09.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுதலை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் உங்கள் அனைத்துக் கணக்குகளையும் தீர்ப்பதன் மூலம் தூய்மையாகுங்கள்.
கேள்வி:
ஏமாற்றுகின்ற மாயை, எந்தச் சத்தியத்தை நீங்கள் மீறச் செய்கின்றாள்?பதில்:
எந்தச் சரீரதாரிகளிடமும் உங்கள் இதயத்தைப் பற்று வைக்க அனுமதிக்க மாட்டீர்கள் என நீங்கள் சத்தியம் செய்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: நான் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்வேன். எனது சொந்த சரீரத்தையேனும் நான் நினைவு செய்யமாட்டேன். தந்தை உங்களை உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் துறப்பதற்குத் தூண்டுகின்றார். எனினும் மாயை உங்களின் இந்தச் சத்தியத்தைத் துண்டித்து வேறொருவர் மீது பற்று வைப்பதற்கு முயற்சிக்கின்றாள். தங்கள் சத்தியத்தை மீறியவர்கள் அதிகளவு தண்டனையை அனுபவிக்க நேரிடும்.பாடல்:
நீங்களே தாயும் தந்தையும்…..ஓம் சாந்தி.
அதிமேலான கடவுளுக்குப் புகழ்ச்சியும் அவதூறும் உள்ளன. அதிமேலான தந்தையே இப்பொழுது வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். இராவண இராச்சியம் ஆரம்பம் ஆனதிலிருந்து, இராவணன் தான் எவ்வளவு சிறந்தவன் என்பதைக் காட்டுகின்றான். பக்திமார்க்கத்தில், அது பக்தியின் இராச்சியமாகும். இதனாலேயே அது இராவணின் இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. அது இராவணனின் இராச்சியமும் மற்றையது இராமரின் இராச்சியமும் ஆகும். இராமரும் இராவணனும் ஒப்பிடப்படுகின்றனர். ஆயினும், இதில் திரேதாயுகத்து அரசராகிய இராமரைப்பற்றிக் கூறப்படவில்லை. அரைக்கல்பத்திற்கு இராவணனே அரசனாவான். இராமரும் அரைக்கல்பத்திற்கு அரசனாவார் என்றில்லை. இல்லை. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விபரங்கள் ஆகும். எனினும், அவை புரிந்து கொள்வதற்கு மிக இலகுவானவை ஆகும். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். அசரீரியான அந்த ஒருவரே எங்கள் அனைவரதும் தந்தை ஆவார். தனது குழந்தைகள் அனைவரும் இப்பொழுது இராவணனின் சிறையில் உள்ளனர் என்பதைத் தந்தை அறிவார். காமச்சிதையில் அமர்ந்ததால் அனைவரும் அவலட்சணம் ஆகியுள்ளனர். தந்தை இவை அனைத்தையும் அறிவார். ஞானம் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளது. ஆத்மாக்களையும் பரமாத்மாவையும் அறிந்து கொள்வதே அதிமுக்கியமான விடயமாகும். அத்தகைய சின்னஞ் சிறிய ஆத்மாக்கள், தொடர்ந்தும் நடிக்கின்ற மிகப்பெரிய பாகங்கள் அவர்களுக்குள் பதியப்பட்டுள்ளன. நீங்கள் சரீர உணர்வுடைய உங்கள் பாகங்களை நடிக்க ஆரம்பிக்கும் பொழுதே, உங்கள் ஆதி தர்மத்தை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்களே கூறுகின்றீர்கள்: நான் தூய்மையாகுவதற்கே விரும்புகின்றேன். எனவே, தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்கள் அழைக்கின்றனர்: ஓ பரம தந்தையே, ஓ தூய்மையாக்குபவரே, ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையற்றவராகி விட்டோம், வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! ஆத்மாக்களான நீங்களே சம்ஸ்காரங்கள் அனைத்தையும் எடுத்துச் செல்கிறீர்கள். ஆத்மாக்கள் தாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளோம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர். விகாரத்தில் ஈடுபடுபவர்களே தூய்மையற்றவர்கள் என அழைக்கப்படுகின்றனர். தூய்மையற்ற மனிதர்கள் ஆலயங்களில் உள்ள தூய தேவர்களின் விக்கிரகங்கள் முன்னால் சென்று அவர்களின் புகழைப் பாடுகின்றனர். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்களே அந்தப் பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவர்கள் ஆவீர்கள். 84 பிறவிகளை எடுக்கும் போது நீங்கள் நிச்சயமாக கீழிறங்கி வரவேண்டும். இந்த நாடகம் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகுவதும், தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதாகவும் மாறுவதைப் பற்றியதாகும். தந்தை வந்து முழு ஞானத்தையும் ஒரு சமிக்ஞையுடன் விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது இது அனைவரினதும் இறுதிப்பிறவி ஆகும். அனைத்து ஆத்மாக்களும் வீடு திரும்புவதற்கு முன்னர் தங்கள் கணக்குகளைத் தீர்க்க வேண்டும். பாபா உங்களுக்குக் காட்சிகள் அனைத்தையும் கொடுக்கின்றார். தூய்மையற்றவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையை நிச்சயமாக அனுபவிக்க வேண்டும். உங்கள் கடந்தகாலப் பிறவிகளின் சிலவற்றைக் காட்டுவதன் மூலம் தண்டனை கொடுக்கப்படுகிறது. நீங்கள் மனித சரீரத்திலேயே தண்டனையை அனுபவம் செய்கிறீர்கள், இதனாலேயே நீங்கள் நிச்சயமாகச் சரீரங்களை எடுக்க வேண்டும். மக்கள் கிணற்றினுள் (காசியில்) வீழ்வதன் மூலம் தங்களை அர்ப்பணித்து தண்டனையை அனுபவம் செய்வது போன்று, ஆத்மாக்கள் தாங்களும் தண்டிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்கின்றனர். அவர்கள் செய்த அனைத்து பாவங்களினதும் காட்சிகளைப் பெறுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, என்றுமே அதனை மீண்டும் செய்யமாட்டோம் எனக் கூறுகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் காட்சிகளிலும் அவர்கள் மன்னிப்புக் கேட்கின்றனர். அவர்கள் தண்டனையை உணர்ந்து, வலியை அனுபவம் செய்கின்றனர். ஆத்மாக்களும் பரமாத்மாவுமே அதிகளவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளனர். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றீர்கள். ஆகவே, ஆத்மாக்களே அதி சக்திவாய்ந்தவர்கள். இந்த முழு நாடகத்திலும் ஆத்மாக்களும் பரமாத்மாவுமே முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளவர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றீர்கள். வேறு எவருமே இதனை அறியமாட்டார்கள். ஆத்மா என்றால் என்ன என்றோ அல்லது பரமாத்மா என்றால் என்ன என்றோ எந்தவொரு மனிதருக்கும் தெரியாது. நாடகத்திற்கேற்ப இவை அனைத்தும் நிகழ வேண்டும். இவை எவையுமே புதியதல்ல, அதே விடயங்களே ஒரு சக்கரத்தின் முன்னரும் நிகழ்ந்தது என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொண்டுள்ளீர்கள். ஞானம், வழிபாடு, விருப்பமின்மை பற்றி மக்கள் பேசுகின்றார்கள், ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் அறியாதுள்ளார்கள். பாபா சாதுக்கள் போன்றோரின் சகவாசத்தை அதிகளவு வைத்திருப்பது வழக்கம். அவர்கள் பெயர்களையே குறிப்பிடுகின்றார்கள். நீங்கள் பழைய உலகை விட்டு விலகி, புதிய உலகிற்குச் செல்ல இருப்பதனால், நிச்சயமாக நீங்கள் பழைய உலகில் விருப்பமின்மையை கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிகத் தெளிவாக இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் இதயத்தை அதன் மீது இணைத்துக் கொள்ள வேண்டும்? உங்கள் இதயத்தை எந்தவொரு சரீரதாரியுடனும் பற்றிக் கொண்டிருக்க அனுமதிக்க மாட்டோம் என நீங்கள் சத்தியம் செய்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: நான் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்வேன், எனது சொந்த சரீரத்தையேனும் நினைவுசெய்ய மாட்டேன். உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் துறந்துவிடுமாறு தந்தை உங்களைத் தூண்டுகின்றார். ஆகவே, ஏன் நீங்கள் ஏனையவர்களின் சரீரங்களின்மீது பற்று வைக்கின்றீர்கள்? நீங்கள் ஒருவரில் பற்று வைத்திருந்தால், அவரை நீங்கள் தொடர்ந்தும் நினைவு செய்வீர்கள். அந்த நேரத்தில் உங்களால் கடவுளை நினைவுசெய்ய முடியாதிருக்கும். நீங்கள் உங்கள் சத்தியத்தை மீறினால் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன் உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே இயன்றளவு தந்தையை நினைவு செய்யுங்கள். மாயை மிகவும் ஏமாற்றக் கூடியவள். சகல சூழ்நிலைகளிலும் மாயையிடமிருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சரீர உணர்வு என்பது மிகக் கொடுமையான ஒரு நோயாகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். அப்போது சரீர உணர்வு என்ற நோய் அகற்றப்படும். சிலர் நாள் முழுவதும் சரீர உணர்விலேயே இருக்கின்றார்கள். அவர்கள் பெரும் சிரமத்துடன் தந்தையை நினைவு செய்கின்றனர். உங்கள் கைகள் வேலை செய்கையில் இதயம் பாபாவின் நினைவிலே இருக்கட்டும் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். காதலர்கள் எவ்வாறு தங்கள் வேலைகளைச் செய்யும்போது ஒருவரையொருவர் நினைவு செய்கின்றார்களோ, அவ்வாறே ஆத்மாக்களாகிய நீங்களும் இப்பொழுது பரமாத்மாமீது அன்பு செலுத்த வேண்டும். ஆகவே, நீங்கள் அவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். தேவர்களாக வேண்டும் என்பதே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். இதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். மாயை நிச்சயமாக உங்களை ஏமாற்றுவாள். நீங்கள் அதிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் அவளிடம் அகப்பட்டுக் கொள்வீர்கள். பின்னர் நீங்கள் அவதூறை ஏற்படுத்தி, பெரும் இழப்பை விளைவித்துக் கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகள் என்பதையும், ஞானம் நிறைந்த ஒரேயொருவரே விதையாகிய உங்கள் தந்தை என்பதையும், குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவை மிக அற்புதமான விடயங்கள். ஆத்மா என்றால் என்ன? அதனுள் எவ்வாறு அழியாத பாகம் நிரப்பப்பட்டுள்ளது? சிறந்த குழந்தைகளும் இந்த ஆழமான விடயங்களை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. தங்களை ஆத்மாக்கள் என்று கருதுபவர்களும் அல்லது தந்தையைப் புள்ளி வடிவமாக நினைவு செய்பவர்களும், அவரே ஞானக்கடலும் விதையும் என்பதை அறிந்தவர்களும் வெகுசிலரே உள்ளார்கள். நாங்கள் ஆத்மாக்கள் என்பதையும் தந்தை வந்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எந்தவொரு பௌதீகமான எண்ணங்களும் அற்ற ஆழமான சூட்சும புத்தியைக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் நிறைந்த ஒரேயொருவராகிய அவரே விதையாவார். அவரே எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். சின்னஞ் சிறிய ஆத்மாவாகிய நானே இவை அனைத்தையும் கிரகிக்க வேண்டும். பௌதீகமான முறையில் ஆத்மாவைப் பற்றியும் பரமாத்மாவைப் பற்றியும் பேசும் பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் புத்தியில் எதுவுமே மிகச்சரியாக பதிந்திருப்பதில்லை. எவ்வாறாயினும், நினைவு செய்யாது இருப்பதை விடப் பௌதீகமான முறையில் நினைவு செய்வது மேலானது. எனினும், மிகச்சரியான நினைவு அதிகளவு பலனைக் கொண்டுள்ளது. அத்தகைய ஆத்மாக்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாதுள்ளது. இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். இந்த ஆத்மாவாகிய நான் சின்னஞ் சிறிய புள்ளியாவேன். பாபாவும் சின்னஞ் சிறிய புள்ளியாவார். இந்த ஞானம் முழுவதும் அவரிடம் உள்ளது. நீங்கள் இங்கமர்ந்திருக்கும் போது இந்த ஞானத்தில் சில உங்கள் புத்தியில் இருந்தாலும் நீங்கள் உலாவித்திரியும் போது செய்யவேண்டிய கடைதல் இடம் பெறுவதில்லை. நீங்கள் மறந்து விடுகிறீர்கள். நாள் முழுவதும் இந்த ஞானத்தைக் கடைவதே உண்மையான நினைவாகும். நீங்கள் எவருமே எவ்வாறு பாபாவை நினைவு செய்கிறீர்கள் என்ற உண்மையைக் கூறுவதில்லை. நீங்கள் அட்டவணையை அனுப்பிய போதிலும், எந்தளவிற்கு உங்களைப் புள்ளியாகக் கருதினீர்களென்றோ, அல்லது எந்தளவிற்கு நீங்கள் தந்தையைப் புள்ளியாக நினைவு செய்தீர்களென்றோ நீங்கள் எழுதுவதில்லை. அந்தளவு நேர்மையுடன் நீங்கள் எழுதுவதில்லை. சிலர் முரளியை மிக நன்றாக வாசித்தபோதும் அவர்களிடம் யோகம் இல்லாதுள்ளது. அவர்கள் அதிகளவு சரீர உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் இத்தகைய மறைமுகமான விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்வதுமில்லை, அல்லது அவற்றைக் கடைவதுமில்லை. நீங்கள் தூய்மை ஆகுவதற்கு நினைவைக் கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். அவ்வாறு செய்பவர்களே உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக்கொள்ள முடியும். பலரால் முரளியை வாசிக்க முடியும். ஆனால் அவர்களால் யோகத்தில் இருக்க முடியாது என்பது பாபாவுக்குத் தெரியும். உலக அதிபதிகள் ஆகுவதென்பது உங்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் அல்ல! மக்கள் வருமானத்திற்கான ஒரு தற்காலிக அந்தஸ்தைப் பெறுவதற்காக பெருமளவு கற்கிறார்கள், முன்னர் சட்டத்தரணிகள் போன்றோர் அதிக வருமானத்தை ஈட்டவில்லை. அவர்களது வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களை முதலில் ஓர் ஆத்மாவாகக் கருதி, பின்னர் தந்தையை மிகச் சரியாக நினைவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் திரிமூர்த்தி சிவனின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் வெறுமனே “சிவா” எனக் கூறும் போது மக்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் நிச்சயமாக “திரிமூர்த்தி” எனக் கூறவேண்டும். அங்கு திரிமூர்த்தி மற்றும் விருட்சத்தின் இரண்டு பிரதான படங்கள் உள்ளன. ஏணிப்படத்திலும் பார்க்க, விருட்சத்தில் அதிகளவு ஞானம் உள்ளது. அனைவரும் இப்படத்தைக் வைத்திருக்க வேண்டும். ஒரு புறத்தில் திரிமூர்த்தியும் சக்கரமும், மறுபுறத்தில் விருட்சமும் இருக்கவேண்டும். பாண்டவ சேனையின் கொடியும் அங்கு இருக்கவேண்டும். தந்தை விருட்சத்தினதும் நாடகத்தினதும் ஞானத்தைக் கொடுக்கின்றார். இலக்ஷ்மி, நாராயணன், விஷ்ணு போன்றோர் யார்? எவருக்கும் தெரியாது. மக்கள் மகாலக்ஷ்மியை வணங்குகிறார்கள். இலக்ஷ்மி வருவாரென அவர்கள் எண்ணுகிறார்கள். எங்கிருந்து இலக்ஷ்மி செல்வத்தைப் பெறுகின்றார்? அவர்கள் நான்கு கரங்கள், எட்டுக்கரங்கள் போன்றவற்றைக் கொண்ட உருவங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அங்கு எட்டு அல்லது பத்துக் கரங்களைக் கொண்ட மனிதர்கள் எவரும் இல்லை. அவர்கள் தங்கள் மனதிலே தோன்றுபவற்றை உருவாக்கியுள்ளனர். ஒருவர் அனுமானை வழிபடும் எண்ணத்தை உருவாக்கினார். பின்னர் அனைவரும் அதனைப் பின்பற்றினார்கள். அவர் உயிர்கொடுக்கும் மூலிகையைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். உயிர்கொடுக்கும் மூலிகையே மன்மனாபவ ஆகும். நீங்கள் பிராமணர்களாகி, தந்தையின் அறிமுகத்தைப் பெறும்வரை ஒரு சதப்பெறுமதியேனும் அற்றவர்களாகவே கருதப்பட்டீர்கள். மக்கள் தங்கள் அந்தஸ்தைப் பற்றி பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் பெரும் சிரமம் உள்ளது. ஓர் இராச்சியத்தை உருவாக்குவதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகிறது. அவர்களுடையது பௌதீக சக்தி, ஆனால் இதுவோ யோக சக்தி. இவ்விடயங்கள் சமய நூல்களிலே குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், நீங்கள் சமய நூல்கள் போன்றவற்றை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. யாராவது உங்களிடம் நீங்கள் சமய நூல்களில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா என வினவினால், அவரிடம் கூறுங்கள்: ஆம் அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை, ஆனால் நாங்கள் இப்பொழுது ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் ஒரேயொரு தந்தையே ஞானக்கடலாவார். இது ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. பரமாத்மா இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அந்த மனிதர்கள் மனிதர்களுக்கே ஞானத்தைக் கொடுக்கின்றனர். மனிதர்களால் ஒருபோதும் ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், முக்தியளிப்பவரும், சற்கதி அருள்பவரும் ஒரேயொரு தந்தை மாத்திரமேயாவார். தந்தை உங்களுக்கு எவ்வாறு இதைச் செய்வது, அல்லது அதைச் செய்வது மற்றும் ஏனையவற்றை செய்வது எவ்வாறு என்பது பற்றி தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது, சிவராத்திரி தினத்தை அவர்கள் எவ்வளவு பகட்டுடனும் ஆடம்பரத்துடனும் கொண்டாடுகின்றார்கள் எனப்பாருங்கள்! நீங்கள் அனைவருக்கும் கொடுக்கத்தக்க வகையில் சிறிய ‘ட்ரான்ஸ் லைட்டுக்கள்’ வைத்திருக்க வேண்டும். உங்களுடையது முற்றிலும் புதிய விடயமாகும். வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் இதனை பரந்தளவில் புதினப் பத்திரிக்கைகளில் பிரசுரித்து உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். நிலையங்களைத் திறக்கக்கூடிய மக்கள் உங்களுக்குத் தேவைப்படுகின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய போதையைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களால் விளங்கப்படுத்தக் கூடியதாக உள்ளது. அங்கு பல பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் உள்ளனர். நல்லது, நீங்கள் பிரம்மாவின் பெயரை அகற்றி அதற்குப்பதிலாக வேறொருவருடையதைப் புகுத்தலாம். நீங்கள் ராதே கிருஷ்ணருடையதைக் கூடப் போடலாம். நல்லது, அப்படியானால் பிரம்மாகுமாரிகள் எங்கிருந்து வந்தார்கள்? பிரம்மா குமாரர்கள் குமாரிகளாகிய நீங்கள் வாய்வழித் தோன்றல்கள் இருப்பதற்கு, அங்கு பிரம்மாவாகிய ஒருவர் இருந்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில் பெருமளவு புரிந்துணர்வைப் பெறுவீர்கள். நீங்கள் சற்று செலவு செய்ய வேண்டும். படங்கள் மிகத் தெளிவானவை. இலக்ஷ்மி நாராயணனின் படம் மிக நல்லது. நல்லதுஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன் தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் சேவை செய்கின்ற, கீழ்ப்படிவான குழந்தைகளுக்கும், அவர்களின் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அனைத்துக் கட்டளைகளைப் பின்பற்றும் குழந்தைகளுக்கும் உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கர்மாதீத் அடைவதற்கு, உங்கள் புத்தி, தந்தையை இனங்கண்டு, அவரை மிகச்சரியாக நினைவு செய்வதற்கு நிச்சயமாக உங்கள் புத்தி சூட்சுமமாக வேண்டும். கல்வியுடன் நினைவு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துங்கள்.2. மாயையினால் ஏமாற்றப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எவரது சரீரத்திலும் பற்றைக் கொண்டிருக்காதீர்கள். ஒரேயொரு தந்தையிடம் உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போல் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் மகாதானியாகவும் ஆகி, பிரம்மமுகூர்த்தத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தானம் செய்வீர்களாக.பிரம்மமுகூர்த்தத்தில் (அமிர்தவேளையில்) பிரம்மலோகத்தின் வாசியான தந்தை, குறிப்பாகக் குழந்தைகளான உங்களை ஞான சூரியனின் ஒளி மற்றும் சக்திக் கதிர்களால் ஆசீர்வதிக்கிறார். அத்துடன்கூடவே, தந்தை பிரம்மா, பாக்கியத்தை அருள்பவராக, பாக்கிய அமிர்தத்தைப் பகிர்ந்து அளிக்கிறார். அந்த அமிர்தத்தைக் கிரகிப்பதற்கு, உங்களின் புத்தி என்ற பாத்திரம் தயாராக உள்ளதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வகையான தடையோ அல்லது தடங்கலோ இருக்கக்கூடாது. அப்போது உங்களால் அந்தப் புண்ணிய நேரத்தை உங்களின் ஸ்திதியை மேன்மையாக்கப் பயன்படுத்த முடியும். அதனால் நாள் முழுவதும் மேன்மையான செயல்களைச் செய்ய முடியும். அமிர்தவேளையின் சூழலால் உங்களின் மனோபாவத்தை மாற்ற முடியும். அதனால், அந்த வேளையில் ஆசீர்வாதங்களை எடுத்துத் தானம் செய்யுங்கள். அதாவது, ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவராகவும் மகாதானியாகவும் ஆகுங்கள்.
சுலோகம்:
கோபப்படுகின்ற ஒருவரின் கடமை கோபப்படுவதே. உங்களின் கடமை, அன்பைக் கொடுப்பதே.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உலகச் சேவை இயல்பாகவே தொடர்ந்து சகாஷைப் பெறுவதற்காக, இப்போது உங்களின் சொந்த நன்மைக்காக ஒரு மேன்மையான திட்டத்தைச் செய்யுங்கள். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதைச் செய்து காட்டுவீர்கள் என இப்போது உங்களின் மனதில் உறுதியான சத்தியத்தைச் செய்யுங்கள். பிரம்மாபாபாவிற்குக் குழந்தைகளின் மீது ஆழ்ந்த அன்பு இருக்கிறது. அதனால் அவர் ஒவ்வொரு குழந்தையையும் முன்னால் வரச்செய்து, குறிப்பாக அவர்களைச் சமமானவர்கள் ஆக்குவதற்காகத் தொடர்ந்து சகாஷ் வழங்குகிறார்.