11.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சந்தோஷமும், ஓய்வும், சௌகரியமும் நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லவே, தந்தை வந்துள்ளார். அமைதி தாமத்திலும், சந்தோஷ தாமத்திலுமே ஓய்வும் சௌகரியமும் உள்ளன.
கேள்வி:
இந்த யுத்தகளத்தில் உங்களுடைய எவ்விடயத்தை மாயை முதலில் தாக்குகின்றாள்?பதில்:
உங்கள் நம்பிக்கையை. நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது உங்கள் நம்பிக்கையை முறியடித்து, அதன் மூலம் அவள் உங்களைத் தோற்கடிக்கின்றாள். அனைவரது துன்பத்தையும் அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரான தந்தையே எங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார் என்றும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுப்பவர் அவரே எனும் நம்பிக்கை உங்களுக்கு உறுதியாக இருந்தால் நீங்கள் ஒருபோதும் மாயையினால் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.பாடல்:
இந்தப் பாவ உலகில் இருந்து எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்!……ஓம் சாந்தி.
‘எங்களை வேறு எங்காவது அழைத்துச் செல்லுங்கள்’ என்று நீங்கள் யாரிடம் கூறுகின்றீர்கள்? அவரால் எவ்வாறு உங்களை அழைத்துச் செல்ல முடியும்? இவ் உலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. பிராமண குலத்தின் அலங்காரங்களான நீங்கள் மட்டுமே, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப இதனை வரிசைக்கிரமமாக அறிந்திருக்கின்றீர்கள். இவருக்குள் பிரவேசித்து எங்களுக்குத் தன்னைப் பற்றியும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொடுப்பவரே, அனைவரது துன்பத்தையும் அகற்றி, எங்களைச் சந்தோஷத்தை அருள்பவர்களாகவும் ஆக்குகின்றார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த விடயம் புதியது அல்ல. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, எங்கள் அனைவருக்கும் ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். தந்தையும் அதே ஒருவரே என்பதும் நாங்களும் அதே அவர்களே என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றேன். எனினும் நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. நீங்கள் சந்தோஷ உலகை நோக்கி முன்னேறும் போது, அவள் உங்களைத் தோற்கடிக்கின்றாள். இது ஒரு யுத்தகளமாகும். அந்த யுத்தங்கள் பௌதீக சக்தியினால் இடம்பெறுகின்றன. ஆனால், இந்த யுத்தமோ யோகசக்தியினால் இடம்பெறுகின்றது. இந்த யோகசக்தி, மிகவும் பிரபல்யமானது. ஆகையாலேயே அனைவரும் யோகம் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்கள் இந்த யோகத்தைத் தந்தையிடம் இருந்து ஒரேயொரு முறை மாத்திரமே கற்கின்றீர்கள். ஏனையோர் பல்வேறு வகையான ஹத்தயோகத்தைக் கற்பிக்கின்றார்கள். தந்தை எவ்வாறு வந்து, யோகம் கற்பிக்கின்றார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களால் இந்தப் புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது. அதே தந்தையே வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மக்கள் கூறும்போது இவரையே நினைவு செய்தார்கள். அமைதி தாமத்திலும் சந்தோஷ தாமத்திலும் மாத்திரமே ஓய்வும் சௌகரியமும் உள்ளன. துன்ப உலகில் உங்களால் எவ்வாறு ஓய்வையும் சௌகரியத்தையும் அனுபவம் செய்ய முடியும்? இங்கே ஓய்வும் சௌகரியமும் இல்லாததாலேயே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப தந்தை வருகின்றார். இது துன்ப உலகமாகும். இங்கே துன்பமும், துன்பம் மாத்திரமே உள்ளது. மலை போன்று துன்பம் வரவுள்ளது. ஒருவர் எவ்வளவு செல்வம் நிறைந்தவராக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவருக்கும் நிச்சயமாக ஏதோ ஒருவகை துன்பம் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது இங்கு வந்துள்ள இனிமையான தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை அறிந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளார், அவர் வந்து எங்களை அழைத்துச் செல்வார். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருக்கும் அவர் கற்பிக்கின்றார், ஏனெனில் அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையாவார். ஆத்மாக்கள் எவ்வாறு நீண்டகாலம் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தார்கள் என்பதையிட்டு ஒரு பாடலும் உள்ளது. அமைதி தாமத்தில் ஆத்மாக்கள் ஒன்றாகவே இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது இங்கு வந்துள்ளார். அங்கே இன்னமும் வராது எஞ்சியிருக்கின்ற வெகுசில ஆத்மாக்களும் கீழே வருவார்கள். இங்கே தந்தை உங்களுக்குப் பல விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதும், நீங்கள் அவற்றை மறந்து விடுகின்றீர்கள். இந்த விடயங்கள் மிகவும் எளிமையானவை. சந்தோஷத்தை அருள்பவரும், அமைதியை அருள்பவருமான தந்தையே இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உங்களில் வெகுசிலரே உள்ளீர்கள். உங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். உங்களுக்குத் தந்தையின் மீது மறைமுகமான முறையில் அன்பு உள்ளது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பாபா மதுவனத்தில் இருக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: என்னை மேல்நோக்கியே (ஆதி இல்லம்) நினைவு செய்யுங்கள். அதுவே உங்களது வசிப்பிடமும் ஆகும். நீங்கள் தாய் தந்தை என்று அழைக்கின்றவரை நீங்கள் நிச்சயமாக நினைவு செய்வீர்கள். அவர் உண்மையிலேயே உங்களிடம் வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றேன். இராவணன் உங்களைத் தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆக்கியுள்ளான். எனவே நீங்கள் இப்பொழுது தூய்மையாகவும், சதோபிரதான் ஆகவும் ஆக வேண்டும். தூய்மை அற்றவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்? நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆக வேண்டும். இப்பொழுது, ஒரு சதோபிரதான் மனிதருமே இல்லை. இது தமோபிரதான் உலகமாகும். இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளின் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மட்டுமே விளங்கப்படுத்தப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இது மிகவும் இலகுவானது. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தீர்கள். தூய ஆத்மாக்கள் மாத்திரமே அங்கே வசிக்கின்றார்கள். தூய்மை அற்றவர்களால் அங்கே இருக்க முடியாது. அதன் பெயரே முக்திதாமம் ஆகும். தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்கி, அங்கு அழைத்துச் செல்வார். அதன் பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்தில் உங்கள் பாகங்களை நடிக்கச் செல்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றீர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள்: பாபா, எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். சாதுக்கள், புனிதர்கள் போன்றோருக்குமே ஓய்வையும், சௌகரியத்தையும் எங்கு பெறலாம் என்பது தெரியாது. அமைதியினதும் சந்தோஷத்தினதும் ஓய்வையும் செகளரியத்தையும் எங்கு பெறலாம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா எங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை அருள வந்திருக்கின்றார். தாமதித்து வருகின்றவர்களுக்கு முக்தியை அருளவே தந்தை வந்திருக்கின்றார். தாமதித்து வருபவர்களுக்கு குறுகிய பாகங்களே உள்ளன. உங்கள் பாகங்களே அதிகளவு நீண்டதாகும். உங்கள் 84 பிறவிகளின் பாகத்தை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் என்பதையும், இப்பொழுது இந்தச் சக்கரம் நிறைவு பெறுகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப் பழைய விருட்சம் முழுவதும் அழியவுள்ளது. உங்கள் மறைமுகமான அரசாங்கம் இப்பொழுது தேவ விருட்சத்தின் நாற்றை நடுகின்றது. அவர்களோ தொடர்ந்தும் காட்டு மரங்களின் நாற்றுகளையே நடுகின்றார்கள். ஆனால், இங்கே தந்தை முட்களைத் தெய்வீக மலர்களின் மரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். அது ஓர் அரசாங்கம், இதுவோ ஒரு மறைமுகமான அரசாங்கமாகும். அவர்கள் என்ன செய்கின்றார்கள், நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? இரண்டிற்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்று பாருங்கள்! அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் நாற்றுகளை நடுகின்றார்கள், ஆனால் பல்வேறு வகையான காட்டு மரங்கள் உள்ளன. சிலர் ஒரு வகையான நாற்றையும், ஏனையோர் வேறு வகையான நாற்றையும் நடுகின்றார்கள். தந்தை உங்களை மீண்டும் தேவர்களாக ஆக்குகின்றார். நீங்கள் சதோபிரதான் தேவர்களாக இருந்தீர்கள். அதன் பின்னர் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்த போது, நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். எதுவும் எக்காலத்திற்கும் (அநாதியாக) சதோபிரதானாக இருப்பது சாத்தியமில்லை. அனைத்தும் புதியதில் இருந்து பழையதாக வேண்டும். நீங்கள் 24 கரட் தங்கமாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் ஒன்பது கரட்டில் செய்யப்பட்ட நகையாக இருக்கின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை 24 கரட் தங்கமாக ஆக வேண்டும். ஆத்மாக்களும் அந்த நகைகளைப் போல் ஆகியுள்ளார்கள். தங்கம் எவ்வாறோ அதில் செய்யப்பட்ட நகையும் அவ்வாறே இருக்கும். அனைவரும் இப்பொழுது களங்கப்பட்டுள்ளார்கள். உங்கள் கௌரவத்தைப் பேண வேண்டுமாயின், நீங்கள் முற்றிலும் அவலட்சணம் ஆகிவிடவில்லை, ஆனால் களங்கப்பட்டுள்ளீர்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆனவர்களாகவும், சதோபிரதானாகவும் இருந்தீர்கள். ஆனால் உங்களுக்குள் அதிகளவு கலப்படம் சேர்ந்துள்ளதால், பாபா நீங்கள் மீண்டும் தூய்மை ஆகுவதற்கான வழியைக் காட்டுகின்றார். அது இந்த யோகத்தீயினால் இடம்பெறும். இந்த யோகத்தீயினால் மாத்திரமே உங்கள் கலப்படத்தை அகற்ற முடியும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையே கூறுகின்றார்: இவ்வாறாக என்னை நினைவு செய்யுங்கள். நான் தூய்மையாக்குபவர் ஆவேன். நான் பல தடவைகள் உங்களைத் தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர்களாக ஆக்கியுள்ளேன். முன்னர் உங்களுக்கு இது தெரியாது. இன்று நீங்கள் தூய்மை அற்றவராக இருக்கின்றீர்கள் என்பதும் நாளை தூய்மையானவர்கள் ஆகிவிடுவீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சக்கரத்தின் காலஎல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் என்று அவர்கள் எழுதியுள்ளதன் மூலம் அவர்கள் மக்களைக் காரிருளுக்குள் தள்ளி விட்டார்கள். தந்தை வந்து அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு யார் கற்பிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஞானக் கடலும், தூய்மையாக்குபவரான தந்தையும், அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரும் ஆவார். பக்திமார்க்கத்தில் அவர்கள் அதிகளவு புகழ்ந்து பாடிய போதிலும், அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரியாமலே இருக்கிறார்கள். அவர்கள் புகழ்ந்து பாடும் போது, அவர்கள் எல்லோருடைய புகழையும் கலந்து விடுகின்றார்கள். அவர்கள் அனைத்தையும் அதிகளவு இனிமையுடன் கலந்து விடுகின்றார்கள். அவர்கள் யார் எதனைத் தமக்குக் கற்பித்தார்களோ அவ்வாறே பாடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இன்றுவரை நீங்கள் கற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் வாழும் வரை எனக்குரியவராக வாழுங்கள். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வீட்டில் வாழும் போது, அவர்களுடன் தொடர்ந்தும் சாதுரியமாக நடந்து கொள்ளுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அவர்களுடையது ஹத்த யோகமாகும், ஆனால் நீங்கள் இராஜயோகிகள் ஆவீர்கள். நீங்கள் இதனை இல்லறத்தினருக்கும் கற்பிக்க வேண்டும். உங்கள் செயற்பாடுகளைப் பார்த்து அவர்களும் பின்பற்றுவார்கள். எனவே, உங்கள் மத்தியில் சண்டையிடவோ அல்லது விவாதம் செய்யவோ வேண்டாம். நீங்கள் சண்டையிட்டால் அவர்கள் அனைவரும் என்ன நினைப்பார்கள்? உங்களிடம் அதிகளவு கோபம் உள்ளது என்றே நினைப்பார்கள். உங்களுக்குள் எந்த விகாரமும் இருக்கக் கூடாது. சினிமாவினால் மக்களின் புத்தி முற்றிலும் சீரழிந்துள்ளது. சினிமா நரகத்தைப் போன்றதாகும். அங்கே செல்பவர்களுக்குப் புத்தி சீரழிகின்றது. இந்த உலகில் பல அழுக்கான விடயங்கள் உள்ளன. 18 வயதிற்குட்பட்ட எவரும் திருமணம் செய்யக் கூடாது என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. அப்படி இருந்தும் பல திருமணங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. கைக்குழந்தைகளும் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றார்கள். பாபா இப்பொழுது இந்த தீமை நிறைந்த உலகத்தில் இருந்து உங்களை அப்புறப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: பற்றை வென்றவர் ஆகுங்கள்! என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்கள் குடும்பத்துடன், உங்கள் வீட்டில் வாழும் போது என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் ஏதோ ஒரு முயற்சி செய்யும் போதே, உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்து, அசுரத்தனங்களைத் துறந்திடுங்கள். ஒவ்வோர் இரவும் உங்கள் அட்டவணையை நிரப்புங்கள். இதுவே உங்கள் வியாபாரமாகும். இந்த வியாபாரத்தை அரிதாக சிலரே செய்யத் தயாராக உள்ளார்கள். இது ஏழ்மையில் வாடுபவர்களை ஒரு விநாடியில் கிரீடம் சூட்டுபவர்கள் ஆக்குகின்ற வியாபாரமாகும். எனவே இது மந்திரவித்தை ஆகும். எனவே யோகசக்தியினால் உங்களைத் தூய்மையற்றவரில் இருந்து தூய்மை ஆக்குகின்ற அத்தகைய மந்திரவாதியின் கரங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வேறு எவராலும் உங்களை இவ்வாறு ஆக்க முடியாது. கங்கை நீரினால் எவராலும் தூய்மையாக முடியாது. குழந்தைகளாகிய உங்களிடம் அதிகளவு ஞானம் உள்ளது. பாபா மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். தேவர்களின் பல விக்கிரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆயுதங்களுடனும், பயங்கரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பிரம்மாவும் பல கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரம்மாவிற்கு எவ்வாறு ஆயிரமாயிரம் கரங்கள் இருந்தன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பிரம்மா குமாரர்களும் பிரம்மா குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் பாபாவின் படைப்புகள் ஆவீர்கள். இவ்வாறே பிரஜாபிதா பிரம்மா பல கரங்களுக்கு உரியவர் ஆனார். நீங்கள் இப்பொழுது ரூப்பும் பசான்ட்டும் (ஞான இரத்தினங்களைப் பொழிகின்ற யோக சொரூபிகள்) ஆவீர்கள். உங்கள் வாயிலிருந்து இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்பட வேண்டும். ஞான இரத்தினங்களைத் தவிர வேறு எதுவும் வெளிப்படக் கூடாது. இந்த இரத்தினங்களுக்கு எவராலும் பெறுமதி கொடுக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! நீங்கள் தந்தையை நினைவு செய்தால் தேவர்கள் ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு: 11/3/1968
கண்காட்சிகளைத் திறந்து வைப்பதற்கு பிரமுகர்கள் வருகின்றார்கள். நீங்கள் கடவுளை அடைய நல்ல வழியைக் கண்டுள்ளீர்கள் என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் கடவுளைக் காண்பதற்காக ஆன்மீகக் கூட்டங்களில் பங்குபற்றி வேதங்களை வாசிப்பதைப் போன்றே, நீங்கள் இப்பொழுது இவ் வழியை கண்டு கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும் உங்களுக்குக் கடவுளே கற்பிக்கின்றார் என அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ‘நீங்கள் நல்ல செயல்களைச் செய்கின்றீர்கள், நீங்கள் தூய்மையானவர்கள் என்பதால் அவர்களுக்கு உங்களால் கடவுளைச் சந்திக்க உதவி செய்ய முடிகின்றது, தேவியர்களாகிய நீங்கள் நல்ல வழியைக் கண்டுள்ளீர்கள். அவ்வளவே.’ என்று மட்டுமே அவர்கள் நினைக்கின்றார்கள். கண்காட்சிகளைத் திறந்து வைப்பதற்கு நீங்கள் அழைக்கின்றவர்கள் தம்மை மிகவும் மேன்மையானவர்கள் என்று கருதுகின்றார்கள். பாபா மிகவும் மகத்துவமான ஒருவர் என்பதால் அவரைச் சந்திக்க தாம் செல்ல வேண்டும் என்று பிரமுகர்கள் கருதுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: முதலில் படிவத்தை நிரப்பிய பின்னரே அவர்களை இங்கே அனுப்புங்கள். அதற்கு முதலில் தந்தையின் முழு அறிமுகத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவரின் அறிமுகம் இல்லாது அவர்கள் இங்கே வந்து என்ன செய்யப் போகின்றார்கள்? அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அவர்களால் சிவபாபாவை சந்திக்க முடியும். அவரை இனங்காணாது, அவரைச் சந்தித்து அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? பல செல்வந்தர்கள் இங்கே வந்து, தாம் இவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஏழைகள் ஒரு ரூபாயை மாத்திரம் கொடுக்கின்றார்கள், ஆனால் செல்வந்தர்கள் 100 ரூபாய்களைக் கொடுக்கின்றார்கள். ஓர் ஏழையின் ஒரு ரூபாய் அதிகளவு பெறுமதியானது. செல்வந்தர்களால் மிகச்சரியாக நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியாது. அவர்களால் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக முடியாது. தூய்மையற்றவரில் இருந்து எவ்வாறு தூய்மையானவர் ஆகலாம் என்பதை நீங்கள் முதலில் எழுதிக் காட்ட வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக வேண்டும். இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், துரு அகற்றப்படும். மக்கள் கண்காட்சிகளைக் காண வருகின்றார்கள். ஆனால் அவர்கள் இங்கும் இரண்டு அல்லது மூன்று முறைகள் வந்து, இதனைப் புரிந்துகொண்டாலே, அவர்கள் அம்பினால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், அவர்கள் தேவதர்மத்திற்கு உரியவர்கள் என்பதையும், அவர்கள் நன்றாகப் பக்தி செய்துள்ளார்கள் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். சிலர் இதனை விரும்பினாலும், அவர்களின் இலக்கை அவர்கள் அறியாதிருந்தால் அவர்களால் என்ன பயன்? நாடகம் தொடர்ந்தும் நடிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்ன நடந்தாலும், உங்கள் புத்தியினால் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சக்கரம் தொடர்ந்தும் சுழன்று கொண்டிருப்பதுடன் உங்கள் புத்தியில் மீண்டும் மீண்டும் சுழல்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தீர்களோ, அதனையே இப்பொழுதும் செய்கின்றீர்கள். ஒருவரிடம் இருந்து ஒன்றைப் பெறுவதா அல்லது தவிர்ப்பதா என்பதை பாபாவே தீர்மானிக்கின்றார். நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், பணத்தின் தேவை இருப்பினும், உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் போது, நீங்கள் பணத்தை வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்? தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாகுதலே பிரதானமாகும். அதுவே கடினமானது என்பதால், நீங்கள் அதிலேயே ஈடுபடுதல் வேண்டும். தந்தையை நினைவு செய்தால் போதும். உங்கள் உணவை உண்ணும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் முதலில் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டுமென்றே நினைப்பீர்கள். முதலில் நீங்கள் இதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்: நான் ஓர் ஆத்மா. அவ்வாறான ஒருவர் உருவாகும்போது அவரால் வேகமாக ஓடமுடியும். உண்மையில், குழந்தைகளாகிய நீங்களே யோகசக்தியினால் இவ் உலகைத் தூய்மை ஆக்குகின்றீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையுடன் இருக்க வேண்டும். தூய்மையே பிரதானமாகும். இங்கே உங்களுக்குக் கல்வி புகட்டப்படுகின்றது. எனவே நீங்கள் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் வேறு எதனையும் உங்களுக்குள் நினைவு செய்யக் கூடாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது கூறப்பட்டுள்ளது: நீங்கள் சரீரமற்றவர் ஆக இருக்க வேண்டும்! உங்கள் பாகத்தை நடிக்கவே நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். ஒவ்வொருவரும் தத்தமது பாகத்தை நடிக்க வேண்டும். இந்த ஞானம் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் ஏணிப்படத்தையும் விளங்கப்படுத்தலாம். இராவண இராச்சியம் தூய்மையற்றது. இராம இராச்சியம் தூய்மையானது. அவ்வாறாயின், நாங்கள் எவ்வாறு தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகமுடியும்? நீங்கள் அத்தகைய விடயங்களைக் கடையவேண்டும், இதுவே ஞானத்தைக் கடைதல் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். ‘என்னை நினைவு செய்யுங்கள்’ என்று தந்தை கூறியுள்ளார். இதுவே ஆன்மீக யாத்திரையாகும். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிய முடியும். பௌதீகமாக யாத்திரை செய்தல் மூலம், மக்கள் மேலும் பாவங்களைச் செய்கிறார்கள். ‘இது ஓர் அதிர்ஷ்ட வசீகரம்’ என்று கூறுங்கள். இதனை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் துன்பம் முழுவதும் அகற்றப்படும். சிலர் துன்பம் எல்லாம் அகற்றப்படும் என்பதற்காக அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பொருட்களை அணிகின்றார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் இரவு வந்தனங்களும்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பற்றை வென்றவர்கள் ஆகி, தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும் போதும் உலக அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தொடர்ந்தும் விகாரங்களைத் துறந்திடுங்கள்.2. உங்களைப் பார்க்கின்ற அனைவரும் உங்களைப் பின்பற்றும் வகையில் உங்கள் செயற்பாடுகள் இருக்க வேண்டும். உங்களுக்குள் எந்த விகாரங்களும் இல்லாதிருக்கிறதா என உங்களைச் சோதித்துப் பாருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இரட்டைச் சேவை செய்வதன் மூலம் உங்களின் அலௌகீக சக்தியின் காட்சிகளை அருளும் உலக சேவையாளர் ஆகுவீர்களாக.தந்தையின் ரூபம் உலகச் சேவையாளராக இருப்பதைப் போல், நீங்களும் தந்தையை ஒத்த உலக சேவையாளர்கள் ஆவீர்கள். நீங்கள் உங்களின் மனங்களால் உலக மாற்றம் என்ற சேவையைச் செய்வதில் மும்முரமாக இருக்கும் அதேவேளை உங்களின் சரீரங்களால் பௌதீகச் சேவையைச் செய்கிறீர்கள். உங்களின் சரீரத்தாலும் மனதாலும் ஒரே வேளையில் சேவை இடம்பெற வேண்டும். தமது மனங்களாலும் தமது செயல்களாலும் ஒரே வேளையில் சேவை செய்பவர்கள், மற்றவர்களும் தம்மிடம் அலௌகீக சக்தி உள்ளதா எனப் பார்த்து அனுபவம் பெறச் செய்கிறார்கள். எனவே, இந்தப் பயிற்சியை நிலையாகவும் இயல்பாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களின் மனதின் மூலம் சேவை செய்வதற்கு விசேடமாக ஒருமுகப்படுத்தும் பயிற்சியை அதிகரியுங்கள்.
சுலோகம்:
எல்லோரிடம் இருந்தும் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
இப்போது, சுத்தத்தினதும் பயமற்ற தன்மையினதும் அடிப்படையில் சத்தியத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் வாயில் இருந்து வரும் சத்தியத்தின் அதிகாரம், இயல்பாகவே தந்தையை வெளிப்படுத்தும். இப்போது, இறை குண்டால் நிலத்தை மாற்றுங்கள். இதைச் செய்வதற்கான இலகுவான வழிமுறை, மாலையின் மணிகளைச் சுற்றும்போது அவரின் பெயரை உச்சரிப்பதைப் போல், உங்களின் வாயிலும் மனதிலும் பாப்தாதாவின் உச்சாடனத்தின் விழிப்புணர்வை சதா கொண்டிருப்பதாகும். எல்லோருடைய உச்சாடனமும் ‘எனது பாபா’ என்றே இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் சதா இந்த உச்சாடனம் இருக்க வேண்டும். இதுவே சதா உச்சரிக்கும் மந்திரமாக இருக்க வேண்டும். இந்த மந்திரம் சதா மந்திரமாகும் போது, சூழ்நிலைகள் அனைத்தும் இயல்பாகவே முடிவடைந்துவிடும்.