10.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், உங்கள் புத்தியில் இந்த ஞானம் பொங்கி எழட்டும். அப்பொழுது நீங்கள் அளவற்ற சந்தோஷத்தில் இருப்பீர்கள்.
பாடல்:
எவருடைய சகவாசத்தையிட்டு, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?பதில்:
தங்கள் புத்தியில் தந்தையின் நினைவைக் கொண்டிராதவர்களினதும், தொடர்ந்து அங்கும் இங்கும் அலைந்து திரிகின்ற புத்தியைக் கொண்டிருப்பவர்களினதும் சகவாசத்தையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு அருகில் அமரக்கூடாது, அவர்களைத் தொடவும் கூடாது. ஏனெனில், நினைவில் இருக்காதவர்கள் சூழலைக் கெடுக்கின்றார்கள்.கேள்வி:
மக்கள் எப்போது வருந்துவார்கள்?பதில்:
கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை அவர்கள் அறியும்போது, அவர்களுடைய முகங்கள் வெளிறிப் போய் விடுவதுடன், இந்த ஞானத்தைத் தாங்கள் கற்காமல் விட்ட கவனயீனத்திற்காக வருந்துவார்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளே, ஆன்மீக யாத்திரையை நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இங்கு ஹத்தயோக யாத்திரைகள் எதுவும் இல்லை. இது நினைவாகும். நினைவுசெய்வதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தையை நினைவுசெய்வதில் எவ்விதச் சிரமமுமில்லை. இது ஒரு வகுப்பாகும். ஆகவே நீங்கள் ஓர் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தைகளாகி விட்டீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் பராமரிக்கப்படுகிறீர்கள். எவ்வாறான பராமரிப்பை நீங்கள் பெறுகிறீர்கள்? அழியாத ஞான இரத்தினங்கள் என்ற பொக்கிஷத்தை நீங்கள் பெறுகிறீர்கள். தந்தையை நினைவுசெய்வதில் எவ்விதச் சிரமமுமில்லை. மாயையே உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கிறாள். எவ்வாறாயினும், நீங்கள் எவ்வாறு அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் அது நினைவுடன் தொடர்புபட்டதல்ல. பல குழந்தைகள் ஹத்தயோகிகள் போன்று மூன்று முதல் நான்கு மணித்தியாலங்கள் வரை அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இரவு முழுவதும் அமர்ந்திருப்பதுமுண்டு. முன்னர் நீங்கள் பத்தியில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் அது வேறுபட்டது. அங்கு உங்களுக்கு வியாபாரம் போன்று எதுவும் இருக்கவில்லை. ஆகவே உங்களுக்கு அது கற்பிக்கப்பட்டது. தந்தை இப்போது கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழுங்கள். நீங்கள் உங்களுடைய வியாபாரத்தையும் செய்யலாம். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இப்போது உங்களால் தொடர்ந்து நினைவுசெய்ய முடியும் என்று எண்ணாதீர்கள். இல்லை. அந்த ஸ்திதியை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இப்போது நீங்கள் சதா நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நாடகத் திட்டத்தின்படி, இப்போது சொற்ப காலமே எஞ்சியுள்ளது. உங்களுடைய புத்தியில் முழுக் கணக்கும் உள்ளது. கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதமே இருந்ததென்றும், அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய 2000 வருடங்கள் இப்போது முடிவுக்கு வருகின்றன. இது 5000 வருடங்கள் என்ற கணக்கை உருவாக்குகிறது. வெளிநாடுகளில் உங்கள் பெயர் புகழப்படுவது காணப்பட்டுள்ளது. ஏனெனில் பாரத மக்களின் புத்தியை விட அவர்களுடைய புத்தி கூர்மையானது. அவர்களும் அமைதிக்காக பாரதத்தையே வேண்டுகிறார்கள். பாரத மக்களே நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுவதுடன், சர்வவியாபகர் என்ற கருத்தையும் கொடுத்து, அவர்களின் புத்தியைக் கெடுத்து விடுகிறார்கள். அவர்கள் தமோபிரதானாகி விட்டார்கள். அவர்கள் (வெளிநாட்டவர்கள்) அந்தளவிற்குத் தமோபிரதான் ஆகவில்லை. அவர்களுடைய புத்தி மிகவும் கூர்மையானது. அவர்களுடைய குரல் பரவும்போது, பாரத மக்கள் விழித்தெழுவார்கள். ஏனெனில் பாரத மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். வெளிநாட்டவர்கள் இலேசாகவே தூங்குகிறார்கள். அவர்களுடைய குரல் மிக நன்றாகப் பரவும். ‘எவ்வாறு அமைதி நிலவ முடியுமென்று யாராவது காட்டுங்கள்’ என்று வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கேட்கிறார்கள். ஏனெனில், தந்தையும் பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். உலகில் மீண்டும் எவ்வாறு, எப்போது அமைதி நிலவும்; என்ற விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே கூற முடியும். உண்மையில் வைகுந்தம் அல்லது சுவர்க்கம் இருந்ததென்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உலகம் புதிதாக இருந்தபோது, பாரதம் வைகுந்தமாக இருந்தது. வேறு எவருக்கும் அது தெரியாது. கடவுள் சர்வவியாபகர் என்பது மக்களின் புத்தியில் பதிந்துள்ளது. அத்துடன், கல்பத்தின் காலப்பகுதி நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த பாரத மக்களே அதிகளவு கல்லுப் புத்தி உடையவர்களாகி விட்டார்கள். கீதையும், சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியன. அவை மீண்டும் அவ்வாறே எழுதப்படும். இது நாடகம் என நீங்கள் அறிந்திருந்தாலும், நீங்கள் முயற்சி செய்வதற்கே தந்தை உங்களைத் தூண்டுவார். விநாசம் நிச்சயம் இடம்பெறும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்திருக்கிறார். இது சந்தோஷப்பட வேண்டிய விடயமாகும். ஒரு கடினமான பரீட்சையில் ஒருவர் சித்தியடையும்போது, உள்ளுரச் சந்தோஷத்தை அனுபவம் செய்வார். நாங்கள் இவை அனைத்திலும் சித்தியடைந்த பின்னர், சென்று தேவர்கள் ஆகுவோம் என்று உணர்கிறோம். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. உண்மையில் தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களை அவ்வாறு ஆக்குகிறார் (தேவர்களாக) என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உண்மையில், அங்கு வைகுந்தமாகிய சுவர்க்கம் இருந்தது. அப்பாவி மக்கள் மிகவும் குழப்பத்திலுள்ளனர். எல்லையற்ற தந்தை தன்னிடமுள்ள ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தையை நீங்கள் புகழ்கிறீர்கள்: பாபா ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் நிறைந்தவருமாவார். அவர் அனைத்துப் பொக்கிஷங்களும் நிறைந்தவர். உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்கியவர் யார்? நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காக. ஒருவர் மிக ஆரோக்கியமானவராக இருந்தும், அவரிடம் பணம் இல்லையென்றால், பணமின்றி என்ன நடக்கும்? உங்களிடம் வைகுந்தத்தில் செல்வம் இருக்கும். இங்கு செல்வந்தர்களாக இருப்பவர்கள், அதிக செல்வம், தொழிற்சாலைகள் போன்றவற்றை வைத்திருக்கும் போதையில் உள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் தங்களுடைய சரீரங்களை விட்டு நீங்கும்பொழுது, அனைத்துமே முடிவடைந்து விடும். பாபா உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை பொக்கிஷங்களின் மாஸ்ரர் ஆகுவதில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களையே மாஸ்ரர்கள் ஆக்குகிறார். தந்தையான கடவுளைத் தவிர வேறு எவராலும் உலகில் அமைதியை ஸ்தாபிக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். திரிமூர்த்தியும், சக்கரமும் (இணைந்தது) முதற்தரமான படமாகும். இந்தச் சக்கரத்தில் முழு ஞானமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் மிகவும் அற்புதமானதொன்று இருப்பதை அவர்கள் காணும்போது, இதில் நிச்சயமாக ஏதாவது முக்கியத்துவம் இருக்கும் என்று புரிந்துகொள்வார்கள். சில குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் போன்று சிறிய படங்களை உருவாக்குகிறார்கள். பாபா அவற்றை விரும்புவதில்லை. பாபா கூறுகிறார்: தூரத்திலிருந்தவாறு வாசித்து, விளங்கக்கூடியதாக மிகவும் பெரிய படங்களை உருவாக்குங்கள். பெரியதாக இருப்பவற்றில் மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இதில் (சக்கரத்தில்), கலியுகம் இந்தப் பக்கத்திலும், சத்திய யுகம் மறுபக்கத்திலும் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. பெரிய படங்களைப் பயன்படுத்தும்போது மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். சுற்றுலாப் பயணிகளும் அவற்றைப் பார்த்து, மிகத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததென்பது உங்களுக்குத் தெரியும். வெளியேயுள்ள மக்களுக்கு அது தெரியாது. 5000 வருடங்களுக்கான கணக்கை நீங்கள் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். ஆகவே, மக்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போதே வாசிக்கக்கூடியதான அத்தகைய பெரிய படங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம், இதுவே நிச்சயமாக உலகின் முடிவு என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். குண்டுகள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. இயற்கை அனர்த்தங்களும் நிகழும். ‘விநாசம்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், நீங்கள் உள்ளே அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். எவ்வாறாயினும், உங்களிடம் இந்த ஞானம் இல்லையென்றால், சந்தோஷம் இருக்க மாட்டாது. தந்தை கூறுகிறார்: உங்களுடைய சரீரம் உட்பட அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய உங்களுடைய யோகம், தந்தையாகிய என்னுடன் இணைந்திருக்கட்டும். இதற்கே முயற்சி தேவை. நீங்கள் தூய்மையாகிய பின்னரே தூய உலகிற்குச் செல்ல முடியும். நாங்கள் எங்களுடைய இராச்சியத்தைப் பெற்றுப் பின்னர், அதனை இழக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இது மிக இலகுவானது. நீங்கள் நடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், உலாவித் திரியும்போதும் இந்த ஞானம் உங்களுக்குள் சொட்டுச் சொட்டாகக் கசிய வேண்டும். பாபாவிடம் இந்த ஞானம் உள்ளது. உங்களுக்குக் கற்பித்து, உங்களைத்; தேவர்கள் ஆக்குவதற்காகத் தந்தை வந்திருக்கிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களையே கேளுங்கள்: நான், அவ்வாறாக அளவற்ற சந்தோஷத்துடன் இருக்கின்றேனா? தந்தையை நான் அந்தளவுக்கு நினைவுசெய்கின்றேனா? கல்பம் பற்றிய ஞானம் முழுவதும் உங்களிடம் உள்ளது. ஆகவே அந்தளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதுடன், முழுமையான சந்தோஷத்தைக் கொண்டிருங்கள். யார் உங்களுக்குக் கற்பிக்கிறார் எனப் பாருங்கள்! இதனையிட்டு அவர்கள் அனைவருக்கும் தெரிய வரும்போது, அவர்களின் முகங்கள் வெளிறி விடும். எவ்வாறாயினும், அவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு, சொற்ப காலமே எஞ்சியுள்ளது. தேவ தர்மத்தைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. முழு இராச்சியமும் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. தந்தையின் செய்தியை நீங்கள் பலருக்குக் கொடுக்க வேண்டும்: எல்லையற்ற தந்தை சுவர்க்க இராச்சியத்தை மீண்டும் ஒரு தடவை எங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்களும் அந்தத் தந்தையை நினைவுசெய்யலாம். எல்லையற்ற தந்தை, எல்லையற்ற சந்தோஷத்தை நிச்சயமாக உங்களுக்குக் கொடுப்பார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தையிட்டு அளவற்ற சந்தோஷத்தை உள்ளே கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு ஆத்மா தொடர்ந்தும் தூய்மையாகின்றார். நாடகத் திட்டத்தின்படி, பிரஜைகளை உருவாக்குகின்ற சேவையை எந்தளவுக்கு அதிகமாகக் குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக, அவ்வாறு நன்மை அடைந்தவர்களிடமிருந்து நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஏழைகளுக்குச் சேவை செய்கிறீர்கள். தொடர்ந்தும் அழைப்பிதழ்களைக் கொடுங்கள். புகையிரத வண்டிகளிலும் நீங்கள் அதிக சேவை செய்யலாம். மிகச் சிறியதொரு பட்ஜில் அதிக ஞானம் உள்ளது. முழுக் கல்வியின் சாராம்சமும் இதில் அடங்கியுள்ளது. மற்றவர்களுக்கு அன்பளிப்பாகவும் கொடுக்கக்கூடியதாக மிகச்சிறந்த பட்ஜ் பலவற்றை நீங்கள் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது மிக இலகுவானது: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். சிவபாபாவிடமிருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே தந்தையையும், தந்தையின் ஆஸ்தியையும், சுவர்க்க இராச்சியத்தையும், கிருஷ்ண தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். மக்களின் வழிகாட்டல்கள் மிகவும் குழப்பமடையச் செய்கின்றன. அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் விகாரத்திற்காக மற்றவர்களை அதிகளவு துன்புறுத்துகிறார்கள். அவர்கள் காமத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அனைவரின் புத்தியும் முற்றாக சீரழிந்து விட்டது. அவர்களுக்குத் தந்தையைக் கூட தெரியாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரின் மனோசக்தியும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள். நீங்கள் அத்தகைய சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. ஆத்மாவின் சக்தி முழுவதும் முடிவடைந்து விட்டது. உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், நீங்கள் முயற்சி செய்வதுடன், மற்றவர்களையும் முயற்சி செய்யத் தூண்ட வேண்டும். முயற்சி செய்வதில் நீங்கள் களைப்படையக்கூடாது. உங்களுக்கு இதய வழுவலும் ஏற்படக்கூடாது. நீங்கள் அதிக முயற்சி செய்தீர்கள். இருந்தபோதும் அந்த விரிவுரையின் பின்னர் ஒருவர்கூட வெளிப்படவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் கூறியவற்றை யாரெல்லாம் செவிமடுத்தார்களோ, அவர்களில் அது பதிந்திருக்கும். இறுதியில், நிச்சயமாக அனைவருக்கும் இதனைப் பற்றித் தெரிய வரும். எதிர்காலத்தில் பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் அதிகளவு புகழப்படுவீர்கள். இருந்தபோதும், சிலரின் நடவடிக்கைகளை மக்கள் பார்க்கும்போது, அது முற்றிலும் விவேகமற்றதாக உள்ளது. அவர்கள் எவருக்கும் மதிப்பளிப்பதில்லை, சரியான இனங்காணல் அவர்களிடம் இல்லை. அவர்களுடைய புத்தி தொடர்ந்தும் வெளியே அலைந்து திரிகிறது. அவர்கள் தந்தையை நினைவுசெய்திருந்தால், அவர்களால் உதவியைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் தந்தையை நினைவுசெய்யவில்லை என்றால், அவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அர்த்தமாகும். நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையை நினைவுசெய்யாதவர்களின் புத்தி, நிச்சயமாக எங்காவது ஓரிடத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள் அவ்வாறானவர்களுக்கு அருகே, அவர்களைத் தொடும்படியாக அமர்ந்திருக்கக்கூடாது. நினைவில் அமர்ந்திருக்காததால், அவர்கள் சூழலை மாசுபடுத்துகிறார்கள். தூய்மையானவர்களும், தூய்மையற்றவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது. இதனாலேயே தந்தை பழைய உலகை முடித்து விடுகிறார். நாளுக்கு நாள், சட்டங்களும் தொடர்ந்தும் கடுமையானதாகும். நீங்கள் தந்தையை நினைவுசெய்யாவிடின், இலாபத்திற்குப் பதிலாக பேரிழப்பையே ஏற்படுத்துவீர்கள். தூய்மைக்கான அனைத்தும் நினைவுசெய்வதிலேயே தங்கியுள்ளது. அது ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது என்ற கேள்வியல்ல. இங்கு ஒன்றாக அமர்ந்திருப்பதை விட, மலைகளில் ஏகாந்தமாக அமர்ந்திருப்பது சிறந்தது. நினைவுசெய்யாதவர்கள் தூய்மையற்றவர்கள் ஆவார்கள். நீங்கள் அவர்களின் சகவாசத்தையேனும் கொண்டிருக்கக்கூடாது. அவர்களின் செயல்களிலிருந்து உங்களால் அனைத்தையும் கூற முடியும். நினைவுசெய்யாமல் எவராலும் தூய்மையாக முடியாது. அனைவரிலும் பல பிறவிகளின் பெரிய பாவச் சுமை உள்ளது. நினைவு யாத்திரை இல்லாமல் எவ்வாறு அதனை அழிக்க முடியும்? அவர்கள் இன்னமும் தூய்மையற்றவர்களாக உள்ளார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களுக்காகத் தூய்மையற்ற முழு உலகையும் நான் அழித்துவிடுகிறேன். நீங்கள் அவர்களின் சகவாசத்தைக் கூட வைத்திருக்கக் கூடாது. எவ்வாறாயினும், சிலரிடம் யாருடைய சகவாசத்தைத் தாம் கொண்டிருக்க வேண்டும் என்ற போதிய விவேகம் இல்லை. நீங்கள் தூய்மையான ஒரேயொருவரிடம் தூய்மையான அன்பைக் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் அந்தளவு விவேகம் இருக்க வேண்டும். இனிமையான தந்தையையும், இனிமையான இராச்சியத்தையும் தவிர வேறு எதனையும் நினைவுசெய்யாதீர்கள். அவை அனைத்தையும் துறப்பது என்பது உங்கள் சித்தி வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல. தந்தை குழந்தைகளாகிய உங்களில் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நான் உங்களுக்காகத் தூய உலகை ஸ்தாபிக்கிறேன். இந்தத் தூய்மையற்ற உலகத்தை அவர் முற்றாக அழித்து விடுவார். இங்கு இந்தத் தூய்மையற்ற உலகில் உள்ள அனைத்தும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றன. உங்களுடைய ஆயுட்காலம் தொடர்ந்தும் குறைவடைகிறது. இது ‘ஒரு சதம் கூட பெறுமதியற்றது’ என்று அழைக்கப்படுகிறது. வைரங்களுக்கும், சிப்பிகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். நினைவுகூரப்படுகிறது: சத்தியம் இருக்கும் இடத்தில், ஆத்மா நடனமாடுவார். சத்திய யுகத்தில், நீங்கள் சந்தோஷ நடனம் ஆடுவீர்கள். உங்கள் இதயம் இங்குள்ள எதன் மீதும் பற்றுக் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்தாலும், பார்க்காதிருங்கள். நீங்கள் கண்களைத் திறந்தவாறு உறங்குவதாக இருக்கக்கூடாது. எவ்வாறாயினும் நீங்கள் அந்தளவு தைரியத்தையும், அந்த ஸ்திதியையும் கொண்டிருக்க வேண்டும். பழைய உலகம் தொடர்ந்தும் இருக்கமாட்டாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. உங்களின் சந்தோஷப் பாதரசம் உயர்வாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைக் கிள்ளிப் பார்க்கவேண்டும்: நான் சிவபாபாவை நினைவுசெய்தால், உலக இராச்சியத்தைப் பெறுவேன். நீங்கள் ஒரு ஹத்தயோகி போன்று இங்கு அமர்ந்திருக்கக்கூடாது. உண்ணும்போதும். அருந்தும்போதும், உங்கள் வேலைகளைச் செய்யும்போதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு பணிப்பெண்ணாக வேண்டும் என்று தந்தை கூறுவதில்லை. தந்தை கூறுகிறார்: தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தை நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யத் தூண்டுகிறார். பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் பல பொய்களைக் கூறி, பாவச் செயல்களைச் செய்கிறீர்கள். சதா சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் பலியாகும். இது பாபாவின் யாகமாகும். இது மிகவும் முக்கியமான யாகமாகும். அவர்கள் யாகம் ஒன்றை உருவாக்கி, நூறாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். இங்கு இந்தத் தீயில் முழு உலகமும் பலியாக்கப்படவுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். வெளிநாடுகளிலிருந்து எழும்புகின்ற குரல் பாரதத்திலும் பரவும். அனைத்திற்கும் முதலில், உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைந்திருந்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் பெறமுடியும். முயற்சி செய்வதற்குக் குழந்தைகளைத் தூண்டுவது தந்தையின் கடமையாகும். ஒரு பௌதீகத் தந்தை தனது குழந்தைகளுக்குச் சேவை செய்வதுடன், அவர்களிடமிருந்தும் சேவையைப் பெறுகிறார். இந்தத் தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். ஆகவே நீங்கள் நிச்சயமாக அவ்வாறான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அப்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும், பாவங்கள் நீரினால் அழிக்கப்பட முடியாது. நீர் எங்கும் ஓடுகிறது. வெளிநாடுகளிலும் ஆறுகள் உள்ளன. ஆகவே, இங்குள்ள ஆறுகள் அனைவரையும் தூய்மையாக்குவதாகவும், வெளிநாடுகளில் உள்ள ஆறுகள் அனைவரையும் தூய்மையற்றவர்கள் ஆக்குவதாகவும் அர்த்தமா? மக்களிடம் எந்தவிதப் புரிந்துணர்வும் இல்லை. தந்தை கருணை கொள்கிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, கவனயீனமாக இருக்காதீர்கள்! தந்தை உங்களை மிகவும் அழகானவர்கள் ஆக்குகிறார். ஆகவே நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் உங்களில் கருணை கொள்ள வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய இதயத்தை இங்குள்ள எதன் மீதும் பற்று வைக்கச் செய்யாதீர்கள். அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். உங்கள் கண்களைத் திறந்தவண்ணம் தூங்குவதில் போதை இருப்பதைப் போன்று, சந்தோஷ போதையும் இருக்க வேண்டும்.2. அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. ஆகவே, தூய்மையற்ற ஒருவருக்கருகில் அமராதிருப்பதிலும், அவரைத் தொடாதிருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இனிய தந்தையையும், இனிய இராச்சியத்தையும் தவிர வேறு எதனையும் நினைவு செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆசைகள் (இச்சா) அனைத்தையும் துறப்பதன் மூலம் நல்லவராகி (அச்சா) அதனால், ஆசைகளின் எந்தவிதமான அறிவே அற்றவர் ஆகுவீர்களாக.உங்களின் மனதில் எந்த வகையான ஆசை இருந்தாலும், அது உங்களை நல்லவர் ஆக்க அனுமதிக்காது. நீங்கள் சூரிய ஒளியில் நடந்து செல்லும்போது, உங்களின் நிழல் உங்களுக்கு முன்னால் இருக்கும்போது, நீங்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்தால், உங்களால் அதைப் பிடிக்க முடியாது. நீங்கள் அதற்கு உங்களின் முதுகைக் காட்டும்போது, அது உங்களைப் பின்தொடரும். அதேபோல், ஆசைகள் உங்களைக் கவர்ந்து, உங்களை அழச் செய்யும். நீங்கள் அவற்றைக் கைவிட்டால், அவை உங்களைப் பின்தொடரும். எதையாவது கேட்பவர்கள், ஒருபோதும் சம்பூரணம் ஆகமாட்டார்கள். எந்தவொரு எல்லைக்குட்பட்ட ஆசையின் பின்னாலும் துரத்திச் செல்வதென்றால், ஒரு கானல்நீரைப் பார்ப்பது போன்றதாகும். இதிலிருந்து சதா பாதுகாப்பாக இருப்பதன் மூலம், நீங்கள் ஆசைகளின் எந்தவிதமான அறிவே அற்றவர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் மேன்மையான செயல்களாலும், செயற்பாடுகளாலும் ஆசீர்வாதங்களைச் சேகரியுங்கள். மலைபோன்ற சூழ்நிலைகள் பஞ்சுபோல் அனுபவம் செய்யப்படும்.