11.04.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, அகநோக்கு உடையவராகி, ஞானம் நிறைந்த ஸ்திதியில் நிலைத்திருந்து, இம்மேன்மையான வாசகங்களைக் கிரகியுங்கள். அப்பொழுது உங்களால் உங்களுக்கும், ஏனையோருக்கும் நன்மையளிக்க முடியும்.

(தாதிகளின் டயறிகளில் இருந்து)

ஓம் சாந்தி.
முயற்சி செய்கின்ற ஒவ்வொரு குழந்தையும் நிச்சயமாக முதலில் அகநோக்கு என்ற ஸ்திதியில் இருக்க வேண்டியது அவசியமாகும். அகநோக்கில் பெருமளவு நன்மை அமிழ்ந்துள்ளது. இந்த ஸ்திதியின் மூலம் மாத்திரமே உங்களால் அசைக்க முடியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும், பணிவானவர்களாகவும் இருந்து, தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, முற்றிலும் ஞானம் நிறைந்த ஸ்திதியை அடைய முடியும். நீங்கள் அகநோக்கு அற்றவராக இருந்தால் உங்களால் முற்றிலும் ஞானம் நிறைந்த ஸ்திதியை அடைய முடியாது. ஏனெனில் நீங்கள் நேரடியாகச் செவிமடுக்கின்ற மேன்மையான வாசகங்களை நீங்கள் கிரகித்து, அவற்றின் ஆழத்திற்கு செல்லாமல், ஆனால் அந்த மேன்மையான வாசகங்களை வெறுமனே மீண்டும் மீண்டும் கூறினால், அந்த மேன்மையான வாசகங்கள் வெறும் வாசகங்களாக மாத்திரமே இருக்கும். ஒரு ஞானம் நிறைந்த ஸ்திதியில் மேன்மையான வாசகங்கள் செவிமடுக்கப்படாது இருந்தால், அப்பொழுது அந்த மேன்மையான வாசகங்களின் மீது மாயையின் நிழல் படிகின்றது. நீங்கள் செவிமடுத்த மேன்மையான வாசகங்களை நீங்கள் வெறுமனே மீண்டும் மீண்டும் கூறும்பொழுது, அவை மாயையின் தூய்மையற்ற அதிர்வுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அப்பொழுது அவற்றினால் நீங்களும், பிறரும் நன்மை அடைவதற்குப் பதிலாக இழப்பே அனுபவம் செய்யப்படுகின்றது. அதனால், “ஓ, குழந்தைகளே, முற்றிலும் அகநோக்கு உடையவர் ஆகுங்கள்”. உங்கள் மனம் ஓர் ஆலயம் போன்றது. ஓர் ஆலயத்தில் எப்பொழுதும் நறுமணவாசனை பரவி இருப்பதைப் போலவே, உங்கள் மனம் தூய்மை ஆகுகின்ற பொழுதே தூய்மையான எண்ணங்கள் வெளிவருகின்றன. ஓர் ஆலயத்தில், அசுரர்களின் சிலைகள் அன்றி, தூய தேவர்களின் விக்கிரகங்களே வைக்கப்படுகின்றன. அவ்வாறே, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் மனமும் இதயமும் என்ற ஆலயத்தை அனைத்துத் தெய்வீக குணங்களும் நிறைந்த விக்கிரகங்களினால் அலங்கரிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபடல், பேராசையில் இருந்து விடுபடல்;, அச்சத்தில் இருந்து விடுபடல், பொறுமை மற்றும் ஆணவம் அற்றிருத்தல் போன்றவையே அந்தத் தெய்வீகக் குணங்களாகும், ஏனெனில் இவையே உங்கள் தெய்வீகக் குணங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மனம் என்ற ஆலயத்தை மிகப் பிரகாசமானதாகவும், தெளிவானதாகவும், அதாவது, முற்றிலும் தூய்மையானதாக்க வேண்டும். உங்கள் இந்த ஆலயமானது அந்தளவு பிரகாசமானதாகவும், தெளிவானதாகவும் ஆகும்பொழுதே, உங்களால் மிகவும் அழகான, பிரகாசமான, தெளிவான வைகுந்தத்திற்குச் செல்ல முடியும். நீங்கள் இப்பொழுது உங்கள் மனதை முற்றாகவே பிரகாசமானதாக ஆக்குவதுடன், விகாரங்களின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் மனம் மற்றும் பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்கின்றீர்கள். உங்களுக்கு மாத்திரம் நீங்கள் சேவை செய்தால் போதுமானதல்ல, நீங்கள் இந்தத் தெய்வீகச் சேவையை ஏனையோருக்கும் செய்ய வேண்டும். உண்மையில் சேவை செய்தல் என்பதன் அர்த்தமானது மிகவும் சூட்சுமமானதும், ஆழமானதும் ஆகும். சேவை என்பது ஒருவரை அவரது தவறுக்காக எச்சரிப்பது மாத்திரமல்ல் இல்லை. நீங்கள் அவர்களுக்கு உங்கள் யோகசக்தி மூலம் சூட்சும அதிர்வலைகளை அனுப்பி, அவர்களின் தூய்மையற்ற எண்ணங்களை எரிப்பதாகும். இதுவே அதி மேன்மையான, உண்மையான சேவையாகும். அத்துடன், நீங்கள் உங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகளில், செயல்களில் மாத்திரமல்ல, நீங்கள் உங்கள் மனங்களிலும் எவ்விதமான தூய்மையற்ற எண்ணங்களையும் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில் அந்த எண்ணங்களின் அதிர்வலைகள் ஏனைய பலரையும் சென்றடைந்து, சூட்சுமமான ஓர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன, அது உங்களிலே ஒரு சுமையை உருவாக்குகின்றது; இந்தச் சுமை பின்னர் ஒரு பந்தனம் ஆகுகின்றது. ஆகவே, குழந்தைகளே, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களுக்கான இந்தத் தெய்வீகச் சேவையையும் செய்யுங்கள். இதுவே சேவை செய்யும் குழந்தைகளாகிய உங்களின் அலௌகீகக் கடமையாகும். அத்தகைய சேவையைச் செய்பவர்கள் மற்றவர்களிடம் இருந்து எந்தவொரு சேவையையும் பெறக்கூடாது. நீங்கள் ஏதாவது ஒரு பிழையைச் செய்தாலும், உங்கள் புத்தியின் யோக சக்தியால் அதனைச் சதா காலத்திற்குமாகத் திருத்திக் கொள்ளுங்கள். ஒரு தீவிர முயற்சியாளர் ஒரு சிறிய சமிக்ஞையைப் பெற்றவுடனேயே உடனடியாக உணர்ந்து கொண்டு, தன்னை மாற்றிக் கொள்வதுடன், அப்பொழுதில் இருந்து, முன்னேறுவதில், சரியான கவனத்தைச் செலுத்துகின்றார். இதுவே பரந்த புத்தியைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கடமையாகும். ஓ என் வாழ்க்கையின் மூச்சே, பரமாத்மாவினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அழிவற்ற சுய இராச்சியத்திற்கான ஞான யாகத்திற்கு உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தை முழுமையாக அர்ப்பணிப்பதில் ஆழமான முக்கியத்துவம் இருக்கின்றது. நீங்கள் உங்கள் சரீரம், மனம் மற்றும் செல்வம் போன்ற அனைத்தையும் அர்ப்பணித்து விட்டோம் எனக் கூறும் கணத்தில் இருந்தே, அதாவது, இந்த யாகத்தில் நீங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து மரணித்து விடும்போது, அந்தக் கணத்தில் இருந்து, உங்களுடையது என்று எதுவும் எஞ்சியிருப்பதில்லை. அதிலும் நீங்கள் முதலில் உங்கள் சரீரம் மற்றும் மனதை முற்றாகவே சேவை செய்வதில் பயன்படுத்த வேண்டும். அனைத்தும் யக்ஞத்திற்கும், கடவுளுக்கும் என்று இருக்கும் பொழுது, சுயத்திற்காக எதுவுமே மீதமாக இருக்காது, அத்துடன் உங்களால் எந்தச் செல்வத்தையும் வீணாக்கவும் முடியாது. உங்கள் மனதாலும் தூய்மையற்ற, பாவ எண்ணங்களின் பின்னால் ஓட முடியாது, ஏனெனில் நீங்கள் அதைக் கடவுளுக்கு அர்ப்பணித்துள்ளீர்கள். எவ்வாறாயினும், கடவுள் தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்கின்றார். இதன் காரணமாகவே தூய்மையற்ற எண்ணங்கள் இயல்பாகவே சாந்தம் அடைகின்றன. நீங்கள் உங்கள் மனதை மாயையின் கரங்களில் ஒப்படைத்தீர்கள் ஆயின், மாயை பல்வகை ரூபத்தைக் கொண்டிருப்பதனால், மனமெனும் குதிரை மீது சவாரி செய்கின்ற, பலவகையான பாவகரமான எண்ணங்களும் தோன்ற முடியும். இப்பொழுது, எந்தவொரு குழந்தையேனும் இன்னமும் பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவரது மனம் முழுமையாகவே அர்ப்பணிக்கப்படவில்லை, அதாவது, அவரது மனம் முழுமையாகவே கடவுளுக்கு உரியதாக ஆகவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, முழுமையான துறவிக் குழந்தைகளே, இப்பொழுது ஆழமான இரகசியங்களைப் புரிந்துகொண்டு, செயல்களைச் செய்யும் பொழுது பற்றற்ற பார்வையாளர்களாகி, உங்களை அவதானித்து, மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள். கோபிவல்லபரான அவரே, தனது அன்பிற்கினிய கோப, கோபியர்களுக்கு உங்களின் உண்மையான, நிஜமான அன்பு எது என்பதை விளங்கப்படுத்துகின்றார். ஓ எனது அன்பான குழந்தைகளே, நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் அன்பு நிறைந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எவ்வளவிற்கு அழகாக ஒரு மலர் இருக்கின்றதோ, அதற்கேற்ப, நீங்கள் பெறுகின்ற பராமரிப்பும் மேன்மையாக இருக்கும். மலர்களான உங்களைப் பெறுமதி வாய்ந்தது ஆக்குவதற்கு, தோட்டக்காரர் உங்களில் இருந்து முட்களை அகற்ற வேண்டும். அவ்வாறே, ஒருவர் உங்களை எச்சரித்தால், அவர் உங்களுக்குப் பராமரிப்பையே வழங்குகிறார், அதாவது, அவர் உங்களுக்குச் சேவை செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அந்தச் சேவைக்கும், பராமரிப்புக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இதுவே முழுமை அடைவதற்கான வழிமுறையாகும். இதுவே இந்த ஞானத்தால் நிறைந்த உண்மையான, உள்ளார்ந்த அன்பாகும். இந்தத் தெய்வீக அன்பிலே, ஒருவர் மற்றவர் மீது பெருமளவு மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் முதலில் உங்களை எச்சரிக்க வேண்டும். இதுவே மிகவும் இனிமையான, பணிவான ஸ்திதியாகும். இவ்விதமாக அன்புடன் முன்னேறிச் செல்கையில், அது நீங்கள் உள்ளார்த்தமாக, சத்தியயுகத்தின் அந்த அழகிய நாட்களை அனுபவம் செய்வதைப் போன்றிருக்கும். அங்கே, இந்த அன்பு இயல்பாக இருக்கும். எவ்வாறாயினும், சங்கமயுகத்தின் இந்த இனிமையிலும் இனிமையான காலப்பகுதியில், இதுவே ஒருவர் மற்றவருக்குச் சேவை செய்ய வைக்கின்ற, மிக இனிமையான, களிப்பூட்டும் அன்பாகும். இந்தத் தூய்மையான அன்பே உலகில் நினைவு செய்யப்படுகின்றது. உயிருள்ள மலர்களாகிய நீங்கள் அனைவரும் ஒவ்வொரு கணத்திலும் சதா மலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், உங்கள் ஒவ்வொரு நாடிநரம்பும் முற்றாக இறை சக்தியால் நிறைக்கப்படுகின்றது. அத்தகைய கவர்ச்சிகரமான சக்தியானது நிச்சயமாகவே அதன் தெய்வீக அற்புதத்தைக் காட்டுகின்றது. சிறிய, கள்ளங்கபடம் அற்ற குழந்தைகள் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பதால், எப்பொழுதும் புன்னகைத்தவாறு இருப்பதுடன், தமது களிப்பூட்டும் செயற்பாடுகளால் அனைவரையும் பெருமளவுக்குக் கவர்கின்றார்கள். அவ்வாறே, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தெய்வீகமாகவும், களிப்பூட்டுவதாகவும் இருக்க வேண்டும். இதற்கு, நீங்கள் சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் அசுர சுபாவங்களை வெற்றி கொள்ள வேண்டும். கோபம் என்ற விகாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள ஒருவர் உங்களின் முன்னால் வருவதை நீங்கள் பார்த்தால், இந்த ஞானத்தின் சொரூபமாகி, தொடர்ந்தும் ஒரு குழந்தையின் இனிமையுடன் புன்னகை செய்யுங்கள், இயல்பாகவே அந்த நபர் சாந்தமாகி விடுவார். அதாவது, மறதி நிலையில் இருந்து, அவர் விழிப்புணர்வு நிலைக்கு வருவார். அவர் அதனைப் பற்றி அறிந்திராத பொழுதிலும், சூட்சுமமான வழியில் அவரை வெற்றி கொண்டு, அதிபதி ஆகுங்கள். இதுவே அதிபதியாகவும், குழந்தையாகவும் இருப்பதற்கான அதி மேன்மையான வழிமுறை ஆகும். எவ்வாறு கடவுள் முழுமையான இந்த ஞான சொரூபமாக இருக்கின்றாரோ, அவ்வாறே, அவர் முழுமையான அன்பு சொரூபமாகவும் இருக்கின்றார். இந்த இரு குணங்களும் இறைவனில் அமிழ்ந்துள்ளன. ஆனால் முதலில் இந்த ஞானமும், இரண்டாவதாகவே அன்பும் இருக்கின்றன. ஒருவர் முதலில் இந்த ஞான சொரூபம் ஆகாமல், அன்பு சொரூபமாக மாத்திரம் ஆகினால், அந்த அன்பு அவரை ஒரு தூய்மையற்ற கணக்கிற்குள்ளேயே எடுத்துச் செல்லும். இதனாலேயே நீங்கள் அந்த அன்பை அமிழ்த்தி விட்டு, அனைத்திற்கும் முதலில் இந்த ஞான சொரூபம் ஆகுங்கள். பல வடிவங்களிலும் வரும் மாயையை வெற்றி கொண்டு, பின்னர் ஓர் அன்பு சொரூபம் ஆகுங்கள். இந்த ஞானத்தைப் பயன்படுத்தாமல் நீங்கள் அன்பானவர் ஆகினால், நீங்கள் குழப்பம் அடைவதற்கான சாத்தியம் உள்ளது. உதாரணமாக, ஒருவர் இந்த ஞானத்தின் (கியான்) சொரூபமாக ஆகாமல், திரான்சில் (தியான்) செல்லும் பொழுது, அவர் சிலவேளைகளில் மாயையில் சிக்கிக் கொள்கின்றார். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, அந்தத் திரான்சும் ஒரு பஞ்சுச் சங்கிலியே. எவ்வாறாயினும், நீங்கள் இந்த ஞான சொரூபமாகிப் பின்னர் திரான்சில் செல்லும் பொழுது, பெருமளவு களிப்பு இருக்கும். ஆகவே, முதலில் இந்த ஞானம் உள்ளது, பின்னரே திரான்ஸ் உள்ளது. இந்த ஞானம் நிறைந்த ஸ்திதியானது திரான்சில் இருக்கின்ற ஸ்திதியை விடவும் மேன்மையானது. இதனாலேயே, குழந்தைகளே, முதலில் நீங்கள் இந்த ஞான சொரூபங்கள் ஆகுங்கள், பின்னர் அன்பு வெளிப்படட்டும். இந்த முயற்சி செய்யும் வாழ்க்கையிலே இந்த ஞானம் இல்லாமல், அன்பினை மாத்திரம் கொண்டிருந்தால், அது தடைகளை உருவாக்குகின்றது. பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியானது மிகவும் களிப்பூட்டுவதும், இனிமையானதும், அழகானதுமான ஸ்திதியாகும். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அனைத்தும் இந்த ஸ்திதியிலேயே தங்கியிருக்கின்றது. ஒருவருக்குப் பௌதீகமான நோய் இருக்கும் பொழுது, ஒரு பற்றற்ற பார்வையாளர் எனும் ஸ்திதியில் இருந்து, அந்நேரத்தில் சந்தோஷமாக அந்நோயை அனுபவம் செய்யும் பொழுது, அந்தக் கடந்த காலத்திற்கான கர்ம வேதனை தீர்க்கப்பட்டு விடுகின்றது. அத்துடன் எதிர்காலத்திற்கான அவரது சந்தோஷக் கணக்கும் உருவாக்கப்படுகின்றது. இந்தப் பற்றற்ற பார்வையாளர் எனும் சந்தோஷமான ஸ்திதியானது உங்கள் கடந்த காலம், எதிர்காலம் இரண்டுடனும் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டால் இந்த அழகான காலம் கணக்குகளைத் தீர்ப்பதிலேயே கடந்து விட்டது என்று உங்களில் எவரும் கூறமாட்டீர்கள். இல்லை, இது மாத்திரமே இரண்டு பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படுகின்ற, முயற்சி செய்வதற்கான அழகான காலமாகும். இரு பணிகளையும் நிறைவேற்றும் தீவிர முயற்சியாளர்களாலேயே அதீந்திரிய சுகத்தையும், பேரானந்தத்தையும் அனுபவம் செய்ய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பெரிய, பல்வகையான நாடகத்தின் ஒவ்வொரு விடயத்திலும் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இந்த நிச்சயிக்கப்பட்ட நாடகமானது முற்றாகவே நம்பிக்கையைக் கொடுக்கின்ற ஒன்றாகும். பாருங்கள், இந்த நாடகம் வாழுகின்ற உயிர் ஒவ்வொன்றையும் (மனிதன் மற்றும் விலங்குகள்) தங்கள் பாகங்களை முற்றாகவே நடிக்கச் செய்கின்றது. ஒருவர் தவறானவராக இருந்தாலும், அவர் தவறாக நடந்து கொள்ளல் என்ற அந்தப் பாகத்தை முழுமையாகவே நடிக்கின்றார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. நாடகத் திட்டத்தில், சரி, பிழை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டு இருக்கும்போது, எதையிட்டும் எவ்விதமான சந்தேகங்களையும் கொண்டிருப்பது என்றால், இந்த ஞானத்தைக் கொண்டிராமல் இருப்பதாகும். ஏனெனில் ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார். ஒரு திரைப்படத்தில், பெயரிடப்பட்டுள்ள பல வகையான நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்த நடிப்பை நடிக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, சிலரை வெறுப்பீர்கள் அல்லது சிலரை இட்டுச் சந்தோஷமாக இருப்பீர்கள் என்றோ இல்லை; அது அவ்வாறில்லை. அது ஒவ்வொருவரும் தத்தமது சொந்த நல்ல அல்லது தீய பாகத்தைப் பெற்றுள்ள ஒரு திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோல், நீங்களும் இந்த அநாதியாக உருவாக்கப்பட்ட திரைப்படத்தைத் தொடர்ந்தும் ஒரு பற்றற்ற பார்வையாளராகவும், ஒரு நிலையான, முகமலர்ச்சியான ஸ்திதியுடனும் அவதானிக்க வேண்டும். இந்த ஒன்றுகூடலில், இந்தக் கருத்துக்கள் அனைத்தும் மிக நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரின் தெய்வீக ரூபத்திலேயே ஒருவரையொருவர் பாருங்கள். அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகிப்பதற்கு, அனுபவத்தின்; ஞானத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் இலக்கு பற்றிய விழிப்புணர்வுடன், அமைதியாக இருத்தல், பணிவு, பொறுமை, இனிமை மற்றும் குளிர்மை போன்ற தெய்வீகக் குணங்கள் வெளித்தோன்ற வேண்டும். பொறுமையான ஸ்திதியைக் கிரகிப்பதற்கான பிரதான அடிப்படை: “காத்திருந்து பாருங்கள்” என்பதாகும். ஓ, எனது அன்பிற்கினிய குழந்தைகளே, “காத்திருத்தல்” என்றால் பொறுமையாக இருத்தலும், ‘பார்த்தல்’ எனில் பார்ப்பதுமாகும். அனைத்திற்கும் முதலில், உங்கள் இதயத்தில் பொறுமை என்ற தெய்வீகக் குணத்தைக் கிரகித்து, இந்தப் பல்வகை நாடகத்தை வெளிப்படையாகப் பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். எந்தவொரு இரகசியத்தையும் நீங்கள் கேட்கும் காலம் நெருங்கி வரும்வரை, நீங்கள் பொறுமை என்ற தெய்வீகக் குணத்தைக் கிரகிக்க வேண்டும். பின்னர், அந்தக் காலம் வரும்போது, பொறுமை எனும் தெய்வீகக் குணத்துடன், நீங்கள் அந்த இரகசியத்தைச் செவிமடுக்கும் பொழுது, அதனைக் கேட்கையில், தொந்தரவுக்கு உள்ளாக மாட்டீர்கள். இதனாலேயே, ஓ முயற்சியாளர்களே, சிறிது காத்திருந்து, நீங்கள் முன்னேறும் பொழுது, இரகசியங்களைத் தொடர்ந்தும் அவதானியுங்கள். இந்தப் பொறுமை என்ற ஸ்திதியின் மூலமே, உங்கள் பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றப்படும். இந்தத் தெய்வீகக் குணம் நம்பிக்கையுடன் தொடர்புபட்டது. உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து, உங்கள் மலர்ச்சியான முகங்களுடன் ஒவ்வொரு காட்சியையும் அவதானிக்கும் பொழுது, உள்ளார்த்தமாகப் பொறுமையாகவும், அசைக்க முடியாதவர்களாகவும் இருப்பீர்கள். இறுதியில் சம்பூரணம் அடையும் தறுவாயில், இந்த ஞானத்தின் முதிர்ச்சி அடைந்த ஸ்திதியையே நீங்கள் கொண்டிருப்பீர்கள். இதனாலேயே இந்தப் பற்றற்ற பார்வையாளர் எனும் இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கு நீங்கள் நீண்டகாலம் கடுமையாக முயற்சிக்க வேண்டும். ஒரு நாடகத்தில், ஒவ்வொரு நடிகரும் தான் பெற்றுள்ள பாகத்தை நன்றாக நடிப்பதற்கு, அதனை முற்கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும். அவ்வாறே, அன்பான மலர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வர இருக்கும் மிகக் கடினமான பரீட்சையில் சித்தி அடைவதற்கு, யோக சக்தியின் மூலம் நிச்சயமாக முற்கூட்டியே ஒத்திகை செய்ய வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் இந்த முயற்சியை நீண்டகாலமாகச் செய்யாது விட்டால், தடுமாற்றம் ஏற்படுவதனால் அந்த நேரத்தில் நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள். இதனாலேயே முதலில் உங்கள் தெய்வீக அத்திவாரத்தை உறுதியாக்கி, அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் உடையவர்கள் ஆகுங்கள். இந்த ஞானத்தின் சொரூபமாக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதால், நீங்கள் இயல்பாகவே அமைதி சொரூபமாக இருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருக்கின்றீர்கள். ஞானம் நிறைந்த குழந்தைகள் முரளியைச் செவிமடுப்பதற்கு ஒன்றாக அமரும்பொழுது, அவர்களைச் சுற்றிலும் ஓர் அமைதி நிறைந்த சூழல் உருவாக்கப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் மேன்மையான வாசகங்களைச் செவிமடுக்கும் பொழுது, அவை உள்ளே ஆழமாக அவர்களைத் துளைக்கின்றன. அவற்றினுள் ஆழமாகச் செல்வதன் மூலம், அவர்;கள் ஆழமான, இனிய மௌனத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் இதற்கென அமர்ந்திருந்து, விசேட முயற்சியைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த ஞானம் நிறைந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதனால், நீங்கள் இயல்பாகவே இந்தத் தெய்வீகக் குணத்தினை விருத்தி செய்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, ஏகாந்தத்தில் அமர்ந்திருக்கும் பொழுது, தூய எண்ணங்களின் அலைகள் வெளிப்படுகின்றன. அந்நேரத்தில், நீங்கள் முற்றாக அப்பால் இருக்கும் ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். பின்னர், நீங்கள் உங்கள் ஆதியான தூய எண்ணங்களில் உங்களை ஸ்தாபிப்பதால், ஏனைய எண்ணங்கள் அனைத்தும் இயல்பாகவே சாந்தம் அடைந்து, உங்கள் மனம் அமைதி அடைகின்றது. உங்களுக்கு நிச்சயமாக உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது சக்தி வேண்டும். இதற்கு உங்களுடைய இலக்கிற்காக, தூய எண்ணங்களைக் கிரகியுங்கள். உங்கள் கோட்பாட்டிற்கேற்ப, உங்கள் புத்தியானது யோகத்தைக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் இயல்பாகவே வேறெந்த எண்ணங்களில் இருந்தும் விடுபட்டிருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட ஞானப் பூந்தோட்டங்களாக இருக்கின்ற குழந்தைகளுக்கு, ஞான நட்சத்திரங்களான உங்களுக்கு, தாயும் தந்தையுமாக இருக்கும் பாப்தாதாவிடம் இருந்து அன்பும் நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கின் விழிப்புணர்வு மூலம் அமைதியாக இருத்தல், பணிவு, பொறுமை, இனிமை, குளிர்மை போன்ற அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்கப் பயன்படுத்துங்கள்.

2. புத்தியிலே நம்பிக்கை கொண்டு, இந்த நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகவும், மலர்ச்சியான முகத்துடனும் அவதானித்து, உள்ளார, பொறுமையானவராகவும், அசைக்க முடியாதவராகவும் ஆகுங்கள். நீங்கள் நீண்டகாலமாகப் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் இருப்பதற்கான கடினமான முயற்சியைச் செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரே பாதையைப் பின்பற்றி, ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் மூலம், முழுமையான தேவதை ஆகுவீர்களாக.

உங்களின் புத்தியை, ஒரேயொரு தந்தையின் அசரீரி மற்றும் பௌதீக ரூபங்களில் சகவாசத்திலும் உறவுமுறையிலும் வைத்திருங்கள், நீங்கள் ஒரு தேவதை ஆகுவீர்கள். ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் தொடர்புகளையும் வைத்திருப்பவர்கள், எல்லா வேளையும் தேவதைகள் ஆகுவார்கள். எப்படி அரசாங்கம் ஒரு வீதியில், இந்த வீதியில் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பைப் போடுகிறதோ, அதேபோல், சகல வீதிகளையும் தடை செய்யுங்கள். அதனால் உங்களின் புத்தி அலைபாய்வதில் இருந்து நின்றுவிடும். பாப்தாதாவின் கட்டளை என்னவென்றால், அனைத்திற்கும் முதலில், சகல பாதைகளையும் மூடி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் இலகுவாக ஒரு தேவதை ஆகுவீர்கள்.

சுலோகம்:
சதா சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதே, மாயையிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.

உங்களின் வார்த்தைகளை ஒத்ததாக உங்களின் ரூபமும் இருக்க வேண்டும். உங்களின் வார்த்தைகள், தெளிவாகவும் அன்பு, பணிவு, இனிமை என்பவற்றால் நிரம்பியும் இருக்க வேணடும். அவை சத்தியம் நிறைந்தவையாக இருக்க வேண்டும். அத்துடன் உங்களின் ரூபத்தில் பணிவும் இருக்க வேண்டும். இந்த ரூபத்தால் உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். பயமற்றவராக இருங்கள். ஆனால் உங்களின் வார்த்தைகள் ஒழுங்குமுறைக் கோட்பாடுகளுக்குள் இருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களிலும் சமநிலை இருக்கும்போது, அற்புதங்கள் புலப்படும். அப்போது உங்களின் வார்த்தைகளைக் கசப்பானவையாக அவர்கள் உணர மாட்டார்கள். ஆனால், இனிமையாக இருப்பதை உணர்வார்கள்.