10.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சரீர உணர்வே மிகப் பெரிய நோயாகும். இந்த நோயினாலேயே வீழ்ச்சி ஏற்பட்டது. ஆகவே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது உங்களுடைய கர்மாதீத நிலையை அடைவீர்கள்?பதில்:
உங்களுடைய கர்மவேதனையை யோக சக்தியினால் வெற்றி கொள்கின்ற போதும், முழுமையாக ஆத்ம உணர்வு உடையவராகும் போதும் ஆகும். இந்தச் சரீர உணர்வு எனும் நோய் மிகப்பெரிய நோயாகும். இந்நோயின் மூலமாகவே உலகம் தூய்மை அற்றதாகி விட்டது. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள், நீங்கள் சந்தோஷத்தையும், போதையையும் கொண்டிருப்பதுடன், உங்கள் நடத்தையும் மறுசீரமைக்கப்படும்.பாடல்:
ஓ, இரவுப்பயணியே களைப்படையாதீர்! விடியலுக்கான இலக்கு வெகு தூரத்தில் இல்லை.ஓம் சாந்தி.
“பிரயாணி” என்பதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் தேவர்களாக இருந்தபோது, மனிதர்களாகவே இருந்தீர்கள், உங்கள் குணாதிசயங்களும் மிக நல்லவையாகவே இருந்தன. நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும், 16 கலைகளும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் எவ்வாறு சிப்பிகளிலிருந்து, வைரங்களாக மாறினீர்கள் என்பதை எந்த மனிதருமே அறியார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக, முற்றிலும் மாறுகின்றீர்கள். நீங்கள் இன்னமும் தேவர்கள் ஆகவில்லை. நீங்கள் புத்தாக்கம் செய்யப்படுகின்றீர்கள். சிலர் சிறிதளவு மாறியுள்ளனர்;. சிலரின் குணாதிசயங்கள் 5 வீதமாகவும், மற்றவர்களினது 10 வீதமாகவும் மாறியுள்ளன. பாரதம் சுவர்க்கமாக இருந்ததை உலகம் அறிய மாட்டாது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் தேவர்கள் இருந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்ததால், தேவ, தேவியர்கள் என அழைக்கப்பட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் அந்த தெய்வீகக் குணங்கள் இல்லை. அதி செல்வந்தமாக இருந்த பாரதத்தின் வீழ்ச்சி எவ்வாறு இடம்பெற்றது என மக்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தையே இங்கிருந்து, இதை விளங்கப்படுத்துகின்றார். குணாதிசயங்களை மாற்றிக் கொண்டு விட்ட உங்களாலேயே இதை விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தேவர்களாக இருந்தபோது, ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தீர்கள், பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பித்த பின்னர், சரீர உணர்வு உடையவர்கள் ஆகினீர்கள். இந்தச் சரீர உணர்வே உங்களிடமுள்ள மிகப்பெரிய நோயாகும். சத்தியயுகத்தில், நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருந்தீர்கள். உங்களை அவ்வாறு ஆக்கியவர் யார் என எவருமே அறியார். உங்களது வீழ்ச்சி ஏன் ஏற்பட்டது எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். உங்கள் தர்மத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். பாரதம் ஒரு சதத்திற்கும் பெறுமதி அற்றதாகி விட்டது. இதற்கான பிரதான காரணம் என்ன? சரீர உணரவே ஆகும். இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. அதி செல்வந்தமாக இருந்த பாரதம், இப்பொழுது எவ்வாறு ஏழ்மை அடைந்தது என மக்கள் அறியார்கள். நாங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்துக்குச் சொந்தமானவர்களாக இருந்தோம். எனவே எவ்வாறு நாங்கள் எமது தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்தவர்கள் ஆகினோம்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராவண இராச்சியம் ஆரம்பமானபோது, நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகினீர்கள், அதனாலேயே உங்கள் நிலைமை இவ்வாறாகியது. எவ்வாறு வீழ்ச்சி இடம்பெற்றது என ஏணிப்படம் காட்டுகின்றது. நீங்கள் ஒரு சதப் பெறுமதி அற்றவர்கள் ஆகியதற்குச் சரீர உணர்வே பிரதான காரணம். தந்தை இங்கிருந்து, இதை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சமயநூல்களில் சக்கரத்தின் கால எல்லையை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் காட்டி உள்ளார்கள். இந்நாட்களில் கிறிஸ்தவர்களே விவேகமானவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வைகுந்தம் இருந்ததாகக் கூறுகின்றார்கள். புராதன பாரதமே சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்நேரத்தில் அவர்கள் பாரதத்தின் முழு வரலாறையும், புவியியலையும் அறியார்கள். வெகு சில குழந்தைகளிடம் இந்த ஞானம் சிறிதளவு உள்ளது. ஆனால் அவர்களும் சரீர உணர்வில் இருப்பதால், தங்களைப் போன்று வேறு எவருமில்லை என நினைக்கின்றார்கள். பாரதம் ஏன் இந்தளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். “தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து இராம இராச்சியத்தை ஸ்தாபியுங்கள்” என்று பாபு காந்திஜியும் கூறுவது வழக்கம். ஆத்மாக்கள் ஒரு நேரத்தில் தந்தையிடம் இருந்து நிச்சயமாகச் சந்தோஷத்தைப் பெற்றுள்ளார்கள். இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சூத்திரர்களில் இருந்து, பிராமணர்கள் ஆகிவிட்ட எனது குழந்தைகளும் முழுமையாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றார்கள். இது ஒரு பழைமையான நோய், இதனாலேயே உங்களின் நிலைமை இவ்வாறாகி விட்டது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்குப் பெரும் முயற்சி தேவை. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவு அதிகமாகத் தந்தையை நினைவு செய்வீர்கள். ஆகையினால் எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் அப்பாலுள்ள தத்துவமான, பிரம்ம தத்துவத்தில் வசிக்கின்ற பரமாத்மாவைச் சந்திப்பதற்கான அக்கறையுடன் இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது அவரைக் கண்டடைந்து விட்டீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றீர்கள். வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? இயல்பாகவே ஆத்ம உணர்வு உடையவராகி, சதா என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழலாம். முழு உலகமுமே சரீர உணர்வில் உள்ளார்கள். அதிமேன்மையாக இருந்த பாரதத்தின் வீழ்ச்சியும் இடம்பெற்றது. அதனுடைய வரலாறையும், புவியியலையும் எவருமே உங்களுக்குக் கூற முடியாது. இந்த விடயங்கள் சமயநூல்கள் எதனிலும் குறிப்பிடப்படவில்லை. தேவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள். அவர்கள் தங்கள் சரீரங்களை விட்டு, வேறொன்றை எடுப்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இறையுணர்வு உள்ளவர்கள் அல்லர். நீங்கள் அதிகளவு ஆத்ம உணர்வில் இருக்கும்போது, அதிகளவு தந்தையை நினைவு செய்வதுடன், இனிமையாகவும் ஆகுவீர்கள். சரீர உணர்வு உடையவர் ஆகியதாலேயே, சண்டை, சச்சரவுகளும், குரங்குத்தனமான நடத்தைகளும் இருந்தன. தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இந்த பாபாவும் இவை அனைத்தையும் புரிந்து கொள்கின்றார். சில குழந்தைகள் சரீர உணர்வு உள்ளவர்களாகி, சிவபாபாவை மறக்கின்றார்கள். மிகவும் நல்ல குழந்தைகளும் இன்னமும் சரீர உணர்வில் இருக்கின்றனர்; அவர்கள் முற்றாகவே ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதில்லை. நீங்கள் இந்த எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். அங்கே நிச்சயமாக சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் இருந்தன. நாடகம் பற்றி எவருமே அறியார். பாரதம் இப்பொழுது அதிகளவு வீழ்ந்து விட்டது. வீழ்ச்சியினுடைய மூல காரணம், சரீர உணர்வாகும். சில குழந்தைகளுமே சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றனர். யார் தங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எப்போதும் சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் எனக் கருதுங்கள். சிவபாபாவை நினைவு செய்யாததாலேயே, நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றீர்கள். முழு உலகமுமே சரீர உணர்வுக்கு உள்ளாகி விட்டது, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள்! ஆத்மா இந்தச் சரீரத்தின் மூலம் செவிமடுத்து, அவரது பாகத்தை நடிக்கின்றார். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். உங்களில் சிலர் மிக நன்றாகச் சொற்பொழிவுகள் ஆற்றிய போதும், நல்ல நடத்தையும் தேவையாகும். சரீர உணர்வு உடையவர் ஆகியதால் சிலர் தோல்வி அடைகின்றனர்; அந்தச் சந்தோஷமோ அல்லது போதையோ இருப்பதில்லை. பின்னர் அவர்கள் பெரும் பாவச் செயல்களைச் செய்து, அதன் காரணமாக அதிகளவு தண்டனை அனுபவஞ் செய்யப்படுகின்றது. சரீர உணர்வில் இருப்பதால் அதிகளவு சேதம் ஏற்படுகின்றது. பெருந் தண்டனையும் அனுபவஞ் செய்யப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: இது இறை உலக அரசாங்கம், இல்லையா? இறை அரசாங்கத்தில் எனது வலதுகரம் தர்மராஜ் ஆவார். நீங்கள் நல்ல செயல்கள் செய்கின்றபோது, அதிலிருந்து நல்ல பலனைப் பெறுகின்றீர்கள். தீய செயல்கள் செய்யப்படுவதால், தண்டனை அனுபவஞ் செய்யப்படுகின்றது. ஒவ்வொருவரும் கருப்பைச் சிறையில் தண்டனையை அனுபவிக்கின்றனர். இதைப் பற்றிய கதை இருக்கின்றது. இந்த விடயங்கள் அனைத்தும் இந்த நேரத்தையே குறிப்பதாகும். ஒரு தந்தைக்கு மட்டுமே புகழ் உரியது. வேறு எவருக்குமே புகழ்ச்சி இல்லை. இதனாலேயே திரிமூர்த்தி சிவஜெயந்தி வைரம் போன்று பெறுமதியானது என்று எழுதப்பட்டுள்ளது. மீதி அனைத்தும் சிப்பி போன்றதாகும். சிவபாபாவைத் தவிர வேறு எவராலும் உங்களைத் தூய்மையாக்க முடியாது. நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள், பின்னர் இராவணன் உங்களைத் துய்மை அற்றவர்கள் ஆக்குகின்றான். இதனாலேயே அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றனர். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகின்றீர்கள். இந்த ஆத்ம உணர்வு ஸ்திதி 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது. எனவே அதன் மகத்துவம் ஒரேயொருவருக்கே உரியது. சிவபாபாவே பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றார். சிவபாபா எப்போது வருகின்றார் என எவருமே அறியார். அவரது வரலாறே முதலாவதாக அறியப்பட வேண்டும். பரமதந்தை, பரமாத்மாவே சிவன் என்று அழைக்கப்படுகின்றார். சரீர உணர்வின் காரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது இடம்பெற்ற பின்னரே அதை எழுச்சி அடையச் செய்வதற்கு, தந்தை வருகின்றார். எழுச்சியும், வீழ்ச்சியும், பகலும், இரவும். ஞான சூரியன் உதித்து, அறியாமை இருளை அகற்றுகின்றார். சரீர உணர்வே மிகப்பெரிய அறியாமை ஆகும். ஆத்மாக்கள் பற்றிக் கூட எவருமே அறியார். அவர்கள் இயல்பாகவே, ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனக் கூறுகின்றனர், அதனால் அவர்கள் அத்தகைய பாவாத்மாக்கள் ஆகின்றனர்! இதனாலேயே வீழ்ச்சி ஏற்படுகின்றது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்து, ஏணியில் கீழிறங்கினீர்கள். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. உலகின் வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்ற உலகின் வரலாறையும், புவியியலையும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவரும் அறியார். விஞ்ஞானத்தின் மூலம் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். உலகம் மேலும் அதிகத் தூய்மை அற்றதாகவும், நரகம் போன்றும் ஆகிவிட்டதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பெருமளவு சரீர உணர்வு இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். பல மிக நல்ல மகாராத்திகளும் இருக்கின்றனர். அவர்கள் இந்த ஞானத்தை மிக நன்றாகப் பேசுகின்றனர், ஆனால் அவர்களது சரீர உணர்வு இன்னமும் அகற்றப்படவில்லை. சரீர உணர்வின் காரணமாக சிலரில் கோபத்தின் சுவடும், ஏனையோரில் பற்றின் சுவடும் இருக்கின்றன. ஏதாவதொன்று காணப்படுகிறது. அனைவரின் குணாதிசயங்கள் சீர்திருத்தப்பட வேண்டும். மிக, மிக இனிமையானவர்கள் ஆகுங்கள். இதனாலேயே ஆடும், சிங்கமும் ஒரே ஓடையில் நீர் அருந்துகின்ற உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே துன்பம் விளைவிக்கின்ற மிருகங்கள் ஏதும் இல்லை. இந்த விடயங்களை எவரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றனர். பெரும் சிரமத்துடனேயே அவர்களின் கர்மவேதனை முடிக்கப்பட்டு, அவர்கள் கர்மாதீதம் ஆகின்றனர். பலர் சரீர உணர்வு உடையவர்கள் ஆகின்றனர். அவர்கள் யார் தங்களுக்கு இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என்பதையும் அறியார்கள். எவ்வாறு நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெறமுடியும்? சிவபாபா கூறுகின்றார்: இவரின்றி, நான் எவ்வாறு உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்க முடியும்? இவர் எனது இரதமாக நிச்சயிக்கப்பட்டவர். சரீர உணர்வு உடையவராகி, பிழையான செயல்கள் செய்வதனால், உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். பின்னர் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும்? மிகத் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். கல்வி அறிவில்லாதவர்கள், கற்றவர்களின் முன்னால் தலை வணங்க வேண்டியிருக்கும். பாரதத்தின் வரலாறும், புவியியலும் அது இருக்க வேண்டியது போன்று சம்பூரணமாக இல்லை என மக்கள் கூறுகின்றனர். இதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், ஆத்ம உணர்வு ஸ்திதி தேவைப்படுகின்றது. இத்தகையவர்களாலேயே உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். உங்களில் எவரும் இதுவரை கர்மாதீத நிலையை அடையவில்லை. இவருக்கு (பிரம்மாபாபா) பல பொறுப்புக்கள் உள்ளன. அனைத்தும் நாடகத்தின்படியே நடக்கின்றது என இவர் புரிந்து கொண்டாலும், இவருக்குப் பல கவலைகள் இருக்கின்றன. ஆயினும், உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு, வித்தியாசமான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்கள் மேலும் அதிகளவு ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். உங்களின் மீது எந்தச் சுமையும் இல்லை. தந்தைக்குப் பல சுமைகள் உள்ளன. பிரஜாபிதா பிரம்மாவான இவரே தலைவர் ஆவார். எவ்வாறாயினும், சிவபாபா இவரினுள் இருக்கின்றார் என எவருமே அறியார். உங்களுக்கு இடையேயும், மிகக் குறைந்தளவினரே இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்கள். எப்போது பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது, அது பின்னர் எங்கே சென்றது என்ற இந்த உலக வரலாறையும், புவியியலையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எவ்வாறு அதன் வீழ்ச்சி ஏற்பட்டது? எவருமே இதை அறியார். நீங்கள் விளங்கப்படுத்தும்வரை எவருமே புரிந்து கொள்ள முடியாது. இதனாலேயே பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். பாடசாலைகளில் உள்ளவர்களுக்கும் எழுதி, அவர்கள் உலக வரலாறையும், புவியியலையும் காட்ட வேண்டுமெனக் கூறுங்கள். நீங்கள் வீழ்ச்சி பற்றிய சொற்பொழிவுகளையும் கொடுக்க வேண்டும். பாரதம் வைரம் போன்று இருந்தது; எவ்வாறு அது சிப்பி போன்று ஆகியது? இதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தன? நாங்கள் இவை அனைத்தையும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் ஆகாய விமானத்தில் இருந்து துண்டுப் பிரசுரங்களையும் போடலாம். விளங்கப்படுத்துபவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். அரசாங்கமும் இதையே விரும்புகின்றது. எனவே, நீங்கள் டெல்லியிலுள்ள அரசாங்க மண்டபமான, விக்யான்பவனுக்கு அனைவரையும் அழைக்க வேண்டும். அது பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டும். அத்துடன் அனைவருக்கும் அழைப்பிதழ்களையும் அனுப்புங்கள். “நாங்கள் முழு உலகினதும் வரலாறையும், புவியியலையும் ஆரம்பத்தில் இருந்து, இறுதிவரை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம்”. அவர்கள் தாமாகவே வந்து போவார்கள். இதில் பணம் என்ற கேள்வியில்லை. உதாரணமாக நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது, உங்களுக்கு ஒரு பரிசைக் கொடுக்க அவர் விரும்பினால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. நீங்கள் அதைச் சேவைக்குப் பயன்படுத்தலாம், ஆனால் உங்களுக்காக அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. தந்தை கூறுகின்றார்: உங்களிடம் இருந்து கிடைக்கும் தானத்தினால் நான் என்ன செய்ய முடியும்? நான் உங்களுக்கு முழுப் பிரதிபலனையும் கொடுக்க வேண்டியிருக்கும். நான் மிகவும் திறமையான பங்குத்தரகர். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்பிற்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால், தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு, முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் குணாதிசயங்களைத் தொடர்ந்தும் சீர்திருத்துங்கள்.2. மிக, மிக இனிமையாகவும், குளிர்ச்சியானவர்களாகவும் ஆகுங்கள். உங்களுக்குள்ளே உள்ள தீய ஆவிகளான கோபத்தையும், பற்றையும் அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மரியாதை கொடுக்கின்ற உங்கள் பதிவேட்டை மிகவும் நல்லதாக வைத்திருந்து, பெருஞ் சந்தோஷ தானங்களைச் செய்யும் ஒரு புண்ணியாத்மா ஆகுவீர்களாக.இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் மரியாதை கொடுக்கின்ற உங்கள் பதிவேட்டை மிகவும் நல்லதாக எங்கும் வைத்திருக்க வேண்டும். இந்த இசைத்தட்டு எங்கும் ஒலிக்கும். மரியாதையைக் கொடுத்து, மரியாதையைப் பெறுங்கள். இளையவர்களுக்கும் மரியாதை கொடுங்கள், முதியவர்களுக்கும் மரியாதை கொடுங்கள். மரியாதை கொடுக்கின்ற உங்கள் பதிவேடு இப்பொழுது வைத்திருக்கப்பட வேண்டும், அப்பொழுதே நீங்கள் சந்தோஷ தானத்தைக் கொடுக்கின்ற, மகாதானியாகவும், ஒரு புண்ணியாத்மாகவும் ஆகுவீர்கள். ஒருவருக்கு மரியாதை கொடுப்பதால், அவரைச் சந்தோஷம் அடையச் செய்வது ஒரு பெரும் புண்ணியச் செயல்; அதுவே உண்மையான சேவை.
சுலோகம்:
ஒவ்வொரு கணத்தையும் இறுதிக் கணமாகக் கருதியவாறே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் சதா தயாராக இருப்பீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
ஞானம் எனும் பாடம் உள்ளதைப் போல், சேவை எனும் பாடமும் உள்ளது. நம்பிக்கை உடைய புத்தியை உடையவர்களாலேயே முன்னணியில் ஓர் இலக்கத்தைக் கோர முடியும். நீங்கள் பொறுப்பான ஆத்மாக்கள் என்பதால், காலையிலிருந்து இரவு வரை, உங்களுக்கான ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்து கொள்ளுங்கள், உங்கள் தினசரி நாட்குறிப்பேட்டை உருவாக்குங்கள். நீங்கள் சாதாரணமான ஆத்மாக்கள் அல்ல, ஆனால் உலக உபகாரி ஆத்மாக்கள். ஒரு நபரின் மகத்துவத்திற்கு ஏற்பவே, அவரின் தினசரி நேர அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும்.
மாதேஸ்வரிஜியின் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.
1.தமோகுணி மாயையின் விரிவாக்கம்: ‘சதோகுணி, ரஜோகுணி, தமோகுணி’ என்ற மூன்று வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை மிகச்சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். இம்மூன்று குணங்களும் ஒரேநேரத்தில் காணப்படுகின்றன என மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் விவேகம் எங்களுக்கு என்ன கூறுகின்றது? இம் மூன்று குணங்களும் தொடர்ந்தும் ஒரேநேரத்தில் இருக்கின்றனவா? அல்லது மூன்று குணங்களின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறாக காணப்படுகின்றனவா? இம் மூன்று குணங்களும் ஒரேநேரத்தில் காணப்படுவதில்லை என்றே விவேகம் கூறுகின்றது. சத்தியயுகமாக இருக்கும் போது, சதோகுணியாகவும், துவாபரயுகமாக இருக்கும்போது ரஜோகுணியாகவும், கலியுகத்தில் தமோகுணியாகவும் உள்ளது. சதோவாக இருக்கும்போது, ரஜோ அல்லது தமோ குணம் இருப்பதில்லை. ரஜோவாக இருக்கும்போது, சதோகுணி இருக்க மாட்டாது. இவை மூன்றும் தொடர்ந்தும் ஒரே நேரத்தில் காணப்படுவதாக மக்கள் நம்பி வருகின்றனர். இவ்வாறு கூறுவது ஒரு பெருந்தவறு. ஒரு நபர் உண்மையைக் கூறுவதுடன், எப்பாவத்தையும் செய்யாதிருந்தால் அவர் சதோகுணி என மக்கள் நம்புகின்றார்கள். ஆனால் விவேகம் கூறுவது என்னவெனில், நாங்கள் சதோகுணி எனும் போது அங்கு முழுமையான சந்தோஷம், அதாவது, முழு உலகமும் சதோகுணி என்பதே அர்த்தமாகும். உண்மையைக் கூறும் ஒருவர் சதோகுணி எனவும், பொய் பேசும் ஒருவர் கலியுகத்து தமோகுணியானவர் எனவும் உங்களால் கூறமுடியாது. உலகம் இவ்வாறாகவே தொடர்ந்துள்ளது. நாங்கள் அதைச் சத்தியயுகம் எனக் கூறும் போது, முழு உலகமும் சதோகுணியாகவும் சதோபிரதானாகவும் உள்ளது என்பதே அதன் அர்த்தம். ஆம், முழு உலகமும் சதோகுணியாக இருந்த போது, ஒரு காலத்தில் சத்தியயுகம் அவ்வாறு இருந்தது. அந்த சத்தியயுகம் இப்பொழுது இல்லை. இப்பொழுது கலியுகத்து உலகம், முழு உலகமும் தமோபிரதான் இராச்சியம் என்பதாகும். இத்தமோபிரதான் உலகில் எவ்வாறு சதோகுணி இருக்க முடியும்? இப்பொழுது பிரம்மாவின் இரவு என்று அழைக்கப்படுகின்ற, காரிருள் உள்ளது. பிரம்மாவின் பகல் சத்தியயுகமும், பிரம்மாவின் இரவு கலியுகமும் ஆகும். எனவே, எங்களால் இரண்டையும் இணைக்க முடியாது.
2. உங்களைச் சுவையற்ற இக்கலியுகத்தில் இருந்து, அந்தச் சாரம் நிறைந்த சத்தியயுகத்திற்கு அழைத்துச் செல்வது கடவுளின் பணி மாத்திரமே.
இக்கலியுகம் ஏன் சுவையற்ற உலகம் என்று அழைக்கப்படுகின்றது? ஏனெனில் இவ்வுலகத்தில் சுவை எதுவும் இல்லை. அதாவது, எதிலும் சக்தி இல்லை. அதாவது, சந்தோஷம், அமைதி அல்லது தூய்மை இல்லை. உலகத்தில் நிலவிய சந்தோஷம், அமைதி, தூய்மை என்பன இல்லை. இவ்வுலகத்தில் ஐந்து விகாரங்கள் இருப்பதால், எந்த சக்தியும் இல்லாதுள்ளது. எனவே, இவ்வுலகம் பயத்தின் கடல் எனவும், கர்ம பந்தனங்களின் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதனாலேயே மக்கள் சந்தோஷமற்று, கடவுளை அழைக்கின்றார்கள். “கடவுளே, எங்களைக் கடலின் அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்”. நிச்சயமாக, பயமற்ற உலகம் ஒன்று இருப்பதையே, அதாவது, அவர்கள் செல்ல விரும்புகின்ற பயமற்ற உலகம் இருப்பதையே இது காட்டுகின்றது. இதனாலேயே இவ்வுலகம் பாவக்கடல் என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் இதிலிருந்து நீங்கி, புண்ணியாத்மாக்கள் இருக்கும் உலகிற்கு போக விரும்புகின்றார்கள். எனவே இரு உலகங்கள் உள்ளன: ஒன்று சாரம் நிறைந்த சத்தியயுகத்து உலகமும், மற்றையது இச்சுவையற்ற, கலியுகத்து உலகமும் ஆகும். இரு உலகங்களும் இப்பூமியில் உள்ளன. கடவுள் இப்பொழுது அச் சாரம் நிறைந்த உலகத்தை ஸ்தாபிக்கின்றார். அச்சா.