09.03.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.03.2004     Om Shanti     Madhuban


குறிப்பாக இந்த வருடத்தை ஜீவன் முக்தி வாழ்க்கை வாழும் வருடமாகக் கொண்டாடுங்கள். ஒற்றுமையாக இருப்பதுடன் ஒருமுகப்படுத்தலுடன் தந்தையை வெளிப்படுத்துங்கள்.


இன்று, அன்புக்கடலானவர் எங்கும் உள்ள தனது அன்பான குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். தந்தை குழந்தைகளான உங்களுக்காகத் தனது இதயத்தில் அழியாத அன்பைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளான உங்களிடமும் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் மீது உங்களின் இதயங்களில் அழியாத அன்பு உள்ளது. பிராமண ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே இறைவனின் அன்பிற்குத் தகுதியானவர்கள். பக்தர்கள் கடவுளின் அன்புக்காக ஏங்குகிறார்கள். அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால், பாக்கியசாலி பிராமண ஆத்மாக்களான நீங்கள் அந்த அன்பின் பேற்றுக்குத் தகுதிவாய்ந்தவர்கள். குழந்தைகளான உங்களிடம் ஏன் விசேடமான அன்பு இருக்கிறது என்பதை பாப்தாதா அறிவார். ஏனென்றால், இந்த வேளையில் மட்டுமே நீங்கள் சகல பொக்கிஷங்களையும் பொக்கிஷங்கள் அனைத்தின் அதிபதியானவரிடம் இருந்து பெறுகிறீர்கள். இந்தப் பொக்கிஷங்கள் தற்சமயம் இந்த ஒரு பிறவிக்கு மட்டும் நிலைத்திருப்பதில்லை. ஆனால், இந்த அழியாத பொக்கிஷங்கள் பல பிறவிகளுக்கு உங்களுடன் நிலைத்திருக்கும். உலகிலுள்ள ஏனைய ஆத்மாக்களைப் போல், பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்ல மாட்டீர்கள். நீங்கள் உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். இந்த அழியாத பொக்கிஷங்களை நீங்கள் அடைந்துள்ளீர்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதுதானே? எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த அழியாத பொக்கிஷங்களைச் சேமித்துள்ளீர்கள்தானே? அவற்றைச் சேகரித்துள்ளீர்கள் என்ற போதையும் சந்தோஷமும் எப்போதும் இருக்கிறதா? இந்தப் பொக்கிஷங்களைச் சேகரித்திருப்பதன் பிரகாசம் ஒவ்வொருவரின் முகத்திலும் புலப்படுகிறதா? நீங்கள் தந்தையிடம் இருந்து எந்தப் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள் என அறிவீர்கள்தானே? உங்களின் சேமிப்புக் கணக்கை நீங்கள் எப்போதாவது சோதித்துப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் தந்தை முடிவில்லாமல் பொக்கிஷங்களை வாரி வழங்குகிறார். அவர் சிலருக்குச் சிறிதளவும் ஏனையோருக்கு அதிகமாகவும் என்று கொடுப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் இந்த முடிவற்ற, நிலையான, அழியாத பொக்கிஷங்களின் அதிபதி ஆவார். ஒரு குழந்தை ஆகுவது என்றால் இந்தப் பொக்கிஷங்களின் அதிபதியாக இருத்தல் என்று அர்த்தம். இவை வெளிப்படட்டும். அதன்பின்னர் பாப்தாதா உங்களுக்கு எத்தனை பொக்கிஷங்களைக் கொடுத்துள்ளார் எனப் பாருங்கள்.

எல்லாவற்றிலும் முதல் பொக்கிஷம், இந்த ஞானம் என்ற பொக்கிஷமே. ஆகவே, நீங்கள் எல்லோரும் ஞானச் செல்வத்தைப் பெற்றுள்ளீர்களா? அல்லது, இன்னமும் அதைப் பெறவிருக்கிறீர்களா? நீங்கள் அதைச் சேகரித்திருக்கிறீர்களா? அல்லது, சிறிதளவை மட்டும் சேகரித்துவிட்டு எஞ்சியதைப் பயன்படுத்தி விட்டீர்களா? ஞானச் செல்வத்தைக் கொண்டிருத்தல் என்றால், விவேகமான, திரிகாலதரிசி ஆத்மாவாகச் செயல்படுவதாகும். அதன் அர்த்தம், ஞானம் நிறைந்தவராகவும் முழுமையான ஞானத்தைக் கொண்டிருப்பவராகவும் முக்காலங்களைக் கொண்ட இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதும் உங்களின் பணியில் இந்த ஞானச் செல்வத்தைப் பயன்படுத்துவதும் ஆகும். உங்களின் நடைமுறை வாழ்க்கைகளில் ஒவ்வொரு பணியிலும் இந்த ஞானச் செல்வத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். அதனால் நீங்கள் பல பந்தனங்களில் இருந்து விடுபடுவதுடன் ஜீவன்முக்தியையும் அடைகிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சத்திய யுகத்தில் மட்டுமே ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள் என்பதல்;ல. ஏனென்றால் இப்போதும் இந்த சங்கமயுக வாழ்க்கையில் உங்களின் எல்லைக்குட்பட்ட பல பந்தனங்களில் இருந்து நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள். உங்களின் வாழ்க்கைகள் பந்தனத்தில் இருந்து விடுபட்ட வாழ்க்கைகள் ஆகுகின்றன. நீங்கள் எத்தனை பந்தனங்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நீங்கள் பல்வேறுபட்ட துயரங்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள் (ஹய், ஹய் - கவலைகள்). ஐயோ, ஐயோ! இப்போது எல்லா வேளைக்குமாக முடிந்துவிட்டது. அதற்குப் பதிலாக, நீங்கள் ஆஹா, ஆஹா! என்ற பாடல்களையே பாடுகிறீர்கள். ‘ஐயோ, ஐயோ!’ என்பதன் சுவடு இருக்குமாயின், அது வார்த்தைகளில் அன்றி, ஆனால் இன்னமும் உங்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் இருக்குமாயின், அது உங்களின் மனதில் பிரவேசிக்குமாயின் நீங்கள் ஜீவன்முக்தி அடையவில்லை. ‘ஆஹா, ஆஹா, ஆஹா!’ என்றிருக்கிறதா? தாய்மார்களே, நீங்கள் துயரத்துடன் அழுவதில்லைத்தானே? நீங்கள் அழுவதில்லையே? சில வேளைகளில் அப்படிச் செய்கிறீர்களா? பாண்டவர்களான நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா? நீங்கள் அதை உங்களின் வார்த்தைகளில் செய்யாமல் இருக்கக்கூடும். எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் மனதில் ஐயோ! ஐயோ! என்பதன் சிறிதளவு சுவடேனும் இருக்குமாயின், உங்களால் பறக்க முடியாது. ஐயோ (துயரத்தின் வடிவம்) என்றால் பந்தனம் என்று அர்த்தம். பறத்தல் என்றால் பறக்கின்ற ஸ்திதி என்று அர்த்தம். அதாவது, ஜீவன்முக்தி அடைதல் என்றும் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருத்தல் என்றும் அர்த்தம். எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். பிராமண ஆத்மாக்களான நீங்கள் பந்தனத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்வரை, இன்னமும் ஏதாவது தங்க அல்லது வைர இராஜரீகச் சங்கிலிகள் உங்களைக் கட்டி வைத்திருக்குமாயின், ஆத்மாக்கள் எல்லோருக்குமான முக்திக்கான வாசலைத் திறக்க முடியாது. நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபடும்போதே, முக்திக்கான வாசல் ஆத்மாக்கள் எல்லோருக்கும் திறக்கும். எனவே, இந்த வாசலைத் திறந்து ஆத்மாக்கள் எல்லோரையும் அவர்களின் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுவிப்பது உங்களின் பொறுப்பே ஆகும்.

எந்தளவிற்கு நீங்கள் உங்களின் பொறுப்பை நிறைவேற்றி உள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எல்லோருமே பாப்தாதாவுடன் சேர்ந்து உலக மாற்றம் என்ற பணியைச் செய்வதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளீர்கள். நீங்கள் ஒப்பந்தக்காரர்கள். நீங்களே அதற்கான பொறுப்பைக் கொண்டவர்கள். தந்தை விரும்பினால், அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். ஆனால் தந்தை குழந்தைகளான உங்களை நேசிக்கிறார். அவர் அதைத் தானே தனித்துச் செய்ய விரும்பவில்லை. அவர் அவதரித்த உடனேயே, குழந்தைகளான உங்கள் எல்லோரையும் அவதரிக்கச் செய்தார். நீங்கள் சிவராத்திரியைக் கொண்டாடினீர்கள்தானே? யாருடைய சிவராத்திரியை நீங்கள் கொண்டாடினீர்கள்? பாப்தாதாவினுடையதை மட்டுமா? நீங்களும் உங்கள் எல்லோருடைய சிவராத்திரியையும் கொண்டாடினீர்கள்தானே? நீங்களே ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தந்தையின் சகபாடிகள் ஆவீர்கள். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சகபாடிகளாக இருக்கும் போதை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் இறைவனின் சகபாடிகள்.

எனவே இப்போது, இந்த வருடப் பருவகாலத்தின் இறுதியில் தனது பாகத்தை நடிக்கும்போது, குழந்தைகளான உங்கள் எல்லோரிடம் இருந்தும் இதையே பாப்தாதா விரும்புகிறார். அவர் எதை விரும்புகிறார் என பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் வெறுமனே கேட்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் நிச்சயமாக அதைச் செய்யவும் வேண்டும். இது ஓகேயா, ஆசிரியர்களே? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள். ஆசிரியர்கள் தமது விசிறிகளை அசைக்கிறார்கள். உங்களுக்கு வெப்பமாக இருக்கிறது. அச்சா, ஆசிரியர்களான நீங்கள் எல்லோரும் இதைச் செய்வதுடன் மற்றவர்களையும் இதைச் செய்யத் தூண்டுவீர்களா? நீங்கள் மற்றவர்களைத் தூண்டுவீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? நல்லது. நீங்கள் விசிறிகளின் காற்றை உணர்வதுடன் உங்களின் கைகளையும் அசைக்கிறீர்கள். இந்தக் காட்சி மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் நல்லது. எனவே, இந்தப் பருவகாலத்தின் நிறைவு விழாவில் பாப்தாதா புதிய வகையான தீபமாலையை (ஒளிகளின் மாலை) உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். உங்களுக்குப் புரிகிறதா? பாபா புதிய வகையான தீபமாலையுடன் கொண்டாட விரும்புகிறார். எனவே, நீங்கள் எல்லோரும் இந்தத் தீபமாலையைக் கொண்டாடத் தயாராக இருக்கிறீர்களா? தயாராக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சொல்ல வேண்டும் என்பதற்காக ‘ஆம்’ எனச் சொல்லாதீர்கள். பாப்தாதாவைக் களிப்படையச் செய்வதற்காக மட்டும் உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள், ஆனால் அதை உங்களின் இதயபூர்வமாகச் செய்யுங்கள். அச்சா. பாப்தாதா தனது நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஏற்றிய தீபங்களைக் காண விரும்புகிறார். பாப்தாதாவின் நம்பிக்கைத் தீபங்களின் தீபமாலையைக் கொண்டாடவே பாப்தாதா விரும்புகிறார். எந்தத் தீபாவளி என நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இது தெளிவாக இருக்கிறதா?

எனவே, பாப்தாதாவின் நம்பிக்கைத் தீபங்கள் யார்? இந்த வருடத்தின் பருவகாலம் இப்போது முடிவடைந்து விட்டது. பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களில் சிலர் அந்த எண்ணத்தை எண்ணங்களின் மட்டத்திலேயே நிறைவேற்றி உள்ளீர்கள். உங்களில் சிலர் அந்த எண்ணத்தை அரைவாசி மட்டுமே நிறைவேற்றி உள்ளீர்கள். சிலர் அதைப் பற்றி இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் எண்ணம், அவர்களின் சிந்தனையின் மட்டத்தில் மட்டுமே உள்ளது. அந்த எண்ணம் என்ன? அது எதுவும் புதியதல்ல. இது பழைய விடயம்: சுய மாற்றத்தின் மூலம் எல்லோரிலும் மாற்றத்தை ஏற்படுத்துதல். இப்போது உலகத்தை ஒருபுறம் வையுங்கள். ஏனென்றால், இப்போது சுய மாற்றத்தினூடாக பிராமணக் குடும்பத்தில் மாற்றத்தைக் காண வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். இதையே பாப்தாதா காண விரும்புகிறார். ‘இது நடந்தால், இது நடக்கும். இவர் மாறினால், நான் மாறுவேன். இவர் இதைச் செய்தால், நானும் அதைச் செய்வேன்’ என்பனவற்றை பாபா இனிமேலும் கேட்க விரும்பவில்லை. இதில், தந்தை பிரம்மா குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும், என்னைப் போன்று, ‘ஹே அர்ச்சுனா’ ஆகுங்கள் எனக் கூறுகிறார். இதில், ‘நான் முதலில்’ என்று இருக்க வேண்டும். ‘நீங்கள் முதலில்’ என்பதல்ல. நான் முதலில் என்றே இருக்க வேண்டும். இந்த ‘நான்’ என்பது நன்மை செய்யும் ‘நான்’ ஆகும். ஆனால் அந்த எல்லைக்குட்பட்ட ‘நான்’ என்பது உங்களை விழச்செய்யும். ஆரம்பித்து வைப்பவர் அர்ச்சுனன் என்றொரு கூற்று உள்ளது. அர்ச்சுனன் என்றால் முதலாம் இலக்கத்தவர் என்று அர்த்தம். வரிசைக்கிரமம் ஆனவர் அல்ல. ஆனால் முதலாம் இலக்கத்தவர். எனவே, நீங்கள் இரண்டாம் இலக்கத்தவர் ஆக விரும்புகிறீர்களா அல்லது முதலாம் இலக்கத்தவர் ஆக விரும்புகிறீர்களா? பாப்தாதா பல பணிகளிலும் வியப்பான ஒரு விடயத்தைக் கண்டுள்ளார். இந்தக் குடும்பத்தில் நடக்கின்ற ஒன்றைப் பற்றியே பாபா உங்களுக்குச் சொல்கிறார். ஏனென்றால், இங்கே இருப்பது ஒரு குடும்பமே. ஏதாவது குறிப்பிட்ட பணி இருக்கும்போது பாப்தாதா செய்திகளைப் பெறுகிறார். குறிப்பாக விசேடமான ஆத்மாக்களுக்கென்று சில பணிகளும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. எனவே அந்த எண்ணம் பாப்தாதாவையும் தாதிகளையும் வந்தடைகிறது. ஏனென்றால் தாதிகளே பௌதீக ரூபத்தில் கருவிகள் ஆவார்கள். உங்களின் எண்ணங்கள் பாப்தாதாவை வந்தடைகின்றன. பாப்தாதாவை வந்தடையும் எண்ணங்கள் எவை? ‘எனது பெயர் இதில் உள்ளடக்கப்பட வேண்டும். நானும் குறைந்தவனா? ஏன் எனது பெயரைக் குறிப்பிடவில்லை?’ எனவே, தந்தை கேட்கிறார்: ஏன் உங்களின் பெயர் ‘ஹே அர்ச்சுனா’ என்பதில் குறிப்பிடப்படவில்லை? அதில் அது இருக்க வேண்டும்தானே? அல்லது, அதை அதி;ல் சேர்க்கக் கூடாதா? அதை உள்ளடக்க வேண்டுமா? முன்னால் அமர்ந்திருப்பவர்கள்: மகாராத்திகள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். அதில் அது இருக்க வேண்டுமா? அது இருக்க வேண்டுமா? தந்தை பிரம்மா இதை நடைமுறையில் செய்து காட்டினார். அவர் ஒருபோதும் யாராவது எதையாவது செய்கிறார்களா இல்லையா எனப் பார்க்கவே இல்லை. இல்லை. நான் முதலில். பல வகையான ‘நான்’ என்பதன் இராஜரீக வடிவங்கள் உள்ளன என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. அந்த ‘நான்’ என்ற வகைகள், இந்த ‘நான்’ என்பதை முடித்துவிடும். எனவே, இந்தப் பருவகால நிறைவிற்காக பாப்தாதாவின் நம்பிக்கை என்னவென்றால், தன்னை பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரி என்று அழைக்கின்ற ஒவ்வொரு குழந்தையும், தங்களை பிகே என அறிந்து ஏற்றுக்கொள்பவர்களும் பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் உங்களிடம் உள்ள எந்தவோர் எல்லைக்குட்பட்ட பந்தனங்களில் இருந்தும் எண்ணங்களின் ரூபத்திலேனும் விடுபட்டிருக்க வேண்டும். பந்தனத்தில் இருந்து விடுபட்டுத் தந்தை பிரம்மாவைப் போல் ஜீவன்முக்தர் ஆகுங்கள். பிராமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். சாதாரணமான வாழ்க்கையில் அல்ல. இந்த வருடத்தைக் குறிப்பாக உங்களின் மேன்மையான முக்திக்குரிய பிராமண வாழ்க்கையாகக் கொண்டாடுங்கள். பிராமண ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த சூட்சுமமான பந்தனங்களை அறிந்திருப்பதைப் போல் வேறு எவராலும் அதை அறிய முடியாது. பாப்தாதாவிடம் ஒரு தொலைக்காட்சி இருப்பதனால் பாப்தாதா இதை அறிவார். இது மனதின் தொலைக்காட்சி. சரீரத்தின் தொலைக்காட்சி அல்ல, ஆனால் மனதின் தொலைக்காட்சி. எனவே, அடுத்த பருவகாலத்தில், அடுத்து ஒரு பருவகாலம் இருக்கும்தானே? அல்லது, அதை நாங்கள் முடித்துவிட வேண்டுமா? ஒரு வருடத்திற்கு விடுமுறை வேண்டுமா? நாம் ஒரு வருடத்திற்கு இடைவேளை எடுத்துக் கொள்வோமா? பாண்டவர்களே, ஒரு வருடத்திற்கு இடைவேளை கொடுப்போமா? (ஒரு மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை இருக்க வேண்டும் என தாதிஜி கூறினார்). அச்சா. மிகவும் நல்லது. எல்லோரும் இதைக் கூறுகிறீர்களா? விடுமுறை வேண்டாம் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். கலரியில் அமர்ந்திருப்பவர்கள் தமது கைகளை அசைக்கிறார்கள் இல்லை. அச்சா. (ஒன்றுகூடலில் இருக்கும் எல்லோரும் தமது கைகளை அசைக்கிறார்கள்). மிகவும் நல்லது. தந்தை எப்போதும் குழந்தைகளுக்கு ‘ஹாஜி, ஹாஜி’ என்றே சொல்வார். அது நல்லது. இப்போது, குழந்தைகளான நீங்கள் தந்தைக்கு எப்போது ‘ஹாஜி’ சொல்வீர்கள்? நீங்கள் தந்தையை ஹாஜி சொல்ல வைத்தீர்கள்தானே? தந்தை கூறுகிறார்: தந்தையும் ஒரு நிபந்தனை வைக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? குறைந்தபட்சம் நீங்கள் எல்லோரும் ஹாஜி எனச் சொல்ல வேண்டும். உறுதியாகவா? நீங்கள் எந்தவித சாக்குப் போக்குகளும் சொல்ல மாட்டீர்கள்தானே? இப்போது, தொலைக்காட்சியில் எல்லோருடைய புகைப்படங்களையும் எடுங்கள். இது நல்லது. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் ‘ஹாஜி, ஹாஜி’ எனச் சொல்வதை இட்டுத் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார்.

‘இந்தக் காரணத்தால், அந்தக் காரணத்தால், இதனாலேயே இந்த பந்தனம் உள்ளது’ என்ற சாக்குப்போக்குகள் எதையும் எவரும் சொல்லக்கூடாது என்றே பாப்தாதா விரும்புகிறார். பிரச்சனை ஆகாதீர்கள். ஆனால் தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள். நீங்கள் உங்களின் சகபாடிகளையும் இப்படி ஆக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் காலத்தின் நிலைமைகளைப் பார்க்கிறீர்கள். சீரழிவின் சத்தங்கள் மிகவும் அதிகரிக்கின்றன. ஊழலும் தாக்குதல்களும் உச்சக்கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன. எனவே, மகத்துவத்தின் கொடி (மேன்மை ஆகுதல்) முதலில் ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் மனதிலும் ஏற்றப்பட வேண்டும். அதன் பின்னரே அது உலகில் ஏற்றப்படும். நீங்கள் பல சிவராத்திரிகளைக் கொண்டாடி உள்ளீர்கள். ஒவ்வொரு சிவராத்திரியிலும் நீங்கள் தந்தையின் கொடியை உலகில் ஏற்றுவீர்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உலகில் இந்த வெளிப்படுத்தலுக்கான கொடியை ஏற்ற முன்னர், பிராமணர்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதில் தந்தையின் கொடியை உங்களின் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க வேண்டும். இந்தக் கொடியை ஏற்றுவதற்கு, நீங்கள் ஒவ்வொரு செயலிலும் உங்களின் செயல்களில் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உங்களின் செயல்களில் இதைச் செய்ய வேண்டும், உங்களின் எண்ணங்களில் அல்ல. உங்களின் தலையில் அல்ல, ஆனால் உங்களின் இதயத்தில், செயல்களில், உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் இதைச் செய்ய வேண்டும். அவை கஷ்டமான வார்த்தைகள் அல்ல. அவை பொதுவான வார்த்தைகளே. 1) சகல உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் அத்துடன் உங்களுக்கு இடையேயும் ஒற்றுமை இருக்க வேண்டும். சம்ஸ்காரங்கள் பல இருந்தாலும், அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை இருக்க வேண்டும். 2) உங்களுக்குள் என்ன மேன்மையான எண்ணங்கள் இருந்தாலும் இத்தகைய எண்ணங்கள் உங்களுக்குள் ஏற்படும்போது பாப்தாதா அதை மிகவும் விரும்புகிறார். அந்த எண்ணங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் பாப்தாதா மிகவும் மகிழ்கிறார். ஆஹா ஆஹா குழந்தைகளே ஆஹா! ஆஹா மேன்மையான எண்ணங்களே, ஆஹா! ஆனால்! ஓர் ஆனால் ஏற்பட்டுவிடுகிறது. ‘ஆனால்’ என்பது இருக்கக்கூடாது, ஆனாலும் அது ஏற்படுகிறது. உங்களில் பெரும்பாலானோருக்கு, அதாவது, குழந்தைகளாகிய உங்களின் 99 சதவீதத்தினருக்கு மிக நல்ல எண்ணங்கள் உள்ளன. இன்று இந்தக் குழந்தைக்கு மிக நல்ல எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன, முன்னேற்றம் ஏற்படப் போகிறது என பாப்தாதாவும் நினைக்கிறார். ஆனால் வார்த்தைகளில் வரும்போது அவை 50 சதவீதமாகக் குறைந்துவிடுகின்றன. நடைமுறையில் வரும்போது, 75 சதவீதம் குறைந்துவிடுகின்றன. அவை கலப்படம் ஆகிவிடுகின்றன. இதற்கான காரணம் என்ன? உங்களின் எண்ணங்களில் ஒருமுகப்படுதலும் திடசங்கற்பமும் இல்லை. உங்களின் எண்ணங்களில் ஒருமுகப்படுதல் இருக்கும்போது அந்த ஒருமுகப்படுதல் உங்களின் வெற்றிக்கான காரணி ஆகும். திடசங்கற்பம் உங்களின் வெற்றிக்குக் காரணம் ஆகும். அவற்றில் வேறுபாடு ஒன்று உள்ளது. இதற்கான காரணம் என்ன? பெறுபேற்றிலே பாப்தாதா ஒரு விடயத்தை மட்டுமே பார்க்கிறார். நீங்கள் மற்றவர்களை அதிகமாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் இதைக் காட்டுகிறீர்கள். நீங்கள் யாராவது ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால், மூன்று விரல்கள் உங்களை நோக்கித் திரும்பும். எனவே, நீங்கள் மூன்று விரல்களைப் பார்க்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஒன்றையே அதிகளவில் பார்ப்பீர்கள். அதனால், திடசங்கற்பமும் ஒருமுகப்படுத்தலும் இருக்க வேண்டும். ஒற்றுமையில் தளம்பல் காணப்படுகிறது. ‘இவர் இதைச் செய்தால், நான் அதைச் செய்வேன்.’ ஆரம்பித்து வைப்பவர்கள் அர்ச்சுனர் ஆகுவார்கள். நீங்கள் இதில் இரண்டாம் இலக்கத்தவர் ஆகுவீர்கள். இல்லாவிட்டால், உங்களின் சுலோகனை மாற்றுங்கள். சுய மாற்றத்தினூடாக உலக மாற்றம்! என்பதற்குப் பதிலாக, ‘உலக மாற்றத்தினூடாக சுய மாற்றம்’ என்று ஆக்கிக் கொள்ளுங்கள். ‘மற்றவர்களின் மாற்றத்தினூடாக சுய மாற்றம்’ என்று ஆக்கிக் கொள்ளுங்கள். எனவே, நாங்கள் சுலோகனை மாற்றுவோமா? அதை நாங்கள் மாற்றுவோமா? நாங்கள் அதை மாற்ற வேண்டாமா? பாப்தாதாவும் ஒரு நிபந்தனை வைக்கிறார். நீங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்களா? பாபா உங்களுக்கு இதைச் சொல்லட்டுமா? பாப்தாதா ஆறு மாதங்களில் பெறுபேற்றைப் பார்த்து விட்டுப் பின்னரே வருவார். இல்லாவிட்டால், அவர் வர மாட்டார். தந்தை ஹாஜி எனச் சொல்லும்போது, குழந்தைகளும் ஹாஜி எனச் சொல்ல வேண்டும். என்னதான் நடந்தாலும் பாப்தாதா கூறுகிறார்: சுய மாற்றத்திற்கு, ‘நான்’ என்ற எந்தவோர் எல்லைக்குட்பட்ட உணர்வில் இருந்தும் நீங்கள் மரணிக்க வேண்டும். ‘நான்’ என்ற உணர்விற்கு மரணியுங்கள். பௌதீகமாக அல்ல. நீங்கள் பௌதீகமாக இறக்க வேண்டியதில்லை. ஆனால் ‘நான்’ என்ற உணர்விற்கு மரணித்துவிடுங்கள். ‘நான்தான் சரி, நான் இப்படிப்பட்டவன். நான் மட்டும் குறைந்தவனா? நானே அனைத்தும் ஆவேன்.’ ‘நான்’ என்ற எந்தவிதமான உணர்விற்கும் இறந்துவிடுங்கள். நீங்கள் மரணிக்கவும் வேண்டும். எனவே, இந்த மரணம் மிகவும் இனிமையான மரணம் ஆகும். இது மரணிப்பதல்ல, ஆனால் 21 பிறவிகளுக்கு இராச்சிய பாக்கியத்துடன் வாழ்வதாகும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆசிரியர்களே, நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களுக்கு என்ன எண்ணங்கள் தோன்றுகிறதோ அவற்றை நிறைவேற்றுவதற்கான தைரியமும் அவர்களிடம் உள்ளது. இது அவர்களின் சிறப்பியல்பு ஆகும். பாரத மக்களுக்கு மும்மடங்கு தைரியம் உள்ளது. இரட்டை வெளிநாட்டவர்களுக்கு இரட்டைத் தைரியம் உள்ளது. அவர்களுக்கோ மும்மடங்கு தைரியம் உள்ளது. எனவே, இதையே பாப்தாதா பார்க்க விரும்புகிறார். உங்களுக்குப் புரிகிறதா? இதுவே பாப்தாதாவின் மேன்மையான நம்பிக்கைத் தீபம். இது ஒவ்வொரு குழந்தையிலும் ஏற்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். எனவே, இந்த வருடம், இந்தத் தீபாவளியைக் கொண்டாடுங்கள். அதை நீங்கள் ஆறு மாதங்களின் பின்னர் கொண்டாடினாலும் பரவாயில்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தை பாப்தாதா பார்க்கும்போது, அதன்பின்னர் தனது சொந்த நிகழ்ச்சியை அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் அதைச் செய்வார்களா? மாலை உங்களுடையது, அப்படித்தானே? பழையவர்களான நீங்கள் மட்டுமே 16108 மாலையில் வருவீர்கள். புதியவர்கள் பின்னரே வருவார்கள். ஆம், சிலர் பிந்தி வந்திருந்தாலும் வேகமாகச் செல்வார்கள். பிந்தி வந்திருந்தாலும் முந்திச் செல்கின்ற சில உதாரணங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் வெகு சிலரே. மற்றும்படி நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பமும் இவ்வாறு ஆகினீர்கள். மீண்டும் அவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது இந்த நாட்டிலோ எங்கே இருந்தாலும் பரவாயில்லை. நீண்ட காலத்திற்குப் புத்திகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு சகல உரிமைகளும் இருக்கும். பாப்தாதாவிற்கு உங்களிடம் அன்பு உள்ளது. எனவே, இங்கே நீண்ட காலம் இருப்பவர்கள், நல்ல முயற்சியாளர்கள், முழுமையான முயற்சியாளர்கள் அல்ல, ஆனால் நல்ல முயற்சியாளர்கள், பாப்தாதா அவர்களைப் பின்னால் விட்டுச் செல்ல மாட்டார். அவர் அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார். எனவே, இந்த உறுதியான நம்பிக்கை வையுங்கள்: நாம் உங்களுடனேயே இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். இது உறுதியாக இருக்கிறதா? உறுதியா? மற்றவர்களுக்காக தூய, சாதகமான உணர்வுகளையும் உங்களின் ஆதி சுயத்திற்கான தூய எண்ணங்களையும் தூய உணர்வுகளையும் மாற்றத்திற்கான உணர்வுகளையும் ஒத்துழைப்புக் கொடுக்கும் உணர்வுகளையும் கருணை உணர்வுகளையும் கொண்டவராக இருக்கும் உணர்வுகளை வெளிக்கொண்டு வாருங்கள். தற்சமயம், நீங்கள் அவற்றை அமிழ்த்தி வைத்திருக்கிறீர்கள். இப்போது, இந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். திருத்தங்கள் பலவற்றைச் செய்யாதீர்கள். ஆனால் அவர்களை மன்னித்து விடுங்கள். திருத்தங்களைக் கொடுப்பதில் ஒவ்வொருவரும் அடுத்தவரைவிடக் கெட்டிக்காரர்கள். ஆனால் நீங்கள் மன்னிக்கும் தன்மையுடன் திருத்தங்களைக் கொடுக்க வேண்டும். உங்களால் முரளி வாசிக்கும்போது, பாடநெறிகளைக் கொடுக்கும்போது, நிகழ்ச்சிகளை நடத்தும்போது கற்பித்தல்களையும் திருத்தங்களையும் கொடுக்க முடியும். ஆனால், உங்களின் வேலையில் மற்றவர்களுடன் பழகும்போது, நீங்கள் மன்னிக்கும் தன்மையுடனேயே கற்பித்தல்களைக் கொடுக்க வேண்டும். திருத்தங்களை மட்டும் கொடுக்காதீர்கள். கருணைநிறைந்தவராக இருந்தவண்ணம் திருத்தங்களைக் கொடுங்கள். அப்போது மற்றவர்களின் பலவீனங்களை மன்னிக்கும் வகையில் உங்களின் கருணை செயல்படும். உங்களுக்குப் புரிகிறதா?

இப்போது, உங்களால் ஒரு விநாடியில் உங்களின் மனதின் அதிபதியாகி, நீங்கள் விரும்பிய அளவிற்கு அதில் ஸ்திரமாக இருக்க முடிகிறதா? உங்களால் இதைச் செய்ய முடிகிறதா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? எனவே, இப்போது இந்த ஆன்மீக அப்பியாசத்தைச் செய்யுங்கள். மனதின் முழுமையான ஒருமுகப்பட்ட நிலை இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களில்கூட எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. அசைக்க முடியாத நிலையில் இருக்க வேண்டும். அச்சா.

எங்கும் உள்ள அழியாத, நிலையான பொக்கிஷங்களின் அதிபதிகளாக இருப்பவர்கள் எல்லோருக்கும் இந்த சங்கமயுகத்து வாழ்க்கையில் பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகவும் விடுதலை பெற்றவராகவும் இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் நம்பிக்கையை நிறைவேற்றுபவர்களுக்கும் சதா ஒற்றுமை மற்றும் ஒருமுகப்படுத்தல் சக்திகளால் நிறைந்திருக்கும் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

நானா திசைகளிலும் வெகு தொலைவில் இருந்தும் அன்பும் நினைவுகளையும் கடிதங்களையும் அனுப்பியிருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதா இதயபூர்வமாக அதிகளவு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். இத்துடன்கூடவே, குழந்தைகள் பலர் மதுவனத்தில் தாம் பெற்ற புத்துணர்ச்சியைப் பற்றியும் மிக நல்ல கடிதங்களை அனுப்பி உள்ளார்கள். எனவே அந்தக் குழந்தைகளுக்கும் விசேடமான அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.

இதுவரை நடந்த எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது என்றால் தீவிர முயற்சி செய்வதாகும். யாராவது கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்தால், அவரின் நேரம், சக்தி, எண்ணங்கள் எல்லாமே வீணாகிப் போகும். இந்த நேரம் வீணாக்கப்படக் கூடாது. ஏனென்றால், சங்கமயுகத்தின் இரண்டு கணங்களேனும், அதாவது, இரண்டு விநாடிகளேனும் வீணாக்கப்பட்டால், நீங்கள் பல வருடங்களை வீணாக்கி விடுவீர்கள். எனவே, இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, கடந்த காலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். ஒரு முற்றுப்புள்ளி வைப்பதென்றால், சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியிருத்தல் என்று அர்த்தம்.

சுலோகம்:
ஒவ்வோர் எண்ணமும் மேன்மையானது ஆகும்போது, உங்களுக்கும் உலகிற்கும் நன்மை ஏற்படும்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

ஞானத்தின் எந்தவொரு விடயத்தையும் அதிகாரத்துடன், அதேவேளை சத்தியத்துடனும் பண்புடனும் பேசுங்கள். தயக்கத்துடன் அல்ல. வெளிப்படுத்தலை ஏற்படுத்துவதற்கு, எல்லாவற்றுக்கும் முதலில் உங்களை வெளிப்படுத்துங்கள். பயமற்றவர் ஆகுங்கள். உங்களின் சொற்பொழிவுகளில் வார்த்தைகள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அவை தந்தையின் அறிமுகத்துடனும் அவரின் அன்பினாலும் நிறைந்திருப்பதுடன் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். அந்த அன்பெனும் காந்தம் ஆத்மாக்களை இறைவனை நோக்கி ஈர்க்கும்.