09.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்மாக்கள் அனைவருமே எல்லையற்ற தந்தையுடன் கற்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் அனைவரும் நிச்சயமாக அவருடன் திரும்பிச் செல்வார்கள்.
கேள்வி:
பூகோள ஆட்சியாளர்களாக வரவிருக்கும் குழந்தைகள், எதற்கு பெருமதிப்பு அளிக்கிறார்கள்?பதில்:
கல்விக்கே அவர்கள் பெருமதிப்பு அளிக்கிறார்கள். அவர்கள் எங்கு அமர்ந்திருந்தாலும், நிச்சயமாகக் கற்பார்கள். அவர்களது நண்பர்கள், உறவினர்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, நினைவில் இருப்பதை பயிற்சி செய்து, “தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள்” என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்கிறார்கள். இந்த மேன்மையான வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றும் குழந்தைகள் மாத்திரமே, பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவார்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் அனைவரும் உட்பட, உயிர்வாழ்பவர்கள் அனைவரையும் தந்தை நிச்சயமாக திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் காரிருள் இப்பொழுது முடிவடைகிறது. பழைய உலகம் முடிவடையும் போது, புதிய உலக ஸ்தாபனை இடம்பெறுகிறது. உலகம் நிலைத்தே இருக்கும், ஆனால் அது பழையதிலிருந்து புதியதாக மாற்றம் அடைகிறது. சத்தியயுக ஆரம்பத்தில், உண்மையாகவே ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. அந்த சூரிய, சந்திர வம்சங்கள் இப்போது இல்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் மறுபிறவிகள் எடுத்த பின்னர் தங்களது 84 பிறவிகளையும் நிறைவு செய்துள்ளார்கள். தற்போது, நடிகர்கள் அனைவரும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். அவர்கள் புதிய உலகமாகிய, இராம இராச்சியத்தை அதாவது புதிய டெல்கியை விரும்புகிறார்கள். இன்ன இன்ன புதிய விளையாட்டுப் பொருள் வேண்டும் என சிறு குழந்தைகள் கேட்பது போலவே, இங்கும் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, புதிய உலகிற்காக எங்களுக்குப் புதிய ஆடைகள் வேண்டும். தீபாவளியன்று மக்கள் புதிய ஆடைகள் அணிவதுண்டு. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியன்று புத்தாடைகள் அணிவதென்ற கேள்வியே இல்லை. தீபாவளியன்று, புத்தாடைகள் அணிவதற்காக, மக்கள் விசேடமாக, ஆடைகள் வாங்குவதற்கென அதிகளவு செலவழிப்பதுண்டு. தீபாவளியன்று அவர்கள் விளக்குகளை ஏற்றுகிறார்கள். உங்களது ஒளி இப்போது ஏற்றப்பட்டுள்ளதால், நீங்கள் பிறரது ஒளிகளை ஏற்ற வேண்டும். அவர்களுடையது பக்திமார்க்கத்தின் தீபாவளி, உங்;களுடையதோ இந்த ஞான மார்க்கத்தின் தீபாவளி. உங்கள் ஆடைகள் போன்றவற்றை நீங்கள் மாற்ற வேண்டும் என்றில்லை. உங்கள் ஒளி முற்றாக ஏற்றப்பட்டதும், நீங்கள் புதிய உலகில் புது ஆடைகளைப் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: அவர்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்களோ இல்லையோ, நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வேன். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குவரே வாருங்கள்! அல்லது அவர்கள் கூறுகிறார்கள்: முக்தியளிப்பவரே வாருங்கள்! சிலர் ஒரு மொழியில் அழைக்க, வேறு சிலர் வேறொரு மொழியில் அழைக்கின்றார்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கிறேன். சத்தியயுகத்தில் வெகுசில மனிதர்களே இருக்கிறார்கள். இப்போது பல நடிகர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவருமே உயிர் வாழ்பவர்கள். ஓர் ஆத்மா சரீரத்தில் இருக்கும்போது, அவர் உயிர் வாழ்பவர் எனப்படுகிறார். ஒரு சரீரம் கூறுவதில்லை: நான் ஓர் ஆத்மாவை விடுத்து இன்னுமொன்றை எடுக்கிறேன். இல்லை. ஆத்மாவே கூறுகிறார்: நான் ஒரு சரீரத்தை விடுத்து இன்னுமொன்றை எடுக்கிறேன். எவ்வாறாயினும் நாங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்பதை எவருமே அறியார்கள். அனைவருமே 84 பிறவிகள் எடுப்பார்கள் என்றில்லை. அவரவருக்கென கணக்கொன்று உள்ளது. ஆரம்பத்தில் வருபவர்கள் நிச்சயமாக அதிக எண்ணிக்கையான பிறவிகளை எடுக்கிறார்கள். ஆகக்கூடியது 84 பிறவிகளும், குறைந்தது ஒரு பிறவியும் ஆகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகிறார். அவர் அனைவருக்கும் கற்பிப்பதில்லை, ஆனால் நிச்சயமாக அனைவரையும் வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்லுகின்றார். நாடகத் திட்டத்தின்படி, நான் அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பட்டுள்ளேன். பழைய உலகம் முடிவடைய உள்ளதை உலகம் அறியாது. தந்தை வந்து, நிச்சயமாக புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். படைப்பவரினதோ அல்லது, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை மக்கள் சற்றேனும் அறியாதுள்ளார்கள். ஆம், அவர்களுக்கு பக்தி மார்க்கம் பற்றி தெரியும். பக்தி மார்க்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், இந்த ஞானமார்க்க சம்பிரதாயங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. சத்தியயுகத்தில் இருந்து கலியுகம் வரை பக்தி மாத்திரமே இருப்பது சாத்தியம் அற்றது. ஞானம் பகலாகவும், பக்தி இரவாகவும் நினைவு கூரப்படுகிறது. மக்கள் காரிருளில் தடுமாறுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: மக்கள் கூழாங்கற்களிலும் கற்களிலும் கூட, என்னைத் தேடுகிறார்கள். சிலருக்கு அனுமானினதும் வேறு சிலருக்கு கணேஷினதும் காட்சிகள் கிடைக்கின்றன. அவர்களில் எவருமே கடவுள் அல்லர். எனக்கென ஒரு சரீரம் இல்லை. மாயையான இராவணன் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கிவிட்டான். இராம இராச்சியம் என்றால் என்னவென்பது பாரத மக்களுக்குத் தெரியாது. இவ்வுலகில் இலக்ஷ்மி நாராயணனது இராச்சியம் நிலவியது என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களுக்கு இராம இராச்சியம் வேண்டும். இது ரகுகுல இராமரைக் குறிக்கவில்லை. மக்கள், அவரைப் பற்றிய பல தவறான விடயங்களை சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். அவர்கள் மரணபயத்தில் இருக்கிறார்கள்! தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஆசீர்வாதங்களைத் தொடர்ந்தும் கேட்கிறார்கள். இப்போது பலரும் மரணிக்க உள்ளார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்வதற்காகவே தந்தை அழைக்கப்பட்டுள்ளார். நான், அமைதிதாமத்திற்கு சரீரங்களை எடுத்துச் செல்ல மாட்டேன். ஆத்மாக்களே அங்கு செல்வார்கள். இது களங்கமடைந்த பழைய சரீரம். வைக்கோற்புதர் தீமூட்டப்பட வேண்டும் என்பதாலேயே அவர்கள் தீ மூட்டக்கூடிய குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள். மேலும் குண்டுகள் தயாரிக்கப்படக் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதிக குண்டுகளை வைத்திருப்பவர்களே, நிச்சயமாக அதிக பலசாலிகளாக இருப்பார்கள் என்ற போதிய புரிந்துணர்வு இல்லாதவர்களாக அவர்கள் இப்போது உள்ளார்கள். ஆகவே அதிகளவு குண்டுகளைத் தயாரிக்காதோர், எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்? இப்போதுள்ள குண்டுகள் அனைத்தும் கடலில் வீசப்பட்டால் அவர்கள் மேலும் குண்டுகள் தயாரிப்பதை நிறுத்துவார்கள். எவ்வாறாயினும், முகில்கள், கடலிலிருந்தே நீரைப் பெறுவதால் மழைபொழியும் போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. நிலங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆகையாலேயே நாடகத்தில் இந்த வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் முன்பு இருக்கவில்லை, இப்பொழுதே அவை உள்ளன. ஆகையாலேயே எங்கும் குழப்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவை என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். விநாசம் நிச்சயிக்கப்பட்டது என்பதில் உங்களில் பலருக்கும் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இந்த நம்பிக்கை இருந்திருப்பின், உங்களின் யோகம் மிக நன்றாக இருக்கும். நீங்கள் யோக சக்தியால் உலக இராச்சியத்தைப் பெறவேண்டும். உங்களின் அனைத்தும் மறைமுகமானது. உங்களுக்கு கற்பிப்பவரும் மறைமுகமானவரே. இந்தக் கண்களால், அவரைக் காண முடியாது. நீங்கள் இப்போது ஆத்ம உணர்வைப் பெற்றுள்ளீர்கள்: ஆத்மாவாகிய நான் 84 பிறவிகளின் பாகத்தின் பதிவைக் கொண்டுள்ளேன். ஆத்மாவாகிய நான் அழிவற்றவன். இது மிகவும் ஆழமான விடயம். சரீத்தில் வாழும் ஆத்மா என்ன என்பதைப்பற்றி எவறாவது கூறினால் அவருக்கு நூறாயிரங்கள் சன்மானம் வழங்கப்படும் என ஒரு பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. ஆத்மா என்றால் என்ன? ஆத்மாவால் எங்கிருந்து வர முடியும்? ஆத்மா தனது பாகத்தை எப்படி நடிக்கிறார்? இவை எவருக்குமே தெரியாது. சிலர் ஆத்மாவைக் குமிழி என்கிறார்கள். ஒளித் தத்துவம் ஒரு பேரொளி என்றும், ஆத்மா அதில் இரண்டறக் கலந்துள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள். அவர்கள் பலவகையான விடயங்களைப் பேசுகிறார்கள். ஆத்மா ஒரு புள்ளி வடிவானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் நடிக்க வேண்டிய பாகம் அவரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டது, என்றும் அழியாதது. ஆத்மாக்கள் அழியாதவர்கள், அவர்கள் அதே பாகத்தை மீண்டும் நடிக்க வேண்டும். அதில் எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. இந்த விடயங்கள் அனைத்தும் முன்னைய கல்பத்தில், எவரது புத்தியில் பதிந்ததோ அவர்களது புத்திகளிலேயே பதியும். பாபா கூறுகிறார்: இந்த மனிதர்கள் அனைவருக்கும் நான் எப்படி கற்பிப்பது? ஆமாம் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள்: தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். அனைவரும் இந்த செய்தியைப் பெறுவார்கள். தந்தை இந்த மந்திரத்தை அனைவருக்காகவும் கொடுக்கிறார். பாபா விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களை கிரகித்து, குறைபாடுகளைத் துறக்க வேண்டும். சரீர உணர்வைத் துறவுங்கள்! இருப்பினும், நீங்கள் துறப்பதில்லை. அவ்வாறாயின், அந்த அப்பாவி ஆத்மாக்கள் எதைப் பெறுவார்கள்? அவர்களால், ஒருவரோடொருவர் தொடர்ந்தும் அன்போடு பழக முடியாதுள்ளது. நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். தந்தை அன்பு கடல் ஆவார். நீங்கள் அவரது குழந்தைகளே என்பதால் நீங்களும் மிகவும் அன்பானவர் ஆகவேண்டும். எவராவது உங்களுடன் கோபப்பட்டாலோ, உங்களைப் புகழ்ந்தாலோ அல்லது இகழ்ந்தாலோ, நீங்கள் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். எவராவது வங்குரோத்து ஆகும்போது, பாபா அவருக்கு உதவ வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஓ! அது உங்களது கர்மத்தின் விளைவு என்பதால், நீங்கள் அதை சகிக்க வேண்டும். அதற்குத் தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். உலகிலுள்ள அனைவருமே காரிருளில் உள்ளார்கள். பக்திமார்க்கத்தில், பக்தர்களுக்கு நிச்சயமாக மரியாதை கொடுக்கப்பட வேண்டும். சங்கராச்சாரியார் போன்றோரும் பக்தர்களே. அவர்கள் தூய பக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பக்தி என்றொரு பிரிவு உள்ளது. தூய்மையாக இருப்பவர்கள் பெரிய ஆச்சிரமங்களில் வாழ்வதுடன், அவர்களுக்கு மிகுந்த மரியாதையும் கொடுக்கப்படுகிறது. சமயப் புத்தகங்களுக்கும் அதிகளவு மரியாதை உள்ளது. மக்கள் அவற்றை ஏந்திக் கொண்டு வீதிவலம் வருவதுண்டு. பக்திக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்த ஞானத்தைப்பற்றி எவருமே அறியாதுள்ளார்கள். நீங்கள் தேவர்கள் ஆகும்போது, மிகவும் புகழப்படுகிறீர்கள். எந்தவொரு கோயிலுக்கும் போகாத பெற்றோர் எவருக்கும் இருக்க முடியாது. பக்தியின் ஏதோவொரு அடையாளம் நிச்சயமாக வீட்டில் இருக்கும். “ஓ கடவுளே!” என்று கூறுவதும் பக்தி மார்க்கமே. நீங்கள் இப்போது எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள். அவர் தந்தை, இவர் தாதா. அதனால், “தாதாவை ஏன் இங்கு வைத்திருக்கிறீர்கள்?” எனச் சிலர் வினவிய போதிலும், திரிமூர்த்தியின் படத்தை விளங்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஓ! ஆனால், மக்களின் தந்தையாகிய பிரஜாபிதா பிரம்மா, நிச்சயமாக இங்கு தேவைப்படுகிறார். அவர் விருட்சத்தின் கீழ் தபஸ்யாவில் அமர்ந்துள்ளார். எவ்வாறாயினும் அவர் தொடர்ந்தும் மாற்றம் அடைகிறார். பிரதானமானவர் எப்போதும் அங்கேயே உள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். நீங்கள் குறைவாகவே பேசவேண்டும். அனைத்திற்கும் முதலில், தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நிறைய விடயங்களில் வீண் பேச்சுப் பேசுவது பயனற்றது. மிகவும் குறைவாகப் பேசுங்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் அதிகமாக பேசி, அதிகளவு சப்தம் இட்டீர்கள். நீங்கள் அதிகளவு அலைந்து திரிந்தீர்கள். இப்போது உங்களுக்கு இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: பாபாவை நினைவு செய்தால் யோகசக்தியின் மூலம் உங்களால் உலக அதிபதிகளாக முடியும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது வரிசைக்கிரமமாக யார், என்னவாகுவார் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்களால் பிரஜைகளை மதிப்பிட முடியாது. அவர்கள், ஆயிரமாயிரம், மில்லியன் எண்ணிக்கையில் இருப்பார்கள். பிராமணர்கள் ஆகுபவர்கள், சூரிய, சந்திர வம்சங்களில் ஒருவர் ஆகுவார்கள். நீங்கள் முன்னேறும்போது, பலர் உங்களை நினைவு செய்ய ஆரம்பிப்பார்கள். மரணம் அவர்கள் முன்னிலையில் வரும்போது அவர்களுக்கு ஆர்வமின்மை ஏற்படும். இது அதே மகாபாரத யுத்தம். ஆத்மாக்கள் அனைவரும் தமது கணக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். இது தீர்வுக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். இயற்கை அனர்த்தங்களும் இருக்கவேண்டும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இது புதியதொரு விடயமல்ல. பட்டினியால் மக்கள் மரணிப்பார்கள். தனது குழந்தைகள் சந்தோஷம் அற்றிருப்பது தந்தைக்கும் தெரியும். அவர் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். தந்தை கூறுகிறார்: அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சண்டையிட, நீங்களோ வெண்ணையைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள், முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுவீர்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரது வாயில் சந்திரன் இருப்பதைப் போன்று காட்சியொன்றை கண்டார்கள். நீங்கள் பூகோளத்தை உங்கள் வாயில் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இளவரசனாகவும் இளவரசியாகவும் ஆகுவீர்கள். முழு உலகமும் உங்கள் உள்ளங்கையில் உள்ளது. இது வாய்க்குள்ளும், உள்ளங்கையிலும் காட்டப்பட்டுள்ளது. உங்கள் வாயில் இப்போது சுவர்க்க பூகோளம் உள்ளது. யோக சக்தியால் நீங்கள், உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் யோக சக்தியால் ஆரோக்கியத்தையும், ஞானத்தினால் செல்வத்தையும் பெறுகிறீர்கள். நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். இருப்பினும் சில குழந்தைகள், இந்தக் கல்விக்கு அந்தளவு மதிப்புக் கொடுப்பதில்லை. நீங்கள் உங்கள் வேலைகளை மாற்றிக் கொண்டு, எங்கிருந்தாலும் நிச்சயமாக கற்றிடுங்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதுடன், உங்கள் உணவும், பானமும் தூய்மையாக இருக்க வேண்டும். அனைவருக்கான உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள். இது துன்பம் தரும் உலகம். காமவாளைப் பாவிப்பதே பிரதான விடயமாக இருக்கிறது, ஏனெனில் மக்கள் அதை அவ்வளவு எளிதில் கைவிடுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு ஏதும் கூறினால், அவர்கள் துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். அதன்பின் கள்ளங்கபடமற்ற ஏழைத் தாய்மார்களுக்கு பெரும் தடைகள் ஏற்படுகின்றன. ஆரியசமாஜிகள் அண்மைக் காலத்தில் வந்தவர்கள். அவர்கள் இறுதிக் கிளைகளில் ஒன்றாக ஆகுவார்கள். அவர்கள் தேவர்களின்மீது நம்பிக்கை வைப்பதில்லை. தைரியத்தை காட்டிய மகாவீர், அனுமான் போன்றோரது பெயர்களும் உள்ளன. ஜெயின்களும் மகாவீர் என்ற பெயரைப் பாவித்துள்ளனர். இப்போது உங்களுக்கு இதன் அர்த்தம் புரிகிறது. இராவணனை வென்ற குழந்தைகளாகிய நீங்களும் மகாவீரர்களே. இவை அனைத்தும் யோக சக்திக்குரிய விடயங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதன் மூலமாக உங்கள் பாவங்கள் அழிகின்றன. அதன் பின்னர் நீங்கள் அமைதிக்கும் சந்தோஷத்கும் செல்கிறீர்கள். அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுங்கள். இந்த ஸ்தாபனை மிகவும் அற்புதமானது! எவரும் இதை அறியார்கள். உங்களிலும் இது வரிசைக்கிரமமே. உங்களுக்குள் எந்த விகாரங்களும் இருக்கவே கூடாது. தந்தை ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தை கொடுக்கிறார். ஆத்மாக்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார். ஆகவே இப்போது நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் சற்குருவிற்கு நேர் முன்னிலையில் இருந்த போதும், இழிவை ஏற்படுத்தினால் உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. ஏதேனும் பாவம் செய்வதென்பது இழிவை ஏற்படுத்துவதாகும். நீங்கள், ஆசிரியரது வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால் உங்களால் உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியாது. நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள். நீங்கள் ஆசிரியரது கற்பித்தல்களைத் தொடர்ந்தும் பெற்றால், திறமைச் சித்தி எய்துவீர்கள். அவை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள், இவையோ எல்லையற்ற விடயங்கள். உலகிலுள்ள எவருக்கும் கடவுள் யார் என்பது தெரியாது. மாயையுமே சதோ, ரஜோ, தமோவாக இருக்கின்றாள். இப்போது மாயையும் தமோபிரதானாகவே உள்ளாள். அவர்கள் தொடர்ந்தும் என்ன செய்கிறார்களெனப் பாருங்கள்! தாங்கள் எதற்குத் தீமூட்டுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் புத்தியற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. எது நடப்பினும் அது நாடகத்திற்கு ஏற்பவே நடைபெறுகிறது. யாதவரதும் கௌரவரதும் பாண்டவரதும் திட்டங்கள் என்ன? அவர்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள்? தந்தையே அனைத்திலும் உயர்ந்த திட்டத்தை பாண்டவர்களுக்கு காட்டுகிறார். புதிய உலகில் இலக்ஷ்மி நாராயணனது இராச்சியம் இருந்தது. பழைய உலகம் இப்போது அழிக்கப்பட உள்ளது. மிகுந்த அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் ஆஸ்தியை அதி அன்பிற்கினிய தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் கூறமுடியாது: நான் உங்களை என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். அனைவரும் கடவுளின் வடிவங்களே என அவர்கள் கூறுவார்களாயின் இதை அவர்களால் எவ்வாறு கூறமுடியும்? இந்த விடயங்கள் குழந்தைகளாகிய உங்களைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. விநாசம் நிச்சயிக்கப்பட்டது என்பதை இனங்கண்டு, ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றுங்கள். யோக சக்தியின் மூலமாக உலக இராச்சியத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்களது ஏற்றப்பட்ட தீபத்தால், ஒவ்வொருவரது தீபத்தையும் ஏற்றி, உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.2. புகழ்ச்சி, இகழ்ச்சி போன்ற அனைத்தையும் சகித்துக் கொண்டு தந்தையைப் போன்று அன்புக் கடலாக ஆகிவிடுங்கள். உங்கள் நடத்தை மிகுந்த இராஜரீகமாக இருக்க வேண்டும். மிகவும் குறைவாகப் பேசுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் நற்குணங்கள் மற்றும் சக்திகள் அனைத்தையும் சரியான வேளையில் பயன்படுத்தி, ஓர் அனுபவ சொரூபம் ஆகுவீர்களாக.பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு, அனுபவம் ஆகும். ஒரு நற்குணத்தின் அல்லது சக்தியின் அனுபவம் இல்லாமல் போனால்கூட, ஏதாவதொரு வேளையில் நீங்கள் நிச்சயமாகத் தடைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுவீர்கள். இப்போது, அனுபவத்தின் பாடநெறியை ஆரம்பியுங்கள். ஒவ்வொரு நற்குணம் மற்றும் சக்தியின் பொக்கிஷங்களைப் பயன்படுத்துங்கள். எந்த வேளையில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நற்குணம் தேவைப்பட்டாலும் அந்த வேளையில் அதன் சொரூபம் ஆகுங்கள். உங்களின் பொக்கிஷங்களை ஞானத்தின் வடிவில் உங்களின் புத்தியெனும் பெட்டியில் பூட்டி வைக்காதீர்கள். ஆனால் அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்களால் வெற்றியாளராகி, சதா ‘வா ரே மீ’ (எனது அற்புதம்) என்ற பாடலைத் தொடர்ந்து பாட முடியும்.
சுலோகம்:
பலமற்ற எண்ணங்களை முடித்து, சக்திவாய்ந்த எண்ணங்களை உருவாக்குபவர்கள் மட்டுமே இலேசாகவும் ஒளியாகவும் இருப்பார்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
தங்களுக்கான ஆசைகளின் அறிவே அற்றவர்களும் முடிவற்ற தானிகளுமே மற்றவர்களை ஈடேற்றக் கூடியவர்கள். தந்தை தனது சொந்த நேரத்தை சேவைக்காகக் கொடுத்தார். அவர் பணிவாக இருந்ததுடன் குழந்தைகளுக்கு மரியாதை கொடுத்தார். ‘குழந்தைகளே முதலில்!’ அது குழந்தைகளின் பெயராக இருந்தாலும் அது அவரின் பணியாகவே இருந்தது. தான் செய்த பணிக்கான பெயர் என்ற பேற்றையும் அவர் துறந்தார். அவரின் பெயரால், அவர் மற்றவர்களை ஈடேற்றுபவர் ஆகினார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள்.