11.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிமையான குழந்தைகளே, கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களிடம் ஞானரத்தினங்கள் உள்ளன. நீங்கள் இந்த ஞான இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்யவேண்டும். நீங்கள் இங்கே பக்தியை அன்றி, ஞானத்தையே கற்கின்றீர்கள்.

கேள்வி:
நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ள எந்த அற்புதமான விடயத்தை மனிதர்கள் கடவுளின் தெய்வீகச்செயல் என்று நம்பி அதற்காக அவரைப் புகழ்கின்றார்கள்?

பதில்:
அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரின் காட்சி கிடைக்கின்ற பொழுது, கடவுளே அந்தக் காட்சியைக் கொடுத்ததாக அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும் அனைத்தும் நாடகத்துக்கு ஏற்பவே நடக்கின்றது. ஓரு புறத்தில் அவர்கள் கடவுளைப் புகழ்கின்றார்கள், மறுபுறத்தில் அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று கூறுவதன் மூலம் அவமரியாதை செய்கின்றார்கள்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார். எந்த மனிதர்களோ அல்லது தேவர்களோ கடவுளாக இருக்கமுடியாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பிரம்மதேவனுக்கு வந்தனங்கள், விஷ்ணுதேவனுக்கு வந்தனங்கள், சங்கர் தேவனுக்கு வந்தனங்கள் என்று பாடுகின்றார்கள். பின்னர் அவர்கள் பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள் என்று கூறுகின்றார்கள். சிவனுக்கு சொந்தமாக ஒரு சரீரமில்லை என உங்களுக்குத் தெரியும். சிவபாபாவும் சாலிகிராம்களும் அசரீரி உலகில் வசிக்கின்றார்கள். தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எந்தவோர் ஒன்றுகூடல்களிலும் உண்மையில் சத்தியத்தின் சகவாசம் (சத்சங்) இல்லை. தந்தை கூறுகிறார்: அவை மாயையின் சகவாசங்கள். கடவுள் அவர்களுக்கு கற்பிக்கின்றார் என்று அங்கு எவருமே புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கீதையை செவிமடுக்கும் பொழுதும் கூட, அதைக் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசியதாக கருதுகின்றார்கள். நாளுக்கு நாள், கீதையின் கல்வி தொடர்ந்தும் குறைவடைகின்றது, ஏனெனில் அவர்களுக்கு தங்களது சொந்த தர்மத்தையே தெரியாது. அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரில் அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரையே தொட்டிலில் வைத்துத் தாலாட்டுகின்றனர். யாரை நீங்கள் தொட்டிலில் தாலாட்டுகிறீர்கள் என இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு குழந்தையைத் தாலாட்டலாம், ஆனால் தந்தையைத் தாலாட்ட முடியாது. நீங்கள் சிவபாபாவை தாலாட்டுவீர்களா? அவர் குழந்தை ஆகுவதில்லை. அவர் மறுபிறப்பு எடுப்பதில்லை. அவர் ஒரு புள்ளியாவார். அவரை எவ்வாறு தாலாட்டுவீர்கள்? பலர் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியைக் கண்டுள்ளனர். ஸ்ரீகிருஷ்ணர் உலகின் அதிபதி ஆகுவதனாலேயே ஸ்ரீகிருஷ்ணரின் வாயினுள்ளே முழு உலகமும் காட்டப்பட்டுள்ளது. வெண்ணெய் உலகைக் குறிக்கின்றது. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்பவர்களும் உலகம் என்ற ரூபத்தில் இருக்கின்ற வெண்ணெய்க்காகவே சண்டை இடுகிறார்கள். தாங்கள் வெற்றி அடைவோம் என அவர்கள் நினைக்கின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் வாயினுள் ஒரு வெண்ணெய் உருண்டை காட்டப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு காட்சிகளைக் காண்கிறார்கள். ஆனால் அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இங்கே, காட்சிகளின் அhத்தம் உங்களுக்கு விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. கடவுள் தங்களுக்கு காட்சி கொடுத்ததாக மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எவரையாவது அவர்கள் நினைவு செய்தால், உதாரணமாக அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் தீவிரமாக வழிபட்டால் பின்னர் அவர்களின் ஆசை தற்காலிகமாக பூர்த்தி செய்யப்படுகின்றது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் காட்சி கொடுத்தார் என்று கூறப்படுவதில்லை. ஒருவர் எந்தவிதமான நம்பிக்கையுடன் தீவிரமாக ஒருவரை வழிபடுகின்றாரோ, அவருடைய காட்சி அவருக்குக் கிடைக்கும். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. காட்சிகளை அருள்பவர் என்ற புகழ் கடவுளுக்கு உள்ளது. ஒரு புறத்தில் பெருமளவு புகழ் இருக்கின்றது. மறுபுறத்தில் கடவுள் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றார்கள்! அவர்கள் பக்தியைக் குருட்டு நம்பிக்கையுடன் பயிற்சி செய்கின்றார்கள். நான் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியைக் கண்டேன், நான் நிச்சயமாக ஸ்ரீகிருஷ்ண தாமத்திற்குச் செல்வேன், அவ்வளவுதான்! என அவர்கள் நினைக்கின்றனர். எவ்வாறாயினும் ஸ்ரீகிருஷ்ணதாமம் எங்கிருந்து வந்தது? தந்தை இப்பொழுது அனைத்து இரகசியங்களையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஸ்ரீகிருஷ்ணதாமம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. இது கம்சனின் (கிருஷ்ணரின் தாய்மாமனான அசுரன்) தாமமாகும். கம்சன், அகாசூர், பகாசூர், கும்பகர்ணன், இராவணன் இவை அனைத்தும் அசுரர்களின் பெயர்களாகும். அவர்கள் அவ்வாறான விடயங்களை புராணங்களிலே எழுதியுள்ளார்கள்! இரண்டு விதமான குருமார் இருக்கின்றார்கள் என்பது விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஒருவிதமான குருமார் பக்தி மார்க்கத்திற்குச் சொந்தமானவர், அவர் பக்தியை மாத்திரம் கற்பிக்கின்றார். எவ்வாறாயினும், இந்தத் தந்தை, ஞானக்கடலாவார். இவர் சற்குரு என அழைக்கப்படுகின்றார். இவர் ஒருபோதும் பக்தியைக் கற்பிப்பதில்லை. இவர் ஞானத்தை மாத்திரமே கற்பிக்கின்றார். பக்தி செய்வதில் மனிதர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். அவர்கள் கஞ்சிரா போன்றவற்றையும் வாசிக்கின்றார்கள். பெனாரசில் எவ்வாறு அவர்கள் தேவர்களுக்குப் பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள் என நீங்கள் பார்க்கலாம். அவை அனைத்தும் வியாபார நிலையங்களாகும். அது பக்தியின் வியாபாரம். குழந்தைகளாகிய உங்களுடைய வியாபாரம் ஞான இரத்தினங்களுடன் ஆகும். இதுவும் கூட வியாபாரம் என்றே அழைக்கப்படுகின்றது. தந்தையும் இரத்தின வியாபாரி ஆவார். இவை எவ்வாறான இரத்தினங்கள் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு கல்பத்தின் முன்னர் இதைப் புரிந்து கொண்டவர்களே, இப்பொழுதும் இதைப் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். கடைசியில் அனைத்து முக்கியமான மக்களும் வந்து புரிந்து கொள்வார்கள். அவர்களும் கூட மாற்றப்பட்டுள்ளனர். மக்கள் ஜனகமன்னரின் கதையைக் கூறுகின்றனர். ஜனகர் பின்னர் அனுஜனகர் (ஒரு வினாடியில் ஜீவன் முக்தியைப் பெற்றவர்) ஆகினார். ஒருவருடைய பெயர் ஸ்ரீகிருஷ்ணர் என இருந்தால், நீங்கள் அனு (முதலாமவர்) தெய்வீக ஸ்ரீகிருஷ்ணராக ஆகுவீர்களெனக் கூறலாம். சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்த, சம்பூரணமான ஸ்ரீகிருஷ்ணர் எங்கே இருக்கின்றார் எனவும், இந்த ஒருவர் (பிரம்மா) எங்கே இருக்கின்றார் எனவும் பாருங்கள்! இலக்ஷ்மி என்ற பெயரைக் கொண்ட ஒருவர், இலக்ஷ்மி, நாராயணன் சிலைகளுக்கு முன்னால் சென்று அவர்களின் புகழ் பாடுகின்றார். ஆனால் அவர்களுக்கும் தனக்கும் இடையில் ஏன் ஒரு வித்தியாசம் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக 84 பிறவிகள் எடுப்பீர்கள். இந்த உலகச் சக்கரம் எண்ணிக்கையற்ற தடவைகள் தொடர்ந்து சுழல்கின்றது. இது ஒருபோதும் நிறுத்தப்பட முடியாது. நீங்கள் இந்த நாடகத்தில் நடிகர்கள். மனிதர்கள் இந்த நாடகத்தில் தங்களது பாகத்தை நடிப்பதற்காக வந்துள்ளார்கள் என நிச்சயமாகப் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியாது. ஆத்மாக்களாகிய எங்களின் வசிப்பிடம் அனைத்துக்கும் அப்பால் உள்ளது எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கே சூரிய, சந்திரனின் ஒளி இருக்க மாட்டாது. ஏழைகளும், சாதாரணமான குழந்தைகளுமே இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள். ஏனெனில் பாரதமே அனைத்திலும் அதிசெல்வந்தமாக இருந்ததுடன் அந்த பாரதமே பின்னர், அனைத்திலும் ஏழ்மையாகி விட்டது. முழு நாடகமும் பாரதத்தைப் பற்றியதாகும். பாரதத்தைப் போன்று தூய்மையான பூமி எதுவும் இருக்கவில்லை. தூய உலகில் தூய தேசமே இருக்கும், அங்கே வேறு எந்த தேசமும் இருக்கவில்லை. இலங்கை எவ்வாறு ஒரு தீவாக இருக்கின்றதோ, அவ்வாறே இந்த முழு உலகமும் எல்லையற்ற தீவாகும் என பாபா விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் இராவணன் இலங்கையில் வசித்ததாகக் கூறுகின்றனர். உண்மையில் இராவண இராச்சியம் இந்த எல்லையற்ற தீவு முழுவதுமே உள்ளது என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இந்த முழு உலகமுமே கடலிலே ஓய்வு எடுக்கின்றது, இது ஒரு தீவாகும். இராவணன் அதை ஆள்கின்றான். இந்த சீதைகள் அனைவரும் இராவணனின் சிறையில் உள்ளார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட கதைகளை உருவாக்கி உள்ளார்கள். இவை அனைத்தும் எல்லையற்ற விடயங்கள். இது எல்லையற்ற நாடகம். அவர்கள் இந்த நாடகத்தில், இருந்து சிறிய நாடகங்களை உருவாக்கி உள்ளார்கள். அந்தப் படங்களும் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. எனவே தந்தைக்கு விளங்கப்படுத்துவது இலகுவாகி உள்ளது. முழு எல்லையற்ற நாடகமும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. அசரீரி உலகம், சூட்சும உலகம் போன்றவை எவருடைய புத்தியிலும் இருக்க மாட்டாது. ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலக வாசிகள் என உங்களுக்குத் தெரியும். தேவர்கள் சூட்சும உலக வாசிகள்: அவர்கள் தேவதைகள் என அழைக்கப்படுகின்றனர். அங்கே எலும்புகள், சதையினாலான இந்தக் கூடுகள்(சரீரங்கள்) இருக்க மாட்டாது. சூட்சும உலகின் பாகம் சிறிது காலத்துக்கே ஆகும். நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் சூட்சும உலகிற்குப் போய் திரும்பி வருகிறீர்கள். பின்னர் ஒருபோதும் போகமாட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீPங்கள் உங்கள் அநாதியான வீட்டிலிருந்து கீழே வரும்போது சூட்சும உலகினூடாக அன்றி, நேரடியாகவே வருவீர்கள். நீங்கள் இப்பொழுது சூட்சும உலகினூடகவே திரும்பிச் செல்வீர்கள். சூட்சும உலகின் பாகம் இப்பொழுதே ஆகும். இந்தச் சகல இரகசியங்களும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. தான் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என தந்தைக்குத் தெரியும். இந்த விடயங்கள் பற்றி எந்தவொரு சாது, சந்நியாசிகளுக்கும் தெரியாது. இந்த விடயங்கள் பற்றி அவர்களால் பேச முடியாது. தந்தை குழந்தைகளுடன் பேசுகின்றார். அவரினால் புலன் அங்கங்கள் இல்லாமல் பேச முடியாது. அவர் கூறுகிறார்: நான் இந்த உடலின் ஆதாரத்தை எடுத்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். ஆத்மாக்களாகிய உங்களுடைய பார்வையும் தந்தையை நோக்கியே திரும்பியுள்ளது. இவை அனைத்தும் புதிய விடயங்களாகும். அவர் அசரீரியான தந்தையாவார். அவருடைய பெயர் சிவபாபா என்பதாகும். ஆத்மாக்களாகிய உங்களுடைய பெயர் ஆத்மாவே. உங்களுடைய சரீரத்தின பெயர் மாறுகின்றது. பரமாத்மா பெயர், வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கூறுவதுடன் பின்னர் அவருடைய பெயர் சிவன் என்றும் மனிதர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவரைப் பூஜிக்கிறார்கள். அவர்கள் ஒன்றை விளங்கிக்கொண்டு வேறொன்றைச் செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையினுடைய பெயர், வடிவம், தேசம், நேரம் போன்றவற்றைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். பெயர் வடிவமில்லாமல் எதுவுமே இருக்க முடியாது என உங்களுக்குத் தெரியும். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் சூட்சுமமான விடயமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரு செக்கனில் ஜீவன்முக்தி என்பது நினைவுகூரப்படுகிறது. சாதாரண மனிதனும் நாராயணன் ஆகலாம் என்பதே இதன் அர்த்தமாகும். நாங்கள் சுவர்க்க கடவுளாகிய தந்தையின் குழந்தைகளாகிய போதிலும், நாங்கள் இன்னமும் சுவர்க்கத்தின் அதிபதிகளாகவே கருதிக் கொள்கின்றோம். எவ்வாறாயினும், அவர்கள் இதைக்கூட புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதே உங்களுடைய இலக்கும், இலட்சியமும் ஆகும். இது இராஜயோகம். நான்கு கைகளையுடைய ரூபத்தைப் (விஷ்ணு) பலர் காட்சியாகக் கண்டுள்ளார்கள். அவர்கள் விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆகுவார்கள் என்பதையே இது நிரூபிக்கிறது. சுவர்க்கத்திலும் கூட, இலக்ஷ்மி, நாராயணனின் சிம்மாசனத்திற்கு பின்னால் அவர்கள் விஷ்ணுவின் அடையாளச் சின்னத்தைக் காண்கிறார்கள். அதாவது, அவர்களுடைய ஆட்சி விஷ்ணு தாமத்திலேயே. இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆவார்கள். அது ஸ்ரீகிருஷ்ணதாமம், இது கம்சனின் பூமியாகும். நாடகத்திற்கேற்ப, இந்தப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார். என்னுடைய வடிவம் சூட்சுமமானது, எவருமே அதை அறிந்து கொள்ளமுடியாது. அவர்கள் ஆத்மா நட்சத்திரம் போன்றவர் என கூறுகின்றனர். பின்னர் அவர்கள் லிங்கத்தை உருவாக்குகின்றனர். இல்லாவிடின், எவ்வாறு அவர்கள் பூஜிக்கமுடியும்? அவர்கள் உருத்திர யாகத்தை உருவாக்குகின்ற பொழுது, பெருவிரலின் வடிவத்தில் சாலிகிராம்களைச் (ஆத்மாவின் அடையாளம்) செய்கிறார்கள். மறுபுறத்தில் அவர்கள் ஆத்மா அற்புதமான நட்சத்திரம் எனக் கூறுகின்றனர். அவர்கள் ஆத்மாவைக் காண்பதற்காக ஒவ்வொரு முயற்சியையும் செய்கின்றார்கள். ஆனால் எவராலுமே ஆத்மாவைக் காணமுடியாது. அவர்கள் இராமகிருஷ்ணர் விவேகானந்தர் பற்றிப் பேசுகிறார்கள். “நான் இராமகிருஷ்ணரின் ஆத்மா அவரிலிருந்து வெளியாகி எனக்குள்ளே கலந்ததைக் கண்டேன்” என விவேகானந்தர் கூறியதாக பேசுகிறார்கள். அவர் யாருடைய காட்சியைக் கண்டிருப்பார்? ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் வடிவம் ஒரே மாதிரியானவையே. ஓர் ஒளிப்புள்ளி காணப்பட்டது. அவர்கள் எதையுமே புரிந்து கொள்ளவில்லை. ஆத்மாவின் காட்சியைக் காண்பதற்கு எவருமே விரும்புவதில்லை. அவர்கள் கடவுளின் காட்சியைக் காண்பதற்கே விரும்புகிறார்கள். அவர் (விவேகானந்தர்) குருவின் மூலம் கடவுளின் காட்சியைக் காணும் ஆசையுடன் அமர்ந்திருந்தார். அவர் கூறினார்: அது ஓர் ஒளி, அது என்னுள் கலந்துவிட்டது. அவர் அதனால் சந்தோஷம் அடைந்தார். அவர் பரமாத்மாவின் வடிவம் அதுவென நினைத்தார். கடவுளின் காட்சியைப் பெறுவதற்காக அவர்கள் குருமார்கள் மீது தூய உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஆனால் பக்திமார்க்கத்தில் இதை யாரால் விளங்கப்படுத்த முடியும்? தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: வேறுபட்ட ரூபம் எதுவாக இருந்தாலும் எந்தளவிற்கு அவருக்கான தூய உணர்வுகளைப் பேணுகின்றீர்களோ, எந்த வடிவத்தைப் பார்க்கின்றீர்களோ, அந்த காட்சியையே நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக ஒருவர் விநாயகரைப் பெருமளவில் வழிபட்டால் அவரை உயிருள்ள ரூபத்தில் காட்சியாகக் காண்பார். இல்லாவிடின், எவ்வாறு அவரது நம்பிக்கை உறுதியாக்கப்படும்? அவர்கள் பிரகாசமான ஒளி ரூபத்தைக் காணும்போது, தாங்கள் கடவுளின் காட்சியைக் காண்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் அதனால் சந்தோஷம் அடைகின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கான இறங்குகின்ற ஸ்திதியாகும். முதற்பிறவி நல்லது. பின்னர் இறுதிநிலையை அடையும் வரை ஸ்திதி தொடர்ந்து குறைவடைகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப்புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு கல்பத்தின் முன்னர் யாருக்கு இந்த ஞானம் விளங்கப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கே இந்த ஞானம் இப்பொழுதும் விளங்கப்படுத்தப்படுகின்றது. ஒரு கல்பத்திற்கு முன்னதாக வந்தவர்களே வருவார்கள். மற்றையவர்களின் மதங்கள் முற்றிலும் வேறுபட்டவை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ‘கடவுள் பேசுகிறார்’ என ஒவ்வொரு படங்களிலும் எழுதுங்கள். நீங்கள் பெருமளவு விவேகத்துடன் விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் பேசுகிறார்: யாதவர்களும், பாண்டவர்களும், கௌரவர்களும் என்ன செய்கின்றார்கள்? இது அவர்களுடைய படங்களாகும். சொல்லுங்கள், உங்களுக்குத் தந்தையைத் தெரியுமா? என அவர்களிடம் கேளுங்கள். உங்களுக்கு தெரியாவிடின் உங்களுக்கு தந்தையிடம் அன்பு இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் புத்தியில் அன்பைக் கொண்டிராதவர்கள் என்பதே இதன் அர்த்தம். தந்தையிடம் அன்பு இல்லாவிடின் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அன்பான புத்தி வெற்றியடையும். சத்தியமே வெல்லும். அர்த்தம் சரியானதே. தந்தையின் நினைவு இல்லாவிடின், நீங்கள் வெற்றியடைய முடியாது. இப்பொழுது கீதை சிவனால் பேசப்பட்டது என நிரூபித்துக் காட்டுங்கள். அவரே பிரம்மாவின் மூலம் இராஜயோகத்தைக் கற்பித்தார். இங்கு (இந்தியாவில்) அவர்கள் அதை ஸ்ரீகிருஷ்ணரின் கீதை எனக் கருதி அதில் சத்தியம் செய்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரா அல்லது கடவுளா இங்கே பிரசன்னமாகி இருக்கின்றார் என நீங்கள் கருதுகின்றீர்கள் என அவர்களிடம் வினவுங்கள்? (சாட்சிக்கான சத்தியம் செய்யும்போது) நான் கடவுளை சர்வவியாபியாகக் கருதி உண்மையைப் பேசுகிறேன் என அவர்கள் கூறுவார்கள். அதில் குழப்பம் இருக்கிறது, இல்லையா? சத்தியம் பொய்யாக ஆகுகின்றது. சேவை செய்கின்ற குழந்தைகளுக்கு மறைமுகமான போதை இருக்கவேண்டும். நீங்கள் போதையுடன் விளங்கப்படுத்தினால், அங்கே வெற்றி இருக்கும். உங்கள் கல்வியும் மறைமுகமானது, உங்களுக்குக் கற்பிக்கின்றவரும் மறைமுகமானவர் என உங்களுக்குத் தெரியும். நாங்கள் புதிய உலகிற்குச் சென்று அவ்வாறு ஆகுவோம் என்பது உங்களுக்குத் தெரியும். மகாபாரத யுத்தத்தின் பின்னர் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அது வரிசைக்கிரமமாக கிரகிக்கப்படுகின்றது. நீங்களும், வரிசைக்கிரமமாகவே யோகம் செய்கின்றீர்கள். நான் எவ்வளவிற்கு நினைவில் நிலைத்து இருக்கின்றேன்? என உங்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் செய்கின்ற இந்த முயற்சியின் பலன் 21 பிறவிக்கு நீடிக்கும். இப்பொழுது தோல்வி அடைந்தீர்களாயின் நீங்கள் தொடர்ந்தும் கல்பம், கல்பமாக தோல்வியடைந்து, உங்களால் உயர்ந்த அந்தஸ்தையும் அடைய முடியாது. நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். சிலர் நிலையங்களுக்குக் செல்கின்றார்கள். ஆனால் தொடர்ந்து விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள். அப்படியான ஆத்மாக்களும் தொடர்ந்து நிலையங்களுக்குச் செல்கின்றார்கள். கடவுள் அனைத்தையும் காண்கிறார். அவருக்கு எப்படியோ தெரியம் என அவர்கள் நம்புகின்றார்கள். இப்பொழுது அதைப் பார்ப்பதில் தந்தை ஏன் அக்கறைப்பட வேண்டும்? நீங்கள் பொய்சொல்லி, விகாரமான செயல்களைச் செய்வதால், உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். உங்களுடைய முகத்தை அசிங்கமாக்கினால், உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை அறிகின்றாரோ, இல்லையோ, அது அதே விடயம்தான். அவர் ஏன் அக்கறை கொள்ளவேண்டும்? அவ்வாறான செயல்களைச் செய்வதன் மூலம், நான் தாழ்வு நிலையை அடைவேன் என உங்களுடைய மனச்சாட்சி உங்களை உறுத்தும். பாபா ஏன் உங்களுக்குக் கூறவேண்டும்? ஆம், நாடகத்தில் இருந்தால் அவர் கூறுவார். பாபாவிடம் அதை மறைப்பது என்றால் உங்களில் இருக்கும் உண்மையை அழிப்பதாகும். நீங்கள் தூய்மை ஆகுவதற்கு தந்தையை நினைவு செய்யவேண்டும். நன்றாகக் கற்று உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கான அக்கறையைக் கொண்டிருங்கள். ஒருவர் உயிர்வாழ்வாரா அல்லது இறப்பாரா என்ற அக்கறையைக் கொண்டிருக்காதீர்கள், தந்தையிடமிருந்து எவ்வாறு ஆஸ்தியைப் பெறுவது என்ற அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள். ஆகையினால், நீங்கள் எவருக்கும் சுருக்கமாக விளங்கப்படுத்த வேண்டும் அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளான உங்களுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மறைமுகமான போதையைக் கொண்டிருந்து சேவை செய்யுங்கள். உங்களுடைய மனச்சாட்சி உறுத்தக்கூடிய செயல்கள் எதையும் செய்யாதீர்கள். உங்களையே சோதியுங்கள்: நான் எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்திருக்கின்றேன்?

2. நன்றாகக் கற்று, உயர்ந்த அந்தஸ்தை அடைவதில் சதா அக்கறையாக இருங்கள். பொய் சொல்லியோ அல்லது விகாரமான செயல்கள் செய்தோ, உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சந்தோஷ சொரூபமாகி, ‘மன்மனாபவ’ என்ற மகாமந்திரத்துடன் சகல துன்பங்களில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பீர்களாக.

எந்த வகையான துன்பம் வந்தாலும் துன்பங்கள் அனைத்தையும் ஓடி விடச் செய்யும் மகா மந்திரத்தைப் பயன்படுத்துங்கள். உங்களின் கனவுகளிலேனும் சிறிதளவு துன்பத்தையேனும் அனுபவம் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்களின் சரீரத்தில் நோய் வந்தாலும், அல்லது, பணத்தில் ஏதாவது தளம்பல்கள் ஏற்பட்டாலும் என்னதான் நடந்தாலும் எந்த வகையான துன்ப அலைகளும் உங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள். ஒரு கடலில் அலைகள் வந்து போகும். ஆனால், அந்த அலைகளில் எப்படி உலா வருவது என்பதைத் தெரிந்தவர்கள், அதன் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போல், அந்த அலைகளில் பாய்ந்து செல்வார்கள். எனவே, நீங்கள் கடலின் குழந்தைகளாக, சந்தோஷ சொரூபங்களாக இருப்பதனால், துன்ப அலைகள் வர அனுமதிக்காதீர்கள்.

சுலோகம்:
ஒவ்வோர் எண்ணத்திலும் திடசங்கற்பம் என்ற சிறப்பியல்பை நடைமுறையில் போடுங்கள். அப்போது வெளிப்படுத்துதல் இடம்பெறும்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

சுய வளர்ச்சியிலும் சேவையின் வளர்ச்சியிலும் ஒருவர் எதையாவது சொல்லும்போது, மற்றவர் ஹா ஜி எனக் கூறி அதை ஏற்றுக் கொள்வார். இந்த முறையில் ஒற்றுமையையும் திடசங்கற்பத்தையும் அதிகரியுங்கள். தாதிகளின் ஒன்றுகூடல், தமது ஒற்றுமையிலும் திடசங்கற்பத்திலும் பலமானவர்களாக இருப்பதைப் போல், பழைய சேவை இரத்தினங்களின் ஒன்றுகூடலும் அதேபோன்று பலமானதாக இருக்க வேண்டும். இதற்கான தேவை அதிகளவில் உள்ளது.