10.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம், மனம், செல்வம் மூலம், அதாவது, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் 21 பிறவிகளுக்குத் தந்தையிடம் இருந்து ஒரு பிரதிபலனை நீங்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் சேவை செய்யுங்கள். எவ்வாறாயினும், சேவை செய்யும்பொழுது, ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமை எதுவும் இருக்கக் கூடாது.

கேள்வி:
நாடகத்திற்கேற்ப, பாபா உங்களைச் செய்யும்படி தூண்டுகின்ற சேவையில் தீவிரத்தை ஏற்படுத்துவதற்குரிய வழி யாது?

பதில்:
உங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டுமேயன்றி, முரண்பாடுகள் இருக்கக்கூடாது. ஏதாவது முரண்பாடு இருப்பின், நீங்கள் என்ன சேவையைச் செய்வீர்கள்? இதனாலேயே நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் மத்தியில் அனைத்தையும் கலந்துரையாடி, ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், பாபா உங்கள் உதவியாளர், ஆனால் “தைரியத்தைப் பேணும் குழந்தைகள் தந்தையிடம் இருந்து உதவியைப் பெறுகிறார்கள்” என்பதன் மிகச்சரியான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு, இப்பெரும் பணியில் உதவியாளர்கள் ஆக வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஆன்மீகத் தந்தையிடம் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே வருகிறீர்கள். புத்துணர்ச்சி அடைந்த பின்னர், நீங்கள் திரும்பி செல்லும் பொழுது, நிச்சயமாக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, தாங்கள் ஒரு நிலையத்தைத திறக்க விரும்புவதாகச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். கிராமங்களிலும் சேவை செய்யப்படுகின்றது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், சரீரம், மனம், செல்வத்தின் மூலம் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்குத் தந்தையிடம் இருந்து அதன் பிரதிபலனைப் பெறும் வகையில் சேவை செய்வதைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த அக்கறை இருக்க வேண்டும்: நான் ஏதாவது செய்கிறேனா? நான் ஏனையோருக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேனா? உங்களுக்கு நாள் முழுவதும் இவ்வாறான எண்ணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நிலையத்தைத் திறக்கலாம், ஆனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையில் எந்தக் கருத்து வேற்றுமையும் இருக்கக் கூடாது. எந்தக் குழப்பங்களும் இருக்கக்கூடாது. வீட்டின் குழப்பங்களில் இருந்து சந்நியாசிகள் ஓடுகிறார்கள். அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறார்கள். அரசாங்கம் அவர்களைத் தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்கிறதா? ஆண்களே அவ்வாறு விட்டுச் செல்கிறார்கள். இந்நாட்களில், எவரும் இல்லாத பெண்களும், விருப்பமின்மையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்நியாசிகள் கற்பிக்கின்றார்கள். அவர்கள் (சந்நியாசிகள்) தங்கள் வியாபாரத்தை அவர்களினூடாகச் செய்கின்றார்கள். அவர்களே (சந்நியாசிகள்) பணம் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், அவர்கள் பணம் எதனையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பது உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் இருக்க வேண்டும். மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் விவேகம் அற்றவர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கான தந்தையின் கட்டளை: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், பண்டிதர்களாக இருக்காதீர்கள். நீங்களே உங்களுக்கு நன்மை செய்யுங்கள். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சதோபிரதான் ஆகுங்கள். நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல், நீங்கள் அதிகளவு மனம் வருந்த நேரிடும். சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகிறேன். எனக்கு வேறு பல எண்ணங்கள் இருக்கின்றன. பாபா கூறுகிறார்: அவை வரும். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து சதோபிரதான் ஆகவேண்டும். தூய்மையற்றவர் ஆகிய ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய பரம தந்தையை நினைவுசெய்வதன் மூலம், தூய்மையாக வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: ஓ கீழ்ப்படிவான குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டிய முதலாவது விடயம், அசரீரியான சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். நானே தூய்மை ஆக்குபவர். என்னை நினைவுசெய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், வேறு வழிமுறை எதுவும் இல்லை, எவராலும் உங்களுக்கு வேறு ஏதாவது வழியை காட்டவும் முடியாது. பல சந்நியாசிகள் உள்ளார்கள், அவர்கள் உங்களை யோகா மாநாடுகளில் பங்குபெறுமாறு அழைக்கிறார்கள். அவர்களுடைய ஹத்தயோகத்தின் மூலம் எவரும் நன்மையடைய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இராஜயோகத்தைப் பற்றி எதனையும் அறிந்திராத பல யோகா ஆச்சிரமங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தந்தையையேனும் தெரியாது. எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு உண்மையான யோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தன்னைப் போல் ஆக்குகிறார். நான் அசரீரியானவர், நான் தற்காலிகமாக இச்சரீரத்தை எடுக்கிறேன். நிச்சயமாக “அதிர்ஷ்ட இரதம்” என்பது ஒரு மனிதனே ஆகும். ஓர் எருது அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. அது ஒரு குதிரையா அல்லது இரதமா என்ற கேள்வியே இல்லை. யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் மாயையுடன் மாத்திரமே யுத்தம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நினைவுகூரப்பட்டுள்ளது: மாயையை வெற்றி கொள்பவர்கள் முழு உலகையும் வெற்றி கொள்கிறார்கள். உங்களால் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும், ஆனால் நீங்கள் இன்னமும் கற்கிறீர்கள். கற்கும்பொழுது, சிலர் முழுமையாகவே வீழ்கிறார்கள். பெருமளவு முரண்பாடு உள்ளது. சிலசமயங்களில், இரு சகோதரிகளே ஒற்றுமையாக இருப்பதில்லை. அவர்கள் உவர்நீர் போல ஆகுகிறார்கள். உங்கள் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்கக் கூடாது. ஏதாவது முரண்பாடு இருப்பின், தந்தை கூறுவார்: நீங்கள் என்ன சேவை செய்வீர்கள்? இதுவே பல சிறந்த குழந்தைகளின் நிலை ஆகும். இப்பொழுது மாலை உருவாக்கப்படுமானால், அது ஒரு குறைபாடுள்ள மாலை எனக் கூறப்படும். இன்னமும் குழந்தைகளில் குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ளன. நாடகத் திட்டத்திற்கேற்ப, பாபா உங்களைச் சேவை செய்யத் தூண்டுகிறார். அவர் தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். சென்று டெல்லியை முற்றுகை இடுங்கள். ஒருவர் மாத்திரமே இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. இதைப் பற்றி உங்கள் மத்தியில் கலந்துரையாடுங்கள். நீங்கள் அனைவரும் ஒத்திசைய வேண்டும். பாபா தனியாக உள்ளார், ஆனால் அவர் தனது உதவியாளர்களாகிய தனது குழந்தைகளின்றி, இப்பணியை மேற்கொள்ள மாட்டார். நீங்கள் நிலையங்களைத் திறக்கிறீர்கள், மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுகிறீர்கள். பாபா வினவுகிறார்: நீங்கள் உதவியாளர்களா? நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்: ஆம் பாபா. உதவியாளர்கள் இல்லையெனில், எதனையும் அடைய முடியாது. உங்கள் வீட்டிற்கு நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள். அவர்கள் உங்களை அவதூறு செய்தாலும் அல்லது உங்களைக் கேலி செய்தாலும் நீங்கள் அதைப் பற்றி அக்கறைப்படக் கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருந்து உங்கள் மத்தியில் கலந்துரையாட வேண்டும். ஒரு நிலையம் திறக்கப்படும் பொழுது, அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்;து பாபாவுக்கு எழுதுகிறார்கள்: பாபா, ஆசிரியரின் அறிவுரை மூலம் நாங்கள் இவை அனைத்தையும் செய்கிறோம். சிந்தி பாஷையில் அவர்கள் கூறுகிறார்கள், “1 ஐயும் 2 ஐயும் ஒன்றாக இடுங்கள், அது 12 ஆகுகிறது”. 12 சேர்ந்திருக்கும் போது, மிகச் சிறந்த ஆலோசனைகள் வெளிப்படும். சில இடங்களில் அவர்கள் ஒருவரையொருவர் ஆலோசனை கேட்பதில்லை. இவ்விதமாக ஏதாவது செய்ய முடியுமா? பாபா கூறுவார்: உங்கள் ஒன்றுகூடலில் ஒற்றுமை இல்லாதவரை, எவ்வாறு உங்களால் அத்தகைய பெரிய பணியை மேற்கொள்ள முடியும்? சிறிய கடைகளும், பெரிய கடைகளும் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். எவரும் இவ்வாறு கூறுவதில்லை: பாபா, நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்! அனைத்திற்கும் முதல், நீங்கள் உங்கள் உதவியாளர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது பாபா கூறுவார்: குழந்தைகள் தைரியத்தைப் பேணும்பொழுது, தந்தை உதவி செய்கிறார். அனைத்திற்கும் முதலில், உங்கள் சொந்த உதவியாளர்களை உருவாக்குங்கள். பாபா, நாங்கள் இந்தளவையும் செய்கிறோம், மிகுதிக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்கள் முதலில், பாபாவிடம் உதவி கேட்க வேண்டும் என்றில்லை. முதலில், தைரியத்தைப் பேணுங்கள், பின்னர்… அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அனைத்திற்கும் முதலில், குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். எக்குழந்தைகள் உதவி செய்வார்கள்? என்ன ரூபத்தில் செய்வார்கள்? முழு அட்டவணையையும் எழுதுங்கள்: இவர் இன்ன உதவியைக் கொடுக்கிறார். அனைத்து விடயங்களும் எழுத்தில் உத்தியோக பூர்வமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும், நான் ஒரு நிலையத்தைத் திறப்பதால், எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறுவார்கள் என்றில்லை, அவ்வாறாயின், பாபாவே அவற்றைத் திறக்க மாட்டாரா? எவ்வாறாயினும், அது சாத்தியமில்லை. நிர்வாகக் குழு ஒன்று இணைந்து செயற்பட வேண்டும். உங்கள் மத்தியிலும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் முற்றாகவே எதனையும் புரிந்து கொள்வதில்லை. சிலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த ஞானத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே பாபா விரும்புகிறார். நீங்கள் இப்பொழுது ஒரேயொருவரில் தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் கண்டிருக்கிறீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். இவ்விடயங்கள் உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. சிவபாபா மாத்திரமே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே. இது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. அவரே ஞானம்-நிறைந்தவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிணைந்து உங்கள் மத்தியில் கலந்துரையாடலை நடாத்துங்கள். நீங்கள் பணத்தைச் செலவிடும்பொழுது, நீங்கள் ஒரு நபருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியாது. அனைவரும் உதவிசெய்ய வேண்டும். உங்களுக்கு அந்தளவு விவேகம் இருப்பது அவசியமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் இச்செய்தியைக் கொடுக்க வேண்டும். சிலர் வினவுகிறார்கள்: நாங்கள் ஒரு திருமண அழைப்பிதழைப் பெற்றுள்ளோம், நாங்கள் அங்கு செல்ல வேண்டுமா? பாபா கூறுகிறார்: ஏன் போகக்கூடாது? சென்று சேவை செய்யுங்கள். பலருக்கும் நன்மையைக் கொண்டு வாருங்கள். நீங்கள் ஒரு சொற்பொழிவையும் ஆற்ற வேண்டும்: “மரணம் நேர்முன்னிலையில் உள்ளது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்”. இங்கு, அனைவரும் பாவாத்மாக்கள். அவர்கள் தொடர்ந்தும் தந்தையை அவமரியாதை செய்கிறார்கள். அவர்கள் உங்களைத் தந்தையிடம் இருந்து திசைதிருப்புகிறார்கள். விநாசவேளையில் அன்பற்ற, இரத்துச் செய்யும் புத்தியை உடையவர்கள் என்பன நினைவுகூரப்பட்டுள்ளன. யார் இதைக் கூறினார்? தந்தையே கூறுகிறார்: புத்தியில் அவர்களுக்கு என்னிடம் அன்பு இல்லை. விநாசவேளையில் அவர்களின் புத்தியில் அன்பு இல்லை. அவர்கள் என்னை முற்றாகவே அறிந்து கொள்வதில்லை. அன்பான புத்தியை உடையவர்களும், என்னை நினைவு செய்பவர்களும் மாத்திரமே வெற்றியடைவார்கள். அவர்களுக்கு அன்பு இருந்த போதிலும், என்னை நினைவு செய்யாதிருப்பின், அவர்கள் ஓரு குறைந்த அந்தஸ்தையே பெறுவார்கள். தந்தை குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அனைவருக்கும் செய்தியைக் கொடுப்பதே பிரதான விடயமாகும். தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதி ஆகுவீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, பாபா ஒரு பழைய சரீரத்தைக் கடனாகப் பெற வேண்டும். இவருடைய ஓய்வுபெறும் வயதில், இவரில் அவர் பிரவேசிக்கிறார். மக்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதிலேயே கடவுளைத் தேடுவதற்கான முயற்சியைச் செய்கிறார்கள். பக்திமார்க்கத்தில் அவர்கள் ஓதுவதாலும், தபஸ்யா போன்றவற்றைச் செய்வதாலும், கடவுளைச் சந்திப்பதற்கான பாதையைத் தாங்கள் கண்டுவிடுவார்கள் என நம்புகிறார்கள். அவர்கள் எப்பொழுது அவரைக் கண்டுகொள்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பிறவிபிறவியாகப் பக்தி செய்திருக்கிறார்கள், எவரும் கடவுளைக் கண்டு கொள்ளவில்லை. பழைய உலகம் மீண்டும் புதியதாக்கப்படும் பொழுது, பாபா வருவார் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை மாத்திரமே படைப்பவர் ஆவார். அந்தப் படம் (திரிமூர்த்தியின்) உள்ளது, ஆனால் அவர்கள் திரிமூர்த்தியின் படத்தில் சிவனைக் காட்டுவதில்லை. அவர்கள் சிவபாபாவை அல்லாது பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் காட்டியுள்ளார்கள், இது தலையை வெட்டியதை போன்றுள்ளது. தந்தை இல்லாததால், அவர்கள் அநாதைகள் ஆகிவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்து உங்களைப் பிரபுவுக்கும், அதிபதிக்கும் உரியவர்களாக ஆக்குகிறேன். நீங்கள் 21 பிறவிகளுக்கு பிரபுவுக்கும், அதிபதிக்கும் உரியவர்கள் ஆவீர்கள். உங்களுக்கு எச்சிரமமும் இருப்பதில்லை. நீங்களும் கூறுகிறீர்கள்: தந்தையைச் சந்திக்கும் வரை, நாங்கள் அநாதைகளாகவும், சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களாகவும் இருந்தோம். அவர்கள் தூய்மையாக்குபவரைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது வருவார் என்பது அவர்களுக்குத் தெரியாது. தூய உலகமே புதிய உலகாகும். தந்தை அனைத்து விடயங்களையும் மிக எளிய முறையில் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர் என்பதால், நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபாவே எல்லையற்றதின் அதிபதி ஆவார். தந்தையே வந்து உங்களுக்கு அமைதியினதும், சந்தோஷத்தினதும் ஆஸ்தியைக் கொடுத்தார். சத்தியயுகத்தில். சந்தோஷம் இருந்தது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபா ஏன் வந்திருப்பார்? உலகைப் புதியதாக்கவும், தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கவுமே அவர் நிச்சயமாக வந்திருப்பார். அவர் ஒரு மேன்மையான பணியை மேற்கொள்கிறார். மனிதர்கள் காரிருளில் உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்கிறார். எவ்வாறு புதிய உலகம் பழையதாக ஆகுகின்றது என்ற இந்த முழு நாடகத்தையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் எவரையும் வெறுப்பதில்லை. நீங்கள் இதை விளங்கப்படுத்த வேண்டும். நாடகத்திற்கேற்ப மாயையின் இராச்சியம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது இச்சக்கரம் ஒரு முடிவுக்கு வருகிறது. நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள், அவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் இனிமேலும் ஐந்து விகாரங்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றக்கூடாது. நீங்கள் அரைக்கல்பமாக மாயையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நான் இப்பொழுது உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு வந்துள்ளேன். இது சதோபிரதானாகவும், தமோபிரதானாகவும் ஆகுவதைப் பற்றிய ஒரு விளையாட்டாகும். இதில் அவதூறு என்ற கேள்விக்கே இடமில்லை. சிலர் வினவுகிறார்கள்: கடவுள் ஏன் வருவதும், போவதும் என்ற இந்த விளையாட்டை உருவாக்கினார்? “ஏன்?” என்னும் கேள்விக்கு இடமில்லை. இதுவே நாடகச் சக்கரம், இது மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் இடம்பெறும். இந்த நாடகம் அநாதியானது. சத்தியயுகம் கடந்துவிட்டது, இப்பொழுது இது கலியுகமாகும். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். தொடர்ந்தும் “பாபா, பாபா” என்று கூறுங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் நன்மை அடைவீர்கள். தந்தை கூறுகிறார்: இவ்விடயங்கள் மிக ஆழமானதும், களிப்பூட்டுவதும் ஆகும். கூறப்பட்டுள்ளது: பெண்சிங்கத்தின் பால் வைத்திருப்பதற்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகிறது. எவ்வாறு உங்கள் புத்தி தங்கம் ஆகும்? ஆத்மாவிலேயே புத்தி உள்ளது. ஆத்மா கூறுகிறார்: இப்பொழுது எனது புத்தி பாபாவிடம் செல்கிறது. நான் பாபாவைப் அதிகளவு நினைவுசெய்கிறேன். எங்கேயாவது அமர்ந்திருக்கும் பொழுது, புத்தி வேறு திசைகளில் செல்கிறது. உங்கள் புத்தி தொடர்ந்தும் உங்கள் வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்கிறது. பின்னர் உங்கள் புத்தி நீங்கள் கூறுவதை கேட்காததைப் போன்றது ஆகின்றது. இதற்கு முயற்சி தேவையாகும். மரணம் நெருங்கி வருவதால், நீங்கள் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருப்பீர்கள். மரணவேளையின் பொழுது, அனைவரும் கூறுகிறார்கள்: கடவுளை நினைவு செய்யுங்கள்! இப்பொழுது தந்தையே கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இப்பொழுது இது உங்கள் அனைவரினதும் ஓய்வுபெறும் ஸ்திதியாகும். நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதாலேயே நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டும். வேறு எதனையும் செவிமடுக்க வேண்டாம். உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. சிவபாபா கூறுகிறார்: இவ்வேளையில், அனைவரும் அஜாமிலைப் போன்று உள்ளார்கள். பிரதான விடயம் நினைவு யாத்திரை ஆகும். அதனூடாகவே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். உங்கள் மத்தியில் அதிகளவு அன்பு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆலோசனை பெறுங்கள். தந்தையே அன்புக்கடல். ஆகவே, உங்கள் மத்தியில், நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். ஆத்ம உணர்வு உடையவராகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சகோதர, சகோதரி என்ற உறவு முறையிலிருந்தும் அப்பாற் செல்ல வேண்டும். சகோதரர்களுடனோ அல்லது சகோதரிகளுடனோ யோகம் கொண்டிருக்க வேண்டாம். ஒரு தந்தையுடன் மாத்திரமே யோகத்தைக் கொண்டிருங்கள். தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால், உங்கள் விகாரமான பார்வை முடிவடையும். பௌதீகப் புலன்களினூடாக எந்தப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். நிச்சயமாக உங்கள் மனதில் புயல்கள் வரும். இலக்கு மிகவும் உயர்வானது. பாபா கூறுகிறார்: உங்கள் பௌதீகப் புலன்கள் உங்களை ஏமாற்றுவதை நீங்கள் பார்க்கின்ற போது, மிக எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எதனையாவது பிழையாகச் செய்தால், அனைத்தும் முடிவடைந்துவிடும். கூறப்பட்டுள்ளது: மேலேறுபவர்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறார்கள். உங்கள் முயற்சி இன்றி எதுவும் நிகழாது. பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. உங்கள் சரீரம் உட்பட, சரீர உறவுகள் அனைத்தையும் துண்டித்து விடுங்கள். சிலருக்கு பந்தனம் எதுவும் இல்லை, இருப்பினும், அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. உங்களிடம் 100,000 தொடக்கம் 200,000 வரையான ரூபாய்கள் இருக்கலாம், நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், இருப்பினும், பாபா கூறுகிறார்: உங்கள் வியாபாரத்தில் அதிகளவு சிக்கிக் கொள்ளாதீர்கள். ஓய்வுபெறும் ஸ்திதியில் இருப்பவராக ஆகுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏழை மக்கள் மிக எளிமையாகவே வாழ்கிறார்கள். இப்பொழுது வெளித்தோன்றியுள்ள கண்டுபிடிப்புக்களைப் பாருங்கள். கேட்கவே வேண்டாம்! செல்வந்தர்களுக்குச் செலவுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இல்லையேல், உங்கள் வயிற்றுக்கு என்ன தேவை? கால் இறாத்தல் மா, அவ்வளவுதான். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவரோடொருவர் மிக அன்பாக இருங்கள், ஆனால் சகோதர, சகோதரிகளுடன் யோகத்தை கொண்டிருக்காதீர்கள். பௌதீகப் புலன்களினூடாக, எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

2. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சதோபிரதான் ஆகுங்கள். மாயையின் வழிகாட்டல்களைத் துறவுங்கள். உங்கள் மத்தியிலான ஒன்றுகூடலை மிகவும் உறுதியாக்கி, ஒருவருக்கொருவர் உதவியாளர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் தகைமைகளும் உங்கள் இலக்கும் சமநிலையில் உள்ளவாறு செயலாற்றி, ஏறும் ஸ்திதியை அனுபவம் செய்வதால், தந்தையைப் போன்று முழுமையும் சம்பூர்ணமும் அடைவீர்களாக.

குழந்தைகளாகிய நீங்கள் உலகிற்கு உபகாரம் செய்ய விரும்புவதுடன், தந்தைக்குச் சமமாக ஆகுகின்ற மேன்மையான விருப்பத்தையும் கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்கள் இலக்கிற்கும் அதற்கான தகைமைகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உங்களுக்கும் பிறருக்கும் தென்படுகின்றது. ஆகையால், ஏறும் ஸ்திதிக்கான இந்த சமநிலை உள்ளவாறு செயலாற்றி, எந்தவொரு வேறுபாட்டையும் முடியுங்கள். உங்களுக்கு அந்த எண்ணம் உள்ளது, ஆனால் உங்கள் எண்ணத்தை திடசங்கற்பம் நிறைந்தது ஆக்கினால், தந்தையைப் போன்று முழுமையும் சம்பூர்ணமும் அடைவதற்கான ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுவீர்கள். இப்பொழுது, இடம்பெறுகின்ற இருவகையான சக்கர சுழற்சிகளை மாற்றுங்கள்: சுயதரிசன சக்கர சுழற்சியுடன், ஆனால் பிறரை பார்க்கின்ற சக்கரமும் உள்ளது. அத்துடன் வீணான விடயங்களையிட்டு திரிகாலதரிசியாக இருப்பதையும் நிறுத்தி, உங்களையிட்டு தூய, ஆக்கபூர்வ எண்ணங்களைக் கொண்டிருந்து, சுயதரிசன சக்கரத்தை மாத்திரம் சுழற்றுங்கள்.

சுலோகம்:
சேவை செய்வதற்கான பாக்கியத்தை பெறுவதே மகா பாக்கியமாகும்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

உங்கள் சரீரத்தையும் உலக சரீரங்களையும் மறக்கின்ற பயிற்சியை செய்து, ஒரு பரந்தாமவாசியாக சரீரமற்றவர் ஆகுங்கள். அதன் பின்னர் பரந்தாமவாசியாக இருப்பதுடன், அவ்யக்த ஸ்திதியில் ஸ்திரமாகுங்கள். அதன் பின்னர் சேவை செய்வதற்காக, ஓசைக்குள் வாருங்கள். சேவை செய்யும் போது, உங்கள் வடிவத்தின் விழிப்புணர்வை பேணுங்கள். உங்கள் புத்தியை நீங்கள் விரும்பிய இடத்தில் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஈடுபடச் செய்தால் உங்களால் சிறப்புச்சித்தி எய்த முடியும்.