10.05.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.01.2010 Om Shanti Madhuban
நான்கு பாடங்களிலும் சுய மரியாதையின் அனுபவ சொரூபமாகி, உங்களின் அனுபவத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்.
இன்று, பிராமண உலகைப் படைப்பவரான பாப்தாதா, எங்கும் உள்ள தனது பிராமண உலகைப் பார்க்கிறார். முழு பிராமண உலகிலும் உள்ள ஒவ்வொரு பிராமணரும் ஒரு விசேடமான ஆத்மா ஆவார். நீங்கள் பல கோடிகளில் ஒருவர் ஆவீர்கள். ஏனென்றால், நீங்கள் சாதாரணமான ஒரு சரீரத்தில் வந்துள்ள தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். பாப்தாதாவை உங்களின் இதயங்களில் அமிழ்த்தியுள்ள குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா தனது இதயபூர்வமான அன்பை வழங்குகிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை இத்தகைய தந்தையால் நேசிக்கப்படுபவராக அனுபவம் செய்கிறீர்கள். அத்துடன் தந்தை உங்களின் இதயத்தில் அமிழ்ந்திருப்பதையும் அனுபவம் செய்கிறீர்கள். தந்தைக்கு, ஒவ்வொரு குழந்தையும் அதிகபட்சம் அன்பானவரும் அனைவராலும் நேசிக்கப்படுபவரும் ஆவார். குழந்தைகளான நீங்கள் அனைவரும், நீங்கள் யோகி வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று ஆத்மாக்கள் அனைவருக்கும் சவால் விடுத்துள்ளீர்கள்: நீங்கள் வெறுமனே யோகம் செய்பவர்கள் அல்ல, ஆனால் நீங்கள் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள். வாழ்க்கை என்பது இரண்டில் இருந்து நான்கு மணித்தியாலங்களும் மட்டும் அல்ல, வாழ்க்கை என்பது எல்லா வேளைக்கும் உரியது. எனவே, நடக்கும்போதும் அசையும்போதும் அனைத்தையும் செய்யும்போதும் நீங்கள் யோகி வாழ்க்கை வாழுகின்ற சதா யோகிகள் ஆவீர்கள். நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வேறு ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தாலென்ன, நீங்கள் கர்மயோகிகள். உங்களின் வாழ்க்கையின் இலட்சியம், சதா யோகிகள் ஆகுவதே ஆகும். உங்களின் யோகி வாழ்க்கையை இயல்பான வாழ்க்கையாக நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கியம் பிரகாசிப்பதை பாப்தாதா பார்க்கிறார். அவர் எதைப் பார்க்கிறார்? எனது ஒவ்வொரு குழந்தையிடமும் சுயமரியாதை உள்ளது, அத்துடன் அவர்கள் சுய இராச்சிய அதிகாரியும் சுய அதிபதியும் ஆவார்கள். ஏன்? எங்கு சுயமரியாதை உள்ளதோ, அங்கே சரீர உணர்வு இருக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, இன்றுவரை, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வகையான சுயமரியாதையைக் கொடுத்துள்ளார். நீங்கள் இப்போது உங்களின் சுயமரியாதையை நினைவு செய்து, தொடர்ந்து ஒவ்வொரு சுயமரியாதைக் கருத்தின் மணிகளை உருட்டினால், நீங்கள் பல வகையான சுயமரியாதையின் சொரூபங்கள் ஆகுவதுடன் அந்த சுயமரியாதையில் திளைத்திருப்பீர்கள். எவ்வாறாயினும், இப்போதும், குழந்தைகளில் ஒரு விடயத்தை பாப்தாதா விரும்புவதில்லை. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தமது சுயமரியாதையில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு தாம் சிரமப்படுவதாகச் சில குழந்தைகள் கூறும்போது, தாம் அதைச் செய்ய விரும்பினாலும் சிலவேளைகளில் அதற்கு முயற்சி தேவைப்படுவதாகக் கூறும்போது, சர்வசக்திவான் தந்தையால் குழந்தைகளின் முயற்சியைக் காணச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால், எங்கே அன்பு உள்ளதோ, அங்கே கடின உழைப்பு இருக்காது. எங்கே கடின உழைப்பு உள்ளதோ, அங்கே அன்பு குறைவாகவே உள்ளது.
இன்று, அமிர்த வேளையில், பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பிராமணர்களிடம் சுற்றுலா சென்றார். அவர் எதைக் கண்டார்? சில குழந்தைகள் தமது சுயமரியாதையுடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தாம் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாக நினைத்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இதை நினைத்தார்கள், இந்த சுயமரியாதையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் பாபா கண்ட ஒரு பலவீனம் என்ன? அவர்கள் சுய மரியாதையை நினைவு செய்தார்கள், அவர்கள் அதைப் பற்றிச் சிந்தித்தார்கள். ஆனால் சுய மரியாதையின் சொரூபமாக இருப்பதில், அனுபவத்தின் ரூபமாக இருப்பதில், அந்த அனுபவத்தின் அதிகார சொரூபமாக இருப்பதிலேயே பலவீனம் காணப்பட்டது. பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அனைத்திலும் மிகப்பெரிய அதிகாரம், அனுபவத்தின் அதிகாரமே ஆகும். சர்வசக்திவானே உங்களுக்கு சுயமரியாதையின் அனுபவத்தை வழங்கி உள்ளார். எனவே, அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அனுபவத்தின் சொரூபங்கள் ஆகுவதில்லை. குழந்தைகள் அமர்ந்திருக்கும்போது, அவர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பதையும் ஆனால் சிலர் மட்டுமே அனுபவத்தின் சொரூபங்கள் ஆகுவதையும் பாப்தாதா கண்டார். அந்த அனுபவத்தில், எந்த வகையான சரீர உணர்வு சிறிதளவேனும் உங்களை அதை நோக்கி இழுக்க முடியாது. எனவே, அனுபவத்தின் சொரூபம் ஆகுவதற்கு, செயலைச் செய்யும்போதும் கர்மயோகியாக இருக்கும் அனுபவத்தில் திளைத்திருப்பதே இப்போது அதிகளவில் தேவைப்படுகிறது. அந்த ரூபத்தில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு பாடத்திலும் அனுபவத்தின் சொரூபம் ஆகுங்கள். அது ஞானம், யோகம், தாரணை அல்லது சேவை எதுவாக இருந்தாலும், நான்கு பாடங்களிலும் அனுபவத்தின் சொரூபம் ஆகுங்கள். அனுபவசாலியாக இருக்கும் ஒருவரை மாயையாலும் அசைக்க முடியாது. இதனாலேயே, இன்று, குழந்தைகளான நீங்கள் அனைவரும் அனுபவத்தின் சொரூபங்கள் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். கேட்பதற்கும் அதைப் பற்றிச் சிந்திப்பதற்கும் அனுபவத்தின் சொரூபம் ஆகுவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது: நீங்கள் எதை நினைத்தாலும் உங்களை எந்த சுயமரியாதையில் நிலைநிறுத்த விரும்பினாலும் அந்த அனுபவத்தின் சொரூபத்தில் ஸ்திரமாகுங்கள். எவராலும் அந்த அனுபவத்தை அசைக்க முடியாது. ஏனென்றால், அது சுயமரியாதை (ஸ்வமான்) ஆகும். நீங்கள் சுய மரியாதையின் சொரூபமாக இருப்பதுடன் சுயமரியாதையின் அனுபவத்தில் ஸ்திரமாக இருக்கும்போது, எந்தவிதமான சரீர உணர்வும் அங்கே இருக்க முடியாது. உதாரணமாக, இருள் இருக்கும்போது, நீங்கள் ஒளியை ஏற்றினால், அந்த இருள் இயல்பாகவே மறைந்து விடும். நீங்கள் அந்த இருட்டை நீக்குவதற்கு எந்தவிதமான முயற்சியும் செய்யத் தேவையில்லை அல்லது அதை விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அனுபவத்தின் ஆளியைப் போட்டால், எந்த வகையான சரீர உணர்வும் அங்கே இருக்க முடியாது. பல்வேறு வகையான சரீர உணர்வுகள் உள்ளன. தந்தையும் உங்களுக்கு வெவ்வேறு வகையான சுயமரியாதைகளை வழங்கி உள்ளார். உங்களுக்கு சுயமரியாதையைப் பற்றித் தெரியும், நீங்கள் அதற்காக முயற்சியும் செய்கிறீர்கள். ஆனாலும், அந்த அனுபவத்திற்காக முயற்சி செய்வதற்கும் அந்த அனுபவத்தின் சொரூபம் ஆகுவதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. அதனாலேயே நீங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, இப்போது, இந்தக் காலத்திற்கேற்ப, தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற உங்களின் இலட்சியத்தை நீங்கள் நிறைவேற்றுகின்ற இந்தக் காலத்தில், நீங்கள் சிரமப்படுவதைக் காண பாப்தாதா விரும்பவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் கர்மயோகி வாழ்க்கை வாழ்கின்றேனா? வாழ்க்கை என்பது இயல்பானது, எல்லா வேளைக்கும் உரியது. அது சிலவேளைகளுக்கு உரியதல்ல. அனுபவத்தின் சொரூபம் ஆகுங்கள். யோகி வாழ்க்கை வாழ்வதுடன் அனுபவத்தின் ரூபம் ஆகுகின்ற உங்களின் இலட்சியத்தை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்களா? நீங்களே உங்களின் நெற்றியில் பிரகாசிக்கும் ஒளியாக இருப்பதை சதா அனுபவம் செய்ய வேண்டும். நீங்களே அந்த அனுபவத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். நினைவின் சொரூபமாக இருங்கள் - நினைவைக் கொண்டிருக்க வேண்டும் என்பவராக அன்றி, நினைவின் சொரூபமாக இருங்கள். நீங்கள் நினைவின் சொரூபமாக இருக்கிறீர்களோ இல்லையோ என்பதன் அடையாளம், நீங்கள் அந்த நினைவின் அனுபவ சொரூபமாக இருக்கும்போது, எந்தவொரு பணியையும் செய்வதற்கான சக்தியை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். பணிகள் வேறுபடலாம், ஆனால் அனுபவ சொரூபமாக இருக்கும் உங்களின் ஸ்திதி மாறக்கூடாது.
எனவே, இன்று, நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை பாப்தாதா கண்டார். அனுபவ சொரூபம் ஆகுவதற்கான உங்களின் முயற்சியில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருப்பதை பாபா பார்த்தார். ஒவ்வொரு குழந்தையின் மீதும் பாப்தாதா தனது இதயபூர்வமாக ஆழ்ந்த அன்பைக் கொண்டிருக்கிறார். அதனால் தான் நேசிக்கும் எவரும் சிரமப்படுவதைக் காண அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்தப் பாடத்தில் நீங்கள் சிரமப்பட வேண்டி இருந்தாலும் அல்லது ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டி இருந்தாலும், அதற்கான காரணம் என்னவென்றால், அனுபவ சொரூபமாக இருத்தல் உங்களிடம் குறைவாக இருப்பதே ஆகும். நீங்கள் ஒரு முயற்சியாளர், ஆனால் நீங்கள் சொரூபம் ஆகவில்லை. நான்கு பாடங்களிலும் சுய மரியாதையின் அனுபவ சொரூபமாக இருப்பதை ஒரு விநாடியில் அனுபவம் செய்யுங்கள். அப்போது சரீர உணர்வு உங்களுக்கு நெருக்கமாக வரமாட்டாது. ஒளிக்கு முகங்கொடுக்கும் போது இருளால் இருக்க முடியாது, நீங்கள் அதை விரட்ட வேண்டியதில்லை. எங்கே இருள் உள்ளதோ, அங்கே சிறிதளவு ஒளி இருக்கும் அல்லது ஒளியே இருக்காது என்பது இயல்பான விடயம். எனவே, நினைவு கூரப்படுகின்ற மகத்தான அதிகாரம், அனுபவத்தின் அதிகாரமே ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் ஓர் அனுபவத்தை மாற்ற முயற்சி செய்தாலும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் சீனியைச் சுவைத்து, அது இனிப்பானது என்பதை அனுபவம் செய்திருப்பீர்கள். ஆயிரக்கணக்கானோர் உங்களின் அபிப்பிராயத்தை மாற்ற முயற்சி செய்தாலும் உங்களால் அதை மாற்ற முடியுமா? எந்தவொரு பாடத்திலும், ஞானம், யோகம், தாரணை அல்லது சேவை என நான்கில் எதுவாக இருந்தாலும், அவற்றில் ஒன்றிலேனும் நீங்கள் சிரமப்படுவீர்கள் ஆயின், எதையாவது முடித்தல் என்று அர்த்தம். நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி பெறுதல், தாரணை என்ற பாடத்தில் உங்களின் சுபாவத்தை மாற்றுதல், யோகத்தில் அசைக்க முடியாதவராக இருத்தல், யோகி வாழ்க்கையை அனுபவம் செய்தல் இவற்றில் நீங்கள் சிரமப்பட வேண்டி இருந்தால் அல்லது ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், நீங்கள் அந்தப் பாடத்தில் அனுபவத்தின் ரூபம் ஆகவில்லை என்றே அர்த்தம். அனுபவம் என்பது சிலவேளைகளில் என்பதல்ல. அது ஒருவரின் இயல்பான சுபாவம் ஆகும். எனவே, சிரமப்படுவதற்கான காரணம் என்னவென்பதைக் கேட்டீர்களா? அனுபவத்தின் ஆசனத்தில் நீங்கள் அமர்ந்திருப்பதை அனுபவம் செய்யும்போது, ஆசீர்வாதத்தின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்யும்போது, அந்த வேளையில் நீங்கள் சிரமப்பட வேண்டுமா? அது ஓர் இயல்பான அனுபவம். இதனாலேயே, இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, அனைத்தும் சடுதியாக நடக்கப் போகின்றது. அது நடப்பதற்கு முன்னர் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லப் போவதில்லை. சடுதியாக இயற்கை பஞ்ச தத்துவங்களின் விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன. அது இப்போது ஆரம்பமாகி விட்டது. புதிய விடயங்களும் நிகழும்: சடுதியாக ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டு, குறுகிய நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து விட்டார்கள். தாம் அடுத்த நாள் உயிருடன் இருப்போமா இல்லையா என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா? இப்படிப்பட்ட பல விபத்துக்கள் வெவ்வேறு இடங்களில் சடுதியாக இடம்பெற ஆரம்பித்து விட்டன. ஒன்றுதிரட்டிய முறையில், ஒரே வேளையில், பலருக்கு சீட்டுக் கிழிக்கப்பட்டது. எனவே, இத்தகைய வேளையில், நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் எனச் சொல்ல மாட்டீர்கள், அல்லவா? என்றும் தயாராக இருத்தல் என்றால் ஓர் ஆசீர்வாதமாக அல்லது சுயமரியாதையாக எந்த எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தாலும் அதன் சொரூபமாக நீங்கள் ஆகுவதே ஆகும். இதனாலேயே, பாப்தாதா உங்களின் கவனத்தை இதில் ஈர்க்கிறார்: உங்களால் எந்தவோர் ஆசீர்வாதத்தையும் பலனுடையது ஆக்க முடியுமா? அத்துடன் அந்த ஆசீர்வாதத்தின் அல்லது சுய மரியாதையின் வடிவத்தில் அனுபவசாலி ஆகமுடியுமா? நீங்கள் நிச்சயமாக அப்படி ஆகவேண்டும். ‘நான் முயற்சி செய்கிறேன்’ என நீங்கள் சொல்லக்கூடும். நீங்கள் முயற்சி செய்யப் போவதானால், அதை இப்பொழுதில் இருந்தே செய்யுங்கள். ஏனென்றால், நீண்ட காலத்திற்கு உரிய இந்தப் பயிற்சி, அந்த வேளையில் உதவி செய்யும். முயற்சி செய்பவராக இருக்காதீர்கள். ஆனால் அனுபவசாலி ஆகுங்கள். ஏனென்றால், சர்வசக்திவான் உங்கள் அனைவருக்கும் அனுபவத்தின் அதிகாரத்தை வழங்கி உள்ளார். அதேபோல், நீங்கள் சரீர உணர்வில் அனுபவசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் சரீர உணர்வை நினைவு செய்து, நான் இன்னார் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் சரீரங்களுக்குப் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அது சரீர உணர்வு, இல்லையா? நான் இன்னார்: அது நீங்கள் இல்லை என்றும், நீங்கள் இதுதான் என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சொன்னாலும் அவர்கள் உங்களுக்காக வேறொரு பெயரைப் பயன்படுத்தினாலும் நீங்கள் அவர்கள் சொல்வதை நம்புவீர்களா? உங்களின் பெயரை நீங்கள் மறப்பீர்களா? உங்களின் பிறப்பின்போது பெயரின் தொடர்பில் கொடுக்கப்பட்ட சரீர விழிப்புணர்வானது மிகவும் உறுதியாகவும் இயல்பானதாகவும் ஆகியுள்ளது. யாராவது உங்களின் அதே பெயரால் இன்னொருவரை அழைத்தாலும் - அவர் உங்களை அழைக்கவில்லை, ஆனால் உங்களுடைய அதே பெயரால் இன்னொருவரை அழைக்கிறார். உங்களின் பெயரைக் கேட்ட உடனேயே, உங்களின் கவனம் அங்கே செல்லும். ஏனென்றால், அந்த நபர் உங்களை அழைக்கிறார் என்றே நீங்கள் நினைப்பீர்கள். இந்த சரீர உணர்வானது மிகவும் உறுதியாகி உள்ளது. அதேபோல், ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதிலும் உங்களின் சுய மரியாதையைப் பேணுவதிலும் உங்களுக்கே அதிபதியாக இருப்பதிலும் உறுதியானவர் ஆகுங்கள். உங்களின் வாழ்க்கை மாறிவிட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, நீங்கள் எதை மாற்றியுள்ளீர்கள்? சரீர உணர்வில் இருந்து, நீங்கள் சுயமரியாதைக்கு மாறி உள்ளீர்கள். அதன்பின்னர் நீங்கள் உங்களுக்கே அதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: நான் இந்த ஞானத்தின் சொரூபம் ஆகியுள்ளேனா? அல்லது, நான் இந்த ஞானத்தைக் கேட்டு, மற்றவர்களுக்கு அதைக் கூறுபவராக இருக்கிறேனா? கியான் என்றால் இந்த ஞானம் என்று அர்த்தம். இந்த ஞானத்தின் நடைமுறை ரூபத்திற்கு, ஞானம் ஒளி, ஞானம் சக்தி என்று சொல்லப்படுகிறது. இந்த ஞானத்தின் சொரூபம் ஆகுவது என்றால், நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும் அவை ஒளியாலும் சக்தியாலும் நிறைந்திருக்கும். அவை துல்லியமாக இருக்கும். இது இந்த ஞானத்தின் சொரூபமாக இருப்பது எனப்படுகிறது. இந்த ஞானத்தைப் பற்றிப் பேசுபவராக மட்டும் ஆகாதீர்கள், ஆனால் இந்த ஞானத்தின் சொரூபமாக ஆகுங்கள். யோகத்தின் சொரூபம் ஆகுவதென்றால், பௌதீக அங்கங்களை வென்றவர் ஆகுதல் என்று அர்த்தம். உங்களின் பௌதீக அங்கங்கள் அனைத்தின் மீதும் அதிபதி ஆகுங்கள். இதுவே யோகம், அதாவது, யுக்தியுக்தான வாழ்க்கை எனப்படுகிறது. நீங்கள் இந்த ஞானத்தினதும் யோகத்தினதும் சொரூபம் ஆகினால், உங்களால் இயல்பாகவே ஒவ்வொரு நற்குணத்தையும் கிரகிக்க முடியும். எங்கே இந்த ஞானமும் யோகமும் உள்ளதோ, நீங்கள் யோகியுக்தாக இருந்து, இயல்பாகவே நற்குணங்களைக் கிரகிப்பது இடம்பெறுகிறதோ, அப்போது ஒவ்வொரு கணமும் இயல்பாகவே சேவை இடம்பெறும். காலத்திற்கேற்ப, நீங்கள் உங்களின் மனம், வார்த்தைகள், செயல்கள், உங்களின் உறவுமுறைகளின் அன்பினால் சேவை செய்ய முடியும். சேவை தொடர்ந்து இடம்பெற வேண்டும். சேவையும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் இடம்பெறும். உதாரணமாக, பிராமண குடும்பத்தில், ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ சிறிது சோகமாக இருந்தால், தனது முயற்சியில் சிறிது மந்தமாக இருப்பதுடன் சம்ஸ்காரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தால், நீங்கள் அந்தத் தொடர்பில் உள்ள ஆத்மாவிற்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஒத்துழைப்பை அல்லது அன்பையும் வழங்குங்கள். அதுவே உங்களின் கணக்கில் சேமிக்கக்கூடிய புண்ணியச் சேவை ஆகும். அது கீழே விழுந்துள்ள ஒருவரை ஈடேற்றக்கூடிய புண்ணியச் செயல் ஆகும். உங்களின் உறவுகளுக்கும் தொடர்பில் உள்ளவர்களுக்கும் சேவை செய்வதே ஓர் உண்மையான சேவையாளரின் கடமை ஆகும். சேவை என்பது நீங்கள் பெறுகின்ற அல்லது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற சேவை மட்டும் அல்ல. சேவையானது இயல்பாகவே உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் தொடர்ந்து இடம்பெற வேண்டும். பல தடவைகள், மற்றவர்களுடனான தொடர்பில், ஒருவரின் சுபாவம் அல்லது சம்ஸ்காரம் இருக்க வேண்டியது போல் இல்லாமல் இருப்பதைச் சில குழந்தைகள் பார்ப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். எவ்வாறாயினும், ‘இவர் எப்படியும் இப்படித்தான், அவர் ஒருபோதும் மாறப் போவதில்லை, இவருக்குச் சேவை செய்வதில் நேரம்தான் வீணாகும்’ என்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால், இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பது சரியாகுமா? நீங்கள் பஞ்சபூதங்களை சதோபிரதான் ஆக்கக் கூடியவர்கள், நீங்கள் பஞ்ச பூதங்களை மாற்றுவீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். எவ்வாறாயினும், அவர் ஒரு மனித ஆத்மா, தன்னை ஒரு பிராமணர் என்று அழைப்பவர். ஆனால் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார். நீங்கள் பஞ்சபூதங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதற்காக சவால் விட்டுள்ளீர்கள். ஆனால் அவரோ ஓர் ஆத்மா ஆவார். உங்களுடன் ஓர் உறவுமுறையைக் கொண்டிருப்பவர். எனவே, ஓர் உண்மையான சேவையாளர் நிச்சயமாக நல்லாசிகளைக் கொண்டிருந்து, அவருக்குச் சேவை செய்யும் புண்ணியத்தைச் சம்பாதிப்பார். ‘இவர் எப்போதும் இப்படித்தான், அவர் ஒருபோதும் மாறப் போவதில்லை’ எனக் கூறுவது - இவை நல்லாசிகள் இல்லை. இவை சூட்சுமமான வெறுப்பு உணர்வுகள் ஆகும். எவ்வாறாயினும், அவர் உங்களின் சகோதரன் அல்லது சகோதரி ஆவார், குறைந்த பட்சம் ‘எனது பாபா’ எனக் கூறுகிறார். ஓர் உண்மையான சேவையாளர், தனக்கு சேவை செய்யாதவர்களுக்கும் நல்லாசிகளைக் கொண்டிருப்பதன் மூலம் தனது புண்ணியக் கணக்கில் சேமிப்பார். ஏற்கனவே விழுந்து விட்டவர்களை மேலும் கீழே தள்ளாதீர்கள். அவர்களை உயர்த்தி விடுங்கள். அவர்களுக்கு உங்களின் ஒத்துழைப்பைக் கொடுங்கள். இதுவே ஓர் உண்மையான சேவையாளராக, ஒரு புண்ணியாத்மாவாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: சேவை செய்வதற்காக இந்தளவு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நான் கொண்டிருக்கிறேனா? இதுவே அனுபவத்தின் அதிகாரியாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, இப்போது நீங்கள் அனுபவத்தின் ரூபமாகி, உங்களின் அனுபவத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார்.
நான்கு பாடங்களிலும் அனுபவத்தின் சொரூபங்கள் ஆகி, அனுபவத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகின்றவர்கள், எந்தவொரு பலவீனத்தையும் நீக்குபவர்கள், தங்களில் இந்தளவு கவனத்தைச் செலுத்துபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் உங்களின் மனதின் கையை உயர்த்துகிறீர்கள், அல்லவா? உங்களின் பௌதீகக் கையை அல்ல, ஆனால் உங்களின் மனதின் கை. அதை உயர்த்துங்கள்! உங்களின் மனதின் கையை உயர்த்துங்கள். ஏனென்றால், சிவராத்திரியின் போது பாப்தாதா பெறுபேறுகளைக் கேட்பார். எவரின் பலவீனத்தின் சம்ஸ்காரமும் உங்களின் மனதிலுள்ள நல்லாசிகளைக் குறைத்துவிடக் கூடாது. அவரின் சம்ஸ்காரம் பின்தங்கி இருக்கிறது, ஆனால் உங்களின் நல்லாசிகளைக் குறைக்கும் அளவிற்கு அது சக்திவாய்ந்தது. தந்தை பிரம்மா எதைப் பார்க்கவில்லை, எதைச் செய்யவில்லை? பொறுப்பைக் கொண்டிருந்த போதும் இறுதியில் அனைவருக்கும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் மிக்க மூன்று கற்பித்தல்களை வழங்கிய பின்னரே அவர் பிரிந்து சென்றார். உங்களுக்கு அவை நினைவிருக்கின்றன, அல்லவா? நீங்கள் அந்த மூன்று வார்த்தைகளை நினைவு செய்கிறீர்கள்தானே? அசரீரிநிலை, அகங்காரம் அற்றிருத்தல், விகாரம் அற்றிருத்தல் என்ற ஸ்திதியால் அவரும் அவ்யக்த் ஆகினார். தான் கர்ம வேதனையை அனுபவிக்கும் உணர்வை அவர் எவருக்கும் கொடுக்கவில்லை. அவரின் கர்ம வேதனை இப்போது முடிவடைகிறது என்று யாராவது புரிந்து கொண்டார்களா? என்ன நடந்தது? அவர் அவ்யக்த் ஆகினார். தேவதை ஆகுகின்ற ஆசீர்வாதத்தைத் தந்தை பிரம்மா நடைமுறையில் செய்து காட்டினார். தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள்! ‘எனது பாபா’ என நீங்கள் கூறுகிறீர்கள், தந்தை என்ன கூறுகிறார்? நீங்கள் எனது குழந்தைகள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் இத்தகைய நல்லாசிகளைக் கொண்டிருப்பது அவசியம். எவருடைய சுபாவத்தையும் பார்க்காதீர்கள். சுபாவங்களில் முரண்பாடு உள்ளது என்பதைத் தந்தை அறிவார். எவ்வாறாயினும், சுபாவங்களில் ஏற்படும் எந்தவிதமான முரண்பாடும் உங்களின் அன்பால் முடிக்கப்பட வேண்டும், அது உறவுமுறையை முடிக்கக் கூடாது. பணியை வெற்றி அடைய விடாமல் இருப்பது என்பது சரியானதல்ல. இது ஒரு குடும்பம். இது என்ன குடும்பம்? இது இறைகுடும்பம். பிரபு பரிவார். எந்தவொரு காரணத்தாலும் அன்பிலே குறைவு ஏற்படக்கூடாது. அப்படி இருக்கிறதா? அன்பு குறைவாக உள்ளதா? நிச்சயமாக அன்பு, அதாவது, நல்லாசிகள் இருக்க வேண்டும். ஒருவர் எப்படி இருந்தாலும் இது இறை குடும்பம். நீங்கள் இறை குடும்பத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள், எனவே குடும்பம் என்றால் அன்பு என்று அர்த்தம். இந்தக் குடும்பத்தில் அன்பு இல்லாவிட்டால், இது ஒரு குடும்பம் அல்ல. இந்த வேளையில் மட்டுமே இந்த இறை குடும்பம் உள்ளது. வேறு எவருக்கும் அன்றி, இறைவனால் மட்டுமே இத்தகைய பெரிய குடும்பத்தைக் கொண்டிருக்க முடியும். எனவே, சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், இதுவும் உங்களின் முயற்சிகளில் ஒரு தடையை ஏற்படுத்துகிறது. நீங்கள் தடைகளில் இருந்து விடுபடும்போது மட்டுமே, உங்களால் அனுபவசாலியாகி, உங்களின் அனுபவத்தின் அதிகாரத்தால் மற்றவர்களையும் அனுபவசாலிகளாக ஆக்க முடியும். அச்சா.
எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து, இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் தந்தை இருக்கிறார், தந்தையின் இதயத்திலும் ஒவ்வொரு குழந்தையும் இருக்கிறார். இத்தகைய பெரிய குடும்பத்தைப் பார்க்கும்போது, மதுவனவாசிகளுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது: ஆஹா மதுவனமே! ஆஹா! மதுவனம் எப்படியும் அனைவரின் புகலிடம் ஆகும். இதனாலேயே நீங்கள் அனைவரும் மதுவனத்திற்கு ஓடோடி வருகிறீர்கள். இப்போது, நீங்கள் விரைவாகத் தந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் நிச்சயமாக நான்கு பாடங்களிலும் அனுபவத்தின் சொரூபங்கள் ஆகவேண்டும். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் இருந்தும் வந்துள்ள குழந்தைகள் இங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இவை அனைத்தையும் பார்க்கும்போது அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த வேளையில் இந்த வசதிகளும் விஞ்ஞானமும் முன்னேறுகின்றன. உலகில் பல புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன, ஆனால் அவை உங்களின் நன்மைக்கான வசதிகள் ஆகும். அவர்கள் பல நல்ல கண்டுபிடிப்புக்களை உருவாக்குகிறார்கள். தொலைவில் இருந்தாலும், நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். எனவே, இந்த வசதிகளைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான அதிக, அதிக அன்பையும் நினைவுகளையும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக இத்தகைய விசேடமான குழந்தைகளுக்கு நமஸ்தே.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தேவதையின் ரூபமாகி, இந்த ஞான ஒளியால் முயற்சிப் பாதையை இலகுவானதாகவும் தெளிவானதாகவும் ஆக்குவீர்களாக.ஒரு தேவதையின் வாழ்க்கையில் ஒளி மற்றும் சக்தி இரண்டும் புலப்படும். எவ்வாறாயினும், ஒளி மற்றும் சக்தி ரூபமாக ஆகுவதற்கு, உங்களிடம் கடையும் சக்தியும் சகித்துக் கொள்ளும் சக்தியும் இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதிற்கு கடையும் சக்தி தேவை. உங்களின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சகித்துக் கொள்ளும் சக்தியைக் கிரகிக்க வேண்டியது அவசியம். அப்போது, நீங்கள் பேசும் வார்த்தைகளும் நீங்கள் செய்யும் செயல்களும் இவற்றிற்கு ஏற்ப இருக்கும். இந்த இரண்டு சக்திகளையும் நீங்கள் கொண்டிருக்கும் போது, முயற்சிக்கான பாதை அனைவருக்காகவும் இலேசாகவும் தெளிவாகவும் இருக்கும்.
சுலோகம்:
வீணாகப் பேசுவது என்றால் ஏனைய பலரைக் குழப்புவதாகும்.அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
குழந்தைகளான நீங்கள் சடப்பொருளின் அதிபதிகள் ஆவீர்கள். எனவே, சடப்பொருளின் இந்த விளையாட்டுக்களைப் பார்க்கும்போது, நீங்கள் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். சடப்பொருள் குழப்பத்தை விளைவித்தாலும் அல்லது உங்களுக்கு அழகான விளையாட்டுக்களைக் காட்டினாலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சடப்பொருளின் அதிபதிகளான ஆத்மாக்கள், அந்தக் காட்சிகளை பற்றற்ற பார்வையாளர்களாக அவதானித்து, இரசிப்பார்கள். அவற்றால் பயப்பட மாட்டார்கள். இதனாலேயே, தபஸ்யாவுடன் கூடவே உங்களின் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியின் ஆசனத்தில் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பதைப் பயிற்சி செய்யும்படி பாப்தாதா குறிப்பாக உங்களைத் தூண்டுகிறார்.