10.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்கள் புத்திகளை அழியாத இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புவதற்காகவே தந்தை வந்துள்ளார். இந்த ஞான இரத்தினம் ஒவ்வொன்றும் நூறாயிரம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தது.
கேள்வி:
மறைமுகமான தானத்திற்கு ஏன் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது?பதில்:
ஏனெனில் உலகம் அறியாத, மறைமுகமான தானமாகிய, இந்த ஞான இரத்தினங்களைத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதாலாகும். பின்னர் இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதால், குழந்தைகளான நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இதுவும் மறைமுகமானதே. இதில் யுத்தம் அல்லது வெடிமருந்துகள் போன்ற எதுவுமோ அல்லது எவ்விதச் செலவுமோ இல்லை. தந்தை உங்களுக்கு ஒரு மறைமுகமான முறையில் இராச்சியத்தைத் தானம் செய்வதால், மறைமுகமான தானத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.ஓம் சாந்தி.
இரட்டை ஓம்சாந்தி! ஒரு “ஓம் சாந்தி” சிவபாபாவாலும், மற்ற “ஓம்சாந்தி” பிரம்மா தாதாவாலும் கூறப்பட்டது. அவர்கள் இருவரினது ஆதிதர்மமும் அமைதியாகும். இருவரும் அமைதிதாம வாசிகள் ஆவார்கள். குழந்தைகளாகிய நீங்களும் அமைதி தாமவாசிகளே. அசரீரி உலகவாசிகளாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகப் பௌதீக உலகிற்கு வந்தீர்கள், ஏனெனில் இது ஒரு நாடகம் ஆகும். இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி, அதாவது, உச்சி முதல் அடி வரையிலான ஞானத்தால் உங்கள் புத்திகள் நிறைந்துள்ளன. கடவுளே அதிமேலானவர். பின்னர், அவருடன் அவருடைய குழந்தைகளும் உள்ளார்கள். இவ்விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைத் தவிர, வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் கடவுளின் பாடசாலையில் கற்கின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: ஒரேயொரு கடவுளே உள்ளார். பத்து முதல் இருபது வரையான கடவுள்கள் இல்லை. ஒரேயொருவரே சகல சமயங்களினதும் ஆத்மாக்களின் தந்தை ஆவார். பின்னர் தந்தை உலகைப் படைக்கும் பொழுது, பிரஜாபிதா பிரம்மாவும் (மக்களின் தந்தை) உள்ளார். சிவனை மக்களின் தந்தை என்று அழைக்க முடியாது. மக்கள் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருகின்றார்கள். ஆத்மாக்கள் தங்கள் சம்ஸ்காரங்களிற்கு ஏற்ப பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசிக்கின்றார்கள். பின்னர் மக்களின் தந்தையான பிரம்மா இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை மக்களின் தந்தையான பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைத்தார் என நினைவுகூரப்படுகின்றது. மக்கள் அவரை அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! உலகம் தூய்மையற்றதாகி, முடிவடையப் போகும் தறுவாயிலேயே அதனைத் தூய்மை ஆக்குவதற்காகத் தந்தை வருகின்றார். தந்தை ஒரேயொரு தடவையே வருகின்றார் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும்; அவர் வேறெந்தக் காலத்திலும் வருவதில்லை. நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் நாடகத்தின் நடிகர்கள். அனைவரினதும் செயலையும், அதாவது, ஒவ்வொருவரும் என்ன பாகத்தை நடிக்கின்றார்கள் என்பதை ஒரு நாடகத்தின் நடிகர்கள் அறிந்திருக்க வேண்டும். அவை சிறிய எல்லைக்கு உட்பட்ட பாகங்களாகும். அந்த நாடகங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்கின்றார்கள். நீங்களும் அவற்றைச் சென்று பார்க்கின்றீர்கள். நீங்கள் விரும்பினால் அவற்றைப் பற்றி எழுதுவதுடன், அவற்றை நினைவும் செய்யலாம். அவை சிறிய நாடகங்கள். இது சத்;தியயுக ஆரம்பம் முதல் கலியுக இறுதிவரையான மிகப்பெரிய, எல்லையற்ற, நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் இப்பொழுது பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையரிடம் இருந்து எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியையும், எல்லைக்கு உட்பட்ட சொத்தையும் பெறுவீர்கள். தமது முன்னைய பிறவியில் தானங்கள் செய்ததால், அவர்கள் ஒரு பிறவியில் அவ்வாறு அரசர்கள் ஆகுகின்றார்கள் என்று பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அவர்கள் தங்களுடைய அடுத்த பிறவியிலும் மீண்டும் அரசர்கள் ஆகுவார்கள் என்றில்லை. சத்தியயுகத்தில் அரசர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும் இருந்த நீங்கள், உங்களுடைய இராச்சியம் மறைந்து விடுகின்றது என நினைக்கக்கூடாது. பக்தி மார்க்கம் மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது, அவர்கள் (துவாபர யுக அரசர்கள்) பெருமளவு தானதர்மம் செய்வதால், ஓர் இராச்சியத்தினுள் வருகின்றார்கள். எவ்வாறாயினும் அந்த அரசர்கள் விகாரம் உடையவர்கள். பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நீங்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். அது தற்காலிகச் சந்தோஷமாகும். இப்பொழுது மாத்திரமே துன்பம் உள்ளது. தமோபிரதான் ஸ்திதியிலும் நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டுள்ளீர்கள். சண்டை, சச்சரவுகள் என்ற கேள்வியே இல்லை. அவை அனைத்தும் பின்னரே நடைபெறுகின்றன. சனத்தொகை நூறாயிரக் கணக்கில் இருக்கும்பொழுதே சண்டை முதலானவை ஆரம்பிக்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் சத்திய, திரேதா, துவாபர யுகங்களில் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். தமோபிரதான் ஸ்திதி ஆரம்பிக்கும் பொழுதே, சிறிதளவு துன்பம் இருக்கின்றது. இப்பொழுது அனைத்துமே தமோபிரதானாக உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது தமோபிரதான் உலகம். இது ஓர் எல்லையற்ற நாடகம் என்பது உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து எவராலுமே விடுதலையடைய முடியாது. மக்கள் தாங்கள் வேதனைப்படுவதால், விரக்தியடையும் பொழுது, கடவுள் ஏன் இத்தகைய ஒரு நாடகத்தை உருவாக்கினார் என வினவுகின்றார்கள். கடவுள் அதனை உருவாக்காது விட்டிருந்தால், உலகமே இருந்திருக்க மாட்டாது; எதுவுமே இருக்காது. படைப்பவரும், படைப்பும் உள்ளன. சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக முடிவு வரையிலான இதன் விபரங்கள் உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறை ரீதியில் காண்பீர்கள். உங்களுக்கு அனைத்தும் முற்கூட்டியே கூறப்பட மாட்டாது. கல்பத்தின் 5000 ஆண்டுகளில் ஒரு சிறிய பகுதியே இப்பொழுது எஞ்சியுள்ளது. அது முற்கூட்டியே உங்களுக்குக் காண்பிக்கப்பட மாட்டாது. அனைத்தையும் நீங்கள் அவை நிகழும்பொழுதே பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிப்பீர்கள். முன்னைய கல்பத்தில் மிகச்சரியாக நிகழ்ந்ததைப் போன்று, எது நிகழவுள்ளதோ, அது நிகழும். அதற்கான ஆயத்தங்கள் இப்பொழுது நடைபெறுவதை உங்களால் காண முடிகின்றது. விநாசம் நிச்சயமாக நடைபெறும். அனைத்திற்குமான ஆயத்தங்கள் இப்பொழுது நடைபெறுகின்றன. இவை அனைத்துமே நாடகத்தில் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் நிச்சயமாக நடைபெறும். குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாக்களான நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் இங்கே சதோபிரதானாக வேண்டும். இவை அனைத்தையுமே நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை மறைமுகமான முறையில் வந்து, மறைமுகமான முறையில் உங்களுக்கு இந்த ஞானத்தைத் தருகின்றார். உலகிலுள்ள எவருக்குமே இது தெரியாது. நீங்கள் ஒரு மறைமுகமான முறையில் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். அதனைப் பற்றிய சப்தம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்தத் தானம் முற்றிலும் மறைமுகமானது எனக் கூறப்பட்டுள்ளது. தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு மறைமுகமான முறையில் அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றார். தந்தை எவ்வாறு மறைமுகமானவராக இருக்கின்றார் என்பது எவருக்குமே தெரியாது. பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் எங்கு செல்கின்றீர்கள் என்பதையோ அல்லது என்ன செய்கின்றீர்கள் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாபா எவ்வாறு மறைமுகமானவராக இருக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் குழந்தைகளாகிய உங்களை ஒரு மறைமுகமான வழியில் உலக அதிபதிகள் ஆக்குகின்றார். எவ்வித யுத்தமோ, வெடிமருந்துகளோ, செலவுகளோ இல்லை. இங்கே ஒரு சிறிய கிராமத்தைக் கைப்பற்றுவதற்கு அதிகளவு சச்சரவுள்ளது, அதிகளவு வன்முறை உள்ளது. தந்தை வந்து, ஒரு மறைமுகமான முறையில் உங்களுக்குத் தானம் செய்கின்றார். அவர் அழியாத இந்த ஞான இரத்தினங்களினால் உங்கள் புத்திகளை நிரப்புகின்றார். மக்கள் கூறுகின்றார்கள்: பண்டாரியான (பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புபவர்), கள்ளங்கபடமற்ற பிரபு சிவனே, என் புத்தியை நிரப்புங்கள்! சிவபாபா உங்கள் புத்தியை அழியாத இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வோர் இரத்தினமும் நூறாயிரக்கணக்கான ரூபாக்கள் பெறுமதியானது. நீங்கள் எத்தனையோ இரத்தினங்களைத் தானம் செய்கிறீர்கள். நீங்கள் அத்தகைய தானிகள் ஆகுகின்றீர்கள்! அதுவும் மறைமுகமானது. தேவர்கள் பல்வேறு ஆயுதங்கள், கரங்கள் முதலானவற்றுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையிலேயே அவ்வாறு எதுவுமே இருக்கவில்லை. சத்தியயுகத் தேவர்களுக்கு அத்தனை பல கரங்கள் இல்லை. கலியுகத்தில் தேவர்களுக்குப் பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் விநாசத்திற்காகக் குண்டுகள் வைத்திருப்பதால், வாள், அம்பு, வில்லினால் எதனைச் செய்வார்கள்? நீங்கள் ஞான வாளைப் பற்றிப் பேசுவதால், அவர்கள் அதனை ஓர் ஆயுதம் எனப் புரிந்துகொண்டு விட்டார்கள். அவ்வாறாக எதுவுமே இல்லை. நீங்கள் மறைமுகமான தானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் இந்த மறைமுகமான தானத்தை அனைவருக்கும் கொடுக்கின்றீர்கள். பாபா உங்களுக்கு ஸ்ரீமத்தைத் தருகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். கடவுளிடம் இருந்தே ஸ்ரீமத் வருகின்றது. நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணன் ஆகுவதற்கே இங்கே வருகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் “சகல நற்குணங்களும் நிரம்பியவர்களும், 16 சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்களும், தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களும்” என்று அழைக்கப்படுகின்றார்கள். அத்தேவர்களிடம் மாத்திரமே தெய்வீகக் குணங்கள் உள்ளன. அதன்பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. அது முழுமையான பூரண சந்திரனின் ஒளி நன்றாக இருந்து, ஒரு சிறு கீற்று மாத்திரமே எஞ்சியிருக்கும்வரை படிப்படியாகத் தேய்வதைப் போன்றதாகும்; அது முழுமையாக மறைவதில்லை. நிச்சயமாக ஒரு கீற்று எஞ்சியிருக்கின்றது, இதுவே புதிய சந்திரனின் முதல் நாள் எனப்படுகிறது. உங்களுடையது ஓர் எல்லையற்ற விடயம். நீங்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்கள் ஆகுகின்றீர்கள். தாய்மார்கள், கிருஷ்ணரின் வாயில் சந்திரனைக் கண்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அவை காட்சிகளுக்குரிய விடயங்கள் எனத் தந்தை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது முழுமையானவர்களாக வேண்டும். மாயை உங்களை முற்றிலும் கிரகணம் அடையச் செய்து விட்டாள். ஒரு கீற்று மாத்திரமே எஞ்சியுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கினீர்கள். அனைவரும் ஏணியில் கீழிறங்கி வேண்டும், அப்பொழுதே, அவர்களால் வீடு திரும்ப முடியும். உங்களில் ஒருசிலரே இப்பொழுது இருக்கின்றீர்கள். படிப்படியாக உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பலர் தமது கல்விகளில் சித்தி எய்துவதில்லை. படிப்படியாக உங்கள் நிலையங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரிக்கும். காலம் நெருங்கும் பொழுது உங்களிடம் என்ன இருக்கின்றது என அவர்கள் புரிந்து கொள்வார்கள். நாளுக்கு நாள், எண்ணிக்கை அதிகரிக்கும். சிறிது காலத்தில் நிலையங்கள் அனைத்தும் இல்லாமல் போய், அவை அனைத்தும் மூடப்படும் எனத் தாங்கள் நினைத்ததாக மக்கள் இப்பொழுது கூறுகின்றார்கள். ஆரம்பத்தில், இந்தப் பயத்தினால் பலர் விட்டுச் சென்றார்கள். அவர்கள் நினைத்தார்கள்: என்ன நிகழும் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இங்கேயோ அல்லது அங்கேயோ இல்லாதிருக்க முடியாது. ஆதலால் நாங்கள் இங்கிருந்து ஓடினால், நன்றாக இருக்கும். அவர்கள் ஓடி விட்டார்கள், இப்பொழுது அவர்களில் சிலர் திரும்பவும் வருகின்றார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்! இந்தக் கள்ளங்கபடமற்ற, கல்லுப்புத்தி உடையவர்களுக்கு அவர் எவ்விதச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர்களும் ஈடேற்றப்பட வேண்டும். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் கல்வியறிவு அற்றவன்! தந்தை கூறுகின்றார்: நீங்கள் எதையுமே கற்காதது மிக நன்று. நீங்கள் கற்றுள்ள சமயநூல்கள் முதலான அனைத்தையும் மறந்து விடுங்கள். நான் உங்களுக்குப் பெருமளவில் கற்பிக்கவில்லை. நான் உங்களுக்குக் கூறுகிறேன்: என்னை நினைவு செய்தால், இராச்சியம் உங்களுடையதாகும்! அப்பொழுது உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். ஒரு புத்திரன் பிறந்ததும், அவர் “பாபா” என்று கூறி, தனது ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றார். இங்கேயும் நீங்கள் அதற்கான உரிமையைக் கோருகின்றீர்கள். பாப்தாதாவை நீங்கள் நினைவு செய்ததும், இராச்சியம் உங்களுடையதாக ஆகுகின்றது. இதனாலேயே நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறுவதாக நினைவுகூரப்படுகின்றது. செல்வந்தர்களின் பாகம் இறுதியிலேயே உள்ளது. வறியவர்களின் முறையே முதலில் உள்ளது. அவர்கள் தாமாகவே உங்களிடம் வருவார்கள். கழிவறைகளைக் கழுவுபவர்களும் ஈடேற்றப்பட வேண்டும். சுதேசிகளின் புகழும் உள்ளது. அவர்கள் கூறுகின்றார்கள்: சுதேசி ஒருவர் உண்ட பாதிப் பழத்தை இராமர் உண்டார். உண்மையில் அது இராமருமல்ல, சிவபாபாவுமல்ல. ஆம், அவற்றை இந்தப் பிரம்மா உண்ண வேண்டியிருப்பது சாத்தியமே. சுதேசிகள் வருவார்கள். உதாரணமாக, அவள் ஒரு தோளியைக் கொண்டு வரும்பொழுது, பாபாவால் எவ்வாறு அதனை உண்ணாமல் மறுக்க முடியும்? சிவபாபா கூறுகின்றார்: நான் அதனை உண்ண மாட்டேன்! நான் “அபோக்தா” (அனுபவத்தின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவன்) ஆவேன். அனைவரும் உங்களிடம் வருவார்கள். அவர்களை ஈடேற்றுவதற்கு அரசாங்கமும் உங்களுக்கு உதவிபுரியும். நீங்கள் இயல்பாகவே தூண்டப்படுவீர்கள். பாபாவே ஏழைகளின் பிரபு. ஆகவே, நீங்கள் ஏழைகளுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். சுதேசிகளில் இருந்தும் பலர் வெளிப்படுவார்கள். அத்தகைய பெரிய விருட்சத்தில் இருந்து ஒரு தேவரேனும் தவற விடப்படுவதில்லை, ஏனெனில் அனைவரும் மற்றைய சமயங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: பக்தி செய்பவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். மரக்கன்று எவ்வாறு நாட்டப்படுகின்றது என்பதையும், எவ்வாறு பிராமணர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்பதையும் உங்களால் பார்க்க முடியும். சூரிய, சந்திர வம்சத்துத் தேவர்கள் ஆகுபவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். இந்த ஞானத்தை ஒரு தடவை கேட்டாலும் நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். காசியில் அர்ப்பணம் செய்யும் உதாரணத்தையும் பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். அவர்கள் சென்று, தங்களைச் சிவனுக்கு அர்ப்பணிப்பது வழக்கம். குறைந்தபட்சம் எதையாவது அவர்கள் பெற வேண்டும்! நீங்களும் உங்களை அர்ப்பணிக்கின்றீர்கள். நீங்கள் இராச்சியத்திற்காக முயற்சி செய்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் எந்த (சுவர்க்கம்) இராச்சியமும் இல்லை. எவராலும் வீடு திரும்ப முடியாது. என்ன நிகழ்கின்றது என்றால், அவர்கள் செய்துள்ள பாவங்களுக்கான தண்டனையை அனுபவம் செய்து, அந்த முறையில் தீர்த்துக் கொண்ட பின்னர் அவர்கள் புதிய பிறப்பொன்றை எடுக்கின்றார்கள், அவர்களது பாவங்களும் புதியதாக ஆரம்பிக்கின்றன. எவ்வாறாயினும் அனைவரும் இங்கேயே இருக்க வேண்டும். நீங்கள் முதல்தரமானவர்கள்; நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்கின்றீர்கள். அனைவரும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில் முழு மனித உலக விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டது. மனிதர்கள் அனைவருமே காரிருளில் இருப்பதுடன், கும்பகர்ண உறக்கத்திலும் உறங்குகின்றார்கள். ஒரு கும்பகர்ணன் மட்டும் இருப்பதில்லை, ஆனால் பலர் உள்ளனர். நீங்கள் எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும், அவர்கள் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதில்லை. முயற்சி செய்வதைத் தங்கள் பாகத்தில் கொண்டவர்களே, முயற்சி செய்வார்கள். அவர்களே தாயும் தந்தையுமானவரின் இதயத்தில் நுழைவதுடன், சிம்மாசனத்திலும் அமர்கின்றார்கள். பல புதல்விகள் கூறுகின்றார்கள்: பாபா, நான் எனது குழந்தைகளை ஏச வேண்டியுள்ளது. பாபா கூறுகின்றார்: அதனால் நீங்கள் பெருமளவு பாவத்தைச் சேமிக்க மாட்டீர்கள். நீங்கள் அழைக்கின்றீர்கள்: தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: இன்னமும் காமமே மிகக் கொடிய எதிரி. கோபத்தை எதிரி என்று கூறுவதில்லை. தாய்மார்களில் அவ்வளவு கோபம் இல்லை. ஆனால் ஆண்களோ பெருமளவு சண்டை இடுகின்றார்கள். தாய்மாராகிய உங்களைத் தந்தை முன்னணியில் வைத்துள்ளார்: “தாய்மார்களுக்கு வந்தனங்கள்!” வேறு இடங்களில் பெண்களிடம் கூறப்பட்டுள்ளது: உங்கள் கணவனே உங்கள் கடவுளும், உங்கள் குருவும் ஆவான், அவனின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். முடிச்சுப் போட்டவுடன் உடனடியாகவே அவள் தூய்மையற்றவள் ஆகுகின்றாள். அவள் கண்டது அத்தகைய கடவுளையே! இப்பொழுது இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது, அனைவரும் தொடர்ந்தும் மரணிப்பார்கள். விநாச காலத்தில் அன்பான புத்தியையும், அன்பற்ற புத்தியையும் கொண்டுள்ளவர்களைப் பற்றி பாபா விளங்கப்படுத்தி உள்ளார். உங்கள் புத்தியானது பரமாத்மா பரமதந்தை மீது அன்பு கொண்டுள்ளது. இவரினுள் சிவபாபா பிரவேசித்துள்ளார் என்பதையும், இவர் மூலமே நீங்கள் சிவபாபாவை கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள் என்பதையும் ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். அவர் அத்தகைய சின்னஞ்சிறிய ஒரு புள்ளி ஆவார்! இவர் சிவபாபாவின் ஒரு தற்காலிகமான இரதம், இவர் மூலமே இந்த ஞான யாகம் உருவாக்கப்பட்டுள்ளது, அது தொடர்ந்தும் வளரும். குழந்தைகளின் ஒவ்வொரு துளியினாலும் ஏரி தொடர்ந்தும் நிரம்புகின்றது. குழந்தைகளான நீங்கள் உங்களிடமுள்ள அனைத்தையும் தொடர்ந்தும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகின்றீர்கள். ஏனெனில் அனைத்துமே மண்ணோடு மண்ணாகப் போகின்றது, எதுவுமே எஞ்சப் போவதில்லை என உங்களுக்குத் தெரியும் ஆதலால் நீங்கள் கூறுகின்றீர்கள்: ‘குறைந்தபட்சம் இதுவேனும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படட்டும்’. குசேலரின் உதாரணமும் உள்ளது. குழந்தைகள், பாபாவுக்கு ஒரு கைப்பிடி அரிசியை அல்லது 6 முதல் 8 ரூபாய்களை அனுப்புகின்றார்கள். அற்புதமான குழந்தாய்! தந்தையே ஏழைகளின் பிரபு. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, இது மீண்டும் நிகழும். இன்னமும் பந்தனத்தில் இருப்பவர்களும் உள்ளார்கள். பாபா கூறுகின்றார்: அவர்கள் பாக்கியசாலிகள், ஏனெனில் அவர்கள் குறைந்தபட்சம் சிவபாபாவின் கரத்தையேனும் பற்றிக் கொண்டார்கள். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களும் வருகின்ற நாளும் வரும். அவர்கள் வேறெங்கே செல்ல முடியும்? முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் ஒரேயொரு கடையே உள்ளது. அனைவருமே தண்டனையை அனுபவம் செய்து, முக்தியடைய வேண்டும். இதுவே கணக்குத் தீர்க்கும் நேரம். அனைவருமே வீடு திரும்புவார்கள். இது மணவாளனின் ஊர்வலமாக இருக்கும். ஊர்வலம் எவ்வாறு திரும்பிச் செல்லும் எனும் காட்சிகளை நீங்கள் காண்பீர்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இதனைக் காண முடியாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்றுள்ள மறைமுகமான தானங்களின் பெறுமதியைப் புரிந்துகொண்டு, உங்கள் புத்திகளை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள். அனைவருக்கும் தொடர்ந்தும் மறைமுகமான தானங்களைக் கொடுங்கள்.2. கணக்குத் தீர்க்கும் இந்நேரத்தில் அனைவரும் வீடு திரும்பவுள்ள வேளையில், உங்களிடம் உள்ள அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அன்பான புத்தி உடையவர்கள் ஆகுங்கள். முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கள்ளங்கபடமற்றவராகவும் சர்வசக்திவானாகவும் இருந்தவண்ணம், மாயையை எதிர்கொள்ளும் சக்தியின் சொரூபம் ஆகுவீர்களாக.சிலவேளைகளில், அப்பாவித்தனம் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இலகுத்தன்மை, கள்ளங்கபடமற்ற ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. எவ்வாறாயினும், உங்களால் எவருக்கும் முகங் கொடுக்க முடியாதவாறு மிகவும் அப்பாவியாக ஆகாதீர்கள். இலகு சுபாவத்தைக் கொண்டிருப்பதுடன் கூடவே, உங்களுக்குள் முகங்கொடுக்கும் சக்தியும் சகித்துக் கொள்ளும் சக்தியும் இருக்க வேண்டியது அவசியம். எவ்வாறு தந்தை கள்ளங்கபடமற்ற பிரபுவாகவும் சர்வசக்திவானாகவும் இருக்கிறாரோ, அவ்வாறே, கள்ளங்கபடம் அற்றவராக இருப்பதுடன் கூடவே, நீங்கள் சக்தி சொரூபமாகவும் ஆகினீர்கள் என்றால், நீங்கள் மாயையின் குண்டால் தாக்கப்பட மாட்டீர்கள். எதிர்ப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, மாயை உங்களுக்குத் தலைவணங்குவாள்.
சுலோகம்:
உங்களின் இதயத்தில் நினைவெனும் கொடியை ஏற்றும்போது, வெளிப்படுத்தலின் கொடி ஏற்றப்படும்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
நினைவு யாத்திரையைக் குறிப்பாகச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். இந்த ஞானத்தின் சொரூபமாக இருப்பதில் அனுபவசாலி ஆகுங்கள். மேன்மையான ஆத்மாக்களான உங்களின் தூய, நலம் விரும்பும் மனோபாவமும் சக்திவாய்ந்த சூழலும் அழுது பரிதவிக்கும் மற்றும் அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு ஆனந்தம், அமைதி, சக்தியின் அனுபவத்தைக் கொடுக்கும்.