10.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களது முன்னேற்றத்திற்கான நாளாந்த அட்டவணையைப் பேணி நாள் முழுவதும் உங்கள் நடத்தை எவ்வாறிருந்தது என்று பாருங்கள். நீங்கள் யக்யத்துடன் நேர்மையாக இருந்தீர்களா என்று சோதித்துப் பாருங்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளின் மீது தந்தை பெருமளவு மரியாதை வைத்திருக்கின்றார்? அந்த மரியாதையின் அடையாளம் என்ன?பதில்:
தந்தையுடன் நேர்மையாக உள்ள குழந்தைகளின் மீதும் யக்யத்திற்கு உண்மையாக இருந்து எதனையும் மறைக்காதவர்களின் மீதும் தந்தை பெருமளவு மரியாதை வைத்திருக்கின்றார். அவர்களின் மீது மரியாதை இருப்பதால் அவர்களுக்குப் பெருமளவு அன்பைக் கொடுத்து அவர்களை ஈடேற்றுகின்றார். அவர் அவர்களைச் சேவைக்காகவும் அனுப்புகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு உண்மையைக் கூறி ஸ்ரீமத்தைப் பெற வேண்டிய விவேகமும் இருக்க வேண்டும்.பாடல்:
ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது, விட்டிற்பூச்சிகள் சுவாலையில் தங்களை அர்ப்பணிக்கின்றன.ஓம் சாந்தி.
இந்தப்பாடல் பிழையானது. ஏனெனில் நீங்கள் விட்டிற்பூச்சிகள் அல்ல. உண்மையில் ஆத்மாக்களை விட்டிற்பூச்சிகள் என்று அழைக்க முடியாது. பக்தர்கள் பல்வேறான பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்குத் தெரியாததால் அவர்கள் ‘நேற்றி நேற்றி’ (இதுவும் அல்ல, அதுவும் அல்ல) எனக் கூறுகிறார்கள். அவர்கள் நாஸ்திகர்கள். எனினும் அவர்கள் தம் மனதில் தோன்றும் பெயர்களை எல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் பிரம்மம், விட்டிற்பூச்சிகள் போன்ற பெயர்களையும் இடுகின்றார்கள். பரமாத்மா கற்களிலும் கூழாங்கற்களிலும் உள்ளார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் தந்தையை எவரும் மிகச்சரியாக இனங்காணாததால் தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. தந்தையின் அறிமுகம் சமயநூல்கள் போன்றவற்றில் கொடுக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தந்தை தனது அறிமுகத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கொடுத்துள்ளார். ஒருவர் தன்னை ஆத்மா எனக் கருதி தந்தையை நினைவு செய்வது புத்திக்குப் பெரியதொரு பணியாகும். இந்த நேரத்தில் அனைவரும் கல்லுப்புத்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆத்மாவிலும் புத்தி உள்ளது. ஆத்மாவின் அங்கங்களைக் (புலன்கள்) கொண்டு ஆத்மாவின் புத்தி தெய்வீகமானதா அல்லது கல்லானதா என்பது புரிந்துகொள்ள முடியும். அனைத்தும் ஆத்மாவிலேயே தங்கியுள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் என்பதால் ஆத்மாக்கள் எதனையும் செய்யலாம் என்றும் மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் மனிதர்களாக இருந்த பொழுதிலும் அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: இராவணனான மாயை, அவர்களின் புத்தியைக் கல்லாக்கி உள்ளாள். நாளுக்கு நாள் அவர்கள் தொடர்ந்தும் மேலும் மேலும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். மாயையின் ஆதிக்கமும் அதிகளவில் உள்ளதால் அவர்கள் தம்மைச் சீர் திருத்திக் கொள்வதில்லை. நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான அட்டவணையை இரவில் நீங்கள் எழுத வேண்டும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நான் தேவர்களைப் போன்று உணவு உண்டேனா? எனது நடத்தை நீதியாக இருந்ததா அல்லது ஒரு முட்டாளைப் போன்று இருந்ததா? ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையை நீங்கள் சோதிக்காது விட்டால் உங்களால் ஒருபொழுதும் முன்னேற முடியாது. மாயை பல குழந்தைகளையும் தொடர்ந்தும் அறைகின்றாள். சிலர் எழுதுகின்றார்கள்: இன்று எனது புத்தியின் யோகம், இன்ன இன்னாருடைய பெயரையும் வடிவத்தையும் நோக்கிச் சென்றது. இன்று நான் இந்தப் பாவத்தைச் செய்தேன். பலரிலும் ஒரு கைப்பிடி அளவினரே இவ்வாறு நேர்மையாகத் தமது அட்டவணையை எழுதுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறானவன், நான் என்ன செய்கிறேன் என்பதும் எவருக்கும் தெரியாது. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி தந்தையை நினைவுசெய்தால் மாத்திரமே புத்தியில் ஏதாயினும் நிலைத்திருக்கும். தந்தை கூறுகின்றார்: ஞானத்தை நன்றாக விளங்கப்படுத்துகின்ற பல நல்ல குழந்தைகள் இருந்த பொழுதிலும் அவர்களுக்கு யோகம் இல்லாதுள்ளது. அவர்களுக்கு முழுமையான இனங்காணுதல் இல்லாததாலும் புரிந்துகொள்ள முடியாததாலும் அவர்களால் பிறருக்கு அதனை விளங்கப்படுத்த முடியாதுள்ளது. முழு உலகிலும் உள்ள மக்கள் படைப்பவரையோ படைப்பையோ சற்றேனும் அறியாமல் உள்ளார்கள். ஆகையால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் இடம்பெறும். இன்னும் 5000 வருட காலப்பகுதியில் இந்த யுகம் மீண்டும் வரும், அப்பொழுது நான் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு வரவேண்டும். ஓர் இராச்சியத்தைப் பெறுவது சிறியதொரு விடயமல்ல. அதற்குப் பெருமளவு முயற்சி தேவை. மாயை உங்களை அதிகளவு தாக்குகின்றாள். பெரும் யுத்தம் இடம்பெறுகின்றது. குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. மிகவும் திறமைசாலிகளே குத்துச்சண்டையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சுயநினைவை இழக்கச் செய்கின்றார்கள். சிலர் கூறுகின்றார்கள்: பாபா மாயையின் பல புயல்கள் வருகின்றன, இவ்வாறெல்லாம் நடக்கின்றது. வெகுசிலரே உண்மையை எழுதுகின்றார்கள். உண்மையை மறைக்கின்ற பலரும் உள்ளனர். பாபாவிடம் எவ்வாறு உண்மையைக் கூறுவது என்பதையும் தாம் என்ன ஸ்ரீமத்தை எடுப்பது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அதனைப் பற்றிப் பேச முடியாதவர்களாக உள்ளார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்பது தந்தைக்குத் தெரியும். அவர்கள் உண்மையைப் பேசுவதற்கு மிகவும் வெட்கப்படுகின்றார்கள். அவர்கள் பேசுவதற்கே மிகவும் வெட்கப்படும் அளவில் அத்தகைய செயல்களைச் செய்கின்றார்கள். தந்தை பெருமளவு மதிப்பளித்து உங்களை ஈடேற்றுகின்றார். இவர் மிகவும் நல்லவர்; நான் இவரைச் சகலதுறை சேவைக்காக எங்காவது அனுப்புவேன். அவ்வளவே. அவர்கள் அகங்காரம் உடையவராகி மாயையினால் அறையப்பட்டுப் பின்னர் வீழ்கின்றார்கள். நிச்சயமாக உங்களை ஈடேற்ற வேண்டும் என்பதற்காக பாபா உங்களைப் பாராட்டுகின்றார். அவர் உங்களுக்குப் பெருமளவு அன்பைக் கொடுத்து உங்களை ஈடேற்றுகின்றார்: நீங்கள் மிக நல்லவர். நீங்கள் பௌகீகச் சேவை செய்வதிலும் மிகவும் சிறந்தவர். எவ்வாறாயினும் இலக்கு மிகவும் உயர்ந்தது என்பதையும் அவர் உங்களுக்கு மிகவும் சரியாகக் கூறுகின்றார். ஒருவரது சரீரத்தையும் சரீரத்தின் உறவுமுறைகளையும் துறந்து தன்னை ஓர் ஆத்மா என்று கருதும் முயற்சியானது புத்தியின் வேலையாகும். நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள். அத்தகைய மிகப்பெரிய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் தந்தையின் குழந்தைகளும் மாணவர்களும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஆவீர்கள். அவரே முழு உலகத்திற்கும் தந்தை. அவரையே அனைவரும் அழைக்கின்றார்கள். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இருப்பினும் அதற்கேற்ற மரியாதை அவருக்குக் கிடைப்பதில்லை. முக்கிய பிரமுகர்கள் வரும்பொழுது அதிகளவு மரியாதையுடன் உபசரிக்கப்படுகின்றார்கள். அதிகளவு ஆடம்பரமும் உள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். ஆனால் எவரும் தம்மைத் தூய்மையற்றவர் எனக் கருதுவதில்லை. மாயை முற்றாக அவர்களின் புத்தியைச் சீரழித்துள்ளாள். சத்தியயுகத்தின் கால எல்லை இத்தனை வருடங்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையால் தந்தை கூறுகின்றார்: அவர்கள் நூறுவீதம் விவேகமற்றவர்கள். அவர்கள் மனிதர்களாக இருந்த பொழுதிலும் அவர்கள் செய்வதைப் பாருங்கள். 5000 வருடங்களுக்கு மட்டுமே உள்ள ஒன்றை அவர்கள் நூறாயிரம் ஆண்டுகளுக்கு உரியது என்று கூறுகின்றார்கள். தந்தை வந்து இதனை விளங்கப்படுத்துகின்றார்: இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் 5000 வருடங்களின் முன்னரே ஆரம்பித்தது. அவர்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்த மனிதர்கள். இதனாலேயே அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அசுரத்தனம் நிறைந்தவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு, பகலும் இரவும் போன்றதாகும். இப்பொழுது அதிகளவு சண்டையும் வன்முறையும் உள்ளன. யுத்தத்திற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. இந்த யாகத்தில் முழு உலகமும் அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஆகையால் இதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன. அத்தகைய குண்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது அவர்களால் அவற்றைத் தயாரிப்பதை நிறுத்த முடியாது. குறுகிய காலத்தில் அனைவருமே அவற்றின் பலவற்றை வைத்திருப்பார்கள். ஏனெனில் விநாசம் மிகவும் விரைவில் இடம்பெற வேண்டும். அந்த நேரத்தில் வைத்தியசாலை போன்றவை எஞ்சியிருக்க மாட்டாது. எவருக்கும் எதுவும் தெரியாது. அது உங்கள் மாமியார் வீட்டிற்குப் போவதைப் போன்றதல்ல. விநாசத்தின் காட்சிகளைக் காண்பது சில சதங்களுக்கான விடயமல்ல. முழு உலகமும் எரிவதை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கும் தீப்பற்றி எரியும் காட்சிகளைக் காண்பீர்கள். முழு உலகமும் அழிய வேண்டும். இது மிகப்பெரிய உலகம். வானத்தை எரிக்க முடியாது; வானத்தின் கீழுள்ள அனைத்தும் அழிக்கப்படும். சத்தியயுகத்திற்கும் கலியுகத்திற்கும் இடையே பகலுக்கும் இரவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது. இங்கே பல மனிதர்களும் மிருகங்களும் பொருட்களும் உள்ளன. இதுவும் குழந்தைகளின் புத்தியில் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே பதிகின்றது. இதனைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இது 5000 வருடங்களுக்கான விடயமாகும். அங்கே தேவர்களின் இராச்சியம் இருந்தது. அப்பொழுது வெகுசில மனிதர்களே இருந்தார்கள். இப்பொழுது பலர் உள்ளனர். இது கலியுகம். இது நிச்சயமாக அழிக்கப்படும். தந்தை ஆத்மாக்களாகிய உங்களிடம் கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! அவர் புரிந்துணர்வுடன் நினைவு செய்யப்பட வேண்டும். ‘சிவசிவா’ என்று தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கின்ற பலரும் உள்ளனர். அவரைப் பற்றி அவர்களின் புத்தியில் எதையும் புரிந்துகொள்ளாத பொழுதும் சிறு குழந்தைகள் கூட இவ்வாறு கூறுகின்றனர். அவர் ஓர் ஒளிப் புள்ளி என்ற புரிந்துணர்வுடன் அவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. நாங்களும் அத்தகைய சிறு புள்ளிகளே. இந்தப் புரிந்துணர்வுடனேயே நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். முதலில் நீங்கள் உறுதியாக்க வேண்டிய விடயம்: நான் ஓர் ஆத்மா. பின்னர் தந்தையின் அறிமுகத்தை உங்கள் புத்தியில் மிகவும் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். அகநோக்குடைய குழந்தைகளால் மாத்திரமே இதனை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்: ஆத்மாவாகிய நான் ஓர் புள்ளியாவேன். ஆத்மாவாகிய நான் எனக்குள் எப்படி 84 பிறவிகளின் பாகம் பதிவாகியுள்ளது என்பதைப் பற்றியும் ஆத்மா மீண்டும் எவ்வாறு சதோபிரதான் ஆகுகின்றார் என்பதைப் பற்றியுமான ஞானத்தை இப்பொழுது பெறுகின்றேன். நீங்கள் அகநோக்குடையவர் ஆகும்பொழுதே உங்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இதற்குக் காலம் எடுக்கின்றது. இது உங்களின் இறுதிப் பிறவி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப உள்ளோம். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பது உங்கள் புத்தியில் உறுதியாக இருக்க வேண்டும். சரீரத்தின் உணர்வு குறைவடையும்போது மட்டுமே உங்கள் நடத்தையும் வார்த்தையும் சீராகும். இல்லாவிடின் நீங்கள் சரீரத்தில் இருந்து பற்றற்று இருக்காதபோது உங்கள் நடத்தை மேலும் சீரழியும். சரீர உணர்வுடையவர் ஆகுவதால் நீங்கள் அதையும் இதையும் கூறுகின்றீர்கள். யக்யத்துடன் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் மிகவும் கவனயீனமாக இருக்கின்றீர்கள். உங்கள் உணவு, பானம், சூழல் போன்றவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்னமும் அதிகளவு நேரம் தேவையாக உள்ளது. பாபா சேவை செய்கின்ற குழந்தைகளை நினைவுசெய்கின்றார். அவர்களே ஓர் அந்தஸ்தைக் கோருபவர்கள். நீங்கள் செய்வதை இட்டு மகிழ்ச்சியாக இருத்தல் என்றால் அது வறுத்த கொண்டைக் கடலையை மெல்லுவதைப் போன்றதாகும். இதில் நீங்கள் அகநோக்குடையவராக இருப்பது அவசியம். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் பொழுது சாதுரியமாக இருப்பது அவசியம். கண்காட்சிகளில் எவரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் சரியென அவர்கள் வெறுமனே சொல்கிறார்கள். இங்கு அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் பாபாவின் குழந்தைகளாகி விட்டீர்கள், நீங்கள் தந்தையிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. தந்தையின் சேவையைத் தொடர்ந்தும் முழுமையாகச் செய்வது மாத்திரமே உங்களுக்குள்ள ஒரேயொரு தொழிலாகும். அப்படி என்றால் நாள் முழுவதும் நீங்கள் இந்த ஞானக் கடலைக் கடைந்து கொண்டிருப்பீர்கள். இந்த பாபாவும் இந்த ஞானக் கடலைக் கடைந்து கொண்டிருப்பாராக இருக்கும். இல்லாவிட்டால் இவர் எப்படி ஓர் அந்தஸ்தைப் பெறுவார்? இவர்கள் இருவருமே குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றனர். இது செங்குத்தான ஏற்றம் என்பதால் உங்களுக்கு இரண்டு என்ஜின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு புகைவண்டி மலையில் ஏறும்பொழுது அதற்கு இரண்டு என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. சிலவேளைகளில் புகைவண்டி நின்றுவிடும், பின்னர் கீழே வருகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. எனது குழந்தைகளும் அவ்வாறே உள்ளனர். முயற்சி செய்து ஏறிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் நின்று விடுகின்றார்கள்; அவர்களால் மேலும் ஏற முடிவதில்லை. அவர்கள் கிரகணத்தையோ அல்லது மாயையின் புயலையோ அனுபவம் செய்கின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் முற்றாக விழுந்து துண்டுகளாக உடைந்து விடுகின்றார்கள். சிலர் சிறிதளவு சேவையைச் செய்த பின்னர் அகம்பாவம் ஏற்பட்டு விழுந்து விடுகின்றார்கள். தந்தையோடு தர்மராஜும் உள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அத்தகைய செயல்களைச் செய்யும்பொழுது பெரும் தண்டனையைப் பெற நேரிடும். அவர்கள் வெளியில் சென்று வாழ்வதே மேலானது. தந்தைக்கு உரியவராகி உங்கள் ஆஸ்தியைக் கோருவது என்பது உங்களின் மாமி வீட்டிற்குச் செல்வதைப் போன்றல்ல. தந்தைக்கு உரியவராகிய பின்னர் அத்தகைய செயலைச் செய்தால் நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் மேலும் அதிகமாகக் காயப்படுவீர்கள். ஒரு வாரிசு ஆகுவது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றல்ல! பிரஜைகள் சிலர் மிகவும் செல்வந்தர் ஆகுகின்றார்கள், அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அறியாமைப் பாதையில் கூட சிலர் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். சிலர் அந்தளவிற்கு நல்லவர்கள் கிடையாது. தகுதியற்ற குழந்தைகளிடம் தம் முன்னால் நிற்கவும் வேண்டாம் எனப் பெற்றோர் கூறுவதுண்டு. இங்கே ஓரிரு குழந்தைகள் என்ற கேள்வி இல்லை. இங்கே மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள். அதனால் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அகநோக்கு உடையவராக ஆக வேண்டும். அப்பொழுதே உங்களால் மக்களுக்கு விளங்கப்படுத்த முடியும். அப்பொழுது அவர்களும் தங்களை உங்களிடம் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பார்கள். அவர்கள் தாம் தந்தையை அதிகளவு இகழ்ந்ததையிட்டு மிகவும் வருத்தப்படுவார்கள். கடவுளைச் சர்வவியாபி என்று அழைப்பவருக்கோ அல்லது தானே கடவுள் என்று சொல்பவருக்கோ கிடைக்கும் தண்டனை சிறியதல்ல. அவர்களால் இலகுவாகத் திரும்பிச் செல்ல முடியாது. அவர்களுக்கு இது மேலதிகமானதொரு பிரச்சனையாக இருக்கும். நேரம் வரும்பொழுது தந்தை அவர்களின் கணக்கைக் கேட்பார். தீர்ப்பு சொல்லும் நேரத்தில் எல்லோருடைய கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. மக்களைப் பாருங்கள், அவர்கள் அமைதிக்கான பரிசைப் பல்தரப்பினருக்கும் வழங்குகின்றார்கள். உண்மையில் ஒரேயொருவரால் மாத்திரமே அமைதியை ஏற்படுத்த முடியும். ‘கடவுளின் ஸ்ரீமத்திற்கு ஏற்ப தூய்மையும் அமைதியும் செழிப்பும் உலகில் ஸ்தாபிக்கப்படுகின்றன’ எனக் குழந்தைகளாகிய நீங்கள் எழுத வேண்டும். ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. சமயநூலான ஸ்ரீமத் பகவத் கீதையின் மீது மக்கள் அதிகளவு மரியாதை வைத்துள்ளார்கள். ஒருவர் இன்னொருவரின் சமயநூலிற்கோ அல்லது வணக்க ஸ்தலத்திற்கோ ஏதாவது செய்து விட்டால் சண்டை ஏற்படுகின்றது. இந்த முழு உலகுமே எரிந்து அழிந்து விடும் என்பது உங்களுக்கு இப்போது தெரியும். அந்த ஆலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற அனைத்துமே தொடர்ந்தும் எரிக்கப்படும். எவ்வாறாயினும் அவை அனைத்தும் நடக்க முன்னர் நீங்கள் தூய்மையாக வேண்டும். இந்த அக்கறையே உங்களுக்குள் இருக்க வேண்டும். உங்கள் இல்லறத்தையும் நீங்கள் பராமரிக்க வேண்டும். பலரும் இங்கே வருகின்றார்கள்; நீங்கள் எல்லோரும் இங்கே ஆடுகள் போல் வாழ முடியாது. இது பெறுமதிமிக்க வாழ்வு என்பதனால் அது நன்றாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் குழந்தைகளை இங்கே அழைத்து வருவதும் நிறுத்தப்படும். இங்குள்ள ஒருவர் எவ்வாறு அமர்ந்திருந்து உங்கள் குழந்தைகள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்க முடியும்? குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும்பொழுது சிலர் நினைக்கின்றார்கள்: நாங்கள் வேறு எங்கேதான் போவது? நாங்கள் மதுவனத்திற்கு பாபாவிடம் போவோம். அப்போது இது ஒரு தர்மசாலை (யாத்திரீகர்களின் தங்குமிடம்) போன்று ஆகிவிடும். அவ்வாறாயின் அது எப்படி ஒரு பல்கலைக்கழகமாக இருக்க முடியும்? பாபா இப்பொழுது இதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார். ஒரு கட்டத்தில் எவரும் தங்களின் குழந்தைகளை இங்கு அழைத்து வர அனுமதி இல்லை என்ற கட்டளையை அவர் பிறப்பிப்பார். அப்பொழுது அந்தப் பந்தனமும் குறைக்கப்படும். தாய்மார்கள் மீது கருணை உணர்வுள்ளது. சிவபாபா மறைமுகமானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிலர் இவரை மதிப்பதே இல்லை. தாம் சிவபாபாவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள். சிவபாபா இவர் மூலமே விளங்கப்படுத்த வேண்டும் என்பதைக் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிலரை மாயை மூக்கால் பிடித்து அவர்களைப் பிழையான செயல்களைச் செய்யுமாறு செய்கின்றாள். அவள் விட்டு விடுவதில்லை. ஓர் இராச்சியத்தில் அனைவரும் தேவை. நீங்கள் இவற்றின் காட்சிகள் அனைத்தையும் இறுதியில் காண்பீர்கள். நீங்கள் தண்டனைக்கான காட்சிகளையும் காண்பீர்கள். சில குழந்தைகள் இக் காட்சிகளை முன்னர் கண்டிருந்த பொழுதும் அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துவதில்லை. சில குழந்தைகள் தாம் மூன்றாந் தரத்தினர் ஆகுவதற்கான முடிச்சொன்றைப் போட்டுள்ளதைப் போல் உள்ளது. அதனால் அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துவதில்லை. உண்மையில் அவர்கள் தமது சொந்தத் தண்டனைக்காக மிக நல்ல ஆயத்தங்களைச் செய்கின்றார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: உங்களை மூன்றாம் தரத்தினர் ஆக்கக்கூடிய வகையில் முடிச்சைப் போடாதீர்கள். நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதற்கான முடிச்சைப் போடுங்கள். சிலர் மிகவும் நன்றாக முடிச்சுப் போடுவதுடன் தமது அட்டவணையையும் நாளாந்தம் எழுதுகின்றார்கள்: இன்று நான் பிழையான எதனையும் செய்தேனா? பலரும் அத்தகைய அட்டவணையை எழுதினார்கள். எவ்வாறாயினும் அவர்கள் இப்போது இங்கில்லை. மாயை அவர்களைக் கீழே விழச் செய்து விட்டாள். நான் உங்களுக்கு அரைக்கல்பத்திற்கான சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். பின்னர் மாயை உங்களுக்கு அரைக்கல்பத்திற்குத் துன்பத்தைக் கொடுக்கின்றாள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அகநோக்கில் இருந்து உங்கள் சரீரத்தின் உணர்விற்கும் அப்பால் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உணவு, பானம், செயல்கள், நடத்தை ஆகியவற்றைச் சீராக்குங்கள். இப்பொழுது நீங்கள் செய்வதையிட்டு மகிழ்ச்சி அடைவதன் மூலம் கவனயீனமாக இருக்காதீர்கள்.2. இந்த ஏற்றம் மிகவும் செங்குத்தானது. ஆகையால் நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு செயலையும் மிகவும் எச்சரிக்கையுடன் செய்யுங்கள். அகங்காரம் கொள்ளாதீர்கள். பிழையான செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுக்கான தண்டனைக்கு நீங்களே ஆயத்தம் செய்யாதீர்கள். நிச்சயமாக இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுவதற்கான முடிச்சைப் போடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மேன்மையான ஆன்மீக ஸ்திதியால் சூழலை ஆன்மீகம் ஆக்குகின்ற இலகுவான முயற்சியாளர் ஆகுவீர்களாக.உங்களின் ஆன்மீக ஸ்திதியால் உங்களின் சேவை இடத்தின் சூழலை ஆன்மீகம் ஆக்குங்கள். அதனால் உங்களுக்கும் அங்கே செல்கின்ற ஆத்மாக்களுக்கும் இலகுவாக முன்னேற்றம் ஏற்படும். ஏனென்றால் வருகின்ற எல்லோரும் வெளிச் சூழல்களால் களைப்படைந்து விட்டார்கள். அத்துடன் அவர்களுக்கு மேலதிக ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. ஆகவே ஓர் ஆன்மீக சூழலின் ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்குங்கள். ஓர் இலகு முயற்சியாளர் ஆகி மற்றவர்களையும் அப்படி ஆக்குங்கள். உங்களிடம் வருகின்ற ஒவ்வோர் ஆத்மாவும் அவர்களால் இலகுவாக முன்னேறக் கூடிய இடமாக அதை அனுபவம் செய்ய வேண்டும்.
சுலோகம்:
ஆசீர்வாதங்களை அருள்பவராகி தொடர்ந்து நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளின் ஆசீர்வாதங்களை வழங்குங்கள்.அவ்யக்த சமிக்ஞை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
தந்தையும் நீங்களும் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். ஆகவே தொடர்ந்து ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுங்கள். உங்களின் பலவீனங்களையும் மனவிரக்தியையும் தந்தையிடம் ஒப்படையுங்கள். அவற்றை உங்களுடன் வைத்திருக்காதீர்கள். ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மட்டுமே உங்களுடன் வைத்திருங்கள். சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நடனம் ஆடுங்கள். தொடர்ந்து பாடுங்கள், தொடர்ந்து பிரம்மாபோஜனை உண்ணுங்கள்.