10.12.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இசைத் தட்டுப்பாடல்கள் அனைத்தும் சஞ்சீவினி மூலிகையைப் போன்றன. அப்பாடல்களை இசைப்பதன் மூலம், சோர்வடைந்த (மனமுடைந்து போயிருக்கும்) உணர்வுகள் அனைத்தும் அகற்றப்படும்.

கேள்வி:
உங்கள் ஸ்திதி ஏன் சீர்குலைகின்றது? உங்கள் ஸ்திதியைச் சிறந்தாக வைத்திருப்பதற்கு நீங்கள் என்ன வழிமுறையைக் கையாளுவீர்கள்?

பதில்:
1) நீங்கள் ஞான நடனத்தை ஆடுவதற்குப் பதிலாக, வம்பளத்தலில் உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள். இதனாலேயே உங்கள் ஸ்திதி சீர்குலைகின்றது.

பாடல்:
அமிர்தவேளையிலே எனது மனக்கதவிற்கு வந்தது யார்?

ஓம் சாந்தி.
பாபா இந்த இசைத் தட்டைக் குழந்தைகளாகிய உங்களுக்காகவே உருவாக்கியிருக்கின்றார். இதன் அர்த்தத்தை, குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். உங்கள் வீடுகளிலே நீங்கள் இத்தகைய சிறந்த இசைத் தட்டுக்களை வைத்திருக்க வேண்டும் என பாபா பல தடவைகள் உங்களுக்குக் கூறியிருக்கின்றார். பின்னர், நீங்கள் சோர்வடையும் போது அந்த இசைத்தட்டுக்களை நீங்கள் மீண்டும் இசைக்கும் போது, அதன் அர்த்தம் உங்கள் புத்தியில் உடனடியாகவே புகுவதனால் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். இந்த இசைத்தட்டுகள் உயிர்கொடுக்கும் மூலிகையைப் போன்றன. பாபா வழிகாட்டல்களைக் கொடுத்த போதிலும், நீங்கள் அவற்றை நடைமுறையில் இட வேண்டும். “எனது, உங்களது, அனைவரதும் மனதினுள் வந்தவர் யார்?” என்று பாடியவர் யார்? வந்தவர் யார்? இப்பொழுது வந்து ஞான நடனத்தை ஆடுகின்ற அந்த ஒரேயொருவரே. கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ணரை ஆடச் செய்வார்கள் எனக் கூறப்படுகின்றது, ஆனால் அது அவ்வாறல்ல. பாபா இப்பொழுது கூறுகின்றார்: ஓ சாலிகிராம் குழந்தைகளே! அவர் இதனை அனைவருக்கும் கூறுகின்றார். பாடசாலையானது கல்வி கற்பிக்கப்படும் ஒரு இடமாகும். இதுவும் ஒரு பாடசாலையே. நீங்கள் யாரை உங்கள் இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த விடயங்கள் வேறு எந்தவொரு மனிதரின் புத்தியிலும் இல்லை. இந்த நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள், வேறு எவருமே அவரை நினைவு செய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்களால் ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். நான் உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டலுக்கேற்ப நீங்கள் என்னை நினைவு செய்வதில்லை. என்னை நினைவு செய்வதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. நீங்கள் எனது கட்டளைகளைச் சொற்ப அளவே பின்பற்றுகின்றீர்கள், ஆனால் நீங்கள் மாயையின் வழிகாட்டல்களையே பெருமளவு பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் இரவு நித்திரைக்குச் செல்லும் முன்னர் அரை மணித்தியாலமேனும் என் நினைவில் இருக்க வேண்டும் எனப் பல தடவைகள் உங்களுக்கு நான் கூறியிருக்கின்றேன். நீங்கள் ஒரு தம்பதியினராக இருப்பின், நீங்கள் ஒன்றாக அமரலாம் அல்லது வெவ்வேறாகவும் அமரலாம், ஆனால் ஒரேயொரு தந்தையை மாத்திரம் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். எவ்வாறாயிலும், நீங்களும் பாபாவை மிக அரிதாகவே நினைவு செய்கின்றீர்கள். மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். பாபாவின் கட்டளையை நீங்கள் பின்பற்றாதுவிடின், எவ்வாறு உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியும்? நீங்கள் பாபாவைப் பெருமளவில் நினைவு செய்ய வேண்டும். சிவபாபா, நீங்களே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. அனைவரும் உங்களிடம் இருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறவுள்ளார்கள். எந்த முயற்சியையும் செய்யாதவர்களும் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வார்கள், அனைவருமே பிரம்மாந்தத்தின் அதிபதி ஆகுவார்கள். நாடகத்திற்கு ஏற்ப, அவர்கள் எதனையும் செய்யாவிடினும், ஆத்மாக்கள் அனைவரும் நிர்வாணா உலகிற்குச் செல்வார்கள். எவ்வாறாயினும், அரைக்கல்பமாகப் பக்தி செய்பவர்களும் நான் வழிகாட்டியாக வரும்வரை வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. எவருமே வீட்டிற்கான பாதையைக் கண்டு கொள்ளவில்லை. யாராவது அதனைப் பார்த்தார்களாயின், அவர்கள் ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போல் பின்தொடர்வார்கள். அசரீரியான உலகம் என்றால் என்ன என்பது எவருக்குமே தெரியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது, இது மீண்டும் நடைபெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு கர்மயோகியாக இருந்து உங்கள் நாளாந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும், நீங்கள் சமைக்க வேண்டும், வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்யவும் வேண்டும். செயலைத் துறத்தல் என்பதைப் பற்றிப் பேசுவது தவறானதாகும். எவராலும் செயல்களைச் செய்யாது இருக்க முடியாது. அவர்கள் தமக்கு “கர்ம துறவிகள்” என்ற பெயரைக் கொடுப்பது பொய்யானதாகும். நாள் முழுவதும் உங்கள் பணிகள் போன்றவற்றைச் செய்யுங்கள், ஆனால் தந்தையைக் காலையிலும் மாலையினும் மிக நன்றாக நினைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு உரியவரான அந்த ஒரேயொருவரை நீங்கள் நினைவு செய்வீர்களேயானால், நீங்கள் உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள். இல்லாவிடின், நீங்கள் உதவியைப் பெற்றுக் கொள்ளமாட்டீர்கள். செல்வந்தர்கள் தாம் இப்பொழுது தந்தைக்கு உரியவர்களாக வேண்டும் என்பதைக் கேள்விப்பட்டதுமே அவர்களது இதயம் சுருங்குகின்றது. ஆகவே, அவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவரை நினைவு செய்வது மிக இலகுவானதாகும். அவரே எங்கள் தந்தையும் ஆசிரியரும் குருவுமாவார். அவர் உலக வரலாற்றினதும் புவியியலினதும் இரகசியத்தை எங்களுக்குக் கூறியிருக்கின்றார். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன் சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்ற வேண்டும். தந்தை மாத்திரமே அனைவரையும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் இத்தகைய எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இரவில் நித்திரைக்குச் செல்வதற்கு முன்னர், இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் சுழற்ற வேண்டும். பின்னர் நீங்கள் அதிகாலையில் எழுந்ததும், அதே ஞானத்தை நினைவில் வைத்திருங்கள். முதலில் நாங்கள் பிராமணர்கள், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம். பின்னர் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும் பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுகின்றோம். பாபா வந்த பின்னர் நாங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகுவோம். பாபாவே திரிமூர்த்தி, திரிகாலதரிசி மற்றும் திரிநேத்திரியும் ஆவார். அவர் எங்கள் புத்தியின் பூட்டையும் திறக்கின்றார். நாம் மூன்றாம் கண்ணாகிய ஞானக்கண்ணைப் பெற்றுக் கொள்கின்றோம். அத்தகைய தந்தையாக வேறு எவராலும் இருக்க முடியாது. தந்தை படைக்கின்றார், ஆகவே அவர் எங்கள் தாயாகவும் இருக்கின்றார். அவர் ஜகதாம்பாளை (உலகத் தாயை) அனைவரையும் பராமரிப்பதற்கான தாயாக்குகின்றார். தந்தை இந்தச் சரீரத்தினுள் உட்புகுந்து பிரம்மாவின் வடிவில் எங்களுடன் விளையாடுகின்றார். அவர் எங்களை உலாவுவதற்கும் அழைத்துச் செல்கின்றார். நாம் பாபாவை நினைவு செய்கின்றோம். அவர் இங்கு வந்து இவரின் இரதத்தினுள் உட்புகுகின்றாரென்பது உங்களுக்குத் தெரியும். பாப்தாதா எங்களுடன் விளையாடுகின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். எங்களுடன் விளையாடும் பொழுதும் நினைவில் இருப்பதற்கு பாபா முயற்சி செய்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் இவரின் மூலம் உங்களுடன் விளையாடுகின்றேன். இவரே உயிருள்ளவர். நீங்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அந்தத் தந்தைக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட நீங்கள் உங்களை அவருக்கு அர்ப்பணித்து விடுவதாகக் கூறியதுண்டு. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இந்த ஒரு பிறவிக்கு என்னை உங்கள் வாரிசாக ஆக்குங்கள், நான் உங்களுக்கு உங்கள் 21 பிறவிக்கான இராச்சிய பாக்கியத்தை கொடுப்பேன். அவர் கொடுக்கின்ற கட்டளைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவர் தான் எதைப் பார்க்கின்றாரோ அதற்கேற்பவே வழிகாட்டல்களைக் கொடுப்பார். நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றும் பொழுது, உங்கள் பற்றுக்கள் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும். எவ்வாறாயினும், சில குழந்தைகள் பயப்படுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களை எனக்கு அர்ப்பணிப்பதில்லை, ஆகவே, நான் எவ்வாறு உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பது? நான் உங்கள் பணத்தை எடுத்துக் கொள்வதில்லை. பாபா கூறுகின்றார்: நல்லது, உங்களிடம் பணம் ஏதாயினும் இருப்பின், அதனைப் புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்துங்கள். நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். பாபாவிடம் இருக்கும் அனைத்தும் உங்களுக்கேயாகும். அவர் உங்களிடம் இருந்து எதனையும் பெற்றுக் கொள்வதில்லை. அவர் உங்களுக்குத் தந்திரமாக விளங்கப்படுத்தி உங்கள் பற்றினை முடிவிற்கு வரச் செய்கின்றார். பற்று என்பது மிகவும் உறுதியான விகாரமாகும். பாபா கூறுகின்றார்: நீங்கள் ஏன் குரங்குகளைப் போல் அவர்களில் பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள்? அவ்வாறாயின், ஒவ்வொரு வீட்டிலும் எவ்வாறு ஓர் ஆலயம் இருக்க முடியும்? நான் உங்களை உங்கள் குரங்கு வாழ்க்கையில் இருந்து விடுவித்து, ஆலயத்தில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகின்றேன். ஏன் அந்த அழுக்கானவற்றில் நீங்கள் பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள்? எவ்வாறு அனைத்தையும் பராமரிப்பது என்பதைப் பற்றிய வழிகாட்டல்கள் யாவற்றையும் பாபா கொடுக்கின்றார். அப்படியிருந்தும், அது உங்கள் புத்தியில் பதிவதில்லை. அவை அனைத்தையும் அறிந்து கொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பாபாவுடன் எவ்வாறு அமிர்தவேளையில் பேச வேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனையையும் பாபா உங்களுக்குக் கூறுகின்றார். பாபா, எங்கள் எல்லையற்ற தந்தையும் ஆசிரியரும் நீங்களே. உங்களால் மாத்திரமே உலகின் எல்லையற்ற வரலாற்றினையும் புவியியலையும் கூற முடியும். உலகில் இருக்கின்ற வேறு எவருக்குமே இலக்ஷ்மி நாராயணனின் 84 பிறவிக் கதை தெரியாது. ஜெகதாம்பாளும் தாய் என்றே அழைக்கப்படுகின்றார். அவர் யார்? அவரால் சத்தியயுகத்தில் இருக்க முடியாது. அங்கிருக்கும் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாகவே இலக்ஷ்மியும் நாராயணனும் இருக்கின்றார்கள். அவர்களுக்கென ஒரு முடிக்குரிய இளவரசர் இருப்பார். அவ்வாறு ஒரு முடிக்குரிய இளவரசர் ஆகுமளவிற்கு எவ்வாறு நாம் அவர்களின் குழந்தையாகுவது? ஜெகதாம்பாள் ஒரு பிராமணர் என்பது இப்பொழுது எங்களுக்குத் தெரியும். அவரே பிரம்மாவின் மகளாகிய சரஸ்வதியாவார். மக்களுக்கு இந்த இரகசியம் தெரியாது. பாபாவை இரவில் நினைவு செய்யும் நடைமுறையானது மிகவும் சிறந்ததாகும். இதனை நீங்கள் உங்கள் நடைமுறையாக்கும் பொழுது உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்வதுடன் நீங்கள் எந்தவொரு கஷ்டத்தையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியதால், நீங்கள் சகோதர, சகோதரிகள் எனக் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின், நீங்கள் எந்தவிதமானதொரு தீய பார்வையைக் கொண்டிருப்பதுவும் குற்றச் செயலாகும். சதோ, ரஜோ, தமோ வகையான போதைகள் இருக்கின்றன. உங்கள் போதையானது தமோகுணியாக இருப்பின், நீங்கள் மரணித்து விடுவீர்கள். குறுகிய நேரத்திற்காயினும் பாபாவின் நினைவை உங்கள் ஒழுக்கமாகக் கொண்டு, பின்னர் சென்று பாபாவின் சேவையைச் செய்யுங்கள். இதனைச் செய்வதன் மூலம், நீங்கள் மாயையின் புயல்களை அனுபவம் செய்ய மாட்டீர்கள். உங்கள் போதையானது நாள்முழுவதும் நிலைத்திருப்பதுடன், நீங்கள் சீர்செய்யப்பட்ட ஸ்திதியையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் யோக ரேகையும் தெளிவாகும். அத்தகைய இசைத்தட்டுக்கள் மிகவும் சிறந்தவையாகும். நீங்கள் அத்தகைய இசைத்தட்டுக்களைச் செவிமடுக்கும் பொழுது, நடனமாட ஆரம்பிப்பதுடன் நீங்கள் புத்துணர்ச்சியும் அடைவீர்கள். மிகச்சிறந்த நான்கு அல்லது ஐந்து இசைத்தட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சேவையைச் செய்வதில் ஏழைகள் மிகவும் மும்முரமாக இருக்கும் பொழுது, அவர்கள் மாளிகைகளைப் பெற்றுக் கொள்வார்கள். உங்களால் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொள்ளமுடியும். பாபா சேவைசெய்யும் தனது குழந்தைகளுக்கு ஏன் எதனையும் கொடுக்காது விடுவார்? சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் எப்பொழுதும் நிறைந்தே இருக்கும். இசைக்கப்பட்ட அந்தப் பாடலில் நடனம் எனக் குறிப்பிடப்பட்டது, ஞான நடனமாகும். பாபா வந்து கோபிகள், கோபிகைகளாகிய உங்களை ஞான நடனம் ஆடும்படி செய்கின்றார். நீங்கள் எங்கிருந்தாலும், தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது உங்கள் ஸ்திதியானது சிறந்ததாக இருக்கும். பாபா ஞானம், யோகம் என்ற போதையில் நிலைத்திருப்பதனால் அதனையே குழந்தைகளாகிய உங்களுக்கும் கற்பிக்கின்றார். ஆகவே, நீங்கள் இந்தப் போதையில் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இல்லாவிடின் நீங்கள் வம்பளப்பதனால், உங்கள் ஸ்திதி பாழாகுகின்றது. அதிகாலையிலே விழித்தெழுவது மிகவும் சிறந்ததாகும். பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கும் போது, பாபாவுடன் மிகவும் இனிமையான முறையில் பேசுங்கள். சொற்பொழிவுகளை ஆற்றுபவர்களும் ஞானத்தைக் கடைந்து, குறிப்பிட்ட கருத்தினை விளங்கப்படுத்துவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பல குழந்தைகள், தாம் தமது வேலையை விட்டுவிடலாமா எனக் கேட்கின்றார்கள். எவ்வாறாயினும், பாபா கூறுகின்றார்: முதலில் நீங்கள் செய்கின்ற சேவையின் அத்தாட்சி எதனையேனும் கொடுங்கள். நினைவினைக் கொண்டிருப்பதற்கு பாபா மிகச்சிறந்த முறைகளைக் கொடுக்கின்றார். ஆனால் பல மில்லியன் கணக்கானானோரில், ஒரு கைப்பிடியளவினரே அந்தப் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள். உங்களில் நினைவில் அமர்ந்திருப்பவர்கள், மிகக் குறைந்த அளவினராகவே இருக்கின்றார்கள். குமாரிகளாகிய நீங்கள் மிகப் பிரபல்யமானவர்கள். அனைவரும் குமாரிகளின் பாதங்களில் வீழ்கின்றார்கள். நீங்களே பாரதத்தை 21 பிறவிகளுக்கு சுய இராச்சிய உரிமையைப் பெறுமாறு செய்கின்றீர்கள். உங்கள் ஞாபகார்த்தமாக ஆலயமும் இருக்கின்றது. “பிரம்மா குமார், குமாரிகள்” என்ற பெயரானது மிகவும் பிரபல்யமாகிவிட்டது. குமாரியானவர் 21 சந்ததிகளை உயர்த்திவிடுபவர் ஆவார். ஆகவே, நீங்கள் அதன் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படச்சுருள் 5000 வருடங்களுக்குச் சுற்றுகின்றது. கடந்து செல்வது அனைத்தும் நாடகமே. ஏதாவது தவறு நடந்தாலும் அதுவும் நாடகத்தின் ஒரு பாகமே. எவ்வாறாயினும், நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பதிவேட்டைப் பாழாக்கக்கூடாது. பதிலாக அதனைச் சரிப்படுத்த வேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை, அப்பொழுதே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் பாபாவிற்கு உரியவர்களாகிய பின்னர், பாபா உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பார். அவர் இந்த ஆஸ்தியை மாற்றாந்தாய்க் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. உதவி செய்வது உங்கள் கடமை. விவேகமானவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் உதவி செய்வார்கள். பாபா எவ்வளவு உதவிசெய்கின்றார் எனப் பாருங்கள்! நீங்கள் தைரியசாலிகளாக இருக்கும் பொழுது, தந்தையிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். மாயையை வெல்வதற்கு உங்களுக்குச் சக்தி தேவை. ஒரேயொரு ஆன்மீகத் தந்தையை நினைவு செய்யுங்கள். அனைவரிடம் இருந்தும் உங்கள் பற்றைத் துண்டித்து ஒரேயொருவருடனேயே இணைத்துக் கொள்ளுங்கள். பாபாவே ஞானக்கடல். அனைவரிடம் இருந்தும் உங்கள் பற்றினை அகற்றி ஒரேயொருவருடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள். பாபாவே ஞானக் கடல். அவர் கூறுகின்றார்: நான் இவரினுள் பிரவேசித்துப் பேசுகின்றேன். உங்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் குரு என்றோ, மற்றும் பிரம்மா, விஷ்ணு சங்கரரைப் படைப்பவர் என்றோ வேறெவருமே உரிமை கோர முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பழைய குப்பைகள் மீதுள்ள உங்கள் பற்று அனைத்தையும் அகற்றுங்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உங்கள் பற்றை முடித்துவிடுங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள்.

2. இந்த இறுதிப் பிறவியிலே, கடவுளை உங்கள் வாரிசாக்கி, அவரிடம் உங்களை அர்ப்பணித்தால் மாத்திரமே நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். தந்தையை நினைவு செய்து சேவை செய்யுங்கள். உங்கள் போதையைப் பேணுவதுடன் உங்கள் பதிவேடு சீர்குலையாத வகையில் அதில் கவனம் செலுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு பரோபகாரமான சேவையாளராகி, அதீந்திரிய சுகம் என்ற ரூபத்தில் அதன் உடனடிப் பலனை அனுபவம் செய்வீர்களாக.

சங்கமயுகத்தில் நீங்கள் செய்த செயல்களின் பலனை சத்தியயுகத்தில் பெறுவீர்கள். ஆனால் இங்கே, தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் ஆஸ்தியின் நடைமுறையான, உடனடிப் பலனை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் சேவை செய்யும்போது, அதற்கான சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். நினைவில் இருந்து, தன்னலமற்ற முறையில் சேவை செய்பவர்கள், நிச்சயமாக அந்த சேவைக்கான நடைமுறையான, உடனடிப் பலனைப் பெறுகிறார்கள். நடைமுறையான, உடனடிப் பலன் என்பது உங்களை என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆக்கும் புதிய பழமாகும். யோகியுக்த் நிலையில் இருந்தவண்ணம் மிகச்சரியான சேவை செய்வதன் பலன், சந்தோஷம், அதீந்திரிய சுகம் மற்றும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் அனுபவத்தைப் பெறுவதும் ஆகும்.

சுலோகம்:
விசேடமான ஆத்மா என்பவர், தனது நடத்தையினூடாக ஆன்மீக இராஜரீகத்தின் பிரகாசத்தினதும் போதையினதும் அனுபவத்தைக் கொடுப்பவர் ஆவார்.