09.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் மீது கருணை கொண்டிருங்கள். இக்கல்வியில் முன்னேறிப் பாய்ந்து செல்லுங்கள். எப்பாவச் செயலையும் செய்வதன் மூலம் உங்கள் பதிவேட்டை பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.
கேள்வி:
நீங்கள் இம்மேன்மையான கல்வியில் சித்தி அடைவதற்குப் பெறுகின்ற பிரதான கற்பித்தல்கள் எவை? இதை அடைவதற்கு நீங்கள் எவற்றில் விசேடமாகக் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
இக்கல்வியில் சித்தி அடைவதற்கு உங்கள் கண்கள் மிக மிகத் தூய்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் அக்கண்களே உங்களை ஏமாற்றுகின்றன. அக்கண்கள் குற்றம் உடையது ஆகுகின்றன. நீங்கள் ஒருவருடைய சரீரத்தைப் பார்க்கும் பொழுது, புலன்கள் விஷமத்தனம் செய்கின்றன. ஆகவே, ஒருபோதும் உங்கள் கண்கள் குற்றம் உடையதாக ஆகக் கூடாது. தூய்மை ஆகுவதற்கு, சகோதர, சகோதரிகளாக இருக்கின்ற உணர்வைப் பேணுங்கள். நினைவு யாத்திரையில் முழுக் கவனமும் செலுத்துங்கள்.பாடல்:
பொறுமை கொண்டிரு, ஓ மனமே! உங்களுடைய சந்தோஷ நாட்கள் வரவுள்ளன…ஓம் சாந்தி.
யார் இதைக் கூறியவர்? எல்லையற்ற தந்தை, இதை எல்லையற்ற குழந்தைகளுக்குக் கூறினார். ஒருவர் சுகயீனமாக இருக்கும் பொழுது, அவருக்கு நம்பிக்கை ஊட்டப்படுகின்றது: பொறுமையாக இருங்கள், உங்கள் வேதனையும் துன்பமும் அனைத்தும் அகன்றுவிடும். அவரைச் சந்தோஷம் ஆக்குவதற்கு, அவருக்கு இவ்விதமாக நம்பிக்கை ஊட்டப்படுகிறது. அவை எல்லைக்கு உட்பட்ட விடயங்களாகும். இங்கு, இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அவருக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள்! அவர்கள் அனைவரையும் வேதனையில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் அவர் விடுவிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். அதை மறக்க வேண்டாம்! அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்குத் தந்தை வந்துவிட்டார். அவரே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர் ஆவார். ஆகவே, அனைவரும் சீரழிவில் இருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும், குறிப்பாகப் பாரத மக்களும், பொதுவாக உலக மக்களும் இதில் உள்ளடங்குகிறார்கள் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் குறிப்பாகச் சந்தோஷ தாமத்துக்குச் செல்கிறீர்கள். ஏனைய அனைவரும் அமைதி தாமத்துக்குச் செல்கிறார்கள். உண்மையிலேயே, நீங்கள் சந்தோஷ தாமத்தில் இருந்தீர்கள் என்பதும், ஏனைய சமயத்தவர்கள் அமைதி தாமத்தில் இருந்தார்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளன. பாபா வந்து பாரதத்தைச் சந்தோஷ தாமம் ஆக்கினார். ஆகவே, அதனை இவ்வாறாக விளம்பரப்படுத்துங்கள். அசரீரியான சிவபாபா ஒவ்வொரு 5000 வருடங்களும் வருகிறார் என விளங்கப்படுத்துங்கள். அவரே அனைவருடைய தந்தையும் என்பதால் ஏனைய அனைவரும் சகோதர்கள் ஆவார்கள். சகோதரர்களே, தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோர முயற்சி செய்பவர்கள் ஆவர். தந்தையர்கள் இம்முயற்சியைச் செய்கிறார்கள் என்பதல்ல. அனைவரும் தந்தையராக இருப்பின், யாரிடமிருந்து அவர்கள் தங்கள் ஆஸ்தியைக் கோருவார்கள்? சகோதர்களிடம் இருந்தா? அது சாத்தியமல்ல. இவ்விடயங்கள் எவ்வளவு இலகுவானவை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். சத்தியயுகத்தில், ஒரு தேவ தர்மம் மாத்திரம் உள்ளது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்துக்குச் சென்றிருப்பார்கள். கூறப்பட்டுள்ளது: உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. ஆகவே, அதே வரலாறும், புவியியலுமே மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் இருக்கும். இரண்டுக்கும் மத்தியில் நிச்சயமாகச் சங்கமயுகம் இருக்கிறது. அதுவே மிக உயர்வான, அதிமேன்மையான, நன்மையளிக்கும் யுகம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது உங்கள் புத்தியின் பூட்டுத் திறக்கப்பட்டுள்ளது, ஆகவே இவை மிகவும் இலகுவான விடயங்கள் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புதிய உலகமும், பழைய உலகமும் உள்ளன. நிச்சயமாகப் பழைய விருட்சத்தில் பல இலைகளும், புதிய விருட்சத்தில் சில இலைகளுமே இருக்கும். அது சதோபிரதான் உலகம் எனவும், இது தமோபிரதான் உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்;கள் புத்தியின் பூட்டுக்கள் திறக்கின்றன. உங்களில் அனைவரும் தந்தையை மிகச்சரியாக நினைவு செய்யாததால், உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க இயலாமல் உள்ளது. தந்தை அனைவரையும் முயற்சி செய்யுமாறு தூண்டுகிறார், ஆனால் அது சிலருடைய பாக்கியத்தில் இல்லை. நாடகத்துக்கேற்ப, நன்கு கற்று, ஏனையோருக்கும் கற்பிப்பவர்களும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தந்தையின் உதவியாளர்களாக ஆகுபவர்களும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். ஒரு பாடசாலையில் உள்ள மாணவர்களால் தாங்கள் எத்தனை புள்ளிகளுடன் சித்தியடையப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தீவிரமாக உள்ளவர்கள் முழு விசையுடன் முயற்சி செய்கிறார்கள். எது நடந்தாலும், அவர்கள் சித்தி அடைவதற்கென விசேட தனிப்பட்ட கல்வியைக் கற்பிப்பதற்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இங்கும், நீங்கள் பெருமளவுக்கு முன்னேறிப் பாய்ந்து செல்ல வேண்டும். உங்கள் மீது நீங்கள் கருணை கொண்டிருங்கள்! உங்களுடைய தற்போதைய ஸ்திதியில் நீங்கள் உங்களுடைய சரீரத்தை விட்டு நீங்கினால், நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள் என நீங்கள் பாபாவிடம் வினவினால், பாபாவினால் உங்களுக்கு உடனடியாகவே கூற முடியும். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகும். லௌகீக மாணவர்களுக்குப் புரிந்து கொள்ள இயலுவதைப் போன்று, எல்லையற்ற மாணவர்களாகிய நீங்களும் இதைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளையும், பாவச் செயல்களையும் செய்வதைப் புரிந்து கொள்வதற்கு, உங்கள் புத்தியை நீங்கள் பயன்படுத்த முடியும். நீங்கள் உங்கள் பதிவேட்டைப் பழுதாக்கினால், உங்கள் பெறுபேறும் அதற்கேற்பவே இருக்கப் போகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். உண்மையில், நாடகத்துக்கேற்ப, அனைத்தும் பதிவுசெய்யப்படுகின்றன. உங்கள் பதிவேடு மிகவும் கீழ்த்தரமாக இருக்கும் பொழுது, உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். உங்களால் புரிந்து கொள்ள முடியாது விட்டால், அப்பொழுது பாபாவினால் அதனை உங்களுக்குக் காண்பிக்க முடியும். ஒரு பாடசாலையில் பதிவேடுகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலையைப் பற்றி உலகிலுள்ள எவரும் அறிய மாட்டார்கள். இப்பாடசாலை கீதா பாடசாலை என அழைக்கப்படுகிறது. ஒருபொழுதும் “வேத பாடசாலை” எனக் கூறப்படுவதில்லை. வேதங்களினதும், உபநிடதங்களினதும் அல்லது கிரந்தம் போன்றவற்றினதும் பாடசாலை (கற்கும் இடம்) என எவரும் கூறுவதில்லை. நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என்பதே, இப்பாடசாலையின் இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஒருவர் பெருமளவுக்கு வேதங்களையும், சமயநூல்களையும் கற்கும்பொழுது, அவர் ஒரு பட்டத்தைப் பெறுவதுடன், ஒரு வருமானத்தையும் சம்பாதிக்கிறார். சிலர் பெருமளவு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அது ஓர் அழியாத வருமானம் அல்ல, அது அவர்களுடன் செல்லப் போவதில்லை. இந்த உண்மையான வருமானமே உங்களுடன் செல்லும், ஏனைய அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் உலக அதிபதிகள் ஆக முடியும். சூரிய வம்சம் உள்ளது. ஆகவே, குழந்தைகள் நிச்சயமாகச் சிம்மாசனத்தைப் பெறுவார்கள். அந்தஸ்து மிக உயர்வானது. ஓர் இராஜ அந்தஸ்தைக் கோருவதற்கு உங்களால் முயற்சி செயய முடியுமென நீங்கள் ஒருபொழுதும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டீர்கள். இது இராஜயோகம் என அழைக்கப்படுகிறது. ஒரு சட்டநிபுணராக அல்லது வைத்தியராக ஆகுவதற்கு உரியதே ஏனைய யோகங்கள் ஆகும். அவர்கள், தங்கள் கல்வியையும், தங்கள் ஆசிரியரையும் நினைவு செய்கிறார்கள். இங்கும் அதே - இலகு நினைவே உள்ளது. நினைவுக்கே முயற்சி தேவையாகும். நீங்கள் உங்களை ஆத்ம உணர்வுள்ள ஆத்மாக்களாகக் கருத வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவும் சம்ஸ்காரங்களினால் நிரப்பப்பட்டுள்ளார். தாங்கள், சிவபாபாவை வழிபடுவது வழக்கம் என இங்கு வருகின்ற பலர் கூறுகிறார்கள். ஆனால், தாங்கள் ஏன் அவரை வழிபடுகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சிவன் மாத்திரமே, பாபா என அழைக்கப்படுகிறார். ஏனைய எவருமே பாபா என அழைக்கப்படுவதில்லை. அனுமன், கணேஷ் போன்றோர் வழிபடப்படுகிறார்கள். ஆனால் அஜ்மீரில் பிரம்மாவுக்கு ஓர் ஆலயம் இருந்தாலும், அவர் வழிபடப்படுவதில்லை. ஒரு சில பிராமணக் குருமார்கள் அவரை வழிபடக்கூடும். ஆனால், அவருக்குப் புகழ் இல்லை. ஸ்ரீகிருஷ்ணரினதும், இலக்ஷ்மி நாராயணனினதும் புகழ் அதிகளவுக்கு உள்ளது. அங்கு பிரம்மாவைப் பற்றிய குறிப்பே இல்லை, ஏனெனில், இந்நேரத்தில் பிரம்மா தூய்மை அற்றிருக்கிறார். தந்தை வந்து அவரைத் தத்தெடுக்கிறார். இது மிகவும் இலகுவானது. ஆகவே, தந்தை பல்வேறு விதங்களில் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சிவபாபா இதைக் கூறுகிறார் என்பதை உங்கள் புத்திகளில் வைத்திருங்கள். அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். ஞானக்கடலாகிய சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் திரிகாலதிரிசி ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுவிட்டீர்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தை அநாதியானவர் ஆவார். இதை உலகிலுள்ள எவரும் அறியார். அவர்கள் அனைவரும் அழைக்கிறார்கள்: பாபா, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள். வந்து தங்களுக்கு உலகின் வரலாற்றையும், புவியியலையும் கூறுமாறு அவர்கள் ஒருபொழுதும் அவரை அழைப்பதில்லை. தந்தையே வந்து உங்களுக்கு அதைக் கூறுகிறார். எவ்வாறு நீங்கள் தூய்மை அற்றதிலிருந்து தூய்மையானவராக மாறுவது எனவும், பின்னர் எவ்வாறு மீண்டும் தூய்மை அற்றவர் ஆகுகிறீர்கள் எனவும், எவ்வாறு வரலாறு மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது எனவும் அவர் உங்களுக்குக் கூறுகிறார். இதுவே 84 பிறவிகளின் சக்கரமாகும். நாங்கள் ஏன் தூய்மை அற்றவர்கள் ஆகினோம்? நாங்கள் தூய்மை ஆகும்பொழுது, நாங்கள் எங்கே செல்ல விரும்புகிறோம்? மக்கள் சந்நியாசிகளிடம் சென்று தாங்கள் எவ்வாறு மன அமைதியைக் கொண்டிருக்க முடியும் என வினவுகிறார்கள். தாங்கள் எவ்வாறு முழுமையாக விகாரம் அற்றவர்களாகவும் தூய்மை ஆனவர்களாகவும் ஆக முடியும் என அவர்கள் வினவுவதில்லை. அதைக் கேட்பதற்கு அவர்கள் மிகவும் வெட்கப்படுகிறார்கள். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் அனைவரும் பக்தர்கள், நான் மணவாளனாகிய கடவுள் ஆவேன். நீங்கள் மணவாட்டிகள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் என்னை நினைவு செய்கிறீர்கள். பயணியாகிய நான், மிகவும் அழகானவர் ஆவேன். நான் உலகின் மனிதர்கள் அனைவரையும் அழகாக்குகிறேன். சுவர்க்கம் உலக அதிசயம் என அழைக்கப்படுகிறது. இங்கு, அவர்கள் ஏழு அதிசயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அங்கு, சுவர்க்கம் என்ற ஒரேயொரு உலக அதிசயம் மாத்திரமே உள்ளது. தந்தையும் ஒரேயொருவரே, சுவர்க்கமும் ஒன்று மாத்திரமே ஆகும். மனிதர்கள் அனைவரும் சுவர்க்கத்தை நினைவு செய்கிறார்கள். இங்கு, அதிசயம் எதுவும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமை உள்ளது, ஏனெனில் இப்பொழுது உங்கள் சந்தோஷ நாட்கள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதையும், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இன்னமும் இராச்சியம் ஸ்தாபிக்கப்படவில்லை. ஆம், தொடர்ந்தும் பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். எவ்வாறு சேவையை அதிகரிக்க முடியும் எனவும், எவ்வாறு அனைவரும் செய்தியைப் பெற முடியும் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மத்தியில் கலந்துரையாட வேண்டும். தந்தை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுகிறார். எங்களுக்கு இராச்சியத் திலகத்துக்கான உரிமையைக் கொடுத்து, ஏனைய அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுகின்ற, அத்தகையதொரு தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். நாடகத்தில் இயற்கை அனர்த்தங்களும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவை இன்றி, உலகம் அழிக்கப்பட முடியாது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்கள் பரீட்சை மிகவும் அண்மித்துள்ளது. நீங்கள் மரண பூமியிலிருந்து அமரத்துவ தாமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். நீங்கள் அதிகளவுக்கு நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பிக்கும் பொழுது, உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள், உங்களுடைய சொந்தப் பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். நீங்கள், அனைவருக்கும் நன்மையளிக்க முயற்சி செய்ய வேண்டும். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது! இதுவே நியதியாகும். முதலில், உங்கள் நண்பர்களும், உறவினர்களும் உங்கள் சமூகத்தினரும் மாத்திரமே வருவார்கள், பின்னர் பொதுமக்கள் வருவார்கள். ஆரம்பத்தில் அது அவ்வாறு நடைபெற்றது. படிப்படியான விரிவாக்கம் இருந்தது, பின்னர் குழந்தைகள் வசிப்பதற்காக, ஓம் நிவாஸ் என அழைக்கப்பட்ட, பெரிய வீடு கட்டப்பட்டது. குழந்தைகள் வந்து அங்கு கற்க ஆரம்பித்தார்கள். அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. அவை அனைத்தும் மீண்டும் மீண்டும் நடைபெறும்; எவரும் அதை மாற்ற முடியாது. இக்கல்வி மிகவும் மேன்மையானது! நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். கண்களே உங்களை ஏமாற்றுகின்ற பிரதான புலனங்கங்கள் ஆகும். கண்கள் குற்றம் உடையதாகும் பொழுது, சரீரத்தின் பௌதீகப் புலன்கள் விஷமத்தனத்தை விளைவிக்கின்றன. ஒருவர், ஓர் அழகான பெண்ணைப் பார்க்கும் பொழுது, அவர் அவரில் சிக்கிக் கொள்கிறார். உலகில், அவ்வாறான பலர் உள்ளார்கள். குருமார்களும் சிலசமயங்களில் குற்றப்பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். இங்கு, தந்தை கூறுகிறார்: எவ்வாறாயினும், குற்றப்பார்வை போன்ற எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் சகோதர, சகோதரிகளாக வாழும்பொழுது மாத்திரமே உங்களால் தூய்மையாக இருக்க இயலும். இதைப் பற்றி எதையும் மக்கள் அறியார். ஆகவே, அவர்கள் உங்களைக் கேலி செய்கிறார்கள். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகிறார்: இந்த ஞானம் மறைந்து விடுகிறது, பின்னர் இச்சமயநூல்கள், துவாபரயுகத்தில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: அல்பாவை நினைவுசெய்வதே பிரதான விடயம். அதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றியதன் பின்னர், இப்பொழுது இங்கு நீங்கள் வந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகிறீர்கள். சின்னஞ் சிறியதோர் ஆத்மாவில் எவ்வாறு ஓர் அழியாத 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது என்பது ஓர் அற்புதமே ஆகும். தந்தை மாத்திரமே வந்து, அத்தகைய உலக அற்புதங்களைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறார். சிலருக்கு 84 பிறவிகளின் பாகங்கள் உள்ளன, ஏனையோருக்கு 50 தொடக்கம் 60 பிறவிகள் வரையான பாகங்களே உள்ளன. பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஒரு பாகத்தைப் பெற்றுள்ளார். நாடகத்துக்கேற்ப, அது ஓர் அநாதியான, அழியாத நாடகமாகும். அது எப்பொழுது ஆரம்பித்தது அல்லது அது எப்பொழுது முடிவடையும் என்பதை எவராலும் கூற முடியாது. ஏனெனில் அது ஓர் அநாதியான, அழியாத நாடகமாகும். இவ்விடயங்களை எவரும் அறிய மாட்டார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பரீட்சைக்கான காலம் மிகவும் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே, உங்களுக்கும், ஏனைய அனைவருக்கும் நன்மையைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். கற்று ஏனையோருக்கும் கற்பியுங்கள். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது.2. ஆத்ம உணர்வு உடையவராகி, உங்களுக்கென ஓர் உண்மையான, அழியாத வருமானத்தைச் சேகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் சொந்தப் பதிவேட்டை வைத்திருங்கள். ஒருபொழுதுமே உங்கள் பதிவேட்டைப் பழுதாக்கும் எப்பாவச் செயல்களையும் செய்ய வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களுக்கு ஊக்கம், உற்சாகம் என்ற ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சக்தியூட்டுகின்ற உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.ஒரு சேவையாளர் என்றால் மற்றவர்களை ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் ஒத்துழைப்பால் சக்தியூட்டுபவர் என்று அர்த்தம். இப்போது, சிறிதளவு நேரமே உள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையிலான படைப்பு இங்கே வரவுள்ளது. பலர் ஏற்கனவே வந்துவிட்டனர் என்று நினைத்து சந்தோஷப்படாதீர்கள். இப்போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. அதனால் அதனால் நீங்கள் பெற்ற பராமரிப்பின் பிரதிபலனை இப்போது நீங்கள் கொடுக்க வேண்டும். வருகின்ற பலவீனமான ஆத்மாக்களுடன் ஒத்துழைத்து, அவர்களைச் சக்திசாலிகளாகவும் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாகவும் ஆக்குங்கள். அப்போது நீங்கள் உண்மையான சேவையாளர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
ஆத்மாவை நீங்கள் விரும்பும் போது, விரும்பும் இடத்தில், விரும்பியவாறு ஸ்திரமாக்குங்கள். இதுவே ஆன்மீக அப்பியாசம் ஆகும்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
உங்களால் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லக்கூடியதாக இருப்பதே சக்திவாய்ந்த மனதைக் கொண்டிருப்பதன் அடையாளம் ஆகும். உங்களின் மனம் எப்படிப் பறப்பது என்பதைக் கற்று, அந்தப் பயிற்சியை வளர்த்துக் கொள்ளும்போது, உங்களால் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியும். ஒரு கணம், நீங்கள் பௌதீக உலகில் இருக்க வேண்டும். அடுத்த விநாடி, நீங்கள் பரந்தாமத்தில் இருக்க வேண்டும். இப்போது இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள்.