10.08.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதுடன் உங்கள் வயிறும் நிரம்புகிறது. உங்களை முற்றிலும் மனநிறைவுடைய ஆத்மாக்கள் ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார்.
பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பக்தி செய்வதில்லை. எனினும் நீங்கள் நிச்சயமாக இன்னமும் எவ்வாறு பக்தர்களாகவே இருக்கிறீர்கள்?பதில்:
உங்களுக்கு சரீர உணர்வு இருக்கும்வரை நீங்கள் பக்தர்களாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுவதற்காக கற்கிறீர்கள். நீங்கள் உங்கள் பரீட்சைகளில் சித்தி எய்தி, கர்மாதீதமடையும்போது முற்றிலும் ஞானம் நிறைந்தவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் கற்க வேண்டிய அவசியமில்லை.ஓம் சாந்தி.
‘கடவுளும் பக்தர்களும், குழந்தைகளும் தந்தையும்’ என இரு விடயங்கள் உள்ளன. பக்தர்கள் பலர் உள்ளனர். ஆனால் கடவுள் ஒருவரே உள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கு இவ் விடயங்கள் மிக இலகுவாக உள்ளது. ஆத்மாக்கள் சரீரத்தினுடாக பக்தி செய்கிறார்கள். ஏன்? தந்தையான கடவுளைச் சந்திப்பதற்காகவே ஆகும். பக்தர்களாகிய நீங்கள் இப்போது நாடகத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் முற்றிலும் ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் ஆகியதும் இங்கு இருக்கமாட்டீர்கள். பாடசாலையில் கல்வி கற்கும்போது ஒரு பரீட்சையில் சித்தி எய்தினால் நீங்கள் அடுத்த வகுப்புக்குச் செல்வீர்கள். இப்போது கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். ஞானமுள்ள ஆத்மாக்கள் கற்கவேண்டிய அவசியமில்லை. கடவுள் பக்தர்களுக்கே கற்பிக்கிறார். ஆத்மாக்களாகிய நாங்கள் பக்தி செய்துகொண்டிருந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் எவ்வாறு பக்தியை விட்டு இந்த ஞானத்திற்கு வரலாம் எனத் தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். இப்போது நாங்கள் பக்தி செய்வதில்லையாயினும், இன்னமும் சரீர உணர்வுடையவர்களாக உள்ளோம். அந்த பக்தர்கள் கடவுளையேனும் அறிந்துகொள்ளவில்லை என உங்களுக்குத் தெரியும். அவர்களே கூறுகிறார்கள்: எங்களுக்குத் தெரியாது. தந்தை, முதற்தரமான பக்தர்களிடம் வினவுகின்றார்: நீங்கள் எந்தக் கடவுளின் பக்தர்களாக இருந்தீர்கள் என உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் ஒரே ஒரு கடவுளே இருக்க வேண்டும். இங்கோ கடவுள் பலர் உள்ளனர். அவர்கள் தங்களைத் தாங்களே கடவுள் எனத் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள். அது அறியாமை எனப்படுகின்றது. பக்தியில் காரிருள் உள்ளது. அது பக்தி மார்க்கமாகும். பக்தர்கள் பாடுகிறார்கள்: சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்போது அறியாமை எனும் காரிருள் அகன்றுவிடுகிறது. குருமாரால் இந்தத் ஞானத் தைலத்தைக் கொடுக்க முடியாது. பல குருமார் உள்ளனர். பக்தியில் நீங்கள் என்ன செய்தீர்கள், நீங்கள் யாரை நினைவு செய்தீர்கள், யாரை நீங்கள் வணங்கினீர்கள் என்பதெல்லாம் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்போது நீங்கள் அந்த இருள்மயமான பக்தியில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். ஏனெனில் இப்போது நீங்கள் தந்தையை அறிந்துகொண்டீர்கள். தந்தை உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள். அந்தச் சரீரங்கள் மூலமாக உங்கள் பாகங்களை நீங்கள் நடிக்கிறீர்கள். உங்கள் ஞானம் எல்லையற்றது. நீங்கள் தொடர்ந்தும் எல்லையற்ற பாகங்களை நடிக்கிறீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்டதில் இருந்து வெளியேறி எல்லையற்றதுக்குள் சென்றுவிட்டீர்கள். இந்த உலகமும் (சனத்தொகை) விரிவடைந்து வருகையில் எல்லையற்றதாகி, பின்னர் அது நிச்சயமாக எல்லைக்குட்பட்டதாகும். எவ்வாறு நீங்கள் எல்லைக்குட்பட்டதில் இருந்து எல்லையற்றதற்குள் சென்றீர்கள் என்பதையும், எல்லையற்றதில் இருந்து எல்லைக்குட்பட்டதனுள் சென்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிந்துகொண்டீர்கள். ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய நட்சத்திரம் போன்றவர். மக்கள் இதனை அறிந்திருப்பினும் அவர்கள் பிரமாண்டமான லிங்கத்தையே செய்கின்றார்கள். அவர்களால் ஒரு சின்னஞ்சிறிய புள்ளியை வழிபட முடியாதென்பதால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் மின்னுகின்றது. ஆனால் அவர்கள் எவ்வாறு அந்த நட்சத்திரத்தை வழிபடுவது? எவருக்குமே கடவுளைத் தெரியாது, ஆனால் அவர்களுக்கு ஆத்மாவைப் பற்றித் தெரியும். ஒவ்வொரு ஆத்மாவும் நெற்றியின் மத்தியில் வசிக்கின்றார், அவ்வளவே. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை எடுத்து தனது பாகத்தை நடிக்கின்றார் என்பது அவர்களின் புத்தியில் புகுவதில்லை. நீங்களே முதல் முதலில் பூஜை செய்தவர்கள். நீங்கள் மிகப் பெரிய லிங்கங்களைச் செய்வது வழக்கமாக இருந்தது. நாளுக்கு நாள் மக்கள் தொடர்ந்தும் மிகப் பெரிய இராவணனின் உருவங்களைச் செய்கிறார்கள். அவர்களால் இராவணனின் சிறிய உருவங்களைச் செய்ய முடியாது. மனிதர்கள் முதலில் சிறியவர்களாக இருந்து பின்னர் பெரியவர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் இராவணனை ஒருபோதும் சிறிய வடிவில் காட்டுவதில்லை. அவன் பெரியவனாகவோ அல்லது சிறியவனாகவோ ஆகுவதில்லை. அவன் பௌதீகமான ஒன்றல்ல. ஐந்து விகாரங்களுமே இராவணன் என அழைக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து தமோபிரதான் ஆகுவதனால், ஐந்து விகாரங்களும் வளர்ச்சியடைகின்றன. முன்னர் சரீர உணர்வு அதிகளவில் இருக்கவில்லை. ஆனால் அது தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அவர்கள் ஒன்றையே வழிபட்டனர், பின்னர் வேறு ஒன்றை வழிபட்டனர். பின்னர் அது அவ்வாறாக தொடர்ந்து வளர்ந்தது. ஆத்மாக்கள் தமோபிரதானாகி விட்டனர். அவர்கள் எப்போது சதோபிரதானாக இருந்தார்கள், எப்போது தமோபிரதான் ஆகினார்கள் என்ற உணர்வு உலகில் உள்ள வேறு எந்த மனிதர்களின் புத்தியிலும் இல்லை. மக்கள் இவ்விடயங்களையிட்டு முற்றிலும் அறியாமையில் உள்ளனர். இந்த ஞானம் கடினமானதல்ல. தந்தை வந்து முற்றிலும் இலகுவான ஞானத்தையே கொடுக்கின்றார். அவர் அதனையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இருப்பினும் கல்வியின் சாராம்சம் மட்;டுமே எஞ்சியுள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையின் குழந்தைகள் ஆவோம். நாங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினரே வெளித்தோன்றுவார்கள் என நினைவுகூரப்பட்டுள்ளது. பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே தந்தையை மிகச் சரியாக அறிந்தவர்கள். அவர்கள் வினவுகின்றார்கள்: தந்தை அவ்வாறு இருக்க முடியுமா? அனைவருக்கும் தங்கள் தந்தையைத் தெரியும், ஏன் அவர்கள் தந்தையை மறந்தார்கள்? இது ஒரு புதிர் விளையாட்டு என அழைக்கப்படுகின்றது. ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தை, மற்றையவர் எல்லையற்ற தந்தை. நீங்கள் இரு தந்தையரிடமிருந்தும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து குறைந்தளவு ஆஸ்தியையே பெறுகிறீர்கள். நாளடைவில் அது படிப்படியாகக் குறைந்து, எதுவுமே இல்லாதது போன்றுள்ளது. எல்லையற்ற தந்தை வரும்வரை உங்கள் வயிறு நிறைந்துவிட முடியாது. உங்கள் வயிறு முற்றிலும் வெறுமையாகிவிட்டது. தந்தை வந்து உங்கள் வயிற்றை நிரப்புகின்றார். ஒவ்வொரு விடயத்திலும் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு இதற்கு மேலும் எதுவுமே வேண்டியதில்லை என்ற அளவிற்கு உங்கள் வயிற்றை நிரப்புகின்றார். சரீரத்தை நீக்கிய ஓர் ஆத்மாவுக்கு பிராமணப் புரோகிதர் உணவளிக்கும்போது அந்த ஆத்மா மனநிறைவடைவது போன்று, அவரும் உங்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து முழுமையான மனநிறைவுடைய ஆத்மாக்களாக்குகின்றார். இது எல்லையற்ற மனநிறைவாகும். இதில் எவ்வளவு வேறுபாடுள்ளது எனப் பாருங்கள்! ஆத்மாக்களின் எல்லைக்குட்பட்ட மனநிறைவுக்கும் ஆத்மாக்களின் எல்லையற்ற மனநிறைவுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுள்ளது எனப் பாருங்கள். தந்தையை அறிந்துகொண்டதால் நீங்களும் மனநிறைவுள்ளவர்கள் ஆகிவிட்டீர்கள். ஏனெனில் தந்தை உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள். சிலர் இது இயற்கை (தத்துவம்) என்றும் தாங்கள் பிரம்மதத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள் என்றும் கூறுகின்றபோதிலும் எவருமே பிரம்மதத்துவத்துடன் கலக்க முடியாது எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். இது மீண்டும் மீண்டும் தொடர்கின்ற அநாதியான நாடகமாகும். இதையிட்டுக் குழப்பம் அடைவதற்கான அவசியமே இல்லை. நான்கு யுகங்களின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அது மீண்டும் அதேபோன்று தொடரும். ஒரேயொரு தந்தையும், ஒரு உலகமும் மாத்திரமே உள்ளது. சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் உலகம் உள்ளதென எண்ணி மக்கள் தாங்களே குழம்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அதற்காக அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் சந்திரனில் ஒரு துண்டு நிலம் வாங்கலாம் எனவும் சிந்திக்கின்றார்கள். ஆனால் அது எவ்வாறு சாத்தியம்? அவர்கள் யாரிடம் பணம் செலுத்துவது? அதுவே விஞ்ஞானத்தின் அகங்காரம் எனப்படுகிறது. எனினும் உண்மையில் அங்கு எதுவுமேயில்லை. மக்கள் பல விடயங்களைத் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார்கள். அது மாயையின் பகட்டாகும். அவர்கள் சுவர்க்கத்தை விடக் கூடுதலான பகட்டைக் காட்ட முயற்சிக்கின்றார்கள். அவர்கள் சுவர்க்கத்தை முழுமையாக மறந்துவிட்டார்கள். சுவர்க்கத்தில் அளவற்ற செல்வம் இருந்தது. ஓர் ஆலயத்தில் இருந்து மாத்திரமே அவர்கள் எவ்வளவு செல்வத்தை எடுத்துச் சென்றார்கள் எனப் பாருங்கள்! பாரதத்தில் மாத்திரமே அளவற்ற செல்வம் இருந்தது. பொக்கிஷக் களஞ்சியம் யாவும் நிரம்பி வழிந்தன. மஹமுது கஸ்னவி வந்து அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டான். அரைச் சக்கரத்திற்கு நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தீர்கள். களவு போன்ற எதுவுமே அங்கில்லை. அந்நேரத்தில் இராவண இராச்சியமும் அங்கிருக்கவில்லை. இராவண இராச்சியம் ஆரம்பித்ததும் களவெடுத்தல், கொள்ளையடித்தல், சண்டையிடுதல் போன்றனவும் ஆரம்பித்தன. மக்கள் இராவணன் என்ற பெயரைக் குறிப்பிட்டாலும் இராவணன் உயிருள்ளவன் அல்ல. இராவணன் என்பது விகாரம் நிலவுவதையே குறிக்கின்றது. மக்கள் இராவணனுக்கு என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள். அவர்கள் அதிகளவில் கொண்டாடுகின்றார்கள். நீங்களும் இராவணனின் கொடும்பாவியை எரித்து தசேராவைக் கொண்டாடி வந்தீர்கள். வழக்கமாக மக்கள் இராவணனின் கொடும்பாவியை எவ்வாறு எரிக்கின்றார்கள் எனப் பார்க்கச் செல்வார்கள். பின்னர் அவர்களே சென்று தங்கத்தைக் கொள்ளை அடிப்பார்கள். (மரங்களிலிருந்து மஞ்சள் நிற ஒட்டுண்ணியை சேகரிப்பார்கள்) அது என்ன? இப்போது நீங்கள் அவ்விடயங்கள் அனைத்தையும் பற்றி அதிசயப்படுகிறீர்கள். நீங்கள் என்னவாகியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் எந்தளவிற்கு பூஜித்தீர்கள் என்பதையும் பாருங்கள். ஒரு முக்கியமான நாளில் அவர்கள் தொடர்ந்து என்ன செய்கிறார்கள் என்பதையும் பாருங்கள். பக்தி மார்க்கம் என்பது பொம்மைகளுடன் விளையாடுவது போன்றதாகும். அது எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் அவர்கள் அதிகளவு செய்யவில்லை. பின்னர் விரிவாக்கம் படிப்படியாக இடம்பெற்றபோது நிலைமை என்னவாகியுள்ளது என்பதை இப்பொழுது பாருங்கள்! அவர்கள் ஏன் பெருமளவு பணத்தைப் படங்களிலும், ஆலயங்களைக் கட்டுவதிலும் செலவிடுகிறார்கள்? அவையனைத்தும் பணத்தை வீணாக்குவதாகும். அவர்கள் ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுவதில் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து மிகவும் அன்புடன் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் குழந்தைகளுக்கு பெருமளவு செல்வத்தைக் கொடுத்தேன். அவை அனைத்தையும் நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? என்னவாக இருந்த நீங்கள் இராவண இராச்சியத்தில் என்னவாகியுள்ளீர்கள் என்பதைப் பாருங்கள்! இது கடவுளின் விருப்பம் என நினைத்து நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றில்லை. அது கடவுளின் விருப்பமல்ல, அது மாயையின் விருப்பம். நீங்கள் இப்பொழுது துன்பமென்ற கேள்விக்கே இடமில்லாத‚ உங்கள் பாக்கியமான இறை இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். கடவுளின் விருப்பத்திற்கும் மாயையின் விருப்பத்திற்குமிடையில் எவ்வளவோ வேறுபாடு உள்ளது என்ற புரிந்துணர்வை நீங்கள் இப்போது பெற்றுள்ளீர்கள். அதுவும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகும். ஞான ஊசியைப் பெறுபவர் யார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஞான ஊசி இன்னாருக்கு நன்றாக ஏற்றப்பட்டுள்ளது, இன்னாருக்கு குறைவாக ஏற்றப்பட்டுள்ளது, இன்னாருக்கு எதுவுமே ஏற்றப்படவில்லை, இதனை பாபா மாத்திரமே அறிவார். அனைத்தும் உங்கள் சேவையிலேயே தங்கியுள்ளது. சேவையின் மூலமே பாபா உங்களுக்குக் கூறுவார்: இவருக்கு ஊசி ஏற்றப்படவேயில்லை. அவருக்கு சேவை எவ்வாறு செய்வது என்று எதுவுமே தெரியாது. இந்த ஞான ஊசியை அதிகமாக ஏற்றிக்கொண்ட சிலரும் உள்ளனர். மற்றும் சிலர் எதுவுமே ஏற்றிக்கொள்வதில்லை. கூறப்பட்டுள்ளது: சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்போது அறியாமை என்ற இருள் அகன்றுவிடும். பரமாத்மா பரமதந்தையே ஞானக்கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். அவர் கற்களிலும் கூழாங்கற்களிலும் உள்ளார் என மக்கள் கூறினார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற தந்தையே எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் என்ற நம்பிக்கை அதிகளவில் இருக்கவேண்டும். நீங்கள் பாடுகிறீர்கள்: எல்லையற்ற பாபா, நீங்கள் வரும்போது நாங்கள் உங்களுக்கே உரியவராகி உங்கள் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுவோம். பக்தி மார்க்கத்தில் நீங்கள் தந்தையையேனும் அறிந்துகொள்ளவில்லை. இந்தப் பாகம் இந்நேரத்திலேயே நடிக்கப்படவேண்டும். இப்பொழுதே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். கற்கின்ற இந்தப் பாகமும் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் தொடரும். தந்தை 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வருவார். ஆத்மாக்கள் அனைவரும் சதோதரர்கள். பின்னர் அவர்கள் ஒரு சரீரத்தை ஏற்றுத் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். மனித உலகம் தொடர்ந்து வளர்கிறது. ஒரு குறித்த தொகை ஆத்மாக்களே உள்ளனர். இறுதியில் மனிதர்களின் தொகை முடிவிற்கு வரும்போது, அதே தொகையான ஆத்மாக்களே இருப்பார்கள். நடிகர்கள் ஒருவர் அதிகமாகவோ ஒருவர் குறைவாகவோ இருக்கமுடியாது. நீங்கள் அனைவரும் எல்லையற்ற நடிகர்கள். நீங்கள் அனைவரும் அநாதியான ஒரு பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். இது அற்புதமே. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகமானவர்கள் ஆகியுள்ளீர்கள். இக்கல்வி மிக மேன்மையானது. ஞானக் கடலான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஏனைய அனைவரும் பக்திக் கடல்கள் ஆவார்கள். பக்தி மதிக்கப்படுவது போன்று இந்த ஞானத்துக்கும் மதிப்புண்டு. மக்கள் பக்தி மார்க்கத்தில் கடவுளின் பெயரால் பல தான தர்மங்களைச் செய்கிறார்கள். இது ஏனெனில் பெரிய வேதங்களிலும் சமய நூல்களிலும் இவை உருவாக்கப்பட்டுள்ளதால் ஆகும். பக்திக்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டின் புரிந்துணர்வை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். அத்தகையதொரு பரந்த புத்தி தேவைப்படுகின்றது. எவர்மீதும் உங்கள் பார்வை ஒருபோதும் ஈர்க்கப்படக்கூடாது. ‘நான் அரசனையோ அல்லது அரசியையோ பார்க்க விரும்புகிறேன்’ என நீங்கள் கூறுவீர்களா? பார்ப்பதற்கு அவர்களில் என்னதான் இருக்கின்றது? உங்கள் இதயத்தில் எவ்வித ஆசைகளையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. இவை யாவும் அழியப்போகின்றது. அனைவரிடமும் உள்ள அனைத்தும் அழியப்போகின்றது. வயிற்றுக்கு இரு சப்பாத்திகள் மட்டுமே தேவை. ஆனால் அதற்காகவும் மக்கள் பல பாவங்களைச் செய்கின்றார்கள். இந்நேரத்தில் உலகில் பாவச் செயல்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை. வயிறு உங்களைக் கொண்டு பல பாவங்களைச் செய்விக்கின்றது. மக்கள் தொடர்ந்தும் மற்றவர்களை அவதூறு செய்கிறார்கள். அவர்கள் அதிக பணத்தையும் சம்பாதிக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு பணத்தை மறைத்துவிட்டனர். ஆனால் அரசாங்கத்தினால் என்ன செய்ய முடியும்? எனினும் எவராவது மறைத்து வைத்திருப்பதற்காக எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும் அதனை மறைத்துவிட முடியாது. இப்பொழுது இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். சொற்ப காலமே எஞ்சியுள்ளது. பாபா கூறுகின்றார்: உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் விரும்பியவாறு எதையும் செய்யலாம். அதனைச் செய்ய உங்களுக்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் எப்போதும் உயர்ந்தே இருக்க வேண்டும். எப்பொழுதும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். தந்தை உங்களை முழு உலகிற்கும் அதிபதிகள் ஆக்குகின்றார். வானம், பூமி அனைத்தும் உங்களுடையதே. அதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. நீங்களே அதிபதிகளாக இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதம் அழிவற்ற பூமி என நினைவு கூரப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிக சந்தோஷம் இருக்கவேண்டும். ஒரு எல்லைக்குட்பட்ட கல்வியிலும் சந்தோஷமுள்ளது. ஆனால் இது எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கும் எல்லையற்ற கல்வியாகும். அத்தகையதொரு தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களால் இந்த பௌதீக வியாபாரம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதில் எதுவுமே இல்லை. ஆனால் தந்தையிடமிருந்து நாங்கள் பெறும் ஆஸ்தி என்ன? பகலுக்கும் இரவுக்கும் இடையில் வேறுபாடுள்ளது. உங்கள் பௌதீக வியாபாரத்தைத் தொடர்ந்தும் செய்துகொண்டே நீங்கள் இரட்டைக் கிரீடத்தைக் கோரமுடியும். குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே தந்தை வந்துள்ளதால் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து ஏனைய வேலைகள் அனைத்தையும் செய்யலாம். இது ஒரு பழைய உலகம் என நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதன் விநாசத்திற்கான ஆயத்தங்கள் யாவும் செய்யப்படுகின்றன. பெரியதொரு யுத்தம் ஆரம்பிப்பதற்கான பயம் ஏற்படக்கூடிய வகையில் அவர்கள் செயல்களைப் புரிகின்றார்கள். அவை யாவும் நாடகத்திற்கேற்பவே இடம்பெற வேண்டும். அதனை கடவுளே இடம்பெறச் செய்கின்றார் என்றில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்றில்லாவிடில் நாளையேனும் விநாசம் இடம்பெறும். நீங்கள் இப்போது கற்கின்றீர்கள். ஓர் புதிய உலகம் உங்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. இவ்விடயங்களை நீங்கள் உள்ளூர நினைவு செய்து சந்தோஷமடையுங்கள். பாபா இந்த ரதத்தை ஏற்றுக் கொண்டார், ஆனால் அவரிடம் எதுவுமே இல்லை. அவர் அனைத்தையும் துறந்துவிட்டார். நான் எல்லையற்ற இராச்சியத்தையே பெறும்போது, இவற்றை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது? பாபாவும் ஒரு பாடலை இயற்றியுள்ளார்: முதலாமவர் அல்லாவைக் கண்டுவிட்டதால், அவர் இந்தக் “கழுதைத்தனத்துடன்” என்ன செய்வார்? அவர் தான் வைத்திருந்த அநேகமானவற்றைக் கொடுத்துவிட்டு முற்றுமுழுதாக அனைத்தையும் மூடிவிட்டார். அவர் தனது சரீரத்தையும் பாபாவிடம் கொடுத்துவிட்டார். ஓஹோ, நான் உலக அதிபதியாகப் போகின்றேன்! நான் பல முறை அதிபதி ஆகியுள்ளேன். இது மிக இலகுவானது. வீட்டில் நீங்கள் இருந்தாலும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் முற்றிலும் மனநிறைவுடையவராகி, ஒரு பரந்த எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்கும்போது, உங்கள் பார்வை ஒருபோதும் வேறு எதிலும் ஈர்க்கப்பட மாட்டாது. இவை அனைத்தும் அழியப்போகிறது என்பதால் உங்கள் இதயத்தில் எவ்வித ஆசைகளையும் கொண்டிராதீர்கள்.2. உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான செயல்களில் ஈடுபடும்போது, சந்தோஷப் பாதரசம் எப்போதும் உயர்ந்திருக்கட்டும். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியை எல்லைக்குட்பட்ட அனைத்திலிருந்தும் நீக்கி, எப்போதும் எல்லையற்றதில் வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
தீவிர முயற்சியைச் செய்வதன் மூலம் இலேசாகவும் ஒளியாகவும் (டபிள்லைட்) ஆகி, களிப்பினை அனுபவம் செய்கின்ற அதேவேளையில் சகல சூழ்நிலைகளையும் கடந்து செல்வீர்களாக.“பொதுவாக நான் நன்றாகவே இருக்கின்றேன், ஆனால் ஏனையவர்களுடன் சம்ஸ்காரம் அல்லது சூழலின் பந்தனமோ உள்ளது” என சில குழந்தைகள் கூறுகின்றார்கள். என்ன காரணமாக இருந்தாலும், அது எவ்வாறானதாக இருந்தாலும், ஒரு தீவிர முயற்சியாளர் அது எதுவுமே இல்லை என அவற்றை கடந்து செல்கின்றார். அத்தகைய ஆத்மா சதா களிப்பினை அனுபவம் செய்கின்றார். அத்தகைய ஸ்திதியே பறக்கின்ற ஸ்திதி என அழைக்கப்படுகின்றது. பறக்கின்ற ஸ்திதியின் அடையாளம், இலேசாகவும் ஒளியாகவும் (டபிள் லைட்) இருப்பதாகும். அத்தகையதோர் ஆத்மாவை எவ் வகையான சுமையாலும், எந்தத் தளம்பலும் அடையச் செய்ய முடியாது.
சுலோகம்:
ஒவ்வொரு தெய்வீகக் குணத்தையும் ஒவ்வொரு ஞான விடயத்தையும் உங்களின் ஆதி சம்ஸ்காரம் ஆக்கிக் கொள்ளுங்கள்.