09.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, பௌதீக சக்தியால் உங்களால் உலக இராச்சியத்தைப் பெற முடியாது. இதற்கு உங்களுக்கு யோக சக்தி தேவை. இதுவும் ஒரு விதிமுறையாகும்.

பாடல்:
தன்னைப் பற்றிய எவ்விடயத்தையிட்டு சிவபாபா அதிசயிக்கிறார்?

பதில்:
பாபா கூறுகிறார்: என்ன ஓர் அற்புதம் என்று பாருங்கள்! நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற போதிலும் எவரிடமும் நான் கற்கவில்லை. எவருமே எனக்குத் தந்தையாக இருப்பதில்லை. எவருமே எனக்கு ஆசிரியராகவும் குருவாகவும் இல்லை. நான் உலகச் சக்கரத்தில் மறுபிறவி எடுப்பதில்லை. எனினும், உங்கள் அனைத்துப் பிறவிகள் பற்றியும் நான் உங்களுக்குக் கூறுகிறேன். நான் 84 பிறவிச் சக்கரத்தில் பிரவேசிப்பதில்லை. இருப்பினும், சக்கரத்தைப் பற்றிய மிகச்சரியான ஞானத்தைக் கொடுக்கிறேன்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகிறார், அதாவது, நீங்கள் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்து கொள்கிறீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. இப்போது நீங்கள் இதைத் தந்தையிடமிருந்து அறிந்து கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் பிரவேசிக்கிறீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்கிறேன். நான் சுயதரிசனச் சக்கரதாரி. ஆனால், நான் 84 பிறவிச் சக்கரத்திற்குள் நடைமுறையில் வருவதில்லை. இதிலிருந்து தந்தையாகிய சிவனிடம் சகல ஞானமும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இப்போது நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகிறீர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பாபா இவ்வாறு ஆகுவதில்லை. எனவே, எவ்வாறு அவர் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிறார்? நாங்களே அனுபவசாலிகளாக ஆகுபவர்கள். எங்களுக்குக் கூறக்கூடியதாக இருக்கும் வகையில் பாபா எங்கிருந்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிறார்? அவருக்கு நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் 84 பிறவிகளின் சக்கரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. எனவே, நான் எங்கிருந்து இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறேன்? ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும்போது, தான் எதைக் கற்பிக்கிறாரோ அதை அவர் நிச்சயமாக இன்னொருவரிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். சிவபாபா எவ்வாறு கற்றார்? தானே 84 பிறவிகள் எடுக்காதபோது, எவ்வாறு அவர் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார்? தந்தை விதை என்பதாலேயே அவர் அறிவார். அவர் 84 பிறவிகளின் சக்கரத்தில் பிரவேசிப்பதில்லை. ஆனால், அவரால் உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்த முடியும். இதுவும் ஓர் அற்புதமே. தந்தை சமயநூல்கள் எதனையும் கற்றிருக்கிறார் என்பதல்ல. நாடகத்திற்கேற்ப இந்த ஞானம் அவருக்குள்ளே பதிக்கப்பட்டிருக்கிறது என்பதால், அதை அவர் உங்களுக்கு எடுத்துரைக்கிறார். அதனால், அவர் ஓர் அற்புதமான ஆசிரியராவார். நீங்கள் அதிசயிக்க வேண்டும். இதனாலேயே அவருக்கு ஈஸ்வரன், பிரபு, சகல இரகசியங்களையும் அறிந்தவர் போன்ற மகத்துவம் வாய்ந்த பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. கடவுள் எவ்வாறு சகல ஞானத்தாலும் நிறைந்திருக்கிறார் என்பதையிட்டு நீங்கள் அதிசயிக்கிறீர்கள். உங்களுக்கு விளங்கப்படுத்தக்கூடிய வகையில் அவர் எங்கிருந்து அதைப் பெற்றுக் கொண்டார்? அவருக்குப் பிறப்பு கொடுத்து அவருக்கு விளங்கப்படுத்திய தந்தையொருவர் அவருக்கு இல்லை. நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அவர் மாத்திரமே உங்கள் தந்தையாகிய விதையாவார். அவர் இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: நான் உங்களைப் போன்று 84 பிறவிகளை எடுப்பதில்லை. எனவே, நிச்சயமாக இக்கேள்வி தோன்றும்: பாபா, நீங்கள் எவ்வாறு இவை அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள்? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, அநாதியான நாடகத்திற்கேற்ப உங்களுக்கு நான் கற்பிக்கும் இந்த ஞானம் ஆரம்பத்திலிருந்தே என்னிடம் இருக்கிறது. இதனாலேயே நான் அதிமேலானவராகிய, கடவுள் என்று அழைக்கப்படுகிறேன். அவரே சக்கரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஆனால், அவரிடம் முழு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் அனைத்தும் இருக்கிறது. அதனால் குழந்தைகளாகிய நீங்கள் அளவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். அவர் எங்கிருந்து 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்? தந்தையிடமிருந்தே அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். தந்தையிடமே ஆதி ஞானம் இருக்கிறது. அவர் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். அவர் எவரிடமும் கற்கவில்லை. இருப்பினும் அவரிடம் ஆதி ஞானம் இருப்பதால், அவர் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். இது ஓர் அற்புதமே. இதனாலேயே இக்கல்வி அதிமேலான கல்வி என்று நினைவுகூரப்படுகிறது. குழந்தைகள் தந்தையையிட்டு அதிசயிக்கிறார்கள். அவர் ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுவது எதனால்? இதுவே புரிந்துகொள்ளப்பட வேண்டிய முதல் விடயமாகும். அதனையடுத்து, இரண்டாவது விடயம் எது? இந்தப் படத்தை நீங்கள் மக்களிடம் காட்டும்போது, அவர்கள் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்கள்: ‘இந்த பிரம்மாவுக்குள்ளே பிரம்மா என்னும் ஆத்மா இருக்க வேண்டும். பின்பு, அவர் நாராயணர் ஆகும்போதும், அவருக்குள்ளே அவரது ஆத்மாவும் இருப்பார். எனவே, அச்சமயத்தில் இரு ஆத்மாக்கள் இருக்கிறார்கள்: ஒருவர் பிரம்மா, இன்னொருவர் நாராயணர்.” இருப்பினும், அதைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தீர்களானால், அங்கே இரு வேறுபட்ட ஆத்மாக்கள் இல்லை. ஒரேயொரு ஆத்மாவே இருக்கிறார். அது ஒரு தேவரின் மாதிரியாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பிரம்மாவே விஷ்ணு ஆகுகிறார். அதாவது, இவர் நாராயணர் ஆகுகிறார். இவை ஆழமான விடயங்கள் எனப்படுகின்றன. தந்தையைத் தவிர, வேறு யாராலுமே கற்பிக்கப்பட முடியாத மிக ஆழ்ந்த ஞானத்தைத் தந்தை கொடுக்கிறார். அதனால், பிரம்மாவும், விஷ்ணுவும் இரு வேறுபட்ட ஆத்மாக்கள் அல்லர். எனவே, சரஸ்வதியும், இலக்ஷ்மியும் இரு வேறுபட்ட ஆத்மாக்களா அல்லது ஒருவரா? ஒரேயொரு ஆத்மாவே, ஆனால் இரு சரீரங்கள். இந்த சரஸ்வதி பின்னர் இலக்ஷ்மி ஆகுகிறார். அதனால், ஒரேயொரு ஆத்மாவே இருக்கிறார். அதே ஆத்மாவே 84 பிறவிகள் எடுக்கிறார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பிராமணர்களே தேவர்கள் ஆகுபவர்கள், பின்னர் தேவர்கள் சத்திரியர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்கள் சரீரங்களை நீக்கி, இன்னொன்றைப் பெறுகிறார்கள். அதே ஆத்மாவே என்கின்ற போதிலும், பிராமணர்கள் எவ்வாறு தேவர்களாகுகிறார்கள் என்று காட்டுவதற்காகவே இந்த மாதிரி காணப்படுகிறது. ‘ஹம் ஸோ’ என்பதன் அர்த்தம் மிகவும் நல்லது. இவை ஆழமான விடயங்கள் எனப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் முதல், நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சகல ஆத்மாக்களும் ஆரம்பத்தில் பரந்தாமத்தில் வசிபபவர்கள். இங்கே அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக வருகிறார்கள். இது ஒரு நாடகம். தந்தை இங்கிருந்து, இந்த நாடகத்தின் செய்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். ஆதியிலேயே தந்தைக்கு இது தெரியும். எவரும் அவருக்குக் கற்பிக்கவில்லை. அவருக்கே இந்த 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றித் தெரியும். எனவே, இப்போது அவர் உங்களுக்கு இதைக் கூறுகிறார். பின்னர், நீங்கள் மறந்து விடுகிறீர்கள். எனவே, அதைப் பற்றிய சமயநூல் எவ்வாறு உருவாக்கப்பட முடியும்? தந்தை சமயநூல் எதனையும் கற்றதில்லை. அவர் வந்து புதிய விடயங்களைப் பற்றிப் பேசுகிறார். அரைச் சக்கர காலமாகப் பக்தி மார்க்கம் இருக்கிறது. இந்த விடயமும் சமயநூல்களில் இல்லை. நாடகத்திற்கேற்ப அந்தச் சமயநூல்கள் பக்தி மார்க்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நாடகத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் இறுதி வரையுமான பெருமளவு ஞானம் உங்கள் புத்தியில் இருக்கிறது. சிவபாபா நிச்சயமாக ஒரு மனித சரீரத்தின் ஆதாரத்தைப் பெற வேண்டியுள்ளது. அவர் இங்கே பிரம்மாவின் சரீரத்தில் இருந்து, உங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். கட்டுக்கதைகளைக் கூறுவதன் மூலம் மனிதர்கள் சக்கரத்தின் காலத்தை மிக நீண்டதாக ஆக்கியிருக்கிறார்கள். புதிய உலகம் பழையதாகுகின்றது. புதிய உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. பழைய உலகம் நரகம் எனப்படுகிறது. ஒரேயொரு உலகமே இருக்கிறது. தேவர்கள் எல்லையற்ற சந்தோஷம் இருக்கின்ற, புதிய உலகில் வாழ்கிறார்கள். உலகம் முழுவதுமே அந்த நேரத்தில் புதியதாக இருக்கிறது. இப்போது அது பழைய உலகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயரே கலியுக உலகம் என்பதாகும். இது, பழைய டெல்லி, புது டெல்லி என்று கூறுவதைப் போன்றதாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, புதிய உலகில் புது டெல்லி இருக்கும். அவர்கள் இந்தப் பழைய உலகில் அதனைப் புது டெல்லி என்று அழைக்கிறார்கள். இதை எவ்வாறு புதியது என்று அழைக்க முடியும்? இலக்ஷ்மியும் நாராயணரும் ஆட்சி புரிகின்ற, புதுடெல்லி புதிய உலகில் இருக்கும் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அது சத்தியயுகம் என்று அழைக்கப்படும். நீங்கள் பாரதம் முழுவதையும் ஆட்சிபுரிவீர்கள். உங்கள் சிம்மாசனம் யமுனா நதிக்கரையில் அமைந்திருக்கும். இறுதியில், இராவண இராச்சியத்துச் சிம்மாசனமும் அங்கே தான் இருக்கும். இராமரது இராச்சியத்தின் சிம்மாசனமும் அங்கே தான் இருக்கும். ஆனால் அது டெல்லி என்று அழைக்கப்படாது. அது பரிஸ்தான் (தேவதைகளின் பூமி) என்றே அழைக்கப்படுகிறது. அதன்பின் எந்த ராஜா ஆட்சிபுரிகிறாரோ, அதற்கேற்ப இராச்சியத்திற்கு ஒரு பெயர் சூட்டப்படுகிறது. இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் பழைய உலகில் இருக்கிறீர்கள். புதிய உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் தந்தையே ஆவார். அதிமேலான தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காக இங்கே கீழே வந்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்பழைய, கலியுக உலகம் முடிவடையப் போகின்றது. தந்தை உங்களுக்கு இந்தக் கணக்கைக் கொடுத்துள்ளார். நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இவர் எந்தப் பிரம்மா என்பது மனிதர்களுக்குத் தெரியாது. பிரஜாபிதாவாகிய பிரம்மாவைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். நீங்களே பிரம்மாவின் மக்கள். இதனாலேயே உங்களை நீங்கள் பிரம்மாகுமார்கள், குமாரிகள் என்று அழைக்கிறீர்கள். உண்மையில், அசரீரியான ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் சிவனின் குலத்திற்குரியவர்கள். இப் பௌதீக உலகத்தில், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். இதை விட வேறெந்த உறவுமுறையும் இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய கலியுக உறவுமுறைகள் அனைத்தையும் மறக்கின்றீர்கள். காரணம், அவற்றில் பந்தனம் உள்ளது. நீங்கள் புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள். பிராமணர்களுக்கு ஓர் உச்சிக்குடுமி இருக்கிறது. உச்சிக்குடுமியானது பிராமணர்களாகிய உங்களது அடையாளமாகும். இது பிராமணர்களாகிய உங்கள் குலமாகும். அந்தப் பிராமணர்கள் கலியுகத்துக்கு உரியவர்கள். பிராமணர்கள் பொதுவாகவே வழிகாட்டிகள். ஒருவகை பிராமணர்கள் படைக்கப்படும் உணவை ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றைய வகை பிராமணர்கள் கீதையை எடுத்துரைக்கிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் இப்போது இந்தக் கீதையை எடுத்துரைக்கிறீர்கள். அவர்களும் கீதையை எடுத்துரைக்கிறார்கள். நீங்களும் கீதையை எடுத்துரைக்கிறீர்கள். ஆனால், எவ்வளவு வேறுபாடு காணப்படுகிறது என்று பாருங்கள்! கிருஷ்ணரைக் கடவுள் என்று அழைக்க முடியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். கிருஷ்ணர் ஒரு தேவர் என அழைக்கப்படுகிறார். அவருக்குத் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றன. அவரைப் பௌதீகமான கண்களால் பார்க்க முடியும். சிவனுக்கென்று ஒரு சரீரம் இல்லாதிருப்பதை நீங்கள் சிவன் ஆலயத்தில் காணலாம். அவர் பரமாத்மா. அதாவது, அவர் கடவுள் ஆவார். ஈஸ்வரன், பகவான், பிரபு போன்ற பெயர்களில் எந்த அர்த்தமும் இல்லை. கடவுள் பரமாத்மா. நீங்களோ பரம்பொருள் அல்லர். சற்றே பாருங்கள்! ஆத்மாக்களாகிய உங்களுக்கும் அந்த ஆத்மாவுக்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு காணப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது பரமாத்மாவிடம் கற்கின்றீர்கள். அவர் எவரிடமும் எதையும் கற்றதில்லை. அவர் தந்தையாவார். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தந்தை என்று அழைக்கிறீர்கள். அவரை நீங்கள் ஆசிரியர் என்றும், குரு என்றும் அழைக்கிறீர்கள். அவர் ஒரேயொருவரே. வேறெந்த ஆத்மாவும் தந்தை, ஆசிரியர், குரு ஆகமுடியாது. பரம்பொருள் என்று அழைக்கப்படுகின்ற, பரமாத்மா ஒரேயொருவரே இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் முதலில் ஒரு தந்தையும், அதன்பின்னர் ஓர் ஆசிரியரும் இறுதியில் ஒரு குருவும் தேவைப்படுகிறார்கள். தந்தையும் கூறுகிறார்: நான் உங்கள் தந்தையாகி, அதன்பின்னர் உங்கள் ஆசிரியராகி, அதன்பின்னர் சற்;கதி அருள்கின்ற, சற்குரு ஆகுகிறேன். குருமார்கள் பலர் இருக்கின்றபோதிலும், சற்கதி அருளக்கூடிய குரு ஒரேயொருவரே இருக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கிறேன். நீங்கள் சத்திய யுகத்தில் இருக்கும்போது, ஏனைய அனைவரும் பரந்தாமம் என்று அழைக்கப்படுகின்ற, அமைதி தாமத்தில் இருக்கிறார்கள். சத்திய யுகத்தில், ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. அந்த நேரத்தில் வேறெந்த மதமும் இருக்கவில்லை. ஏனெனில், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்திற்குத் திரும்பிச் சென்று விடுவார்கள். சத்திய யுகம் சற்கதி என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பாகத்தை நடித்தவாறே, நீங்கள் கீழ்நிலையை அடைகின்றீர்கள். நீங்களே சற்கதியில் இருந்த பின்னர், கீழ்நிலை அடைகின்ற ஆத்மாக்கள். நீஙகளே முழுமையாக 84 பிறவிகளையும் எடுப்பவர்கள். அந்த நேரத்தில், அரசனும் அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருக்கிறார்கள். 900,000 முதலில் வருவார்கள். 900,000 எண்ணிக்கையானோர் 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதே கணிப்பீடாகும். அதன்பின், மற்றவர்கள் தொடர்ந்து வருவார்கள். அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை என்று தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வருபவர்களே 84 பிறவிகள் எடுக்கிறார்கள். அதன்பின்னர் வருபவர்கள் அதை விடக் குறைந்தளவு பிறவிகளே எடுக்கிறார்கள். ஆகக்கூடியது 84 பிறவிகள். வேறெந்த மனிதர்களுக்கும் இந்த விடயங்கள் தெரியாது. தந்தை மாத்திரமே இங்கிருந்து, இந்த விடயங்களை விளங்கப்படுத்துகிறார். “கடவுள் பேசுகிறார்” என்று கீதையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆதி சனாதன தேவிதேவிதா தர்மத்தை கிருஷ்ணர் ஸ்தாபிக்கவில்லை என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள். தந்தையே அதை ஸ்தாபித்தவர். கிருஷ்ணரது ஆத்மா தனது 84 பிறவிகளின் இறுதியில் இந்த ஞானத்தைச் செவிமடுத்தார். அதனால், மீண்டும் அவர் முதலாமவர் ஆகினார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்க வேண்டும். நீங்கள் இறைவனின் மாணவர்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களை இராஜாக்களுக்கு இராஜாக்கள் ஆக்குகிறேன். இது பழைய உலகம். புதிய உலகம் என்றால் சத்திய யுகமாகும். இப்போது கலியுகமாகும். தந்தை வந்து, கலியுகத்துத் தூய்மையற்ற மனிதர்களைச் சத்தியயுகத்து தூய தேவர்களாக மாற்றுகிறார். இதனாலேயே கலியுகத்து மனிதர்கள் அழைக்கிறார்கள்: பாபா, வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள். எங்களைக் கலியுகத்துத் தூய்மையற்ற மனிதர்களிலிருந்து தூய சத்தியயுகத்துத் தேவர்கள் ஆக்குங்கள். வேறுபாடு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்! கலியுகத்தில் எல்லையற்ற துன்பமே இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தால், அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். நாளைக்கே அக்குழந்தை மரணித்தால், சந்தோஷத்தை இழக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். இது துன்ப உலகமாகும். தந்தை இப்போது சந்தோஷ உலகத்தை ஸ்தாபிக்கிறார். அவர் உங்களைச் சுவர்க்க தேவர்களாக்குகிறார். இப்போது நீங்கள் அதிமங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அதிமேலான ஆண்களாகவும் பெண்களாகவும் ஆகுகிறீர்கள். இலக்ஷ்மியாகவோ அல்லது நாராயணராகவோ ஆகுவதற்காகவே இங்கே நீங்கள் வருகிறீர்கள். மாணவர்கள் தங்கள் ஆசிரியருடனேயே யோகம் செய்வதற்குக் காரணம், அவரிடம் கற்பதால் தாங்கள் இன்னாராக வருவோம் என்று அவர்கள் புரிந்துகொள்வதனால் ஆகும்;. இங்கே உங்களைத் தேவர்களாக்கும் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனுடன் நீங்கள் யோகம் செய்கின்றீர்கள். அவர் கூறுகிறார்: சாலிகிராம் குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவர் தானே கீதையைப் கற்றிருக்காதபோதிலும், உண்மையான கீதையை அவரே உங்களுக்கு எடுத்துரைக்கிறார். அவர் கூறுகிறார்: நான் எவரது குழந்தையும் அல்லன். நான் எவரிடமும் கற்றதும் இல்லை. எனக்கென்று ஒரு குரு இ;ல்லை. ஆனாலும், நான் குழந்தைகளாகிய உங்கள் தந்தை, ஆசிரியர், குரு ஆகுகிறேன். அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் உலகம் முழுவதையும் அதன் ஆரம்பம் முதல், மத்தியினூடாக, இறுதி வரை அறிந்திருக்கிறார். அவரே வந்து, அவை அனைத்தையும் விளங்கப்படுத்தும் வரை, உங்களால் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்ள முடியாது. இந்தச் சக்கரத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். இந்த பாபா உங்களுக்குக் கற்பிக்கவில்லை. சிவபாபா இவருக்குள் பிரவேசித்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். இது ஒரு புதிய விடயம். இது சங்கம யுகத்தில் மாத்திரமே இடம்பெறுகிறது. இந்தப் பழைய உலகம் முடிவடையும். சிலரது செல்வம் நிலத்தின் கீழ் புதைந்திருக்கும். சிலரது செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு விடும். பலருக்கும் நன்மை செய்து, மீண்டும் ஒருமுறை அவர்களைத் தேவர்கள் ஆக்குவதற்காக பாடசாலைகளையும், அருங்காட்சியகங்களையும் திறந்து வைக்குமாறு பாபா குழந்தைகளுக்குக் கூறுகிறார். பலராலும் அங்கே சென்று, அவர்களுடைய சந்தோஷ ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்போது இது இராவண இராச்சியம். இராம இராச்சியத்தில் சந்தோஷம் இருந்தது. இராவண இராச்சியத்தில் துன்பம் இருக்கிறது. ஏனெனில், அனைவரும் விகாரமானவர்களாகி விட்டார்கள். அது விகாரமற்ற உலகம். இலக்ஷ்மி, நாராயணருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அங்கே யோக சக்தி இருக்கிறது. தந்தை உங்களுக்கு யோக சக்தியைக் கற்பிக்கிறார். நீங்கள் யோக சக்தியால் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். பௌதீக சக்தியால் எவருமே உலக அதிபதிகளாக முடியாது. நியதி அதற்கு இடம் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய யோக சக்தியால் உங்கள் முழு உலக இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இது அத்தகைய ஒரு மிக மேன்மையான கல்வி! தந்தை கூறுகிறார்: எல்லாவற்றுக்கும் முதல், தூய்மையாக இருப்பதற்குச் சத்தியம் செய்து கொள்ளுங்கள். தூய்மையாகுவதன் மூலம் நீங்கள் தூய உலகின் அதிபதி ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்போது பந்தனங்களாகியிருக்கின்ற, உங்கள் கலியுக உறவுமுறைகள் அனைத்தையும் மறந்து, உங்களைச் சங்கம யுகத்துப் பிராமணராகக் கருதுங்கள். உண்மையான கீதையைக் கேட்டு, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள்.

2. இப் பழைய உலகம் முடிவடையப் போகின்றது. அதனால், உங்களிடம் இருக்கின்ற அனைத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். பலருக்கும் நன்மை செய்வதற்கும், சாதாரண மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்கும் பாடசாலைகளையும் அருங்காட்சியகங்களையும் திறந்து வையுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் கட்டளைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், சகித்துக் கொள்பவராகி, ஒவ்வொரு சூழ்நிலையையும் அன்புடன் சகித்துக் கொள்வீர்களாக.

சில குழந்தைகள், தாம் சரியாக இருந்தாலும், தாமே எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் மரணிக்க வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த முறையில் சகித்துக் கொள்ளுதல் அல்லது மரணித்தல் என்றால், தாரணையின் பாடத்தில் ஓரிலக்கத்தைக் கோருதல் என்று அர்த்தம். ஆகவே, எதையாவது சகித்துக் கொள்ள வேண்டியுள்ளதே எனப் பயப்படாதீர்கள். சில குழந்தைகள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால், கட்டாயத்தின் பேரில் எதையும் சகித்துக் கொள்வதற்கும், அன்புடன் எதையும் சகித்துக் கொள்வதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. நீங்கள் சூழ்நிலையால் அதைச் சகித்துக் கொள்ளவில்லை. ஆனால், தந்தையே சகித்துக் கொள்ளும்படி கட்டளை வழங்கியுள்ளார். எனவே, அதனை அன்புடன் எதையும் சகித்துக் கொள்வதற்கான ஒரு கட்டளை எனக் கருதுவதென்றால், உங்களை மாற்றிக் கொள்ளுதல் என்று அர்த்தம். அதற்கான நீங்கள் மதிப்பெண்களையும் பெறுகிறீர்கள்.

சுலோகம்:
எப்போதும் சந்தோஷப் போஷாக்கை உண்பவர்கள், சதா ஆரோக்கியமாக இருப்பார்கள்.