10.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை இந்த ஞானமும் யோகமும் என்ற போஷாக்கு மூலம் உங்களுக்குச் சேவை செய்து. உங்களுக்குச் சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்றார். எனவே சதா சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்து, ஸ்ரீமத்திற்கு ஏற்ப பிறருக்குத் தொடர்ந்தும் விருந்தோம்பல் வழங்குங்கள்.
கேள்வி:
இந்தச் சங்கம யுகத்தில் உங்களுடைய அதி பெறுமதியான எந்த விடயத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்?பதில்:
இந்த அதிமேன்மையான பிராமணக் குலத்தில், உங்களுடைய இந்த வாழ்க்கையே அதி பெறுமதியானது. ஆகையால் உங்கள் சரீரத்தை நீங்கள் மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அது மண்ணாலான ஒரு பொம்மை என்றும், அது இல்லாமல் போக வேண்டிய ஒன்று என்றும் நினைக்காதீர்கள். இல்லை; நீங்கள் அதனை உயிருடன் வைத்திருக்க வேண்டும். எவரேனும் சுகவீனமுற்றால், அவரையிட்டுச் சலிப்படையாதீர்கள். அவரைத் தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுமாறு கூறுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப, உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். அந்த நபர் தொடர்ந்தும் சேவை செய்ய வேண்டும். அவர் உயிருடனிருந்து, தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும்.ஓம் சாந்தி.
உங்கள் ஒவ்வொருவருக்கும், ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொடுக்கின்ற ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இ;ந்த மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். இப் பழைய உலகம் மாறப் போகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இதனை யார் மாற்றப் போகின்றார்கள் என்றோ அல்லது இதனை அவர் எவ்வாறு மாற்றப் போகின்றார் என்றோ அப்பாவி மக்களுக்குத் தெரியாது. ஏனெனில், அவர்களுக்கு இந்த ஞானமாகிய மூன்றாவது கண் இல்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்துள்ளீர்கள். இதுவே ஞான சக்கரின். சக்கரினின் ஒரு துளி கூட மிகவும் இனிப்பானது. ‘மன்மனாபவ’ என்ற இந்த ஒரு வார்த்தை மாத்திரமே உள்ளது: இந்த வார்த்தை மிகவும் இனிமையானது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை உங்களுக்கு அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான பாதையைக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களின் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்குத் தந்தை வந்திருக்கின்றார் என்பதனால், குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருஞ் சந்தோஷம் இருக்க வேண்டும். ‘சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. சதா சந்தோஷமாகவும், களிப்புடனும் இருப்பவர்களுக்கு இது போஷாக்கு போன்றது. 21 பிறவிகளுக்குச் சந்தோஷமாக இருப்பதற்கு, இதுவே சத்துமிக்க போஷாக்காகும். இப் போஷாக்கை ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் பரிமாறுங்கள். இது ஒருவருக்கொருவர் கொடுக்கும் மிகவும் சக்திமிக்க போஷாக்கு. எந்த ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கு இந்த விருந்தோம்பலை வழங்க முடியாது. நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில், அனைவருக்கும் ஆன்மீக விருந்தோம்பல் அளிக்கின்றீர்கள். தந்தையின் அறிமுகத்தை ஒருவருக்குக் கொடுப்பதே உண்மையாக நிலையாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஜீவன்முக்திக்கான வெகுமதியைப் பெறுகின்றீர்கள் என்பதை இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்திய யுகத்தில், பாரதம் ஜீவன்முக்தியைப் பெற்றிருந்தது; அது தூய்மையாக இருந்தது. தந்தை மிகவும் மகத்தான, மேன்மையான போஷாக்கைக் கொடுக்கின்றார். இதனாலேயே ‘அதீந்திரிய சுகத்தை அறிய வேண்டுமாயின், கோபியரையும், கோபிகைகளையும் கேளுங்கள்’ என்றொரு பாடலும் உண்டு. ஞானமும் யோகமுமான இப் போஷாக்கு முதற்தரமானதும் அற்புதமானதுமாகும். இப் போஷக்கு ஒரேயொரு ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணரிடம் மாத்திரமே உள்ளது. இப் போஷாக்கைப் பற்றி வேறு எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் எனது உள்ளங்கையில், உங்களுக்காக வெகுமதிகளைக் கொண்டு வந்துள்ளேன். முக்தியும், ஜீவன்முக்தியும் என்ற இவ் வெகுமதிகள் என்னிடமே உள்ளன. ஒவ்வொரு கல்பத்திலும் நானே இதனை உங்களுக்குக் கொடுக்க வருகின்றேன். பின்னர் இராவணன் அதனை அபகரித்துக் கொள்கின்றான். ஆகையால், குழந்தைகளான உங்களில் சந்தோஷப் பாதரசம் மிகவும் அதிகளவு உயர வேண்டும்! ஒரேயொரு தந்தையும், ஆசிரியரும், உண்மையான சற்குருவுமே உங்களை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் உலக இராச்சியத்தை அதி அன்பிற்கினிய தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். இது ஒரு சிறிய விடயமல்ல. நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ‘இறை மாணவ வாழ்க்கையே மிகச் சிறந்தது’. இக் கூற்று இந்நேரத்திற்கே பொருந்துகின்றது. பின்னர், புதிய உலகிலும் நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்துடன் கொண்டாடுவீர்கள். உண்மையான சந்தோஷம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது என்பதை உலக மக்கள் அறியாதுள்ளார்கள். மனிதர்களிடம் சத்திய யுகத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லை. எனவே அவர்கள் தொடர்ந்தும் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாயின், இப் பழைய தமோபிரதான் உலகில் எங்கிருந்து சந்தோஷம் வர முடியும்? இங்கு, மக்கள் தொடர்ந்தும் விரக்திக் கூக்குரல் இடுகின்றார்கள். இது அத்தகைய துன்பமிக்க உலகம். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார். உங்கள் குடும்பத்துடன், வீட்டில் வாழும்போதும், தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள். நீங்கள் தொழில் செய்யும்போதும் என்னை நினைவுசெய்யுங்கள். ஓர் அன்பிற்கினியவரும் அவனது காதலியும் உள்ளனர்; அவர்கள் எப்பொழுதும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். அவள் அவனது காதலியும், அவன் அவளது காதலனும் ஆவார்கள். எவ்வாறாயினும், இங்கு அவ்வாறில்லை. இங்கே நீங்கள் பிறவி பிறவியாக அன்பிற்கினியவரின் காதலிகள். தந்தை உங்கள் காதலன் ஆகுவதில்லை. அந்த அன்பிற்கினியவரை இங்கே அழைப்பதற்காகவே நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள். பெருந் துன்பம் இருக்கும்போது, நீங்கள் அதிகளவு கதறி அழைக்கின்றீர்கள். ஆகவே நினைவு கூரப்படுகின்றது: வேதனையின்போதே அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றார்கள். ஆனால் சந்தோஷத்தின்போது எவரும் அவரை நினைவு செய்வதில்லை. இந்த நேரத்தில் தந்தை சர்வசக்திவான். நாளுக்கு நாள் மாயையும் தமோபிரதான் சர்வசக்திவான் ஆகுகின்றாள். ஆகவே தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி, தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். இத்துடன், தெய்வீகக் குணங்களையும் கிரகித்தால், நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுவீர்கள். நினைவுசெய்தலே இக் கல்வியில் பிரதான விடயம். நீங்கள் அதிமேலான தந்தையை பெரும்; அன்புடனும், பிரியத்துடனும் நினைவுசெய்ய வேண்டும். அந்தத் தந்தையே புதிய உலகைப் படைப்பவர். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். ஆகையாலேயே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழியும் வகையில், நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டும். தூய்மை ஆக்குபவரான தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தூய்மையாகி, தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். தூய்மையாக்குபவரான, தந்தையை மக்கள் அழைக்கின்றார்கள். தந்தை இப்போது வந்துள்ளதால், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தந்தையே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். சத்திய யுகம் நிச்சயமாகத் தூய உலகமாக இருந்தது. எனவே அங்கே அனைவருமே சந்தோஷமாக இருந்தார்கள். இப்போது, மீண்டும் ஒருமுறை தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தொடர்ந்தும் அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். இப்போது இது சங்கமயுகம். படகோட்டி உங்களை இக்கரையிலிருந்து, அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். ஒரு படகு மாத்திரமே உள்ளது என்றில்லை, முழு உலகமும் ஒரு பெரிய கப்பலைப் போன்றது. அவர் அதனை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றார். இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். உங்களுக்கு சந்தோஷத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆகா! எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இதனை நீங்கள் முன்னர் கேட்டிருக்கவும் இல்லை, கற்றிருக்கவும் இல்லை. கடவுள் பேசுகின்றார்: நான் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். எனவே நீங்கள் அதனை முழுமையாகக் கற்க வேண்டும். நீங்கள் கற்பதுடன், முழுமையாகக் கிரகிக்கவும் வேண்டும். எவ்வாறாயினும், கற்பதில் அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே பார்க்க வேண்டும்: நான் உயர்ந்த நிலையிலா, சராசரி நிலையிலா அல்லது குறைந்த நிலையிலா உள்ளேன்? தந்தை கூறுகின்றார்: உங்களைச் சோதியுங்கள்: நான் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறத் தகுதியாக உள்ளேனா? நான் ஆன்மீக சேவை செய்கின்றேனா? தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, சேவை செய்பவர்களாகி, தந்தையைப் பின்பற்றுங்கள். நான் சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன். நான் தினமும் சேவை செய்கின்றேன். அதனாலேயே நான் இவருடைய இரதத்தைப் பெற்றுள்ளேன். இவரின் இரதம் நோயுறும்போது, நான் இவருக்குள் அமர்ந்து, முரளியை எழுதுகின்றேன். நான் எனது வாயினால் அதனைப் பேச முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒரு முரளியையும் தவற விடக் கூடாது என்பதால் நான் அதனை எழுதுகின்றேன். எனவே நானும் சேவையில் உள்ளேன். இது ஆன்மீகச் சேவை. தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்களும், உங்களைத் தந்தையின் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். “இறை தந்தையின் சேவையில்” என்பது உள்ளது. நல்ல முயற்சி செய்பவர்கள் மகாவீர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களே மகாவீர்கள் என்று அறியப்பட்டுள்ளது. தந்தையின் கட்டளை: உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, ஏனையோரைச் சகோதரர்களாகப் பாருங்கள். அந்தச் சரீரங்களை மறந்திடுங்கள். பாபாவும் சரீரங்களைப் பார்ப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கின்றேன். எவ்வாறாயினும், சரீரம் இல்லாமல் ஆத்மாவால் பேச முடியாது என்ற ஞானம் உள்ளது. நான் இச் சரீரத்தினுள் வந்துள்ளேன். நான் அதனைக் கடனாகப் பெற்றுள்ளேன். ஓர் ஆத்மா சரீரத்தில் இருந்தால் மாத்திரமே அவரால் கற்க முடியும். பாபா இங்கே அமர்ந்திருக்கின்றார் (நெற்றியின் நடுவில்). இது அமரத்துவ சிம்மாசனமாகும். ஓர் ஆத்மா ஓர் அமரத்துவ ரூபம். ஆத்மா சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ ஆகுவதில்லை. சரீரமே சிறிதாகவோ, பெரிதாகவோ ஆகுகின்றது. நெற்றியின் நடுவிலேயே ஒவ்வோர் ஆத்மாவினதும் சிம்மாசனம் உள்ளது. ஒவ்வொருவரின் சரீரமும் வேறுபட்டது. சிலரின் அமரத்துவ சிம்மாசனம் ஆண்களுக்கானது, சிலரது அமரத்துவ சிம்மாசனம் பெண்களுக்கானது. சிலரது அமரத்துவ சிம்மாசனம் குழந்தையுடையது. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். எவருடனாவது நீங்கள் பேசும்போது, எல்லாவற்றிற்கும் முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான், இச் சகோதரருடன் பேசுகின்றேன். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்ற தந்தையின் செய்தியைக் கொடுங்கள். நினைவின் மூலமே உங்களிடமிருந்து கலப்படம் அகற்றப்படும். தங்கத்துடன் கலப்படம் கலக்கப்படும்போது, தங்கத்தின் பெறுமதி குறைவடைகின்றது. ஆத்மாக்களாகிய உங்களில் கலப்படம் கலக்கப்படும்போது, நீங்கள் மென்மேலும் பெறுமதி அற்றவர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அந்தக் கண் மூலமாக உங்கள் சகோதரர்களைப் பாருங்கள். சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருக்கும் போது, உங்கள் புலனங்கங்கள் விஷமத்தனம் செய்ய மாட்டாது. நீங்கள் உங்களுடைய இராச்சிய பாக்கியத்தைப் பெற்று, உலக அதிபதிகள் ஆக விரும்பினால் முயற்சி செய்யுங்கள்! ஒவ்வொருவரையும் உங்கள் சகோதரராகக் கருதி, அவர்களுக்கு இந்த ஞானத்தைத் தானம் செய்யுங்கள். அப்போது இப் பழக்கம் உறுதியாகி விடும். நீங்கள் அனைவருமே உண்மையான சகோதரர்கள். தந்தை மேலிருந்து வந்துள்ளார். நீங்களும் மேலிருந்தே வந்தீர்கள். தந்தை குழந்தைகளுடன் சேவை செய்கின்றார். தந்தை சேவை செய்வதற்கான தைரியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அப்போது நீங்கள் தைரியத்தைக் கொண்டிருப்பீர்கள். எனவே நீங்கள் இதனைப் பயிற்சி செய்ய வேண்டும்: “இந்த ஆத்மாவாகிய நான் எனது சகோதரருக்குக் கற்பிக்கின்றேன்”. ஆத்மாவே கற்கின்றார். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தை வந்து இந்த ஞானத்தைச் சங்கம யுகத்திலேயே கொடுக்கின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் சரீரமற்றவர்களாக வந்து, இங்கே சரீரங்களை எடுத்து, 84 பிறவிகளின் பாகங்களை நடித்தீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையால் உங்களையே ஓர் ஆத்மாவாகக் கருதிச் சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருங்கள். இந்த முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியையே செய்ய வேண்டும். பிறரில் எங்களுக்கென்ன கரிசனை உள்ளது? புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பமாகின்றது. அதாவது, முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் சகோதரர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அப்போது அம்பு மிக நன்றாக இலக்கைத் தைக்கும். நீங்கள் உங்களில் அந்தளவிற்குச் சக்தியை நிரப்பிக் கொள்ள வேண்டும். நீங்கள் முயற்சி செய்தால் மாத்திரமே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் ஒரு சில விடயங்களைச் சகித்துக் கொள்ளவும் வேண்டும். எவரேனும் பிழையாக எதையும் கூறும்போது, நீங்கள் மௌனமாகி விடுங்கள். நீங்கள் மௌனமாக இருக்கும்போது, அவர்களால் என்ன செய்ய முடியும்? கைதட்டுவதற்கு இரண்டு கரங்கள் வேண்டும். முதலாமவர் வாய்த்தர்க்கம் செய்யும்போது, மற்றவர் மௌனமாக இருந்தால் அப்போது முதலாமவர் தானாகவே மௌனமாகி விடுவார். இரு கைகளால் தட்டும் போதே, சத்தமேற்படும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சதா சந்தோஷமாக இருக்க விரும்பினால், ‘மன்மனாபவ’ ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் சகோதரர்களான, ஆத்மாக்களைப் பாருங்கள். எனவே, இந்த ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருக்கும் பழக்கத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் நன்மைக்கே ஆகும். தந்தையின் கற்பித்தல்களை உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் இந்த ஞானத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்றேன். நான் ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கின்றேன். ஒருவர் இன்னொருவருடன் பேசும்போது, அவரின் முகத்தையே பார்க்கின்றார். நீங்கள் ஆத்மாக்களுடனேயே பேசுவதால், நீங்களும் ஆத்மாக்களையே பார்க்க வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைச் சரீரத்தின் மூலம் கொடுத்தாலும், உங்கள் சரீர உணர்வைத் துண்டிக்க வேண்டும். தந்தையாகிய பரமாத்மாவே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையும் கூறுகின்றார்: நானும் ஆத்மாக்களையே பார்க்கின்றேன். ஆத்மாக்களும் கூறுகின்றார்கள்: நாங்களும் தந்தையான பரமாத்மாவையே பார்க்கின்றோம். அவரிடமிருந்தே நாங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றோம். இதுவே ஓர் ஆத்மா மற்றவர்களுடன் ஏற்படுத்துகின்ற, ஆன்மீக ஞானக் கொடுக்கல் வாங்கல் எனப்படுகின்றது. ஆத்மாவாகிய உங்களில் இந்த ஞானம் உள்ளது. ஆத்மாக்களுக்கே ஞானம் கொடுக்கப்பட வேண்டும். இது சக்தி போன்றது. உங்கள் ஞானம் சக்தியினால் நிறைந்திருக்கும்போது, அதனை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும்போது, அது உடனடியாகவே இலக்கைத் தாக்கும். தந்தை கூறுகின்றார்: இதனைப் பயிற்சி செய்து அம்பு இலக்கைத் தைக்கின்றதா எனப் பாருங்கள். இந்தப் புதிய பழக்கத்தை ஏற்படுத்தும்போது, சரீர உணர்வு அகற்றப்படுகின்றது, சிறு சிறு மாயையின் புயல்களும் வரும். நீங்கள் தீய எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்க மாட்டீர்கள். குற்றப் பார்வையும் இருக்க மாட்டாது. ஆத்மாக்களாகிய நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். இப்போது நாடகம் முடிவடைய உள்ளது. நீங்கள் இப்போது பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நினைவின் மூலம் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும்போது, நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானது! குழந்தைகளுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதே தந்தையின் பாகத்தில் உள்ளது என அவருக்குத் தெரியும். இது ஒரு புதிய விடயமல்ல. நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வர வேண்டும். நான் இப் பந்தனத்தில் கட்டுண்டுள்ளேன். நான் இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். அப்போது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களின் இலக்குக்கு இட்டுச் செல்லும். இதுவே இறுதிக் காலமாகும். என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் சற்கதியைப் பெறுவீர்கள். இந்த நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலம், தூண்கள் உறுதியாகும். ஆத்ம உணர்விற்கு வருவதற்கான இக் கற்பித்தல்களை ஒருமுறை மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்றீர்கள். இது அத்தகையதோர் அற்புதமான ஞானம்! பாபாவும் அற்புதமானவர், பாபாவின் ஞானமும் அற்புதமானது. எந்த நேரத்திலும் இதனை உங்களுக்கு வேறு எவராலும் கூறமுடியாது. இப்போது இது வீடு திரும்புவதற்குரிய நேரமாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இதனைப் பயிற்சி செய்யுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள். ஏனையோரைச் சகோதரர்களாகப் பார்ப்பதற்கு உங்கள் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்த வேண்டும். இதுவே மகத்தான முயற்சியாகும். இதுவே பிராமணர்களாகிய உங்களின் அதிமேன்மையான குலம். இந்நேரத்தில், உங்கள் வாழ்க்கையின் பெறுமதி அளவிட முடியாதது. ஆகவே நீங்கள் அந்தச் சரீரங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். தமோபிரதான் ஆகியதால், அந்தச் சரீரங்களின் ஆயுட்காலங்கள் தொடர்ந்தும் குறைவடைந்தன. நீங்கள் இப்போது யோகத்தில் நிலைத்திருக்கின்ற அளவிற்கேற்ப, உங்கள் ஆயுட்காலங்கள் அதிகரிக்கும். சத்திய யுகத்தில் அவை அதிகரித்திருக்கும். உங்கள் ஆயுட்காலங்கள் 150 வருடங்கள். ஆகையால் உங்கள் சரீரங்களை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அது மண்ணாலான பொம்மை என்றும், அதனால் அது இல்லாது போக வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். இல்லை; நீங்கள் அதனை உயிருடன் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் பெறுமதியான வாழ்க்கை. ஒருவர் சுகவீனமடைந்தால், அந்த நபரினால் சலிப்படையாதீர்கள். அந்த நபரிடம் சிவபாபாவை நினைவு செய்யுமாறு கூறுங்கள். நீங்கள் நினைவு செய்யும் அளவிற்கேற்ப, உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழக்கப்படும். அந்நபர் தொடர்ந்தும் சேவை செய்ய வேண்டும். அவர் உயிருடனிருந்து, சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். அவர் பாபாவை நினைவு செய்கின்றார் என்ற புரிந்துணர்வு உள்ளது. தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்காக ஆத்மாவே நினைவுசெய்கின்றார். அச்சாஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, வரிசைக்கிரமமாக, உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களையே சோதியுங்கள்: எனது முயற்சிகளில் நான் உயர்வாகவா, சராசரியாகவா அல்லது குறைவாகவா உள்ளேன்? நான் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்குத் தகுதிவாய்ந்தவரா? நான் ஆன்மீக சேவை செய்கின்றேனா?2. உங்கள் மூன்றாவது கண்ணினால் ஆத்மாக்களைச் சகோதரர்களாகப் பாருங்கள். அனைவரையுமே சகோதர்களாகக் கருதி, அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள். ஆத்ம உணர்வின் ஸ்திதியில் நிலைத்திருக்கும் பழக்கத்தைப் பதித்துக் கொள்ளும் போது, உங்கள் பௌதீகப் புலன்கள் விஷமத்தனம் செய்ய மாட்டாது.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தை பிரம்மாவைப் போன்று, உங்களின் மகத்தான துறவறத்தால் உங்களின் மகத்தான பாக்கியத்தை உருவாக்கி, முதலாம் இலக்கத் தேவதையாகுவதால், உலகச் சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.தந்தை பிரம்மாவை அவரின் செயல்களில் பின்பற்றி, ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கின்ற குழந்தைகள், முதலாம் இலக்க தேவதைகள் ஆகுவதால், உலகச் சக்கரவர்த்திகள் ஆகுகின்ற ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் மனங்களும் புத்திகளும் எப்போதும் தந்தையிடம் அர்ப்பணித்திருக்கின்றன. எப்படித் தந்தை பிரம்மா தனது மகத்தான துறவறத்தால் மகத்தான பாக்கியத்தைப் பெற்றாரோ, அதாவது, அவர் முதல் இலக்க முழுமையான தேவதையாகவும், முதலாம் இலக்கச் சக்கரவர்த்தியாகவும் ஆகினாரோ, அதேபோல், தந்தையைப் பின்பற்றும் குழந்தைகள் மகா துறவிகளாகவும், முழுமையான துறவிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் தமது சம்ஸ்காரங்களில் இருந்தும் விகாரங்களின் எந்தவொரு சுவட்டையும் துறந்து விடுவார்கள்.
சுலோகம்:
ஆதாரங்கள் அனைத்தும் இப்போது துண்டிக்கப்படப் போகின்றன, அதனால் ஒரேயொரு தந்தையை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்ளுங்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
சடப்பொருள் அனைத்தையும் மாற்றுவதற்கும், தமோகுணி சம்ஸ்காரங்களைக் கொண்டுள்ள ஆத்மாக்களின் தமோகுணி அதிர்வலைகளை மாற்றுவதற்கும் காரணம் இல்லாமல் இரத்தம் சிந்தும் சூழலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கும்- இந்த எல்லையற்ற பணியைச் செய்வதற்கு, உங்களின் மனதைச் சக்திவாய்ந்ததாகவும், நல்லாசிகள் நிறைந்ததாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்.