10.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்ற கல்வியை நீங்கள் கற்பதுடன் கற்பிக்கவும் வேண்டும். அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.
கேள்வி:
சதோபிரதான் முயற்சியாளர்களின் அடையாளங்கள் என்ன?பதில்:
அவர்கள் பிறரைத் தமக்குச் சமமானவர் ஆக்குகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பலருக்கு நன்மை செய்கின்றார்கள். அவர்கள் ஞான இரத்தினங்களைத் தமது புத்தியில் நிறைத்து, அதனைத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் தமது ஆஸ்தியை 21 பிறவிகளுக்கு கோரிக் கொள்வதுடன் பிறர் கோருவதற்கும் உதவுகின்றார்கள்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
நீங்கள் பக்தர்களினால் போற்றப்படுகின்ற ஒரேயொருவரின், நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஆகையால், உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் அவருக்குக் கூறுகின்றீர்கள்: ஓம் நமசிவாய. எவ்வாறாயினும், நீங்கள் வழிபட வேண்டியதில்லை. குழந்தைகள் தந்தையை நினைவு செய்கின்றார்களே அன்றி, அவரை அவர்கள் வழிபடுவதில்லை. அந்த ஒரேயொருவரும் தந்தை என்பதால் நீங்கள் அவரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அவரை வழிபடுவதில்லை. நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள். சரீரத்தில் இருக்கின்ற ஆத்மா அவரை நினைவு செய்கின்றார். தந்தை இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றிருக்கின்றார். தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியை எவ்வாறு பெறுவது என்பதற்கான வழியை அவர் எங்களுக்குக் காட்டுகின்றார். சத்தியயுகம் சந்தோஷ தாமம் என்றும், ஆத்மாக்களின் வசிப்பிடம் சாந்திதாமம் என்றும், அழைக்கப்படுகின்றது என்பதை நீங்களும் அறிவீர்கள். ‘நாங்கள் சாந்திதாம வாசிகள்’ என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இக் கலியுகம் நிச்சயமாகத் துன்ப உலகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்வதற்காகவும், மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்காகவும் கற்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தேவர்கள்;. நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்கு, மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக வேண்டும். நீங்கள் தந்தையுடன் கற்கின்றீர்கள். ஒவ்வொருவரும் ஒரேயளவில் கற்பதில்லை. உங்களிற் சிலர் மிகவும் தீவிர முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் ஏனையோர் முயற்சி செய்வதில் தளர்வு அடைகின்றார்கள். சதோபிரதான் முயற்சியாளர்கள் பிறரைத் தமக்குச் சமமானவர் ஆக்குவதற்காக வரிசைக்கிரமமாக முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் பலருக்கும் நன்மை செய்கின்றார்கள். நீங்கள் செல்வத்தை எந்தளவிற்கு உங்கள் புத்தியில் நிறைத்து அதனைத் தானம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு ஏற்பவே நன்மை இருக்கும். மனிதர்கள் தானம் செய்கின்றார்கள். அடுத்த பிறவியில் குறுகிய காலத்திற்கு அதற்கான பலனைப் பெறுகின்றார்கள். அதிலும், சிறிதளவு சந்தோஷமே உள்ளது, எஞ்சிய காலத்தில் துன்பமே உள்ளது, துன்பம் மாத்திரமே உள்ளது. எவ்வாறாயினும் நீங்கள் 21 பிறவிகளுக்கு சுவர்க்க சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். இந்தத் துன்பத்துடன் ஒப்பிடும் போது, சுவர்க்க சந்தோஷம் எவ்வளவு வேறுபட்டதெனப் பாருங்கள். நீங்கள் சுவர்க்கத்தில் எல்லையற்ற சந்தோஷத்தை, எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். மக்கள் கடவுளின் பெயரில் பணத்தைத் தானம் செய்து புண்ணியச் செயல்களையும் செய்கின்றார்கள். அது மறைமுகமானது. நீங்கள் இப்பொழுது நேரடியாக அவரின் முன்னிலையில் இருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: பக்தி மார்க்கத்தில், தான தர்மம் கடவுளின் பெயரில் செய்யப்படும் பொழுது, அதற்கான பலனை அவர்கள் தமது அடுத்த பிறவியில் பெறுகின்றார்கள். நன்மை செய்கின்றவர்கள் அதற்கான பலனைப் பெறுகின்றார்கள். ஒருவர் தீமை செய்தாலோ அல்லது பாவம் போன்றவற்றைச் செய்தாலோ அதற்கேற்ற பலனை அவர் பெறுகின்றார். இங்கே, கலியுகத்தில், பாவங்கள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. தர்மம் செய்யப்படுவதே இல்லை. சந்தோஷம் இருந்தாலும், அது தற்காலிகமானது. எனினும், நீங்களோ உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு சத்தியயுகத்தில் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். அதன் பெயரே சந்தோஷ தாமமாகும். இது அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான பாதை என்று நீங்கள் கண்காட்சிகளில் எழுதலாம். இதுவே அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்வதற்கான இலகுவான பாதையாகும். இப்பொழுது இது கலியுகமாகும். ஒரு சிப்பியையேனும் செலவழிக்காமல், கலியுகத்தில் இருந்து சத்திய யுகத்திற்குச் செல்வதற்கு, அதாவது தூய்மையற்ற உலகில் இருந்து தூய உலகிற்குச் செல்வதற்கு இதுவே இலகுவான பாதையாகும். அப்பொழுது மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்குக் கல்லுப் புத்தி இருப்பதால், அவர்கள் விளங்கப்படுத்துவதற்காக தந்தை அதை உங்களுக்கு மிகவும் இலகுவாக ஆக்குகிறார். அதன் பெயரே இலகு இராஜயோகமும், இலகு ஞானமும் ஆகும். தந்தை குழந்தைகளாகிய உங்களை மிகவும் விவேகமானவர்கள் ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமானவர்கள். ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிப் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை பொய்யான குற்றச்சாட்டுக்கள். ‘அம்மா, நான் வெண்ணெயை உண்ணவில்லை’ என ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். ‘நான் வெண்ணெயை உண்ணவில்லை’ என்பதன் அர்த்தமும் அவர்களுக்குப் புரியவில்லை. அவ்வாறாயின், யார் உண்டது? ஒரு குழந்தைக்குப் பால் கொடுக்கப்படுகின்றது. ஒரு குழந்தை பால் குடிக்குமா அல்லது வெண்ணெய் உண்ணுமா? வெண்ணெய்ப் பானையை உடைப்பது போன்று அவர்கள் சித்தரித்துள்ள எவையும் நிகழவில்லை. அவர் சுவர்க்கத்தின் முதல் இளவரசன் ஆவார். ஒரேயொரு சிவபாபாவிற்கு மாத்திரமே புகழ் உள்ளது. உலகில் உள்ள வேறு எவரும் புகழப்படுவதில்லை. இந்த நேரத்தில், அனைவரும் தூய்மை அற்றவர்களாகவே உள்ளனர். எனினும் பக்தி மார்க்கத்திலும் புகழ் உள்ளது. பக்தர்களுக்கான மாலையும் நினைவு கூரப்பட்டுள்ளது. பெண்களில், மீரா பிரபல்யமானவர். ஆண்களில், பிரதானமாக நாரதர் நினைவு கூரப்பட்டுள்ளார். ஒன்று பக்தர்களுக்கான மாலையும், மற்றையது ஞானத்திற்கான மாலையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தர்களின் மாலையில் இருந்து, அவர்கள் உருத்திராட்ச மாலையின் ஒரு பகுதியினர் ஆகுகின்றனர். அதன் பின்னர் உருத்திர மாலையில் இருந்து, விஷ்ணுமாலை உருவாக்கப்படுகின்றது. உருத்திர மாலை சங்கமயுகத்திற்கு உரியதாகும். இந்த இரகசியம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை உங்கள் நேர்முன்னிலையில் அமர்ந்திருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். பாபாவின் நேர்முன்னிலையில் நீங்கள் அமரும் போது, உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். ஆஹா! எனது நூறு மடங்கு பாக்கியம்! நூறு வீத அபாக்கியத்தில் இருந்து, நாங்கள் நூறு வீதப் பாக்கியசாலிகள் ஆகியுள்ளோம். குமாரிகள் காம வாளை அனுபவம் செய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: அது காம வாளாகும். இந்த ஞானமும் வாள் என்றே அழைக்கப்படுகின்றது. தந்தை கூறியுள்ளார்: ஞான ஆயுதங்கள் தேவர்களின் பௌதீக ஆயுதங்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவை வன்முறைக்கு உரியவை. சுயதரிசன சக்கரம் என்றால் என்ன என்று மனிதர்களுக்குத் தெரியாது. சமயநூல்களில் ஸ்ரீகிருஷ்ணரை சுயதரிசன சக்கரத்துடன் காட்டி இருப்பதனால், அவர்கள் வன்முறையை, அதாவது வன்முறையை மாத்திரமே காட்டியுள்ளார்கள். உண்மையில், அது இந்த ஞானத்திற்குரிய விடயமாகும். நீங்கள் இப்பொழுது சுயதரிசன சக்கரதாரிகள் ஆகியுள்ளீர்கள். அதனை அவர்கள் வன்முறைக்குரிய ஒரு பொருளாகக் காட்டியுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சுயத்தையும், சக்கரத்தையும் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் பிராமண குலத்தின் அலங்காரங்களான பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களும், சுயதரிசன சக்கரதாரிகளும் ஆவீர்கள். உங்களுக்கு மாத்திரமே இதன் அர்த்தம் புரியும். உங்களிடம் 84 பிறவிகளைப் பற்றிய ஞானமும், உலகச் சக்கரத்தைப் பற்றிய ஞானமும் உள்ளன. ஆரம்பத்தில், சத்தியயுகத்தில், சூரிய வம்சத்தின் தர்மமும், அதன் பின்னர் சந்திர வம்சத்தின் தர்மமும் இருந்தன. அவை இரண்டும் சேர்ந்தே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. உங்கள் மத்தியிலும், ஒவ்வொருவரின் புத்தியிலும் இவை அனைத்தும் வரிசைக்கிரமமாகவே உள்ளன. பாபா உங்களுக்குக் கற்பித்துள்ளார், நீங்கள் கற்றுப் புத்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். அவ்வாறே, நீங்கள் இப்பொழுது பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் ஆக வேண்டும். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல் ஆகாவிடின், எவ்வாறு உங்களால் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைப் பெற முடியும்? நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் கருத்துக்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த ஏணி 84 பிறவிகளைக் கொண்டது. ஓர் ஏணியில் இறங்குவது இலகுவானது. படியில் ஏறும் போது அவர்கள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு ஏறுவதைப் பாருங்கள்! எவ்வாறாயினும் உயர்த்தியும் உள்ளது. பாபா உங்களுக்கு ஓர் உயர்த்தியைக் கொடுப்பதற்காகவே வந்துள்ளார். ஏறும் ஸ்திதி ஒரு விநாடியில் பெறப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் ஏறும் ஸ்திதியில் இருக்கின்றீர்கள் என்ற சந்தோஷத்தில் குழந்தைகளாகிய நீங்கள் இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் அதி அன்பிற்கினிய பாபாவைக் கண்டுள்ளோம். அவரைப் போன்று அழகான வேறு எதுவும் இருக்க முடியாது. சாதுக்கள், சந்நியாசிகள் போன்றோர், யாராக இருந்தாலும் ஒரேயொரு அன்பிற்கினியவரையே அனைவரும் நினைவு செய்கின்றார்கள். அனைவரும் அவரது காதலர்கள். ஆனால் அவர் யார்? அவர்கள் இதனைப் பற்றி எதையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ‘அவர் சர்வவியாபி’ என்றே அவர்கள் கூறுகின்றார்கள். சிவபாபா இவரின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். சிவபாபா தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவரே பரமாத்மா. பரமாத்மா என்றால் கடவுள், அவரது பெயர் சிவன் ஆகும். ஒவ்வோர் ஆத்மாவும் தனது சரீரத்திற்குரிய ஒரு பெயரைக் கொண்டிருக்கின்றார். ஒரேயொரு பரமாத்மா மாத்திரமே உள்ளார். அவர் சிவன் என அழைக்கப்படுகின்றார். மனிதர்கள் அவருக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் பலவகையான ஆலயங்களையும் கட்டியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பம்பாயில் முட்களின் பிரபுவான பபுல்நாத்திற்கு (பபுரிநாத்) ஆலயம் ஒன்று உண்டு. இந்த நேரத்தில் அவர் உங்களை முட்களில் இருந்து மலர்கள் ஆக்குகின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். எனவே முதலாவது பிரதான விடயம்: ஆத்மாக்களின் தந்தை ஒரேயொருவரே ஆவார். பாரத மக்கள் அவரிடம் இருந்தே இந்த ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பாரதத்தின் அதிபதிகள் ஆவார்கள். அவர்கள் சீனாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் சீனாவில் இருந்து வந்திருந்தால், அவர்களின் முகச்சாயல் வேறாக இருந்திருக்கும். அவர்கள் பாரதத்திற்கு உரியவர்கள். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் அழகானவர்கள். பின்னர் அவர்கள் அவலட்சணமாக ஆகுகின்றார்கள். ஆத்மாவில் கலப்படம் கலக்கப்படுகின்றது. அவர்கள் அவலட்சணமாக ஆகுகின்றார்கள். அவர்களைப் பற்றிய உதாரணம் உள்ளது. ரீங்காரமிடும் வண்டு, எறும்பை மாற்றித் தனக்குச் சமமானது ஆக்குகின்றது. சந்நியாசிகள் எதனை மாற்றுகின்றார்கள்? அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தவர்களைக் காவி ஆடை அணியச் செய்து மொட்டை அடிக்கச் செய்கின்றார்கள். நீங்கள், எவ்வாறாயினும், இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று அழகானவர்கள் ஆகுவீர்கள். இயற்கையும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளது. இப் பூமியும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளது. அது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. வானத்தில் புயல் வீசுகின்றது. அவையும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கை அனர்த்தங்களும் குழப்பங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இந்த உலகில், இப்பொழுது உச்சக்கட்ட துன்பம் உள்ளது. அங்கே, பேரானந்தம் இருக்கும். தந்தை உங்களைப் பெருந்துன்பத்தில் இருந்து பேரானந்தத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இந்த உலகில் விநாசம் இடம்பெற்ற பின்னர், அனைத்தும் சதோபிரதான் ஆகும். இப்பொழுது முயற்சி செய்து, தந்தையிடம் இருந்து எவ்வளவு ஆஸ்தியைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுக் கொள்ளுங்கள். தவறினால், நீங்கள் இறுதியில் கவலைப்பட நேரிடும். ‘பாபா வந்தார், நாங்கள் எதுவும் செய்யவில்லை’. ‘வைக்கோற் போர் எரியூட்டப்படும் போதே அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருந்து எழுவார்கள்’ என்றொரு கூற்று உண்டு. அதன் பின்னர் அவர்கள் விரக்தியில் அழுது மரணிப்பார்கள். விரக்திக் கூக்குரலின் பின்னர், வெற்றி முழக்கம் இருக்கும். கலியுகத்தில் விரக்தியே உள்ளது. அல்லவா? அவர்கள் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றார்கள். பலரும் மரணிப்பார்கள். கலியுகத்தின் பின்னர், நிச்சயமாக சத்தியயுகம் இருக்கும். அவற்றிற்கு இடையில் சங்கமயுகம் உள்ளது. இது மங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்குத் தந்தை மிகச்சிறந்த வழிமுறையைக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் வேறு எதனையும் செய்யத் தேவையில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விழுந்து வணங்குதல் போன்ற எதனையும் செய்யத் தேவையில்லை. பாபாவின் முன்னிலையில் எவராவது கைகூப்பி நின்றால், பாபா கூறுவதுண்டு: ஆத்மாவாகிய உங்களுக்கோ அல்லது தந்தைக்கோ கரங்கள் இல்லை. அவ்வாறாயின் நீங்கள் யாரை நோக்கிக் கைகூப்புகின்றீர்கள்? பக்தி மார்க்கத்தினதோ அல்லது கலியுகத்தினதோ அடையாளம் எதுவும் இங்கே இருக்கக் கூடாது. ஓ ஆத்மாவே, நீங்கள் ஏன் கைகூப்ப வேண்டும்? தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நினைவு செய்தல் என்றால் கைகூப்புதல் என்று அர்த்தமல்ல. மனிதர்கள் சூரியனையும் நோக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்கள். சிலர் மகாத்மாவை நோக்கியும் கைகூப்புகின்றார்கள். நீங்கள் கைகூப்ப வேண்டியதில்லை. இது நான் கடனாகப் பெற்றுள்ள சரீரமாகும். எவராவது உங்களுக்குக் கைகூப்பினால், நீங்களும் பதிலுக்குக் கைகூப்ப வேண்டும். ‘நான் ஓர் ஆத்மா’ என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சரீரம் என்ற பந்தனத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இந்தச் சரீரத்தின் மீது விருப்பமின்மை உள்ளது. பாம்பினது உதாரணத்தைப் போன்று, இப் பழைய சரீரமும் நீக்கப்பட வேண்டும். ரீங்காரமிடும் வண்டுகளுக்கும் எறும்புகளை ரீங்காரமிடும் வண்டுகள் ஆக்குகின்ற விவேகம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் விகாரக் கடலில் தத்தளிப்பவர்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நாங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வோம். மனிதர்கள் அமைதிக்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். சந்நியாசிகள் சுவர்க்க ஜீவன்முக்தியைப் பெறுவதில்லை. ஆம், அவர்கள் முக்தியைப் பெறுகின்றார்கள். அவர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு, அமைதி தாமத்திற்குச் சென்று அமர்கின்றார்கள். ஆத்மாக்கள் முதன்முதலில் ஜீவன்முக்தியையே அனுபவம் செய்கின்றார்கள். பின்னர், அவர்கள் பந்தன வாழ்க்கைக்குச் செல்கின்றார்கள். ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள், பின்னர் ஏணியில் இறங்குகின்றார்கள். முதலில், அவர்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். பின்னர் கீழிறங்கும் போது, அவர்கள் தமோபிரதான் ஆகுகின்றார்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை தந்தை அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மனிதர்கள் தமது சரீரத்தை விட்டு, நீங்கும் பொழுது, அவர்கள் அதிகளவு வேதனையை அனுபவம் செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தமக்கான தண்டனையை அனுவம் செய்ய வேண்டும். உதாரணமாக, சிவனிடம் தம்மை அர்ப்பணிக்கும் போது, தமக்கு முக்தி கிடைக்கும் என்று அவர்கள் கேள்விப்பட்டதால், அவர்கள் தம்மைக் காசியில் உள்ள வாளில் தங்களைப் பலியிடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது உங்களை அர்ப்பணிக்கின்றீர்கள். பின்னர், இவ்விடயங்கள் பக்தி மார்க்கத்திலும் தொடர்கின்றன. அவர்கள் அங்கு சென்று தம்மைச் சிவனிடம் அர்ப்பணிக்கின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: எவராலும் வீட்டிற்குத் திரும்ப முடியாது. ஆம், அவர்கள் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். அப்பொழுது அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். அதன் பின்னர் கணக்கு மீண்டும் புதிதாக ஆரம்பம் ஆகின்றது. இப்பொழுது உங்களுக்கு இந்த உலகச் சக்கரத்தைத் தெரியும். இந்த நேரத்தில், இது அனைவரதும் கீழிறங்குகின்ற ஸ்திதியாகும். தந்தை கூறுகின்றார்: நான் வந்து அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றேன். நான் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். எவ்வாறாயினும், நான் தூய்மையற்ற எவரையும் என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டேன். ஆகவே நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். அப்பொழுது உங்கள் சுவாலை ஏற்றப்படும். ஒரு திருமணத்தின் போது, அவர்கள் ஒரு சட்டியில் தீ மூட்டி, அதனை மணப் பெண்ணின் தலை மீது வைப்பதுண்டு. அந்த வழக்கம் பாரதத்தில் மாத்திரமே உள்ளது. அவ்வாறு தீமூட்டிய சட்டி மணவாளனின் தலைமீது வைக்கப்படுவதில்லை. ஏனெனில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று அவர்களை இட்டுக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் அவர்கள் கடவுளுக்காக எவ்வாறு விளக்கேற்ற முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எனது சுவாலை ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ளது. நான் உங்கள் சுவாலையையே ஏற்றுகின்றேன். தந்தை சுவாலை எனவும் அழைக்கப்படுகின்றார். பிரம்ம-சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் சுவாலையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சுவாலை எப்பொழுதும் ஏற்றப்பட்டிருக்கும். அதனை மாத்திரமே அவர்கள் நினைவு செய்வதுண்டு, அதனை மாத்திரமே கடவுள் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள். சிறிய சுவாலை (ஆத்மா) பெரிய சுவாலையோடு (பரமாத்மா) இரண்டறக் கலந்து விடும் என்று ஏனையோர் எண்ணுகின்றார்கள். பல அபிப்பிராயங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: உங்கள் சமயம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பதாகும். சுவர்க்கத்தில், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் காண்பீர்கள். புதிய உலகில் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் கல்வி நிச்சயமாகப் புதிய உலகிற்கானது. ஏனைய அனைத்துக் கல்வியும் இந்த உலகிற்கானது. இங்கே, நீங்கள் கற்று, எதிர்காலத்திற்கான அந்தஸ்தை அடைய வேண்டும். கீதையிலும், இராஜயோகம் கற்பிக்கப்பட்டது. இறுதியில், யுத்தம் இடம்பெற்று எதுவுமே எஞ்சவில்லை. பாண்டவர்களுடன் ஒரு நாய் காட்டப்படுகின்றது. இப்பொழுது, தந்தை கூறுகின்றார்: நான் உங்களை இறைவன் இறைவிகள் ஆக்குகின்றேன். இங்கே பல வகையான துன்பங்களை விளைவிக்கின்ற மனிதர்களும் உள்ளனர். காம வாளைப் பயன்படுத்துவதால் ஒருவர் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றார்! எனவே, ஞானக்கடலான எல்லையற்ற தந்தையே எமக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இருக்க வேண்டும். அவரே அன்பிற்கு இனியவர்களுக்கு எல்லாம் அதி அன்பிற்கினியவர் ஆவார். காதலர்களாகிய நாங்கள் அரைக் கல்பத்திற்கு அவரை நினைவு செய்கின்றோம். நீங்கள் தொடர்ந்தும் அவரை நினைவு செய்கின்றீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நான் வந்துள்ளேன். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதித் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். என்னை நினைவு செய்யாமல் விட்டால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. சத்திரசிகிச்சை நிபுணரிடம் தொடர்ந்தும் ஆலோசனை பெறுங்கள். பாபா உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்: இவ்வாறாக உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் ஆலோசனையைப் பின்பற்றினால், ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்களைப் பெறுவீர்கள். ஆலோசனையைப் பெற்றால், உங்கள் பொறுப்புகள் முடிவடைந்து விடும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற தந்தையிடம் இருந்து, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை பெறுவதற்கு, கடவுளின் பெயரில் நேரடியாக தான தர்மங்கள் செய்யுங்கள். இந்த ஞானச் செல்வத்தை உங்கள் புத்தியில் நிறைத்து, அதனை அனைவருக்கும் தானம் செய்யுங்கள்.2. இந்த மங்களகரமான சங்கமயுகத்தில், உங்களைச் சகல பந்தனங்களில் இருந்தும் விடுவித்து, ஜீவன்முக்தியைப் பெற்றிடுங்கள். ரீங்கரிக்கும் வண்டாகி, ஏனையோரை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதன் மூலம் சதா சக்திவாய்ந்தவராகி அதனால் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.சகல பேறுகளின் ரூபங்களாக இருப்பவர்கள் சக்திவாய்ந்தவர்கள் ஆவார்கள். சகல பேறுகளையும் அனுபவம் செய்யும் இத்தகைய சக்திவாய்ந்த ஆத்மாக்களால் மட்டுமே வெற்றி சொரூபங்கள் ஆகமுடியும். உலகிலுள்ள ஆத்மாக்கள், மாஸ்ரர் சந்தோஷம் மற்றும் அமைதியை அருள்கின்ற ஆத்மாக்கள் எங்கே எனத் தேடுகிறார்கள். உங்களிடம் சகல சக்திகளின் களஞ்சியம் இருக்கும்போது, உங்களால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். தற்காலத்தில், உங்களால் ஒரு கடையில் இருந்தே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. எனவே, நீங்களும் அப்படி ஆகவேண்டும். ஒருவரிடம் சகித்துக் கொள்ளும் சக்தி உள்ளது, ஆனால் முகங்கொடுக்கும் சக்தி இல்லை என்பதாக இருக்கக்கூடாது. உங்களிடம் சகல சக்திகளின் களஞ்சியமும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் வெற்றி சொரூபம் ஆகமுடியும்.
சுலோகம்:
மரியாதைக் கோட்பாடுகள் பிராமண வாழ்க்கையின் அடிகள் ஆகும். உங்களின் அடிகளைத் தந்தையின் அடிகளில் வைப்பதென்றால் உங்களின் இலக்கிற்கு நெருக்கமாகச் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
தற்காலத்தில், சில குழந்தைகள் விசேடமான மொழியைப் பேசுகிறார்கள். தம்மால் பொய்யான எதையும் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடிவதில்லை என அவர்கள் சொல்கிறார்கள். இதனாலேயே, உண்மையற்ற எதையாவது அவர்கள் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது, தாம் மிகவும் வலிமையைப் பிரயோகிப்பதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், மற்றவர் பொய்யாக இருக்கிறார். ஆனால் அந்தப் பொய்மையைப் பார்த்து நீங்கள் வலிமையைப் பிரயோகிக்கிறீர்கள். அப்போது உங்களின் வலிமையும் உண்மை அற்றதே. எந்த வகையான பொய்மையையும் முடிப்பதற்கு, உங்களுக்குள் சத்தியத்தின் சக்தியைக் கிரகியுங்கள்.