11.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களையும் தன்னைப் போல் புகழத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குவதற்காகவே பாபா வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது தந்தையின் புகழைக் கிரகிக்கின்றீர்கள்.

கேள்வி:
பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளை முழுமையாக அறியாத பொழுதிலும், எந்த வார்த்தைகளினால் அவர்கள் அன்பிற்கினியவராகிய கடவுளைப் பெருமளவு அன்புடன் அழைத்து, நினைவு செய்கின்றனர்?

பதில்:
அவர்கள் அவரைப் பெருமளவு அன்புடன் அழைத்து, நினைவு செய்கின்றனர்: ஓ அன்பிற்கினியவரே, நீங்கள் வரும்பொழுது, நான் உங்களை மாத்திரமே நினைவு செய்து, ஏனைய அனைவரிடம் இருந்தும் எனது புத்தியின் யோகத்தைத் துண்டித்து அதனை உங்கள் மட்டுமே தொடர்புபடுத்துவேன்! தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் இப்பொழுது வந்து விட்டேன். ஆகவே ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்வதே உங்கள் முதலாவது கடமை.

ஓம் சாந்தி.
சரீரமொன்றைக் கடனுக்கு எடுத்திருக்கின்ற, பரமாத்மாவான பரமதந்தை இப்பொழுது இங்கே அமர்ந்திருந்து, சரீரங்களிலுள்ள ஆத்மாக்களான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் வந்து, பல குழந்தைகளுக்குக் கற்பிக்கிறேன். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, பிராமணக் குழந்தைகளுக்கே அவர் விளங்கப்படுத்துகிறார். அவர் நிச்சயமாக அவர்களுக்கு ஒரு வாயின் மூலமே விளங்கப்படுத்துகின்றார். வேறு யாருக்கு அவர் விளங்கப்படுத்துவார்? அவர் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் பக்தி மார்க்கத்தில் என்னை அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! பாரதத்திலும், பொதுவாக உலகில் உள்ள அனைவரும் என்னை அழைக்கின்றனர். பாரதம் தூய்மையாக இருந்தபொழுது, ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தனர். குழந்தைகளாகிய நீங்கள் சத்திய, திரேதா யுகங்கள் என்றால் என்ன என்பதையும், துவாபர, கலியுகங்கள் என்றால் என்ன என்பதையும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். யார் அங்கு ஆட்சி செய்தார்கள் என்ற முழு ஞானமும் உங்கள் புத்திகளில் உள்ளன. தந்தை எவ்வாறு படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் உங்கள் புத்தியும் அதனைக் கொண்டுள்ளது. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானத்தைக் குழந்தைகளான நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார். தந்தைக்கு உள்ளதைப் போல் அதிகளவு புகழ் குழந்தைகளுக்கும் உள்ளது. தந்தை குழந்தைகளை அதிகளவு புகழத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கினார். எப்பொழுதும் சிவபாபாவே இவரின் மூலம் கற்பிக்கிறார் என்று கருதிக் கொள்ளுங்கள். ஓர் ஆத்மாவே ஏனைய ஆத்மாக்களுடன் பேசுகிறார். எவ்வாறாயினும் மக்கள் சரீர உணர்வில் இருப்பதனால், இன்னார் கற்பிக்கின்றார் என அவர்கள் எண்ணுகின்றனர். உண்மையில் ஆத்மாக்களே அனைத்தையும் செய்கிறார்கள். ஆத்மாக்களே தங்களது பாகங்களை நடிப்பவர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். மீண்டும் மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதும்வரை, உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது; நீங்கள் அவரை மறந்து விடுவீர்கள். நீங்கள் யாருடைய குழந்தைகள் என உங்களிடம் வினவும் பொழுது, சிவபாபாவின் குழந்தைகள் என நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். விருந்தினர் புத்தகத்தில் கேள்வி ஒன்று உள்ளது: உங்கள் தந்தை யார்? அவர்கள் உங்களுக்கு உடனடியாகவே தங்கள் பௌதீகத் தந்தையின் பெயரைக் கூறுகின்றனர். சரி, அவ்வாறென்றால், ஆத்மாக்களின் தந்தையின் பெயர் என்ன? சிலர் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை எழுதுகின்றனர், ஏனையோர் அனுமானது பெயரை எழுதுகின்றனர். அல்லது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் எழுதுகின்றனர். ஓ! உங்களுக்கு உங்கள் பௌதீகத் தந்தையைத் தெரியும், ஆனால் நீங்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் சதா நினைவுசெய்கின்ற, பரலோகத் தந்தையை உங்களுக்குத் தெரியாது! நீங்கள் மேலும் கூறுகிறீர்கள்: ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! ஓ கடவுளே, எங்களுக்கு ஒரு மகனைக் கொடுங்கள்! நீங்கள் கடவுளிடம் கேட்கிறீர்கள், இல்லையா? இப்பொழுது தந்தை உங்களுக்கு மிக இலகுவானதையே கூறுகிறார். ஏனெனில் நீங்கள் பெருமளவுக்குச் சரீர உணர்வில் இருப்பதனால் தந்தையின் ஆஸ்தியினது போதை இருப்பதில்லை. நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் கடவுளைச் சந்திப்பதற்காகவே பக்தி செய்கின்றனர். யாகம் வளர்ப்பது, தபஸ்யா செய்வது, தானம் தர்மங்கள் புரிவது அனைத்தும் பக்தியாகும். அனைவரும் ஒரேயொரு கடவுளையே நினைவு செய்கின்றனர். தந்தை கூறுகிறார்: நானே கணவருக்கு எல்லாம் கணவரும், தந்தையருக்கு எல்லாம் தந்தையும் ஆவேன். அனைவரும் தந்தையான கடவுளை நிச்சயமாக நினைவு செய்கின்றனர். ஆத்மாக்களே அவரை நினைவு செய்கிறார்கள். அவர்கள் நெற்றியின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற அற்புதமான நட்சத்திரத்தைப் பற்றிப் பேசிய பொழுதிலும் அவர்கள் அதனை எவ்விதப் புரிந்துணர்வும் இன்றியே கூறுகின்றனர். அவர்கள் இதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதே இல்லை. உங்களுக்கு ஆத்மாவையேனும் தெரியாது, ஆகவே ஆத்மாக்களின் தந்தையை எவ்வாறு நீங்கள் அறிந்துகொள்ள முடியும்? பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் காட்சிகளைப் பெறுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் வணங்குவதற்குப் பெரிய சிவலிங்கங்களை உருவாக்குகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரு புள்ளி ரூபத்தைக் காட்டினால், எவராலும் அதனைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். இவை சூட்சுமமான விடயங்கள். கடவுள் முடிவற்ற, அநாதியான ஒளி ரூபம் என்று மக்கள் கூறுகின்றனர்; அவர் மிகப் பெரிய ரூபத்தைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பிரம்ம சமாஜி பிரிவைச் சேர்ந்தவர்கள், கடவுள் ஒளியானவர் எனக் கூறுகின்றனர். உலகிலுள்ள எவருக்கும் பரமாத்மா பரமதந்தை புள்ளி வடிவானவர் என்பது தெரியாது, இதனாலேயே அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சில குழந்தைகளும் வினவுகின்றனர்: பாபா நாங்கள் யாரை நினைவுசெய்ய வேண்டும்? அவர் பெரிய லிங்க வடிவமானவர் என்றும், அந்த ரூபத்திலேயே வழிபடப்படுகின்றார் என்றுமே கேட்டுள்ளோம். இப்பொழுது நாங்கள் எவ்வாறு ஒரு புள்ளியை நினைவு செய்வது? ஓ! ஆனால் ஆத்மாக்களான நீங்களும் புள்ளிகள், தந்தையும் புள்ளியாவார். நீங்கள் அந்த ஆத்மாவை அழைப்பதால், அவர் நிச்சயமாக வந்து இங்கே இருக்கிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள் பெறுகின்ற காட்சிகள் அனைத்தும் வெறும் பக்தியே. அவர்கள் ஒருவரை மட்டும் வழிபடுவதில்லை, ஆனால் அவர்கள் பலரைக் கடவுளாக்கி உள்ளனர். தொடர்ந்தும் வழிபாட்டைச் செய்கின்ற பக்தர்களை எவ்வாறு கடவுள் என்று அழைக்க முடியும்? கடவுள் சர்வவியாபகராக இருந்திருப்பின், யாரை அவர்கள் வழிபடுகிறார்கள்? அவர்கள் பலவகையான பக்தியைச் செய்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்வீர்கள் என்று எண்ணாதீர்கள். நேரம் இப்பொழுது மிக நெருக்கமாக வருகிறது. பிரம்மாவின் மூலம் பாபா ஸ்தாபனையை மேற்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். தந்தையே கூறுகிறார்: நான் இவரின் மூலம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகிறேன். பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுவது நினைவு கூரப்படுகிறது. புதிய உலகமே விஷ்ணுபூமி என அழைக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. விஷ்ணுவின் இரட்டை வடிவமே அங்கு இராச்சியத்தை ஆட்சிபுரிகிறது என்பதே அதன் அர்த்தமாகும். விஷ்ணு யார் என்பது எவருக்கும் தெரியாது. பிரம்மாவும் சரஸ்வதியுமே விஷ்ணுவின் இரட்டை ரூபமாகி, அந்த இராச்சியத்தை இலக்ஷ்மி நாராயணனாகப் பராமரிக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும்; பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெற்று, பின்னர் அவர்கள் விஷ்ணுபூமியை, அதாவது, சுவர்க்கத்தைப் பராமரிக்கின்றார்கள். தந்தையே ஞானக் கடல் என்பதும், அவரே மனித உலக விருட்சத்தின் விதையானவர் என்பதும் உங்கள் புத்தியில் புக வேண்டும். இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அவர் அறிவார். அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவர். தந்தையின் வியாபாரமே, உங்கள் வியாபாரமும் ஆகும். நீங்களும் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறீர்கள். உலகில் ஒரு தந்தைக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கலாம். அவர்களில் ஒருவர் மிக உயர்ந்த நிலையிலும், மற்றவர் மிகத் தாழ்ந்த நிலையிலும் இருக்கலாம். இங்கு, தந்தை தூய்மை அற்றவர்களை எவ்வாறு தூய்மையாக்குவது என்ற ஒரு வியாபாரத்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். சிவபாபா கூறுகின்ற இலக்கை அனைவருக்கும் கொடுங்கள்: என்னை நினைவு செய்யுங்கள்! அவர்கள் கீதையிலே தவறாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசுவதாக எழுதியுள்ளனர். கடவுள் அசரீரியானவர், அவர் மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவர் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதுவே அவர்கள் இழைத்துள்ள ஒரே தவறாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரது பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சிலர் இராஜ குடும்பத்தில் ஒருவராகவும், ஏனையோர் பிரஜைகளாகவும் ஆகுவார்கள். அது ஸ்ரீகிருஷ்ணரது பூமி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணர் மீது பெருமளவு அன்பைக் கொண்டுள்ளனர். குழந்தைகள் அனைவராலும் அதிகளவு நேசிக்கப்படுகின்றனர், அத்துடன் குழந்தைகளும் தங்கள் பெற்றோர் மீது அன்பு கொண்டுள்ளனர். பின்னர் அவர்களின் அன்பு முழுவதும் பலருக்கிடையில் பிரிக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: உங்களைச் சரீரங்களாகக் கருதாதீர்கள். நீங்கள் ஓர் ஆத்மாவே என்ற நம்பிக்கையைச் சதா கொண்டிருங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தை அசரீரியானவர், விளங்கப்படுத்துவதற்காக அவர் இங்கு ஒரு சரீரத்தை எடுக்க வேண்டும்; அவரால் ஒரு சரீரமின்றி எதையும் விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் உங்கள் சொந்தச் சரீரங்களைக் கொண்டுள்ளீர்கள், பாபா ஒரு சரீரத்தைக் கடனுக்கு எடுக்கிறார்; இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தையே கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தை ஏற்றுக்கொண்டு, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். ஏனெனில் தமோபிரதான் ஆகியுள்ள ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என்று அவர்கள் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறு தந்தை வந்து உங்களைத் தூய்மை ஆக்குகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். சத்தியயுகத்தில் உங்களது சிறிய விருட்சமே இருக்கும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள், ஆனால் ஏனைய தேசங்களின் பெயரோ அல்லது சுவடோ இருக்க மாட்டாது. பாரத பூமி மாத்திரமே சுவர்க்கமாக இருக்கும். பரமாத்மா பரமதந்தை மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். இப்பொழுது இது நரகமாகும். பாரதத்தின் புராதன பூமியில் மாத்திரமே தேவர்கள் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் இப்பொழுது இல்லை, அவர்களது ஆலயங்களும், சிலைகளும் இங்கு உள்ளன. ஆகவே இது பாரதத்தைப் பற்றிய விடயமாகும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதும், இலக்ஷ்மியும் நாராயணனும் அதன் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதும், அந்நேரத்தில் வேறெந்தத் தேசமும் இருக்கவில்லை என்பதும் பாரத மக்கள் எவரினது புத்திகளிலும் புகுவதில்லை. இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பாரத மக்கள் தங்கள் தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்துள்ளனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை அழகானவரும், அவலட்சணமானவரும் என அழைக்கின்றனர், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர் உண்மையில் அவலட்சணமானவராக இருந்தார். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு பாம்பினால் தீண்டப்பட்டதனால் அவலட்சணமாகினார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் சத்தியயுகத்தின் இளவரசர், ஆகவே எவ்வாறு அவர் அவலட்சணமானவர் ஆகினார்? நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரது பெற்றோரும் இப்பொழுது கற்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அவரது பெற்றோரிலும் பார்க்க உயர்வானவராக நினைவு கூரப்படுகிறார். அவரது பெற்றோரின் பெயர்கள் நினைவு கூரப்படவில்லை. பொதுவாக அத்தகைய குழந்தைக்குப் பிறப்பைக் கொடுக்கும் பெற்றோரும் அதேபோல் அன்பானவர்களாகவே இருப்பார்கள், ஆனால் இல்லை; அனைத்துப் புகழும் இராதைக்கும் கிருஷ்ணருக்குமே உள்ளது. அவர்களது பெற்றோர்களுக்குப் புகழ் இல்லை. உங்கள் புத்தியில் நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். மக்கள் இரவின் இருளில் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றனர். நீங்கள் வீட்டில் வசித்தவாறே தொடர்ந்தும் இச் சேவையைச் செய்ய வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் அரைச் சக்கரத்திற்கு ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகளாகவே இருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள், ஆகவே அவர்கள் அனைவரும் காதலிகள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அன்பிற்கினியவரை முழுமையாகத் தெரியாது. அவர்கள் அவரைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்கிறார்கள்: ஓ அன்பிற்கினியவரே, நீங்கள் வரும்பொழுது, உங்களை மாத்திரமே நினைவு செய்து, ஏனைய அனைவரிடம் இருந்தும் எனது புத்தியின் யோகத்தைத் துண்டித்து, அதனை உங்களுடனேயே தொடர்புபடுத்துவேன். நீங்கள் இவ்வாறு பாடினீர்கள், ஆனால் தந்தையிடம் இருந்து நீங்கள் என்ன ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்:ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! தந்தையை நினைவு செய்வதே குழந்தைகளாகிய உங்கள் முதலாவது கடமை. ஒரு மகன் எப்பொழுதும் தந்தையை நினைவு செய்கிறார், ஒரு மகள் தனது தாயையே நினைவு செய்கிறார். அவர்கள் சமமானவர்கள். தான் தனது தந்தையின் வாரிசு என்பதை ஒரு மகன் புரிந்து கொள்கிறார். ஒரு மகள் அவ்வகையில் சிந்திப்பதில்லை. மகள் தான் பெற்றோரின் வீட்டை விட்டு, புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அறிந்திருப்பார். நீங்கள் இப்பொழுது அசரீரி மற்றும் பௌதீகப் பெற்றோரின் வீட்டைக் கொண்டுள்ளீர்கள். மக்கள் அழைக்கின்றனர்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே, கருணை காட்டுங்கள்! எங்களது துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்! எங்களுக்கு விடுதலை அளியுங்கள்! எங்கள் வழிகாட்டி ஆகுங்கள்! எவ்வாறாயினும் பெரும் கல்விமான்களுக்கும் இதன் அர்த்தம் தெரியாது. தந்தையே அனைவருக்கும் விடுதலையளிப்பவர். அவரே அனைவருக்கும் நன்மை பயப்பவரும் ஆவார். அம் மக்களால் தங்களுக்கே நன்மை செய்ய முடியாமல் இருக்கும்போது, எவ்வாறு அவர்களால் ஏனையோருக்கு நன்மையளிக்க முடியும்? இங்கு தந்தை கூறுகிறார்: நான் மறைமுகமான முறையிலேயே வருகிறேன். நீங்கள் நண்பனாகிய கடவுளின் கதையைச் செவிமடுத்துள்ளீர்கள். இதுவே கலியுகத்திற்கும் சத்திய யுகத்திற்கும் இடையிலான பாலமாகும். ஆகவே நீங்கள் அக்கரைக்குச் செல்ல வேண்டும். கடவுளே தந்தை ஆவார். அவர் நண்பரும் ஆவார். அத்துடன் அவர் தாய், தந்தை, ஆசிரியர் என்ற பாகங்களையும் நடிக்கிறார். நீங்கள் இங்கு காட்சிகளைக் காண்பதனால், மக்கள் இங்கு மந்திரவித்தை உள்ளதாகக் கூறுகின்றனர். தீவிர பக்தி செய்பவர்களும் காட்சிகளைப் பெறுகிறார்கள். பல உறுதியான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்: எனக்கு ஒரு காட்சியை அருளுங்கள்! இல்லாவிட்டால், நான் எனது தொண்டையை அறுத்து விடுவேன்! அதன் பின்னரே அவர்கள் காட்சிகளைப் பெறுகின்றனர். அது தீவிர பக்தி என்று அழைக்கப்படுகிறது. இங்கு தீவிர பக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. வீட்டில் உள்ளவாறே பலரும் காட்சிகளைப் பெறுகின்றனர். நானே தெய்வீகக் காட்சிகளுக்கான சாவியை வைத்திருக்கிறேன். நான் அர்ச்சுனனுக்கும் ஒரு தெய்வீகக் காட்சியை அருள்கிறேன். “இந்த விநாசத்தைப் பாருங்கள்! இப்பொழுது, உங்கள் சொந்த இராச்சியத்தைப் பாருங்கள்! இப்பொழுது சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள்!” விஷ்ணு யார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டுபவர்களுக்கும் இது தெரியாது. விஷ்ணுவின் மூலமே பராமரிப்பு இடம்பெறுகிறது. நான்கு கரங்களில் இரண்டு கரங்கள் ஆணையும், இரண்டு கரங்கள் பெண்ணையும் குறிக்கின்றன. விஷ்ணுவின் இரட்டை ரூபம் இலக்ஷ்மி நாராயணனையே பிரதிநிதித்துவம் செய்கிறது. எவ்வாறாயினும் எவரும் எதனையும் புரிந்து கொள்வதில்லை. எவருக்குமே சிவபாபா அல்லது விஷ்ணு பற்றிய ஞானம் கிடையாது. முதலில் பாபாவின் கவர்ச்சி இருந்தமையினால் பலர் வந்தார்கள். ஆரம்பத்தில் முழு முற்றமும் நிரம்பி இருக்கும். நீதிபதிகளும், நியாயாதிபதிகளும் வருவதுண்டு. பின்னர் தூய்மைக்கான சண்டைகள் ஆரம்பித்து, குழந்தைகள் பிறக்காது விட்டால் எவ்வாறு உலகம் தொடரும் எனவும், அதுவே உலகச் சனத்தொகை வளருவதற்கான நியதி எனவும் அவர்கள் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் கீதையில் “காமமே கொடிய எதிரி, நீங்கள் அதனை வெற்றி கொள்ள வேண்டும்” என்று கடவுள் கூறுகின்ற வார்த்தைகளை மறந்து விட்டனர். அவர்கள் கூற ஆரம்பித்தனர்: கணவன், மனைவி இருவருக்கும் ஒன்றாகவே ஞானத்தைக் கொடுங்கள்; ஒருவருக்கு மாத்திரம் கொடுக்கக்கூடாது. எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் ஒன்றாக வந்தாலே, இருவருக்கும் அவ்வாறு கொடுக்க முடியும். இந்த ஞானம் இருவருக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டாலும், ஒருவர் அதனை பெறுவார், மற்றவர் பெற மாட்டார். அவர்களது பாக்கியத்தில் அது இல்லாவிடின் ஒருவரால் என்ன செய்ய முடியும்? ஒருவர் அன்னமாக ஆகுகிறார், மற்றவர் நாரையாகவே இருப்பார். இங்கு பிராமணர்களாகிய நீங்கள் தேவர்களை விடவும் அதிக மேன்மையானவர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். நீங்கள் இந்த ஞானத்தைச் சுவர்க்கத்தில் கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் முக்தி தாமமாகிய, அசரீரி உலகத்தில் இருக்கும் பொழுதும், உங்களிடம் இந்த ஞானம் இருக்க மாட்டாது. இந்த ஞானம் சரீரத்துடன் மறைந்து விடுகிறது. ஒரேயொரு பாபா உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானம் உங்களிடம் உள்ளது. இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. நடிகர்கள் அனைவரும் இங்கு பிரசன்னமாகி இருக்கின்றனர். பாபாவும் இங்கு வந்துள்ளார். இன்னமும் மேலே உள்ள ஆத்மாக்கள் அனைவரும் தொடர்ந்தும் கீழே வருகின்றனர். அவர்கள் அனைவரும் கீழே வந்ததும் விநாசம் இடம்பெறுவதுடன், தந்தை அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்ற தந்தையின் அதே வியாபாரத்தைச் செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்து, தூய்மை ஆகுகின்ற இலக்கை அனைவருக்கும் கொடுங்கள்.

2. இந்தப் பிராமண வாழ்க்கை தேவர்களை விடவும் அதிமேன்மையானது என்ற போதையைப் பேணுங்கள். ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்து, ஒரேயொரு அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பானவராகவும் ஒத்துழைப்பவராகவும் ஆகி, அன்பு மற்றும் தியாகம் என்ற சக்திகளால் நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி பெறுவீர்களாக.

ஆரம்பத்தில், அவர்களிடம் இந்த ஞானத்தின் சிறிதளவு சக்தியே இருந்தது. ஆனால், தமது தியாகம் மற்றும் அன்பின் அடிப்படையில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இரவு பகலாக, அவர்களின் புத்திகளில் பாபாவிற்கும் யக்யத்திற்கும் அன்பே இருந்தது. அவர்களின் இதயங்களில் இருந்து ‘பாபா, யக்யம்’ என்ற வார்த்தைகளே வெளிப்பட்டன. இந்த அன்பானது அனைவரையும் ஒத்துழைக்கச் செய்தது. இந்தச் சக்திகளால் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. பௌதீகமானவரின் அன்பால் அவர்கள் ‘மன்மனாபவ’ ஆகினார். பௌதீகமானவரின் அன்பு, அவர்களை ஒத்துழைக்கச் செய்தது. எனவே இப்போது, தொடர்ந்து அனைவரையும் அன்பு மற்றும் தியாகத்தின் சக்திகளால் சூழ்ந்து விடுங்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.

சுலோகம்:
ஒரு தேவதை ஆகுவதற்கு, வீணான வார்த்தைகளில் இருந்தும் மற்றவர்களைக் குழப்புகின்ற வார்த்தைகளில் இருந்தும் விடுபடுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சடப்பொருள் அல்லது மனிதர்களால் என்ன நடந்தாலும் உங்களின் அசைக்க முடியாத ஆசனத்தை எதுவும் அசைக்கக்கூடாது. நீங்கள் அந்தளவு பலசாலிகள், அல்லவா? உங்களின் சரீரம் அந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க முடியாவிட்டால், அது தொடர்ந்து அசைந்து கொண்டே இருக்கும், அப்படியல்லவா? அதேபோல், உங்களின் மனம் தளம்பல் அடையவில்லைத்தானே? சதா ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருந்து, சிறிதளவேனும் குழப்பம் இல்லாமல் இருங்கள். சிலவேளைகளில் குழப்பமும் சிலவேளைகளில் ஸ்திரத்தன்மையும் இருக்குமாயின், நீங்கள் சிலவேளைகளில் சிம்மாசனத்தைப் பெறுவீர்கள், ஏனைய வேளைகளில் அதைப் பெற மாட்டீர்கள்.