11.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை பற்றி சிந்திக்க வேண்டுமே அல்லாது பிறரைப் பற்றி அல்ல, ஏனெனில் இந்த நாடகத்திற்கு ஏற்ப, யார் எதனை செய்கிறார்களோ, அதன் பிரதிபலனைப் பெறுகிறார்கள்.

கேள்வி:
திரிகாலதரிசி ஆகுவதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் எதனை அறிந்தவர்கள் ஆகுகிறீர்கள்?

பதில்:
ஆதியில் அசரீரி உலகவாசிகளாக இருந்தீர்கள் என்பதையும், இந்த நாடகத்தில் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் பிரதான நடிகர்களாகி உங்கள் 84 பிறவிகளுக்குரிய பாகத்தை நடித்தீர்கள். நீங்கள் இப்போது தந்தையின் முன் நேரடியாக இருக்கின்றீர்கள். பின்பு நீங்கள் அவருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் தூய்மையாகி வீட்டுக்குத் திரும்பிச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள். இந்த முழு நாடகமும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆத்மாக்களாகிய நீங்கள் திரிகாலதரிசி ஆகியதன் மூலம் இவற்றை எல்லாம் அறிந்தவர்கள் ஆகி விட்டீர்கள்.

பாடல்:
உங்கள் வீதியிலேயே வாழ்ந்து உங்கள் வீதியிலேயே மரணிப்பேன்.

ஓம் சாந்தி.
இந்தப் பாடலைப் பாடியவர் யார்? குழந்தைகள். குழந்தைகள் என்ன கூறுகின்றார்கள்? பாபா, நாங்கள் இப்பொழுது உங்கள் கழுத்து மாலை ஆக வேண்டும். இந்தச் சரீரம் இங்கேயே துறக்கப்பட வேண்டும். தந்தையும் குழந்தைகளாகிய ஆத்மாக்களாகிய நாங்களும் நிர்வாணா தாமமாகிய அமைதி தாம வாசிகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பதில் நம்பிக்கை கொண்டிருங்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் நிர்வாணா தாமத்தில் தந்தையுடன் வசித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர் நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தை சுற்றி வரும்போது பல்வேறு சரீரங்களை எடுத்தோம். நாங்கள் உண்மையில் பரந்தாம வாசிகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா இப்போது மீண்டும் வந்துள்ளார். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். பாபா உங்கள் முன்னால் இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. இங்கு, உங்களுக்கு பௌதீகச் சரீரங்களுடன் உறவுமுறைகள் உள்ளன. ஆதியில், நாங்கள் ஆத்மாக்களாக இருந்தோம். பின்னர் நாங்கள் பௌதீக உறவுமுறைகளுடன் சந்தோஷமான வாழ்க்கையையும் பின்னர் துன்ப வாழ்க்கையையும் வாழ்ந்தோம். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது திரிகாலதரிசி ஆகியுள்ளீர்கள். தந்தை முக்காலங்களையும் மூவுலகங்களையும் அறிவார். நீங்களும் அவற்றை, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அறிவீர்கள். நீங்கள் உங்களுடைய கல்வியை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் இப்போது இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். நாங்களும் அசரீரி உலகவாசிகள் எனவும், இப்பொழுது பாபாவினால் நீங்கள் திரிகாலதரிசிகள் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள் எனவும் பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் இந்த நாடகத்தின் பிரதான நடிகர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போது உங்களுடைய புத்தியில் முழுமையான நாடகத்தின் ஞானத்தையும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அரைக்கல்பமாக சந்தோஷதாமத்தில் வாழ்ந்தீர்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்கின்றீர்கள். இராவணன் அங்கு இருப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் முழுமையான 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். தந்தை இப்போது நேரடியாக உங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். நாங்கள் உங்களுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்களுடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வோம். நாங்கள் உங்களை இயலுமான அளவிற்கு நினைவு செய்வோம். குழந்தைகளாகிய நீங்கள் திரிகாலதரிசிகள் ஆகியிருப்பதனால், நீங்கள் இதனை நாள் முழுவதும் நினைவுசெய்ய வேண்டும். கடவுளே அதிமேலானவர். அவருடன் கூடவே, குழந்தைகளாகிய நீங்களும் அதிமேலான இடத்தில் வசிக்கிறீர்கள். குழந்தைகளான நீங்கள் இப்போது உங்களுடைய வீட்டை நினைவு செய்துள்ளீர்கள். நாங்கள் தூய்மையானவர்களாகி, பரந்தாமத்தில் உள்ள எமது வீட்டிற்குச் செல்வோம். தந்தை சிவன் பூஜிக்கப்படும்போது, சாலிகிராம்களும் பூஜிக்கப்படுகின்றனர். தந்தை மட்டுமே வந்து ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மை ஆக்குகிறார். ஒரேயொரு தந்தை மட்டுமே ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகிறார். வேறு எவராலும் உங்களைத் தூய்மையாக்க முடியாது. உங்களுக்கு இப்போது முழு நாடகத்தைப் பற்றியும் தெரியும். இந்த நாடகம் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். எனவே, தந்தை நேரடியாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு முன்னால் இருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபாவே ஞானக்கடல் என்பதை உயிர்வாழும் ஆத்மாக்கள் அனைவரும் அறிவார்கள். நீங்கள் அவரைப் பக்தி மார்க்கத்தில் அழைத்துச் சத்தியம் செய்தீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது, நாங்கள் நிச்சயமாக உங்களுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவோம். இது லௌகீக உறவுமுறைக்குரிய கேள்வி அல்ல. நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகி, ஓர் எல்லையற்ற தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றும் அக்கறையைக் கொண்டிருங்கள். நாங்கள் அவர் கூறுவதைக் கேட்க வேண்டும். அவர் மிக இலகுவானதொரு முறையில் எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுடைய ஞானக்கண் இப்போது திறந்துள்ளது. இந்த வேளையில் இங்கு இந்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது. தந்தையும் குழந்தைகளும் அசரீரி உலகில் வசிக்கிறார்கள். அங்கு எவருக்கும் இது தெரியாது. தந்தை இப்போது தனது இரகசியங்களின் ஆழத்தைக் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். அவர் மட்டுமே ஞானக்கடல் ஆவார். வேறு எந்தவோர் ஆன்மீக ஒன்றுகூடலிலும் பாபா ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார் எனக் கூறப்பட மாட்டாது. நீங்கள் இதனை இப்போது அறிவீர்கள். உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! ஆத்மாக்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக இருந்தவண்ணம் பாகங்களை நடிக்கிறார்கள். ஆத்மாவாகிய நான், ஓர் ஆடையை எடுத்துள்ளேன். அந்த நடிகர்கள் தமது ஆடைகளை மாற்றுகிறார்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் அசரீரி உலகில் இருந்து இங்கு வந்து உங்கள் சரீரங்கள் என்ற ஆடைகளை எடுத்துக் கொள்கிறீர்கள். அவர்களோ இலகுவாகத் தமது ஆடைகளை மாற்றிக் கொள்கிறார்கள். பாபா மீண்டும் ஒருமுறை வந்து ஆத்மாக்களாகிய எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பாபா வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். எனவே நாங்கள் நிச்சயமாக பாபாவின் உதவியாளர்கள் ஆகுவோம். நாங்கள் தூய்மையானவர்களாகி, பாரதம் முழுவதையும் தூய்மை ஆக்குவோம். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத் கூறுகிறது: தந்தையை நினைவு செய்யுங்கள்! யார் எதனைச் செய்கிறாரோ அவர் அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார். அனைவரும் வந்து முயற்சி செய்வார்கள் என்றில்லை. சென்ற கல்பத்தில் முயற்சி செய்தவர்கள் மீண்டும் அவ்வாறு செய்வார்கள். நீங்கள் இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இதனாலேயே நீங்கள் முயற்சி செய்து நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். நாங்கள் மேலே அசரீரி உலகில் வசித்தோம். நாம் முதலில் சுவர்க்கத்திற்குச் சென்று பின்னர் நாம் தொடர்ந்து ஏணியில் கீழிறங்கி வந்தோம். நான் பாரதத்தில் மட்டுமே வருகிறேன் எனத் தந்தை பாரத மக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாரத மக்கள் அவரை நினைவுசெய்து, வந்து தங்களைத் தூய்மையாக்கும்படி அவரை அழைக்கிறார்கள்: சரீரம் ஒன்றை எடுத்து மேன்மையான செயல்களைச் செய்வது எவ்வாறு என எங்களுக்குக் கற்பியுங்கள். அவர் ஏற்றுக் கொள்ளும் சரீரத்தின் பெயர் நினைவுகூரப்படுகிறது. அது ‘அதிர்ஷ்ட இரதம்’ என்று அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் சாதாரணமானதொரு சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் முன்னரும் உங்களுக்கு இதனைக் கூறியுள்ளேன். பாபா சரியாக 5000 வருடங்களுக்கு முன்னரும் இதே விடயத்தை எங்களுக்குக் கூறியுள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ஞாபகம் செய்கிறீர்கள். வேறு எவராலும் இந்த விடயங்களை எமக்குக் கூற முடியாது. தந்தை மட்டுமே கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தில் 5000 வருடங்களுக்கு முன்னரும் பிரவேசித்து உங்களுக்கு விளங்கப்படுத்தினேன். நான் இப்போது மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறேன்: ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நாடகத்திலுள்ள நடிகர்கள் தாங்கள் எந்த ஆடைகளை அணியவேண்டும் என்றும், தாம் எந்தப் பாகங்களை நடிக்க வேண்டும் என்றும் அறிவார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள். இது எல்லையற்றதொரு விடயமாகும். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நான் ஆதியில் ஓர் ஆத்மா ஆவேன். இப்போது எனது பாகம் முடிவிற்கு வருகிறது. தந்தை நேரடியாக உங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்து அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இதனை மறந்து விடாதீர்கள். மாயை பல தடைகளை உருவாக்குகிறாள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எந்தவொரு பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. புயல்கள் மனதில் தோன்றலாம். நீங்கள் உங்களையே பரீட்சிக்க வேண்டும்: எனது பௌதீகப் புலன்கள் தவறு செய்கின்றனவா? என்னால் காமத்தை வெல்ல முடியுமா? இது உங்களுக்கு மிகவும் இலகுவானது. நாங்கள் ஆத்மாக்கள், ஒரு தந்தையின் குழந்தைகள். நீங்கள் தந்தையுடன் யோகம் செய்ய வேண்டும். பௌதீகப் புலன்கள் பிழை செய்யும்போது, அதுவும் சரீர உணர்வே ஆகும். எவருக்கும் பயப்படாதீர்கள். பயமற்றவர் ஆகுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், பற்றற்ற அவதானி ஆகுங்கள். ‘நான் ஓர் ஆத்மா’. நீங்கள் இப்போது முழு நாடகத்தையும் அறிந்து கொண்டுள்ளீர்கள். அவரே அதியுயர்ந்த தந்தை என்பது உங்களுடைய புத்திகளில் பிரவேசித்துள்ளது. அவர் ஒரு புள்ளி எனக் கூறப்படுகிறார். அசரீரி உலகில் ஆத்மாக்களின் விருட்சம் உள்ளது. விருட்சம் ஒன்று விதையிலிருந்து தோன்றி, பின்னர் வரிசைக்கிரமமாக இலைகள் தோன்றுகின்றன. இங்கும் அவ்வாறே உள்ளது. ஆத்மாக்கள் தொடர்ந்து மேலே இருந்து வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகிறார்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் எவ்வாறு பிரவேசிக்கிறார் என்றோ, சரீரத்தை எவ்வாறு நீங்கிச் செல்கிறார் என்பதையோ எவராலும் பார்க்க முடியாது. தந்தை இப்போது விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். எனவே, உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்! தந்தை இங்கிருந்து இவரினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் பௌதீக அவயவங்களினூடாகவே பேச வேண்டியுள்ளது. ஒரு சின்னஞ்சிறிய புள்ளியான இந்த ஆத்மா இந்த சரீரத்தில் இல்லாதிருந்தால், பௌதீக அவயவங்களால் எதனையும் செய்ய முடியாது. இத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா மிகவும் சக்திவாய்ந்தவர்! ஆத்மாவிற்கு இந்த ஞானம் முழுவதும் உள்ளது. தந்தை ஞானக்கடல் ஆவார். அவர் இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவரிடம் சகல ஞானமும் உள்ளது. அவருடைய இந்தப் பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய உங்களுக்கு 84 பிறவிக்குரிய பாகங்கள் உள்ளன. நீங்கள் உங்களுடைய சந்தோஷம், துன்பத்திற்குரிய பாகங்களை நடிக்கிறீர்கள். துன்ப வேளையில் நீங்கள் அதிகளவு சிரமத்தை அனுபவம் செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் மறுபிறவி எடுப்பதில்லை. நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். நான் எடுப்பதில்லை. நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு என்னை நினைவு செய்து அதனால் நீங்கள் தூய்மை ஆகும்படியான இலகுவான வழிமுறையை வழங்குகிறேன். நீங்கள் அரைக்கல்பமாக காமச்சிதையில் அமர்ந்ததனால் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். தந்தை ஆத்மாக்களிடம் மட்டுமே பேசுகிறார். ஆத்மா ஒருவரின் அவயவங்கள் முதலில் சிறியதாக இருந்து பின்னர் அவை வளருகின்றன. ஆத்மா சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஆகுவதில்லை. ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! என்று ஆத்மாக்கள் கூறுகின்றனர். ஆத்மாக்கள் தந்தையை அழைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்ற உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக ஒவ்வொரு கல்பமும் வருகிறேன். எவ்வாறு ஆத்மாக்கள் வந்து செல்கிறார்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா தனது சரீரத்தை விட்டு எவ்வாறு நீங்கி செல்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு மக்கள் பெரும் பாடுபடுகிறார்கள். ஆனால் எவராலும் இதனை அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமமானவர்கள். இத்தகைய சின்னஞ்சிறியதோர் ஆத்மா மிகப் பெரியதொரு பாகத்தை நடிக்கிறார்! விதையில் அதன் சகல ஞானமும் அடங்கியுள்ளது. அவை உயிரற்ற விதைகள். ஆலமரத்தின் விதை மிகவும் சிறியது. எனினும் அதிலிருந்து வளரும் மரம் எவ்வளவு பெரிதாகவும் உயரமாகவும் உள்ளதென்று பாருங்கள்! உங்களில் பலரும் கல்கத்தாவிலுள்ள ஆலமரத்தைப் பார்த்திருப்பீர்கள். இது மிகவும் பெரியதொரு மரமாகும். அதன் அத்திவாரம் இப்பொழுது முற்றாக அழிந்துவிட்டது. எனினும் மரம் இன்னமும் நிற்கிறது. இங்கும் அவ்வாறே ஆகும். தேவதர்மத்தின் அத்திவாரம் இல்லை. இந்த விருட்சமும் இப்பொழுது முற்றாக அழியும் நிலையிலேயே உள்ளது. உங்களுக்கும் இது தெரியும். இதனாலேயே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாங்கள் நிச்சயமாக உலகைத் தூய்மையாக்கி அனைவருக்கும் அதனைச் செய்து காட்டுவோம் என்று அரசாங்கத்திடம் கூறுகிறீர்கள். மக்களால் இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் நிச்சயமாகப் பாரதத்தை மீண்டும் மேன்மையானதாக ஆக்குவீர்கள், அப்பொழுது மட்டுமே சீரழிந்த உலகம் அழிக்கப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள். ஆத்மாக்கள் தமது பாகங்களை நடித்துக் களைத்து விட்டார்கள். இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ அமைதியை அருள்பவரே! ஆத்மா ஓர் அமைதி சொரூபமானவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் நிச்சயமாக இங்கே தமது சரீரங்களினூடாகச் செயல்களைச் செய்ய வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்: எமக்கு அமைதியை தாருங்கள்! எவருக்கும் அமைதிதாமம், சந்தோஷ தாமத்திலிருந்து வேறுபட்டது என்பது தெரியாது. சந்தோஷதாமத்தில் வெகு சில மனிதர்களே இருப்பார்கள். அது தூய்மையான உலகம் ஆகும். அங்கு எவரும் அமைதியை வேண்ட மாட்டார்கள். அவர்களும் செயல்களைச் செய்வார்கள். ஆனால் அங்கு எந்தவிதமான அமைதியின்மையும் இருக்காது. அந்த ஜீவன்முக்தி தாமம் அமைதி தாமத்தில் இருந்து வேறுபட்டது. சத்தியயுகத்தில், வாழ்பவர்கள் சந்தோஷத்தையும் அமைதியையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்றும் ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். சுவர்க்கம் என்று எது அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம் என்றால் என்னவென்று உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் எனது குழந்தைகள் ஆவார்கள். இந்தக் குழந்தைகளுக்கு யார் சந்தோஷத்தை வழங்கியது? அவர்களுக்குச் சந்தோஷத்தை அளித்த யாரோ ஒருவர் இருக்க வேண்டும். அவர்களின் இராச்சியம் மீண்டும் வரப் போகிறதா? சுவர்க்கம் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வரும். நீங்கள் சுவர்க்கத்தில் இருக்கும்போது, நரகம் மீண்டும் வரும் என நீங்கள் கூற மாட்டீர்கள். தூய்மை, அமைதி, சந்தோஷம் நிறைந்த புதிய உலகம் மீண்டும் நிலவும் என நீங்கள் இப்போது கூறுகிறீர்கள். இது துன்ப பூமியின் பழைய உலகமாகும். இது கலியுகம் என்று அழைக்கப்படுகிறது. புதிய உலகம் இருந்திருக்கிறது, அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது, இந்த ஞானம் உங்களுடைய புத்திகளில் உள்ளது. நாம் உண்மையில் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகிறோம். இது உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஆகும். நாம் மீண்டும் ஒரு முறை சுவர்க்க இராச்சியத்தைக் கோருகிறோம். நாம் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடம் இருந்து எமது ஆஸ்தியைக் கோருவோம். இதனை மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள்! ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கு வசித்த பின்னர் எமது பாகங்களை நடிப்பதற்காக இங்கு கீழிறங்கி வருகிறோம். நாம் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறோம் என்பது இப்போது எமது ஞாபகத்திற்கு வந்துள்ளது. பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்களான உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒரு பிராமணர் ஆகாமல், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தை ஆகாமல் எவ்வாறு உங்களால் சிவபாபாவிடம் இருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோர முடியும்? பிரஜாபிதா பிரம்மா மிகவும் பிரபல்யமானவர். புதிய உலகின் ஸ்தாபனை பிரம்மாவினூடாகவே நிகழ்கிறது. ஆகையால், அவர்கள் நிச்சயமாகப் புதிய உலக இராச்சியத்தைப் பெற்றிருக்க வேண்டும். விஷ்ணு தாமம் பிரம்மாவினூடாக 5000 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டது. அது மீண்டும் வரும். நீங்கள் அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறீர்கள். சில குழந்தைகள் கேட்கிறார்கள்: நாங்கள் நாடகத்தை மகத்தானது எனக் கருதவேண்டுமா அல்லது எமது முயற்சிகள் மகத்தானது எனக் கருத வேண்டுமா? நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் முயற்சி செய்யாமல் எவ்வாறு உங்களால் உங்களுடைய வெகுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும்? முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒருவர் மிக நன்றாக முயற்சி செய்யும்போது, அவருடைய முயற்சி நாடகத்தின்படி மிக நன்றாக இருக்கிறது என்றும், அதனால் அவர் நல்லதொரு அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார், அவருடைய முயற்சிகள் மிகத் தீவிரமானவை என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், தொடர்ந்து முன்னேறும்போது, சிலரின் அந்தஸ்து குறைந்து விடுகிறது. பிராமண ஆசிரியர்களுக்கும், இன்னார் மிக நன்றாக முன்னேறினார் என்றும், ஆனால் தற்போது அவர் வருவதில்லை என்பதும் தெரியும். பிராமண ஆசிரியர்களிடம் வருபவர்களும் அதனை அறிவார்கள். சிலர் கூறுவார்கள்: ஏன் இது எனது புத்தியில் தங்குவதில்லை என எனக்குத் தெரியவில்லை. என்னால் பாபாவை நினைவு செய்யவே முடியவில்லை! என்னால் தொடர்ந்து இருக்க முடியாது! இலக்கு மிகவும் உயர்ந்தது. அவர்கள் இத்தகைய விடயங்களை எழுதுகிறார்கள். விகாரமற்றவர் ஆகுவதே பிரதானமான விடயமாகும். விகாரங்களைக் கைவிடுவது மிகவும் கடினமானது. நாடகத்தின்படி, சென்ற கல்பத்தில் இருந்தது போன்றே அவருடைய ஸ்திதி தொடர்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். எவரையிட்டும் பயப்படாதீர்கள். பயமற்றவர் ஆகுவதற்கு, ‘நான் ஓர் ஆத்மா’ என்ற பாடத்தை உறுதியானதாக்கிக் கொள்ளுங்கள்.

2. உங்களுடைய பௌதீகப் புலனங்கங்கள் எதுவும் தவறு செய்யவில்லை என்பதைச் சோதித்து உங்களையே பரீட்சித்துப் பாருங்கள். நான் காம விகாரத்தை வென்று விட்டேனா? எந்தளவிற்கு நான் ஆத்ம உணர்வுடையவன் ஆகிவிட்டேன்?

ஆசீர்வாதம்:
ஒரேயொரு தந்தையின் விழிப்புணர்வை கொண்டிருப்பதன் மூலம், ஓர் உண்மையான சுமங்கலியின் (ஒரு கணவரைக் கொண்டிருக்கின்ற பாக்கியசாலி) அனுபவத்தைப் பெறுகின்ற பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

பிறரின் வார்த்தைகளை கேட்டும் கேட்காமல் இருப்பவர்கள், ஏனைய ஆத்மாக்களின் விழிப்புணர்வை தமது எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ எடுத்துக் கொள்ளாதவர்கள், அதாவது, எந்தவொரு சரீரதாரிகளுக்கும் அடிமைப்படாமல் இருப்பவர்கள், அத்துடன் ஒரேயொரு தந்தைக்கு உரியவரேயன்றி, வேறெவருக்கும் உரியவரல்ல என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்களுமே அழியாத திலகமிட்டுள்ள சுமங்கலிகள் ஆவார்கள். அவ்வாறாக உண்மையான திலகமிட்ட சுமங்கலிகளே பாக்கியசாலிகள் ஆவார்கள்.

சுலோகம்:
உங்கள் ஸ்திதியை மேன்மையானதாக ஆக்குவதற்கு, புறநோக்குக்குச் செல்லும் முன்னர், முதலில் அகநோக்குடையவர் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

ஏதாவது ஒன்றைத் தீயில் இடும் போது, அதன் பெயர், வடிவம், தன்மை என்பவை மாறுகின்றன. அவ்வாறாகவே உங்களைத் தந்தையின் நினைவு என்ற தீயில் இடும் போது, நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள். மனிதர்களில் இருந்து நீங்கள் பிராமணர்கள் ஆகுகிறீர்கள், பிராமணர்களில் இருந்து நீங்கள் தேவதைகள் ஆகுகிறீர்கள், அதன் பின்னர் தேவர்கள் ஆகுகிறீர்கள். இந்த அன்பு என்ற தீயினால் அத்தகைதொரு மாற்றம் நிகழ்கின்றது. அதாவது, தன்னைப் பற்றிய எந்தவொரு உணர்வும் எஞ்சியிருப்பதில்லை. ஆகையாலேயே இந்த நினைவு எரிமலை வடிவமானது எனப்படுகின்றது.