11.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நாடகம் முடிவுக்கு வருவதால், நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, இந்த உலகின் மீதுள்ள உங்கள் பற்று அனைத்தையும் முடித்து விடுங்கள். உங்கள் வீட்டையும், புதிய இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள்.
கேள்வி:
ஒரு தானமானது எப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது? எக்குழந்தைகள் அத்தகைய தானத்தின் பலனைப் பெறுகிறார்கள்?பதில்:
நீங்கள் தானமாகக் கொடுத்தவற்றின் மீது உங்களுக்குப் பற்று இல்லாதபொழுதே, அந்தத் தானம் முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் தானத்தைக் கொடுத்துப் பின்னர் நீங்கள் கொடுத்ததை நினைத்தால், அதிலிருந்து எப்பலனையும் உங்களால் பெற முடியாது. தானங்கள் செய்யப்படுவதே, அடுத்த பிறவியில் அதற்கான பலனைப் பெறுவதற்கே ஆகும். ஆகவே, இப்பிறவியில் உங்களுக்கு இருக்கும் பற்றுக்கள் அனைத்தையும் முடித்து விடுங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக அனைத்தையும் பராமரியுங்கள். இங்கே நீங்கள் கடவுளின் சேவைக்காகப் பயன்படுத்துகின்றவை எவையாக இருந்தாலும் பலர் நன்மை அடைவதற்காக எத்தனை வைத்தியசாலைகளையும் கல்லூரிகளையும் நீங்கள் திறந்தாலும் அதன் பலனை நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் வீட்டையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்கிறீர்களா? இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, உங்கள் பௌதீக வீட்டை அல்லது வியாபாரம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் வீடு மட்டுமே நினைவு செய்யப்பட வேண்டும். நாங்கள் இப்பொழுது இப்பழைய உலகை நீக்கி விட்டுப் புதிய உலகிற்குத் திரும்பிச் செல்லவுள்ளோம். இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. இந்த யாகத்தில் அனைத்தும் அர்ப்பணிக்கப்படப் போகின்றன. உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் நீங்கள் பார்க்கின்ற உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் அனைவரும் அழிக்கப்படவுள்ளனர். தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும்; இப்பொழுது நாடகம் முடிவுக்கு வருகிறது. இச்சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது. உலகச் சக்கரம் அநாதியாகவே உள்ளது, ஆனால் அது சுழல்வதற்கு 5000 வருடங்கள் எடுக்கிறது. இங்கு வசிக்கும் ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். இப்பழைய உலகம் அழிக்கப்படப் போகின்றது. பாபா ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். சிலர் கருமிகளாக இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சொத்தை எதையும் பெறாமல் வீணாக்குகிறார்கள். பக்தி மார்க்கத்தில், மக்கள் தானங்கள் கொடுத்துப் புண்ணியம் செய்கிறார்கள். சிலர் தர்மசாலைகளைக் (யாத்திரிகர்களுக்கான ஓய்விடம்) கட்டுகிறார்கள், சிலர் வைத்தியசாலைகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். தங்கள் அடுத்த பிறவியில் அதன் பலனைத் தாங்கள் பெறுவோம் என்று அவர்களின் புத்திகளால் புரிந்துகொள்கிறார்கள். ஏதாவது வகையான பலனை எதிர்பார்க்காமல் எவரும் எதையும் செய்வதில்லை, எவரும் ஏதாவது ஆசைகளில் இருந்து விடுபட்டு இருப்பதில்லை. தாங்கள் செய்வதற்கான வெகுமதியைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பலர் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிச்சயமாக தாம் செய்தவற்றின் பலனைப் பெறுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய பணத்தில் சிறிதளவைத் தானம் கொடுப்பதற்குப் பயன்படுத்தும் பொழுது, தனது மறுபிறவியில் அதன் பலனைத் தான் பெறுவேன் என்பது அவருடைய புத்தியில் இருக்கும். இங்கு, நீங்கள் கொடுப்பவற்றில் உங்களுக்குப் பற்று இருக்குமானால், அது உங்களுடையதாக இருந்தது என்று நீங்கள் எண்ணினால், அடுத்த பிறவியில் அதன் பலனைப் பெற மாட்டீர்கள். அடுத்த பிறவியில் பலனைப் பெறுவதற்கே தானங்கள் கொடுக்கப்படுகின்றன. உங்கள் அடுத்த பிறவியில் அதற்கான பலனை நீங்கள் பெறுவதால், ஏன் இந்தப் பிறவியில் அதன்மீது பற்று வைக்கிறீர்கள்? ஆகவே, உங்கள் பற்றுக்கள் அனைத்தையும் முடிப்பதற்கே, நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். ஒருவர் சிறந்த, செல்வந்த குடும்பத்தில் பிறப்பெடுக்கும் பொழுது, அவருடைய முன்னைய பிறவியில் அவர் சிறந்த செயல்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவர் ஓர் அரசர், அரசிக்குப் பிறக்கிறார் என்றால், அவர் தான, தர்மங்கள் செய்திருப்பார். எவ்வாறாயினும், அது ஒரு பிறவிக்குரிய, தற்காலிகமான விடயம் ஆகும். இங்கே நீங்கள் இப்பொழுது ஒரு கல்வியைக் கற்கிறீர்கள். இந்தப் படிப்பினூடாக நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கே கொடுக்கும் தானங்கள் மூலம் ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம் இணைந்த வைத்;தியசாலை திறக்கப்படுகிறது. ஒருமுறை நீங்கள் எதையாவது தானமாகக் கொடுத்து விட்டதும், அதற்கான உங்கள் பற்றுக்கள் அனைத்தும் முடிவடைய வேண்டும். ஏனெனில் உங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்குத் தந்தையிடம் இருந்து அதன் பிரதிபலனைப் பெறப் போகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கட்டியுள்ள இக்கட்டடங்கள் போன்றவை அனைத்தும் தற்காலிகமானவையே. இல்லாவிட்டால், இக்குழந்தைகள் அனைவரும் எங்கே தங்குவார்கள்? எல்லோரும் அனைத்தையும் சிவபாபாவுக்குக் கொடுக்கிறார்கள். அவரே பிரபுவும் அதிபதியும் ஆவார். அவர் பின்னர் அனைத்தையும் இவரினூடாகச் செய்கிறார். சிவபாபா ஆட்சி செய்வதில்லை. அவரே அருள்பவர். அவருக்கு எதில் பற்று இருக்க முடியும்? இப்பொழுது தந்தை ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: மரணம் உங்கள் முன்னால் உள்ளது. முன்னர், நீங்கள் எவருக்காவது எதையாவது தானம் கொடுக்கும் பொழுது, மரணம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது பாபா வந்துள்ளதால், பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. பாபா கூறுகிறார்: இந்தத் தூய்மையற்ற உலகை அழிப்பதற்கே நான் வந்துள்ளேன். இந்த உருத்திர யாகத்தில் பழைய உலகம் முழுவதும் பலியாக உள்ளது. உங்களுக்கென நீங்கள் உருவாக்கும் எதிர்காலத்தைப் புதிய உலகில் பெறுவீர்கள். மற்றும்படி, இங்கு அனைத்தும் முடிவடைந்து விடும்; யாரோ ஒருவர் அதை அப்படியே முழுமையாக உண்டுவிடுவார். இக்காலத்தில் மக்கள் இப்போதும் கடன் கொடுக்கிறார்கள். விநாசம் நடக்கும் பொழுது, அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். எவராலும் எதையும் எவருக்கும் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடும். அனைத்தும் கைவிடப்பட்டு விடும். இன்று அனைத்தும் நன்றாக இருக்கும்; நாளைக்குக் கடனாளியாக நேரிடும். எவரும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள். நீங்கள் எதையாவது எவருக்காவது கொடுத்து அவர் மரணித்தால், அதை யார் உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்கள்;? ஆகவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 21 பிறவிகளுக்குப் பாரதத்துக்கு நன்மை செய்வதற்கு அதைப் பயன்படுத்துங்கள். 21 பிறவிகளுக்கு உங்களுக்கும் நன்மை செய்வதற்கு நீங்கள் அதைப் பயன்படுத்துங்கள். நீங்கள் செய்வது அனைத்தையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொண்டிருக்கிறீர்கள், அதனூடாக நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தையும் அமைதியையும் பெறவுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே நீங்கள் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தைப் பெறுகின்ற, அநாதியான தந்தையின் ஆன்மீக வைத்தியசாலையும் பல்கலைக்கழகமும் என அழைக்கப்படுகின்றது. சிலருக்கு ஆரோக்கியம் உள்ளது, ஆனால் செல்வம் இல்லை, ஆகவே அங்கு சந்தோஷம் இருக்காது. உங்களுக்கு இரண்டும் இருந்தால், உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு இரண்டையும் தருகிறார். நீங்கள் இவற்றை 21 பிறவிகளுக்குப் போதுமானளவுக்குச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்குரிய வழியை உருவாக்குவது குழந்தைகளான உங்கள் பணி ஆகும். தந்தை வரும்பொழுது, ஏழைக் குழந்தைகளின் பாக்கியம் திறக்கிறது. தந்தையே ஏழைகளின் பிரபு. இவ்விடயங்கள் செல்வந்தர்களின் பாக்கியத்தில் இல்லை. தற்பொழுது, பாரதமே மிகவும் ஏழ்மையான நாடாகும். அது மிகவும் செல்வந்த நாடாக இருந்து, இப்பொழுது மிகவும் ஏழையாகி விட்டது. தற்பொழுது, சகல ஆத்மாக்களும் தூய்மையற்று உள்ளனர். தூய்மையான ஆத்மாக்கள் உள்ள பொழுது, தூய்மையற்ற ஆத்மா ஒருவர் கூட இருக்க மாட்டார். அது சதோபிரதானான சத்தியயுகம், இது தமோபிரதானான கலியுகம். நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். தந்தை இதைப் பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார். ஆகவே, நீங்கள் உண்மையிலேயே சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பதையும், 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 8.4 மில்லியன் வகையான உயிரினங்கள் என்பது பற்றிப் பேசுவது ஒரு பொய்யாகும். நீங்கள் பல பிறவிகளாக விலங்குகளாக வாழ்ந்தீர்களா? இதுவே உங்களுடைய இறுதி மனிதப் பிறவியா? நீங்கள் இப்பொழுது விலங்கினத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமா? தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது உங்கள் முன்னால் மரணம் நின்று கொண்டிருக்கிறது. 40,000 முதல் 50,000 வருடங்கள் வரை இன்னமும் எஞ்சியிருக்கவில்லை. மக்கள் காரிருளில் உள்ளார்கள். இதனாலேயே அவர்கள் கல்லுப்புத்தி உடையவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது உங்கள் புத்தி கல்லிலிருந்து தெய்வீகமானதாக மாற்றப்பட்டுள்ளது. சந்நியாசிகள் போன்றோரால் உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் வீடு திரும்ப வேண்டும்; ஆகவே நீங்கள் இயன்றவரைக்கும் உங்கள் பிரயாணப் பொதிகளை இடம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று தந்தை இப்பொழுது உங்களுக்கு நினைவூட்டுகிறார். பாபா, இவை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், நான் அனைத்தையும் சத்தியயுகத்தில் 21 பிறவிகளுக்காகப் பெற்றுக் கொள்வேன். இந்த பாபாவும் தானங்கள் கொடுத்துப் புண்ணியக் காரியங்கள் செய்வது வழக்கம். அவர் அதைச் செய்வதில் பெரும் ஆர்வத்தைக் கொண்டிருந்தார். வழமையாக வியாபாரிகள் புண்ணியத்துக்காக, இரு பைசாக்களை எடுத்து வைப்பது வழக்கம், பாபாவோ ஓர் அணாவை (இரு மடங்குகள்) எடுத்து வைப்பது வழக்கம். “உங்கள் வீட்டுக் கதவுக்கு வரும் எவரும் வெறுங் கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது”. கடவுள் நேரடியாக வந்துள்ளார் என்பது எவருக்கும் தெரியாது. தானங்கள் கொடுத்துப் புண்ணியங்கள் செய்யும்பொழுது, மக்கள் மரணிக்கிறார்கள். ஆகவே அவர்கள் அதன் பலனை எங்கே பெறுவார்கள்? அவர்கள் தூய்மை ஆகுவதில்லை. அவர்கள் தந்தையிடம் அன்பைக் கொண்டிருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: விநாச காலத்தில் யாதவர்களினதும், கௌரவர்களினதும் புத்திகளில் தந்தைமீது அன்பு இருக்காது. ஆனால் பாண்டவர்களின் புத்திகளோ விநாச காலத்தில் தந்தைக்கான முழுமையான அன்பினால் நிறைந்திருக்கும். ஐரோப்பிய மக்கள் அனைவரும் யாதவர்கள், ஏனெனில் அவர்கள் குண்டுகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். சமயநூல்களில் என்ன எழுதப்பட்டுள்ளன என்று பாருங்கள். நாடகத் திட்டத்துக்கேற்ப, பல சமயநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு தூண்டுதல் எனும் கேள்வியே கிடையாது. தூண்டுதல் என்றால் எண்ணக் கருத்துக்கள் ஆகும். தூண்டுதலினூடாகத் தந்தை கற்பிப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இவர் ஒரு வியாபாரியாக இருந்தார். அவர் சமூகத்தில் சிறந்த புகழைக் கொண்டிருந்தார், எல்லோராலும் கௌரவிக்கப்படும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தார். தந்தை இவரில் பிரவேசித்த பொழுதே இவரை அவதூறு செய்வது ஆரம்பித்தது. அவர்களுக்குச் சிவபாபாவைத் தெரியாது, எனவே அவர்களால் அவரை அவமதிக்க முடியாது. இவரே அவமதிப்புக்கள் அனைத்தையும் பெற வேண்டி இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் தான் அந்த வெண்ணெயை உண்ணவில்லை என மறுத்தார். இவரும் கூறுகிறார்: இவை அனைத்தும் பாபாவின் வேலையாகும். நான் எதையும் செய்வதில்லை. அவரே மந்திரவாதி, நான் இல்லை. காரணமின்றி மக்கள் இவரை அவமதிக்கிறார்கள். நான் எவரையாவது கடத்தினேனா? வீட்டிலிருந்து இங்கே ஓடி வருமாறு நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் அங்கே வசித்து வந்தேன். அவர்களே ஓடி வந்தார்கள். அவர் காரணமின்றிக் குற்றம் சுமத்தப்பட்டார். அவர் பல்வேறு அவதூறுகளைப் பெற்றார். சமயநூல்களில் என்ன எழுதப்பட்டு வந்துள்ளது என்று பாருங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதுவும் மீண்டும் நடைபெறும். இவ்விடயங்கள் அனைத்தும் ஞானத்துக்குரிய விடயங்கள். எந்தவொரு மனிதனாலும் இதைச் செய்ய முடியாது. அந்த நேரத்தில், அது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியாக இருந்தது. பல தாய்மார்களும், புதல்விகளும் வந்து தங்கினார்கள். அதையிட்டு எவராலும் எதையும் செய்ய முடியாதிருந்தது. சிலரின் உறவினர்கள் வந்தபொழுது, அவர்களைத் திரும்பவும் அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். பாபா அவர்களுக்குக் கூறுவார்: நீங்கள் முயற்சித்து அவளுக்குப் புரிய வைத்து, அவளைத் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள்; நான் யாரும் போவதைத் தடுக்க மாட்டேன். எவ்வாறாயினும், யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. அது தந்தையின் சக்தியாகும். அது ஒன்றும் புதியதல்ல. அவை அனைத்தும் மீண்டும் நடைபெறும். இவரே அவமதிப்புக்களைப் பெற நேரிட்டது. இதுவே திரௌபதியின் கதையாகும். நீங்கள் அனைவரும் திரௌபதிகள், அவர்கள் அனைவரும் துச்சாதனர்கள். அது ஒருவர் பற்றிய விடயம் அல்ல. அந்தப் பொய்கள் அனைத்தையும் சமயநூல்களில் எழுதியவர் யார்? தந்தை கூறுகிறார்: அவையும் நாடகத்தின் பாகமே. எவருக்கும் ஆத்மாக்கள் பற்றிய இந்த ஞானம் கிடையாது. அனைவரும் முற்றிலும் சரீர உணர்வுடையவர்கள் ஆகியுள்ளார்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. இராவணன் உங்களை முழுமையாகவே தலைகீழாக மாற்றி விட்டான். தந்தை இப்பொழுது உங்களைச் சரியாக நிமிர்த்துகிறார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, நீங்கள் ஆத்மாக்கள் என்றும், அவையே நீங்கள் வாசிக்க வேண்டிய உங்கள் ஹார்மோனியங்கள் எனும் விழிப்புணர்வை இயல்பாகவே கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இந்த விழிப்புணர்வைப் பேணும் பொழுது, உங்களால் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க முடியும். நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கக் கூடாது. பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. அது 5000 வருடங்களுக்குரிய விடயம். அது நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று கூறுபவர்கள் முழுமையான இருட்டில் இருக்கிறார்கள். நாடகத்துக்கேற்ப, இப்பொழுது நேரம் முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் ஒருமுறை தந்தை வந்துள்ளார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். மரணம் உங்கள் முன்னாலேயே உள்ளது. இல்லாவிட்டால், உங்களுக்குள் உள்ள விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படாமலே போய்விடும். எல்லோரும் நிச்சயமாக இறக்கவே வேண்டும். இது அதே மகாபாரத யுத்தம். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கு நன்மை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால், நீங்கள் வெறுங் கையுடன்தான் திரும்பிச் செல்வீர்கள். உலகில் ஏனைய அனைவரும் வெறுங் கையுடனேயே திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் உங்கள் கையை நிறைத்துக் கொண்டு திரும்பிச் செல்வீர்கள், அதாவது செல்வந்தராக திரும்பிச் செல்வீர்கள். இதைப் புரிந்து கொள்வதற்கு, முற்றிலும் எல்லையற்ற, பரந்த புத்தி தேவைப்படுகிறது. பல சமயங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளார்கள். ஒவ்வொருவரின் செயற்பாடும் வேறுபட்டது. இரு நபர்களின் செயற்பாடுகள் ஒன்று போல் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் முகச்சாயலும் அவருக்கே உரியது. பல்வேறு வித்தியாசமான முகச்சாயல்கள் உள்ளன. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இவை அற்புதமான விடயங்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். “ஆத்மாவாகிய நான், 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறேன். ஆத்மாவாகிய நான், இந்த நாடகத்தில் ஒரு நடிகன். நான் இதிலிருந்து விலக முடியாது”. எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. ஆகவே, அதற்கு முயற்சிப்பதும் பயனற்றது. தந்தை கூறுகிறார்: நாடகத்தை விட்டு யாராவது நீங்குவதும் அசாத்தியமானது. நாடகத்தில் எவரையாவது சேர்த்துக் கொள்வதும் அசாத்தியமானது. எல்லோருடைய புத்தியிலும் இந்த ஞானத்தின் பெரும்பகுதி தங்கியிருக்க முடியாது. நாள் பூராகவும் இவ்விதமாக இந்த ஞானத்தைக் கடையுங்கள். ஒரு கணம், இரண்டு கணங்களுக்கு நினைவைக் கொண்டிருங்கள், அதைத் தொடர்ந்தும் அதிகரியுங்கள். எவ்வாறாயினும், எட்டு மணித்தியாலங்கள் பௌதீகச் சேவையைச் செய்யுங்கள். ஓய்வு எடுங்கள், ஆனால் இந்த ஆன்மீக அரசாங்கத்துக்குச் சேவை செய்யவும் நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் உங்களுக்கே சேவை செய்கிறீர்கள் என்பதே பிரதான விடயம் ஆகும். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள், அத்துடன் இந்த ஞானத்தினூடாக ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் அடையுங்கள். உங்களின் நினைவின் ஒரு மிகச்சரியான அட்டவணையை வைத்திருங்கள். இந்த ஞானம் இலகுவானது. தந்தையின் புத்தியில், அவரே மனித உலகின் விதை என்பதும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அவர் அறிவார் என்பதும் உள்ளதைப் போன்றே, நாங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதை எங்கள் புத்தி அறிந்துள்ளது. எவ்வாறு இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதை பாபா விளங்கப்படுத்தி உள்ளார். உங்கள் வியாபாரத்துக்கு நீங்கள் எட்டு முதல் பத்து மணித்தியாலங்கள் வரை எடுத்துக் கொள்கிறீர்கள். ஒரு சிறந்த வாடிக்கையாளர் இரவில் வந்தால், நீங்கள் ஒருபொழுதும் கொட்டாவி விடுவதில்லை. இங்கும், ஒருவர் கொட்டாவி விட்டால், அந்த நபர் களைப்பாக உள்ளார் என்பதும், அவர் புத்தி அலைந்து கொண்டிருக்கிறது என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது. நிலையங்களில் வசிப்பவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனையோரை நினைக்காமல், தங்கள் சொந்தக் கல்வியில் மட்டும் அக்கறையுள்ள குழந்தைகள் சதா முன்னேறிச் செல்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி வீணான எண்ணங்களைக் கொண்டிருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்து, உங்கள் சொந்த அந்தஸ்தை அழித்து விடாதீர்கள். தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! ஒருவர் கூறும் விடயங்கள் நல்லதாக இல்லாவிட்டால், ஒரு காதால் கேட்டு, மற்றைய காதால் விட்டு விடுங்கள். எப்பொழுதும் உங்களையே பாருங்கள், மற்றவர்களைப் பார்க்காதீர்கள். கற்பதை நிறுத்தாதீர்கள். முகங்கோணி வருவதையே நிறுத்தி விடுகின்ற பலர் உள்ளார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவர்கள் இங்கே வராமல், எங்கே போகப் போகிறார்கள்? இந்த ஒரு பாடசாலையே உள்ளது. கோடரியால் உங்கள் சொந்;தப் பாதத்தையே வெட்ட வேண்டாம். உங்கள் கல்வியில் ஈடுபட்டிருங்கள். மிகவும் சந்தோஷமாக இருங்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார், இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? கடவுள் எங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். ஆகவே, உங்கள் புத்தியின் யோகம் அவருடன் மட்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவரே முழு உலகத்தினதும் முதற்தரமான அன்பிற்கினியவர். அவர் உங்கள் அனைவரையும் உலகின் முதற்தரமான அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள். ஆகவே, உங்களால் பறக்க முடியாதுள்ளது. உங்கள் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் அனைவரினதும் சிறகுகளையும் இராவணன் வெட்டிவிட்டான். சிவபாபா கூறுகிறார்: வேறு எவராலும் என்றி, என்னால் மட்டுமே உங்களைத் தூய்மையாக்க முடியும். இங்கு நடிகர்கள் அனைவரும் வர வேண்டும், சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்க வேண்டும். இன்னமும் எவராலும் வீடு திரும்ப முடியாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் அநாதியான சுயத்தினதும்,இந்தக் கல்வியினதும் எண்ணங்களில் மும்முரமாக இருங்கள். பிறரைப் பார்க்காதீர்கள். ஒருவர் நல்ல விடயங்களைக் கூறாவிட்டால், அவற்றை ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுங்கள். முகங்கோணவோ அல்லது கற்பதை நிறுத்தவோ வேண்டாம்.2. நீங்கள் உயிருடன் இருக்கும் பொழுது, எல்லாவற்றையும் தானம் செய்து, உங்கள் பற்றுக்கள் அனைத்தையும் முடித்து விடுங்கள். அனைத்தையும் உரித்தாகக் கொடுத்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகி, இலேசாக இருங்கள். ஆத்ம உணர்வு உடையவர்களாகித் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் வேற்றுமைகள் அனைத்தையும் முடித்து விட்டு, ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற, ஓர் உண்மையான சேவகர் ஆகுவீர்களாக.பிராமண வாழ்வின் சிறப்பியல்பே பலரையும் ஒற்றுமையாக்குவது ஆகும். உங்கள் ஒற்றுமையினாலேயே உலகில் ஒரே தர்மமும், ஒரே இராச்சியமும் ஸ்தாபிக்கப்படும். ஆகவே, வேற்றுமை எதனையும் முடித்து விட்டு, ஒற்றுமையை ஏற்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துங்கள். அப்பொழுதே நீங்கள் உண்மையான சேவகர்கள் என அழைக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களுக்கான சேவகர்கள் அல்ல, ஆனால் சேவை செய்வதற்கான சேவகர்கள். நீங்கள் எதனை அர்ப்பணித்து இருந்தாலும், அது சேவைக்காகவே ஆகும். சாகார் பாபா தனது எலும்புகளையும் சேவைக்காக அர்ப்பணித்திருந்ததைப் போல், உங்களின் ஒவ்வொரு பௌதீக அங்கத்தின் மூலமும் சேவை தொடர்ந்தும் இடம்பெற வேண்டும்.
சுலோகம்:
கடவுளின் அன்பில் திளைத்திருங்கள், அப்பொழுது துன்ப உலகம் மறக்கப்பட்டு விடும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
நீங்கள் ஒன்றிணைந்து இருந்தீர்கள், இப்போது இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இருப்பீர்கள் என்பதை சதா உணர்ந்தவராக இருங்கள். பல தடவைகள் ஒன்றிணைந்து இருக்கும் ரூபத்தைப் பிரிப்பதற்கு எவருக்கும் சக்தி கிடையாது. அன்பின் அடையாளம், ஒன்றிணைந்து இருப்பதே. இது ஆத்மாவிற்கும் பரமாத்திற்கும் இடையிலான சகவாசம். இறைவன் தனது சகவாசத்தின் பொறுப்பை எங்கும் நிறைவேற்றுகிறார். அத்துடன் ஒன்றிணைந்த ரூபத்தின் மூலமும் அவர் தனது அன்பின் பொறுப்பை எல்லோருக்கும் நிறைவேற்றுகிறார்.