09.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களை வழங்குவதற்காகவே வந்துள்ளார். தந்தை உங்களுக்குக் கூறுவதும் விளங்கப்படுத்துவதும் ஞானமே ஆகும். ஞானக்கடலைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களை வழங்க முடியாது.
கேள்வி:
ஆத்மாக்களின் பெறுமதி குறைவடைவதற்கான பிரதான காரணம் என்ன?பதில்:
அவர்களில் கலப்படம் கலக்கப்படும்போதே பெறுமதி குறைவடைகின்றது. தங்கத்தில் கலப்படம் கலக்கப்படும் போது, அதிலிருந்து செய்யப்படும் ஆபரணங்களின் பெறுமதியும் குறைவடைகின்றது. அதேபோன்று, தூய தங்கத்தைப் போன்றுள்ள ஆத்மாக்களில் தூய்மையின்மை என்ற கலப்படம் கலக்கப்படும் போது அவர்களின் பெறுமதி குறைகிறது. இந்த நேரத்தில், தமோபிரதானான ஆத்மாக்களுக்கும் பெறுமதி இல்லை. அவர்களின் சரீரங்களுக்கும் பெறுமதி இல்லை. இப்பொழுது, நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் சரீரங்களும் பெறுமதி வாய்ந்தவை அூகுகின்றன.பாடல்:
இன்று அதிகாலையில் வந்தவர் யார்?ஓம் சாந்தி.
தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப் படுத்துவதுடன், நினைவைக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றார். எங்கள் கள்ளங்கபடமற்ற சிவபாபா வந்துவிட்டார் என்பதை இங்கே அமர்ந்திருக்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார்த்தமாக அறிவீர்கள். பாபா அரை மணி நேரமாக எதுவுமே பேசாது மௌனத்தில் அமர்ந்திருந்தால், சிவபாபா ஏதாவது பேசவேண்டும் என ஆத்மாக்களாகிய நீங்கள் உள்ளே உணர்வீர்கள். சிவபாபா இவரில் பிரவேசித்துள்ளார் என்றும் ஆனால் அவர் எதுவுமே பேசாதிருக்கின்றார் என்றும் நீங்கள் அறிவீர்கள். இதுவும் உங்கள் நினைவு யாத்திரையே ஆகும். உங்கள் புத்தி சிவபாபாவின் நினைவை மாத்திரமே கொண்டுள்ளது. சிவபாபா ஏதாவது பேசவேண்டும் என்றும் உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளார்த்தமாக நீங்கள் உணர்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களை வழங்குவதற்காகவே வருகின்றார். அவர் ஞானக்கடல் ஆவார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே ஞானம் ஆகும். தந்தை கூறுகின்றார்: நாடகச் சக்கரத்தையும், ஏணியையும், தந்தையையும் நினைவு செய்யுங்கள். இதுவே ஞானம் ஆகும். பாபா விளங்கப்படுத்துவது அனைத்தும் ஞானம் என்றே அழைக்கப்படுகின்றது. அவர் நினைவு யாத்திரை பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயங்கள் அனைத்தும் இந்த ஞான இரத்தினங்களாகும். நினைவு பற்றி அவர் விளங்கப்படுத்தும் விடயங்கள் மிகச் சிறந்த இரத்தினங்கள் ஆகும். தந்தை கூறுகின்றார்: உங்கள் 84 பிறவிகளை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகவே கீழே இறங்கினீர்கள். இப்பொழுது, தூய்மையாகிய பின்னரே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோரிய பின்னர், உங்கள் கர்மாதீத நிலையிலேயே திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் நினைவு சக்தி மூலம் சதோபிரதான் ஆகும்போதே அது நிகழும். இவ்வார்த்தைகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை, அவை குறித்துக் கொள்ளப்பட வேண்டும். ஆத்மாவே அனைத்தையும் கிரகித்துக் கொள்கின்றார். அங்கங்களால் ஆன இச்சரீரம் அழியப்போகின்றது. ஆத்மா நல்ல, தீய சம்ஸ்காரங்களால் நிரம்பியுள்ளார். தந்தையும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தின் சம்ஸ்காரங்களால் நிரம்பியுள்ளார். இதனாலேயே அவர் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். பாபா அனைத்தையும் உங்களுக்கு மிகச் சரியாக விளங்கப்படுத்துகின்றார். 84 பிறவிகளின் சக்கரம் மிக இலகுவானது. 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வீட்டுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும். அழுக்கான ஆத்மாக்களால் அங்கே செல்லமுடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகும்போது, நீங்கள் சரீரங்களைவிட்டு நீங்குவீர்கள். உங்களால் இங்கே ஒரு தூய சரீரத்தைப் பெறமுடியாது. இது ஒரு பழைய சப்பாத்து. அதில் விருப்பமின்மை உள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாக்கப்பட வேண்டும். அப்பொழுதே நாங்கள் எதிர்காலத்தில் தூய சரீரங்களைப் பெறமுடியும். சத்தியயுகத்தில் ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையாகவே இருந்தன. இந்நேரத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆகவே உங்கள் சரீரங்களும் தூய்மை அற்றவையாகவே உள்ளன. தங்கம் எத்தகையதோ, அதற்கேற்பவே அதிலிருந்து செய்யப்படுகின்ற ஆபரணங்களும் இருக்கும். குறைந்த கரட் தங்கத்தில் செய்யப்படும் தங்க ஆபரணங்களையே மக்கள் அணிய வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. அதன் பெறுமதி குறைவானது. ஆத்மாக்களாகிய உங்கள் பெறுமதியும் மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கே, ஆத்மாக்களாகிய நீங்கள் அதிக பெறுமதியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அனைவரும் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. அவர்களால் எவ்வித பயனுமில்லை. அங்கே, ஆத்மாக்கள் தூய்மையாக உள்ளதால் அவர்களுக்கு அதிக பெறுமதி உள்ளது. அவர்கள் இப்பொழுது 9 ‘கரட்’ ஆகியதால் அவர்களுக்குப் பெறுமதியும் இல்லை. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: ஆத்மாவைத் தூய்மை ஆக்குங்கள், நீங்கள் ஒரு தூய சரீரத்தைப் பெறுவீர்கள். வேறு எவராலும் இந்த ஞானத்தை வழங்க முடியாது. தந்தை மாத்திரமே கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் இதைக் கூறியிருக்க முடியும்? அவர் ஒரு சரீரதாரி. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். நீங்கள் இவை அனைத்தையும் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிவபாபா அசரீரியானவர், அவரது பிறப்பு சூட்சுமமானது (அலௌகீகமானது). அவர் குழந்தைகளாகிய உங்களுக்கும் சூட்சுமமான பிறவியையே கொடுக்கின்றார். எனவே, இங்கே, சூட்சுமமான தந்தையும், சூட்சுமமான குழந்தைகளும் உள்ளனர். கூறப்படுகின்றது: லௌகீகம் (உலகத்திற்கு உரியது), அலௌகீகம் (சூட்சுமமானது), பரலோகம் (இவ்வுலகிற்கு அப்பாற்பட்டது). குழந்தைகளாகிய நீங்கள் ஒரு சூட்சுமமான பிறவியைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களைத் தத்தெடுத்து, உங்களுக்கு ஓர் ஆஸ்தியையும் வழங்குகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் ஒரு சூட்சுமமான பிறவியை எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சூட்சுமமான தந்தையிடமிருந்து ஒரு சூட்சுமமான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிரம்மாகுமாரர்கள், குமாரிகளைத் தவிர வேறு எவராலும் உலக அதிபதிகள் ஆகமுடியாது. மனிதர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்ட ஆத்மாக்களால் நினைவு செய்வதைத் தவிர, வேறெந்த வழிமுறையாலும் தூய்மையாக முடியாது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கா விட்டால், ஆத்மாக்களாகிய உங்களில் கலப்படம் இன்னமும் இருப்பதனால், உங்களால் தூய்மையாக முடியாது. பின்னர், நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும். முழு உலகிலும் உள்ள மனித ஆத்மாக்கள் தூய்மையாகிய பின்னரே வீடு திரும்ப வேண்டும். சரீரங்கள் அங்கே போகப் போவதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவது மிகவும் சிரமமானது. உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்போது உங்களால் அந்த ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அச்சா, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத உங்களால் முடியாவிட்டால், சிவபாபாவை நினைவு செய்யுங்கள். உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளும்போது, இந்த முயற்சியைச் செய்யுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான், இச்சரீரத்தின் மூலமாக இவ்வேலையைச் செய்கின்றேன். இந்த ஆத்மாவாகிய நான், சிவபாபாவை நினைவு செய்கின்றேன். ஆத்மாவாகிய நான், முதலில் தூய்மையாக இருந்தேன். இப்பொழுது நான் மீண்டும் ஒரு முறை தூய்மையாக வேண்டும். இதுவே நீங்கள் செய்யவேண்டிய முயற்சியாகும். இதில் மிகப்பெரிய வருமானம் சம்பாதிக்கப்பட வேண்டும். இங்கே, மக்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும், அவர்களிடம் எத்தனை மில்லியன்களும், பில்லியன்களும் இருந்தாலும், அவர்களிடம் அந்தச் சந்தோஷம் இருப்பதில்லை. அனைவரிடமும் அதிக துன்பமே உள்ளது. இன்று ஒருவர் பேரரசனாகவோ, ஜனாதிபதியாகவோ இருக்கலாம். ஆனால் நாளையே அவர்கள் அவரைக் கொலை செய்துவிடுவார்கள். வெளிநாட்டில் நடைபெறுகின்ற விடயங்களைப் பாருங்கள்! செல்வந்தர்கள், அரசர்கள் போன்றோருக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. இங்கே அரசர்களாக இருந்தவர்கள் இப்பொழுது பிரஜைகள் ஆகிவிட்டார்கள். இப்பொழுது அந்த அரசர்களையும் ஆட்சி செய்கின்ற மக்கள் அரசாங்கம் வந்துவிட்டது. நாடகத்தில் இவ்வாறு நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறுதியில் இதுவே அதன் நிலையாகும். பலர் தங்களுக்கு இடையில் சண்டையிடுவார்கள். முன்னைய கல்பத்திலும் இதுவே நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மறைமுகமான முறையில் இழந்த உங்கள் இராச்சியத்தை இப்பொழுது உங்கள் புத்தியாலும், இதயத்தாலும் பெருமளவு அன்புடன் மீண்டும் கோருகின்றீர்கள். நீங்கள் அதிபதிகளாக, அதாவது சூரிய வம்ச தேவர்களாக இருந்தீர்கள் என்ற அறிமுகம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையைச் செவிமடுப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை அவ்வாறு ஆகுவதற்கு இங்கே முயற்சி செய்கின்றீர்கள். எவ்வாறு தந்தை எங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்ற முடியும்? தந்தை வந்து இராஜ யோகம் கற்பிக்கின்றார். பக்தி மார்க்கத்தில் எவராலும் இதனைக் கற்பிக்க முடியாது. எந்தவொரு மனிதரையும் தந்தை, ஆசிரியர், குரு என அழைக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் பழைய கதைகள் பல கூறப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு சௌகரியத்தைப் பெறுவதற்காக, இப்பொழுது நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் அரைக் கல்பமாக சரீர உணர்வில் இருந்;தீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். நாடகத்தின்படி, பழைய உலகம் இப்பொழுது மாறி, புதியதாக வேண்டும். ஒரேயொரு உலகமே உள்ளது. இந்தப் பழைய உலகம் மீண்டும் புதியதாகும். புதிய உலகில் புதிய பாரதம் இருந்த போது, அங்கே தேவர்கள் வாழ்ந்தனர். அதன் தலைநகரத்தையும் நீங்கள் அறிவீர்கள். அது யமுனை நதிக்கரையில் இருந்தது, அது பரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது. அங்கே இயற்கை அழகு இருந்தது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் போது, தூய சரீரங்களைப் பெறுவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் வந்து, உங்களை அழகான தேவர்கள் ஆக்குகின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் ஏதாவது குறைபாடுகளைக் கொண்டுள்ளேனா? நான் நினைவில் இருக்கின்றேனா? நீங்கள் கற்கவும் வேண்டும். இந்தக் கல்வி மிகவும் முக்கியமானது. இங்கே, நீங்கள் ஒரு விடயத்தையே கற்கின்றீர்கள். ஏனைய கல்விகளில் பல புத்தகங்கள் உள்ளன. இக்கல்வியே அனைத்திலும் அதிமேலானது. உங்களுக்குக் கற்பிக்கும் அந்த ஒரேயொருவரே அதிமேலான சிவபாபா ஆவார். சிவபாபா இவ்வுலகின் அதிபதியல்ல. நீங்களே உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பாபா தொடர்ந்தும் பல புதிய, ஆழமான விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். கடவுளே உலகின் அதிபதி என மக்கள் நினைக்கின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் இவ்வுலகின் அதிபதியல்ல. நீங்களே உங்கள் இராச்சியத்தின் அதிபதிகளாகி, பின்னர் அந்த இராச்சியத்தை இழக்கின்றீர்கள். பின்னர், தந்தை வந்து மீண்டும் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். இது உலகம் என அழைக்கப்படுகின்றது. சூட்சும வதனத்திற்கோ, அசரீரி உலகிற்கோ இது பொருந்தாது. நீங்கள் அசரீரி உலகிலிருந்து இங்கே வந்து, 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள். பின்னர் தந்தை மீண்டும் வரவேண்டி உள்ளது. நீங்கள் இழந்த வெகுமதியை மீண்டும் கோருவதற்கு முயற்சி செய்வதற்காக இப்பொழுது தூண்டப்படுகின்றீர்கள். இது வெற்றி, தோல்வி பற்றிய ஒரு நாடகமாகும். இந்த இராவண இராச்சியம் முடிவடைய வேண்டும். தந்தை அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். தந்தையே இங்கிருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார்.ஏனைய இடங்களில் மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிக்கின்றனர். நீங்களும் மனிதர்களே, ஆனால் ஆத்மாக்களான உங்களுக்கே தந்தை கற்பிக்கின்றார். கற்கின்ற சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் உள்ளன. நீங்கள் இப்பொழுது மிகவும் ஞானம் நிறைந்தவர்கள். ஏனைய ஞானம் அனைத்தும் பக்தியின் ஞானமாகும். ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு உங்களுக்கு அறிவு அவசியம். சமய நூல்களின் ஞானமும் உள்ளது. இந்த ஞானம் ஆன்மீகமானது. ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் இதைச் செவிமடுத்தீர்கள். உலகில் வேறு எங்குமே இவ்வாறாக உங்களுக்கு எவரும் கற்பிப்பதில்லை. கடவுள் எவ்வாறு கற்பிக்கின்றார் என்பதை எவரும் அறியமாட்டார்கள். இக்கல்வியின் மூலமாக ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நன்றாகக் கற்பதுடன் ஸ்ரீமத்தையும் பின்பற்றுபவர்கள், அதி மேலானவர்கள் ஆகுவார்கள். ஆனால் தந்தையின் கரத்தைக் கைவிடுவதன் மூலம் அவரை அவமரியாதை செய்பவர்கள், பிரஜைகளின் மத்தியில் மிகவும் தாழ்ந்ததோர் அந்தஸ்தையே பெறுவார்கள். தந்தை ஒரு கல்வியை மாத்திரமே கற்பிக்கின்றார். படிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அது தேவ இராச்சியமாக இருந்தது. ஒரேயொரு தந்தை மாத்திரமே இங்கு வந்து ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். ஏனைய அனைத்தும் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது உங்களை மிக விரைவாகத் தயார்ப்படுத்துங்கள். கவனக் குறைவாக இருந்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் நினைவில் இருக்காவிட்டால், பெறுமதிமிக்க உங்கள் நேரத்தை நீங்கள் இழந்துவிடுவீர்கள். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக உங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கரங்கள் வேலை செய்யும்போது, உங்கள் இதயம் பாபாவின் நினைவில் இருக்கட்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள். நண்பனான குதாவின் (கடவுள்) கதையும் உள்ளது. அலாவுதீனும் அவனது அற்புத விளக்கும் என்ற நாடகமும் உள்ளது. ஒரு கைதட்டலின் மூலம் பெருமளவு பொக்கிஷம் தோன்றுகின்றது. அல்லா கைதட்டும்போது குழந்தைகளாகிய நீங்கள் என்னவாக ஆக்கப்படுகின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு தெய்வீகக் காட்சியின் மூலம் நீங்கள் உடனடியாகவே வைகுந்தத்திற்குச் செல்கின்றீர்கள். முன்னர், சில புதல்விகள் ஒன்றாக அமர்ந்திருந்து திரான்ஸில் செல்வார்கள். இதனால், இங்கே ஏதோ மாயம் இருப்பதாக மக்கள் கூற ஆரம்பித்தனர். எனவே, அந்தப் பாகம் நிறுத்தப்பட்டது. அக்கதைகள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. ஹத்தம்தாயின் கதையும் உள்ளது. நீங்கள் உங்கள் வாயில் மணியைப் போட்டதும் மாயை மறைந்து விடுகின்றாள். பின்னர், நீங்கள் மணியை வெளியே எடுத்ததும், மாயை மீண்டும் தோன்றுகின்றாள். இந்த இரகசியத்தை வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் வாயில் மணியை வைத்திருங்கள். நீங்கள் அமைதிக்கடல்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் சுயத்தின் ஆதி தர்மமாகிய மௌனத்தில் நிலைத்திருக்கின்றீர்கள். சத்தியயுகத்திலும் நீங்கள் ஆத்மாக்கள் என்பதை அறிவீர்கள். எனினும், அங்குள்ள எவருக்குமே பரமாத்மாவான தந்தையைத் தெரியாது. அதுபற்றிக் கேட்பவர்களிடம் கூறுங்கள்: அங்கே விகாரம் குறிப்பிடப்படவில்லை. அதுவே விகாரமற்ற உலகமாகும். ஐந்து விகாரங்களும் அங்கே இருப்பதில்லை. அங்கே சரீர உணர்வு இருப்பதில்லை. மாயையின் இராச்சியத்தில் நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். ஆனால், சத்தியயுகத்தில், நீங்கள் பற்றை வென்றவர்களாக இருப்பீர்கள். இப்பழைய உலகின் மீதுள்ள உங்கள் பற்றை வெற்றி கொள்ளுங்கள். தங்கள் இல்லறத்தை விட்டுச் செல்கின்றவர்கள் (சந்நியாசிகள்) உலகில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளனர். நீங்கள் உங்கள் இல்லறத்தை விட்டுச் செல்ல வேண்டியதில்லை. தந்தையின் நினைவில் இருந்தவாறே நீங்கள் உங்கள் பழைய சரீரத்தை நீக்கி, வீடு திரும்ப வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்க்க வேண்டும். பின்னர், நீங்கள் அனைவரும் வீடு திரும்புவீர்கள். இது ஒவ்வொரு சக்கரத்திலும் நிகழ்கின்றது. உங்கள் புத்தி இப்பொழுது வெகு தொலைவிற்கு, மேலே செல்கின்றது. அவர்கள் கடலின் ஆழத்தை அறிவதற்கும், சூரியன், சந்திரன் போன்றவற்றில் என்ன உள்ளன என்பதை அறிவதற்கும் முயற்சி செய்கின்றார்கள். முன்னர், சூரியனும் சந்திரனும் தேவர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அவை மேடைக்கான வெளிச்சம் என நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள். நாடகம் இங்கேயே இடம்பெறுகின்றது. எனவே, ஒளியும் இங்கேயே தேவைப்படுகின்றது. அவை அசரீரி உலகிலோ, சூட்சும உலகிலோ இருப்பதில்லை. அங்கே எந்த நாடகமும் நடிக்கப்படுவதும் இல்லை. நாடகம் அநாதியாகத் தொடர்கின்றது. சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. பிரளயம் ஏற்பட மாட்டாது. பாரதம் அநாதியான தேசமாகும். மனிதர்கள் அங்கே வசிக்கின்றார்கள், அது நீரில் மூழ்கிவிட மாட்டாது. அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எஞ்சியிருக்கும். எவ்வாறாயினும், ஏனைய தேசங்கள் எவையும் சத்திய, திரேதா யுகங்களில் இருக்க மாட்டாது. நீங்கள் தெய்வீகக் காட்சிகளில் கண்டவற்றை எல்லாம் நடைமுறை ரீதியில் காண்பீர்கள். நீங்கள் நடைமுறை ரீதியாகவே வைகுந்தத்திற்குச் சென்று, அங்கே ஆட்சி புரிவீர்கள். இப்பொழுது நீங்கள் அதற்காக முயற்சி செய்கின்றீர்கள். அவ்வாறிருந்தும், தந்தை கூறுகின்றார்: நினைவு செய்வதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் நினைவில் இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. பாபாவைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். அறியாமைப் பாதையிலும், அனைவரும் தங்கள் தந்தையை அதிக அன்புடன் புகழ்கின்றார்கள். “எங்களின் இன்ன இன்னார் இத்தகையவர், அவர் இன்ன இன்ன அந்தஸ்தைக் கொண்டிருந்தார்.” இப்பொழுது முழு உலகச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் அனைத்துச் சமயங்களினதும் ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். மேலே, ஆத்மாக்களின் வம்சாவளி விருட்சம் இருப்பதைப் போன்று, இங்கு, மனிதர்களின் வம்சாவளி விருட்சமும் உள்ளது. பிரம்மாவே முப்பாட்டனார். பின்னர், உங்கள் சந்ததி உள்ளது. உலகம் தொடர வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஒரு சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு, உங்கள் செயல்களும் உங்கள் வார்த்தைகளும் சமமாக இருக்க வேண்டும். முதலில், உங்கள் ஸ்திதியைப் பாருங்கள். பாபா, நான் நிச்சயமாக உங்களிடம் இருந்து எனது முழு ஆஸ்தியையும் கோருவேன். எனவே, அதற்கேற்ற நடத்தையும் தேவைப்படுகின்றது. இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான ஒரே கல்வியாகும். தந்தை மாத்திரமே இக்கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரமே அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள். ஏனைய தேசங்களில் இவ்விதமாக இருப்பதில்லை. நீங்கள் முதலில் தூய அரசர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர், நீங்கள் ஒளிக்கிரீடம் இல்லாத, தூய்மையற்ற அரசராகி, தூய அரசர்களுக்கு ஆலயங்களைக் கட்டி, அவர்களை வழிபடுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். ஒரு மாணவன் ஏன் தனது ஆசிரியரை மறக்கவேண்டும்? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் மாயையைக் குற்றஞ் சாட்டுகின்றீர்கள். ஓ! ஆனால், நீங்களே பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஒருவர் மாத்திரமே முதன்மை ஆசிரியர். ஏனைய அனைவரும் உதவி ஆசிரியர்களே. நீங்கள் தந்தையை மறந்தால், ஆசிரியரை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகின்றன. நீங்கள் ஒன்றை மறந்தால், மற்றையதை நினைவு செய்யுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருவதற்கு, உங்கள் செயல்களும், உங்கள் வார்த்தைகளும் சமமாக இருக்க வேண்டும். இதற்கு முயற்சி செய்யுங்கள். பற்றை வென்றவர் ஆகுங்கள்.2. நீங்கள் அமைதிக் கடலின் குழந்தைகள் என்பதையும், அதனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். உங்கள் வாயில் ஒரு மணியை இடுங்கள். கவனயீனமாக இருந்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவதுடன் இந்த ஒன்றுகூடலின் கோட்டையைப் பலமானது ஆக்குகின்ற ஒரு திருப்தி ஆத்மா ஆகுவீர்களாக.இந்த ஒன்றுகூடலின் சக்தியானது, விசேடமான சக்தியாகும். ஒரு வழிகாட்டலில் ஒன்றுபட்டிருக்கும் இந்த ஒன்றுகூடலின் கோட்டையை எவராலும் அசைக்க முடியாது. எவ்வாறாயினும், இதன் அடிப்படை, ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பதுடன் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பதும், உங்களுடன் திருப்தியாக இருந்து மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதும் ஆகும். உங்களால் எவரும் குழம்பக்கூடாது. எவரும் உங்களையும் குழப்பக்கூடாது. நீங்கள் எல்லோரும் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற ஒத்துழைப்பை வழங்குங்கள். அப்போது இந்த ஒன்றுகூடலின் கோட்டை பலம்வாய்ந்ததாக ஆகும். இந்த ஒன்றுகூடலின் சக்தியே, வெற்றியின் விசேடமான அடிப்படை ஆகும்.
சுலோகம்:
உங்களின் ஒவ்வொரு செயலும் மிகச்சரியாகவும் யுக்தியுக்தாகவும் இருக்கும்போது, நீங்கள் ஒரு தூய ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவும் சேவைக்காகவும் மிக நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். அதாவது, இப்பொழுதில் இருந்தே, அவர் இதைச் செய்வார் அல்லது அந்த முறையில் செய்வார், நிச்சயமாக எதையாவது செய்து எல்லோருக்கும் காட்டுவார் என்பவையே ஆகும். இத்தகைய மேன்மையான எண்ணங்களின் விதைகளை விதைப்பவர்கள், அதாவது, தொடர்ந்து விதைகளைப் பராமரித்து நடைமுறை வடிவில் கொண்டு வருபவர்களின் அந்த விதைகள் நிச்சயமாகப் பலன் தரும்.