள்ளது. நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். இதில் மகத்துவமோ அல்லது புகழோ என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த நாடகம் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. பாபாவும் தனக்கேயுரிய பாகத்தை நடிப்பதற்கென வருகின்றார். பக்தர்கள் மகத்துவத்தையும் புகழையும் பற்றிப் பாடுகின்றார்கள். ஆனால் எங்களால் அதனைச் செய்ய முடியாது. இங்கே நாங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ‘பாபா, இந்த நாடகத்தின் இரகசியம் மிகவும் அற்புதமானது! எவருக்கும் இதனைப் பற்றித் தெரியாது. பாபா, நாங்கள் சத்தியயுகத்தில் இவை அனைத்தையும் மறந்து விடுவோம். இந்த நாடகம் மிகவும் தனித்துவமானது!’ இவ்வாறாக உங்களுக்குள் பேசுங்கள். நடிகர்கள் தமது பாகத்தை நன்றாக நடித்தால், அவர்களுக்கு ஆரவாரத்தோடு கரகோஷம் செய்யப்படுகின்றது. நாங்களும் கூறுகின்றோம்: இனிய பாபா, சிவபாபா, சிறந்ததொரு பாகம் உள்ளது. நாங்களும் பாபாவுடன் சேர்ந்து மிக நல்ல பாகங்களை நடிக்கின்றோம். பாபா அனைத்தையும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இருப்பினும் சிலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகையால் அவர்கள் எங்கள் இராச்சியத்திற்கு வரப் போவதில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். முன்னர் பிராமணர்களாக ஆகியவர்களே பிராமணர்கள் ஆகி, பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். தேவர்களாகிய உங்கள் மத்தியில், பிரஜைகள் போன்றோரும் இருக்கின்றார்கள். அனைவரும் தமக்கே உரிய அநாதியான பாகத்தைப் பெற்றுள்ளார்கள். எப்பொழுதும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரேயொரு உலகமே உள்ளது. கடவுள் ஒருவரே, படைப்பும் ஒன்றே. ஒரே சக்கரமே தொடர்ந்தும் சுழல்கின்றது. மக்கள் சந்திரனில் என்ன உள்ளது என்றும், அதற்கும் அப்பால் என்ன உள்ளது என்ற ஆராய்ச்சியில் உள்ளார்கள். அதற்கும் அப்பால் சூட்சும உலகமே உள்ளது. அங்கே அவர்களால் எதனைப் பார்க்க முடியும்? ஒளியை அன்றி எதுவும் இல்லை. அவை அனைத்திற்காகவும் அவர்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். விஞ்ஞானத்திற்கும் எல்லைகள் உள்ளன. மாயையின் ஆடம்பரம் அதிகளவு உள்ளது. இங்கே, விஞ்ஞானம் துன்பத்துடன் சந்தோஷத்தையும் கொடுக்கின்றது. அங்கே ஆகாய விமானங்கள் என்றுமே விபத்திற்கு உள்ளாக மாட்டாது. அங்கே துன்பத்தின் சுவடு எதுவுமே இருக்க மாட்டாது. இங்கோ துன்பத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. திருடர்கள் வந்து அனத்தையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். நெருப்பு அனைத்தையும் எரித்து விடுகின்றது. அங்கே, அவர்களிடம் மிகவும் ஆடம்பரமான கட்டடங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அரசரும் முழு அபுவின் அளவிற்கு நிலத்தைக் கொண்டிருப்பார். நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவதற்கே இங்கே வந்திருக்கின்றீர்கள். பாபாவை நினைவு செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். நீங்கள் அனைவரும் காதலிகள். அன்பிற்கினியவர் இப்பொழுது உங்களிடம் கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்தால் நீங்கள் அமரத்துவ உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். அங்கே அகால மரணம் இடம்பெறுவதில்லை. சத்தியயுகம் மேன்மையான உலகம், ஆனால் இதுவோ சீரழிந்த உலகம். பல பிரம்மாகுமார், குமாரிகள் தந்தையிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். உங்கள் ஆஸ்தியை நீங்களும் பெற முடியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாத போது, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றார். கலியுகத்தில் பல மனிதர்கள் உள்ளனர். ஆனால் சத்தியயுகத்தில் வெகுசிலரே உள்ளனர். விநாசம் நிச்சயமாக இடம்பெறும். ஆகையாலேயே மகாபாரத யுத்தம் உங்கள் முன்னிலையிலேயே உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் போன்றவற்றால் எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். இப்பொழுது அனைத்து தீய சம்ஸ்காரங்களையும் அகற்றி நல்ல சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். நீங்கள் எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.2. இந்தத் தனித்துவமான நாடகத்தில் உங்கள் மேன்மையான பாக்கியத்தைப் பார்க்கும் அதேவேளை, நீங்கள் கடவுளுடன் சேர்ந்து நடிக்கும் ஒரு நடிகன் என்றும், உங்கள் பாகம் மிகவும் சிறப்பானது என்றும் உங்களுக்குள் கூறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல சக்திகளாலும் நிரம்பியவராகி, உங்களின் அன்பின் பிரதிபலனாக சமமாக இருப்பதை அனுபவம் செய்வீர்களாக.சதா தந்தைக்கான அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகள், அவர்களின் அன்பின் பிரதிபலனாகத் தந்தைக்குச் சமமாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சதா அன்பாகவும் யோகத்தில் மிகச்சரியாகவும் இருப்பவர்கள், இயல்பாகவே சகல சக்திகளும் நிரம்பியவர்கள் ஆகுகின்றார்கள். உங்களிடம் சகல சக்திகளும் இருக்கும்போது, வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. சர்வசக்திவான் தந்தையைத் தமது சகபாடி என்று உணர்ந்திருப்பவர்களால் எந்தவிதமான சந்தர்ப்பத்தாலும் பாதிக்கப்பட முடியாது.
சுலோகம்:
தமது முயற்சி செய்யும் வாழ்க்கையில் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பவர்கள் சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருப்பார்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
இந்த வேளையில், மற்றவர்களை ஈடேற்றுபவர்களின், மற்றவர்களுக்கு வழங்குகின்ற அருள்பவர்களின் குழு ஒன்று தேவைப்படுகிறது. நிரம்பி இருக்கும் அரசர்கள் எப்போதும் தமது பிரஜைகளுக்கு வழங்குவார்கள். நிரம்பி இருக்கும் அரசர்களின் கைகள் ஒருபோதும் எடுக்கும் கரங்கள் இல்லை, ஆனால் கொடுக்கும் கரங்கள். அதேபோல், குழந்தைகளான நீங்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்திகளாக, அருள்பவரின் பாகங்களை நடிப்பவர்கள். எனவே, இப்பொழுதில் இருந்தே அந்த சம்ஸ்காரம் உங்களுக்குள் நிரம்பி இருக்க வேண்டும்.