10.08.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.10.2006 Om Shanti Madhuban
சதா அன்பானவராக இருப்பதுடன்கூடவே, மகாதானியாகவும் ஆகுங்கள். அப்போது நீங்கள் தடைகளை அழிப்பவராகவும் தீர்வுகளின் சொரூபமாகவும் ஆகுவீர்கள்.
இன்று, அன்புக்கடலானவர் இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த தனது குழந்தைகளைச் சந்திக்க வந்துள்ளார். நீங்கள் எல்லோரும் சூட்சுமமான அன்பெனும் விமானத்தில் இருந்தே இங்கே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? நீங்கள் இங்கே சாதாரணமான விமானத்திலா அல்லது அன்பெனும் விமானத்திலா பறந்து வந்துள்ளீர்கள்? அன்பெனும் அலைகள் ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் வெளிப்படுகின்றன. அன்பு மட்டுமே இந்த பிராமண வாழ்க்கையின் அத்திவாரம். நீங்கள் எல்லோரும் இங்கே வந்தபோது, அன்பே உங்களை ஈர்த்து வந்தது, அப்படித்தானே? நீங்கள் ஞானத்தைப் பின்னரே கேட்டீர்கள். ஆனால், அன்பே உங்களை இறைவனுக்கு அன்பானவர் ஆக்கியது. நீங்கள் இறையன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்கள் என ஒருபோதும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டீர்கள். எனவே, இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் அப்படி ஆகிவிட்டீர்கள். இந்த அன்பானது சாதாரணமான அன்பு அல்ல, அது இதயபூர்வமான அன்பு. இது ஆத்ம உணர்வு அன்பு, உண்மையான அன்பு, சுயநலமற்ற அன்பு. இறைவனிடம் இருந்து வரும் இந்த அன்பானது மிக இலகுவாக உங்களுக்கு நினைவின் அனுபவத்தைக் கொடுக்கிறது. நீங்கள் நேசிக்கும் ஒருவரை மறப்பது கடினமானது. அவரை நினைப்பது கடினம் அல்ல. அன்பு ஒரு சூட்சுமமான காந்தம் ஆகும். அன்பானது உங்களை இலகு யோகி ஆக்குகிறது. அது உங்களைச் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கிறது. அன்புடன் எவரையாவது நினைவு செய்வதற்கு முயற்சி தேவையில்லை. அதன்பின்னர் நீங்கள் அன்பெனும் பழத்தை உண்பீர்கள். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் எங்கும் இருந்து வருவது அன்பின் அடையாளம் ஆகும். இரட்டை வெளிநாட்டவர்களும் இங்கே அன்புடன் ஓடோடி வந்துள்ளார்கள். குழந்தைகள் 90 நாடுகளில் இருந்து எப்படி ஓடோடி வந்திருக்கிறார்கள் எனப் பாருங்கள். இந்தத் தேசத்தின் குழந்தைகள் இறையன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்கள். ஆனால், இன்று, இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் விசேடமான அன்பு உள்ளதல்லவா? உங்களிடம் அன்பு உள்ளதல்லவா? உங்களிடம் அதிகளவு அன்பு உள்ளது! எவ்வளவு? அதை உங்களால் எதனுடனும் ஒப்பிட முடியுமா? எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. உங்களிடம் ஒரு பாடல் உள்ளது: வானத்தில் அந்தளவு நட்சத்திரங்களும் இல்லை, அந்தளவு நீரும் இல்லை. உங்களிடம் எல்லையற்ற அன்பு உள்ளது, எல்லையற்ற பரிவும் உள்ளது.
பாப்தாதாவும் அன்புக் குழந்தைகளான உங்களைச் சந்திப்பதற்காகவே இங்கே வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்புடன் நினைவு செய்கிறீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளான உங்களின் அன்பினால் வந்துள்ளார். எப்படி இந்த வேளையில் ஒவ்வொருவரின் முகத்திலும் அன்பெனும் ரேகை பிரகாசிப்பதைப் போல், இப்போது நீங்கள் மேலதிகமாக எதைச் சேர்க்க வேண்டிய தேவை உள்ளது? உங்களிடம் அன்பு உள்ளது. இது உறுதியானது. பாப்தாதாவும் உங்களிடம் உள்ள அன்பிற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சான்றிதழை வழங்குகிறார். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் இப்போது அதைக் கீழ்க்கோடிட வேண்டும்: சதா அன்பாக இருத்தல். எப்போதும் - சிலவேளைகளில் மட்டும் அல்ல. அன்பு துண்டிக்க முடியாதது. ஆனால் சதவீதத்தில் ஒரு வேறுபாடு உள்ளது. எனவே, வேறுபாட்டை (அந்தர்) முடிப்பதற்கான மந்திரம் என்ன? எல்லா வேளையும் மகாதானிகளாகவும் சதா தானிகளாகவும் ஆகுங்கள். சதா உலக சேவையாளரைப் போல் அருள்பவரின் குழந்தைகள் ஆகுங்கள். நீங்கள் எந்த வேளையிலும் மாஸ்ரர் அருள்பவர்களாக இல்லாமல் இருக்கக்கூடாது. இது ஏனென்றால், உங்களுக்கும் தந்தையுடன் அவரின் உலக நன்மைக்கான பணியில் உதவியாளர்கள் ஆகும் எண்ணம் இருந்தது. நீங்கள் உங்களின் மனதால் சக்திகளின் தானத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்தாலென்ன, உங்களின் வார்த்தைகளால் இந்த ஞான தானத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கினாலென்ன, அல்லது உங்களின் செயல்களால் நற்குணங்களின் தானத்தை வழங்கினாலென்ன, அல்லது உங்களின் அன்பான தொடர்புகளால் சந்தோஷ தானத்தைக் கொடுத்தாலென்ன, நீங்களே பல எல்லையற்ற பொக்கிஷங்களின் அதிபதிகள் - உலகிலேயே அதிசெல்வந்தர்கள் ஆவீர்கள். உங்களிடம் முடிவற்ற, நிலையான பொக்கிஷங்கள் உள்ளன. எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக அவை அதிகரிக்கும். அவை குறையாது. அவை அதிகரிக்கும். ஏனென்றால், தற்சமயம், உங்களின் ஆன்மீக சகோதர, சகோதரிகளில் பெரும்பாலானோர் இந்தப் பொக்கிஷங்களுக்கான தாகத்துடன் இருக்கிறார்கள். எனவே, உங்களின் சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்கு இரக்கம் இல்லையா? தாகமான ஆத்மாக்களின் தாகத்தை நீங்கள் தீர்க்க மாட்டீர்களா? ‘ஓ, எமது தேவ, தேவியரே, எமக்கு சக்தி கொடுங்கள், எமக்கு உண்மையான அன்பைக் கொடுங்கள்!’ என்ற சத்தம் உங்களின் காதுகளை வந்து அடையவில்லையா? உங்களின் பக்தர்களும் துன்பத்தை அனுபவிக்கும் ஆத்மாக்கள் இருவருமே, ‘கருணை காட்டுங்கள், தயை காட்டுங்கள், ஓ கருணை மற்றும் பரிவின் தேவ, தேவியரே!’ என்று அழைக்கிறார்கள். உங்களுக்குக் காலத்தின் அழைப்பு கேட்கிறதல்லவா? அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நேரம் இதுவே ஆகும். அவர்களுக்கு நீங்கள் வேறு எந்த நேரத்தைக் கொடுப்பீர்கள்? நீங்கள் முடிவற்ற, நிலையான பொக்கிஷங்களைச் சேமித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் அவற்றை எப்போது தானம் செய்வீர்கள்? அது இறுதிக் கணங்களாக இருக்குமா? அந்த வேளையில், உங்களால் ஒரு துளியை, கைப்பிடியை மட்டுமே கொடுக்கக்கூடியதாக இருக்கும். எனவே, நீங்கள் சேமித்த பொக்கிஷங்களை எப்போது நீங்கள் பயன்படுத்துவீர்கள்? சோதித்துப் பாருங்கள்: நான் ஏதாவதொரு பொக்கிஷத்தை ஒவ்வொரு கணமும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறேனா? இதில் இரட்டை நன்மை உள்ளது. பொக்கிஷங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆத்மாக்கள் பயன்பெறுவார்கள். அத்துடன்கூடவே, நீங்கள் மகாதானிகள் என்பதனால், நீங்கள் இலகுவாகத் தடைகளை அழிப்பவர்கள் ஆகுவீர்கள். பிரச்சனைகளின் சொரூபங்கள் அல்ல, ஆனால் தீர்வுகளின் சொரூபங்கள். இரட்டை நன்மை உள்ளது. ‘இன்று இந்தத் தடை வந்தது, நேற்று அந்தத் தடை வந்தது, இன்று இது நடந்தது, நேற்று அது நடந்தது...’ நீங்கள் எல்லா வேளையும் தடைகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். நீங்கள் பிரச்சனைகளுக்கு நேரம் கொடுப்பதில் இருந்தும் அவற்றினால் சிரமப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் சிலவேளைகளில் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள், சிலவேளைகளில் உற்சாகம் அடைகிறீர்கள். குழந்தைகளான நீங்கள் சிரமப்படுவதைப் பார்க்க பாப்தாதா விரும்பவில்லை. குழந்தைகளான நீங்கள் சிரமப்படுவதை பாப்தாதா பார்க்கும்போது, அவரால் குழந்தைகள் சிரமப்படுவதைக் காண சகிக்க முடிவதில்லை. எனவே, சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், ஆனால் என்ன வகையான முயற்சி? நீங்கள் இப்போதும் உங்களின் அற்ப பிரச்சனைகளுக்காக முயற்சி செய்பவர்களாக இருப்பீர்களா? இப்போது சதா மகாதானிகளாக, சதா ஒத்துழைப்பவர்களாக ஆகுவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். பிராமணர்களுடனும் தாகத்துடனும் இருக்கின்ற ஆத்மாக்களுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களுக்கும் ஒத்துழைப்பை வழங்குங்கள். மகாதானிகள் ஆகுங்கள். இந்த முயற்சிக்கான தேவையே இப்போது உள்ளது. நீங்கள் இதை விரும்புகிறீர்கள்தானே? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களே, உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? எனவே, நீங்கள் இப்போது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அல்லவா? உங்களுக்காக முயற்சி செய்வதற்காக உங்களுக்கு அதிகளவு நேரம் கொடுக்கப்பட்டு விட்டது. பாண்டவர்களே, உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? எனவே, நீங்கள் நாளையில் இருந்து என்ன செய்வீர்கள்? நாளையில் இருந்து நீங்கள் ஆரம்பிப்பீர்களா அல்லது இப்பொழுதில் இருந்தே ஆரம்பிப்பீர்களா? ‘இப்பொழுதில் இருந்தே, எனது நேரமும் எண்ணங்களும் இந்த உலகிற்காகவே, அவை உலக சேவைக்காகவே’ என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தானாகவே உங்களுக்காகவும் அது நடக்கும். அது புறக்கணிக்கப்பட மாட்டாது. அது அதிகரிக்கும். ஏன்? நீங்கள் மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும்போது, அவர்களுக்குத் துன்பம் கொடுப்பதற்குப் பதிலாக சந்தோஷத்தைக் கொடுக்கும்போது, பலவீனமான ஆத்மாக்களுக்கு சக்தியையும் நற்குணங்களையும் வழங்கும்போது, அவர்கள் அதிகளவு ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். எல்லோரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதே, முன்னேறிச் செல்வதற்கான இலகுவான வழிமுறையாகும். நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றாவிட்டாலும் அல்லது பல நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாவிட்டாலும் அது பரவாயில்லை. உங்களால் அதைச் செய்ய முடிந்தால், அதை மேலும் செய்யுங்கள். எவ்வாறாயினும், உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அது பரவாயில்லை. உங்களின் பொக்கிஷங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். உங்களின் மனங்களால் சக்திகளின் பொக்கிஷங்களைத் தொடர்ந்து வழங்கும்படி உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த ஞானப் பொக்கிஷத்தை வார்த்தைகளில் பயன்படுத்துங்கள். நற்குணங்களின் பொக்கிஷத்தைச் செயல்களில் பயன்படுத்துங்கள். நேரம் என்ற பொக்கிஷத்தை உங்களின் புத்திகளில் பயன்படுத்துங்கள். சந்தோஷம் என்ற பொக்கிஷத்தை உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அவற்றைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இலகுவாக வெற்றி சொரூபங்கள் ஆகுவீர்கள். நீங்கள் பறந்து கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால், ஆசீர்வாதங்கள் படிகளைப் போல இல்லாமல், ஓர் உயர்த்தியைப் போல் செயல்படும். ஒரு பிரச்சனை வந்தது, நீங்கள் அதை முடித்தீர்கள். சிலவேளைகளில் அதை முடிப்பதற்கு இரண்டு நாட்களும் நீங்கள் எடுப்பீர்கள். சிலவேளைகளில் இரண்டு மணித்தியாலங்கள் எடுப்பீர்கள். இது படிகளில் ஏறுவதைப் போன்றதாகும். உங்களின் ஆசீர்வாதங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். வெற்றி சொரூபம் ஆகுங்கள். உங்களால் ஒரு விநாடியில் இந்த உயர்த்தியால் நீங்கள் விரும்பும் இடத்தைச் சென்று அடைய முடியும். அது சூட்சும வதனமோ, பரந்தாமமோ அல்லது உங்களின் சொந்த இராச்சியமோ, உங்களால் ஒரு விநாடியில் அங்கே சென்று அடைய முடியும். இலண்டனில், ‘ஒரு நிமிடம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினீர்கள். ‘ஒரு விநாடி’ என்று பாப்தாதா கூறுகிறார். ஒரு விநாடியில், உங்களால் ஆசீர்வாதங்கள் என்ற உயர்த்தியுடன் எங்கும் சென்று அடைய முடியும். விழிப்புணர்வு என்ற ஆளியை அழுத்துங்கள், அவ்வளவுதான். சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள்.
இன்று, இரட்டை வெளிநாட்டவர்களுக்கான தினம். எனவே, எல்லாவற்றுக்கும் முதலில், பாப்தாதா இரட்டை வெளிநாட்டவர்களை என்ன ரூபத்தில் பார்க்க விரும்புகிறார்? சிரமப்படுவதில் இருந்து விடுபட்டவர்களாகவும் வெற்றி சொரூபங்களாகவும் அத்துடன் ஆசீர்வாதங்களுக்குத் தகுதி வாய்ந்தவர்களாகவும். நீங்கள் இப்படி ஆகுவீர்கள்தானே? இரட்டை வெளிநாட்டவர்களுக்குத் தந்தையின் மீது மிக நல்ல அன்பு உள்ளது. உங்களிடம் சக்தி இருக்க வேண்டியது அவசியம். ஆனால் உங்களிடம் மிக நல்ல அன்பு உள்ளது. நீங்கள் அற்புதங்களைச் செய்துள்ளீர்கள்தானே? பாருங்கள், 90 நாடுகளில் இருந்து, வெவ்வேறு நாடுகளில் இருந்து வெவ்வேறு சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் கொண்டவர்கள் உள்ளார்கள். ஐந்து கண்டங்களும் ஒரு சந்தன மரமாக ஆகியுள்ளது. நீங்கள் எல்லோரும் அந்த ஒரு மரத்தின் பாகமாக ஆகியுள்ளீர்கள். இப்போது ஒரேயொரு பிராமணக் கலாச்சாரமே உள்ளது. ‘ஆங்கிலக் கலாச்சாரம்’ அல்லது, ‘எமது கலாச்சாரம் ஆங்கிலக் கலாச்சாரம்’ என்பவை இனிமேலும் உள்ளதா? அது இல்லையல்லவா? நீங்கள் பிராமணர்கள்தானே? உங்களின் கலாச்சாரம் இப்போது பிராமணக் கலாச்சாரமே என நம்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அது பிராமணக் கலாச்சாரம் மட்டுமே. எந்தவிதச் சேர்க்கையும் இல்லை. நீங்கள் எல்லோரும் ஒன்றுதானே? பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் ஒரு மரத்தின் பாகம் ஆகியுள்ளீர்கள். இது மிக நன்றாக உள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த எவரையும் ‘நீங்கள் யார்?’ எனக் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்? ஒரு பிராமணர். அல்லது, ‘நான் யுகே ஐச் சேர்ந்தவன் அல்லது நான் ஆபிரிக்கன் அல்லது நான் அமெரிக்கன்’ எனச் சொல்வீர்களா? இல்லை. எல்லோரும் ஒன்றே, பிராமணர்களே. நீங்கள் எல்லோரும் ஒரே வழிகாட்டலில் ஒன்றுசேர்ந்துள்ளீர்கள். உங்கள் எல்லோருக்கும் ஒரே ரூபம், பிராமணர் என்பதே உள்ளது. ஒரே வழிகாட்டல், ஸ்ரீமத் உள்ளது. நீங்கள் இதை இரசிக்கிறீர்கள்தானே? நீங்கள் இதை இரசிக்கிறீர்களா? அல்லது, இது கஷ்டமா? இது கஷ்டமாக இல்லையல்லவா? நீங்கள் ஆமோதிக்கிறீர்கள். இது நல்லது.
பாப்தாதா சேவையில் என்ன புதுமையை விரும்புகிறார்? நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், நீங்கள் மிக, மிக, மிக நன்றாகச் செய்கிறீர்கள். அதற்காகப் பாராட்டுக்கள். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நீங்கள் எதைச் சேர்க்க விரும்புகிறீர்கள்? ஏதாவது புதுமை இருக்க வேண்டும் என நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள். நீங்கள் என்ன நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், எவ்வளவு நேரத்தை வழங்கி இருந்தாலும் நீங்கள் அதை அன்புடன் செய்திருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் அன்புடன் முயற்சி செய்துள்ளீர்கள். நீங்கள் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது பலமில்லியன் மடங்காகப் பல்கிப் பெருகி, உங்களின் இறை வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எதையும் கொடுக்கவில்லை, ஆனால் நீங்கள் சேமித்துள்ளீர்கள். இதன் பெறுபேறாக, நீங்கள் எல்லோரும் செய்தியையும் அறிமுகத்தையும் கொடுக்கும் பணியை, அது எங்கே நடந்திருந்தாலும் மிக நன்றாகச் செய்துள்ளீர்கள் என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இது இப்போது டெல்லியில் நடக்கிறது, அது இலண்டனில் நடந்தது. அத்துடன் இரட்டை வெளிநாட்டவர்கள் செய்த காலத்தின் அழைப்பு மற்றும் மன அமைதிக்கான நிகழ்ச்சிகள் பாப்தாதாவிற்கு மிகவும் பிடித்துள்ளன. உங்களால் வேறு என்ன பணியைச் செய்ய முடியுமோ, தொடர்ந்து அதைச் செய்யுங்கள். அவர்கள் செய்தியைப் பெறும்போது, அவர்கள் அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆகுகிறார்கள். சிலர் உறவுமுறையையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், அதற்காக நீங்கள் இப்போது சேர்த்துக் கொள்ள வேண்டியது என்ன? நீங்கள் பெரிய நிகழ்ச்சியைச் செய்யும் போதெல்லாம், மக்கள் செய்தியைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் ஓர் அனுபவத்துடனும் செல்ல வேண்டும். அனுபவம், அவர்களை மிக விரைவாக முன்னேறச் செய்கிறது. உதாரணமாக, காலத்தின் அழைப்பு அல்லது மன அமைதி போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மகத்தான அனுபவங்கள் ஏற்பட்டன. எவ்வாறாயினும், பெரிய நிகழ்ச்சிகளில், அவர்கள் நல்லதொரு செய்தியைப் பெறுகிறார்கள். ஆனால், யார் வருகிறார்களோ, அவர்களுடன் தொடர்பைப் பேணி, அவர்கள் ஏதாவது வகையான அனுபவத்தைப் பெறச் செய்ய வேண்டும். ஏனென்றால், அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. அனுபவம் எத்தகையது என்றால், அது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, மேலும் அவர்களை ஈர்க்கும். அதனால், எல்லாவற்றுக்கும் முதலில், பாப்தாதா கேட்கிறார்: பிராமணர்களான நீங்கள் எல்லோரும் இந்த ஞானத்தின் சகல கருத்துக்களையும் அனுபவம் செய்துள்ளீர்களா? நீங்கள் ஒவ்வொரு சக்தியையும் அனுபவம் செய்துள்ளீர்களா? ஒவ்வொரு நற்குணத்தையும் அனுபவம் செய்துள்ளீர்களா? ஆத்ம உணர்வு ஸ்திதியை அனுபவம் செய்துள்ளீர்களா? இறையன்பை அனுபவம் செய்துள்ளீர்களா? நீங்கள் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதில் சித்தி அடைந்துள்ளீர்கள். அத்துடன் நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். பாப்தாதாவும் இதில் கருத்துரைப்பதுடன் இது ஓகே என்றும் சொல்கிறார். ஆத்மா என்றால் என்ன? இறைவன் யார்? நாடகம் என்றால் என்ன? நீங்கள் இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால், ஆத்ம சக்தியையும் இறை சக்தியையும் எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் விரும்பிய போது, விரும்பும் அளவு நேரத்திற்கு உங்களால் அனுபவம் செய்யக்கூடியதாக இருப்பது சாத்தியமா? நீங்கள் விரும்பும்போது, விரும்பும் நேரத்திற்கு நீங்கள் விரும்பியதை அனுபவம் செய்ய முடிகிறதா? அல்லது, சிலவேளைகளில் அது ஒன்றாகவும் சிலவேளைகளில் இன்னொன்றாகவும் உள்ளதா? ‘நான் ஓர் ஆத்மா’ என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் மீண்டும் மீண்டும் சரீர உணர்வு உடையவர் ஆகுகிறீர்கள். எனவே, அந்த அனுபவம் பயனுள்ளதா? அனுபவ சொரூபம் ஆகுவது என்றால், ஒவ்வொரு பாடத்தின் அனுபவ சொரூபமாக, ஒவ்வொரு சக்தியின் அனுபவ சொரூபமாக இருத்தல் என்று அர்த்தம். அதனால், உங்களுக்கு உள்ளே அனுபவங்களை அதிகரியுங்கள். உங்களுக்கு அவை உள்ளன. உங்களிடம் அவை இல்லை என்று இல்லை. ஆனால் அவை சிலவேளைகளில் மட்டுமே உள்ளன. அதனால், அது சிலவேளைகளில் இருப்பதை பாப்தாதா விரும்பவில்லை. ஏதாவது நடந்தால், அது சிலவேளைகளில் என்று ஆகிவிடும். உங்களின் இலட்சியம் என்னவென்று அடிக்கடி உங்களிடம் கேட்கப்படுகிறது. தந்தைக்குச் சமமானவர் ஆக விரும்புகிறீர்கள் என நீங்கள் அப்போது கூறுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரே பதிலையே கொடுக்கிறீர்கள். எனவே, தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு - தந்தை ஒருபோதும் சிலவேளைகளில் அல்லது சிலது என்று இருந்ததில்லை. தந்தை பிரம்மா எப்போதும் ராசியுக்தாகவும் யோகியுக்தாகவும் இருந்தார். அத்துடன் எப்போதும் ஒவ்வொரு சக்தியாலும் நிரம்பி இருந்தார். சிலவேளைகளில் மட்டும் அல்ல. உங்களுக்கு ஏற்படுகின்ற அனுபவம் எல்லா வேளைக்கும் நிலைத்திருக்கும். இது சில வேளைக்கு மட்டும் அல்ல. எனவே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அனுபவ சொரூபங்கள் ஆகுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் அனுபவசாலி ஆகுங்கள். இந்த ஞானத்தின் சொரூபங்களாக அனுபவசாலி ஆகுங்கள். யோகியுக்தாக இருப்பதில் அனுபவசாலி ஆகுங்கள். நற்குணங்களின் சொரூபங்கள் ஆகுவதில் அனுபவசாலி ஆகுங்கள். சகல துறைகளிலும் - உங்களின் எண்ணங்களால், வார்த்தைகளால், செயல்களால், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளால் - சேவை செய்வதில் அனுபவசாலி ஆகுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் திறமைச் சித்தி எய்தியுள்ளீர்கள் எனக் கூறப்படும். எனவே, நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? நீங்கள் சித்தி அடைய விரும்புகிறீர்களா அல்லது திறமைச் சித்தி அடைய விரும்புகிறீர்களா? சித்தி அடைய விரும்புவர்கள் பிந்தி வருவார்கள். ஆனால் நீங்களோ ‘மிகத் தாமதம் ஆகிவிட்டது’ என்ற அறிவித்தல் போடப்படும் முன்னர் வந்துவிட்டீர்கள். இப்போது புதியவர்கள் வந்தாலும், இன்னமும் மிகவும் தாமதம் ஆகிவிட்டது என்ற அறிவித்தல் போடப்படவில்லை. ‘தாமதம்’ என்ற அறிவித்தல் போடப்பட்டாலும் ‘மிகவும் தாமதம் ஆகிவிட்டது’ என்ற அறிவித்தல் போடப்படவில்லை. வந்திருக்கும் புதியவர்களான நீங்களும், இப்போது நீங்கள் தீவிர முயற்சி செய்தால், வெறும் முயற்சி அன்றி, தீவிர முயற்சி செய்தால், உங்களால் முன்னே செல்ல முடியும். ஏனென்றால், இலக்கங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இரண்டு இலக்கங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன - தந்தையினதும் தாயினதும் இலக்கங்கள். எந்தவொரு சகோதரன் அல்லது சகோதரியின் மூன்றாவது இலக்கம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தாதிகளுக்கு அதிகளவு அன்பு உள்ளது என நீங்கள் சொல்லக்கூடும். தந்தைக்கும் தாதிகளிடம் அதிகளவு அன்பு உள்ளது. ஆனாலும் இலக்கங்கள் அறிவிக்கப்படவில்லை. இதனாலேயே, நீங்களே மிக, மிக, நீண்ட காலம் தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்ட, பாக்கியசாலிக் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் விரும்பிய அளவிற்குப் பறவுங்கள். ஏனென்றால், சிறியவர்கள் நடக்கும்போது, தந்தை அவர்களின் விரலைப் பிடித்துக் கொண்டு, அவர்களுக்கு மேலதிக அன்பை வழங்குகிறார். ஆனால், அவர் பழையவர்களின் விரலைப் பிடிப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே தமது சொந்த இரண்டு கால்களால் நடக்கிறார்கள். எனவே, புதியவர்களாலும் இப்போது நேரத்தை உருவாக்க முடியும். உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ‘மிகவும் தாமதம் ஆகிவிட்டது’ என்ற அறிவித்தல் மிக விரைவில் போடப்பட்டுவிடும். ஆகவே, அதற்கு முன்னர் இதைச் செய்யுங்கள். முதல் தடவையாக வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. வாழ்த்துக்கள்! நீங்கள் உங்களின் வீடான மதுவனத்தை முதல் தடவையாக வந்து அடைந்துள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குடும்பம் முழுவதின் சார்பாகவும் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களை வழங்குகிறார். அச்சா.
பாப்தாதா உங்களுக்கு வழிகாட்டல் கொடுக்கும் ஸ்திதியில் உங்களால் ஒரு விநாடியில் ஸ்திரம் அடைய முடிகிறதா? அல்லது, அதற்காக முயற்சி செய்வதில் உங்களின் நேரம் பயன்படுத்தப்படுகிறதா? உங்களுக்கு இப்போது ஒரு விநாடிக்குரிய பயிற்சி தேவை. ஏனென்றால், வரவிருக்கும் இறுதிக் கணங்களுக்காக, நீங்கள் திறமைச்சித்தி என்ற சான்றிதழைப் பெறவேண்டிய அந்த வேளைக்காக, இந்த வேளையிலேயே பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் எந்தவொரு ஸ்திதியிலும் விரும்பும்போது, விரும்பும் இடத்தில் ஒரு விநாடியில் உங்களை ஸ்திரம் ஆக்கிக் கொள்ளுங்கள். அதனால் என்றும் தயாராக இருங்கள்! நீங்கள் தயாரா?
இப்போது, ஒரு விநாடியில், அதி புண்ணிய, சங்கமயுக, மேன்மையான பிராமண ஆத்மா ஆகுங்கள். இந்த ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது, நான் ஒரு தேவதை, இலேசாகவும் ஒளியாகவும் இருக்கிறேன். அனுபவம் செய்யுங்கள்: நான் எனது மனதால் சேவை செய்து, சக்திக் கதிர்களை வழங்குகின்ற ஓர் உலக உபகாரி ஆவேன். நாள் முழுவதும் ஒரு விநாடியில் இந்த ரூபத்தில் உங்களை ஸ்திரப்படுத்த முடிகிறதா? தொடர்ந்து இதை அனுபவம் செய்யுங்கள். ஏனென்றால், சடுதியாக எதுவும் நடக்க முடியும். உங்களுக்கு அதிகளவு நேரம் கிடைக்காது. ஒரு விநாடியில் குழப்பத்தின் மத்தியிலும் அசைக்க முடியாதவராக இருத்தல்: நீங்களாகவே அவ்வப்போது இதைப் பயிற்சி செய்வதற்கு நீங்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்களால் இலகுவாக உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முடியும். உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியும் ஆளுகின்ற சக்தியும் தொடர்ந்து அதிகரிக்கும். அச்சா.
எங்கும் உள்ள குழந்தைகளிடம் இருந்து பல கடிதங்கள் வந்துள்ளன. உங்களில் பலர் உங்களின் அனுபவங்களை அனுப்பி உள்ளீர்கள். அதற்குப் பதிலாக, பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குத் தனது இதயபூர்வமான ஆசீர்வாதங்கள் பலவற்றையும் தனது இதயபூர்வமாக, பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளையும் வழங்குகிறார். எங்கும் உள்ள குழந்தைகள் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். பார்க்காதவர்களும் நினைவில் இருக்கிறார்கள். எல்லோருடைய புத்தியும் இந்த வேளையில் மதுவனத்திலேயே உள்ளது. எனவே, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும், தயவு செய்து தனிப்பட்ட முறையில் உங்களின் பெயருக்கேற்ப அன்பையும் நினைவுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஊக்கம், உற்சாகம் என்ற உங்களின் இறக்கைகளுடன் மேன்மையான ஸ்திதியில் சதா பறந்து கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களான உங்கள் எல்லோருக்கும் சதா அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகளுக்கும் சதா சிரமப்படுவதில் இருந்து விடுபட்டுள்ள, பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுள்ள, தடைகளில் இருந்து விடுபட்டுள்ள, யோகியுக்தாகவும் ராசியுக்தாகவும் உள்ள குழந்தைகளுக்கும் ஒரு விநாடியில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சித்தி அடைபவர்களுக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சக்தியின் சொரூபங்களாக இருக்கும் மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளான உங்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகுக.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மேன்மையான முயற்சியாளராக, உங்களின் சத்தியயுக சுபாவத்தால் சத்தியயுக சேவையைச் செய்வீர்களாக.பொறாமையின் அல்லது பிடிவாதத்தின் அல்லது தங்களை நியாயப்படுத்த முயற்சி செய்யும் பழைய சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவத்தின் எந்தவிதமான மாசும் அற்ற குழந்தைகள், சத்தியயுக சுபாவங்களைக் கொண்டவர்கள். இத்தகைய சத்தியயுக சுபாவங்களைக் கொண்டிருப்பதுடன் சதா ‘ஹா ஜி’ (ஆமாம்) எனக் கூறும் சம்ஸ்காரத்தைக் கொண்டிருப்பவர்கள் - இத்தகைய மேன்மையான முயற்சி செய்யும் குழந்தைகள் காலத்திற்கும் சேவைக்கும் ஏற்ப தங்களை வளைத்துக் கொள்வதுடன் நிஜத்தங்கமாக ஆகுகிறார்கள். அகங்காரத்தின் மாசும் அவமதிக்கப்பட்ட உணர்வின் மாசும் உங்களின் சேவையில் கலக்காமல் இருக்கும்போது, நீங்கள் சத்திய யுக சேவை செய்பவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
ஏன்? மற்றும் என்ன? என்ற கேள்விகளை முடித்து, உங்களின் இதயபூர்வமாக சதா சந்தோஷமாக இருங்கள்.அவ்யக்த சமிக்கை: இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பில் அனுபவசாலி ஆகுங்கள்.
சமமாக இருப்பதுடன் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியைக் கொண்டுள்ள ஆத்மாக்கள், சதா யோகிகள் ஆவார்கள். அவர்கள் யோகம் செய்வதற்கு முயற்சி செய்பவர்கள் அல்ல. ஆனால், அன்பிலே திளைத்திருப்பவர்கள் ஆவார்கள். அவர்கள் வெவ்வேறானவர்கள் அல்ல. அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் நினைவு செய்ய வேண்டும்? இயல்பான நினைவு காணப்படுகிறது. எங்கே சகவாசம் இருக்கிறதோ, அங்கே இயல்பான நினைவு காணப்படும். சமமாக இருக்கும் ஆத்மாக்களின் ஸ்திதியானது, ஒன்றாக இருப்பதுடன் திளைத்தும் இருப்பதாகும்.