11.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே முழு உலகினதும் உண்மையான நண்பர்கள்; நீங்கள் எவரையும் வெறுக்கக்கூடாது.

கேள்வி:
நீங்கள் ஆன்மீக இராணுவத்தினர். நீங்கள் பயிற்சியிலிட வேண்டிய எந்த வழிகாட்டலைத் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார்?

பதில்:
எப்பொழுதும் உங்கள் பட்ஜை அணிந்திருங்கள் என்ற வழிகாட்டல் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ன என்றோ அல்லது நீங்கள் யார் என்றோ எவராவது உங்களை வினவினால், அவரிடம் கூறுங்கள்: நாங்கள் முழு உலகிலும் உள்ள காமத் தீயை அணைக்கும் தீயணைப்புப் படையினர். இந்நேரத்தில் முழு உலகும் காமத்தீயினால் பற்றி எரிகின்றது. நாங்கள் அனைவருக்கும் கொடுக்கின்ற செய்தி: இப்பொழுது தூய்மையாகி, தெய்வீகக் குணங்களைக் கிரகித்தால் உங்கள் படகு அக்கரை செல்லும்

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகள் இலகு நினைவில் அமர்ந்திருக்கின்றார்கள். சிலருக்கு இது சிரமமாக உள்ளது. பலர் குழப்பம் அடைந்துள்ளார்கள், ஏனெனில் தாங்கள் மிகவும் இறுக்கமாகவும், கண்டிப்பாக முறையிலும் இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: இங்கே அவ்வாறு எதுவும் இல்லை. நீங்கள் விரும்பியவாறு அமர்ந்திருக்கலாம்; தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஹத்தயோகிகள் ஒரு காலின் மீது மறுகாலைக் குறுக்காக வைத்து, மிகவும் இறுக்கமான நிலையில் அமர்ந்திருக்கிறார்கள். இங்கே, உங்களைச் சௌகரியமாக அமர்ந்திருக்குமாறு தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தையையும், 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். இது இலகு நினைவாகும். அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித்திரியும் பொழுதும், இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இந்தச் சிறுவன் தனது தந்தைக்குப் பக்கத்தில் இருக்கின்றான், அவன் தனது பெற்றோர்களை மாத்திரமே அறிவான். அதேபோல் நீங்களும் குழந்தைகள் ஆதலால், தந்தையை நினைவுசெய்வது இலகுவாகும். நாங்கள் பாபாவின் குழந்தைகள். நாங்கள் பாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வாழ்ந்து, உங்கள் ஜீவனோபாயத்திற்காகத் தொழிலை மேற்கொண்டாலும், உங்கள் புத்தியிலிருந்து மற்றவர்களின் நினைவை அகற்றி விடுங்கள். உங்களிற் சிலர் அனுமனையும், ஏனையோர் சாதுக்கள் போன்றோரையும் நினைவு செய்வதுண்டு. அந்த நினைவு மறக்கப்பட வேண்டும். அனைவரும் எவரோ ஒருவரை நினைவு செய்கின்றார்கள். பூஜிப்பவர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்காக ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். ஆனால் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லை. நீங்கள் சந்திக்கின்ற எவரிடமும் கூறுங்கள்: சிவபாபா கூறுகின்றார்: ஒரேயொரு தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். சிவபாபா அசரீரியானவர். அவர் நிச்சயமாக இவ்வாறு கூறுவதற்குப் பௌதீக உலகிற்குள் வரவேண்டும்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நானே தூய்மை ஆக்குபவர். இந்த வார்த்தை சரியானது. பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். இது தூய்மையற்ற, தமோபிரதான் உலகமாகும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: எந்தச் சரீரதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இங்கு குரு போன்றோர் புகழப்படுவதில்லை என்பதால் இது நல்லதொரு விடயம். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், அப்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது யோக அக்கினியின் சக்தியாகும். கீதையின் கடவுள் அசரீரியான ஒரேயொருவரே எனக் கூறும்பொழுது, எல்லையற்ற தந்தை உண்மையையே கூறுகின்றார். இதில் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறானவர் என்ற கேள்விக்கே இடமில்லை. கடவுள் கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! வேறு எந்த வழிமுறையும் இல்லை. தூய்மையாக வீடு திரும்பினால் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இல்லாவிடில் உங்கள் அந்தஸ்து குறைக்கப்படும். நான் உங்களுக்குத் தந்தையின் செய்தியைக் கொடுக்கின்றேன்; நான் ஒரு தூதுவன். இதனை விளங்கப்படுத்துவதில் எந்தச் சிரமமும் இல்லை. நீங்கள் இங்கு இருந்தாலும், அல்லது உங்கள் குடும்பத்துடன் வீட்டில் இருந்தாலும், பெண்கள், கல்லுப்புத்தி உடையவர்கள், கூன்முதுகு உடையவர்கள் போன்றோரும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம். இங்கு இருப்பவர்கள் அதிகளவு நினைவில் நிலைத்திருக்கின்றார்கள் என்றில்லை. பாபா கூறுகின்றார்: வெளியே வசிப்பவர்களும் பெருமளவு நினைவில் நிலைத்திருந்து பெருமளவு சேவையைச் செய்ய முடியும். சிலர் இங்கு வந்து தந்தையினால் புத்துணர்ச்சி அடைந்து, பின்னர் வீடு திரும்புகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளார அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அழுக்கான உலகில் இன்னமும் சில நாட்களே உள்ளன. பின்னர், நாங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பூமிக்குச் செல்வோம். ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயமும் சந்தோஷதாமம் (சுக்தாம்) என அழைக்கப்படுகின்றது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் என்பதால், எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக ஆக்கப்பட்டிருந்தீர்கள். நீங்களும் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களை 5000 வருடங்களுக்கு முன்னரும் சந்தித்தேன். நான் மீண்டும் உங்களைச் சந்திப்பேன். தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் மாயையை வெற்றிகொள்ள வேண்டும். இந்தத் துன்ப பூமியில் நீங்கள் இன்னமும் இருக்க விரும்பவில்லை, சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்கே நீங்கள் கற்கின்றீர்கள். அனைவரும் தங்கள் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்ப வேண்டும். நான் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கே வந்துள்ளேன். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சென்று முக்திதாமத்தில் இருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நானே மகாகாலன். நான் ஆத்மாக்கள் அனைவரையும் அவர்களின் சரீரங்களில் இருந்து விடுவித்து, அவர்கள் அனைவரையும் திரும்பவும் என்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றேன். இங்கு வசிக்க விரும்பாததால் விரைவிலேயே மீண்டும் சென்று விடவேண்டும் என அனைவரும் கேட்கின்றார்கள். இது ஒரு பழைய உலகமும், பழைய சரீரமும் ஆகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நான் அனைவரையும் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். நான் எவரையும் விட்டுச் செல்ல மாட்டேன். நீங்கள் அனைவரும் என்னை அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! மக்கள் தொடர்ந்தும் என்னை நினைவு செய்த பொழுதிலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. திரேதாயுகத்துச் சத்திரிய குல அரசரான இராமரைக் குறிப்பிட்டே, அவர்கள் தூய்மை ஆக்குபவரின் பெயரைச் செபிக்கின்றார்கள். சிவபாபா ஓர் அரசராகுவதும் இல்லை, ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்வதும் இல்லை. அவரை “அரசர் இராமர்” என அழைப்பது பிழையாகும். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டும் பொழுது, இராமரின் பெயரைக் கூறுகின்றார்கள். இவ்வாறே அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். சிவனே கடவுள். மனிதர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரையும் “சியாம்சுந்தர்”, “வைகுந்தநாதர்” (வைகுந்தத்தின் பிரபு), “மக்கன் சோர்” (வெண்ணை திருடுபவர்) போன்ற பல பெயர்களால் அழைக்கின்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணரை வெண்ணெய் திருடியவர் என நீங்கள் கூறுவீர்களா? முற்றிலுமே இல்லை! கடவுள் அசரீரியானவர் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சரீரதாரிகள் எவருமே கடவுளாக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட கடவுள் என அழைக்க முடியாவிட்டால், எவ்வாறு மனிதர்கள் தங்களைக் கடவுள் என அழைக்க முடியும்? தந்தையின் 108 வெற்றி மணிமாலை நினைவு கூரப்படுகின்றது. சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) அந்தச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். அதற்குமுன் அவர்கள் நிச்சயமாக முயற்சி செய்திருக்க வேண்டும். இது கலியுகத்தின் இறுதிக்கும், சத்தியயுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையிலான சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. இது சக்கரங்களின் சங்கமமாகும். எனினும் அம்மக்கள் ஒவ்வொரு யுகத்தினதும் சங்கமத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் அவரை அவதாரம் என அழைத்ததை மறந்துவிட்டு, அவர் கூழாங்கற்களிலும், கற்களிலும், ஒவ்வொரு தூசித் துணிக்கையிலும் இருப்பதாகக் கூறியுள்ளார்கள். அதுவும் நாடகத்தில் உள்ளது. கடந்த காலம் ஆகுகின்ற எதுவும் நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. ஒருவருடன் சண்டை ஏற்பட்ட பின்னர், அது கடந்ததாகி விடுகின்றது. ஆகவே, நீங்கள் அதனைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. அச்சா. எவராவது எதனைப் பற்றிக் கூறினாலும் அதை மறந்து விடுங்கள். அவர் முன்னைய சக்கரத்திலும் அதே விடயத்தையே கூறினார். நீங்கள் அதனை நினைவுசெய்தால், தொடர்ந்தும் குழப்பம் அடைகிறீர்கள். அதனைப் பற்றி மீண்டும் பேசவும் கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். சேவைக்கு எவ்விதத் தடைகளும் இருக்கக்கூடாது. நீங்கள் சேவையில் எந்தப் பலவீனங்களையும் காட்டக்கூடாது. இது சிவபாபாவின் சேவை. அதைச் செய்வதற்கு நீங்கள் என்றுமே மறுக்கக்கூடாது. இல்லையாயின் நீங்கள் உங்கள் சொந்த அந்தஸ்தை அழித்து விடுவீர்கள். நீங்கள் தந்தையின் உதவியாளர் ஆகிவிட்டீர்கள். ஆகவே அவருக்கு நீங்கள் முழுமையான உதவியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தந்தையின் சேவை செய்வதில் அவரைச் சிறிதளவேனும் ஏமாற்றக்கூடாது. அனைவருக்கும் செய்தி கொடுக்கப்பட வேண்டும். தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது, உட்பிரவேசிப்பதற்கு ஈர்க்கப்பட்டு, வந்து புரிந்து கொள்ளும் வகையில், அத்தகைய பெயரை நீங்கள் அருங்காட்சியத்திற்குக் கொடுங்கள். இது புதியதொன்று. மக்கள் புதிய விடயத்தைப் பார்க்கும் பொழுது, உடனடியாக உட்பிரவேசித்து விடுகின்றார்;கள். இந்நாட்களில் பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பதற்காக வெளிநாடுகளிலிருந்து மக்கள் வருகின்றார்கள். “புராதனம்” என்றால் அனைத்தையும் விட மிகப் பழைமை வாய்ந்தது என அர்த்தம். அது 5000 வருடங்களுக்கு முன்னரும் கடவுளால் மாத்திரமே கற்பிக்கப்பட்ட யோகமாகவே இருக்க முடியும். சத்திய, திரேதாயுகங்களில் யோகம் இருப்பதில்லை. உங்களுக்குக் கற்பித்தவர் சென்று விட்டார். 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் வரும்பொழுது மாத்திரமே அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். “புராதனம்” என்றால் 5000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் அதனைக் கற்பித்த காலமாகும். அந்த அதே கடவுளே பின்னர் சங்கமயுகத்தில் மீண்டும் ஒருமுறை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார், அதன்மூலம் நீங்கள் தூய்மை ஆனவர்களாக முடியும். இந்நேரத்தில் பஞ்சதத்துவங்களும் தமோபிரதான் ஆகியுள்ளன. நீர் கூட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பழைய உலகில் அனர்த்தங்கள் தொடர்ந்தும் நிகழ்கின்றன. சத்தியயுகத்தில் அனர்த்தங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே இயற்கை உங்கள் சேவகன் ஆகுகின்றது. இங்கு இயற்கை உங்கள் எதிரியாகி, துன்பத்தைக் கொடுக்கின்றது. அங்கு இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் துன்பம் என்ற கேள்வியே இருக்கவில்லை. அதுவே சத்தியயுகமாகிய, தங்க யுகமாகும். அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை உங்களுக்குப் புராதன இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர் 5000 வருடங்களின் பின்னரும் மீண்டும் அதனைக் கற்பிப்பார். ஒருவருக்கு என்னென்ன பாகம் உள்ளதோ, அவர் அதே பாகத்தை மீண்டும் நடிப்பார். எல்லையற்ற தந்தையும், தனது பாகத்தை நடிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவரினுள் பிரவேசித்து ஸ்தாபனையை மேற்கொண்ட பின்னர், வீட்டிற்குத் திரும்பி விடுகின்றேன். விரக்திக் குரல்களுக்குப் பின்னர், வெற்றிக் குரல்கள் ஒலிக்கும். பழைய உலகம் அழிக்கப்படுவிடும். அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, பழைய உலகம் இருக்கவில்லை. இது 5000 வருடங்களுக்கு முற்பட்ட விடயம். இது நூறாயிரம் வருடங்களுக்குரிய விடயமாக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்களுக்கே நீங்கள் நன்மை ஏற்படுத்த வேண்டுமானால், ஏனைய அனைத்தையும் மறந்து, உங்களை இந்தச் சேவையில் ஈடுபடுத்துங்கள். நீங்கள் செய்யும் சேவையில் முகம்கோணி, ஏமாற்றம் அடையாதீர்கள். இது இறை சேவை. மாயையின் பல புயல்கள் இருந்தாலும், தந்தையாகிய கடவுளின் சேவையில் எவரையும் ஏமாற்றாதீர்கள். சேவையின் பொருட்டு, தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், வருகின்ற எவருக்கும் நீங்களே உண்மையான நண்பர்கள். நீங்கள் தந்தையின் உதவியாளர் என்பதால் பிரம்மாகுமார்கள், குமாரிகளாகிய நீங்கள் முழு உலகினதும் நண்பர்கள் ஆவீர்கள். நண்பர்கள் மத்தியில் எவ்வித விரோதமும் இருக்கக்கூடாது. ஏதாவது நிகழ்ந்தால், சிவபாபாவை நினைவு செய்யுமாறு கூறுங்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் உங்களை ஈடுபடுத்துங்கள். இல்லாவிட்டால், நீங்களே உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்துவீர்கள். புகையிரதம் மூலம் நீங்கள் இங்கு வரும்பொழுது, நீங்கள் அனைவரும் ஓய்வாக இருக்கின்றீர்கள். சேவை செய்வதற்கு உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்ஜ் மிகவும் நல்லதொரு விடயமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக அதனை அணிய வேண்டும். நீங்கள் யார் என எவராவது உங்களை வினவினால், நாங்களே தீயணைக்கும் படையினர் என அவர்களிடம் கூறுங்கள். அந்தத் தீயணைக்கும் படை தீயை அணைக்கின்றது. இப்பொழுது முழு உலகும் காமத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: கொடிய எதிரியான, காமத்தை வென்றிடுங்கள்! தந்தையை நினைவுசெய்து, தூய்மை ஆகுங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகித்தால் உங்கள் படகு அக்கரை சென்றடையும். இந்த பட்ஜ்கள் ஸ்ரீமத்திற்கேற்ப உருவாக்கப்பட்டன. வெகு சில குழந்தைகளே தங்கள் பட்ஜைப் பயன்படுத்திச் சேவை செய்கின்றார்கள். பாபா உங்களுக்குப் பல தடவைகள் முரளிகளில் விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு பிராமணரிடமும் ஒரு பட்ஜ் இருக்க வேண்டும். நீங்கள் சந்திக்கின்றவர்களிடம் பட்ஜை விளங்கப்படுத்துங்கள்: இவர் பாபா. நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் சரீரதாரியைப் புகழ்வது இல்லை. ஒரேயொரு அசரீரியான தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார், நீங்கள் அவரையே நினைவுசெய்ய வேண்டும். யோக சக்தியினால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். நீங்கள் துன்ப பூமியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பின்னர் விஷ்ணு தாமத்திற்குச் செல்வீர்கள். இது அத்தகைய நல்ல செய்தி! நீங்கள் அவர்களுக்குப் புத்தகங்களையும் கொடுக்கலாம். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் ஏழைகள் என்பதனால் அதனை உங்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றிக் கொடுப்போம். அச்சடிப்பதற்கு ஏராளமாக உள்ளதால், செல்வந்தர்கள் பணம் கொடுக்க வேண்டும். இது நீங்கள் பிச்சைக்காரரில் இருந்து மாற்றம் அடைந்து, ஓர் உலக அதிபதி ஆகுகின்ற, ஒரு விடயமாகும். நீங்கள் தொடர்ந்தும் இந்த விளக்கங்களைப் பெறுகிறீர்கள். எந்தச் சமயத்தினரிடமும் இதைக் கூறுங்கள்: உண்மையில் நீங்கள் ஓர் ஆத்மா. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். இப்பொழுது விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது. இந்த உலகம் மாறவுள்ளது. நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தால், விஷ்ணு தாமத்திற்குச் செல்வீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் உங்களுக்கு மில்லியன்களும், பில்லியன்களும் பெறுமதியானவற்றைக் கொடுக்கின்றோம். உங்கள் பட்ஜைப் பயன்படுத்திச் சேவை செய்ய வேண்டும் என பாபா பலமுறை உங்களிடம் கூறியுள்ள பொழுதிலும், உங்களிற் சிலர் உங்கள் பட்ஜ் அணிவது கூட இல்லை. ஏனெனில் நீங்கள் அதிகளவு சங்கடப்படுகின்றீர்கள். பிராமண ஆசிரியர்கள் ஒரு குழுவுடன் இங்கு வரும்பொழுதோ, அல்லது அவர்கள் வேலைக்குச் செல்லும் பொழுதோ, அவர்கள் நிச்சயமாக இந்தப் பட்ஜை அணிந்திருக்க வேண்டும். நீங்கள் இந்தப் பட்ஜை மக்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் ஒரேயொரு தந்தையின் மீதே நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரால் மாத்திரமே அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்க முடியும். ஆகவே அவரை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களால் தூய்மையின்றி, வீடு திரும்ப முடியாது. இப்பழைய உலகம் இப்பொழுது மாறப் போகின்றது. நீங்கள் இங்கு வரும்பொழுது, வழி முழுவதும் இவ்வாறாகச் சேவை செய்யவேண்டும். உங்கள் பெயர் பெருமளவில் போற்றப்படும். நீங்கள் பட்ஜ் அணிவதற்கு மிகவும் சங்கடப்படுவதையும், அதனாலேயே நீங்கள் எச்சேவையையும் செய்யாதிருப்பதையும் பாபா புரிந்து கொள்கின்றார். முதலாவதாக, நீங்கள் பட்ஜை வைத்திருக்க வேண்டும். பின்னர் இதனுடன் நீங்கள் திரிமூர்த்தியினதும், சக்கரத்தினதும், விருட்சத்தினதும் படங்களையும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு இடையில் அமர்ந்திருந்து ஒருவருக்கொருவர் விளங்கப்படுத்துங்கள், அப்பொழுது, பலர் ஒன்றுகூடி உங்களைச் சுற்றி நிற்பார்கள். “இது என்ன?” என அவர்கள் வினவும் பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: சிவபாபா இவரினூடாக (பிரம்மா) புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவுசெய்து, தூய்மை ஆகுங்கள்! தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் செவிமடுக்கும் வகையில், அத்தகைய இனிய விடயங்களை அவர்களிடம் கூறுங்கள். எவ்வாறாயினும் இது எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. காலை வகுப்பிற்காக நீங்கள் உங்கள் நிலையத்திற்குச் செல்லும் பொழுது, எப்பொழுதும் நீங்கள் பட்ஜை அணிய வேண்டும். இராணுவத்தினர் தங்கள் பட்ஜை எப்பொழுதும் அணிகின்றார்கள். அவர்கள் அதனை அணிவதற்கு எப்பொழுதேனும் சங்கடப்படுகின்றார்களா? நீங்களே ஆன்மீக இராணுவத்தினர். தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். எனவே, அவற்றை நீங்கள் ஏன் பயிற்சி செய்வதில்லை? உங்கள் பட்ஜை நீங்கள் அணியும்பொழுது, உங்களால் சிவபாபாவை நினைவுசெய்ய முடியும். நான் சிவபாபாவின் குழந்தை. நாளுக்கு நாள், நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்படும். ஓரிருவர் வெளித் தோன்றுவார்கள். அவர்கள் கூறுவார்கள்: இந்த நகரத்தில் உங்களின் ஒரு கிளை கூட இல்லை. அவர்களிடம் கூறுங்கள்: எவராவது ஒழுங்குகள் செய்து எங்களை வரவழைத்து, இருப்பிடமும் கொடுத்தால், எங்களால் வந்து இங்கு சேவை செய்ய முடியும். குழந்தைகளிடம் தைரியம் இருக்கும் பொழுது, தந்தை உதவி செய்கின்றார். நிலையங்களைத் திறந்து, சேவை செய்யுமாறு தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே கூறுகின்றார். இவை அனைத்தும் சிவபாபாவின் கடைகள். அவை குழந்தைகளால் நடாத்தப்படுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மத்தியில் என்றுமே முகங்கோணி, சேவையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். ஒரு தடையாக ஆகாதீர்கள். உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்தாது, தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுங்கள்.

2. எவருடனாவது சண்டை ஏற்பட்டிருந்தால், அது கடந்ததாகி விடுகின்றது. ஆகவே, நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. எவராவது எதையாவது கூறியிருந்தாலும், அதனை நீங்கள் மறந்து விட வேண்டும். முன்னைய கல்பத்திலும் அவர் அதே விடயத்தைக் கூறினார் என்பதால், அதனை மீண்டும் ஒருபொழுதும் குறிப்பிடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அமைதித் தூதுவராகி, மாஸ்ரர் அமைதியையும் சக்தியையும் அருள்பவராகி, மற்றவர்களுக்கு அமைதியின் செய்தியை வழங்குவீர்களாக.

குழந்தைகளான நீங்கள் அமைதித் தூதுவர்கள் ஆவீர்கள். நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களை அமைதித் தூதுவர்களாகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். நான் அமைதித் தூதுவன், நான் அமைதியின் செய்தியை வழங்குகிறேன். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் சக்திவாய்ந்த அமைதி சொரூபமாக இருப்பதுடன், தொடர்ந்து மற்றவர்களுக்கும் அமைதியை வழங்குவீர்கள். மனிதர்கள் அமைதி இன்மையைப் பரப்பும்போது, அவர்களுக்கு அமைதியை வழங்குங்கள். அவர்கள் நெருப்பை மூட்டினால், நீங்கள் நீரை ஊற்றுங்கள். இதுவே அமைதித் தூதுவர்களான உங்களின், மாஸ்ரர் அமைதி மற்றும் சக்தியை அருள்பவர்களான உங்களின் கடமை ஆகும்.

சுலோகம்:
சத்தத்திற்குள் வருவது இலகுவாக இருப்பதைப் போல், சத்தத்திற்கு அப்பால் செல்வதும் இலகுவாக இருக்க வேண்டும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

சதா உங்களின் யோகத்தில் ஒளி மற்றும் சக்தி வீட்டின் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். இந்த ஞானமே ஒளி, யோகம் சக்தி ஆகும். ஞானம் மற்றும் யோகம் என்ற இந்த இரண்டு சக்திகளும் ஒளியாலும் சக்தியாலும் நிரம்பி இருக்க வேண்டும். அப்போது உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான் என்று அழைக்க முடியும். இத்தகையதொரு சக்திவாய்ந்த ஆத்மாவால் ஒரு விநாடியில் எந்த வகையான சூழ்நிலையையும் வெற்றி கொள்ள முடியும்.