08.12.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 13.02.2003 Om Shanti Madhuban
தற்சமயம், நீங்கள் உங்களின் கருணைநிறைந்த மற்றும் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இன்று, ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தை, ஞானத்தை அருள்பவர்களாகவும் சக்தியை அருள்பவர்களாகவும் நற்குணங்களை அருள்பவர்களாகவும் இறை தூதுவர்களாகவும் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் மாஸ்ரர் அருள்பவர் ஆகித் தனது இதயபூர்வமாக ஆத்மாக்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியைச் செய்கின்றார். உலகில் பல வகையான ஆத்மாக்கள் இருக்கிறார்கள். சில ஆத்மாக்களுக்கு ஞானாமிர்தம் தேவைப்படுகிறது. சில ஆத்மாக்களுக்கு சக்திகளும் நற்குணங்களும் தேவைப்படுகின்றன. ஆனால் குழந்தைகளான உங்களிடமோ இந்த முடிவற்ற பொக்கிஷங்கள் எப்போதும் இருக்கின்றன. நீங்களே ஆத்மாக்கள் எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்கள். நாளுக்கு நாள், நிறைவு செய்யும் வேளை நெருங்கி வருவதனால், ஆத்மாக்கள் இப்போது ஏதாவது புதிய ஆதாரத்தைத் தேடுகிறார்கள். ஆகவே, ஆத்மாக்களான நீங்கள் ஆத்மாக்களுக்குப் புதிய ஆதாரத்தை வழங்குவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளான உங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஒருபுறம், ஒரு தேவை உள்ளது. மறுபுறம், ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. தேவைப்படும் வேளையில், ஒரு துளியேனும் மிகவும் முக்கியமானது. அதனால் இந்த வேளையில், நீங்கள் வழங்கும் துளிகளில், நீங்கள் செய்யும் செய்திகளில் முக்கியத்துவம் உள்ளது.
குழந்தைகளான நீங்கள் கருணைநிறைந்த அருள்பவர்களாக வெளிப்படுத்தப்பட வேண்டிய நேரம் தற்பொழுதே ஆகும். உங்களின் அநாதியான ரூபங்களிலும், பிராமண ஆத்மாக்களான உங்களிடம் அருள்பவர்களின் சம்ஸ்காரங்கள் உள்ளன. இதனாலேயே, கல்ப விருட்சத்தின் படத்தில், நீங்கள் மரத்தின் வேர்களில் காட்டப்படுகிறீர்கள். ஏனென்றால், வேர்களின் மூலமே மரத்தில் உள்ள எல்லாவற்றையும் சென்று சேர முடியும். தேவதா (தேவர், அருள்பவர்) என்ற உங்களின் ஆதி தேவ ரூபத்தின் அர்த்தம், வழங்குகின்ற ஒருவர் என்பதாகும். மத்திய காலப்பகுதிக்குரிய உங்களின் ரூபம், பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபமாகும். மத்தியகாலப் பகுதியிலும், நீங்கள் உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபங்களினூடாக ஆசீர்வாதங்களை வழங்குகின்ற அருள்பவர்கள் ஆவீர்கள். நீங்கள் நல்லாசிகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகின்ற அருள்பவர்கள் ஆவீர்கள். ஆத்மாக்களான உங்களின் விசேட ரூபங்கள், அருள்பவர்களுடையதாகும். எனவே, இப்போதும், நீங்கள் இறை தூதுவர்களாகி, தந்தையை வெளிப்படுத்துகின்ற செய்தியைப் பரப்புகிறீர்கள். ஆகவே, ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் சோதித்துப் பார்க்க வேண்டும்: ஓர் அருள்பவரின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்கள் உங்களின் வாழ்க்கையில் சதா வெளிப்படுகின்றனவா? அருள்பவரின் சம்ஸ்காரங்களைக் கொண்ட ஆத்மாக்களின் அடையாளம், அவர்களுக்குள் ஒருபோதும் யாராவது தமக்குக் கொடுத்தால் மட்டுமே தாம் கொடுப்போம் என்ற எண்ணத்தையோ அல்லது யாராவது அதைச் செய்தால் மட்டுமே தாம் எதையாவது செய்வோம் என்ற எண்ணத்தையோ சிறிதளவேனும் கொண்டிருக்க மாட்டார்கள். இல்லை. அவர்கள் சதா திறந்த பொக்கிஷக் களஞ்சியங்களாகவே இருப்பார்கள். ஆகவே, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரிலும் அருள்பவரின் சம்ஸ்காரங்களை பாப்தாதா பார்த்தார். அவர் எதைக் கண்டார்? அது வரிசைக்கிரமமானதுதானே? ‘இது இப்படி இருந்திருந்தால், நானும் இதைச் செய்வேன்’ என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிராதீர்கள். அருள்பவரின் சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பவர்கள், இயல்பாகவே எல்லா இடங்களில் இருந்தும் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல, ஆனால் இயற்கையும் காலத்திற்கேற்ப உங்களுக்கு ஒத்துழைக்கும். இது சூட்சுமமான கணக்காகும். ஒருவர் அருள்பவர் ஆகும்போது, அந்தப் புண்ணியத்தின் பலன், அந்த ஆத்மா இலகுவாகச் சரியான வேளையில் ஒத்துழைப்பையும் வெற்றியையும் பெறுவீர்கள். ஆகவே, சதா அருள்பவரின் சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தி வைத்திருங்கள். உங்களின் புண்ணியக் கணக்கில், நீங்கள் ஒன்றுக்காகப் பத்து மடங்கு பலனைப் பெறுவீர்கள். ஆகவே, ஒரு புண்ணியாத்மாவாக உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளாலும் உங்களின் புண்ணியக் கணக்கில் நாள் முழுவதும் எவ்வளவற்றைச் சேமித்துள்ளீர்கள் எனக் குறித்துக் கொள்ளுங்கள். உங்களின் மனங்களால் சேவை செய்வதன் மூலமும் நீங்கள் உங்களின் புண்ணியக் கணக்குகளில் சேமிப்பீர்கள். உங்களின் வார்த்தைகளினூடாகப் பலவீனமான ஆத்மாக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துவதன் மூலமும் துன்பத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் கௌரவத்தை உணரச் செய்வதன் மூலமும் உங்களின் வார்த்தைகளால் மனச்சோர்வடைந்திருக்கும் ஆத்மாக்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதன் மூலமும் உங்களுடன் உறவுமுறையில் அல்லது தொடர்பில் உள்ள ஆத்மாக்களை உங்களின் மேன்மையான சகவாசத்தின் நிறத்தை அனுபவம் பெறச் செய்வதன் மூலமும் உங்களின் கணக்கில் உங்களால் சேமிக்க முடியும். அரைக்கல்பத்திற்கு புண்ணியத்தின் பலனைப் பெறும் வகையில் நீங்கள் இந்தப் பிறவியில் அதிகளவு புண்ணியத்தைச் சேகரித்துக் கொள்கிறீர்கள். மற்றைய அரைக்கல்பத்திற்கு உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் மூலம் உருவாக்கப்பட்ட சூழ்நிலையினூடாக பாவாத்மாக்களை அவர்களின் பாவங்களில் இருந்து விடுவிக்கிறீர்கள். நீங்கள் தூய்மையாக்குபவர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் சேகரித்துள்ள புண்ணியக் கணக்கைத் தொடர்ந்தும் பார்க்கிறார்.
தற்சமயம் சேவை செய்வதற்காகக் குழந்தைகளிடம் உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பெரும்பாலான குழந்தைகளிடம் சேவை செய்வதற்கான மிக நல்ல உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் எல்லோருமே உங்களுக்குரிய முறையில் சேவைக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறீர்கள். பாப்தாதா தனது இதயபூர்வமாக இவை அனைத்திற்கும் உங்களைப் பாராட்டுகிறார். நீங்கள் நன்றாகச் செய்கிறீர்கள். தொடர்ந்தும் நன்றாகவே செய்வீர்கள். எல்லோருடைய எண்ணங்களும் நேரமும் இதைச் செய்வதில் மும்முரம் ஆகியிருப்பது அனைத்திலும் சிறப்பானதொன்றாகும். எல்லா இடங்களிலும் சேவை செய்கின்ற இலட்சியம் எல்லோரிடமும் உள்ளது. ஏனென்றால், முறைப்பாடுகள் அனைத்தும் நிச்சயமாக முடிய வேண்டும்.
பிராமணர்களின் திடசங்கற்பமான எண்ணங்கள் அதிகளவு சக்தி நிறைந்தவை. பிராமணர்களிடம் திடசங்கற்பம் இருக்கும்போது, எதுதான் சாத்தியமில்லை? அனைத்தும் நிறைவேறும். உங்களின் யோகமானது சக்திவாய்ந்த தீச்சுடர்களின் வடிவத்தை எடுக்க வேண்டும். உங்களின் யோகம் சக்திவாய்ந்த தீச்சுடரின் ரூபத்தை எடுக்கும்போது, ஆத்மாக்கள் இயல்பாகவே சக்திவாய்ந்த தீச்சுடரைப் பின்பற்றுவார்கள். ஏனென்றால், அவர்கள் ஒளியைப் பெறும்போது, அவர்களால் பாதையைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் இப்போது யோகம் செய்கிறீர்கள். ஆனால், அது சக்திவாய்ந்த தீச்சுடரின் வடிவத்தை எடுக்க வேண்டும். சேவை செய்வதற்கான ஊக்கமும் உற்சாகமும் மிக நன்றாக அதிகரிக்கின்றன. ஆனால், யோகம் சக்திவாய்ந்த தீச்சுடரின் வடிவத்தை எடுப்பதற்கு நீங்கள் இப்போது யோகம் என்பதைக் கீழ்க்கோடிட வேண்டும். ஏனையோர் நிச்சயமாக ஏதாவதொன்றை அனுபவம் செய்யத்தக்க வகையில் உங்களின் திருஷ்டி பிரகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
வெளிநாட்டவர்கள் சிறிய ஒன்றுகூடல்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்காகச் செய்த காலத்தின் அழைப்பு என்ற சேவை செய்யும் வழிமுறை பாப்தாதாவிற்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு நிலையமும் ஒவ்வொரு பிராந்தியமும் தமக்குரிய தனிப்பட்ட சேவையைச் செய்கிறார்கள். ஆனால், இப்போது நீங்கள் சகல தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களின் ஒன்றுகூடலை உருவாக்க வேண்டும். சேவை எல்லா இடங்களுக்கும் பரவுகிறது என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். அதனால், எல்லா இடங்களிலும் சேவையைப் பெற்றவர்களில் தகுதிவாய்ந்த ஆத்மாக்களின் ஒன்றுகூடலைத் தேர்ந்தெடுத்து அவர்களை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். அதன்பின்னர், அவ்வப்போது, தொடர்ந்து அந்த ஒன்றுகூடலை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். சேவை செய்வதற்கு அவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கச் செய்யுங்கள். இத்தகைய ஆத்மாக்கள் இருப்பதை பாப்தாதா காண்கிறார். ஆனால் அவர்கள் சக்திவாய்ந்த முறையில் ஒன்றுசேர்ந்து பராமரிப்பைப் பெறவில்லை. அவர்கள் தமக்கேயுரிய கொள்ளவிற்கேற்ப தனிப்பட்ட முறையில் பராமரிப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் ஒன்றுகூடலில் ஒருவரையொருவர் பார்க்கும்போது உற்சாகத்தைப் பெறக்கூடும். ‘அவரால் இதைச் செய்ய முடியுமாயின், என்னாலும் அதைச் செய்ய முடியும். நானும் அதைச் செய்வேன்’. அதன்பின், அவர்களுக்கும் உற்சாகம் ஏற்படும். பாப்தாதா இப்போது இந்த நடைமுறையான, ஒன்றுதிரட்டிய ரூபத்தினாலான சேவையைக் காண விரும்புகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு, உங்களின் பிரதேசங்களுக்கு, உங்களின் பிராந்தியங்களுக்கு, உங்களின் நிலையங்களுக்குச் சேவை செய்வதற்கு மிக நல்ல முயற்சி செய்வதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இப்போது, அவர்களில் சிலரை பாபாவின் முன்னால் அழைத்து வாருங்கள். இல்லறத்தவர்களின் உற்சாகமும் பாப்தாதாவை வந்தடைகின்றது. இரட்டை வெளிநாட்டவர்கள் இரட்டைப் பணியைச் செய்வதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் வீட்டில் வசிப்பதுடன் சேவை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அத்துடன், சுயமுயற்சியும் செய்கிறார்கள்.
தற்சமயம் வெளிநாட்டில் உள்ள சூழலைப் பார்க்கும்போது, பிராமண ஆத்மாக்களான நீங்கள் பயப்படவில்லையே? நாளை என்ன நடக்கும் என நீங்கள் கவலைப்படவில்லையே? ‘நாளை, அது நன்றாகவே இருக்கும். இது நல்லது, என்ன நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே இருக்கும். உலகில் எந்தளவிற்குக் குழப்பம் இருக்கிறதோ, அந்தளவிற்கு பிராமண ஆத்மாக்களான உங்களின் ஸ்திதியானது அசைக்க முடியாததாக இருக்கும்.’ அப்படித்தானே? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் அசைகிறீர்களா அல்லது நீங்கள் அசைக்க முடியாதவர்களா? நீங்கள் அசைக்க முடியாதவர்களா? நீங்கள் தளம்பவில்லைத்தானே? அசைக்க முடியாதவர்களாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களை அசைக்க முடியாது. நாளை ஏதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்? அப்போதும் நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருப்பீர்கள்தானே? என்ன நடக்கும்? எதுவும் நடக்காது. பிராமணர்களான உங்களின் மீது கடவுளின் பாதுகாப்பு என்ற குடை உள்ளது. ஏதாவதொன்றின் ஊடாக நீர் உட்புகாதபோது, எவ்வளவுதான் தண்ணீர் வந்தாலும், அது தண்ணீரை உள்விடாமல் இருப்பதனால், நீங்களும் நீரில் நனையாமல் இருப்பீர்கள். அதேபோன்று, எவ்வளவுதான் குழப்பங்கள் வந்தாலும், பிராமண ஆத்மாக்கள் இறை பாதுகாப்புக் குடையின் கீழ் சதா பாதுகாப்பாக இருப்பார்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள்தானே? அல்லது, என்ன நடக்குமோ என நீங்கள் சிறிது கவலைப்படுகிறீர்களா? இல்லை. கவலையற்றிருங்கள்! ஒரு சுயஇராச்சிய அதிகாரியாக இருங்கள். ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகி, ஆட்ட, அசைக்க முடியாத ஆசனத்தில் நன்றாக அமர்ந்திருங்கள். உங்களின் ஆசனத்தில் இருந்து கீழே இறங்காதீர்கள். குழப்பம் அடைவதென்றால், உங்களின் ஆசனத்தில் நீங்கள் நன்றாக அமர்ந்திருக்கவில்லை என்றே அர்த்தம். இதனாலேயே, நீங்கள் குழப்பம் அடைகிறீர்கள். தமது ஆசனங்களில் நன்றாக அமர்ந்திருப்பவர்களால் (செட்) தமது கனவுகளிலேனும் குழப்பம் (அப்செட்) அடைய முடியாது.
தாய்மார்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களின் ஆசனங்களில் எப்படி நன்றாக அமர்ந்திருப்பது என உங்களுக்குத் தெரியுமா? தளம்பல்கள் இல்லைத்தானே? பாப்தாதா உங்களுடன் இணைந்திருக்கிறார். சர்வசக்திவானே உங்களுடன் இணைந்திருக்கும்போது, நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் உங்களைத் தனியாக இருப்பதாகக் கருதினால்தான், தளம்பல்கள் ஏற்படும். நீங்கள் இணைந்திருக்கும்போது, எவ்வளவுதான் தளம்பல்கள் ஏற்பட்டாலும், நீங்கள் அசைக்கமுடியாதவராகவே இருப்பீர்கள். தாய்மார்களே, இது சரிதானே? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் ஒன்றிணைந்திருக்கிறீர்கள்தானே? நீங்கள் தனியே இல்லையல்லவா? இது தந்தையின் பொறுப்பு. நீங்கள் உங்களின் ஆசனங்களில் நன்றாக அமர்ந்திருந்தால், அது தந்தையின் பொறுப்பு. நீங்கள் குழப்பம் அடைந்தால், அது உங்களின் பொறுப்பு.
நீங்கள் தொடர்ந்து ஆத்மாக்களுக்கு ஒரு துளி செய்தியைக் கொடுத்தால், அருள்பவர் என்ற ரூபத்தில் நீங்கள் ஸ்திரமாக இருப்பீர்கள். அத்துடன் அருள்பவராக நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாகத் தொடர்ந்து சக்தியைப் பெறுவீர்கள். நடக்கும்போதும் அசையும்போதும், நீங்கள் ஓர் ஆத்மா, செயல்பட வைப்பவர், உங்களின் பௌதீகப் புலன்களே வேலை செய்யும் உங்களின் பணியாளர்கள் என்ற விழிப்புணர்வை சதா வெளிப்படுத்திய வண்ணம் இருங்கள். ‘எப்படியோ நான் ஓர் ஆத்மாதானே’ என நினைக்காதீர்கள். இது உங்களின் விழிப்புணர்வில் வெளிப்பட வேண்டும். அது உள்ளே அமிழ்ந்துள்ளது. ஆனால், அது வெளிப்படும்போது, உங்களுக்குள்ளே போதையும் சந்தோஷமும் கட்டுப்படுத்தும் சக்தியும் காணப்படும். நீங்களும் இரசிக்கிறீர்கள். ஏன்? ஓர் அரசன் தனது பணியாளர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, தனது கட்டளைகளுக்கேற்ப அவர்களை வேலை செய்ய வைப்பதைப் போல், ஆத்மா கரவன்ஹார் (மற்றவர்கள் மூலம் செய்விப்பவர்) என்ற உணர்வு இருக்கும்போது, உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் ஒழுங்காக இயங்கும். அவை மாயையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது. அவை உங்களின் கட்டளைகளையே கடைப்பிடிக்கும். இல்லாவிட்டால், மற்றவர்களைக் கொண்டு அனைத்தையும் செய்விக்கும் ஓர் ஆத்மா, கவனயீனம் ஆகியிருப்பதை மாயை கண்டதும், அவள் கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பிக்கிறாள். சிலவேளைகளில், உங்களின் மனதின் சக்தி, சிலவேளைகளில் உங்களின் வாயின் சக்தி மாயையின் கட்டளைகளின்படி நடக்க ஆரம்பிக்கின்றன. ஆகவே, சதா உங்களின் பௌதீகப் புலன்களை உங்களின் கட்டளைகளின்படி நடக்கச் செய்யுங்கள். ‘அது நடக்க வேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் அது நடந்துவிட்டது’ எனச் சொல்லாதீர்கள். நீங்கள் நடக்க வேண்டும் என விரும்பும்போது மட்டுமே அது நடக்க வேண்டும். இப்போது நீங்கள் உங்களைச் சுய இராச்சிய சம்ஸ்காரங்களால் நிரம்பிக் கொண்டால் மட்டுமே, உங்களால் அங்கே இராச்சியத்தை ஆள முடியும். ஒருபோதும் உங்களின் சுய இராச்சிய ஆசனத்தை விட்டுக் கீழே இறங்காதீர்கள். உங்களின் பௌதீகப் புலன்கள் உங்களின் கட்டளைகளின்படி நடக்கும்போது, சகல சக்திகளும் உங்களின் கட்டளைகளின்படி நடக்கும். குறிப்பிட்ட வேளையில் உங்களுக்கு என்ன சக்தி தேவையோ, அது அந்த வேளையில் முன்னால் வந்துநிற்கும். நீங்கள் சகித்துக் கொள்ளும் சக்திக்குக் கட்டளை இட, அந்த வேலை முடிந்த பின்னர் அது வருவதாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சக்தியும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப ஆயத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு சக்தியும் இறைவனிடமிருந்து பெறப்படும் பரிசாகும். ஆகவே, இறைவனின் பரிசுகள், உங்களுக்குச் சொந்தமானவை ஆகியுள்ளன. அதனால், உங்களுக்குச் சொந்தமான எதையும் உங்களால் நீங்கள் விரும்பியபடி, விரும்பிய நேரத்தில் பயன்படுத்த முடியும். இந்த முறையில், அந்தச் சக்திகள் அனைத்தும் உங்களின் கட்டளைகளின்படி நடக்கும். உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் உங்களின் கட்டளைகளின்படி நடக்கும். இதுவே, ஒரு சுய இராச்சிய அதிகாரியாக, ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருத்தல் எனப்படுகிறது. பாண்டவர்களான நீங்கள் இதை விரும்புகிறீர்களா? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். அத்துடன் சுய இராச்சிய அதிகாரிகள். அது உங்களின் வாயால் வந்துவிட்டது எனச் சொல்லாதீர்கள். அதை அப்படி வெளிப்படக் கட்டளை இட்டது யார்? ‘நான் அதைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் நான் அதைப் பார்த்தேன். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது நடந்துவிட்டது’. யாருடைய கட்டளைகளின்படி இது நடந்தது? இதை உரிமையுள்ளவர் என்று அழைப்பீர்களா அல்லது கட்டுப்படுத்தப்படுபவர் என்று அழைப்பீர்களா? எனவே, உரிமை உடையவர் ஆகுங்கள். கட்டுப்படுத்தப்படுபவராக அல்ல. அச்சா.
பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் எல்லோரும் மதுவனத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதைப் போல், எப்போதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் ஆன்மீக ரோஜாக்கள். பாருங்கள், எங்கும் பாருங்கள்! நீங்கள் எல்லோரும் ஆன்மீக ரோஜாக்கள், மலர்ந்திருக்கும் ரோஜாக்கள். நீங்கள் வாடிப் போகவில்லை. நீங்கள் மலர்ந்திருக்கும் ரோஜாக்கள். ஆகவே, சதா பாக்கியசாலிகளாகவும் மலர்ச்சிநிறைந்தவர்களாகவும் இருங்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதனால், உங்களின் முகங்களைப் பார்க்கின்ற எவரும், நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள் எனக் கேட்க வேண்டும். ஒவ்வொருவரின் முகமும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு சித்திரம் ஓர் அறிமுகத்தைக் கொடுப்பதைப் போல், உங்களின் முகங்களும் நீங்கள் தந்தையைக் கண்டடைந்துவிட்டீர்கள் எனத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அச்சா.
எல்லாம் ஓகேயா? வெளிநாட்டில் இருப்பவர்களும் இங்கே வந்துள்ளார்கள். நீங்கள் இங்கே இருப்பதை விரும்புகிறீர்கள்தானே? (நியூயோர்க் மோகினிபென்னிடம்). குறைந்தபட்சம் குழப்பத்தைப் பற்றிக் கேட்பதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்திருப்பது நல்லதே. இங்கே ஒன்றாக வருவதை நீங்கள் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்கள்: உங்களிடம் இரட்டைப் போதை உள்ளதல்லவா? உங்களிடம் அதிகளவு போதை உள்ளது, அதனால் உங்களின் இதயங்கள் கூறுகின்றன: ‘யாராவது இப்படி இருந்தால், அது இரட்டை வெளிநாட்டவர்களான நாங்களே ஆவோம்’. சுய இராச்சிய அதிகாரிகளாகவும் உலக உரிமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கும் இரட்டைப் போதை உங்களிடம் உள்ளது. உங்களிடம் இரட்டைப் போதை உள்ளதல்லவா? பாப்தாதாவும் இதை விரும்புகிறார். ஒரு குழுவில் இரட்டை வெளிநாட்டவர்கள் இல்லாவிட்டால், அது சரியாகத் தோன்றாது. பாபாவே உலகத் தந்தை ஆவார். எனவே, உலகிலுள்ளவர்களும் இங்கே இருக்க வேண்டும். எல்லோரும் தேவைப்படுகிறார்கள். தாய்மார்கள் இங்கில்லாவிட்டால் எந்தவிதமான கோலாகலமும் இருக்காது. பாண்டவர்கள் இல்லாவிட்டாலும் கோலாகலம் குறைந்துவிடும். பாருங்கள், ஒரு நிலையத்தில் பாண்டவர்கள் எவரும் இல்லாமல், தாய்மார்கள் மட்டுமே இருந்தால், நீங்கள் அதை விரும்புவீர்களா? அத்துடன், பாண்டவர்கள் மட்டுமே இருந்து, சக்திகள் இல்லாவிட்டால், அப்போதும் அந்த நிலையத்தில் அந்த அழகு இருக்காது. இருவரும் தேவைப்படுகிறார்கள். சிறுவர்களும் தேவைப்படுகிறார்கள். சிறுவர்கள் கூறுகிறார்கள்: ‘ஏன் எமது பெயரைக் குறிப்பிடவில்லை?’ சிறுவர்களின் கோலாகலமும் உள்ளது. அச்சா.
இப்போது, ஒரு விநாடியில், அசரீரித் தந்தையின் அன்பிலும் நினைவிலும் திளைத்திருக்கும் அசரீரி ஆத்மாக்கள் ஆகுங்கள். (பாபா அப்பியாசத்தைச் செய்வித்தார்.)
எங்கும் உள்ள சுய இராச்சிய அதிகாரிகள் அனைவருக்கும் சதா பற்றற்ற பார்வையாளர்கள் என்ற ஆசனத்தில் சரியாக அமர்ந்திருக்கும் ஆட்ட, அசைக்க முடியாத ஆத்மாக்களுக்கும் எல்லோருக்கும் ஞானம், சக்தி, நற்குணங்களை அருளும் அருள்பவர்களாக இருக்கும் விழிப்புணர்வைச் சதா பேணும் கருணைநிறைந்த ஆத்மாக்களுக்கும் தமது முகங்களினூடாகத் தந்தையின் ரூபத்தை சதா காட்டுகின்ற மேன்மையான ஆத்மாக்களுக்கும் ஆன்மீக ரோஜாக்களாக இருப்பதுடன் சதா சந்தோஷமாகவும் பாக்கியசாலிகளாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
பாப்தாதா தாதிகளுடன் பேசுகிறார்: (சேவையுடன் கூடவே, எங்கும் 108 மணிநேர யோக நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.) விநாசத் தீ, இந்த எரிமலை அக்கினியினூடாக மட்டுமே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதன்பின்னர் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். யோகத்தினால் பாவங்களும் பாவச் செயல்களின் சுமையும் எரிந்துவிடும். சேவை செய்வதனால், உங்களின் புண்ணியக் கணக்குகள் சேமிக்கப்படும். அதனால், நீங்கள் உங்களின் புண்ணியக் கணக்குகளில் சேமிக்கிறீர்கள். எவ்வாறாயினும், சாதாரணமான யோகம் அன்றி, யோகா அக்கினியால் மட்டுமே, கடந்த கால சம்ஸ்காரங்களின் சுமை எரிந்து போகும். தற்சமயம், நீங்கள் யோகம் செய்கிறீர்கள். ஆனால், பாவங்கள் எரியும் வகையில் அது எரிமலை அக்கினியாக இல்லை. இதனாலேயே, அவை குறுகிய காலத்திற்கு அழிக்கப்படுகின்றன. ஆனால் பின்னர் மீண்டும் வெளிப்படுகின்றன. அத்துடன், இராவணனைப் பாருங்கள்! அவன் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு, அவனுடைய எலும்புகளும் நீரில் எறியப்படுகின்றன. எல்லாமே முற்றாக எரிக்கப்பட வேண்டும். கடந்தகாலத்தின் சம்ஸ்காரங்கள், பலவீனமான சம்ஸ்காரங்கள் அனைத்தும் முற்றிலும் எரித்து சாம்பல் ஆக்கப்பட வேண்டும். அவை இன்னமும் எரிக்கப்படவில்லை. அவை கொல்லப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் எரிக்கப்படவில்லை. அதனால், இறந்தபின்னரும் அவை மீண்டும் உயிர்பெற்று எழுகின்றன. சம்ஸ்காரங்களின் மாற்றத்தினூடாகவே உலகம் மாறும். சம்ஸ்காரங்களின் விளையாட்டே இப்போது இடம்பெறுகிறது. அவ்வப்போது இடையிடையே சம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்றன. பெயர், சுவடுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். சம்ஸ்காரங்களின் மாற்றம் என்பது விசேடமாகக் கீழ்க்கோடிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும். சம்ஸ்காரங்களை மாற்றாததால், வீணான எண்ணங்களும் இருக்கின்றன. நேரமும் வீணாக்கப்படுகிறது, வீணான இழப்பும் ஏற்படுகிறது. இதுவும் நடக்க வேண்டியுள்ளது. (ஒருவர் கூறினார்: காலம் உங்களை அதைச் செய்ய வைக்கும், அத்துடன் அது உங்களின் சொந்த முயற்சிகளால் நடக்கும்) இரண்டும் ஒன்றாக அதைச் செய்ய வைக்கும். காலமும் உங்களின் சொந்த முயற்சிகளும் அதை நடக்க வைக்கும். சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் மகாராஸ் (பெரும் நடனம்) நினைவுகூரப்படுகிறது. மகாராஸின் ஞாபகார்த்தம், சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் மகத்தான நடனத்தின் ஞாபகார்த்தம் ஆகும். இப்போது ராஸ் மட்டுமே நிகழ்கிறது. ஆனால், மகாராஸ் இன்னமும் நடக்கவில்லை. (ஏன் இன்னமும் மகாராஸ் நடக்கவில்லை?) அதைக் கீழ்க்கோடிடவில்லை, திடசங்கற்பம் இல்லை. பல்வகையான கவனயீனங்கள் காணப்படுகின்றன. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சதா யோகியாகவும் கர்மயோகியாகவும் இருப்பதன் மூலம் உங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் வார்த்தையையும் செயலையும் மேன்மையானது ஆக்கிக் கொள்வீர்களாக.ஒரு கர்மயோகி ஆத்மாவின் ஒவ்வொரு செயலும் யோகியுக்தாகவும் யுக்தியுக்தாகவும் இருக்கும். உங்களின் எந்தவொரு செயலும் யுக்தியுக்தாக இல்லாவிட்டால், உங்களால் நீங்கள் யோகியுக்த் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களின் செயல்கள் சாதாரணமானவையாக அல்லது வீணானவையாக இருந்தால், ஒரு நிலையான யோகி என உங்களால் சொல்ல முடியாது. ஒரு கர்மயோகி என்றால், அவரின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விநாடியும் சதா மேன்மையாக இருக்கும். மேன்மையான செயல்களின் அடையாளம், நீங்களும் திருப்தியாக இருப்பீர்கள், மற்றவர்களும் திருப்தியாக இருப்பார்கள். இத்தகைய ஆத்மாக்களால் மட்டுமே சதா யோகிகளாக இருக்க முடியும்.
சுலோகம்:
சுயத்தாலும் மக்களாலும் இறைவனாலும் நேசிக்கப்படும் ஓர் ஆத்மா, ஆசீர்வதிக்கப்பட்ட ரூபம் எனப்படுவார்.